Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
இது சரியாகத்தெரியவில்லை சுமே.

எனது வீட்டில் வார இறுதி  நாட்களில் எல்லோரும் எனது கட்டிலுக்கு வந்து விடுவார்கள்.  இந்தக்கிழமை நடந்தவை  அடுத்த கிழமை நடக்கப்போபவை  பற்றி  எல்லோரும் ஒன்றாக படுத்துக்கிடந்து பேசுவோம்.  ஆளுக்காள் நுள்ளுதல் கிளுக்கு பண்ணுதல் நக்கலடித்தல் என்று எல்லாமே  இருக்கும்.

எனது மனைவி   உடுப்பு மாற்றும்போது அறையை  பூட்டமாட்டார்.   வளர்ந்த மகன்கள் பொறுத்த நேரத்தில் உள்ளே  வந்ததுமுண்டு.   ஆரம்பத்தில் எனக்கு அது ஒரு மாதிரித்தான் இருந்தது.

அவனது அம்மா.   இதில் நானென்ன பிரிவு பார்ப்பது என்று என் மனம் சொன்னது

அதனால் இது தான் சரி  என்று என்னை  நான் மாத்திக்கொண்டேன்.

பிள்ளைகளுக்கும் பெற்றோருக்குள்ளும்  இது விடயத்தில் ஒழிவுத்தன்மையற்று வெளிப்படத்தன்மை இருக்கணும் என்பது எனது கருத்து.   இதன் மூலம் இது பற்றிக்கூட எமது பிள்ளைகள் எம்முடன் பேச வழி வகுக்கும்.

நம்ம வீட்டைப் போலவே இருக்குது அண்ணா உங்க வீடும்.

நான் அதிகம் அப்பா அம்மா நடுவே.. பெற்றோரோடு தான் தூக்குவேன். வளர்ந்த பின்னும் கூட..! இப்போதும் அந்த காலத்தை நினைக்க ஏக்கமே மிஞ்சும்..! அந்த பாசம்.. நெருக்கம்.. தொடுகை.. அன்பு.. அதெல்லாம் எங்க புரியப் போகுதன்னா... எல்லாத்தையும் தப்புத்தப்பாவே பார்க்கிற கண்களுக்கு.. மூளைகளுக்கு..!

பெற்றோர் பிள்ளைகளுக்கிடையில் ஒழிவு மறைவு இருக்கவே கூடாது. அது பிள்ளைகள் நாம் பெற்றோர் மட்டுமல்ல.. இந்தச் சமூகம் பற்றிய நல்ல நம்பிக்கையை வளர்க்க அவசியம். அப்போது தான்.... பிள்ளைகள் நாமும் பெற்றோருக்கு எதனையும் ஒழிக்க வேண்டியதில்லை என்ற எண்ணத்தை இயல்பில் பெறுவோம். நாளாந்த விடயங்கள்.. பள்ளியில் பல்கலையில் நடக்கும் விடயங்கள் என்று.. எல்லாத்தையும் அப்பா அல்லது அம்மாட்ட சொல்லாட்டி எனக்கு தூக்கமே வராது. பரீட்சை பெறுபேறுகள் உட்பட..! ஆனால் இப்போ.. அதில் பெரிய இடைவெளியே விழுந்துவிட்டது. ஆனால் தினமும் இல்லாட்டிலும்.. சந்தர்ப்பம் கிடைக்கும் போது... போன் பண்ணி எல்லாத்தையும் சொல்லிடுவன்.

மனித மூளைக்கு மிகச் சிறந்த ஒரு ஆற்றல் உண்டு. அதுதான் பகுத்தறிவு. மனிதனை அந்த விடயத்தில் மிருகத்தோடு வைத்து நோக்கக் கூடாது. ஆனால் ஒரு விடயம்.. மனிதர்கள் மத்தியில்... பகுத்தறிவு விருத்தி குறைந்த மனிதர்களும் உளர். அவர்களே தவறுகளில் சந்தேகிக்கக் கூடிய.. செயற்பாடுகளில் அதிகம் ஈடுபடுகிறார்களோ என்ற சந்தேகம் இருக்கிறது. :)

Link to comment
Share on other sites

  • Replies 148
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
அப்படி சொல்லமுடியாது ரதி

இது போன்ற சில வீடியோக்களை உறவினர்கள் வீடுகளுக்கு போனபோது பார்க்க நேர்ந்தது.

உண்மையில் உறவுகளுடன் இருந்தே பார்க்கமுடியவில்லை.

அத்துடன் பெண்கள் மீதான அபிமானம் என்பதை  முழுவதுமாக மாற்றிவிடக்கூடியது.

ஆண்கள் தப்பு செய்வார்கள்

அப்படி இப்படியானவர்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்ததால் அதிகம் அலட்டிக்கொள்வதில்லை.

ஆனால் ஒவ்வொரு விடயத்திலும் பெண்களும் அதில் சம்பந்தப்பட்டிருப்பதை  பார்க்கும்போது அருவருப்பாக இருந்தது.

ஒன்று பார்த்தேன்

ஒரு குடும்பத்துக்குள் பிரச்சினை  என்னவென்று விசாரித்தால் அந்த பெண்ணின் அக்காவோடு இவளது கணவனுக்கு  தொடர்பு.

சரி

அந்த அக்கா ஏன் இவருடன் தொடர்பு வைத்திருக்கின்றார் என்று பார்த்தால் அவரது கணவருக்கு இவரது இன்னொரு அக்காவுடன்   தொடர்பு.  சீ என்று இருந்தது.  ஒரு குடும்பத்துடன் பார்த்துக்கொண்டிருந்தேன்.

அந்த வீட்டில் 3 பெண் பிள்ளைகள்.  இதைப்பார்த்த அவர்களது கடைசி மகள் 14 வயசு.  சொல்லிச்சுது அக்காமாரை வீட்டில் வைத்திருக்கக்கூடாது என்று.  அங்கிருந்தவர்கள் இதைக்கேட்டு சிரித்தார்கள்.

ஆனால் எனக்கு எமது எதிர்கால சந்ததி  குறித்து நெஞ்சு அடிக்கத்தொடங்கிவிட்டது.

அண்ணா ஆண்களிலும் சரி,பெண்களிலும் சரி வேண்டுமென்றே தெரிந்து கொண்டு பிழை விடுபவர்கள் இருக்கிறார்கள் அவர்களைப் பற்றிக் கதைக்காமல் விடுவோம்.
 
என்னைப் பொறுத்த வரையில் ஒரு குடும்ப தலைவன் ஒழுங்காக இல்லாத குடும்பங்களில் இப்படியான பிரச்சனைகள் வருகின்றது...ஒரு ஆண் தனது குடும்பத்தை,மனைவியை அழகாக நிர்வகித்து வந்தால் இப்படியான பிரச்சனைகள் வராது...மனைவிக்கு வேண்டியதை கணவனும்,கணவனுக்கு வேண்டியதை மனைவியும் பகிர்ந்து கொள்ள வேண்டும்[கொடுக்க வேண்டும்.]...பரஸ்பரம் புரிந்துணர்வு இருவருக்கிடையே கட்டாயம் வேண்டும்.
 
கணவர் சரியில்லை என்டவுடன் வேறு ஆண்களோடு போகும் பெண்களும்,கிளி மாதிரி மனைவி இருந்தும் வேறு பெண்களைத் தேடிப் போகும் ஆண்களும் இருக்கின்றார்கள்...எல்லாவற்றிக்கும் காரணம் திருப்தியடையாத மனமே!
 
ஒரு பெண் சின்னப் பிழை விட்டால் பெரிதாக தூக்கிப் பிடிக்கும் எமது சமுதாயம் அதே ஒரு ஆண் பெரிய பிழை விட்டாலும் அதை ஒரு சின்ன விச‌யமாய்த் தான் பார்க்குது...இந்த விட‌யத்தில் பெண்களுக்கு நீதி தேவை :)
 
Link to comment
Share on other sites

சுமேரியர்,

நீங்கள் ஓர் தனியுலகத்தை சிருஷ்டித்து அதனுள் மற்றவர்கள் வரவில்லையென்று அங்கலாய்ப்பதுபோல் உள்ளது. தலைப்பின் ஆரம்பத்தில் நீங்கள் தொடங்கியவிடயமும் தலைப்பில் முடிவில் முற்றுப்படுத்தி முடிச்சுப்போடும் விடயமும் இதனையே வெளிப்படுத்துகின்றன.

தமது இல்லத்தில் ஆட்களிற்கு முன்னால் தகப்பனின் மடியில் பிள்ளை உட்கார்வதும், முத்தம் கொடுப்பதும் பிள்ளையின் சுதந்திரமும், விருப்பமும், இவ்வாறே தந்தையின் அனுமதியும் சம்மந்தப்பட்டது. வெளிநாட்டில் வாழ்கின்ற நீங்களே இப்படி அருவருப்பது, அலுத்துக்கொள்வது நீங்கள் வாழும் உங்கள் தனியுலகத்தின் மீதான உங்கள் அபரிமிதமான ஈடுபாட்டையே காட்டுகின்றது.

பிராமணர்கள் திருமணம் செய்யும்போது மணம்முடிக்கும் பெண் தனது தந்தையின் மடியில் உட்கார்கின்றாள். பலர் முன்னிலையில் நடைபெறும் இவ்வாறான சம்பிரதாயத்தினை ஏற்றுக்கொள்ளும் நாங்கள் தனது சொந்தவீட்டில் தந்தையின் மடியில் சொந்தப்பிள்ளை உட்கார்வதை ஏன் அருவருப்பாகப்பார்க்கவேண்டும்?

மற்றவர்களிற்கு ஷோ காட்டுவதற்காக நாங்கள் வாழத்தேவையில்லை. மேலும்.. உங்கள் பிள்ளைகள் மேற்கண்ட சம்பவத்தின்பின் உங்கள் நண்பியின் வீட்டுக்கு வருவதற்கு மறுத்தார்கள் என நீங்கள் எழுதியதை வாசிக்கும்போது உங்கள் பிள்ளைகள் அடக்கஒடுக்கமான நல்லபிள்ளைகள் எனும் தோற்றம் ஏற்படவில்லை, மாறாக, அவர்கள் மீது பரிதாபமே ஏற்படுகின்றது.

தனிமனித ஒழுக்கம் என்பது மற்றவர்களிற்காக நாம் நடிக்கின்ற நடிப்பு அல்ல, மாறாக அது எமது குணவியல், ஆளுமை, முழுமையான வாழ்வு சம்மந்தப்பட்ட விடயம்.

நீங்கள் கூறியவிடயம் பற்றி விசுகுவும், நெடுக்காலபோவானும் நல்ல விளக்கம் தந்துள்ளார்கள். என்றாலும், எனது கருத்தையும் இங்கு கூறவேண்டும் போல் இருந்ததால் எழுதுகின்றேன்.

(சொல்வதாக குறைநினைக்கவேண்டாம், பிரதேசவாதமும் என நினைக்கவேண்டாம். ஆனால், உங்கள் ஊர் இணுவில் என்பதற்கும் (இங்கு நீங்கள் எழுதி வாசித்ததாக ஞாபகம்), உங்கள் கருத்திற்கும் இடையே நிறையத்தொடர்புகள் இருக்கலாமோ என்று சந்தேகிக்கின்றேன். //அதற்காக இணுவிலைச்சேர்ந்தவர்கள் எல்லோரும் உங்களின் கருத்துடன் ஒத்துப்போவார்கள் என்று கூறவில்லை. நானும் சில மாதங்கள் இணுவிலில் வசித்துள்ளேன்//.)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்தெழுதிய அனைவருக்கும் நன்றி.
கரும்பு நான் தாயகத்தில் இருந்தபோது எனக்கு எத்தனையோ நண்பிகள் இருந்தார்கள். அவர்கள் குடும்பங்களுடன் சேர்ந்திருக்கும் போது எத்தனையோ நாள் நானும் அவர்களுடன் ஒருவளாக இருந்திருக்கிறேன். எமது ஊரை விடுங்கள். என் அப்பாவின் ஊர் வேறு. அங்கு எத்தனையோ உறவினர்கள் வீடுகளில் விடுமுறை  நாட்களில் தங்கியிருக்கிறோம். புலம்பெயர்ந்து வந்து  15 வருடங்கள் பல ஜேர்மன் இனத்தவருடன் பழகியுள்ளோம். எத்தனையோ தடவை  நாம் அவர்கள் விருந்திலும் அவர்கள் எங்கள் வீட்டு விருந்திலும் கலந்துகொண்டுள்ளனர். வெவ்வேறு ஊர்களைச் சேர்ந்த பல நண்பர்கள் அந்தப் பதினைந்து வருடங்களாக எமக்கு இருந்துள்ளனர். கிட்டத்தட்ட 100 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் உறவினரும் நண்பர்களும் உள்ளனர். முதல் நான் கூறிய அந்த ஒருவரைத் தவிர எந்த வீட்டிலும் இப்படியானது நடக்கவில்லை. எனது நண்பர் வட்டத்தில் அனைத்துத் தரப்பினரும் இருக்கின்றனர்.
நான் என் குடும்பத்தை வைத்தோ அல்லது ஊரை வைத்தோ  எழுதவில்லை. சில விடயங்கள் யீன்களிநூடாகக் கடத்தப்படுவது. அது எத்தனை தலைமுறையிலும் மாறாது. மேற்கு நாட்டவரில் கூட நடு வீதியில் வைத்து எல்லோரும்  முத்தம் கொடுப்பதுமில்லை. எல்லோரும் வளர்ந்தபின்  தந்தையின் மடியில் ஏறி இருப்பதுமில்லை.
 
 நானும் நீங்களும் இந்த யாழில் உள்ளவர்களுமா எம் சமூகம். இல்லையே. அனைத்து இன மக்களிலும்  பல்வேறுபட்ட மக்கள் இருக்கின்றனர். எல்லோரும் ஒரே குண இயல்புகளைக் கொண்டிருக்க எப்படி முடியாதோ அப்படித்தான் இதுக்கும். எல்லோரும் என்போல் கட்டாயம் இருக்க வேண்டும் என நான் ஒருவரையும் கட்டாயப்படுத்தவுமில்லை. மற்றவர்களுக்காக இறங்கி வரவும் தேவை இல்லை என்பது  என்கொள்கை.

நீங்கள் பரிதாபப் படும் அளவுக்கு என் பிள்ளைகள் இல்லை கரும்பு. அவர்களுக்கு அநேகமான ஒழுக்கமான ஆண்  பெண் நண்பர்கள் நிறைய இறுக்கிறார்கள். நாகரீகமாக ஆடை அணிவார்கள். பார்ட்டிகளுக்குப்  போவார்கள். என்னிடமும் கணவரிடமும் மனம்விட்டு அனைத்தையும் கதைப்பார்கள் பெடியள் சைட் அடிக்கும் கதை கூட. எனது face book இல் அவர்களும், அவர்களதில் நானும் கணவரும் இருக்கிறோம். எத்தனையோ இரவு நண்பிகள் சேர்ந்து ஒரு நண்பியின் வீட்டில் தங்குவார்கள். படிப்பிலும் முதன்மையகத்தான் இருக்கின்றனர். நாம் காதலித்துத் தான் திருமணம் செய்வோம் என்பது வரை எம்மிடம் பகிரும் அவர்கள் சுதந்திரமாக தன்னம்பிக்கையுடன் மற்றவர்கள் முன்னுதாரணம் கூறும்படி வாழும் பிள்ளைகள். ஒன்றாகப் படுத்து எழும்பி மடியில் இருந்தால் தான் குடும்பத்துள் நெருக்கம் வரும் என்னும் விசுகு அண்ணாவினதும் நெடுக்கினதும் கூற்றை நான் ஏற்றுக்கொள்ளவில்லை.`எங்கும் விதிவிலக்குகளும் உண்டு.
 இதற்கு என்ன ஆதாரம் என்று வந்தி கேட்பது தெரிகிறது. நம்பிக்கைதான் வாழ்க்கை. ஒருவர்  ஒன்றை எழுதும்போது  ஆதாரங்களை எப்போதும் முன்வைக்க முடியாது. நீங்கள் நம்ப வேண்டும் என்பதற்காக நான் எழுதவும் முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களது வாழ்க்கை வித்தியாசமாக உள்ளது என்பதைத்தவிர இதில் எழுதியுள்ள உங்களது  எந்த வரிகளையும் நான் ஏற்றுக்கொள்ளவில்லை சுமே.

மற்றவர்களுக்கும்

பெற்றோர் உடன் பிறந்தோருக்குமான வித்தியாசமே இதுதான்.

ஒரு வேளை நான் வளர்ந்தவிதம் அப்படியாக  இருக்கலாம்.

ஐந்து அக்காக்களுக்கு பின் பிறந்ததால் தற்பொழுதும் அவர்களைக்கண்டால் அவர்களது மடியில் படுத்துவிடுவேன்.  அவர்களது கை தானாக எனது தலையைத்தடவ தொடங்கிவிடும்.  அந்த மாதிரி  தூக்கம் வரும்.  அம்மாவிடம்  போனாலும்  இது  தான் முதல் வேலை.  மடியில் படுத்துவிடுவேன்.  அவர் இருக்கிறார்  இவர் இருக்கிறார் என்றெல்லாம் பார்ப்பதில்லை. அத்தான்மார் கூட எதுவும் சொல்வதில்லை.  மணித்தியாலயத்துக்கு  இவ்வளவு  பணம் கொடு  என்று  பகிடி  விடுவார்கள்.   நான் சொல்வேன் அக்கா கேட்டால் தாறன் என்று.   இரண்டு அக்காக்கள் ஒன்றாக கிடைத்துவிட்டால் ஒருவரில் தலை  மற்றவரில் கால் போட்டு படுத்துவிடுவேன்.

இந்தப்பழக்கமே எனது பிள்ளைகளுடனும் வந்திருக்கலாம்.

அத்துடன் எனது தம்பி  வீட்டுக்கு போனாலும் அவரது வளர்ந்த பெண் பிள்ளைகள் வந்து எனது மடியில் இருந்து விடுவார்கள். முதலில் நான் கொஞ்சம் யோசித்ததுண்டு.

ஆனால் பெரியப்பா என்ற அவர்களது பாசத்தை நம்பிக்கையை  பொய்யாக்க விரும்பவில்லை.  கால் நொந்தாலும் தள்ளி  இருங்கள் என்று இதுவரை சொன்னதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
என்னைப் பொறுத்த வரையில் ஒரு குடும்ப தலைவன் ஒழுங்காக இல்லாத குடும்பங்களில் இப்படியான பிரச்சனைகள் வருகின்றது...ஒரு ஆண் தனது குடும்பத்தை,மனைவியை அழகாக நிர்வகித்து வந்தால் இப்படியான பிரச்சனைகள் வராது...மனைவிக்கு வேண்டியதை கணவனும்,கணவனுக்கு வேண்டியதை மனைவியும் பகிர்ந்து கொள்ள வேண்டும்[கொடுக்க வேண்டும்.]...பரஸ்பரம் புரிந்துணர்வு இருவருக்கிடையே கட்டாயம் வேண்டும்.
உண்மை
கணவர் சரியில்லை என்டவுடன் வேறு ஆண்களோடு போகும் பெண்களும்,கிளி மாதிரி மனைவி இருந்தும் வேறு பெண்களைத் தேடிப் போகும் ஆண்களும் இருக்கின்றார்கள்...எல்லாவற்றிக்கும் காரணம் திருப்தியடையாத மனமே
 
உண்மை
 
ஒரு பெண் சின்னப் பிழை விட்டால் பெரிதாக தூக்கிப் பிடிக்கும் எமது சமுதாயம் அதே ஒரு ஆண் பெரிய பிழை விட்டாலும் அதை ஒரு சின்ன விச‌யமாய்த் தான் பார்க்குது...இந்த விட‌யத்தில் பெண்களுக்கு நீதி தேவை :)
 
இது தற்பொழுது மாறி  வருகிறது.  இதற்கும் ஆண்களின் குளறுபடிகள் காரணமாக இருக்கலாம்.  எனக்கு எப்பொழுதும் பெண்கள் மீது மதிப்பு உண்டு.  ஏனெனில் ஆரராய்ச்சிகளை முடிவுகளை  நான் எனது விட்டிலிருந்து உறவுகளிலிருந்து ஆரம்பிப்பவன்.  அவை அப்படியேதான் இன்றும் இருக்கின்றன.  அதனால்தான் இந்த திரியின் ஆரம்பத்திலேயே நடைமுறைக்கொவ்வாதவை என குறிப்பிட்டேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
நம்ம வீட்டைப் போலவே இருக்குது அண்ணா உங்க வீடும்.

நான் அதிகம் அப்பா அம்மா நடுவே.. பெற்றோரோடு தான் தூக்குவேன். வளர்ந்த பின்னும் கூட..! இப்போதும் அந்த காலத்தை நினைக்க ஏக்கமே மிஞ்சும்..! அந்த பாசம்.. நெருக்கம்.. தொடுகை.. அன்பு.. அதெல்லாம் எங்க புரியப் போகுதன்னா... எல்லாத்தையும் தப்புத்தப்பாவே பார்க்கிற கண்களுக்கு.. மூளைகளுக்கு..!

பெற்றோர் பிள்ளைகளுக்கிடையில் ஒழிவு மறைவு இருக்கவே கூடாது. அது பிள்ளைகள் நாம் பெற்றோர் மட்டுமல்ல.. இந்தச் சமூகம் பற்றிய நல்ல நம்பிக்கையை வளர்க்க அவசியம். அப்போது தான்.... பிள்ளைகள் நாமும் பெற்றோருக்கு எதனையும் ஒழிக்க வேண்டியதில்லை என்ற எண்ணத்தை இயல்பில் பெறுவோம். நாளாந்த விடயங்கள்.. பள்ளியில் பல்கலையில் நடக்கும் விடயங்கள் என்று.. எல்லாத்தையும் அப்பா அல்லது அம்மாட்ட சொல்லாட்டி எனக்கு தூக்கமே வராது. பரீட்சை பெறுபேறுகள் உட்பட..! ஆனால் இப்போ.. அதில் பெரிய இடைவெளியே விழுந்துவிட்டது. ஆனால் தினமும் இல்லாட்டிலும்.. சந்தர்ப்பம் கிடைக்கும் போது... போன் பண்ணி எல்லாத்தையும் சொல்லிடுவன்.

மனித மூளைக்கு மிகச் சிறந்த ஒரு ஆற்றல் உண்டு. அதுதான் பகுத்தறிவு. மனிதனை அந்த விடயத்தில் மிருகத்தோடு வைத்து நோக்கக் கூடாது. ஆனால் ஒரு விடயம்.. மனிதர்கள் மத்தியில்... பகுத்தறிவு விருத்தி குறைந்த மனிதர்களும் உளர். அவர்களே தவறுகளில் சந்தேகிக்கக் கூடிய.. செயற்பாடுகளில் அதிகம் ஈடுபடுகிறார்களோ என்ற சந்தேகம் இருக்கிறது. :)

பலர் இப்படிதான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்தெழுதிய அனைவருக்கும் நன்றி.
கரும்பு நான் தாயகத்தில் இருந்தபோது எனக்கு எத்தனையோ நண்பிகள் இருந்தார்கள். அவர்கள் குடும்பங்களுடன் சேர்ந்திருக்கும் போது எத்தனையோ நாள் நானும் அவர்களுடன் ஒருவளாக இருந்திருக்கிறேன். எமது ஊரை விடுங்கள். என் அப்பாவின் ஊர் வேறு. அங்கு எத்தனையோ உறவினர்கள் வீடுகளில் விடுமுறை  நாட்களில் தங்கியிருக்கிறோம். புலம்பெயர்ந்து வந்து  15 வருடங்கள் பல ஜேர்மன் இனத்தவருடன் பழகியுள்ளோம். எத்தனையோ தடவை  நாம் அவர்கள் விருந்திலும் அவர்கள் எங்கள் வீட்டு விருந்திலும் கலந்துகொண்டுள்ளனர். வெவ்வேறு ஊர்களைச் சேர்ந்த பல நண்பர்கள் அந்தப் பதினைந்து வருடங்களாக எமக்கு இருந்துள்ளனர். கிட்டத்தட்ட 100 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் உறவினரும் நண்பர்களும் உள்ளனர். முதல் நான் கூறிய அந்த ஒருவரைத் தவிர எந்த வீட்டிலும் இப்படியானது நடக்கவில்லை. எனது நண்பர் வட்டத்தில் அனைத்துத் தரப்பினரும் இருக்கின்றனர்.

நான் என் குடும்பத்தை வைத்தோ அல்லது ஊரை வைத்தோ  எழுதவில்லை. சில விடயங்கள் யீன்களிநூடாகக் கடத்தப்படுவது. அது எத்தனை தலைமுறையிலும் மாறாது. மேற்கு நாட்டவரில் கூட நடு வீதியில் வைத்து எல்லோரும்  முத்தம் கொடுப்பதுமில்லை. எல்லோரும் வளர்ந்தபின்  தந்தையின் மடியில் ஏறி இருப்பதுமில்லை.

 நானும் நீங்களும் இந்த யாழில் உள்ளவர்களுமா எம் சமூகம். இல்லையே. அனைத்து இன மக்களிலும்  பல்வேறுபட்ட மக்கள் இருக்கின்றனர். எல்லோரும் ஒரே குண இயல்புகளைக் கொண்டிருக்க எப்படி முடியாதோ அப்படித்தான் இதுக்கும். எல்லோரும் என்போல் கட்டாயம் இருக்க வேண்டும் என நான் ஒருவரையும் கட்டாயப்படுத்தவுமில்லை. மற்றவர்களுக்காக இறங்கி வரவும் தேவை இல்லை என்பது  என்கொள்கை.

நீங்கள் பரிதாபப் படும் அளவுக்கு என் பிள்ளைகள் இல்லை கரும்பு. அவர்களுக்கு அநேகமான ஒழுக்கமான ஆண்  பெண் நண்பர்கள் நிறைய இறுக்கிறார்கள். நாகரீகமாக ஆடை அணிவார்கள். பார்ட்டிகளுக்குப்  போவார்கள். என்னிடமும் கணவரிடமும் மனம்விட்டு அனைத்தையும் கதைப்பார்கள் பெடியள் சைட் அடிக்கும் கதை கூட. எனது face book இல் அவர்களும், அவர்களதில் நானும் கணவரும் இருக்கிறோம். எத்தனையோ இரவு நண்பிகள் சேர்ந்து ஒரு நண்பியின் வீட்டில் தங்குவார்கள். படிப்பிலும் முதன்மையகத்தான் இருக்கின்றனர். நாம் காதலித்துத் தான் திருமணம் செய்வோம் என்பது வரை எம்மிடம் பகிரும் அவர்கள் சுதந்திரமாக தன்னம்பிக்கையுடன் மற்றவர்கள் முன்னுதாரணம் கூறும்படி வாழும் பிள்ளைகள். ஒன்றாகப் படுத்து எழும்பி மடியில் இருந்தால் தான் குடும்பத்துள் நெருக்கம் வரும் என்னும் விசுகு அண்ணாவினதும் நெடுக்கினதும் கூற்றை நான் ஏற்றுக்கொள்ளவில்லை.`எங்கும் விதிவிலக்குகளும் உண்டு.

 இதற்கு என்ன ஆதாரம் என்று வந்தி கேட்பது தெரிகிறது. நம்பிக்கைதான் வாழ்க்கை. ஒருவர்  ஒன்றை எழுதும்போது  ஆதாரங்களை எப்போதும் முன்வைக்க முடியாது. நீங்கள் நம்ப வேண்டும் என்பதற்காக நான் எழுதவும் முடியாது.

உங்களிடம் உங்கள் குடும்பம் பற்றிய கூடுதலான உயர் மதிப்பீடு அதிகம் வெளிப்படுகிறது. நீங்கள் பழகும்.. 100 குடும்பம் ஆயிரக்கணக்கான குடும்பங்களைக் கொண்ட.. பெரிய சமூகத்தில் சின்னன்.. அக்கா. அப்படி ஒப்பிடுகையில்.. உங்கட கருத்துக்களின் reliability குறைவாகவே உள்ளது.

அதுமட்டுமன்றி நீங்கள் அடிப்படை மனித உளவியல் பண்புகள் சிலவற்றிற்கு அப்பால் சிறிது.. விலத்தி..நிற்கிறீர்கள். மனித உளவியலை பாடமாகக் கற்ற அனுபவத்தில் இதனைச் சொல்கிறேன்.

மனித உளவியலில்.. தொடுகைக்கு.. முக்கியம் இடமளிக்கிறார்கள். குறிப்பாக நோயாளிகள் மீதான வைத்தியர்களின் அணுகுமுறையில் கூட இதற்கு முக்கிய இடமளிக்கப்படுகிறது. ஆனால் நீங்களோ..???????! தாய் - பிள்ளை.. தகப்பன் - பிள்ளை தொடுகையைக் கூட அனுமதிக்காத ஒரு விசித்திர மனுசியா இருக்கீங்க..! :lol::D

உங்களையும் உங்க குடும்பத்தையும் தனிய ஒரு அறிவியல் ஆய்வுக்கு எடுப்பமோ என்று யோசிக்கிறன். விசித்திரமான மனிசரா இருக்கீங்க..! :)

Psychology of Human Touch

psychology-human-touch-800x800.jpg

The benefits of human touch have been utilized since the dawn of humankind. Whether it is a massage, a caress or a simple hug, human touch can result in profound and positive psychological effects for people of any age.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கையோ தொடங்கி எங்கையோ முடியுது  :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு விளங்கவில்லை நெடுக்ஸ், நான் தமிழில் தானே எழுதியுள்ளேன். சிறிய பிள்ளைகளைப் பற்றி நான் எதுவும் கூறவில்லையே  வளர்ந்த பிள்ளைகள் என்றால் 12 வயது கடந்தவர்கள். ஐரோப்பியச் சட்டத்தில்கூட 13 வயதுக்கு மேற்பட்ட ஆண் பெண் இருபால் குழந்தைகள் ஒரு குடும்பத்தில் இருந்தால் அவர்களுக்கு தங்குவதற்கு சொந்தச் சகோதரர்களேயானாலும் தனித்தனி அறைகள் சிபார்சு செய்யப்படுவதை. நானும் இங்கு கவுன்சிலிங் கற்று பல குடும்பங்களுக்கு ஆலோசனையும் வழங்கிக் கொண்டுதான் இருக்கிறேன். அத்தோடு நான்கு வருடங்கள் 0-18 வயதுப் பிள்ளைகளுக்கான child care NVQ Level 5 வரை செய்து 5 வருடங்கள் அது தொடர்பான வேலையும் செய்கிறேன். ஒன்றுமே தெரியாமல் நான் இவ்வளவையும் எழுதவில்லை. நான் எழுதியதை நீங்கள் வடிவாக உள்வாங்கி வாசிக்கவில்லை என்று இதிலிருந்து தெரிகிறது.
விசுகு அண்ணா நீங்கள் கூறுவதுபோல் பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இடையில் ஒளிவு மறைவு தேவையில்லை என்று நீங்கள் சொல்வதை ஏற்க முடியாது. அப்படியாயின் ஒரு வயதுவந்த மகள் உடை மாற்றும்போது கூட தந்தை போகலாம், ஒளிவு மறைவு தேவை இல்லை என்கிறீர்களா????. தாயும் மகனுமென்றாலும் வாயும் வயிறும் வேறு என்பது தமிழ்ப் பழமொழிதான்.

சயீவன் கூறுவதுபோல் எங்கோ தொடக்கி எங்கோ வந்து நிற்கிறோம். இது இப்படியே போனால் ஒன்று மாறி ஒன்று முடிவில்லாது இழுபட்டுக்கொண்டே போகும். அதனால் இத்திரியின் ஆரம்பக் கருத்துபற்றி மட்டும் இதில் நாம் உரையாடலாம் உறவுகளே. யாரும் குறை நினைக்க வேண்டாம்.

நீங்கள் மேலே ஆங்கிலத்தில் உள்ளதை வாசிக்கல்லைப் போல. தொடுகை எல்லா வயதினரிலும் நேர் விளைவை ஏற்படுத்துவதாக..அழகாகச் சொல்லி இருக்கின்றனர்.

மேலும்.. பிள்ளைகள் 7 வயதை அடைந்ததும் தனிய விட ஊக்குவிக்கக் காரணம்.. ஸ்பரிசத்தை நிறுத்தவோ.. பெற்றோர் பிள்ளைகள் பிணைப்பை உடைக்கவோ அல்ல. பிள்ளைகள் சுயமாக செயற்படக் கற்றுக்கொள்வதையே அதிகம் முதன்மைப்படுத்தவே ஆகும்.

குறிப்பாக.. ஒரு வயதுக்கு மேல்.. புட்டியில் பால் கொடுக்க வேண்டாம் என்றே கூறுவர். காரணம்.. பிள்ளை கோப்பையில் பால் குடிக்கக் கற்றுக் கொள்வதோடு.. அதன் பல் மற்றும் வாய் உறுப்புக்களின் தொழிற்பாடுகளை ஊக்குவிக்க.

என்னதான் NVQ level 5 வரைக்கும் சொல்லித் தந்தாங்களோ தெரியல்ல..???!

NVQ vocational qualification (academic அல்ல) என்பதால் விபரம் சொல்லித் தரல்லப் போல. அப்பிளிகேசன் மட்டும் சொல்லித் தந்திருப்பாங்க போல. :):icon_idea:

Link to comment
Share on other sites

உங்களின் கற்பூரப் புத்தி வியாக்கியாணத்திற்கு எந்த ஒரு விஞ்ஞான விளக்கமும் இல்லை சுமே அக்கா. அது தங்களின் கற்பனைக் கற்பிதம் மட்டுமே..!

நான் நினைக்கிறேன்.. நாங்கள் சிந்திக்கும் பாங்கு உங்களினதை விட வேறானது என்று. அதனை நீங்கள் விளங்கிக் கொள்ள முடியாதிருக்கிறது என்று. ஆனால் எங்களால் உங்களின் நிலைப்பாடுகளை சரியாக விளங்கிக் கொள்ள முடிகிறது. அதில் தற்துணிவாக.. "நல்லது" என்ற வரைவிலக்கணம் அதிகம் திணிக்கப்பட்டுள்ளதையும் காண்கிறேன்.

உங்களையும் உங்க குடும்பத்தையும் தனிய ஒரு அறிவியல் ஆய்வுக்கு எடுப்பமோ என்று யோசிக்கிறன். விசித்திரமான மனிசரா இருக்கீங்க..! 
 
என்னதான் NVQ level 5 வரைக்கும் சொல்லித் தந்தாங்களோ தெரியல்ல..???!
 
NVQ vocational qualification (academic அல்ல) என்பதால் விபரம் சொல்லித் தரல்லப் போல. அப்பிளிகேசன் மட்டும் சொல்லித் தந்திருப்பாங்க போல. 

மற்றவனை மட்டம்தட்டி,தன்னைப்பற்றி பெருமையாக நினைத்துக்கொண்டு கூட விவாதிப்பவனை ஏளனமாக நினைத்துக்கொண்டு கருத்துக்கள் பதியும்போது இப்படித்தான் தனிமனித தாக்குதல்கள்.

Link to comment
Share on other sites

 இதற்கு என்ன ஆதாரம் என்று வந்தி கேட்பது தெரிகிறது. நம்பிக்கைதான் வாழ்க்கை. ஒருவர்  ஒன்றை எழுதும்போது  ஆதாரங்களை எப்போதும் முன்வைக்க முடியாது. நீங்கள் நம்ப வேண்டும் என்பதற்காக நான் எழுதவும் முடியாது.

 ஆதாரம் கேட்கவில்லை உங்கள் வட்டத்திற்கு வெளியே வந்து நின்று எழுதுங்கள் என்றுதான் கேட்டேன்.

ஒட்டு மொத்த ஆணினத்திற்க்கும் ஒன்றும் தெரியாது, பிழைவிடுகின்றார்களென்று எழுதியபடியால்தான், கேட்டேன். 

அதே மாதிரி நெடுக்கு இணைத்த காணோளிகளையே நம்பாத நீங்கள். ஏழைகள் பணம் கொடுத்தால் வந்து இப்படி நாடிப்பார்களென்றீர்கள், என்ன அந்தளவுக்கு ஏழை பெண்களை கீழ்தரமாகவா உங்கள் மனதில் வைத்துள்ளீர்கள். எப்பவும் மான ரோஷத்துடன் வாழ்பவர்கள் அவர்கள். சில மோட்டுக்குடி பெண்களின் கதைகளை கோட்டு இப்படி எழுதுகின்றீர்கள். மோட்டுக்குடி பெண்களால்தான் இந்த உலகம் சீர்கெட்டுக்கிடக்கின்றது.

பல பெண்கள் திருந்தினால் ஆண்களுக்கு எந்த பிரச்சனையுமில்லை நிம்மதியா கண்ணை கண்ணை மூடலாம்.

பெண் என்றால் பேயும் இரங்கு என்றார்கள் எனென்றால் பேயை கூட நீலி கண்ணீரால் ஏமாற்றிவிடுவாள் என்பதால்தான்.

உங்கள் வட்டம் சிறியது, அதற்க்குள் இழுக்க வேண்டாம்.

படித்தவன் சொன்னால் நம்பனும் என்று சொல்வது உங்கள் வெகுளித்தனம், சின்னப்பிள்ளை நீங்க.

Link to comment
Share on other sites

உண்மை
 
உண்மை
 
இது தற்பொழுது மாறி  வருகிறது.  இதற்கும் ஆண்களின் குளறுபடிகள் காரணமாக இருக்கலாம்.  எனக்கு எப்பொழுதும் பெண்கள் மீது மதிப்பு உண்டு.  ஏனெனில் ஆரராய்ச்சிகளை முடிவுகளை  நான் எனது விட்டிலிருந்து உறவுகளிலிருந்து ஆரம்பிப்பவன்.  அவை அப்படியேதான் இன்றும் இருக்கின்றன.  அதனால்தான் இந்த திரியின் ஆரம்பத்திலேயே நடைமுறைக்கொவ்வாதவை என குறிப்பிட்டேன்.

Link to comment
Share on other sites

சுமே நீங்கள் ஒன்றை கவனித்தீர்களா - உங்கள் அத்தனை பதிவுகளிலும் தவறாமால் கருத்திடுவோர் பலர், இதில் இத்தனை பக்கங்கள் நீண்டும் காணவில்லை. கண்டு பிடியுங்கள் ஏன் என்று :lol:  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வந்தி நான் இத்தனை நாட்கள் எழுதியது கதை. கதைக்கு எப்படியும் கருத்தெழுதலாம். ஆனால் இத்திரி அப்படியானது அல்ல. நான் இவ்விடயத்தை எழுதி வைத்துவிட்டு போடலாமா விடுவோமா என ஒரு வாரமாக வைத்திருந்தேன். பின் யாழில் நீண்டகாலமாக உள்ள அனுபவமுள்ள ஒருவருக்கு அனுப்பி போடலாமா வேண்டாமா என்று கேட்டேன்.சாதக பாதகமான பதில்கள் வந்து விழும் அதைத் தாங்க முடிந்தால் போடுங்கள் என்றார்.

முதலில் எல்லோருக்கும் துணிவாக ஒன்றை எழுத முடியாது மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்னும் பயம் யாழில் உள்ள பலருக்கு இருக்கிறது. முகமூடி போட்டும் பலருக்கு அந்தப் பயம் இன்னும் இருக்கிறது.  பெண்கள் அதிகமாக கருத்தெழுத வேண்டிய திரியில் இரண்டு பேர்தான் எழுதியுள்ளனர். அதுகும் ஒருவர் ஒருவரியுடன் முடித்துக் கொண்டுவிட்டார்.

என்னைப் பொறுத்தவரை ஒரு ஆக்கத்திற்கு சரியோ பிழையோ பலர் கருத்தெழுதும் போதுதான் அதன் பலன் தெரியுமே தவிர ஒன்று இரண்டு பேர் திரும்பத் திரும்ப எழுதுவதால் பயனில்லை.

நெடுக்ஸ் உங்களிலும் விட காட்டமாக என்னாலும் உங்களுக்குப் பதில் தர முடியும். ஆனால் கறுப்பியின் உண்மை பேசி யார் மனதையும் நோகடிப்பதை விட மௌனம் பேசி நகர்ந்து செல்வது மேல் என்னும் வரிகள் என்னை எழத விடாமல் செய்கின்றன.

தொலைக் காட்சி நிகழ்ச்சிகளில் காட்டப்படுவது எல்லாம் உண்மை என்று எண்ணிக்கொண்டிருப்பீர்களானால் உங்களுக்கு இதற்குமேல் விளக்கம் தந்து பயனில்லை வந்தி.

Link to comment
Share on other sites

ஒருவிவாதத்தை செய்யும்பொது விவாதப்பொருளுடுன நின்று கொண்டு கருத்தாடுவதுதான் கருத்தாளனுக்கு அழகு.என்னுடன் கருத்தாடுவதில்லை ஏனெனில் எனக்கு நாகரீகமாக கருத்தாட தெரியாது என்று சொன்னவர்கள் தங்களுக்கு நாகரீகமாகமட்டும்தான் கருத்தாடதெரியும் என்று சொன்னவரின் கருத்தடலை இங்கு பாத்திருப்பீர்கள்.நான் எங்கு என்னை பற்றி நாகரீகமான கருத்தாளன் என்ரு சொலவிலை.உண்மையை ஒத்துகொண்டு திருந்த முயற்சி எடுத்து இப்ப நிரைய மாறி உள்ளேன்.அனால் இவர்கள் இப்படி சொல்லிக்கொண்டு ஒவ்வொரு கருத்தாடல் முடிவிலும் கருத்தாடியவரை நையாண்டி செய்வதுபோலவும் எள்ளி நகையாடுவது போலவும் முடிப்பதுதான் வழமை.இவர்கள் எல்லாம் நாகரிகம் பற்றி கதைக்கிறார்கல்.சுமேரிய்ழ்ர் இவர்களின் தனிமனித வசைபாடல்களுக்கு நகையாடல்களுக்கு ஆட்பட்டு நீங்களும் அவர்களைப்போல் கருத்தெழுதாமல் எவ்வலவு தாக்கியும் இன்னும் பொறுமையுடனும் முதிர்ச்சியுடனும் அறிக்கைவிடும் கமல் போல் பொறுமையாக கண்ணியமாக் பதில் அளிக்கும் நீங்கள் உயர்ந்தவர்கல்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
நெடுக்ஸ் உங்களிலும் விட காட்டமாக என்னாலும் உங்களுக்குப் பதில் தர முடியும். ஆனால் கறுப்பியின் உண்மை பேசி யார் மனதையும் நோகடிப்பதை விட மௌனம் பேசி நகர்ந்து செல்வது மேல் என்னும் வரிகள் என்னை எழத விடாமல் செய்கின்றன.

நான் நீங்கள் எழுதியவற்றிற்கே பதில் தருகிறேன். நீங்கள் எந்தளவு காட்டமா எழுதுறீங்களோ... அந்தளவுக்கு காட்டமா எங்களாலும் இந்த விடயம் குறித்து.. இயன்ற வரை.. ஆதாரங்களோடு பதில் தர முடியும்.

இதில நாங்க யாரும் கேட்கல்ல.. நீங்க கற்பூரமா.. உங்க குடும்பப் பின்னணி.. படிப்புப் பின்னணி பற்றி. அவற்றைப் பகிர்ந்து கொள்ளும் போது அதற்கும் பதில்கள் வரும். எனவே அவற்றைத் தவிர்த்து இத்தலைப்போடு.. சம்பந்தப்பட்ட.. ஆண் - பெண் சமூக நிலைப்பாடு குறித்த உங்களின் கருத்தை எழுதுங்கள். நிச்சயம் உடன்படாத விடயங்களைச் சுட்டிக்காட்டுவோம். உடன்படக் கூடிய விடயங்களையும் இனங்காட்டுவோம். இதுவரை இந்தத் தலைப்பில்.. உங்கள் எழுத்துக்களில் எமக்கு எதுவும் பெரிசா உடன்படக்கூடிய விடயங்களாக இல்லை..!

உங்கள் தனிப்பட்ட மற்றும் குடும்ப.. விபரங்களை புகுத்தாமல்.. பொதுமைப்பாடாக எழுதுங்கள். உங்கள் தனிப்பட்ட குடும்ப விபரங்களை.. உங்களைப் பற்றிய விபரங்களை  (அவை உண்மையோ பொய்யோ என்று கூடத் தெரியாது.. ஆனால் தெரிந்தவர்கள் போல.. சிலர் அதனை தனிமனித தாக்குதலாக்கினம் என்பார்கள்) எழுதும் போது அவற்றிற்கு பதில் அளிக்கப் போக... அதை தனிநபர் தாக்குதலாக சித்தரிக்க சீண்டுமுடிய என்று ஒரு கும்பல் யாழில் இருக்கிறது. அந்தக் கும்பலுக்கு இந்தத் தலைப்பும் தீனியாகி.. பூட்டு வாங்காத வகைக்கு எழுதினீர்கள் என்றால் நன்று.

மற்றும்படி தலைப்போடு சம்பந்தப்பட்ட  சமூக ஆண்கள் - பெண்கள் பற்றிய பொதுவான கருத்துப் பகிர்வுகளும் ஆதாரங்களும் இத்தலைப்புக்கு வலுவூட்டும்.

நன்றி சுமே அக்கா. :):icon_idea:

தொலைக் காட்சி நிகழ்ச்சிகளில் காட்டப்படுவது எல்லாம் உண்மை என்று எண்ணிக்கொண்டிருப்பீர்களானால் உங்களுக்கு இதற்குமேல் விளக்கம் தந்து பயனில்லை வந்தி.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் எல்லாம் பொய் என்றால் நீங்கள்.. தொலைக்காட்சியே பார்ப்பதில்லையோ... விடயங்களை அறிந்து கொள்வதில்லையோ.. அவற்றை நம்புவதில்லையோ..???! தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கள் சில.. சமூகத்தில் நடப்பவற்றின் பிரதிபலிப்புக்கள். அவற்றையும் நீங்கள் ஏற்றுக் கொள்ளும் பக்குவத்திற்கு வர வேண்டும். உங்களால் உடன்பட முடியாத விடயங்களுக்கு ஆதாரமாக அமையும்.. நிகழ்ச்சிகளை.. எல்லாம் பொய் என்று கருதுபவர்களிடம் எந்தக் கருத்தையும் கொண்டு செல்ல முடியாது என்பதும் உண்மை..! :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் எல்லோருக்கும் துணிவாக ஒன்றை எழுத முடியாது

மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்னும் பயம் யாழில் உள்ள பலருக்கு இருக்கிறது.

முகமூடி போட்டும் பலருக்கு அந்தப் பயம் இன்னும் இருக்கிறது

பெண்கள் அதிகமாக கருத்தெழுத வேண்டிய திரியில் இரண்டு பேர்தான் எழுதியுள்ளனர். அதுகும் ஒருவர் ஒருவரியுடன் முடித்துக் கொண்டுவிட்டார்.

என்னைப் பொறுத்தவரை ஒரு ஆக்கத்திற்கு சரியோ பிழையோ பலர் கருத்தெழுதும் போதுதான் அதன் பலன் தெரியுமே தவிர ஒன்று இரண்டு பேர் திரும்பத் திரும்ப எழுதுவதால் பயனில்லை.

வணக்கம் சுமே

இதன் மூலம் நீங்கள் சொல்லும் செய்தி

கருத்தை ஆதரித்து எழுதுங்கள் என்பதே.

அதெப்படி சரியாகும் சுமே??

நாம் கண்டதை கேட்டதை பார்த்ததைத்தானே ஏற்கமுடியும்

எழுதமுடியும்.........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
என்னைப் பொறுத்தவரை ஒரு ஆக்கத்திற்கு சரியோ பிழையோ பலர் கருத்தெழுதும் போதுதான் அதன் பலன் தெரியுமே தவிர ஒன்று இரண்டு பேர் திரும்பத் திரும்ப எழுதுவதால் பயனில்லை.

சாதகமான அல்லது பாதகமான கருத்தெனினும் என்று வந்திருக்க வேண்டியது அண்ணா மன்னிக்கவும்.

கருத்தெழுதுவோர் பற்றியும் ஒரு திரியில் எழுத இருக்கிறேன் அண்ணா. அதனால் இதில் எல்லாவற்றிற்கும் பதில் தரவில்லை.

வண்டுமுருகன் நீங்கள் பாராட்டுவதைக் கேட்டதும் பயமாக இருக்கிறது. இருந்தாலும் நன்றி.

நெடுக்ஸ் உங்கள் கருத்து சரிதான். என் சொந்த விடயங்களை எழுதியது என் தவறுதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் திரி ஆரம்பித்து எங்கேயோ வந்து சேர்ந்தாலும் புரட்சிகரமான சிந்தனைகளைக் காணவில்லை.

எமது பெண்கள் இப்படியான விடயங்களில் "ஏன் வீண் வம்பு?" என்று கருத்து வைக்கவே தயக்கம் காட்டும் நிலையில் இருப்பது போலத்தான் தமது வாழ்க்கையையும் கொண்டு நடாத்துகின்றார்கள்.. இதற்கு பலவிதமான சிக்கலான சமூகக் காரணிகள் உள்ளன. ஆனால் ஆண்களுக்கு பெண்கள் அடங்கி வாழ்ந்தால்தான் நல்ல குடும்ப (ஸ்த்ரீ) குத்துவிளக்கு என்று பெயரெடுக்க முடியும் என்று பெண்களுக்கு பெண்களும், ஆண்களும் தொடர்ந்தும் போதிப்பதால்தான் பெண்கள் ஆண்களுக்கு நிகராக இல்லை என்பதும் முக்கிய காரணம்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரியாகக் கூறினீர்கள் கிருபன். அதிகமான பெண்கள் சமூகத்துக்குப் பயந்தவர்களாகவே இன்னும் இருக்கின்றனர். கணவனின் சுதந்திரப் போக்கினால் வெளியே வந்து துணிவாகக் கருத்தெழுதும் பெண்களையும், கணவனுக்கு அடங்கி நடப்பதில்லை அல்லது கணவனை மதிப்பதில்லை என்று மற்றைய ஆண்கள் பலர் விசர்ப் பட்டம் கட்டி எழுதவிடாது செய்வதுமுண்டு. பலர் ஆண்வர்க்கத்தின் தாக்குதல்களைச் சமாளிக்க முடியாது ஓடிவிடுவது உண்டு. ஒன்றிரண்டு பேரே தொடர்ந்தும் தாக்குப் பிடிப்பது. இதில் என்ன கொடுமை என்றால் பல பெண்களே பெண்களுக்கெதிராகக் கதைப்பதுதான். பெண்கள் சுயமாகவும் துணிவாகவும் சிந்தித்தாலன்றி இந்நிலை மாறாது. நன்றி கிருபன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெண்களுக்கும் ஆண்களுக்கும் இடையே ஒரு நீண்ட இடைவெளி காணப்படுகின்றது.

பெண்களே ஆண்களை இன்னும் கொச்சைப்படுத்துவதை விடவில்லை.

எதற்கெடுத்தாலும் ஆண்களின் மீது பழியைப் போட்டுத் தப்பிக்க முடியாது.

ஒரு பெண் அதுவும் சமூகத்தில் துணிவாகச்செயற்படும் பெண் தன்னுடைய ஆக்கத்தை ஒரு ஆண்

உதவியுடன்தான் களத்தில் இட முயற்சிக்கின்றார்.

அவரே பின்னர் கூறுகின்றார் "" பெண்களே ஆண்களுக்குப் பயந்து எழுதப் பயப்படுகின்றார்கள்

சிலர் ஆண்களின் கருத்துகளுக்குத் தாக்குப் பிடிக்க முடியாமல் திரியை விட்டு ஓடுகின்றார்கள் ""

எப்போது ஆண்களுடன் தாங்களும் சமநிலையில் இருக்கின்றோம்  எனப் பெண்கள் யதார்த்தமாக உணர்கின்றார்களோ அன்றுதான் பெண்களால் ஆண்களுடன் சமநிலையில் கருத்துக்களை வைக்க முடியும்.

அந்த இடைவெளியைப் பெண்கள் தாங்களாகத்தான் குறைக்க வேண்டும். இன்னும் ஆண்களின் குறைகளை

முன்னிறுத்தி வாதாடுவதால் இடைவெளி அதிகமாகுமே தவிரக் குறைவதற்குச் சந்தர்ப்பங்கள் குறைவு.

Link to comment
Share on other sites

சென்ற வாரம் மொன்றியலிலிருந்து இரு இறப்பு செய்திகள்
                                  ஒருவருக்கு 38 வயது காதல் தோல்வியால் மண வாழ்க்கையை நினைத்தே பார்க்காதவர்.தானும் தன்பாடும் என வாழ்க்கையை ஓட்டிகொண்டு இருந்திருக்கிறார்.எருமை மாட்டுக்காரனுக்கு இதை பொறுகமுடியாமல் அவருக்கு கயற்றை வீசி எறிந்துள்ளார்.அன்றைய தினம் கிட்டத்தட்ட 50 சென்ரி மீற்றர் பனிப்பொழிவு.இதற்கு ஒரு சில தினங்களுக்கு முன்பு தொலைபேசிச் சேவையினரால் வெட்டப்பட்ட 7'- 8' ஆழக்குழியையும் அதன் மேலிருந்த அபாய அறிவிப்பையும் மூடிக்கொட்டிய பனிப்பொழிவால் அந்த ஆத்மா குழியில் விழுந்தது.மீண்டும் ஒரு சில நாட்களின் பின் தொலைபேசித்தொழிலாளர்கள் குழியை தூர் வாரும் போது தான் இறந்த உடலைக்கண்டுள்ளனர்
 
அடுத்த செய்தி
                ஒரு இளைஞர் அண்மையில் தான் திருமணமானவர்.அவர் மனைவிக்கு இதய நோய் வந்து விட்டது.டாக்டர்கள் செயற்கைச் சுவாசமளித்து வந்துள்ளனர்.ஒரு சில நாட்களின் பின் செயற்கை சுவாசத்தை நிறுத்த டாக்டர்களின் கோரிக்கை வைத்த வேளையில் அவர் தனது சுவாசத்தையே நிறுத்திவிட்டார்.
 
                                                                                                   பெண்களாயினும் ஆண்களாயினும் மனிதர்கள் தான்.எல்லோரும் ஒரே மாதிரியல்ல ஒவ்வொருத்தர் வித்தியாசமான குணங்களைப்படைத்தவர்கள்.ஆகவே பெண்கள் எல்லோரும் அல்லது ஆண்கள் எல்லோரும் கூடாதவர்கள்/ நல்லவர்கள் என்றில்லை.இப்பூமியானது தப்பு செய்ய வைக்கின்ற உலகம் தான்.ராமாயணத்தில் ராமர் பிறர் கதை கேட்டு சீதையை தண்டிக்கின்றார் ஏன் அவர் மனித அவதாரம் எடுத்தபடியால் தான் என்கின்றேன் நான்.இதே போல பாரத போரில் வண்டியை தாழ்த்தி அருஜுனைகாப்பாற்றுகிறார் கண்ணபிரான்.அதுவும் தப்புத்தான்.அதுவும் மானிடபிறவி எடுத்ததால் வந்த வினை தான்.இத்தொடரில் நான் இணைத்த சொல்வதெல்லாம் உண்மைத்தொடர்கள் தற்போதைய நாட்டு நடப்பை/உலக நடப்பை எடுத்து காட்டுபவை.அதைவிட வேறு காரணங்கள் கிடையாது.இதே போல ஆங்கிலத்திலும் பார்க்க அதிகப்படியான தறி கெட்ட(வன்புணர்வாற்றலைத்தூண்டக்கூடிய)தளங்கள் தமிழில் உண்டு யாவும் தமிழ் நாட்டிலிருந்து இலகு தமிழில் இயக்கப்படுகின்றன.இவற்றைப்பார்பதால் அதிகமானவர்கள் வழிதவற வாய்ப்புண்டு.ஒரு காட்சியைப் பார்ப்பதால் உடனே யீரணிக்க முடியாமலிருக்கும் ஆனால் வாசிப்பதால் அடுத்தது என்ன என்பதை அறியத்தூண்டும்.ஆகவே காமக்கதைகளால் தான் இளம் சமுதாயம் சீரழிகின்றது.
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.