Jump to content

பிரான்ஸ் பாரிசில் மீண்டும் ஒரு வெறியாட்டம் - 3 குர்திஷ் பெண் போராளிகள் சுட்டுக்கொலை.

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்ஸில் உலகப் போராளி அமைப்புக்களின் முக்கிய பிரமுகர்களைப் படுகொலை செய்யும் ரகசியத் திட்டங்கள்.. இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

அண்மையில் ஈழப்போராளிகளில் முக்கியமான ஒருவர் கொல்லப்பட்டது போன்று இப்போ குர்திஷ் போராட்ட அமைப்பின் மூத்த பெண் போராளிகள் மூவர் பிரான்ஸ் தலைநகரில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

குர்திஷ் மக்கள் சுதந்திர தாயகம் கேட்டு நேட்டோ ஆதரவு நாடான துருக்கியில் மிக நீண்ட காலமாக ஆயுதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்காக ஆயுதப் போராட்டம் நடத்தி வருகின்ற முக்கிய அமைப்பே பிகேகே ஆகும்.. என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

உலக உளவு அமைப்புக்களும்.. உலக பயங்கரவாத அரசுகளும் பிகேகே போராளிகளுடன் விடுதலைப்புலிகள் அமைப்புக்குள்ள தொடர்புகள் குறித்து முன்னர் பல அறிக்கைகளை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் பிகேகே அமைப்பு அடக்குமுறைக்கு எதிராகப் போராடுகின்ற மக்கள் என்ற வகையில்.. தார்மீக ரீதியான ஆதரவை தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு வழங்கி வருகின்றமை வெளிப்படையாகும்.

தங்கள் மக்களின் விடுதலைக்காக அரச பயங்கராவாதத்தை அடக்குமுறையை எதிர்த்துப் போராடும்..பிகேகே அமைப்பும் அமெரிக்காவின் பயங்கரவாத அமைப்புக்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள அமைப்பாகும்.

பிரான்ஸில் ரகசியமான முறையில் அரச பயங்கரவாதிகள் தங்களுக்குள் நல்ல ஒத்துழைப்புடன்..முக்கிய போராளி அமைப்புக்களின் பிரமுகர்களைத் தீர்த்துக்கட்ட பிரான்ஸ் ரகசியமாக ஒத்துழைக்கிறதா என்ற கேள்வியை.. சந்தேகத்தை.. ஈழப்போராளிகள் மற்றும் பலஸ்தீன இயக்கத் தலைவர் மற்றும் குர்திஸ் போராளிகளின் பிரான்ஸ் படுகொலைகள் பலமாக்கியுள்ளன.

இது குறித்து ஈழப்போராட்ட அமைப்புக்களும் இதர போராளி அமைப்புக்களும் எதிர்காலத்தில் மிக அவதானமாக செயற்படுவது அவசியமாகும்.

மேலும் இப்படுகொலைகளின் பின்னால் உள்ள உண்மைகள் வெளிவராத வகைக்கும்.. தமது ரகசிய திட்டங்களை தொடர்ந்து செயற்படுத்தவும்.. அரச பயங்கரவாதங்கள் (பிரான்ஸ் அரசின் ஒத்துழைப்போடு) அவர்களின் ஒற்றர்கள் மூலம் திசை திருப்பல் பிரச்சாரங்களையும் மேற்கொண்டு வருவதனால்.. இப்படுகொலைகளின் பின்னால் உள்ள உண்மைகளும் நீதிகளும் தொடர்ந்து திட்டமிட்டு பிரான்ஸால்.. மறைக்கப்பட்டு வருவதுடன் நீதியான விசாரணைகளும் திட்டமிட்டு இழுத்தடிக்கப்பட்டு வருகின்றன என்பதும் பிரான்ஸ் அரசின் செயற்பாடுகள் குறித்து வலுவான சந்தேகங்களை எழுப்பச் செய்துள்ளது.

Three Kurdish women activists killed in Paris

_65198223_oro0ngin.jpg
 
Three Kurdish women activists have been found dead with gunshot wounds to the head in the Kurdish Institute of Paris.
 
One of the women is said to be a co-founder of the militant Kurdish separatist movement, the PKK.

French Interior Minister Manuel Valls described the killings as "intolerable".

The motive for the shootings is unclear. Some 40,000 people have died in the 25-year conflict between the Turkish state and the PKK.

http://www.bbc.co.uk/news/world-europe-20968375##_tab

Link to comment
Share on other sites

  • Replies 91
  • Created
  • Last Reply

பிரான்ஸ் ஒரு பாதுகாப்பான நாடுகிடையாது போலகிடக்குது புகளிடக்காரருக்கு :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்

ஆனால் ஒன்று அந்த இனத்திலிருந்து இதை மலினப்படுத்தும் கட்டுரைகள் வராது

Link to comment
Share on other sites

பாரிஸில் குருதிஷ் பெண் செயற்பாட்டாளர்கள்  மூவர் தலையில் துப்பாக்கிச் சூட்டுக்  காயங்களுடன் சடலங்களாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். பாரிஸிலுள்ள குருதிஷ் நிறுவனமொன்றிலேயே இவர்கள்  சடலங்களாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

இப்பெண்களில் ஒருவர் குருதிஷ் பிரிவினைவாத அமைப்பின் இணை ஸ்தாபகரெனத் தெரிவிக்கப்படுகின்றது.

இவை சகிக்கமுடியாத கொலைகளென பிரான்ஸ் உட்துறை அமைச்சர் மானுவல் வோல்ஸ் விபரித்துள்ளார்.

இத்துப்பாக்கிச் சூடுகளுக்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை. பி.கே.கே. எனப்படும் பிரிவினைவாத அமைப்புக்கும் துருக்கிய அரசாங்கத்துக்குமிடையிலான 25 வருடகால மோதலில் சுமார் 40,000 பேர் வரையில்  கொல்லப்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும் பி.கே.கே. எனப்படும் பிரிவினைவாத அமைப்பின் சிறையிலுள்ள தலைவரான அப்துல்லா ஒகலனுடன் ஆயுதங்களைக் களைய இணங்கவைப்பதற்கான பேச்சுவார்த்தையை துருக்கி அண்மையில் ஆரம்பித்திருந்தது.

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-07-14-09-13-37/56630-2013-01-10-10-39-47.html

பாரிஸில் குருதிஷ் பெண் செயற்பாட்டாளர்கள்  மூவர் தலையில் துப்பாக்கிச் சூட்டுக்  காயங்களுடன் சடலங்களாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். பாரிஸிலுள்ள குருதிஷ் நிறுவனமொன்றிலேயே இவர்கள்  சடலங்களாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

இப்பெண்களில் ஒருவர் குருதிஷ் பிரிவினைவாத அமைப்பின் இணை ஸ்தாபகரெனத் தெரிவிக்கப்படுகின்றது.

sakinecansizeylem.jpg

pkk_kadin.jpg

Link to comment
Share on other sites

ஆழ்ந்த அனுதாபங்கள்

ஆனால் ஒன்று அந்த இனத்திலிருந்து இதை மலினப்படுத்தும் கட்டுரைகள் வராது

உங்கள் கருத்து உண்மையாக இருக்கட்டும்.

அவர்கள் ஒற்றுமையில் இருந்து நாங்களும் கற்றுக்கொள்வோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் துயர் மிகு சூழலில்.. குர்திஷ் மக்களுக்கு தமிழீழ விடுதலைப் போராட்ட அமைப்புக்கள் தங்கள் அனுதாபங்களையும் ஆதரவையும் நல்கி நிற்க வேண்டும். நா.க.த.அ போன்றவை இவற்றைக் கவனத்தில் எடுத்துச் செயற்படுதல் நன்று. இவ்வாறு ஒருங்கிணைவதன் மூலமே எதிர்காலத்தில் அரச பயங்கரவாதங்களின் திட்டமிட்ட கூட்டுச் சதிகளில் அமையும் படுகொலைகளை ஜனநாயகம்.. மனித உரிமைகள் பற்றி அதிகம் பேசும் நாடுகளில் என்றாவது தடுக்க முடியும்..!

இப்படியான அரச பயங்கரவாதங்களே.. போராளி அமைப்புக்களும் வன்முறையைத் தேர்வு செய்யக் காரணம் என்பதை உலகின் கொள்கை வகுப்பாளர்களுக்கு அல்ல... மக்களுக்குப் புரிய வைக்க வேண்டும். குறிப்பாக மேற்குலக மக்களுக்கு..!

அதற்கான ஒரு சந்தர்ப்பமாக உலகில் அடிமைப்படுத்தப்பட்டுள்ள மக்களின் விடுதலைக்காகப் போராடும் அமைப்புக்கள் இந்த நேரத்தில் தம்மை ஒரு சக்தியாக்கி உலகிற்கு அதனை வெளிப்படுத்தி.. அதன் மூலம்.. மக்கள் ஆதரவை திரட்டிக் கொள்வதோடு.... இப்படியான அரச பயங்கரவாதங்களை எதிர்கொள்ளும் புதிய உக்திகள் குறித்தும் சிந்திக்க வேண்டும்..! :icon_idea:

Link to comment
Share on other sites

அனைத்து விடுதலை அமைப்புகளும் புலிகளின் தோல்வியால் இப்பொழுது கிடைப்பதை வாங்குவோம் என்று நினைத்துவிட்டார்கள் போலும் துருக்கிய நாட்டு சிறையில் இருக்கும் Kurdish இன விடுதலைப்போராளிகளின் தலைவர் அப்துல்லாஹ் ஒகாலன் மற்றும் துருக்கி அரசும் இணைந்து பல சகாப்த போரை முடிவிற்கு கொண்டு வர இருக்கின்றன

ANKARA: The Turkish government and jailed Kurdish rebel leader Abdullah Ocalan have agreed on a road map to end a three-decade-old insurgency that has claimed tens of thousands of lives, media reported yesterday.

The deal was reached during a new round of talks between Ankara and Ocalan and aims to have the Kurdistan Workers’ Party (PKK) lay down arms in March, a private news network reported.

Prime Minister Recep Tayyip Erdogan’s government recently revealed that Turkish intelligence services had for weeks been talking to Ocalan, who has been held on the island prison of Imrali south of Istanbul since his capture in 1999.

During a visit to Niger yesterday, Erdogan warned the government would uphold its tough line on the PKK: “I repeat again, our fight with the terrorist organization will continue.”

“Terrorist organization ranks need to lay down weapons and withdraw from Turkey,” before further steps can be discussed, he said.

Under the reported peace roadmap, the government would be expected to reward a ceasefire by granting wider rights to Turkey’s Kurdish minority, whose population is estimated at up to 15 million in the 75-million nation, according to unofficial figures.

The rebels also want the release of hundreds of Kurdish activists held in prisons over links to the PKK as well as the recognition of Kurdish identity in Turkey’s new constitution, according to media sources.

But Turkey’s pro-Kurdish Peace and Democracy Party (BDP) warned the talks were not at the stage of fully-fledged ceasefire negotiations, arguing Ocalan would have to be freed first and given a chance to consult the grassroots.

“The conditions between the parties are just not equal,” BDP co-chair Selahattin Demirtas told fellow lawmakers on Tuesday. “And by that, no, I do not mean Erdogan going into Imrali,” he said.

Officials have not confirmed the roadmap published in the media.

Hopes of a breakthrough on the Kurdish issue were heightened when two Kurdish lawmakers were allowed to visit Ocalan last week for the first time.

But the resumption of Kurdish rebel attacks against Turkish security forces since then have overshadowed the developments.

On Monday, one soldier and 14 rebels were killed in southeastern Hakkari city near the border with Iraq, raising fears that more attacks may come from hawkish rebel wings to disrupt the process.

“The terrorists have always done their best to sabotage any step initiated for peace,” Erdogan said regarding Monday’s attack.

Around 45,000 people are believed to have been killed in the fighting between Turkish security forces and the rebels.

PKK took up arms in 1984 under Ocalan’s command, to obtain self-rule in the Kurdish-majority southeast.

Previous talks floundered after the PKK leadership demanded the release of Ocalan.

Thanks to Arab news

இந்த அறிவிப்பு வெளி வந்து சில மணி நேரங்களில் இந்த கொலைகள் நடந்திருப்பது தான் பலத்த சந்தேகத்தை எழுப்புகின்றது

ஒரு பிரிவினர் பேச்சு வார்த்தைக்கு ஆதரவாகவும் இன்னொரு பிரிவினர் எதிர்ப்பாகவும் இருக்கலாமா?

Link to comment
Share on other sites

பாரிசில் இன்று அதிகாலை சுட்டுக் கொலைப்பட்ட குர்திஷ் விடுதலை இயக்க பெண் போராளிகளில் மூவரில் இருவர் அந்த அமைப்பின் உயர் மட்டத்தலைவர்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது

பாரிசின் பத்தாவது நிர்வகப் பிரிவின் 147 றூ லா பயட் என்ற முகவரியில் உள்ள குர்திஸ்தான் சமூக அமைப்பின் பணிமனையில் அதிகாலை ஒரு மணியளவில் நடைபெற்ற இந்தச் படுகொலைச் சம்பவம் 

பிரான்ஸ் அரசியல் மட்டத்திலும் குர்திஷ் இனமக்கள் மத்திலும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த சம்பவத்தில் கொல்லப்பட்ட மூன்று பெண் போராளிகளில் ஓருவர் ரோஜ்பின் என்ற இயக்கப்பேரால் குர்திஷ் மக்களால் அறியப்பட்ட பிடான் டோகான் என்ற இயற்பெருடைய மூத்த போராளி என்றும் 32 வயதான இவர் பிகேகே எனப்படும் குர்திஷ் விடுதலை இயக்கத்தின் முன்னணி அமைப்பான குர்திஷ் தேசிய சபையின் உறுப்பினர் என்றும் பிரான்சிலுளள் குர்திஷ் அமைப்புகக்ளின் கூட்டமைப்பின் தலைவர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

மற்றவர் பிகேகேயின் மூத்த உறுப்பினரும் இணை தலைவர்களில் ஒருவவருமான சங்கி கொன்சிஸ் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது.மூன்றாவர் லைலா சொய்லமேஸ் என்ற இளம் செய்றபாட்டாளர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது

இவர்களில் இருவருக்கு மார்பிலும் ஒருவருக்க தலையிலும் சூடுபட்டுள்ளது. ஓலிக்கட்டுப்பாட்டு கருவி பெருத்தப்பட்ட துப்பாக்கி மூலமே இவர்கள் மூவரும் சுடப்பட்டிருகக் வேண்டும் என்று ஆரம்பக்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை சம்பவம் நடைபெற்ற இடத்துக்கு இன்று காலை சென்ற பிரான்சின் உள்துறை அமைச்சர் மனுவல் வால் இது ஏற்றுக்கொள்ள முடியாத பயங்கரவாத நடவடிக்கை என்றும் இது தொடர்பான உரிய விசாரணைகள் நடத்தி குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் இந்த படுகொலை சம்பவத்தை விசாரக்கும் பொறுப்பு பாரிஸ் நகர குற்றவியல் காவல்துறையினரிடம் ஓப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்

சம்பவம் நடைபெற்ற இடத்தில் 'நாங்கள் குர்தியர்கள்' என்ற சுலோக அட்டைகளுடனும் குர்திஷ்தான் விடுதலை இயக்க கொடிகளுடனும் குழகிய ஆயிரக்கணக்கான குர்திஷ் இனமக்கள் .

இந்த படுகொலை சம்பவம் ஒரு அரசில் படுகொலை என்றும் மரணதண்டனையை நிறைவேற்றும் விதத்தில் அமைந்துள்ளதாகவும் 

தெரிவித்தனா.

இது நிச்சயமாக துருக்கி உளவுத்துறையின் செயலே என்ற பாரிசிலுள்ள குர்திஷ் அமைப்பின் பிரதிநிதிகள் குற்றம்சாட்டியுள்ளனர்;.துருக்கி அரசு இந்த படுகொலைகள் பற்றி எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.

543801_586042684744609_11310513_n.jpg
Link to comment
Share on other sites

துருக்கிக்கும் பிரான்ஸ் க்கும் ஏற்க்கனவே ஒருத்தருக்கு ஒருத்தர் ஆகாது ஆகவே இப்பிடி ஒரு கொலையை துணித்து துருக்கி மற்றும் அதனுடன் சம்மந்தப்பட்ட அமைப்புகள் செய்திருக்குமா என்பது சந்தேகமே ஏன் என்றால் பல வருடங்களாக ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய போராடி வரும் துருக்கி க்கு பிரான்ஸ் இன் ஆதரவு அவசியம்

இதே வேலை அண்மையில் பிரான்ஸ் துருக்கியை ஒரு இனப்படுகொலை நாடு என்று அறிவித்ததும் நினைவிருக்கலாம் இதனை அடுத்து அனைத்து தூதரக தொடர்புகளையும் துருக்கி நிறுத்தி வைத்திருந்தது

1915 ஆம் ஆண்டு ஆர்மேனிய மக்கள் படுகொலை தொடர்பாக இந்த நடவடிக்கையை பிரான்ஸ் எடுத்திருந்தது

Link to comment
Share on other sites

இதுவும் பங்கு பிரிப்பு படுகொலையாகவிருக்கலாம்.அவர்கள் ஈழத்தமிழ் அமைப்புகளுடன் தொடர்பை பேணி வந்தால் சாத்திரிக்கு தெரிந்திருக்க வாய்பு உண்டு ஆகவே சாஸ்திரி கருத்தை சொல்லுவீர்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துருக்கிக்கும் பிரான்ஸ் க்கும் ஏற்க்கனவே ஒருத்தருக்கு ஒருத்தர் ஆகாது ஆகவே இப்பிடி ஒரு கொலையை துணித்து துருக்கி மற்றும் அதனுடன் சம்மந்தப்பட்ட அமைப்புகள் செய்திருக்குமா என்பது சந்தேகமே ஏன் என்றால் பல வருடங்களாக ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய போராடி வரும் துருக்கி க்கு பிரான்ஸ் இன் ஆதரவு அவசியம்

இதே வேலை அண்மையில் பிரான்ஸ் துருக்கியை ஒரு இனப்படுகொலை நாடு என்று அறிவித்ததும் நினைவிருக்கலாம் இதனை அடுத்து அனைத்து தூதரக தொடர்புகளையும் துருக்கி நிறுத்தி வைத்திருந்தது

1915 ஆம் ஆண்டு ஆர்மேனிய மக்கள் படுகொலை தொடர்பாக இந்த நடவடிக்கையை பிரான்ஸ் எடுத்திருந்தது

விடுதலைப்போராட்டம் மற்றும் சர்வதேசம் பற்றிய பரந்த அறிவு சுண்டலுக்கு....

வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
விடுதலைப்போராட்டம் மற்றும் சர்வதேசம் பற்றிய பரந்த அறிவு சுண்டலுக்கு....

வாழ்த்துக்கள்

இது நிச்சயமாக துருக்கி உளவுத்துறையின் செயலே என்ற பாரிசிலுள்ள குர்திஷ் அமைப்பின் பிரதிநிதிகள் குற்றம்சாட்டியுள்ளனர்;.துருக்கி அரசு இந்த படுகொலைகள் பற்றி எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.

வெளிப்படையான அரசுகளின் நகர்வுகளிற்கு நேர்மாறாக.. அவர்களின் ரகசிய செயற்பாடுகள் இருக்கும்.

உதாரணத்திற்கு இந்திரா அம்மையார் காலத்தில் பாகிஸ்தானுடன் கொஞ்சிக் குலாவுவதாக இனங்காட்டிக் கொண்ட அமெரிக்க அரச நிர்வாகம்.. அம்மையார் முழுக்க முழுக்க சோவியத்தைச் சாராமல் இருக்க.. அவருக்கும் மறைமுக உதவிகளை ஒத்துழைப்புக்களை வழங்கியது.

சர்வதேச அரசியலும் நகர்வுகளும் அரச பயங்கரவாதங்களும் எமது கற்பனைகளுக்கு எட்டாதவையாகக் கூட இருக்கலாம். எதனையும் கூர்ந்து உள்நுழைந்து ஆராய்ந்து பார்த்தாலே அன்றி... உண்மைகளுக்கு உறக்கம் அதிகம். அவையும் தேவைகளுக்கு ஏற்ப தாமதமாகவே விழித்தெழச் செய்யப்படும்.

ஆனால் எமக்கு உண்மைகள் வெளிப்படுவது அல்ல உடனடித் தேவை. படுகொலைகள் தொடர்வதை தடுப்பதோடு.. மக்கள் குழப்பமடைவதில் இருந்தும் தடுத்து நிறுத்தப்பட்டு.... தெளிவுறுத்தப்படுவதோடு.. போராட்ட இலக்கு நோக்கிய நகர்வுகளை செம்மைப்படுத்துவதே தேவை.

ஆனால்.. நம்மவர்கள் செய்வது.......????! அரைகுறையாய் எல்லாம்..! :icon_idea::)

Link to comment
Share on other sites

முன்பு   இஸ்ரேல்க்காரனோடு எம்மை ஒப்பிட்டு பார்த்து கனவுகண்டோம் இப்ப குருதிஸ் போராளிகளுடன் எம்மை  ஓப்பிட்டு பார்த்து  குளிர் காய்கிறோம்.

இன்று எல்லா நாட்டு ஊடகங்களிலும்    தொலைகாட்சிகளிம்  கொடுக்கப்படுகிற முக்கியதுவம் என்பது அந்த பெண் விடுதலை போராளிகளுக்கான மரியாதை.

ஆகா நாங்கள் கனவு கானலாம் அதே போல் மற்றவர்களும்  எம்மை நினைக்க வேண்டும் என்று எதிர் பாக்கமுடியாது..

நியானி: ஆதாரமற்ற கருத்துக்கள் தணிக்கை

Link to comment
Share on other sites

தமிழ் ஈழம் சார்பான எந்த அமைப்புகளும் வெளிப்படையாக இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்காமல் இருப்பது தான் எமது இராஜதந்திர நடவடிக்கைகளுக்கு நன்மை பகிக்கும்

எமது கவலைகளை மட்டும் அந்த அமைப்பிடம் பதிவு செய்யலாம்

Link to comment
Share on other sites

தமிழ் ஈழம் சார்பான எந்த அமைப்புகளும் வெளிப்படையாக இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்காமல் இருப்பது தான் எமது இராஜதந்திர நடவடிக்கைகளுக்கு நன்மை பகிக்கும்

படுகொலை நடந்த இடத்துக்கு முன்னால் கூடிய குர்திஸ் மக்களின்  கூட்டத்தை பாத்தீர்களா? எப்படி அந்த பெண்கள்  நேசிக்கப்பட்டார்கள் என்று சொல்லவே தேவையில்லை.

ஆனால் பரிதியின் படுகொலையில் ஆனந்தப்பட்டது பரிஸ் வர்த்தகர்கள் என்ற கசப்பான உண்மையை  இங்கு உள்ள போலித் தமிழ்த்தேசியவாதிகள் ஏற்றுக் கொள்ளபோவதில்லை.

Link to comment
Share on other sites

இதேவேளை சம்பவம் நடைபெற்ற இடத்துக்கு இன்று காலை சென்ற பிரான்சின் உள்துறை அமைச்சர் மனுவல் வால் இது ஏற்றுக்கொள்ள முடியாத பயங்கரவாத நடவடிக்கை என்றும் இது தொடர்பான உரிய விசாரணைகள் நடத்தி குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் இந்த படுகொலை சம்பவத்தை விசாரக்கும் பொறுப்பு பாரிஸ் நகர குற்றவியல் காவல்துறையினரிடம் ஓப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்

சம்பவம் நடைபெற்ற இடத்தில் 'நாங்கள் குர்தியர்கள்' என்ற சுலோக அட்டைகளுடனும் குர்திஷ்தான் விடுதலை இயக்க கொடிகளுடனும் குழகிய ஆயிரக்கணக்கான குர்திஷ் இனமக்கள் .

ஏன்  நம்ம நாட்டு செயற்பாட்டாளர்கள் படுகொலையை  இவர்கள் கண்டு கொள்ளவில்லை?

என் எனில் எங்கட நாட்டு செய்ற்பாட்டாளர்கள் ரவுடிக்கு ரவுடியாக எல்லொ இருந்தார்கள்.

Link to comment
Share on other sites

முன்பு இஸ்ரேல்க்காரனோடு எம்மை ஒப்பிட்டு பார்த்து கனவுகண்டோம் இப்ப குருதிஸ் போராளிகளுடன் எம்மை ஓப்பிட்டு பார்த்து குளிர் காய்கிறோம்.

இன்று எல்லா நாட்டு ஊடகங்களிலும் தொலைகாட்சிகளிம் கொடுக்கப்படுகிற முக்கியதுவம் என்பது அந்த பெண் விடுதலை போராளிகளுக்கான மரியாதை.

ஆகா நாங்கள் கனவு கானலாம் அதே போல் மற்றவர்களும் எம்மை நினைக்க வேண்டும் என்று எதிர் பாக்கமுடியாது..

பொதுவா எமது மக்களை விட Kurdish மக்களுக்கு இன உணர்வு விடுதலை உணர்வு ஜாஸ்த்தி அதனால் பெருந்தொகையில் கூடுவார்கள் நீங்கள் தானே எமது மக்களின் விடுதலை உணர்வை பற்றி திரிக்கு திரி எலுதீர்கலெ அதாவது யாழ்ப்பாணத்தில் இருந்து கப்பல் ஏறி colombo க்கு ஓடிவந்த தமிழர்கள் என்று புலிகள் அழைத்த பொழுது அப்பிடியான மக்களிடம் Paris இல் திரண்டு வந்து போராட முடியும் எண்டு எதிர்பாகிரின்களே என்ன நைனா இது

நியானி: மேற்கோள் தணிக்கை

Link to comment
Share on other sites

துருக்கிக்கும் பிரான்ஸ் க்கும் ஏற்க்கனவே ஒருத்தருக்கு ஒருத்தர் ஆகாது ஆகவே இப்பிடி ஒரு கொலையை துணித்து துருக்கி மற்றும் அதனுடன் சம்மந்தப்பட்ட அமைப்புகள் செய்திருக்குமா என்பது சந்தேகமே ஏன் என்றால் பல வருடங்களாக ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய போராடி வரும் துருக்கி க்கு பிரான்ஸ் இன் ஆதரவு அவசியம்

இதே வேலை அண்மையில் பிரான்ஸ் துருக்கியை ஒரு இனப்படுகொலை நாடு என்று அறிவித்ததும் நினைவிருக்கலாம் இதனை அடுத்து அனைத்து தூதரக தொடர்புகளையும் துருக்கி நிறுத்தி வைத்திருந்தது

1915 ஆம் ஆண்டு ஆர்மேனிய மக்கள் படுகொலை தொடர்பாக இந்த நடவடிக்கையை பிரான்ஸ் எடுத்திருந்தது

 துருக்கியும் லேசுப்பட்ட நாடுல்லை எமது  தமிழ்த்தேசியவாதிகளின் கருத்தின் படி  இலங்கைஅரசால்   பரிதியை படுகொலைசெய்ய முடியுமானால் துருக்கியாலும் முடியும்.

Link to comment
Share on other sites

இந்த கொலை நிச்சயம் ஒரு அரசியல் கொலைதான் .அந்த மூன்று போராளிகளுக்கும் எனது அஞ்சலிகள் .

தமிழனை விட வேறு எந்த இனத்தவனும் விடுதலைக்கு என்று சேர்த்த பணத்தில் வீடும் காரும்  வாங்க மாட்டான்.ஈனத் தமிழர்களில் பலர் தேசியம் ,போராட்டம் என்று குதித்தே பணம் சுருட்டவும் ,மற்றவனை நாட்டாண்மை செய்யவும் தான்.போர் முடிந்த பின்பு கூட உருப்படியாக எதுவும் செய்யாமல் இவர்கள் கத்தி குளறுவது போராட்டம் தோற்றதற்காக அல்ல தமது பிழைப்பில் மண் விழுந்து விட்டது என்றுதான் . 

Link to comment
Share on other sites

அர்ஜூன் அண்ணை பச்சை ம்டுஇந்து விட்டது நாளைக்கு  உங்கள் கருத்துக்கு ஒரு பச்சை.

Link to comment
Share on other sites

இந்த கொலை நிச்சயம் ஒரு அரசியல் கொலைதான் .அந்த மூன்று போராளிகளுக்கும் எனது அஞ்சலிகள் .

தமிழனை விட வேறு எந்த இனத்தவனும் விடுதலைக்கு என்று சேர்த்த பணத்தில் வீடும் காரும் வாங்க மாட்டான்.ஈனத் தமிழர்களில் பலர் தேசியம் ,போராட்டம் என்று குதித்தே பணம் சுருட்டவும் ,மற்றவனை நாட்டாண்மை செய்யவும் தான்.போர் முடிந்த பின்பு கூட உருப்படியாக எதுவும் செய்யாமல் இவர்கள் கத்தி குளறுவது போராட்டம் தோற்றதற்காக அல்ல தமது பிழைப்பில் மண் விழுந்து விட்டது என்றுதான் .

ஏன் தொடர்ந்தும் நாங்க தான் ஏதாவது செய்யணும் என்று எதிர்பாகிரிங்க நீங்களும் தமிழர் தானே? அதே நாட்டில் இருந்து வந்தவர்கள் தானே நீங்க செய்யலாமே? உங்களாக முடியாது ஜஸ்ட் செய்யிறவன பாத்து காறி துப்பிட்டு இருக்கத்தான் முடியும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முன்பு   இஸ்ரேல்க்காரனோடு எம்மை ஒப்பிட்டு பார்த்து கனவுகண்டோம்

வெற்றியில் நின்றபோது தூக்கி  கொண்டாடியதும்

இப்ப குருதிஸ் போராளிகளுடன் எம்மை  ஓப்பிட்டு பார்த்து  குளிர் காய்கிறோம்.

தோல்வியின் போது தாழ்த்துவதும் நீங்கள்  தான்

வேறு எவரும் எவருடனும் ஒப்பிட்டு எழுதவில்லை  இங்கு.

இன்று எல்லா நாட்டு ஊடகங்களிலும்    தொலைகாட்சிகளிம்  கொடுக்கப்படுகிற முக்கியதுவம் என்பது அந்த பெண் விடுதலை போராளிகளுக்கான மரியாதை

உங்கள் கூற்று உண்மையானால்

முள்ளிவாய்க்காலில் எமக்கு இவர்கள் விடிவு தந்திருக்கணும். (சனத்தை பார்த்து)

குருதிஸ்  மக்கள் என்பது பல  நாடுகளாலும் பல கோடி இசுலாமிய  மக்களாலும்  விரும்பப்படும் விடுதலை அமைப்பு.

அதை பிரான்சிலுள்ள  சிறு  தொகை ஈழத்தமிழருடன் ஒப்பிடுவதே தப்பு  முதலில்.

ஆகா நாங்கள் கனவு கானலாம் அதே போல் மற்றவர்களும்  எம்மை நினைக்க வேண்டும் என்று எதிர் பாக்கமுடியாது..

நியானி: மேற்கோள்கள் சிலவும் அதற்கான பதிலும் நீக்கம்

Link to comment
Share on other sites

பேச்சுவார்த்தைக்கு தயார் என்று சிறையில் இருக்கும் அந்த அமைப்பின் தலைவர் அறிவித்து துருக்கியும் சம்மதம் தெரிவித்து சரியாக 16 மணிநேரத்தில் இந்த கொலை நடந்திருக்கின்றது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
ஏன் தொடர்ந்தும் நாங்க தான் ஏதாவது செய்யணும் என்று எதிர்பாகிரிங்க நீங்களும் தமிழர் தானே? அதே நாட்டில் இருந்து வந்தவர்கள் தானே நீங்க செய்யலாமே? உங்களாக முடியாது ஜஸ்ட் செய்யிறவன பாத்து காறி துப்பிட்டு இருக்கத்தான் முடியும்

பிறந்ததிலிருந்தே மற்றவனுக்கு இடைஞ்சலாக இருந்து பழகியாச்சு

இது தானாக மாறாது.

எமக்கும் இனி  திருத்த வழி இல்லை.

Link to comment
Share on other sites

வெற்றியில் நின்றபோது தூக்கி  கொண்டாடியதும்

தோல்வியின் போது தாழ்த்துவதும் நீங்கள்  தான்

வேறு எவரும் எவருடனும் ஒப்பிட்டு எழுதவில்லை  இங்கு.

உங்கள் கூற்று உண்மையானால்

முள்ளிவாய்க்காலில் எமக்கு இவர்கள் விடிவு தந்திருக்கணும். (சனத்தை பார்த்து)

குருதிஸ்  மக்கள் என்பது பல  நாடுகளாலும் பல கோடி இசுலாமிய  மக்களாலும்  விரும்பப்படும் விடுதலை அமைப்பு.

அதை பிரான்சிலுள்ள  சிறு  தொகை ஈழத்தமிழருடன் ஒப்பிடுவதே தப்பு  முதலில்.

இன்றும் புலிகள் என்றால் விருப்பம் தான் அதற்காக இனியும் சுயவிமர்சனம் செய்யாது  கண்மூடி மீண்டும் ஒரு முள்ளிவாய்காலை எதிர்கொள்ள முடியாது.

தோலிவியில் தாழ்த்தவில்லை விட்ட தவருகளை ஏற்றுக் கொள்ளவில்லை என  சுட்டிக் காட்டினேன்( எனது எதிர்ப்பு முக்கிய்மாக  புலம்பெயர் தேசிய போலி மைப்பாளர்களை நோக்கியது)

 அப்போதைய சூழ்நிலைக்கு ஏற்றது போல் தான் என் கருத்து அப்போது இருந்தது இப்போது  கள்ளர் கூட்டம்  நம்ப வைத்து கழுத்து அறுத்துவிட்டார்கள் என்ற  சுழ்நிலைக்கு ஏற்றது போல் என் கருத்து.

பிரன்ஸில் உள்ள  தமிழர்களில் பரிதிக்கான ஆதரவு எந்த % தத்தில் என்றது தான் என் கருத்து.

 மீண்டும் காலத்தை போலிகளால் கடத்தவிரும்ப்பவில்லை./..

நெற்றிக் கண்ணை திறப்பினும் குற்றம் குற்றமே!

நியானி: தணிக்கை செய்யப்பட்ட மேற்கோள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.