Jump to content

ஐயையோ ...ஐயையோ.... என்னவோ பண்ணுது....


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

ஐயையோ...ஐயையோ....என்னவோ பண்ணுது....

-------------------------------------------

யாழ் களத்தில் அஜீவன் அண்ணா தலைமையில் "டாவின்சி கோட்'டை தமிழில் சினிமாவாக எடுக்க முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றது.

தமிழ்ப் படமென்றபடியால் இடையிடையே ஒரு காதல் கதை ஓடவேண்டுமென்பதும் ......இரண்டு மூன்று பாடல் காட்சிகளும் இருக்கவேண்டுமென்பதும் படம் வெற்றி பெறுவதற்கான எழுதப்படாத சட்டமல்லவா...?

.

முழுக்க முழுக்க யாழ் கள நண்பர்களின் பங்களிப்புடனேயே இந்தப் படம் படமாக்கப்பட இருக்கின்றது.

எனவே பங்கு பெற விரும்பும் கலைஞர்கள் உடனும் தொடர்பு கொள்ளுங்கள் முதல் முதல் படமாக்கப் படும் விடயம் மங்கள கரமாக இருக்க வேண்டுமென்பதனால் அந்தப் படத்திற்கான ஒரு பாடலைப் படமாக்குவதற்கு படப்பிடிப்புக் குழு முதலில் முடிவெடுத்திருக்கின்றது.

இந்தப் பாடலில் பொட்டு தாலி தங்கம் என்ற சொற்கள் மங்களகரமல்லவா...? :lol::lol: இனிப் பாடல்......

அவள் : ஐயையோ....ஐயையோ....

என்னவோ பண்ணுது...

தொண்டை குழியோரம்

என்னென்னவோ அடைக்குது..

நெஞ்சுக் குழி மட்டும்

விம்மி விம்மித் தணியுது...

அவன் : ஆத்தங் கரையோரம்

அந்தி வரும் வேளையிலே

அத்தை பொண்ணு போகையிலே

அடிச்சு மழை கொட்டுதடி...

(ஐயையோ...ஐயையோ..)

அவள் : கொட்டு மழை ஈரத்தில

ஊசி போல குத்துதையா

உந்தன் பார்வை.....

உசிரு எங்கும் தேங்குதையா

(ஐயையோ...ஐயையோ....)

அவன் : ஊதல் காத்து வீசுதடி

உள்ளம் மட்டும் வேர்க்குதடி

போர்வையா நான் வரவா

போர்த்துக் கொள்ள நீ வரியா

(ஐயையோ...ஐயையோ..... )

அவள் : போர்வையா நீ வரலாம்

பொட்டு ஒண்ணு தந்திடையா

தங்கமா நான் வருவேன்

தாலி ஒண்ணு கட்டிடையா

(ஐயையோ..ஐயையோ...)

இந்தப் பாடலை இளைய ராஜாவைக் கொண்டு இசையமைக்க இருக்கின்றோம். பாட விரும்புபவர்கள் உங்கள் பெயர்களைப் பதிவு செய்யவும். மற்றும் போர்வையா இருக்க விரும்புபவர்கள் போர்த்துக் கொள்ள விரும்புபவர்கள் கூட பெயர்களைப் பதிந்து விடவும்.

படப்பிடிப்புக் குழு சார்பில்

-எல்லாள மஹாராஜா-

.

Link to post
Share on other sites
 • Replies 104
 • Created
 • Last Reply

அட எல்லாம் முடிஞ்சு கடசியா அஜீவன் அண்ணாடை தொழிலுக்கையும் கை வைச்சாச்சா?

அப்புறம் படம் எடுத்த மாதிரித்தான். இருந்தாலும் உங்கட பாட்டு நல்லாத்தான் இருக்கு.

எத்தனை காலத்துக்குத்தான் ஒரு காதல்க் கதையையும் இரண்டு மூன்று பாடல் காட்சியையும்

வைச்சு பேக்காட்டுவிங்கள். இப்ப உது எல்லாம் சரி வராது. எதுக்கும் உங்கட பாடலைப் பற்றி

மேலிடத்தில் கலந்து ஆலோசித்து சொல்லுறம் படத்துல போடலாமா எண்டு. ஆனால் என்ன?

கொஞ்சம் செலவாகும் பறவாயில்லையா?

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அட எல்லாம் முடிஞ்சு கடசியா அஜீவன் அண்ணாடை தொழிலுக்கையும் கை வைச்சாச்சா?

அப்புறம் படம் எடுத்த மாதிரித்தான். இருந்தாலும் உங்கட பாட்டு நல்லாத்தான் இருக்கு.

எத்தனை காலத்துக்குத்தான் ஒரு காதல்க் கதையையும் இரண்டு மூன்று பாடல் காட்சியையும்

வைச்சு பேக்காட்டுவிங்கள். இப்ப உது எல்லாம் சரி வராது. எதுக்கும் உங்கட பாடலைப் பற்றி

மேலிடத்தில் கலந்து ஆலோசித்து சொல்லுறம் படத்துல போடலாமா எண்டு. ஆனால் என்ன?

கொஞ்சம் செலவாகும் பறவாயில்லையா?

அன்பு ரசிகை...! அதென்ன எல்லோரும் மேலிடத்தில கதைத்து.....என்று பயங்காட்டுகின்றீர்கள்... :):lol:

எனக்கு மேலிடம் எனது மூளைதான்...அது இல்லாத ஆக்கள் தான் .....இப்படிப் பயங்காட்டுவார்கள் என்று ...எங்களுடைய கந்தப்புப் பெரியப்பாவின்ர வள்ளிப்பிள்ளை ஆச்சி அடிக்கடி சொல்லுவா...

அவ சொல்லும் போது எனக்கு அப்படிப் பட இல்லை...உங்களுக்கு என்ன படுகின்றது... :lol::D சந்தேகம் தீர்க்கும் ஆசையுடன்

-எல்லாள மஹாராஜா-

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஓ...என்னை பாடவிடு என்று கேட்டது இதுக்குத்தானா..?? ம் ..பாட்டு நல்லா இருக்கு வாழ்த்துக்கள் :wink: :lol:

http://www.yarl.com/forum3/viewtopic.php?t...

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஓ...என்னை பாடவிடு என்று கேட்டது இதுக்குத்தானா..?? ம் ..பாட்டு நல்லா இருக்கு வாழ்த்துக்கள் :wink: :lol:

http://www.yarl.com/forum3/viewtopic.php?t...

கெளரி பாலன்....! நீங்கள் தான் கதாநாயகன் என்று கிசு கிசு பரவுகின்றதே உண்மையா? :lol::lol:

உண்மையென்றாலே..... கதாநாயகிக்குப் பலத்த போட்டி நடக்கும்.... என்ன...நான் சொல்வது சரிதானே...?

வில்லன் ஆதிவாசி என்றும் கதை அடிபடுகின்றது.... :roll: :roll:

-எல்லாள மஹாராஜா-

Link to post
Share on other sites

அட போப்பா........

எல்ஸ்....

சொந்தக்கதை சோகக்கதை...

நானே காதலிக்காக காத்துக் காத்து நைந்து நூலாக் கிடக்கிறன்.

இதற்குள் சினிமா.....வில்லன்

யோவ்.....ஆதிவாசியை சினிமாவிற்குள் இழுத்தீர்களோ.....

கதை (ஆதிவாசியின் காதல்கதை) கந்தல்!

சோகத்தோடு ஆதிவாசிmonkey.jpg

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

´ñÎ ÁðÎõ ¦¾Ç¢Å¡ Å¢ÇíÌÐ..

±øÄ¡Ç Á†¡Ã¡º¡Å¢üÌ þô§À¡ «ÅºÃÁ¡

§À¡÷¨Å §¾¨ÅôÀÎÐ.... :lol:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பாடவா பாடவா என்று கேட்டு பாடிய பாட்டு நன்றாக இருக்கு ... வாழ்த்துக்கள்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

´ñÎ ÁðÎõ ¦¾Ç¢Å¡ Å¢ÇíÌÐ..

±øÄ¡Ç Á†¡Ã¡º¡Å¢üÌ þô§À¡ «ÅºÃÁ¡

§À¡÷¨Å §¾¨ÅôÀÎÐ.... :lol:

குளிர் முருகா குளிர்......

வாடை வாட்டுது முருகா .....

போர்வை ஒன்று கேட்குது முருகா.....

இரண்டு போர்வை.. :lol::lol: வைத்திருக்கின்ற முருகா....

அதில் ஒன்றை இரவல் :lol::lol: தந்திடாதே

மேட் இன் சிறிலங்கா :lol::lol: எண்டால் இன்னும் விசேஷம் முருகா...... .

முருகனின் அருள் வேண்டும்

-எல்லாள மஹாராஜா-

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பாடவா பாடவா என்று கேட்டு பாடிய பாட்டு நன்றாக இருக்கு ... வாழ்த்துக்கள்.

அப்ப.....பாடிக்கொண்டே ....ஆடவா.. ஆட வா :lol::lol::lol::lol: என்று கேட்டுக் கொண்டு ஆடியது சரியில்லை ....என்கின்றீர்களா? ரமா

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பாடல் நன்றாக இருக்கிறது. ஆனால் இதைப் படத்தில் போடுவதும் போடாததும் அயீவன் அண்ணாவின் கையில்தான் உள்ளது. போடாட்டி பரிந்துரை செய்யச்சொல்லி என்னட்ட வரக்கூடாது. :lol:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாளன்

உங்களை முற்றிலும் எதிர்பாராத திசையில் அடையாளப்படுத்தி

இருப்பதைப் பார்த்தால் உங்களை எழுத்தாளர் வட்டத்திலிருந்து

நகர்த்தி கலைஞர் வட்டத்திற்குள் சேர்க்கலாம் என நினைக்கிறேன்.

இப்படிக்கு வல்வை சகாறா.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பாடல் நன்றாக இருக்கிறது. ஆனால் இதைப் படத்தில் போடுவதும் போடாததும் அயீவன் அண்ணாவின் கையில்தான் உள்ளது. போடாட்டி பரிந்துரை செய்யச்சொல்லி என்னட்ட வரக்கூடாது. :lol:

பரிந்துரைக்கெல்லாம் வரமாட்டேன்.......... சுஜீந்தன்...... ஹி...ஹி..... அஜீவன் அண்ணாட்டை ஒரு சிபாரிசு செய்வீங்களா..?....

சிபாரிசு வேண்டி -எல்லாள மஹாராஜா

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

எல்லாளன்

உங்களை முற்றிலும் எதிர்பாராத திசையில் அடையாளப்படுத்தி

இருப்பதைப் பார்த்தால் உங்களை எழுத்தாளர் வட்டத்திலிருந்து

நகர்த்தி கலைஞர் வட்டத்திற்குள் சேர்க்கலாம் என நினைக்கிறேன்.

இப்படிக்கு வல்வை சகாறா.

அது என்னாங்கோ .... அட்டதிசைக்கு அப்பால ...ஒம்பதாவது திசை. :lol::lol: ......என்னவோ தட்டி.... நிமித்தி... வளைத்து ....எந்த வட்டத்துக்கையாலும் ..சேர்த்தால் சரிதானுங்கோ.... :lol::lol::lol: .. வட்டம் போடுறீங்க...வாத்தியார் வட்டம் (முட்டை) :lol::lol: இல்லைதானுங்களே.....

வட்டத்துக்குள் சதுரமாக -எல்லாள மஹாராஜா-

Link to post
Share on other sites

யோவ் எல்ஸ்...

எங்கேய்யா போய்விட்டீர்?

மனித உரிமைகள் குழுவிடம் உம்மைக் காணாமல் போனோர்

பட்டியலிலை இணைக்கச்சொல்லிவிட்டு

இப்பதான் வாறன்...

இங்கு அரட்டையோடு நிற்கிறீர்.....

உம்மைக்காணாமல் நான் உம்ம வேலையைப் பாத்து நார்நாராக்

கிழஞ்சு போனன்.......

என்ன வாய்க்குள்ளேயே நமுட்டுச் சிரிப்பு.....

அருவில இனிக் குளிக்கவே போகமாட்டேம்பா....

என்னா கொத்துக் கொத்துறாங்க பறவைகள்...

நான் என்ர புராணத்தை படிச்சுக் கொண்டு......

எங்கேய்யா போயிருந்தீர்.....

நாராய் கிழிந்த ஆதிவாசி

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அஜீவன் அண்ணா தமிழ்ப்படுத்தும் டாவின்சி கோட்டில்....

அவளும்..... அவனும் (தமிழில் என்னா பேர் வைக்கலாம்...?) சந்திக்கின்றார்கள். காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி .... இணைபிரியாக் காதலர்கள் ஆகின்றனர்....

இளமையின் புதுராகத்தில் ஜதி பிரிக்க முடியா கிளர்ச்சிகளில் மனம் ஒன்றி லயித்துப் போகின்றார்கள்....

அந்த சுகத்தை... உள்ளத்தில் ஊறிய இன்பத்தை ...தன் இணையிடம் கேட்டு அறிந்து கொள்ளத் துடிக்கும் மனங்களின் துடிப்பு இது....

வெட்டி வேரின் வாசம் விடலைப் பொண்ணின் நேசம் என்றால் ....கட்டிக் கரும்பின் இனிமை அல்லவா ?.....அவனின் அன்பு.....

இதோ....அந்த அன்பில் திளைத்த அவர்களின் அனுபவம்.....

அவன்: நீயே சொல்லு.... நீயே சொல்லு....

நினைக்கும் எண்ணம்

விடியும் வரைக்கும்

நீயே சொல்லு....

அவள்: நினைவில் சுமக்கும் வண்ணம்

நிமிஷம் கொல்லும் பருவம்

உயிரில் கரையும் இதயம்

உண்மை என்ன நீயே சொல்லு

(நீயே சொல்லு)

அவன்: விழியில் இறங்கும் அழகு

விதியில் கலக்கும் உறவு

விடியும் வரையும் இணையும்

விந்தை என்ன நீயே சொல்லு

(நீயே சொல்லு)

அவள்: பருவ வயதின் பாடல்

பழக இனிக்கும் கூடல்

முதுமை வரைக்கும் தேடல்

முடிந்தது என்ன நீயே சொல்லு

இருவரும்: நீயே சொல்லு .... நீயே சொல்லு...

நினைக்கும் எண்ணம்

விடியும் வரைக்கும்

நீயே சொல்லு.....

-எல்லாள மஹாராஜா- :lol::lol:

Link to post
Share on other sites

கிழிஞ்சுது போ...

எல்லாளன் இடம்மாறியாச்சு...

ஆதிவாசி கதி அந்தோ கதிதான்.

அந்தோ கதியுடன் ஆதிவாசி

Link to post
Share on other sites

கட்டிக் கரும்பின் இனிமை, அது இது எண்டு சொல்லுறியள். என்னமோ நடக்குது, எதுக்கும் அஜீவன் அண்ணாவை இங்காலப் பக்கம் வர வேண்டாம் என்று சொல்லனும். :P :P

அப்புறம் பாட்டு நல்லா இருக்கு :wink:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஆஹா...மகாராஜாவுக்கு என்னமோ ஆகிப்போச்சு...

பாட்டு சூப்பர்,,,தொடரட்டும் தங்கள் பணி :P :D

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கட்டிக் கரும்பின் இனிமை, அது இது எண்டு சொல்லுறியள். என்னமோ நடக்குது, எதுக்கும் அஜீவன் அண்ணாவை இங்காலப் பக்கம் வர வேண்டாம் என்று சொல்லனும். :P :P

அப்புறம் பாட்டு நல்லா இருக்கு :wink:

அஜீவன் அண்ணா தானே படம் எடுக்கின்றார்... :(:D

வரவேண்டாம் என்றால் எப்படிடிடிடிடி.......

காத்திருக்கும் -எல்லாள மஹாராஜா-

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஆஹா...மகாராஜாவுக்கு என்னமோ ஆகிப்போச்சு...

பாட்டு சூப்பர்,,,தொடரட்டும் தங்கள் பணி

தொடருகின்றேன் கெளரிபாலன்.....உங்கள் பணி செய்து கிடப்பதே என் வேலை..... :(:D:

பணிசெய்யும் -எல்லாள மஹாராஜா-

Link to post
Share on other sites

அஜீவன் அண்ணா தானே படம் எடுக்கின்றார்... :(:D

வரவேண்டாம் என்றால் எப்படிடிடிடிடி.......

காத்திருக்கும்

அதனால்த்தான் வர வேண்டாம் என்று சொல்லுறன். இது கூட மாகாராஜாக்கு புரியவில்லையா? :roll:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

யாழ் களத்தில் இருப்பவர்களை எல்லாம் இரசிகை முட்டாள்கள் என்று தீர்மானித்தால் என்ன செய்ய முடியும்.... :lol::D:lol::lol:

உங்கள் வசனத்தைத் தான் சொல்கின்றேன்..... :lol::lol:

முட்டாள்களுள் ஒரு முட்டாள் :lol:

-எல்லாள மஹாராஜா-

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரசி அக்கா ஏன் அப்பிடி சொன்னவ தெரியுமா எல்ஸ்

இப்படி நீங்க நல்ல பாட்டு எழுதுறதை அஜிவன் அண்ணா பாத்தா உங்களை பாடலாசிரியரா போடுவார் :wink: :P

பிறகு ரசி அக்கா எப்படி திரைப்பாடலாசியர் ஆகிறது அதுதான் :oops: :P

அது சரி எப்படி இப்படி நல்ல பாட்டு எல்லாம் எழுதுறீங்க

காதலிக்கிறீங்களா :wink: :?: :?: :?:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது சரி எப்படி இப்படி நல்ல பாட்டு எல்லாம் எழுதுறீங்க

காதலிக்கிறீங்களா

அது சரி காதலிச்சாத்தான் பாட்டுவரும் எண்டு உங்களுக்கு எப்படித் தெரியும்? :?

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.


×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.