-
Tell a friend
-
Topics
-
0
By புரட்சிகர தமிழ்தேசியன்
தொடங்கப்பட்டது -
1
By பிழம்பு
தொடங்கப்பட்டது
-
-
Posts
-
By புரட்சிகர தமிழ்தேசியன் · பதியப்பட்டது
அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு அடிபணியாது இலங்கை - அரசு ஆணித்தரம்.! ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்காவின் புதிய நிர்வாகத்தின் அழுத்தங்களுக்கு இலங்கை ஒருபோதும் அடிபணியமாட்டாது. ஜோ பைடன், தமது நாட்டில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் முதலில் கவனம் செலுத்த வேண்டும். அதைவிடுத்து பிற நாட்டு விடயங்களில் அவர் தலையிடக்கூடாது." - இவ்வாறு அமைச்சரவைப் பேச்சாளரும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். 'இலங்கையில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதா என ஆராய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நியமித்துள்ள புதிய ஆணைக்குழுவால் அனைத்தும் முறையாக நடந்துவிடப்போவதில்லை. அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி ஜோ பைடன் தலைமையிலான நிர்வாகமும் மனித உரிமை விவகாரங்களில் இலங்கைக்குத் தொடர்ந்தும் அழுத்தங்களை வழங்கும். ஆட்சி மாறினாலும் அமெரிக்காவின் கொள்கைத்திட்டத்தில் மாற்றம் ஏற்படாது' என்று இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார். இது தொடர்பில் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- "இலங்கையில் தற்போதைய ஆட்சியில் மனித உரிமைகள் பேணிப் பாதுகாக்கப்படுகின்றன. கடந்த காலங்களில் மனித உரிமை மீறல்கள் மீறப்பட்டுள்ளன என்று ஜனாதிபதி நியமித்துள்ள புதிய ஆணைக்குழு ஆராய்ந்து நிரூபித்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை இந்த அரசு வழங்கியே தீரும். இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. இலங்கையின் உள்விவகாரங்களில் அமெரிக்காவோ அல்லது வேறெந்த நாடுகளோ தலையிட முடியாது. அமெரிக்காவின் எல்லை மீறிய நடவடிக்கைகளால்தான் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை நெருக்குவாரங்களைச் சந்திக்க வேண்டி வந்தது. இம்முறையும் அமெரிக்காவின் நட்பு நாடுகள் இலங்கை மீது மேலும் நெருக்குவாரங்களைப் பிரயோகிக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. எனினும், இலங்கையின் நட்பு நாடுகள் இதனை எதிர்க்கும். இலங்கையும் தமது நிலைப்பாட்டை ஜெனிவாக் கூட்ட அமர்வில் தெளிவாக எடுத்துரைக்கும்" - என்றார். http://aruvi.com/article/tam/2021/01/28/22032/ -
By Robinson cruso · Posted
அண்ணே இதெல்லாம் அரசியல். நீங்கள் வேணுமெண்டால் இன்னும் நூறு படங்களை போடுங்கள். அவர்களுக்கும் தெரியும் ஒன்றும் நடக்காதென்று. -
By புரட்சிகர தமிழ்தேசியன் · பதியப்பட்டது
மூன்று இலட்சம் தடுப்பூசிகளை இலங்கைக்கு வழங்குமாம் சீனா - தூதரகம் அறிவிப்பு.! இலங்கைக்கு கொரோனா வைரஸுக்கு எதிரான 3 இலட்சம் தடுப்பூசிகளை வழங்க சீனா முன்வந்துள்ளது. சீனாவின் சினோபார்ம் நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசிகளே, இலங்கைக்கு வழங்கப்படவுள்ளன என்று சீனத் தூதரகம் அறிவித்துள்ளது. எதிர்வரும் பெப்ரவரி மாதம் நடுப்பகுதியளவில் சீனாவின் தடுப்பூசிகள் இலங்கைக்கு வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையுடன் நீண்ட கால நற்புறவைப் பேணி வரும் சீனா, கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்திலும் இலங்கைக்கு ஒத்துழைக்கவுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி மாதத்தில் 20 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் உலக நாடுகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://aruvi.com/article/tam/2021/01/28/22034/ -
By Robinson cruso · Posted
என்னத்தை சொன்னாலும் பிள்ளையான் முதலமைச்சராக இருந்த காலத்தில் தமிழ் மக்களுக்கு செய்த சேவையை மறக்க முடியாது. அந்த காலத்தில் அது கிழக்கு தமிழர்களுக்கு ஓரளவாவது வாழக்கையை கொண்டு செல்லக்கூடியதாக இருந்தது. படித்தவர்கள் , புத்திசாலிகள் எண்டு மார் தட்டிக்கொண்டு வீணுக்கு தீர்மானங்களை நிறைவேற்றுபவர்களுடன் ஒப்பிடும்போது , பிள்ளையான் படிக்காத மேதையாக சேவை செய்ததை பாராட்ட வேண்டும். எந்த ஒரு நாணயத்துக்கும் இரு பக்கம் இருப்பதுபோல இங்கும் இருக்கத்தான் செய்யும். எந்த அரசியல்வாதி அதிகாரத்தில் இருக்கும்போது கொள்ளையடிக்காமல் இருந்திருக்கிறார்கள். அப்படி பார்க்கும்போது பார்க்கும்போது பிள்ளையான் கொள்ளையடித்தது பெரிய காரியம் இல்லை. அதற்ககாக பிள்ளையானின் இப்படியான செயல்களை ஆதரிக்க முடியாது.
-
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.