Jump to content

பிரான்ஸ் பாரிசில் மீண்டும் ஒரு வெறியாட்டம் - 3 குர்திஷ் பெண் போராளிகள் சுட்டுக்கொலை.


Recommended Posts

நான் தொடர்பு வைத்திருந்தது

BBC-MARK TULLY

GUARDIAN- ERIC SILVER

HINDU- .GK.REDDY,RAM

FREE LANCE- PAHAVAN SINGH ,ANITA PRATAP.SANDARASEKAR ,JOHN DEOL,PUDNIS,

RAW-CHANDRASEKAR

IB- RAMATHAS

CBI-GOPAL

இதைவிட பல ஆரம்ப புலிகள் உமா ,நாகராசா ,குமணன் ,சிவகுமார் (அன்டன் மாஸ்டர் ) இன்னும் பலர் .

 

மிக நன்று. இந்த தொடர்புகளை வைத்து என்ன சாதித்தீர்கள் என அறிய ஆவல்.

இன்று யாருடன் தொடர்பில் உள்ளீர்கள்?

Link to comment
Share on other sites

  • Replies 91
  • Created
  • Last Reply

இன்றும் கூட புலிகளால் ஏற்படுத்த பட்ட அரசியல் கூட்டணி தான் வடக்கு கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் அரசியல் பிரதிநிதிகளாக இருப்பத்தை நீங்கள் மறந்து விட்டது துரதிஷ்டமே ஆகவே கல்லில் எழுதி வைத்ததே தயவு செய்து அழித்து விடவும்

நீங்கள் தொடர்பு வைத்திருந்த பத்திரியாளர்கள் எல்லாம் அன்னியர்கள் நான் தொடர்பு வைத்திருந்தவர்கள் எல்லாம் களத்திலே மக்களோடு மக்களாக நின்று செய்தி சேகரித்த எம்மவர்கள் அந்நியர்களை விட எனது மொழியையே பேசி மகளோடு மக்களாக நின்ற பத்திரிகையாளன் சொல்லுவது தான் நிஜமாக இருக்கும்

ஹிந்து ராம் க்கு தன்னுடைய பத்திரிக்கை சொத்துகலையே ஒழுங்கா கட்டி காக்க வைக்கில ஆழ அடிச்சு கலைசிட்டான்கள் :D

உங்களுக்கு Hindu ராம தான் தெரியும் எனக்கு மாலினி பார்த்த சாரதியையே தெரியும்

தொடர்பு வைத்திருப்பவர்கள் எல்லாம் பிரமனக்கூடங்களும் தமிழர் விடுதலையை விரும்பாத சக்திகளும் :D

Link to comment
Share on other sites

பிராங்க்கஸ் கரிசனும் ,கோர்டன் வைசும் இந்த அடிப்படையில் தான் புத்தகமே எழுதினார்கள்.

வாழ்க

 

விபரம் தெரியா குழந்தைக்கும் கண் தெரியா குருடனுக்கும் ஆனையும் பானையும் சரி.

Link to comment
Share on other sites

தொடர்பு வைத்திருப்பவர்கள் எல்லாம் பிரமனக்கூடங்களும் தமிழர் விடுதலையை விரும்பாத சக்திகளும்

தங்கள் நாடு யாருக்கு ஆதரவோ அதற்க்கு ஆதரவாக தான் எழுதுவார்கள்

Link to comment
Share on other sites

ஏன் யாழில் வந்து இப்படி எல்லாம் எழுதுகின்றீர்கள் என்று எனது நண்பன் கேட்டான் ,

பதில்- இன்றும் எனது பெடியங்களுடன் card games ,monopoly,video games ,wrestling எல்லாம் செய்கின்றேன் அது போலதான் இதுவும் .

Link to comment
Share on other sites

ஏன் யாழில் வந்து இப்படி எல்லாம் எழுதுகின்றீர்கள் என்று எனது நண்பன் கேட்டான் ,

பதில்- இன்றும் எனது பெடியங்களுடன் card games ,monopoly,video games ,wrestling எல்லாம் செய்கின்றேன் அது போலதான் இதுவும் .

 

ஆமாம் இந்த விளையாட்டுக்களில் 'ஏமாற்றுதல்', 'அளாப்புதல்',  'புழுகுதல்', ' அடித்தல்' என்பனவும் உள்ளன  :D

Link to comment
Share on other sites

எனது நண்பனும் கேட்டான் ஏண்டா யாழில போய் இப்பிடி எல்லாம் எழுதிறாய் என்று

எனது பதில் இன்றும் தமிழனாக அதே கொள்கையோடு சுதந்திர வேட்கையோடு இருக்கின்றேன்

என்று

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது நண்பனும் கேட்டான் ஏண்டா யாழில போய் இப்பிடி எல்லாம் எழுதிறாய் என்று

எனது பதில் இன்றும் தமிழனாக அதே கொள்கையோடு சுதந்திர வேட்கையோடு இருக்கின்றேன்

என்று

 

நானும் தான் மச்சி...செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருக்கு...அப்படி இருந்தும் யாழுக்கு ஒரு நாளைக்கு ஒரு 25ஜந்து நிமிடம் தன்னும் ஒதுக்குவேண்...மே 18 ஓட எனது நண்பர்கள் கூட தாயக நிலமைகள் பற்றி கதைப்பது வலு குறைவு..ஏதாவது எங்கடை போராட்டத்தை பற்றி கதைவந்தா இதை தான் சொல்லுவாங்கள் மறு படியும் போராட்டம் ஆரம்பம் ஆனால் உந்த கருணா டக்கிலஸ் மாரி *********** அந்த போராட்டத்தில் இணைந்து மறு படியும் ஆப்பு வைப்பாங்கள் என்று...

 

நியானி: தணிக்கை

Link to comment
Share on other sites

Kurds in Paris demonstrated in the street after 3 women Kurdish activists were found shot dead. The french interior minister has described their killing as "an execution.".

 



Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
படுகொலை நடந்த இடத்துக்கு முன்னால் கூடிய குர்திஸ் மக்களின்  கூட்டத்தை பாத்தீர்களா? எப்படி அந்த பெண்கள்  நேசிக்கப்பட்டார்கள் என்று சொல்லவே தேவையில்லை.

 

உங்களுக்கு கொஞ்சம் எழுதணும் என்பதற்காக எழுதுகின்றேன்.

ஏற்றுக்கொள்ளும் அல்லது கிரகிக்கும் தன்மையிலிருந்து தூரச்சென்று நீங்கள் ரொம்ப நாளாகிவிட்டது என்றாலும்.

 

பருதி அண்ணாவின் இறுதி   அஞசலி   நிகழ்வுக்கு வந்த தமிழ் மக்களின் தொகை  தெரியுமா???

அது பிரான்சில் வாழும் தமிழ் மக்களின் எத்தனை வீதம் என்று தெரியுமா?

வேற்றுநாட்டவரின் கூட்டத்தை கணக்கு வைக்கும் தாங்கள் இதை  ஏன் பார்க்கவில்லை.  கணக்கு வைக்கவில்லை?????

 

 

ஆனால் பரிதியின் படுகொலையில் ஆனந்தப்பட்டது பரிஸ் வர்த்தகர்கள் என்ற கசப்பான உண்மையை  இங்கு உள்ள போலித் தமிழ்த்தேசியவாதிகள் ஏற்றுக் கொள்ளபோவதில்லை.

 

 

 

அதே பரிசில்

அதே வர்த்தகத்துறையில் தான் நான் இருக்கின்றேன்.

சும்மா புலுடா எல்லாம் விடக்கூடாது.

 

தூர  நோக்க இலட்சியங்களோடு காக்கப்படும் பொறுமையை  இது போன்ற புலடாக்கள் தகர்த்துவிடும்.

Link to comment
Share on other sites

படுகொலைக்கு நீதி கேட்டு சனிக்கிழமை (12.01.2013) மாலை ஒரு மணிக்கு (13h00) Gare de l'est Metro முன் நடைபெறும் ஒன்று கூடலில் தமிழ் மக்கள் அனைவரையும் பங்கு பற்றும் படி கேட்டுக்கொள்கிறோம். தமிழீழ மக்கள் பேரவை பிரான்சு.

 

(முகநூல்)

 

 

14917_537684189584336_191463558_n.jpg

Link to comment
Share on other sites

Turkey expert discusses killings of Kurdish women

 

http://www.youtube.com/watch?v=fxcc1kUxSDk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் தொடர்பு வைத்திருந்தது

BBC-MARK TULLY

GUARDIAN- ERIC SILVER

HINDU- .GK.REDDY,RAM

FREE LANCE- PAHAVAN SINGH ,ANITA PRATAP.SANDARASEKAR ,JOHN DEOL,PUDNIS,

RAW-CHANDRASEKAR

IB- RAMATHAS

CBI-GOPAL

இதைவிட பல ஆரம்ப புலிகள் உமா ,நாகராசா ,குமணன் ,சிவகுமார் (அன்டன் மாஸ்டர் ) இன்னும் பலர் .

.

இவருக்கு அவையளை தெரியும் ஆனால் அவர்களுக்கு இவரை தெரியுமோ? :D இல்ல சும்மா தான் ஒரு சந்தேகம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது நண்பனும் கேட்டான் ஏண்டா யாழில போய் இப்பிடி எல்லாம் எழுதிறாய் என்று

எனது பதில் இன்றும் தமிழனாக அதே கொள்கையோடு சுதந்திர வேட்கையோடு இருக்கின்றேன்

என்று

அதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று யாழ் களம்...சுண்டலின் அரசியல் வளர்ச்சிக்கும் தேர்ச்சிக்கும் யாழ் பல வகையில் உதவி செய்திருக்கின்றது.....என்பதில் எந்த சந்தேகமும் இல்லை,.....

Link to comment
Share on other sites

282804_321153471321905_1532031389_n.jpg

 

ஆசியாவின் தேசிய இனப்போராட்டத்தில் மிக சிக்கலான தேசப்பரப்பையும், சமரசமில்லா போராட்டகளத்தினையும் கண்டிருக்கும் குர்தீஸ் விடுதலை போராளிகள் உலகமயமாக்கலுக்கும், இரட்டைகோபுர தாக்குதலுக்கு பின்பான பயங்கரவாத அரசுகளின் செயல்பாட்டின் நடுவில் தமது தீரமிகு போராட்டத்தினை தக்கவைத்து முன்னகரும் தீர்க்கமான போராட்டக் குழுவாக அறியப்படுகிறது. இதன் பல்வேறு போர்களங்கள் பல்வேறு நாடுகளிடையே, பல்வேறு ஆதிக்க வடிவத்தினை எதிர்த்து நடத்தும் போராட்ட வடிவமும், அரசியல் நகர்வுகளும் தேசிய இன போராட்ட வரலாற்றில் மிக முக்கியமானதாக நாங்கள் பார்க்கிறோம்.

 

 

தமிழீழ விடுதலைப் போராட்டம் உட்பட ஆசிய கண்டத்தினை இன்று ஆட்டிப் படைக்கும் தேசிய இனவிடுதலை போராட்ட்த்தினை உலகம் அங்கீகரிக்க வேண்டிய சூழலை உருவாக்கிய இரு பெரும் விடுதலை போராட்டமாகிய தமிழீழமும் குர்திஸ்தானும் வரும் காலங்களில் வரலாற்று பாடமாக உலகினை நாகரீகமடைய செய்யும் என்பதில் எமக்கு சந்தேகம் இல்லை. தமக்குள் ஒரு ஓர்மையை உருவாக்குவதும், சர்வதேசம் பற்றிய புரிதலை, மதிப்பீடுகளை வடிவமைப்பதும், தமக்குள் அங்கீகாரங்களை ஏற்படுத்துவதும் இன்றியமையாததாக கருதிய குர்தீஸ் இன போராளிகளுக்கு தமிழினம் தமது மரியாதையை செலுத்துகிறது. வரும் காலத்தில் இரண்டு சுதந்திர நாடுகளும் ஒரு பெரும் உறவை வளர்த்தெடுக்கும் என்பதை நாங்கள் நம்பிக்கையுடனேயே பார்க்கிறோம்.

 

இத்தகைய வரலாறு உடைய குர்தீஸ் போராளிகளுக்கு இன்று நிகழ்ந்திருக்கிற வன்முறை எங்களுக்கு மிகவும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. பிரான்சு நாட்டின் தலை நகரில் மிகவும் கோழைத்தனமாக படுகொலைசெய்யப்பட்ட அதன் மூத்த தலைவர்களின் ஒருவரான தோழர்.சாக்கின் கன்சிஸ் (Com. Sakine Cansiz) அவர்களுக்கும் அவருடன் சேர்ந்து கொலைசெய்யப்பட்ட தோழர்களான தோழர்.பிடான் டோகன், தோழர். லேய்லா சொய்லெமெஸ் (Com.Fidan Dogan, Com.Leyla Soylemez) ஆகிய தோழர்களுக்கும் மே பதினேழு இயக்கம் தனது வீரவணக்கத்தினை தெரிவித்துக் கொள்கிறது.

 

 

குர்தீஸ் போராளி குழுவை உருவாக்கியவர்களில் ஒருவரும் அதன் மூத்த தலைவராக இருப்பவருமான தோழர்.சாக்கின் கன்சிஸ் சிறையில் இருந்தபடியே 80களில் குர்திஸ் போராட்ட்த்தினை வழி நட்த்தியவர். விடுதலையான பிறகு குர்தீஸ் விடுதலை போராளிகளின் தலைவராக இருக்கும் அப்துல்லா ஒகலானுடன் சிரியாவில் இனைந்து பெண் போராளிகளின் தலைவராக செயல்பட்டு வடஈராக்கில் போராட்டம் நடத்தியவர். அதன் பின்னர் சனநாயக வழியில் ஐரோப்பாவில் குர்தீஸ் விடுதலை போராளி பெண்களுக்கான இயக்கத்தினை வழி நடத்தியவர்.

 

தோழர்.பிடான் டோகன் பாரிஸ் நகரில் இருந்து பிரெஸ்ஸல்ஸ் நகரில் செயல்படும் குர்திஸ்தான் தேசிய காங்கிரஸின் உறுப்பினர். அரசியல் செயல்பாட்டாளராக ஐரோப்பாவில் செயல்பட்டவர். குர்திஸ் போராளிகளின் மீதான தடையை நீக்க அரசுகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டவர்.

 

 

தோழர். லேய்லா சொய்லெமெஸ் மிக இளவயது குர்தீஸ் விடுதலை ஆதரவாளர்.

 

இந்த தோழர்களின் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறையானது பிரான்சு நாட்டில் தற்போது நிலவிவரும் போராளிகளுக்கு எதிரான அரசபயங்கரவாதத்தினை உறுதி செய்வதாகவே தோன்றுகிறது. கடந்த நவம்பர் மாதத்தில் பாரிஸ் நகரில் படுகொலை செய்யப்பட்ட தமிழீழ செயற்பாட்டாளர் தோழர். பரிதி அவர்களின் படுகொலையினை பிரான்சு அரசாங்கம் கவலைக்குரிய செயலாக கண்டு எச்சரிக்கையடையாமல் இருந்த மெத்தனமே தற்போது நடைபெற்ற இந்த படுகொலைகளுக்கு காரணம் என்று அஞ்சுகிறோம். இது போன்ற நிகழ்வுகள் பிரான்சு அரசாங்கத்தின் மீதான சனநாயக ஆற்றல்களின் நம்பிக்கையை தகர்ப்பதாக இருக்கின்றன. இத்தகைய சனநாயகமற்ற நாகரீகமற்ற நிகழ்வுகளுக்கு பிரான்சு மக்கட்சமூகம் தனது எதிர்ப்புகளை கடுமையாக பதிவு செய்யும் போது மட்டுமே அதன் முற்போக்கு சித்தாந்த வரலாற்றினை வலுவுள்ளதாக மீள கட்டியமைக்கும்.

 

 

விடுதலைக்கு போராடும் இயக்கங்களை பயங்கரவாத இயக்கங்களாக முத்திரையிடும் ஐரோப்பிய ஒன்றியத்தின் அரைவேக்காட்டுத்தனமான, ஏகாதிபத்திய மக்கள் விரோத போக்கினை கண்டிக்க ஐரோப்பிய சன நாயக, முற்போக்கு சக்திகள் முன்வரவேண்டும். தமிழீழ விடுதலை போராளிகளை இவ்வாறு தடை செய்ததை டப்ளின் தீர்ப்பாயம் கண்டித்திருந்ததை இச்சமயத்தில் நினைவு கூற விரும்புகிறோம். விடுதலைக்காக போராடும் இயக்கங்களை ஒடுக்குவதை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். இது சன நாயகத்தின் படுகொலை என்றே நாங்கள் பார்க்கிறோம். சார்த்தர் போன்ற சிந்தனையாளர்களை உருவாக்கிய நாட்டில் நிகழ்ந்த இந்தப் படுகொலையை எந்த ஒரு நாகரீகச் சமூகமும் ஏற்காது.

 

இதே கணத்தில், இந்தச் செய்தியை பிரசுரிக்கும் மேற்குலக பத்திரிக்கைகள் பி.பி.சி போன்றவை துருக்கிய அரசுக்கும் குர்தீஸ்போராளிகளுக்கும் இடையே நிகழ்ந்த மோதலினால் 20,000 மக்கள் கொல்லப்பட்டார்கள் என பொத்தாம் பொதுவாக இருவரையும் சமமானவர்களாகவும் , குற்றவாளிகளாகவும் சித்தரிப்பது கண்டிக்கப்பட வேண்டியது. உலகின் எந்த ஒரு விடுதலை போராட்ட இயக்கமும் தமது மக்கள் ஆளும் அரசுகளினால் ஒடுக்கப்படும் போதும், கொல்லப்படும் போதும் தான் உதயமாகின்றன என்கிற வரலாற்று எதார்த்தத்தினை புறம்தள்ளுவதாக இருக்கிறது. இது நேர்மையான பத்திரிக்கை அறமாக மே பதினேழு இயக்கம் பார்க்கவில்லை. இது போன்ற நேர்மையற்ற பத்திரிக்கை செய்திகளை வெளியிட்டே இந்தியாவின் ‘தி இந்து’ போன்ற பத்திரிக்கைகள் தமிழீழத்தில் இனப்படுகொலை நடக்க உதவின என்பதை மேற்குல இதழாளலர்கள் மறந்து விடக்கூடாது.

 

 

குர்தீஸ் போராட்ட தோழர்கள் இந்த பின்னடைவில் இருந்து விரைவில் மீண்டு தமது விடுதலையை விரைவில் அடைவார்கள் என நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

 

மூன்று குர்தீஸ் போராளி தோழர்களின் தியாகத்தினை மே பதினேழு இயக்கம் போற்றுகிறது. தமிழீழ விடுதலைக்கும் தமது ஆதரவு குரல் கொடுத்த இந்த சமரசமற்ற சனநாயக போராளிகளுக்கு தலைதாழ்த்தி வீரவணக்கம் செலுத்துகிறது மே பதினேழு இயக்கம்.

 

 

 

Link to comment
Share on other sites

530824_319998258110735_564596038_n.jpg

Link to comment
Share on other sites

சுண்டல் தம்பி எல்லாரும் எல்லா இடமும் நிற்க முடியாது ,நம்பகமானவர்களிடம் இருந்து தான் செய்திகள் எடுக்க வேண்டும்.

புலம் பெயர்ந்தவர்கள் போர்குற்றங்களுக்கான செய்திகளை சேகரிப்பது அந்த அடிப்படையில் தான் .சனல் நாலிடம் நீங்கள் இலங்கையிலேயே இல்லை ஆன படியால் போய் என்று சொல்லி இலங்கை அரசு தப்பி விடமுடியாது ,பிராங்க்கஸ் கரிசனும் ,கோர்டன் வைசும் இந்த அடிப்படையில் தான் புத்தகமே எழுதினார்கள் .

நீங்கள் எல்லாம் போக வேண்டிய தூரம் இன்னும் கனக்க இருக்கு தம்பி .

நாட்டில் சும்மா எடுபிடியாக அலைந்து விட்டு இங்கு பலர் கதை அளக்கின்றார்கள் .

நான் தொடர்பு வைத்திருந்தது

BBC-MARK TULLY

GUARDIAN- ERIC SILVER

HINDU- .GK.REDDY,RAM

FREE LANCE- PAHAVAN SINGH ,ANITA PRATAP.SANDARASEKAR ,JOHN DEOL,PUDNIS,

RAW-CHANDRASEKAR

IB- RAMATHAS

CBI-GOPAL

இதைவிட பல ஆரம்ப புலிகள் உமா ,நாகராசா ,குமணன் ,சிவகுமார் (அன்டன் மாஸ்டர் ) இன்னும் பலர் .

சும்மா நாட்டை விட்டு ஓடிவந்து நிரந்தர விசாவிற்கு அலைந்தவர்களும்,வேலை,வீடு ,குடும்பம் என்று இருந்தவர்களும் நடந்தது எதுவும் தெரியாமல் தேசியம் என்றும்,சிங்களைவனை கொல்லு என்று  துள்ளி எழுந்தததன் விளைவுதான் புலிகளின் வளர்சியும் அழிவும் .

இப்பவும் ஒன்றும் பிந்தவில்லை  நீங்கள் திருந்துவதற்கு .இனி உங்களால் ஒன்றும் நாட்டில் எதுவும் ஆகப்போவதில்லை என்பது கல்லில் எழுத்தாகிவிட்டது .

ஐயாவிற்கு ரா மற்றும் ஐபி, இந்து ராம் என்று தமிழ் விரோதிகள் தமிழர் ஒழிப்பு சக்திகள் என்று நல்ல தொடர்பு தான். இப்பிடி அடிக்கடி வந்து உண்மைய சொன்னாதான் யாழ் நண்பர்கள் நீங்க எந்த வழி என்று அறிய உதவியா இருக்கும் நன்றிகள் அர்யுன் அண்ணா 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.