Jump to content

ஐயையோ ...ஐயையோ.... என்னவோ பண்ணுது....


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அக்கா, அண்ணாச்சி நன்றிங்க. யாழ்களத்திலை நல்ல குரல்வளம் தொழில் நுட்ப திறமையுள்ளவங்கல்லாம்

இருக்கீங்க. நல்லா இசையமைச்சு பாடி இசையுருவிலை தந்தீங்கன்னா கோடி கும்பிடு(தலை குனியாமத்தான்) போடுவேனுங்க.

Link to comment
Share on other sites

  • Replies 104
  • Created
  • Last Reply

அவள் : ஐயையோ....ஐயையோ....

என்னவோ பண்ணுது...

தொண்டை குழியோரம்

என்னென்னவோ அடைக்குது..

நெஞ்சுக் குழி மட்டும்

விம்மி விம்மித் தணியுது...

அவன் : ஆத்தங் கரையோரம்

அந்தி வரும் வேளையிலே

அத்தை பொண்ணு போகையிலே

அடிச்சு மழை கொட்டுதடி...

(ஐயையோ...ஐயையோ..)

அவள் : கொட்டு மழை ஈரத்தில

ஊசி போல குத்துதையா

உந்தன் பார்வை.....

உசிரு எங்கும் தேங்குதையா

(ஐயையோ...ஐயையோ....)

அவன் : ஊதல் காத்து வீசுதடி

உள்ளம் மட்டும் வேர்க்குதடி

போர்வையா நான் வரவா

போர்த்துக் கொள்ள நீ வரியா

(ஐயையோ...ஐயையோ..... )

அவள் : போர்வையா நீ வரலாம்

பொட்டு ஒண்ணு தந்திடையா

தங்கமா நான் வருவேன்

தாலி ஒண்ணு கட்டிடையா

(ஐயையோ..ஐயையோ...)

எல்லாள மகாராஜா, உங்களின் பாடலுக்கு ஏ ஆர் ரகுமான் தான் சரியான தேர்வு என்பது எனது அபிப்பிராயம்.

ஐயையோ ஐயையொ என்ற பின்னணியை கற்பனையில் வைத்து சொன்னேன்.

Link to comment
Share on other sites

தம்பிக்கும் பிடிச்சிருக்கா பாட்டு.... :D

அந்த மாதிரி இருக்கு பாட்டு அண்ணா :lol: .............ம்ம் அக்காவின் வாயிசில் படித்து காட்டினா என்றா என்னும் நல்லா இருக்குமே :rolleyes: !!அப்படியே ஏ.ஆர் ரகுமானை பிண்ணணி இசை வழங்கினா பிரமாதம் பாட்டு அண்ணா!![ :wub: /color]

அப்ப நான் வரட்டா!!

அண்ணாவுக்கும் தம்பிக்கு வேலையே இல்லைப்பா. எப்ப பார் சகோதரி வெண்ணியை லொள்ளு பண்ணிட்டே இருப்பாங்க :lol:

அழுதபடி வெண்ணிலா

அட அட அண்ணாவிற்கு தம்பிக்கு எத்தனையோ வேலை இருக்கு நிலா அக்கா உது தெரியாதோ :wub: ....வெண்ணி அக்கா கூட லொள்ளு பண்ணாம யார் கூட பண்ணுறது!! :lol:

அழுதபடி வெண்ணிலாவோ ஏன் நிலா அக்கா வெங்காயம் வெட்டினீங்களோ!! :D

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

அவள் : ஐயையோ....ஐயையோ....

என்னவோ பண்ணுது...

தொண்டை குழியோரம்

என்னென்னவோ அடைக்குது..

நெஞ்சுக் குழி மட்டும்

விம்மி விம்மித் தணியுது...

அவன் : ஆத்தங் கரையோரம்

அந்தி வரும் வேளையிலே

அத்தை பொண்ணு போகையிலே

அடிச்சு மழை கொட்டுதடி...

(ஐயையோ...ஐயையோ..)

அவள் : கொட்டு மழை ஈரத்தில

ஊசி போல குத்துதையா

உந்தன் பார்வை.....

உசிரு எங்கும் தேங்குதையா

(ஐயையோ...ஐயையோ....)

அவன் : ஊதல் காத்து வீசுதடி

உள்ளம் மட்டும் வேர்க்குதடி

போர்வையா நான் வரவா

போர்த்துக் கொள்ள நீ வரியா

(ஐயையோ...ஐயையோ..... )

அவள் : போர்வையா நீ வரலாம்

பொட்டு ஒண்ணு தந்திடையா

தங்கமா நான் வருவேன்

தாலி ஒண்ணு கட்டிடையா

(ஐயையோ..ஐயையோ...)

எல்ஸ் அங்கிள் ம்ம்ம் பாட்டு நல்லா தான் இருக்கு இடைகிடை "ஜயோ என்று வருது" தனிய ஜயோ என்று இருக்காம :rolleyes: "ஜயோ பத்திகிச்சு" இல்லாட்டி வேற ஏதும் வார்த்தைகளை போட்டா இன்னும் நல்லா இருக்கும் என்ன நினைக்கிறியள் :wub: .....அது சரி படத்தில நீங்களும் வருவீங்களோ.... :wub:

அப்ப நான் வரட்டா!!

எனக்கு கவிதை எழுத வராது. முந்தி கல்லூரியிலை படிக்கேக்கை சில சந்தர்ப்பங்களிலை கவிதை எழுதிற எண்டு சொல்லி கிறுக்க வெளிக்கிட்டனான் ஆனா சரிவரேல்லை. உங்கடை சினிமாப்படத்திலை போடுறத்துக்கெண்டு ஒரு பாடல் எழுதியிருக்கிறன் புடிச்சிருந்தா பாவியுங்கோ.

அவன்:

முல்லைச் சரம் சூடிடவா கண்மணி

சொல்லச் சுகம் கோடி தரும் வாய்மொழி

கொல்லைப் புறம் கேட்குதடி கிண்கிணி – காமன்

வில்லைக் கண்டு நாணிடுமோ உன் மீன்விழி

அவள்:

பல்லைக் காட்டி இளித்தவரு மாப்பிளை - இந்த

செல்லகிளி கைபிடிக்க வந்தாநீ ஆம்பளை

வெல்லம் எந்தன் கன்னமென்றாய் தோப்பிலை - நீ

மெல்ல வந்து கிள்ளிடுவே என் தொப்பிளை

அவன்:

ஊரறிய மாலையிட வருவேன் ஒரு நாளு – சங்கு

கழுத்துக்கும் தாலி ஒண்ணு தருவேன் நீ பாரு

சீர் கொடுக்க சொன்ன தொகை ரெடியாண்ணு கேளு – வெறும்

வாய் வீச்சில் உன்அப்பன் பறந்திடுவான் ஏது

அவள்:

தங்கமான மனசிருக்கு அந்தச் சீதனமே போதும் - நல்ல

நேசமுடன் அன்புவச்சேன் அது சீர்தானே நாளும்

வாசலிலே தவங்கிடந்த காலம் பகல் கனவு – நான்

பாசமுள்ள பொம்பளைதான் கண்ணெடுத்து பாரு

இருவரும்:

அன்பு இன்பம் கொண்டு வந்தால் நல்லதொரு வாழ்வு

வந்த துன்பமெல்லாம் ஓடிடுமே ஏது இனித் தாழ்வு

காலமதில் கோடி சுகம் பெறுவோம் நாம் ஒன்றாய் - அங்கு

தேடிவரும் இல்லறமே நம் காதலுக்கு விலையாய்.

அட என்ன இப்படி சொல்லி போட்டியள் கவிதை வராது என்று போட்டு வெளுத்து வாங்கி இருகிறியள் வாழ்த்துகள் நல்லா இருக்கு :lol: ம்ம்ம் இந்த பாட்டை கொண்டு போய் சங்கரிட்ட கொடுத்து இருக்கலாம் இந்த எல்லாள மகாராஜாவிட்ட கொடுத்த நேரம் :lol: எனிவே நேக்கு இந்த பாட்டு ரொம்பவே பிடித்திருக்கு இந்த பாட்டில ஒரு சீனிலையாவது நான் வரவேண்டும் சொல்லிட்டேன் :D இல்லாட்டி எல்லாள மகாராஜா சிம்மாசனத்தில் இருக்கும் போது ஆணியை வைத்து போடுவேன் சொல்லிட்டேன்!! :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கடை கீரோ காதலிலை தோத்துட்டா என்ன செய்யிறதெண்டு நான் யோசிச்சிட்டு நித்திரைக்குப் போனேனா அப்படியே டமால்ன்னு ஒரு பாட்டு வந்துது. உடனேயே மறக்காம எழுதிப்புட்டேன். ஆச்சா

சொந்தமுன்னு வந்தமக என்மனசை கேட்டா - வேற

வாசலிலை கோலமிட தோகைமயில் போய்ட்டா

நூலறுந்த பட்டமொண்ணை காதவழி பாத்தா - அவ

பார்வையிலை குளிர்நிலவை பாதியிலை சேத்தா

வெக்கம்விட்டுச் சொன்னகதை மூன்று வரிதானா

அக்கம்பக்கம் விட்டகுறை அது மிச்சம் சரிதானா

வெந்தமனம் நோகுதடி கிவாட்டரை நீ ஊத்து - உன்

கந்தல்துணி கிழிஞ்சுதென்னா வாட்டரைதான் மாத்து

கூரையாய் போர்த்திருக்கும் வெண்மதியே வானம்

ஆருக்கினி காத்திருப்பேன் கேழு இந்த கானம்

ஊருக்குள்ள பேச்சிருக்கு போச்சுதென்ர மானம் - அவ

தெருவிலைதான் விழுந்தமலர் எவர்கொடுப்பா தானம்

மஞ்சல் பூசி குளிச்சிருப்பா அவ மல்லிகையின் வாசம்

ஊஞ்சலைப் போல்ஆடிவரும் நினைவெல்லாம் நாசம்

இனி மிச்சமில்லை அன்பு எண்டு சொன்னாள் பகல் வேசம்

என்னை சனி பிடிச்சு ஆட்டுதிங்கே யாருபோட்ட சாபம்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
    • என்னுடைய மகன்கள் இருவரும் (வளர்ப்பு மகன் உட்பட) ஆங்கில வழிக் கல்வியில்தான் படிக்கின்றனர். இதற்காக நான் அவமானப்படுகிறேன். என் பிள்ளைகள் தமிழ்ப் படிக்க தமிழ்நாட்டில் பள்ளிகளே இல்லை. நாங்கள்தான் வீட்டில் அவர்களுக்கு தமிழைச் சொல்லிக் கொடுக்கிறோம். இவ்வாறு சீமான் கூறினார்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.