Jump to content

நானும் உங்களில் ஒருவனா?

Recommended Posts

வணக்கம்! வாங்கோ  கடுந்தெறல். உங்கள் பண்பினாலும்,தமிழாலாலும் யாழ் மேலும் உயரட்டும்!!!

மிக்க நன்றி சோதரி.  யாழில் எப்போதுமே இப்படித்தானா வரவேற்புகள்? எல்லோரும் இவ்வளவு அன்பான உறவுகளா? 
புல்லரிக்குது !
Link to comment
Share on other sites

  • Replies 55
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

என் இனிய யாழ் குமுக உறவுகளே, உங்கள் அனைவருக்கும் எனது பணிவான வணக்கம் .

யாழின் களங்களின் பார்வையாளனாகவே நீண்ட காலமாக இருந்த எனக்கு, உங்களில் ஒருவனாக குடும்பத்தில் இணைய வேண்டும் என்ற கனவு நீண்ட காலமாகவே இருந்தது.

இன்று அதற்காக என்னை நான் தயார் நிலைப்படுத்தி விட்டேன். எனவே உங்களில் ஒருவனாக என்னை ஏற்றுக்கொள்ளுமாறு தாழ்மையுடன் உங்கள் அனைவரையும் வேண்டி நிற்கிறேன். 

என்னை நான் சரியான முறையில் யாழில் பதிவு செய்து விட்டேனா எனும் வினா மட்டும் இன்னும் என்னுள் தொக்கி நிற்கிறது. சோதரர்கள் யாராவது பதில் தருவீர்களா ?

நன்றி.

வணக்கம், வாருங்கள்... கடுந்தெறல் அரசு.

உங்களின் அறிமுகமே... எம்மைக் கவர்ந்து விட்டது.

நாம் தொடர்ந்தும்... களத்தில் உரையாட வேண்டி வரும் என்பதால்... உங்களின் பெயரை எப்படிச் சுருக்கிக் கூப்பிட வேண்டி வரும், அப்போ... எப்படி அழைப்பது... என்று கூறினால், நல்லது.

Link to comment
Share on other sites

வந்து குந்து நைனா 

ரொம்ப நன்றிக சார். பேட்டேலே எல்லாம் நலமா?
பூனைக் கேன்க பூதக்கண்ணாடி போட்டின்க?
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் கடுந்தெறல் வாங்கோ.

வித்தியாசமான பெயர்.

கடுந்தென்றல் என்று வைத்திருக்கலாமோ எண்டு தோன்றியது

Link to comment
Share on other sites

வணக்கம், வாருங்கள்... கடுந்தெறல் அரசு.

உங்களின் அறிமுகமே... எம்மைக் கவர்ந்து விட்டது.

நாம் தொடர்ந்தும்... களத்தில் உரையாட வேண்டி வரும் என்பதால்... உங்களின் பெயரை எப்படிச் சுருக்கிக் கூப்பிட வேண்டி வரும், அப்போ... எப்படி அழைப்பது... என்று கூறினால், நல்லது.

யாழ் களத்தின் colonel தரத்தில் என்னால் எடை போடக்கூடிய என் அன்புறவு தமிழ் சிறி அண்ணனுக்கு, 

என்னையும் தங்களுடன் இணைந்து பயணிப்பதற்கு அனுமதி அளித்ததற்கு முதற்கண் எனது பணிவான நன்றியும் வணக்கமும் .
தாங்கள் என்னை எப்படி வேண்டுமானாலும் அழைத்துக்கொள்ளலாம். அது உங்களின் தெரிவாகவே அமைய வேண்டுகிறேன்.
என்னைப்பற்றி எடுத்தியம்புவதற்கு பெரிதாக ஏதும் இல்லை.காலவோட்டத்தில் எதிர் நீச்சல் போட யாழ் களத்தில் நீங்கள் என் துரோணராக இருப்பிர்கள் என நம்புகிறேன்.
Link to comment
Share on other sites

வணக்கம் கடுந்தெறல் வாங்கோ.

வித்தியாசமான பெயர்.

கடுந்தென்றல் என்று வைத்திருக்கலாமோ எண்டு தோன்றியது

யாழ் கள நிலைமைகளில், சுடச்சுட செய்திகளை போட்டு மாற்றங்களை உருவாக்கும்  அன்புறவு அண்ணன் கறுப்பி அவர்களே 

உங்குக்கு எனது  பணிவான நன்றியும் வணக்கமும் .
டுந்தெறல் - 'மிகக்கடுமையாகப் போர் புரிய கூடிய,' என்று பொருள் கொள்ளலாம்.
தங்களின் விருப்புக்கு ஏற்ப என்னை நீங்கள் அழைத்துக்கொள்ளுங்கள்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் கடுந்தெறல்

வருக வருக என உங்களை  வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகின்றோம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம், கடுந்தெறல்!

முல்லைக்குத் தேர் கொடுத்தான் பாரி என்பதில் பெருமைப் பட என்ன இருக்கின்றது?

கொஞ்ச தூரம் போய், ஒரு தடியைக் கொண்டு வந்து. முல்லைக்கு மிண்டு கொடுத்திருக்கலாம் என்பது எனது பணிவான கருத்து!

இத்தகைய பாரிகள் தான், புலமெங்கும் நிறைந்து கிடக்கிறார்கள்! வெறும் ஊதாரித்தனம்! 

ஆனால், உங்கள் தமிழ் அழகு!

வணக்கம் என்று கூறிக் கரம் கூப்புகின்றேன்!

அதுதானை..பாரி ஒரு படு சோம்பேறியாய் இருந்திருக்கவேணும்..லூசுப்பயல்...

Link to comment
Share on other sites

அது சரி யாருப்பா அந்த பாரி? முல்லை என்றது அவரோட gf ஆ? இந்த காலத்தில கார் வாங்கி கொடுக்கிற மாதிரி அந்த காலத்தில தேர் வாங்கி கொடுத்தாரா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டு அண்ணாவ, திண்ணைப் பக்கம் காணலை, கங்காருவுக்கு..... பால் கொடுத்தீங்களா? அண்ணா........

Link to comment
Share on other sites

சுண்டு அண்ணாவ, திண்ணைப் பக்கம் காணலை, கங்காருவுக்கு..... பால் கொடுத்தீங்களா? அண்ணா........

இல்லை காங்காரு இன்னும் படுத்திருக்கு நித்தாவால எழும்பல்ல

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை காங்காரு இன்னும் படுத்திருக்கு நித்தாவால எழும்பல்ல

அவுசிலை இப்ப பின்னேரம் எண்டு நினைக்கிறன், கன நேரம் படுக்க விடக்கூடாது. சோம்பல் வந்துடும்.(32 பல்லுத் தெரியும் சிரிப்பு)

Link to comment
Share on other sites

என்ன அண்ணே இப்பிடி சொல்லுரிங்க கங்காருக்கு அடிக்கடி ஓய்வு கொடுக்கனும்ன்னே...... இல்லேன்னா அப்புறம் அடம் பிடிச்சு கதறி அழும்ன்னே....

Link to comment
Share on other sites

வணக்கம் வாங்கோ

வணக்கம் Sagevan,

அன்பான வரவேற்பிற்கு நன்றி. 
Link to comment
Share on other sites

வணக்கம் கடுந்தெறல்

வருக வருக என உங்களை  வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகின்றோம்

வணக்கம் வாத்தியார்,

வந்தேன் சார். முதல்ல  டாப்பிலெ வரவு வைக்க மறந்திடாதிங்கோ...
 
 அன்பான வரவேற்பிற்கு நன்றி. 
Link to comment
Share on other sites

வணக்கம், கடுந்தெறல்!

முல்லைக்குத் தேர் கொடுத்தான் பாரி என்பதில் பெருமைப் பட என்ன இருக்கின்றது?

கொஞ்ச தூரம் போய், ஒரு தடியைக் கொண்டு வந்து. முல்லைக்கு மிண்டு கொடுத்திருக்கலாம் என்பது எனது பணிவான கருத்து!

இத்தகைய பாரிகள் தான், புலமெங்கும் நிறைந்து கிடக்கிறார்கள்! வெறும் ஊதாரித்தனம்! 

ஆனால், உங்கள் தமிழ் அழகு!

வணக்கம் என்று கூறிக் கரம் கூப்புகின்றேன்!

அன்புடன் வணக்கம் புங்கையூரான்,

நான் களத்துக்கு வரும் போதே வைரவருக்கு ஓர் வேண்டுதல் வைத்தேன். 
 
என்ன.. எதுக்கா?
எல்லாம் உங்களிடம் இருந்து தப்பிவிட வேண்டும் என்பதற்காகத்தான். தங்களின் கருத்துக்களை யாம் ஏற்கனவே படித்து பரிட்ச்சயப் பட்டு விட்டோமல்லவா.  
அவதானமாகத்தான் எழுதினேன்.? இருந்தும் ..... மருதடி வைரவர் என்னை ..... இருந்தும் அழகாகவே கடித்து வைத்துள்ளிர்கள் !
 
அன்பான வரவேற்பிற்கு நன்றி. 
Link to comment
Share on other sites

அதுதானை..பாரி ஒரு படு சோம்பேறியாய் இருந்திருக்கவேணும்..லூசுப்பயல்...

வணக்கம் சுபேஸ்,

பாட்டன் பாரி பற்றிய உங்கள் பார்வையின் இரகசியம் என்ன ¿?
Link to comment
Share on other sites

வணக்கம்,

உங்கள் இணைவுக்கு மகிழ்ச்சி.

ஏனைய பகுதிகளிலும் திரி திறக்கவும், எழுதவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நன்றி.

Link to comment
Share on other sites

வணக்கம் அரசு, இனிய நல்  வரவு

வணக்கம் உடையார். ....வரவேற்பு ஏதோ தாறு மாறாத்தான் கிடக்கு.......

அது சரி உடையார்....,வந்ததும் வராததுமா உங்கட தனிப்பட்ட பிரச்சனையில தலைய போர்றான் எண்டு  னைக்காதிங்கோ.
நான் உங்களை கன நாளா ஒரு கேள்வி கேக்க வேணும்  எண்டு னைச்சனான். வளமா இப்ப வந்து மாட்டிப்போட்டியள் எண்டு நைக்கிறன்.
 கேக்கிறதோ விர்றதோ எண்டு யோசனையாவும் கிடக்கு. 
எதுக்கும் ஒருக்கா போட்டுப் பாக்கிறன்.
வேற ஒண்டும் இல்லைப்பாருங்கோ, அது தான் அந்த ......
மெய்யே உடையார், ..அந்தக் கதை உண்மையோ ?
எதை எண்டு சொல்ல பயமாவும் கிடக்கு, வெட்கமாவும் கிடக்கு.
அது தான் , நீங்கள் நைக்கிறது தான்...
அது உண்மையோ ???? 

வணக்கம்,

உங்கள் இணைவுக்கு மகிழ்ச்சி.

ஏனைய பகுதிகளிலும் திரி திறக்கவும், எழுதவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நன்றி.

நன்றியும் வணக்கமும் நிழலிக்கு 

Link to comment
Share on other sites

வணக்கம்! வாங்கோ!

ஜனநாயக வேடம் போட்டு, தமிழினப் படுகொலைகளை நிகழ்த்தி

* 260,000 இற்கு மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்படக்,

* 170,000 இற்கு மேற்பட்ட தமிழர் ஊனமுற / கடுங்காயமடையக்,

* 150,000 இற்கு மேற்பட்ட தமிழர் வீடுகள் தரை மட்டமாகக்,

* 1,500,000 இற்கு மேற்பட்ட தமிழர் புலம் பெயரக்,

* 800,000 இற்கு மேற்பட்ட தமிழர் இடம்பெயரக்,

* 90 பில்லியன் அமெரிக்க டாலர் இற்கு மேற்பட்ட மதிப்புள்ள தமிழரின் சொத்துக்கள் அழிக்கப்படக்

* 146,000 இற்கு மேற்பட்ட தமிழர் காணாமல் போவதற்குக்,

காரணமாக இருந்த சிங்கள, வட இந்திய, மலையாள பயங்கரவாதிகள் அனைவரும் கூண்டோடு அழிந்து, உலகில் உண்மையான மனிதத்துவம், சாந்தி, சமாதானம், அகிம்சை, நீதி நிலைக்க உங்கள் பங்களிப்பு அவசியம்.

Link to comment
Share on other sites

என் அன்புச் சகோதரன் ஆராவமுதன்,

 யான் நிற்கும் திசையிலும் வழியிலும் நின்று என்னை வரவேற்றதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறேன்.

என் உழைப்பும், உயிரும் என் மக்களுக்காகவே  என்று மாவீரரின் நாமத்தால் உரமான உறுதி கொள்கிறேன் சகோதரா. 

வாய் பேச்சு மட்டும் போதாது!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.