Jump to content

வலையுலகில் எமக்கு எது நட்பு/ எது பகை?


Recommended Posts

இணைய உலகில ஈழத்தவர் பலரும் பல இணையப்பக்கங்களை நடாத்தி வருகிறார்கள். இவற்றில் பல இணையத்தளங்கள் ஈழப்போருக்கு வலுச்சேர்ப்பதாகவும்,வெளிப்ப

Link to comment
Share on other sites

வலைப்பதிவில் இது சம்பந்தமாக வந்த பதிவொன்றும் அவற்றுக்கான பின்னூட்டங்களையும் பிரதி இடுகிறேன்.

நண்பனா? பகைவனா?

நாராயணசுவாமி என்னும் நிருபர் டெய்லிஇந்தியா.கொம் என்ற தளத்திலே வெப்ஈழம்.கொம் பற்றி

Pro-LTTE website attacks Karunanidhi என்று கட்டுரை எழுதியிருக்கிறார். தமிழ்நாட்டிலே தற்போது முதலமைச்சராக உள்ள கருணாநிதி அவர்களை ஈழத்தமிழர்களுக்கு எதிராக நடந்துகொள்ளத் திட்டமிட்டே நாராயணசாமி போன்றவர்களும் பிளாக்குகளிலே சிலரும் எழுதுகிறார்களா? நாராயணசாமி பிரபாகரனை ஒரு முறை சந்தித்ததுடன் ஒரு புத்தகம் எழுதிய நிருபர் என்பது குறிப்பிடத்தக்கது.

..........கொம் தள நிருவாகிகள், ..........கொம் தளம் நடத்துகிறவர்கள்போல யாரென்றே தெரியவில்லை. இவையெல்லாம் ஈழ ஆதரவு, விடுதலைப்புலிகள் ஆதரவு போன்ற போர்வையுடன், அதற்கு எதிர்விளைவுகளைத் தரும் நோக்கத்துடன் பிளான் பண்ணி ஈழத்தமிழர் எதிர்ப்பாளர்களால் நடத்தப்படுகின்றனவோ என்ற சந்தேகம் கூட எழுகின்றது.

ஈழத்தமிழர்கள்குறித்து ஆதரவும் பரிதாபமும் ஏற்படும்போது எல்லாம் சிங்களமக்களின்மீது குண்டுவெடிப்பதும் டெய்லிஇந்தியா.கொம் போன்றவற்றிலே வரும் கட்டுரைகளும் தற்செயலானவை மட்டுமா?

Comments:

யூலியன் இதை வாசிக்கவும்

I want amicable solution to Lanka issue: Karunanidhi

http://www.rediff.com/news/2006/jun/15ltte1.htm

நாராயணசுவாமி ஜெயலலிதா நண்பன்

# Anonymous : 1:10 PM

யூலியன்,

www.........com எனும் இணையத்தளம் தமிழீழ விடுதலைப் புலிகளின் உத்தியோகபூர்வமான[Official]இணையத்த

Link to comment
Share on other sites

நன்றி குளம் அண்ணா இணைப்புக்கு

எனக்கு நீங்க போட்டிருக்கிற இணைப்பிலுள்ள தளம் பற்றி எதுவும் தெரியாதுதான்

ஆனால் இப்படி தரக்குறைவாக இவர்கள் எழுதுவது எம்மையும் பாதிக்கும் ஒரு விடயம் என்பதில சந்தேகம் இல்லை

Link to comment
Share on other sites

இது சபேசனின் வெப் ஈழம் என்ற இணையத்துக்காக ரோஸ்மேரியால் எழுதப்பட்ட பதிவு, இந்த ரோஸ்மேரியின் பின்னனியை ஆராய்ந்தால் அவர் ஒரு மாற்றுக்கருத்துக்காரர், அது அவர்களின் தொழில் வாங்கும் பணத்துக்கு தொழில் செய்கிறார்கள். அவர்கள் அப்படித்தான் எழுதுவார்கள். எவர் எப்படி எழுதினாலும் நன்மை தீமைகளை படிக்கும் வாசகர்கள்தான் பிரித்தறிய வேண்டும்.

"எப்பொருள் யார்வழி கேட்பினும் அப்பொருள், மெய்பொருள் காண்பது அறிவு"

Link to comment
Share on other sites

இது சபேசனின் வெப் ஈழம் என்ற இணையத்துக்காக ரோஸ்மேரியால் எழுதப்பட்ட பதிவு, இந்த ரோஸ்மேரியின் பின்னனியை ஆராய்ந்தால் அவர் ஒரு மாற்றுக்கருத்துக்காரர், அது அவர்களின் தொழில் வாங்கும் பணத்துக்கு தொழில் செய்கிறார்கள். அவர்கள் அப்படித்தான் எழுதுவார்கள். எவர் எப்படி எழுதினாலும் நன்மை தீமைகளை படிக்கும் வாசகர்கள்தான் பிரித்தறிய வேண்டும்.

"எப்பொருள் யார்வழி கேட்பினும் அப்பொருள், மெய்பொருள் காண்பது அறிவு"

எழுந்த மானத்துக்கு குற்றச்சாட்டுக்கள் சொல்வதை தவிர்க்கலாமே பிருந்தன்.

அல்லது ரோஸ் மேரியை உங்களுக்கு முன்னமே அறிமுகமாகி இருக்க வேண்டும்.

"எப்பொருள் யார்வழி கேட்பினும் அப்பொருள், மெய்பொருள் காண்பது அறிவு

இதை சொன்னால் மட்டும் போதது. அதை கடைப்பிடிக்கவும் வேண்டும். :P

என்னை விட ஒழுங்காக வலைப்பதிவுகளை வாசிப்பீர்கள் என்று நம்புகிறேன்.

றோஸ் மேரி என்பவரை எனக்கு தனிப்பட்ட ரீதியில் தெரியாது. சபேசனையும் தெரியாது.

ரோஸ் மெரி ஈழ சம்பந்தமான விடயங்களில் பல சந்தர்ப்பங்களில் (குறிப்பாக நான் வாசித்தது தமிழ் சசியின் பதிவில்) தெளிவான பின்னூட்டங்களையே இட்டுள்ளார். அவை மாற்று கருத்தாக இருந்ததாக தெரியவில்லை. அவருடைய பதிவுகள் அனைத்தையும் வசித்தாலும் அப்படி தெரியவில்லை.

சொல்ல போனால் புலிகளின் இழி இணையத்தளம்..... .கொம் என்று தலைப்பு தீட்டிய ஜேர்மன் வாழ் தமிழன் ??? வங்காலை படுகொலை குறித்து ஒரு கவிதை எழுதி இருந்தார். அக்கவிதையை கண்டித்திருந்தார்.

இவையெல்லாம் ஒருவரை எப்படியானவர் என்று சொல்ல போதாவிட்டாலும், எழுந்தமானமாக அவர்/ வேறொருவர் மாற்று கருத்தாளர் என்று சகட்டுமேனிக்கு சொல்லவதை (ரோஸ் மெரியை மட்டும் சுட்டவில்லை) தவிர்க்கலாம்.

மற்றும்படி, நான் எழுதியது குறிப்பிட்டு எந்த தளத்தையும் சுட்டியல்ல. ஆனால் பொதுவாக எவற்றை அவை குறிக்கிறது புரியும் என நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

குழக்காட்டான் நீங்கள் இட்ட பின்னூட்டங்கள் எதற்காக எழுதப்பட்டது என்பதைத்தான் குறிப்பிட்டேன், சபேசன் இந்த களத்திலிருக்கும் கள உறவு. ரோஸ்மேரியைபற்றிய கனிப்பு எனது கணிப்பே அதுதான் அனைவரதும் என நான் கூறவில்லை. எனக்கு அப்படி தெரிகிறது தேசியத்தை ஆதரிப்பதுபோன்று எதிர்கருத்துக்களை விதைப்பவராகத்தான் தெரிகிறது எனது கணிப்பு தவறாகவும் இருக்கலாம் இது எனது கருத்துதான்.

Link to comment
Share on other sites

குளம் எழுதிய நியாயமான கேள்விகள் பலரால் கேட்கப் பட்டுள்ளன.

இங்கே சில அடிப்படயான விசயங்களை நாங்கள் பார்க்க வேண்டும்.உளவு அமைப்புக்கள் நீண்ட காலமாகவே செய்தியாளர்கள் என்ற போர்வையில் பலதரப்பட்ட செய்திகளை ஊடகங்களில் புகுத்தி உள்ளன.இவை இந்திய உளவு நிறுவனக்கள் முதல் ,இலங்கை, மேற்கத்திய ஊடகங்கள் வரை நடந்து வரும் ஒரு செயல்.இவ்வாறான செய்தியாளர்களும், செய்தி ஊடகங்களும் காலக் கிரமத்தில் அடையாளம் காணப்படுகின்றன அல்லது அடையாளப் படுத்தப் படுகின்றன.

குளம் சுட்டிக் காட்டிய இணயத்தளங்களைப் பொறுத்தவரை அவை புலிகளின் ஊடகங்கள் அல்ல ஆகவே அவற்றை மேற்கோள் காட்டி நாரயண சாமி 'புலிகளின் ஊடகம் என்று கூறியது முற்றிலும் தவறானது ஆகும்.

அதே நேரம் இவ்வாறான இணயத் தளங்களை எவரும் தடை செய்ய முடியாது, அவை இயங்குவதற்கான உரிமை இணயத்தில் உண்டு.இவற்றை புலிகள் தடை செய்ய வேண்டும் என்ற தொனியில் மேற்குறிப்பட்ட வேண்டுகோள்கள் விடுக்கப் படுகின்றனவா அல்லது உண்மையிலயே இவை புலிகளால் நடதப்படுவதாக நினைத்து இவ் வேண்டுகோள்கள் விடுக்கப் படுகின்றனவா என்று தெரியவில்லை. எப்படி ஆயினும் இவை சில தனி நபர்களால் நடத்தப் படுகின்றன ஆகவே இவற்றைப்புலிகள் ஒன்றும் செய்ய முடியாது.

அடுத்தாக இவ்வாறான செய்திகள் என்ன செய்துள்ளன எனப் பார்த்தால், மேற்குறிப்பிட்ட செய்தி வெளியாகியதன் பின், இன்று கலஞர் தலமையில் கூட்டணிக்கட்ச்சிகளுடன் இலங்கை பிரச்சினை சம்பந்தமாக என்ன நிலைப் பாடுகள் எடுக்க வேண்டும் என்ற கூட்டம் நடை பெறுகிறது.இதன் முடிவில் சில நல்ல முடிவுகள் எடுக்கப் படலாம்.(வீரமணி,ராமதாஸ் போன்றோர் இந்தக்கூட்டத்தில் ஈழத் தமிழர் ஆதரவு நிலையை விளக்குவார்கள் என்று எதிர் பார்க்கலாம்).ஒரு வகையில் இவ்வாறான செய்திகள் ஒருவகை எதிர் நிலை விளைவுகளை ஏற்படுதுகின்றன.

ஆகவே நாம் இவ்வாறான குழப்ப நிலைகளை விளக்கும் வகையில் எமது எதிர்ப் பிரச்சாரங்களை எடுக்க வேண்டுமே ஒழிய ,வெறுமனே இவர் மாற்றுக் கருத்தாளர் துரோகி என முத்திரை குத்த முடியாது, அவர்கள் அவ்வாறானவராக இருந்தாலும்.அவ்வாறு செய்வது இலகுவானது தான் என்றாலும் ,அவை ஒரு வலுவான எதிர்ப் பிரச்சாரமாக இருக்காது.வலுவான எதிர்ப் பிரச்சாரத்தை முன் நெடுக்க நேரமும்,பொறுமையும் அவசியம். எல்லாவற்றையும் மறுதலித்து , வெற்று வார்த்தைகளால் அர்ச்சிப்பது இந்த மாற்றுக்கருத்து என்று சொல்வோருக்கு வசதியான விடயம், ஏனெனில் விமர்சனத்திற்கு உள்ளாவதற்கு, அவர்களிடம் எந்த வித மாற்றுத் திட்டமோ, போராட்ட வழி முறையோ கிடயாது.மாற்றுக் கருத்து எனச் சொல்லிக் கொண்டு எதுவித மாற்றுத் திட்டமும் இன்றி ஜன நாயகம்,மக்கள் போராட்டம் என்று வெறும் வார்த்தைகளை ,பொய்களைப் புனைந்து கொண்டு பலர் இன்று இணையத்தில் இருகின்றனர்.இவர்களை அடயாளப்படுதுவதிலும், வலுவான பதிற் பதிவுகளை இடுவதிலும் இன்று இணயத்தில் பல வலைப் பதிவாளர்கள் இருகின்றனர்.

ஆகவே இது ஒரு தொடர்ச்சியான போராட்டாம்,களத்திலும் ,இணையத்திலும்.

Link to comment
Share on other sites

http://www.eelampage.com/?cn=26978

மேலதிக இணைப்பு) இலங்கையில் இந்திய அரசு தலையிட கருணாநிதி தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் வலியுறுத்தல்

[திங்கட்கிழமை, 19 யூன் 2006, 19:09 ஈழம்] [புதினம் நிருபர்]

இலங்கையில் அமைதிக்கு வழிகாண இந்திய மத்திய அரசு தலையிட வேண்டும் என்று தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி தலைமையில் இன்று திங்கட்கிழமை மாலை நடைபெற்ற திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தி.மு.க. தலைமையகமான அறிவாலயத்தில் இக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:

இலங்கையில் நோர்வே நாடு ஈடுபட்டு நடத்திய அமைதிப் பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்து அங்கே அந்த மக்களுக்கான வளர்ச்சிப் பணிகளில் சிறிலங்கா அரசும் போராளிகளும் அக்கறை காட்டுவார்கள் என்ற எதிர்பார்ப்பு நிறைவேறாமல் மீண்டும் இருசாரரும் மோதிக் கொள்ளும் நிலையில் அந்நாட்டு அப்பாவி மக்கள் கண்ணிவெடிகளாலும் விமானத் தாக்குதல்களாலும் கொல்லப்படும் சம்பவங்களும் அதன் விளைவாக தமிழ்நாட்டை நோக்கி அகதிகள் வந்து குவிவதும் இந்தியா - இலங்கை இரண்டுக்கும் இடையே வாழ்கின்ற மக்களின் மனது பெரிதும் பாதிக்கும் அளவுக்கு அமைந்துள்ளது.

இந்தப் பிரச்சனை ஏற்கனவே விரும்பத்தாகத பல விபரீத வேதனையான நிகழ்வுகளுக்கு காரணமாக அமைந்ததையும் ஆழமாக எண்ணிப் பார்த்து இலங்கையில் அமைதிக்கு வழிகாண இந்திய அரசு ஆவண செய்திட வேண்டும் என்று அடியில் கையொப்பமிட்டுள்ள இயக்கங்களைச் சார்ந்த நாங்கள் மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.

தமிழ்நாட்டு மீனவர்களுக்கு சிறிலங்கா இராணுவத்தால் தொடர்ந்து இழைக்கப்படும் கொடுமைகள் நிறுத்தப்படவும் அந்த மீனவர்களுக்கு உயிர் உடைமை உரிமை ஆகியவற்றுக்கு உத்தரவாதம் அளிக்கப்படவும் இந்திய-சிறிலங்கா அரசுகள் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம் என்று அத்தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலைஞர் கருணாநிதி (தி.மு.க.), சுதர்சனம் (காங்கிரஸ்), மருத்துவர் இராமதாஸ் (பாட்டாளி மக்கள் கட்சி), கி. வீரமணி (திராவிடர் கழகம்), டி.கே. ரங்கராஜன் (மார்க்சிஸ்ட் கட்சி), தா. பாண்டியன்(இந்திய கம்யூனிஸ்ட் கட்சி), காதர் மொய்தீன் (இந்திய யூனியன் முஸ்லிம் லிக்) ஆகியோர் இத்தீர்மானத்தின் கீழ் கையொப்பப்பமிட்டுள்ளனர்.

இக்கூட்டத்துக்குப் பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருணாநிதி கூறியதாவது:

கேள்வி: என்ன மாதிரியான நடவடிக்கை?

பதில்: அவர்கள் எது எடுத்தாலும் நடவடிக்கைதான். என்ன நடவடிக்கை எடுக்கிறார்கள் என்று பார்ப்போம்.

கேள்வி: அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழு இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதே?

பதில்: கோரிக்கை வைப்பவர்கள்தான் அது பற்றி விளக்க வேண்டும்

கேள்வி: தமிழ்நாட்டுக்கு வரும் அகதிகளுக்கு தேவையான வசதிகள் செய்யப்படுகிறதா?

பதில்: அகதிகளின் நிலை, தேவைகளைக் கண்டறிந்து வர அமைச்சர்கள் சு.ப.தங்கவேலன், பெரிய கருப்பன் ஆகியோர் நேரில் சென்று வந்துள்ளனர்.அதுபற்றி அறிக்கையும் தர இருக்கிறார்கள்.

கேள்வி: இதை பிரதமரிடம் வலியுறுத்தினீர்களா?

பதில்: உரிய செயல்களை ஆற்ற பிரதமரிடம் கேட்டு வலியுறுத்தியுள்ளோம். அதுதவிர மத்திய அரசுக்கு எதுவும் யோசனை கூறவில்லை.

கேள்வி: இந்திய அரசு சரியான நடவடிக்கை எடுத்து வருகிறதா?

பதில்: இதுவரை எடுத்த நடவடிக்கையை குறை சொல்ல முடியாது.

கேள்வி: எந்த மாதிரியான நடவடிக்கை?

பதில்: அங்கு அமைதி ஏற்படுமளவுக்கு நடவடிக்கை.

கேள்வி: அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்படுமா?

பதில்: இன்று நடந்ததே அனைத்துக் அக்ட்சிக் கூட்டம்தான்.

கேள்வி: எல்ல்லாக் கட்சி சார்பில் பிரதமரை வலியுறுத்துவீர்களா?

பதில்: முதல் கட்டமாக நாங்கள் பேசி 7 கட்சித் தலைவர்கள் கையெழுத்திட்டு அறிக்கை வெளியிட்டுள்ளோம். இந்த கோரிக்கை பிரதமருக்கு அனுப்பப்படும்.

நான் இதுபற்றி பிரதமருடன் தொலைபேசியில் பேசுவேன்.

கேள்வி: தமிழகக் கட்சிகள் சொல்லிக் கேட்கும் நிலையில் விடுதலைப் புலிகள் இருக்கிறார்களா?

பதில்: அது எனக்குத் தெரியாது.

கேள்வி: மீனவர்கள் மீது நடந்த தாக்குதல் பற்றி?

பதில்: தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து நடக்கும் நிகழ்ச்சியாகவே அது இருக்கிறது

எந்த அரசாங்கமாக இருந்தாலும் நாமும் நடவடிக்கை எடுக்கிறோம். அவர்களும் நடவடிக்கை எடுக்கிறார்கள். ஆனால் இது தொடர்கிறது என்றார் கருணாநிதி.

Link to comment
Share on other sites

எனக்கு வந்த ஒரு ப்வோர்ட் மின்னஞ்சல்,

மேற்குறிப்பிட்ட கருத்தடாலுடன் சம்பந்தப்பட்டது?

சேதுவுக்கும் யாழ்.கொம்முக்கும் தொடர்பு இருப்பதாக டிபிசி சொன்னதாகக் கூறப்படுள்ளது.

Subject: Danger to me

Date: Mon, 19 Jun 2006 08:25:03 -0500

From: "SETHURUPAN" <sethurupan@gmail.com> Add to Address Book

Dear Sirs,

I am writing to you with regards to a number of allegations

made against me, Sethurupan Nadaraja on the Thamil

Broadcasting Corporation (TBC 245 D Imperial Drive Rayners

Lane Middlesex London). Of note are the numerous numbers of

indecent assertions and absolute fabrications broadcasted on

the discussion shows about my character, profession and links

to personalities, every Thursday nights and Sunday

afternoons. Specialy 18-06-06 Sunday Evening Uk Time 4.30pm-

6pm.

On this particular occasion I refer to a number of

allegations levelled against me by a man claiming to be Mr.

Shanmugathasan News Announcer on TBC radio.

This individual was allowed to spread messages of hatred

targeted against `me` people originating from the town of

Point Pedro and allegations about my education and

professional integrity as a journalist. Further, he had also

accused me of administrating the Yarl.com and Nitharsanam.com

websites as well as being an agent of the Liberation Tigers

of Tamil Eelam (LTTE) in Norway.

I would like to categorically state here that all the

allegations put forward about my self and my character by TBC

News announcer Mr Shanmugathasan are absolute fabrications

with no truth in them. Political discussion should be limited

to views on political event and not be reduced to a medium

for issuing threats or making unfounded allegations against

certain individuals.

I have recorded proof of TBC News Announcer Mr.

Shanmugathasan verbally abusing me on the TBC radio for over

10 minutes without be stopped or prompted to adhere to

political comments by the broadcasters. In fact it is quite

clear that the broadcaster Mr. Theepan encouraged TBC News

announcer Mr. Shanmugathasan to continue with his unfounded

allegations and out right lies.

As individuals of Sri Lankan origin I am sure that you would

be fully aware of the dangers this radio has been putting me

under by associating me with the LTTE.

This unfounded allegations have led to me receiving several

death threats.

Furthermore, both I and my family are suffering from great

distress due to the nature of the allegations TBC has

broadcasted. As my integrity as a professional journalist has

been brought into disrepute, I have incurred loss of

earnings, which can be correlated to the TBC broadcast. I

would like TBC to take necessary steps to ensure that

listeners of the discussion show are fully aware of the fact

that Mr. Shanmugathasan's comments were his own makings and

that they were not verified reports. I would also like you to

broadcast my side of the story, such that the damage done to

me by TBC could be somewhat undone.

The radio station has also on a Many number of occasions made

indecent comments about me and my family. I had taken the

opportunity of a visit to London to clear my name with the

said radio station. I travelled to the station to give a live

interview and clear any doubts the broadcasters may have with

regards to my none-involvement in the nitharsanam.com

website. They told to Soth Harrow police that I had issued

death threat This is an absolute fabrication and could not be

further from the truth.

Sincerely

SETHURUPAN.N

JOURNALIST

Norway.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்தியாவுக்கு சுத‌ந்திர‌ம்  கிடைச்சு 75ஆண்டு ஆக‌ போகுது இந்தியா இதுவ‌ரை என்ன‌ முன்னேற்ற‌த்தை க‌ண்டு இருக்கு சொல்லுங்கோ நாட்டான்மை அண்ணா 😁😜............................ அமெரிக்க‌ன் ஒலிம்பிக் போட்டியில் 100ப‌த‌க்க‌ங்க‌ள் வெல்லுகின‌ம் இந்தியா வெறும‌னே ஒரு ப‌த‌க்க‌ம்............இந்திய‌ர்க‌ள் எந்த‌ விளையாட்டில் திற‌மையான‌வ‌ர்க‌ள் சொல்ல‌ப் போனால் கிரிக்கேட் விளையாட்டை த‌விற‌ வேறு விளையாட்டில் இந்திய‌ர்க‌ள் பூச்சிய‌ம்.................ஹிந்தி தினிப்ப‌தில் காட்டும் ஆர்வ‌ம்  பிள்ளைக‌ளுக்கு விளையாட்டு அக்க‌டாமி திற‌ந்து அதில் திற‌மையை காட்டும் வீர‌ர்க‌ளை புக‌ழ் பெற்ற‌ ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப‌லாமே................28கோடி இந்திய‌ ம‌க்க‌ள் இர‌வு நேர‌ உண‌வு இல்லாம‌ தூங்கின‌மாம்................யூடுப்பில் ம‌த்திய‌ அர‌சு இந்தியாவை புக‌ழ் பாட‌ சில‌ர‌  அம‌த்தி இருக்கின‌ம்.....................பெரும்பாலான‌ ப‌ண‌த்தை போர் த‌ள‌பாட‌ங்க‌ளை வேண்ட‌ ம‌ற்றும் இராணுவ‌த்துக்கே ம‌த்திய‌ அர‌சு ப‌ண‌த்தை ஒதுக்குது................ இந்தியாவே நாறி போய் கிட‌க்கு..........இந்தியா வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் எத்த‌னையாவ‌து இட‌த்தில் இருக்குது..............இந்தியா என்றாலே பெண்க‌ளை க‌ற்ப‌ழிக்கும் நாடு என்று தான் ஜ‌ரோப்பிய‌ர்க‌ள் சொல்லுவார்க‌ள்.................   இந்தியாவை விட‌ சின்ன‌ நாடுக‌ள் எவ‌ள‌வோ முன்னேற்ற‌ம் அடைந்து விட்டார்க‌ள்..............இந்தியா அன்று தொட்டு இப்ப‌ வ‌ரை அதே நிலை தான்.............இந்தியா 2020இல் வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ ஆகிவிடும் என்று போலி விம்ப‌த்தை க‌ட்டு அவுட்டு விட்டார்க‌ளே இந்தியா வ‌ல்ல‌ர‌சு நாடா வ‌ந்திட்டா..............இந்திய‌ர்க‌ளுக்கு வ‌ல்ல‌ர‌சுசின் அர்த்த‌ம் தெரியாது.................இந்திய‌ர்க‌ள் ஒற்றுமை இல்லை அத‌னால் தான் சிறு முன்னேற்ற‌த்தையும் இதுவ‌ரை அடைய‌ வில்லை..............த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ள் டெல்லிக்கு போனால் டெல்லியில் அவைச்சு த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ளுக்கு ஊமை குத்து குத்தின‌ம் ..................இந்தியா ஏற்றும‌தி செய்வ‌தை விட‌ இற‌க்கு ம‌தி தான் அதிக‌ம்................டென்மார்க் சிறிய‌ நாடு டென்மார்க் காசின் பெரும‌திக்கு இந்தியாவின் ரூபாய் 11 அடி த‌ள்ளி நிக்க‌னும்   இந்தியா ஊழ‌ல் நாடு அன்டை நாடான‌ சீன‌னின் நாட்டு வ‌ள‌ர்சியை பார்த்தும் இந்திய‌ர்க‌ளுக்கு சூடு சுர‌ணை வ‌ர‌ வில்லை.............மொத்த‌த்தில் இந்தியா ஒரு குப்பை நாடு.............அர‌சாங்க‌ ம‌ருத்துவ‌ம‌னைக‌ளை நேரில் போய் பாருங்கோ எப்ப‌டி வைச்சு இருக்கிறாங்க‌ள் என்று..................   ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ள் ஊழ‌ல் செய்வ‌தில்லை அது தான் டென்மார் நோர்வே சுவிட‌ன் பின்லாந் ந‌ல்ல‌ முன்னேற்ற‌ம் அடைந்து இருக்கு...............இந்த‌ நாளு நாட்டிலும் டென்மார்க் சிட்டிச‌ன் வைத்து இருப்ப‌வ‌ர்க‌ள் லோன் எடுக்க‌லாம்..................அப்ப‌டி ப‌ல‌ விடைய‌ங்க‌ளில் ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாடுக‌ளுக்கு உல‌க‌ அள‌வில் ந‌ல்ல‌ பெய‌ர் இருக்கு............இந்தியா  வெறும‌ன‌ குப்பை தொட்டி நாடு..............த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் ஒரு விசிட் அடிக்க‌னும் ஜ‌ரோப்பாவுக்கு ம‌ற்ற‌ நாடுக‌ளுக்கு அப்ப‌ உண‌ருவின‌ம் இந்திய‌ம் திராவிட‌ம் என்ற‌ போர்வைக்குள் இருந்து நாம் ஏமாந்து விட்டோம் என்று இதை யாரும் மூடி ம‌றைக்க‌ முடியாது இது தான் உண்மையும் கூட‌......................இந்தியாவை த‌விர்த்து விட்டு உல‌க‌ம் இய‌ங்கும் சீன‌ன் இல்லாம‌ இந்த‌ உல‌க‌ம் இய‌ங்காது.............இதில் இருந்து தெரிவ‌து என்ன‌ சீன‌னின் முன்னேற்ற‌ம் இந்தியாவை விட‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு அதிக‌ம்...........நீங்க‌ள் பாவிக்கும் ஜ‌போனில் கூட‌ சீன‌னின் பொருல் இருக்கும்............இப்ப‌டி சொல்ல‌ நிறைய‌ இருக்கு..............................................................
    • இங்கே நான் சீமானையோ அவர் மகனையே பற்றி பேசவில்லை. தமிழ்நாட்டில் தமிழின் நிலை எங்கே எப்படி இருக்கிறதென்பதை சுருக்கமாக சிவகுமார் சொல்கிறார் என்பதற்காக இணைத்த காணொளி.
    • இதைவிட முக்கியமானது புலனாய்வுப் பிரிவுகளின் அச்சுறுத்தல் என எண்ணுகிறேன்.
    • 1. அரசியலில் வாதிகள் மீது நம்பிக்கையீனம்.  2. முதலாமது - அந்த அரசியல் மீதே நம்பிக்கயீனமாக மாறி வருகிறது. 3. நியாபக மறதி. திட்டமிட்ட மறக்கடிப்பு. 4. இப்பவே நானும், குடும்பமும் ஓக்கே தானே….ஏன் அல்லப்படுவான் என்ற மனநிலை. 5. யாழில் 1995 க்கு பின் பிறந்த ஒருவருக்கு இப்போ 29 வயது. அவருக்கு புலிகள், போராட்டத்துடன் எந்த நேரடி அனுபவமுமில்லை. 6. அறிவூட்டாமை - 2009 க்கு பின் வெளிநாட்டில் பிறந்த பிள்ளைகளை விட நாட்டில் இருக்கும் பிள்ளைகளுக்கு 1948-2009 என்ன நடந்தது என்றே யாரும் சொல்லவில்லை. நடந்தது அநியாயம் என்பதே உறைக்காவிடின் - உணர்ச்சி எப்படி வரும். இருக்கும் சனத்தொகையில் கணிசமானோர் இவ்வகையினரே.  
    • பாகம்3 துரையப்பா சுடப்பட்டது.   பாகம் 4 தமிழ் புதிய புலிகள்  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.