Jump to content

நேசக்கரம் 2012 க.பொ.த.சாதாரண மாணவர்களுக்கான பயிற்சிநெறி தயார்படுத்தல் கணக்கறிக்கை.


Recommended Posts

நேசக்கரம் 2012 க.பொ.த.சாதாரண மாணவர்களுக்கான பயிற்சிநெறி தயார்படுத்தல் கணக்கறிக்கை.

நேசக்கரம் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடகிழக்கு பிரதேசங்களில் வாழும் மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் வகையில் மாணவர்களுக்கான கற்பித்தல் கையேடுகள் , வினாத்தாழ்கள் வழங்கி பாடங்களில் உயர்ந்த பெறுபேறுகளைப் பெறுவதற்கான வேலைத்திட்டங்களை கடந்தவருடம் முன்னெடுத்திருந்தோம்.

இம்முயற்சியில் 2012 க.பொ.த.சாதாரணதர மாணவர்களுக்கான கையேடுகள் மாதிரி வினாத்தாழ்களைத் தயாரித்து 78பாடசாலைகளிலிருந்து 7500மாணவர்களுக்கான முன்னோடி தயார்படுத்தல்களை நேசக்கரம் கல்விக்குழுவினர் மேற்கொண்டிருந்தனர்.

அத்தோடு 4பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் மாணவர்களை இணைத்து இலவச கருத்தங்குகளையும் நடாத்தியிருந்தோம். எமது இம்முயற்சிக்கான நிதியுதவியை வழங்கியவர்களுக்கு பயனடைந்த போரால் பாதிக்கப்பட்ட பிரதேச மாணவர்கள் ஆசிரியர்கள் பெற்றோர் சார்பாக எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

கணக்கறிக்கை :-

olevel2012_zps93cfe587.jpg

 

DSCF3743_zps7ff90b4d.jpg

பங்குபற்றிய பாடசாலைகள் மாணவர்கள் விபரம் :-

0012_zpsed7e2b41.jpg

படங்கள் :-

DSC00598_zpsca6b6ef3.jpg

DSCF3361_zpsc552c442.jpg

DSCF3360_zpsabcb6e3f.jpg

DSCF3358_zpse19fbc98.jpg

DSC00605_zps1d9e244d.jpg

DSC00603_zpsd06592f9.jpg

DSC00602_zpsaf71be71.jpg

DSC00550_zps6cf7a116.jpg

SNC00130_zpsc99d8f71.jpg

மேலதிக படங்களை நேசக்கரம் இணையத்தில் பார்க்கலாம்.

 

 

Link to comment
Share on other sites

சொல்லில் வேகத்தைக் காட்டாது செயலில் தமது ஈகையை காட்டிய இந்த உறவுகளிற்கு தலை வணங்குகின்றேன் .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • 100% உண்மை. இந்த குத்தி முறிதலில் - சக யாழ் கள கருதாளர்கள் சீமானை இட்டு பயப்படுகிறார்கள் என்ற கற்பனையும் அடங்கும் என்பது என் தாழ்மையான கருத்து.
    • இந்த‌ பாராள‌ ம‌ன்ற‌த்தில் அவ‌ர் போட்டியிட‌ வில்லை அண்ணா.................... அவ‌ர் த‌னிய‌ ச‌ட்டம‌ன்ற‌ தேர்த‌லில் தான் வேட்பாள‌றா நிப்பார் அவ்ரின் நோக்க‌ம் பாராள‌ம‌ன்ற‌ம் போவ‌து கிடையாது ச‌ட்ட‌ ம‌ன்ற‌ம் போவ‌து...........................
    • தீப்பொறி ஆறுமுகம்….. நாஞ்சில் சம்பந்த்…….. தூசண துரை முருகன்…. சிவாஜி கிருஸ்ணமூர்த்தி….. சீமான்….. இப்படி ஆபாசம் தூக்கலான மேடை பேச்சால் கொஞ்சம் இரசிகர்களை சேர்கும் தலைமை கழக பேச்சாளர். தமிழ் நாட்டு அரசியலில் இதுதான் இவருக்கான இடம், வரிசை. சிறந்த தலைவர் எல்லாம் - வாய்பில்ல ராஜா, வாய்ப்பில்ல.
    • நல்லது இதை தமிழ் நாட்டவர்கள் முடிவு எடுக்க வேண்டும். நாங்கள் குத்தி முறிந்து எதுவுமாகப் போவதில்லை.
    • தொடர்ச்சியாக ஒரு மாத காலமாக அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு குறைவடைந்து வருகின்றதை அவதானிக்க முடிகின்றது. தினசரி இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்படும் உத்தியோகபூர்வ நாணயமாற்று விகித அறிவித்தலின் படி, செவ்வாய்க்கிழமை (19) தரவுகளின் பிரகாரம், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் கொள்முதல் பெறுமதி ரூ.299.29 ஆகக் காணப்பட்டது. இந்தப் பெறுமதி ஒரு மாத காலப்பகுதிக்கு முன்னர் சுமார் 322-325 ரூபாய்களுக்கு இடைப்பட்டதாகக் காணப்பட்டது. இவ்வாறு ரூபாயின் மதிப்பு தொடர்ந்தும் உயர்வடைவது தொடர்பில் போது மக்கள் மத்தியில் தெளிவற்ற ஒரு மனநிலை காணப்படுவது புலனாகின்றது. பொதுவில் சந்தையில் மிகையாகக் காணப்படும் டொலர்களை இலங்கை மத்திய வங்கி கொள்வனவு செய்து, தனது இருப்பை அதிகரித்துக் கொள்ளும். அத்துடன், நாட்டில் இறக்குமதி வீழ்ச்சி ஏற்பட்டு, டொலர்களுக்கான கேள்வி குறைவடைந்திருக்கும். சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துக் காணப்படுவதால், நாட்டினுள் டொலர் வரத்து அதிகரித்திருக்கும் போன்ற பல்வேறு காரணிகள் முன்வைக்கப்படலாம். எவ்வாறாயினும், தேர்தல் தொடர்பில் பரவலாகப் பேசப்படும் நிலையில், அதை இலக்காகக் கொண்டு இந்த ரூபாய் மதிப்பு உயர்வு நடவடிக்கை திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்படுகின்றதா என்ற எண்ணமும் மக்கள் மத்தியில் இல்லாமல் இல்லை. குறிப்பாக, அண்மைய வாரங்களில் பரவலாகப் பேசப்பட்ட, மத்திய வங்கி ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பான விடயத்தைத் தொடர்ந்து, மத்திய வங்கியின் ஆளுநர் அடங்கலாக, மத்திய வங்கியின் செயற்பாடுகள் தொடர்பில் மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையில் ஒருவிதமான பின்னடைவு தோற்றுவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அந்த பிரச்சினையைச் சீர் செய்யும் வகையில், அரசாங்கத்துக்கு அதன் பிரபல்யத் தன்மையை அதிகரிக்கச் செய்யும் வகையில் இந்த நடவடிக்கை மத்திய வங்கியினால் முன்னெடுக்கப்படுகின்றதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் மத்திய வங்கியின் ஆளுநர் போது மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய ஒரு கட்டாயத்திலுள்ளார். குறிப்பாக தேர்தல் காலம் என்பதால், அடுத்தமாதம் வரவுள்ள பண்டிகைகளை போது மக்கள் கொண்டாடுவதற்கு வழிவகை செய்யும் வகையில், இந்த நகர்வு மேற்கொள்ளப்படுகின்றதா அல்லது இந்த பெறுமதி உயர்வு உண்மையில் நிலைபேறானதா? தேர்தலின் பின்னர் கடந்த காலங்களைப் போன்று, டொலரின் பெறுமதி சடுதியாக 400 ரூபாயை தொட்டுவிடுமா போன்ற கேள்விகளும் இல்லாமல் இல்லை. அத்துடன், வெளிநாட்டுக் கடன்கள் மீளச் செலுத்துவது இன்னமும் ஆரம்பிக்கப்படாத நிலையில், அவற்றை செலுத்த ஆரம்பிக்கையில், இந்தப் பெறுமதிக்கு என்ன நடக்கும் போன்ற தெளிவுபடுத்தல்களை மக்களுக்கு வழங்க வேண்டிய மத்திய வங்கியின் பொறுப்பிலுள்ள அதிகாரிகளின் கடமையாகும். அத்துடன், ஜனவரி மாதம் முதல் அதிகரிக்கப்பட்ட பெறுமதி சேர் வரி மீண்டும் அடுத்த மாதம் முதல் 15 வீதமாக குறைக்கப்படவுள்ளமை தொடர்பிலும் அரசாங்க தரப்பிலிருந்து தகவல்கள் வெளியிடப்படுகின்றன. இவ்வாறான தீர்மானம் தொடர்பிலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெளிவுபடுத்த வேண்டியது கட்டாயமானதாகும். தேர்தல் கண்துடைப்பாக இருந்துவிடக்கூடாது, மக்கள் முன்னரை விட தற்போது அதிகம் தெளிந்துள்ளமையை அரசியல்வாதிகள் புரிந்து கொள்ள வேண்டும்.     https://www.tamilmirror.lk/ஆசிரியர்-தலையங்கம்/ரபயன-மதபப-வணடமனற-கறககபபடகனறத/385-334940
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.