Sign in to follow this  
நிழலி

பொங்கல் வாழ்த்துகளும் புதிய வடிவமைப்பும்

Recommended Posts

வணக்கம்.

 

அன்பிற்கினிய அனைத்து கள உறவுகளுக்கும் யாழ் இணையத்தின் இனிய தமிழ் திருநாள் பொங்கல் வாழ்த்துகள்.

 

இந்த தமிழர் திருநாளில், தாயக மக்கள்  மண்ணில் சுதந்திரத்துடனும் மதிப்புடனும் வாழ்வதற்கும், தம்மை தாமே நிர்வகிக்கும் உரிமைகளை அடைவதற்கும் எம்மால் முடிந்தவற்றை செய்வோம் என உறுதி எடுப்போம்.

 

யாழ் இணையம் கால மாற்றங்களுக்கு ஏற்ப தன் வடிவமைப்பில் மாற்றங்களைக் செய்து கொண்டு வந்துள்ளது. அதே வழியில் இந்த பொங்கலுடன் பொங்கல்2013 எனும் புதிய வடிவமைப்பினை சனிக்கிழமை, சனவரி 12, 2013 அன்று வெளியிட இருக்கின்றோம்.

 

புதிய வடிவத்தினை வெளியிட்டவுடன் ஒரு சில தொழில்நுட்ப ரீதியிலான சிக்கல்கள் ஏற்படலாம் என எதிர்பார்ப்பதனால் கள உறவுகள் அடுத்த சில தினங்களுக்கு சில பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடலாம். இவ்வாறு ஏற்படும் பிரச்சனைகள் ஏற்படும் போது எமக்கு அறியத் தந்து பொறுமையுடன் எமக்கு ஒத்துழைப்பீர்கள் என நம்புகின்றோம்.

 

நன்றி,

யாழ் நிர்வாகம்

  • Like 9

Share this post


Link to post
Share on other sites
Sign in to follow this