Jump to content

போர்க்களத்தில் வீஷ்மர் இறந்து ஏன்?: வலம்புரியின் ஆசிரியர் தலையங்கம்


Recommended Posts

                                                              images200.jpg

மகாபாரதத்தில் இடம்பெற்றுள்ள பாத்திரங் களில் பல்வகை குண இயல்புகள் கொண்ட பாத்திரங்கள் நிறையவே உண்டு. அதில், வீஷ்மர் என்ற பாத்திரம் மிகவும் மரி யாதைக்குரியதாக - கடும் சந்நியாசத்திற்குரிய தாக - தன் தந்தையின் விருப்பத்தை நிறைவேற் றியதாக - ஆட்சி தனக்குரியதென்று தெரிந்தும் அது எனக்கு வேண்டாம் என்று பதவியை உதறித் தள்ளிய உத்தம குணமுடையதாக காண முடியும். பிதாமகர் என்று போற்றப்பட்ட வீஷ்மர் குரு ஷேத் திரப் போரில் பாதுகாக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது நம் நினைப்பு. மகாபாரதக் கதையை கூறுவோரிடம் ஐயா! பிதாமகர் வீஷ்மர் குருஷேத்திரப் போரில் உயிர் துறந் தது ஏன்? அதுவும் தனது சிஷ்யனின் கையால் உயிர் துறந்தார் அல்லவா? அப்படியாக ஒரு அவல நிலை அந்தப் பெருமகனாருக்கு ஏற்பட்டது எதற்காக?
இப்படியயல்லாம் கேள்வி கேட்ட ஞாபகம் உண்டு. இந்தக் கேள்விகளுக்கு அப்போது விளக் கம் தெரியவில்லையாயினும் இப்போது அதற் கான விளக்கம் மிகத் தெளிவாகத் தெரிகிறது.

அதுவும் எங்கள் நாட்டில் பிரதம நீதியரசராக இருந்த ´ராணி பண்டாரநாயக்கவின் நிலை மைக்குப் பின்பு வீஷ்மர் போர்க்களத்தில் இறந் ததன் காரணத்தை தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகின்றது.  ஆம் திரெளபதியின் ஆடையை துச்சாதனன் பற்றியிழுக்கின்றான். சபை நடுவே மிகக் கொடு மையான சம்பவம் நடக்கிற போது வீஷ்மர் மெள னம் காத்தார். பிதாமகர் என்று பெருமைப்படுத்தப்பட்ட வீஷ் மர் ஒப்புரவாளராக இருந்திருந்தால் சபையில் எழுந்து துரியோதனா இக் கொடுஞ்செயலை நீ செய்வாயானால் எனது முடிபுகள் வேறுவிதமாக இருக்கும் என்று கூறியிருக்க வேண்டும். இவ் வாறு வீஷ்மர் கூறியிருந்தால்,  நிச்சயம் துரியோதனன் சிந்தை தெளிந்திருப் பான். ஆனால் அதனை வீஷ்மர் செய்ய வில்லை. 

ஏன் அவ்வாறு வீஷ்மரால் சொல்ல முடிய வில்லை என்று ஒருகணம் சிந்தித்தால், நாடாளும் பதவி வேண்டாம் என்ற வீஷ்மரிடமும் துரியோதனின் சபையில் தனக்கிருந்த பதவி மீது ஒரு பற்று. திரெளபதியை காப்பாற்றும் நோக்கில் நியா யத்தை எடுத்துரைத்தால் அது கெளரவர் சபை யில் இருக்கக் கூடிய தனது பதவிக்கு பாதகமாகி விடும். எனவே நடப்பது அநீதி, அக்கிரமம், அநி யாயம் என்று தெரிந்திருந்தும் வீஷ்மர் மெளனம் காத்தார். அதன் விளைவாக குருஷேத்திரப் போரில் முதற்பலியாகும் துரதிர்ஷ்டத்திற்கு வீஷ்மர் ஆளாக வேண்டியதாயிற்று. இந்த நிலைமைதான் இப்போது இலங்கை யில் நடக்கும் நாடாளுமன்ற - உயர் நீதிமன்ற முரண்பாடுகளாகும்.

ஐயா, இவன் தமிழன் இவனது பக்கத்தில் நியாயம் இருக்கிறது என்று தெரிந்தும் பதவி யின்பால் கொண்ட பற்றுக் காரணமாக தமிழ னுக்கு அநீதியை வழங்குவதே ஒரே வழியயன்று முடிபு செய்யப்பட்டது. அதன் விளைவாக இன்று நிலைமை மாற்றம் கண்டுவிட்டது. அன்று தமிழர் - சிங்களவர் என்று நோக்காது நீதிவழங்கப்பட்டிருந்தால், இன்று பதவியை பறித்து தள்ளிவிழுத்துகின்ற மோசங்கள் நடந் திருக்காது. ஆக, வீஷ்மருக்கு நடந்ததுதான் இப்போதும் நடக் கிறது என்பதை இதிலிருந்து புரிதல் கடினம் அன்று.

 

http://www.valampurii.lk/index.php?option=com_content&view=article&id=430:2013-01-18-07-56-53&catid=79:2012-09-26-08-59-23&Itemid=491

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
ஏன் அவ்வாறு வீஷ்மரால் சொல்ல முடிய வில்லை என்று ஒருகணம் சிந்தித்தால், நாடாளும் பதவி வேண்டாம் என்ற வீஷ்மரிடமும் துரியோதனின் சபையில் தனக்கிருந்த பதவி மீது ஒரு பற்று. திரெளபதியை காப்பாற்றும் நோக்கில் நியா யத்தை எடுத்துரைத்தால் அது கெளரவர் சபை யில் இருக்கக் கூடிய தனது பதவிக்கு பாதகமாகி விடும். எனவே நடப்பது அநீதி, அக்கிரமம், அநி யாயம் என்று தெரிந்திருந்தும் வீஷ்மர் மெளனம் காத்தார். அதன் விளைவாக குருஷேத்திரப் போரில் முதற்பலியாகும் துரதிர்ஷ்டத்திற்கு வீஷ்மர் ஆளாக வேண்டியதாயிற்று.

இரண்டு திருத்தங்கள், மல்லை!

 

முதலாவது, குருசேத்திரப் போரில், முதற்பலி, பீஷ்மர் என்பது! பீஷ்மர் பதினேழாவது நாளில் தான் சாகிறார் என நினைக்கிறேன்!

 

இரண்டாவது, தவறு பீஷ்மரில் இல்லை! துரியோதனனிலும் இல்லை! அவளைப் பணயமாக வைத்த தருமரில் தான் உள்ளது! 

திரஹுபதைக்கு ஐந்து கணவர்கள் இருக்கும்போது, அவளைப் பணயமாக வைத்து விளையாட, அவருக்கு இருபது வீதம் தான் உரிமையிருந்தது!

 

வென்ற பணயப் பொருளை, என்ன வேண்டுமானாலும் செய்யத் துரியோதனனுக்கு, உரிமை இருக்கின்றது தானே!

 

இதில் பீஷ்மர் என்ன செய்திருக்க முடியும்?

 

மற்றது, பீஷ்மரின் பதவி அவருக்குப் பிறப்பால் வந்தது! அதற்காக அவர் மவுனம் காக்கத் தேவையிருக்கவில்லை!

Link to comment
Share on other sites

வலம்புரியார் தற்கால அரசியல் கண்ணோட்டத்தின்கீழ் கதையை கொண்டுவருகிறார் . ஜனநாயக ஆட்சி, அது முறையாக பெறப்பட்ட அதிகாரம் என்ற போர்வையின் கீழ் சிங்கள அரசு எமக்கு எதிரான சட்டங்களை கொண்டுவரமுடியாது என்பது நமது வாதம்.

 

போரில் தோற்ற அரசனின் மனைவியை, அதாவது தோற்ற அரசியை,  துரியோதனன் தனது அந்தப்புரம் அனுப்பியிருக்கலாம்; அதுவென்ற அரசர்கள் வழமையில் செய்வது, பகைவன் பக்கத்தவள் என்று கருதி கொன்றிருக்காலம்; பெண்ணைக்கொல்வது கோளைத்தனம், விடுவித்து அவள் நாட்டுக்கு அனுப்பியிருக்கலாம். இதில் எதையும் துரியோதனன் செய்யவில்லை. தன் துஷ்டத்தனதை வெளிக்காட்டி துகிலுரிவித்தான்.

 

திரொவௌபதை கௌரவருக்கு,  அண்ணியும், கர்னனுக்கு தண்ணியும் முறையாவள். அவளின் மானதை கெடுத்தவர்கள் அதை காப்பாற்ற கடமை இருந்தவர்கள். அரசர்கள் நல்லாட்சி மூலம் பெண்களின் கற்பிற்கு மட்டும் அல்ல,  அந்த கற்பின் நற்பெயரை பாதுகாப்பதற்கும் கடமை இருந்தவர்கள். இளங்கோ சிலப்பதிகாரத்தில், செங்குட்டுவன் தமிழ்பெண்கள் மீது வீசபட்ட அவதூறை புலிகேசியை போரில் வெல்வதால் நீக்கிக் கொள்ளலாம். என்று எற்றுக்கொள்கிறார். இங்கே கற்புள்ள பெண்களின் பெயரை காக்க மன்னன் படை எடுத்து போனான். கற்பை அல்ல.

 

போரில் தோற்ற சூத்திரனுக்கும், போரில் தோற்ற சத்திரியனுக்கும், சிறை பிடிக்கப்பட்ட பிராமணனுக்கும் அவர்கள் தரத்திகேற்றபடிதான் துரியோதனன் தண்டித்திருக்கலாம்.

 

ஆனால் துரியோதனன் சபையில் நடந்து முற்றிலும் வேறாக இருந்தது.

 

நீதி வழங்க முதியோர், மந்திரிகள், பிரதானிகள், பண்டிதர்கள், பிராமணர்கள் நிறைந்த சபையில் திரொவௌபதை கூக்குரல் இட்டு கதறியபோது சும்மா வாளவிருந்தவர்கள் குற்றமற்றவர்களா இல்லையா என்பது வலம்புரியின் கேள்வி. இவர்கள் எதற்காக அரசபைக்கு தினமும் வருபவர்கள்? அங்கே நடப்பவற்றை வேடிக்கை பார்க்கவா, அல்லது செல்வம், அதிகாரம், பலம் என்பவற்றில் அமர்ந்திருக்கும் மன்னனை இடித்துரைத்து நற்பாதையில் நடக்க வைக்கவா என்பதுதான் வலம்புரியின் கேள்வி.

 

வென்றது ஒரு உயிரில்லாத பொருளாளக இருந்தால் வலம்புரியின் கேள்வி அல்ல, உங்களின் கேள்விதான் பலமானதாக இருக்கும். ஆனால் துரியோதனன் வென்றது வெறுமனே தருமன் விரும்பி வளர்த கிளியாக இருந்தாலும், அவன் தருமனின் மனம் துன்படட்டும் என்று கிளியின் இறக்கைகளை வெட்டிவிட்டு கொழுந்து விட்டு எரியும் தீயில் போட்டு வேகவைத்தால் பீஸ்மர் நீதியை எடுத்து சொல்லியிருக்கமாட்டாரா? கிளி இறக்கையில்லாமல் தீயில் கிடந்து துடித்ததை இளமையின் இரத்த மிடுக்கில் மதிமயங்கியிருந்த துஷ்டர்களுடன் தானும் சேர்ந்து பார்த்து ரசித்துச் சிரித்திருப்பரா.

 

துரியோதனன் தருமனை வென்ற பொது அதற்கு ஒரு சிவலிங்கத்தை பெற்றிருந்தால் அதை அரன்மனை நாய்  தினம் நனைக்க ஒரு கல்லாக மாற்ற பீஷ்மர் ஏற்றுகொண்டிருந்திருப்பாரா?

 

நிச்சயமாக இல்லை.

 

திரொவௌபதை எதிரிகளின் இணையாள். அவளை காப்பாற்றுவதை துரியோதனன் எந்த வகையிலும் விரும்பமாட்டான் என்றுதான் பிஷ்மர் நீதியை எடுத்துசொல்லாமல் இருந்தார் என்பது வலம்புரியின் வாதம்.

 

போரின் போது பீஷ்மர் கர்னனை இயன்றமட்டும் புண்படுத்தினார். அவருக்கு கர்னன் மீது துரியோதனனுக்கு இருந்த நட்பை பற்றி பற்றி நன்கு தெரியும். இருந்தாலும் அதை வேணுமென்றெதான் செய்தார். அப்போது துரியோதன் மீது பயமில்லாமல்த்தான் பீஷ்மர் நடந்தார். அதை பதவிப்போட்டி என்றுதான் எடுக்க வேண்டும்.

 

அதாவது பீஷ்மர் திரொவௌபதை துன்பட்ட போது தனது பதவியை பாதுகாப்பதற்காக துணிச்சலை வெளிக்காட்ட மறுத்தார். பின்னர் பதவி போட்டி வந்த போது துணிச்சலைக்காட்டினார். இதனால்தான் வலம்புரி பிஷ்மர் மரியாதைக்குரிய பிதாமகனார் இல்லை என்கிறார்.

 

மற்றது, பீஷ்மரின் பதவி அவருக்குப் பிறப்பால் வந்தது! அதற்காக அவர் மவுனம் காக்கத் தேவையிருக்கவில்லை!

துரியோதனின் அரண்மனையில் பிறப்பால் உரிமை உள்ள பாண்டவர்களுக்கு உரிய அரசின் பாகம் ஏற்கனவே மறுக்கப்பட்டது. பின்னர் அது தந்திர சூத்திரத்தினால், சூதால் கவரப்பட்டது. அந்த அரணமனையில் நடந்த நீதியீனங்களுக்கு பீஷ்மர் அடிபணிந்தார் என்பதுதான் வலம்புரியின் குற்றச்சாட்டு. அதாவது தருமனுக்கு நடந்தது தனக்கு நடக்கலாம் என்றுதான் பயந்தார்.

:D

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
திரொவௌபதை கௌரவருக்கு,  அண்ணியும், கர்னனுக்கு தண்ணியும் முறையாவள். அவளின் மானதை கெடுத்தவர்கள் அதை காப்பாற்ற கடமை இருந்தவர்கள். அரசர்கள் நல்லாட்சி மூலம் பெண்களின் கற்பிற்கு மட்டும் அல்ல,  அந்த கற்பின் நற்பெயரை பாதுகாப்பதற்கும் கடமை இருந்தவர்கள். இளங்கோ சிலப்பதிகாரத்தில், செங்குட்டுவன் தமிழ்பெண்கள் மீது வீசபட்ட அவதூறை புலிகேசியை போரில் வல்வதால் நீக்கி கொள்ளலாம். என்று எற்றுகொள்கிறார். இங்கே கற்புள்ள பெண்களின் பெயரை காக்க மன்னன் படை எடுத்து போனான். கற்பை அல்ல.

 

பொறுமையான பதிலுக்கு, நன்றிகள் மல்லை!

 

ஆனால் எனக்கு இன்னும் ஒரேயொரு கேள்வி உண்டு! ஒரு விவாதத்திற்காக!

 

திருதராஸ்டிரனுக்கு, முறையாக வரவேண்டிய அரசுரிமை, அவன் குருடன் என்பதற்காகத் தான் பாண்டுவுக்குப் போனது!

 

பாண்டு, உண்மையில் ஒரு உரிமையுள்ள வாரிசு அல்ல!

 

திருதராட்டினன் குருடன் என்பதனால் அவனால் அரசாள முடியாது, என்பதனால் மட்டுமே அவனுக்கு அரசுரிமை மறுக்கப் பட்டது!

 

ஆனால், துரியோதனன், திருதராட்டினனின் மகன்! அவனுக்குத் தானே, முறைப்படி அரசுரிமை போக வேண்டும்!

 

பாண்டு, ஒரு காபந்து அரசனாக மட்டுமே இருக்க முடியும். பாண்டுவின் பின்பு, துரியோதனனிடம் ஆட்சியைத் திரும்பக் கொடுப்பது தானே முறை!

 

துரகுபதி, கவுரவருக்கு அண்ணியும், கர்ணனுக்கு தண்ணியும்

 

உங்கள் தமிழ் பிடித்திருக்கின்றது! :D

Link to comment
Share on other sites

சில விவாதப் பொருள்களை நாம் விரும்பியோ விரும்பாமலோ வியாசரின், வில்லிபுத்தூரரின் கதைகளில் இருந்துதான் பெற முடியும். எனவே அந்த ஆசிரியர்கள் வழங்கிய தீர்ப்பான  தர்மனுக்கு இராச்சியத்தில் பங்கு இருந்தது என்பது ஏற்கப்படவேண்டியது.  அதையும்விட விதுரர் போன்றொரின் கருத்து வெல்ல, முடியாத போரை தவிர்க்க துரியோதனன் பாண்டவருக்கு பங்கு கொடுக்க வேண்டும் என்பதாகும். பாண்டவர் மிரட்ட மிரண்ட பேடிதான் துரியோதனன் என்று இதில் அவனுக்கு அவமானம் ஏற்பட சந்தர்ப்பம் இருக்கவில்லை. கோபம் இருந்தாலும் உறவுகளுடன் பங்கை பிரித்திருக்கலாம். தேரோட்டி பிள்ளைக்கு அரசில் பாகம் குடுத்த துரியோதனன் தனது அண்ணனுக்கு பங்கு இல்லை என்று விவாதிக்க முடியாது.

 

அரச உரிமை தீர்மானிக்கப்படும் விதிகளுக்கும், முதுசொமோ அல்லது பெண்ணுரிமையோ தீர்மானிக்கப்படும் விதிகளுக்கும் வேறுபாடு உணடு.  அரசு என்பது மக்களை பாதுகாக்கும் கடமை. அது எப்போதுமே நம்பிக்கைப் பெறுப்பாகத்தான் அரசனிடன் வந்து சேர்கிறது. துரியோதனினதும், அரச சபையினதும் முடிவு மக்களின் நன்மை சார்ந்ததாகவே இருக்க வேண்டும். எல்லாளன் தயாராக வந்திருந்த துட்டகைமுணுவுடன், தான் கிழவனாக இருந்த போதும்,தனி போருக்கு ஒத்து போனதின் நோக்கம், முடிவு தெரியாத போரில் தனது மக்களை பலிகொடுத்து தான் ஆட்சியை தக்கவைக்கும் நப்பாசையை தவிர்க்கவே. 

 

பாண்டு அரசை அடைவு வைத்த பொருளை நெல்லுப்பானைக்கு அடியில் போட்டு வைத்திருந்து விட்டு பணம் திரும்ப வந்த போது அதை எடுத்துக் கொடுக்க முன் வரவில்லை. தன் ராசியத்தை கருணையாக ஆண்டான். வெற்றி வீரனாக திகழ்ந்து பிறர் ராச்சியங்களை பிடித்து தனதாக்கினான். இதனால் உரிமை இருந்திருந்தலும், திருதுராட்டிரன் பக்கம், தாம் கொடுத்ததிற்கு மேலே பெற உரிமை இல்லாதவர்கள். பாண்டு தான் பெற்ற அஸ்த்தினாபுரியை விட தான் பிடித்த மற்றைய நாடுகள் எல்லாவற்றையும் தனது பிள்ளைகளான பாண்டவருக்கே கொடுத்திருப்பான்.

 

பாண்டுவுக்கு அரசு கிடைத்த போது திருதுராட்டிரன் அரசை இழந்தான் என்று பாரத கதையில் வரவில்லை. ஆனால் அப்படி இழப்பு புதுமை அல்ல. காந்தாரி, குந்திக்கு பிள்ளை  பிறந்துவிட்டது என்றுதான் தன் வயிற்றில் அடித்தாள். அதாவது தனது குடும்பத்திற்கு திரும்பி வந்திருக்க கூடிய அரசுரிமை தருமன் எல்லோருக்கும் மூத்தவன் என்பதால் அவனுக்குதான் போக போகிறது என்றுதான் கவலைப்பட்டாள். அவள் தனது வயிற்றில் அடித்து அரசுரிமை இல்லாமல் பிறக்க இருந்த பிள்ளையை கொலை செய்ய முயற்சித்தாள். இதனால் இரத்தத்திலிருந்து பிறந்த நூற்றுவரும் கேணைகள். (கதைக்கு வெளியே: காந்தாரியின் கருச்சிதைவு அவளை நிரந்தர மலடியாகிய பின்னர் திருதுராட்டிரனுக்கு பிறந்த நூற்றுவரும், பரதையர், பணிப்பெண், பாங்கிகள் பிள்ளைகளே-அரச இலட்சணங்களை வெளிக்காட்டாதவர்கள்),  

 

பாண்டு தொடர்ந்து உயிரோடு இருந்திருந்தால் தருமன் இரச்சியத்தை நேராக பெற்றிருப்பான்.  பாண்டு திக்விஜயம் முடித்து நாடுகளை வென்று அரண்மனை திரும்பிய பின்னர் அமைதி இல்லாமல் இருந்தான். எத்தனை மாமன்னர்களை அவன் போரில் தன் காலில் விழுத்தி அடிமைபடுத்தி தன் ஆண்மையை அனுபவித்தாலும், தன் ஆசை மனைவிகளில் யாரையும் காதலுடன் கையால் தொடக்கூட முடியாதவனாக இருந்தான். இதனால் திக்விஜயவெற்றி அவனுக்கு இன்பம் தந்ததிலும் பார்க்க தந்த துன்பம்தான் அதிகம். இதானல் மாதிரியுடன் பொழுதை இலகுவாக கழிக்க வனத்துக்கு போனான். இதனால் தருமன் தான் நேராக தந்தையிடம் பெற்றிருந்திருக்க கூடிய இராச்சியத்தை இழந்தான்.

 

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.