Jump to content

யாழில் என்ன மாதிரியான மாற்றங்கள் செய்தால் நல்லாயிருக்கும்.


Recommended Posts

புது வருசமும் பிறக்கப் போகுது. யாழும் புது மாற்றங்களோடை வரப் போகுதான். நல்ல விசயம்... இந்த நேரத்திலை எங்கடை பிள்ளைகளிட்டையும் யாழ் இப்படிச் செய்தால் நல்லாயிருக்கும்... அப்படிச் செய்தால் நல்லாயிருக்கும் எண்டு கன பிளானுகள் இருக்கும். அதைப் பற்றிக் கதைக்கத் தான் இந்தத் திரி.. அதுகளை நாங்கள் இங்கை பகிர்ந்து கொள்ளுவம். புத்தி சொல்லுறதும் பிழை பிடிக்கிறதும் தானே உலகத்திலை லேசான வேலைகள். சரி நானும் என்ரை மனசிலை பட்டிறதைச் சொல்லுறன்.... முதலாவது சொந்தப் படைப்புகளும் ஆக்கங்கம் வாறது குறைவு எண்டு பன பேர் அங்கலாய்க்கினம்.நியாயமான அங்கலாய்ப்புத் தான். யாழும் சொந்தப் படைப்புக்களுக்கு ஒரு முக்கியத்துவம் குடுக்க வேணும். இப்ப என்னண்டா முகப்புப் பக்கத்திலை கடைசியாப் பதிஞ்ச கொஞ்ச விசயங்கள் வந்து நிக்குது. இப்படி ஒரு புது ஆக்கத்தைப் பதிஞ்சால் அதுகும் வரும். ஆனால் என்ன பிரச்சினையெண்டால் ஆராவது வந்து ஆரியாக்கு காலிலை முள்ளு குத்திட்டுது. நயன்தராவுக்கு இடுப்பிலை புண் வந்திட்டுது, இரத்தினபுரியிலை வெள்ளம் எண்ட மாதிரியான செய்திகளை வெட்டி ஒட்டினதும் அதுகள் மேலை வந்திடும். ஒரு புதுக் கருத்தை எழுதிப் பதிஞ்சிட்டு கொஞ:ச நேரத்திலை வந்து பாத்தால் அது பாதாளத்திலை போய் நிக்குது. அதாலை அந்த விசயத்தை வந்து பாக்கிற ஆக்களும் குறைஞ்சு போகுது.... இதுக்கு எதாவது ஒண்டு செய்ய வேணும் பாருங்கோ! அடுத்தது எல்லாரும் கதைக்கிற விசயம் இந்த வெட்டு விழுகிறதைப் பற்றித் தான். வெட்டு விழுறதிலை பிழையில்லை. வெட்டத் தான் வேணும். ஆனால் வெட்டேக்கை ஒரு விசயத்தை இந்தக் கத்திரிக்கோல் வைச்சிருக்கிற ஆக்கள் நினைவிலை வைச்சிருக்க வேணும். ஆர் எழுதின விசயம் எண்டு பாக்காதேங்கோ. என்ன எழுதினவை எண்டு மட்டும் பாருங்கோ... சரி வேறை விசயங்கள் ஞாபகத்திலை வந்தால் நான் பிறகு வந்து எழுதிறன். நீங்களும் உங்கடை மனசிலை கிடக்கிறதை எழுதுங்கோவன்...

Link to comment
Share on other sites

சுய ஆக்கம்  பற்றி  நானும் முன்னர் எழுத நினைத்திருந்தேன்  ஆக்கற் களம் பகுதியில்  அதனை சுய ஆக்கம்  மற்றும்  பிரதி பண்னி  இரும் ஆக்கம் என  இரண்டாக  பிரித்தால்  சுய ஆக்கங்களை  இடுபவர்களிற்கு பிரயோசனமாக இருக்கும்.  காரணம் யாழில் புதிதாக சுய ஆக்கங்களை  ஒருவர்  எழுதிவிட்டு அதற்கு  வரவேற்பு எப்படி இருக்கும் என  அங்கலாய்த்து இருக்கும்போது  யாராவது பழைய உறுப்பினர்  யாருடையதோ ஏதாவது ஒரு ஆக்கத்தை   வெட்டி ஒட்டிவிட்டு பேய்விடுவார்  அந்த ஆக்கத்தை பலரும் பார்த்திருப்பார்கள். புதிதாய் சுய ஆக்கம் இட்டவரின்  பதிவு கவனிப்பற்று  இருக்கும்.  இதனால் சுய ஆக்கத்தை  இட்டவரிற்கு  வெறப்பு ஏற்பட வாய்ப்புண்டு . இதனை நிருவாகம் கவனத்தில் எடுக்கலாம். கதை அல்லது கவிதைகள்   வெட்டி ஒட்டுபவர்களிற்கு தனியானதொரு  பகுதியை  ஏற்படுத்திக் கொடுத்தால்  சுயமான படைப்பாளிகளிற்கு  ஊக்கம் கொடுப்பதாக அமையும் நன்றி.

Link to comment
Share on other sites

சுய ஆக்கத்தைப்பற்றி மூன்று நான்கு பேர்கள் கதைத்து எதுவும் நடக்கப்போவதில்லை என்பது எனது கருத்து .

Link to comment
Share on other sites

ஆக்கங்களுக்கும் செய்திகளுக்கும் எழுதப்படும் பதில்கள் , விமர்சனங்கள்/பாராட்டுகள்   சமூக வலைத்தளங்க ஊடாக நேரடியா உள் நுளைந்து எழுதக்கூடிய வசதிகள் தான் தற்போதைய வளிவகையாகி கொண்டு இருக்கிறது...

 

யாழும் பரீட்சிக்கலாம்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் ஆரோக்கியமான சுய படைப்பாற்றல் போக்கு இறந்து போய் இப்போ.. போட்டி ஆக்கக் கலாசாரம் திணிக்கப்பட்டுள்ளது. டேய் நண்பா என்னட்டச் சொல்லி இருந்தி என்றால் உன்ர ஆக்கம் போட்டு நாலு நாள் கழிச்சு என்ற ஆக்கத்தைப் போட்டிருப்பன்.. என்று சொல்லும் நிலைக்கு யாழ் இன்றுள்ளது. இந்தப் போக்கு முன்னர் இருந்ததில்லை. தமக்குத் தாமே விதித்துக் கொண்ட போட்டி மனப்பான்மையோடு செயற்பட்டு ஒரு வித ஆரோக்கியமற்ற சூழல் நிலை கொள்ளச் செய்யப்பட்டுள்ளது யாழில்.

 

மேலும்..  எமது விடுதலைப் போராட்டத்தின் மீது..ஆதாரமற்ற.. காழ்புணர்வு கொட்டும் அவதூறுகள் நிறைந்த ஆக்கங்கள் வேண்டும் என்றே திணிக்கப்படுகின்றன. இவற்றை நேரடியாகவும் மறைமுகமாகவும் எழுதுகின்றனர் ஒரே சிலரை உள்ளடக்கிய குழுவினர்.. பல பெயர்களில். இவற்றிற்கு தனிப்பகுதி என்பது அவசியமற்றது.

 

இந்த குழுநிலை கூட்டுப் படைப்புகளை எல்லாம் சுய ஆக்கம் என்று கருதாமல்.. அதற்கு அப்பால் யாழ் நகர்த்து செல்லவும் புதியவர்களை உள்வாக்கவும் ஊக்குவிக்கவும்.. அவர்களின் ஆக்கங்களுக்கு முன்னுரிமை அளிக்கவும் முன்வர வேண்டும். மற்றும்படி.. யாழின் நிர்வாகம் தனக்கு எது வசதியோ.. காலமாற்றத்திற்கு எது தேவையோ... அதற்கேற்ப மாற்றங்களைச் செய்வதே சிறப்பு..!

 

எம் எஸ் என் தோன்ற முன்னர் தோன்றிய யாழ் இன்னும் நிலைத்திருக்குது.. எம் எஸ் என் மடிந்துவிட்டது. யாழ் பாவிக்கும்.. strategy தான் அதன் இருப்புக்கு அவசியம். காலத் தேவைகளோடு அதன் சேவைகளை விரிவாக்கின் யாழ் எம்மை எல்லாம் கடந்து இன்னும் பலரை உள்வாங்கி நீண்டு.. நிலைத்திருக்க நிறையவே வாய்ப்புள்ளது. :icon_idea:

Link to comment
Share on other sites

யாழ் முகப்பில் 'யாழ் உறுப்பினர்களின் சுய ஆக்கங்கள்' மற்றும் 'முற்றம்' ஆகிய பகுதிகளில் யாழ் கள உறவுகளின் ஆக்கங்களை முன்நிலைப் படுத்துவதற்காகன முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. தற்போது இது ஆரம்ப நிலையில் இருந்தாலும் படிப்படியாக இதுவரை யாழில் எழுதப்பட்ட ஆக்கங்களை வகை நீதியாக / எழுதியவர் / திகதி ரீதியாக வகைப்படுத்தவும் Google போன்ற தேடு கருவிகள் மூலம் தேடலை இலகுவாக்கவும் முடியும். யாழில் ஆரம்பத்தில் எழுதப்பட்ட சிறந்த ஆக்கங்கள் காலப்போக்கில் மறைந்து விடாமல் புதிய வாசகர்களை அடைய வேண்டுமென்பதே இதன் நோக்கமாகும்.

மணிவாசகன், சாத்திரி குறிப்பிட்ட யோசனைகளும் கவனத்தில் கொள்ளப்படவேண்டியவை. ஆனால் இவற்றைத் தானியங்கியாகச் செயற்படுத்துவது கடினம். இருந்தாலும் வேறு வழிகளை ஆராய வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழின் புதிய முகப்பு நன்றாக இருக்கிறது.

வடிவமைத்தவர்களுக்கு பாராட்டுக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரியாரின் ஆதங்கம் நியாயமானது! இது போன்ற கருத்தை நானும், நெடுக்கர் ஆரம்பித்த பதிவொன்றில் பதிந்திருந்தேன்!

 

செய்திகள் தவிர்ந்த, வேறு தளங்களில் இருந்து கொண்டு வரப்படும் பதிவுகளை, இன்னொரு புதிய பகுதியை ஆரம்பித்து, அதனுள் பதிந்தால் நல்லது என எண்ணுகின்றேன்!

 

'தோட்டத்து மல்லிகைகள்' என்று ஒரு தலைப்பின் கீழ் இணைக்கலாம்!

 

இந்தத் தலைப்பின் கீழ், கவிதைகள், சிறு கதைகள், கட்டுரைகள் என பிரிவுகளை வைத்திருக்கலாம்!

 

யாழ் களத்தின் ஆக்கங்களை, ;முற்றத்து மல்லிகைகள்' என்ற தலைப்பின் கீழ் பதியலாம்!

 

பதிவை ஆரம்பித்த, மணிவாசகனுக்கு நன்றிகள்!

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்னித்து கொள்ளுங்கள் என்னால் சுய ஆக்கம் எதுவும் எழுதத்தெரியாது ஆனால் யாரவது எங்காவது நல்ல ஆக்கங்கள் இணைத்திருந்தால் அதை சுட்டுவந்து ஒட்டத்தெரியும்.  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
யாழின் புதிய முகப்பு நன்றாக இருக்கிறது.  தொழில்நுட்ப குழுவிற்கு நன்றிகள்.

 

பொங்கலுக்கு புதுச்சட்டை போட்டிருக்கு :D

Link to comment
Share on other sites

அண்மைக்காலங்களில் புதிய உறுப்பினர்கள் அதிகமாக இணைவதாக நிர்வாகம் கூறி இருந்தது.

 

 

அவர்களின் தேவை / விருப்பம் என்ன என நிர்வாகம் அறிந்து அதற்கேற்பவும் சில முயற்சிகளை மேற்கொள்ளலாம்.

Link to comment
Share on other sites

ஆக்கங்களுக்கும் செய்திகளுக்கும் எழுதப்படும் பதில்கள் , விமர்சனங்கள்/பாராட்டுகள்   சமூக வலைத்தளங்க ஊடாக நேரடியா உள் நுளைந்து எழுதக்கூடிய வசதிகள் தான் தற்போதைய வளிவகையாகி கொண்டு இருக்கிறது...

 

யாழும் பரீட்சிக்கலாம்...

 

 

 

அரிச்சுவடி பகுதியில் எழுதாமல் நேரடியாக ஆக்கங்கள்/ செய்திகளுக்கு பதில் போடும் வசதியை நிர்வாகத்தினர் ஏற்படுத்தியுள்ளனர்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=113501

அதன் பின்னர் கள உறவுகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

நீங்கள் கூறியபடி சமூக வலைத்தளங்களூடாக (முகநூல்) இங்கும் பதில் எழுதும் முறையை கொண்டு வந்தால் கள உறவுகள் மற்றும் வாசகர்கள் எண்ணிக்கை இன்னும் உயர சந்தர்ப்பம் உள்ளது.

 

நியானி: திரிக்கு சம்பந்தமற்ற கருத்து நீக்கம்

Link to comment
Share on other sites


புது முகப்பு நன்றாக உள்ளது.எனக்கு தோன்றிய இரண்டு கருத்துக்கள்.

1.புது முகப்பில் உள்ள ஆங்கில நாட்காட்டிக்குப் பதில் தமிழ் நாட்காட்டி இருந்தால் இன்னும் உபயோகமாக இருக்கும். ஏனெனில் ஒவ்வொருத்தர் அலைபேசியுள்ளும், கணிணியுள்ளும் ஆங்கில நாட்காட்டி உள்ளது. ஆகையால் நூற்றில் ஒருவர் கூட இந்த ஆங்கில நாட்காட்டியை பாவிப்பது கடினமே. இணையத்தில் தமிழ் நாட்காட்டி காண்பது அரிது.ஆகையால் ஆங்கில நாட்காட்டிக்குப் பதில் தமிழ் நாட்காட்டி இருந்தால் அதிகம் பேருக்கு உபயோகமாக இருக்கும்.

2. நாணய மாற்றுப் போலவே காலநிலையை அறிய இலவச சேவை உண்டு(free MSN weather service and they exposing as a service). அதை உபயோகித்து அடுத்த மூன்று நாட்களுக்கு ஒரு நகரத்தின் காலநிலையை காண்பிக்கலாம். இது இன்னும் அதிகம் பேரை யாழுக்கு வரத் தூண்டும்.

 

சுய ஆக்கங்கள் குறித்த புங்கை, சாஸ்திரி கருத்துக்கள்  எனக்கும் ஏற்புடையதே. 

Link to comment
Share on other sites

இப்பொழுது இருப்பவற்றை மாற்றாமல் இருப்பதே நல்லம் இது சுய ஆக்கத்துக்கு ஒண்டு வேற இடத்தில இருந்து கொண்டுவாரத்திக்கு ஒண்டு என்பது சிரமத்தையே தரும் இதுக்கு இங்க போகணும் அதுக்கு அங்க போகணும் என்னமோ குகைக்குள கொண்டு போய் விட்டு வெளில வர சொலுற மாதிரி இருக்கும்

Link to comment
Share on other sites

அரிச்சுவடி பகுதியில் எழுதாமல் நேரடியாக ஆக்கங்கள்/ செய்திகளுக்கு பதில் போடும் வசதியை நிர்வாகத்தினர் ஏற்படுத்தியுள்ளனர்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=113501

அதன் பின்னர் கள உறவுகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

நீங்கள் கூறியபடி சமூக வலைத்தளங்களூடாக (முகநூல்) இங்கும் பதில் எழுதும் முறையை கொண்டு வந்தால் கள உறவுகள் மற்றும் வாசகர்கள் எண்ணிக்கை இன்னும் உயர சந்தர்ப்பம் உள்ளது.

 

 

யாழுக்கு வருபவர்களை விட நிச்சயமாக முகநூலுக்கு போவபர்கள் அதிகம்...   உதாரணத்துக்கு நீங்கள் யாழில் எழுதும் பதில்கள் முகநூலில் இருக்கும் உங்களின் நண்பர்களை எதுக்காக எழுதினீர்கள் எண்று பார்க்க தூண்டுமாக இருந்தால்  நிச்சயமாக அவர்களும் அந்த கருத்தாடலில் தங்களின் கருத்தையும் பதிவிட முயல்வார்கள்...

 

( தெருச்சண்டையும் வர வாய்ப்பிருக்கு .... :icon_mrgreen: )  பிரச்சினை வரலாம் எண்டதுக்காக எல்லாம் ஓடி  ஒளிய முடியாது இல்லையா....??

Link to comment
Share on other sites

புது உறுப்பினர்கள் இணையும்போது பல பகுதிகளையும் பார்த்து மலைப்பாக இருக்கும். நான் இணைந்த பொழுது அவ்வாறான ஒரு பிரமிப்பு எனக்கும் இருந்தது.

 

ஆகவே, உறுப்பினர் பதிவு முடிந்தவுடன் அவர்களுக்கு வழிகாட்டும் விதமாக யாழ் அரிச்சுவடியில் ஒரு பதிவு இடுமாறு அவர்களுக்கு வழிகாட்டலாம். பின்னர் படிப்படியாக அவர்களுக்கு ஏனைய களங்களைப் பற்றிய அறிமுகத்தையும் வழங்கலாம். இவ்வாறு செய்யும்போது களத்திற்குள் புதிய கருத்தாளர்களைக் கொண்டுவந்து புது இரத்தம் பாய்ச்ச முடியும். :rolleyes:

 

இல்லாவிட்டால் ஒரே ஆக்களைத்தான் திருப்பியும் சந்திக்க வேண்டி வரும்.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
 எல்லாரும் கதைக்கிற விசயம் இந்த வெட்டு விழுகிறதைப் பற்றித் தான். வெட்டு விழுறதிலை பிழையில்லை. வெட்டத் தான் வேணும்.

ஆனால் வெட்டேக்கை ஒரு விசயத்தை இந்தக் கத்திரிக்கோல் வைச்சிருக்கிற ஆக்கள் நினைவிலை வைச்சிருக்க வேணும். ஆர் எழுதின விசயம் எண்டு பாக்காதேங்கோ. என்ன எழுதினவை எண்டு மட்டும் பாருங்கோ...

 

 

 

எனக்கு  இந்த வெட்டுகிற எழுத்துக்களை வேறு ஒரு திரியில் எல்லோரும் பார்க்கமட்டும் முடிகிறமாதிரி  தந்தல் நல்லது

 

சிலவேளைகளில் எமக்கெதிராக எழுதப்பட்டிருக்கு என்று திரியில் இருக்கும்

ஆனால் என்னவென்று தெரியாதது பெரும் சங்கடமாக இருக்கும்

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

கோடிப்பாலை [அறிவியற்களம்]

பகுதியில் "கைத்தொலைபேசி" என்று ஒரு பகுதியும்  இருந்தால் சிறப்பாக இருக்கும்.

Link to comment
Share on other sites

மட்டுறுத்தல் / தடை செய்பவர்கள் கருத்தாடல் செய்யும் பெயர்களில் வராது வேறு பெயரில் வரவேண்டும்..! அண்மையில் நடந்த நிகழ்வுகள் இந்தக் கருத்துக்கு மேலும் வலுச்சேர்க்கிறது..! :huh:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மட்டுறுத்தல் / தடை செய்பவர்கள் கருத்தாடல் செய்யும் பெயர்களில் வராது வேறு பெயரில் வரவேண்டும்..! அண்மையில் நடந்த நிகழ்வுகள் இந்தக் கருத்துக்கு மேலும் வலுச்சேர்க்கிறது..! :huh:

 

Link to comment
Share on other sites

மட்டுறுத்தல் / தடை செய்பவர்கள் கருத்தாடல் செய்யும் பெயர்களில் வராது வேறு பெயரில் வரவேண்டும்..!

 

இதற்கு முன்னர் நானும் ஆதரவளித்திருந்தேன். எந்த திரியில் என்று மறந்து விட்டது. வேறு சிலரும் ஆதரவளித்தார்கள். அப்பொழுது ஏற்றுக்கொள்ளப்படாததால் பின்னர் நான் இரண்டையும் போட்டு குழப்பிக்கொள்வதில்லை.

 

ஆனால் இது அவசியமான ஒன்றாகவே படுகிறது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மட்டுறுத்துதல் செய்யப்படுவதற்கு ஒரு பொதுவான அய்டியை வைத்தால் என்ன?

 

உதாரணமாக:

 

கயானி என்ற அய்டி மட்டுறுத்தும் அய்டியாக இருக்கும். அதை  நுணா, நியானி, நிழலி அண்ணா, இணையவன் அண்ணா நான்கு பேருமே பயன்படுத்தி மட்டுறுத்தலாம். அவரவர் சொந்த அய்டியில் தமது கருத்துக்களை முன் வைக்கலாம்.

 

இம்முறையின் மூலம் யார் கருத்துக்களை மட்டுறுத்துகின்றார் என கருத்தாளர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. இதன் மூலம் பல சிக்கல்களைத் தவிர்க்க முடியும். :)

Link to comment
Share on other sites

மட்டுறுத்துதல் செய்யப்படுவதற்கு ஒரு பொதுவான அய்டியை வைத்தால் என்ன?

 

உதாரணமாக:

 

கயானி என்ற அய்டி மட்டுறுத்தும் அய்டியாக இருக்கும். அதை  நுணா, நியானி, நிழலி அண்ணா, இணையவன் அண்ணா நான்கு பேருமே பயன்படுத்தி மட்டுறுத்தலாம். அவரவர் சொந்த அய்டியில் தமது கருத்துக்களை முன் வைக்கலாம்.

 

இம்முறையின் மூலம் யார் கருத்துக்களை மட்டுறுத்துகின்றார் என கருத்தாளர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. இதன் மூலம் பல சிக்கல்களைத் தவிர்க்க முடியும். :)

 

இது மட்டுநிறுத்தினர்களுக் இடையே முரன்பாட்டைவரவைக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மட்டுறுத்துதல் செய்யப்படுவதற்கு ஒரு பொதுவான அய்டியை வைத்தால் என்ன?

 

உதாரணமாக:

 

கயானி என்ற அய்டி மட்டுறுத்தும் அய்டியாக இருக்கும். அதை  நுணா, நியானி, நிழலி அண்ணா, இணையவன் அண்ணா நான்கு பேருமே பயன்படுத்தி மட்டுறுத்தலாம். அவரவர் சொந்த அய்டியில் தமது கருத்துக்களை முன் வைக்கலாம்.

 

இம்முறையின் மூலம் யார் கருத்துக்களை மட்டுறுத்துகின்றார் என கருத்தாளர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. இதன் மூலம் பல சிக்கல்களைத் தவிர்க்க முடியும். :)

இப்போ எழுதுவதில் முக்காவாசிதான் காணமல் போகுது....

பேயை சாட்டி பூதம் விழுங்க தொடங்கினால்??  
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மட்டுறுத்துதல் செய்யப்படுவதற்கு ஒரு பொதுவான அய்டியை வைத்தால் என்ன?

 

உதாரணமாக:

 

கயானி என்ற அய்டி மட்டுறுத்தும் அய்டியாக இருக்கும். அதை  நுணா, நியானி, நிழலி அண்ணா, இணையவன் அண்ணா நான்கு பேருமே பயன்படுத்தி மட்டுறுத்தலாம். அவரவர் சொந்த அய்டியில் தமது கருத்துக்களை முன் வைக்கலாம்.

 

இம்முறையின் மூலம் யார் கருத்துக்களை மட்டுறுத்துகின்றார் என கருத்தாளர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. இதன் மூலம் பல சிக்கல்களைத் தவிர்க்க முடியும். :)

 

ஏற்கனவே நியானி என்ட ஜடி அப்படி ஏற்படுத்தப்பட்டது தானே :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.