Jump to content

8 விக்கெட்டுக்களினால் இலங்கை வெற்றி


Recommended Posts

cri.jpgஅவுஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் எட்டு விக்கெட்டுக்களினால் இலங்கை வெற்றி பெற்றுள்ளது.

கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அவுஸ்திரேலிய சென்றுள்ள இலங்கை அணிக்கும் அவுஸ்திரேலிய அணிக்கும் இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் இரண்டாவது போட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அடிலெய்ட் ஓவலில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி இலங்கை வீரர்களின் சிறப்பான பந்துவீச்சை முகங்கொடுக்க முடியாமல் 46.5 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 170 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

முதலாவது விக்கெட்டை 7 ஓட்டங்களுக்கே இழந்த அவ்வணி, ஒரு கட்டத்தில் 6 விக்கெட்டுக்களை இழந்து 83 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோதிலும், இறுதிநிலை வீரர்கள் 170 ஓட்டங்களைப் பெற உதவினர்.

துடுப்பாட்டத்தில் அவுஸ்திரேலிய அணி சார்பாக லசித் மலிங்க 32 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும் அன்ஜலோ மத்தியூஸ், திஸர பெரேரா இருவரும் தலா 2 விக்கெட்டுக்களையும் நுவான் குலசேகர, அஜந்த மென்டிஸ் இருவரும் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

171 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 40.1 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

முதலாவது விக்கெட்டை ஓட்டமெதனையும் பெறாது இழந்த இலங்கை அணி, அதன் பின்னர் முதலாவது விக்கெட்டுக்காக 137 ஓட்டங்களைப் பகிர்ந்தது.

துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பாக லஹிரு திரிமன்ன ஆட்டமிழக்காமல் 102 ஓட்டங்களையும் திலகரட்ண டில்ஷான் 51 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் அவுஸ்திரேலிய அணி சார்பாக கிளின்ட் மக்காய், பென் கட்டிங் இருவரும் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

இப்போட்டியின் நாயகனாக லஹிரு திரிமன்ன தெரிவானார்.

5 போட்டிகள் கொண்ட இத்தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்றுள்ளன.
 
 
 
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.