Jump to content

பங்கு பிரிப்பும் படுகொலையும் இறுதிப்பாகம்.

Recommended Posts

பங்கு பிரிப்பும் படுகொலையும் இறுதிப்பாகம்.

கடந்த
பகுதியில் பரிதிக்கும்  தலைமைச் செயலக  தமிழரசனிற்கும் நடந்த பேச்சு
வார்த்தைகளின் பின்னர்  தலைமைச் செயலக்தினருடனான இணைவிற்கு  பரிதி
ஒத்துக்கொண்டு அறிக்கை  வெளியிடுவதற்கு  முன்னராக  அதனைத் தடுத்து
நிறுத்துவதற்காக   லண்டன்  தனத்திடம் இருந்தும்  சுவிஸ் ரகுபதியியாலும்  
கொடுக்கப் பட்ட அழுத்தத்தை தொடர்ந்து  ஜெர்மனியில் இருந்த இரும்பொறை
பிரான்சிற்கு  விரைந்து வந்ததும்  பரிதி சுட்டுக் கொல்லப் பட்டார் என்பதை
பார்த்தோம். பரிதி சுட்டுக் கொல்லப் பட்ட சில நிமிடங்களிலேயே அனைத்துலக
செயலகம் சார்ந்த  இணையத் தளங்கள்  இந்தக் கொலையை  தலைமைச் செயலகத்தை
சேர்ந்தவர்களே செய்ததாக ஒரு தோற்றப் பாட்டை ஏற்படும் கடும் முயற்சியில்
இறங்கியிருந்தார்கள். அதற்காக அவர்கள் அவிழ்த்த பொய் செய்திகள்தான் 
பாரிசில் வினாயகம்  சுற்றி வழைத்து கைது. தமிழரன். கைது. கனி என்பவர்
என்கிற  பரபரப்பு செய்திகள். இவை எல்லாவற்றையும் விட  அதிர்வு என்கிற
அனைத்துலகத்தின்  அம்மம்மா குழல்(ஊதுகுழல் )இணையம் வெளியிட்ட செய்தியை
பார்த்து  விழுந்து  விழுந்து சிரிப்பதா  அல்லது  கோவி  கோவி அழுவதா
என்றே தெரியாதிருந்தது.

காரணம் அவர்களது செய்தியில் 
வினாயfம் சுற்றி வழைத்து கைது  என்பதோடு செய்தியை உறுதிசெய்வதானால் 
பிரெஞ்சு புலனாய்வு த் துறையோடு தொர்பு கொள்ளவும் என்று  077 என்று
தொடங்கும் ஒரு இலக்கத்தையும் எழுதியிருந்தார்கள்.   அதை படிப்பவர்கள்
பாவம் பிரெஞ்சு  புலனாய்வுத் துறை  அவர்களிற்கு  சாதாரண தொலைபேசி இணைப்பே
இல்லை  கைத்தொலைபேசி   தான் பாவிக்கிறாங்கள் என்று நினைத்து விட்டு அந்த 
இலக்கத்திற்கு போனடித்திருந்தால் இந்த இணைப்பு பாவனையில் இல்லையென்று 
சொல்லியிருக்கும். அட பாவமே  பிரெஞ்சு புலனாய்வு துறையிடம் பணம்
இல்லாததால்  தொலைபேசி கட்டணத்தை கட்டவில்லையென்று நினைத்திருப்பார்கள்.

அவர்களின் இந்த திட்டமும் பிசுபிசுத்து போக  அனைத்துலகச் செயலகத்தின் அடுத்த திட்டம்தான்  மீள இணையும் புலிகள் என்கிற ஒரு காணொளி.

இந்தக்
காணொளியானது இறுதிக் கட்ட யுத்தத்தில்  நாட்டை விட்டு விட்டு வெளியேறி 
அவுஸ்ரேலியா போவதற்காக இந்தோனோசியாவில்  தங்கி நிற்கும் புலிகள் அமைப்பை
சேர்ந்தவர்களால் தயாரிக்கபட்டிருந்தது. இவர்களிற்கு அனைத்துலகச் செயலகமே
பணஉதவி செய்துவிட்டு அப்படியொரு காணொளியினை தயாரித்து அனுப்புமாறு
கோரியிருந்தனர்.  காணொளியினை பார்ப்பவர்களிற்கு  அதனை தயாரித்ததன்
நோக்கம் புரியும்.

http://youtu.be/5tzmQA5THo8

ஆனால் 
பரிதியின் கெலையை பிரெஞ்சு காவல்த்துறை  ஆரம்பத்தில் மூன்று கோணங்களில்
விசாரிக்க ஆரம்பித்திருந்தனர். அவை. 1) இலங்கை புலனாய்வுத் துறை.  2) உள்
வீட்டு மோதல்கள் அதில் தலைமைச் செயலகம்.  அல்லது
அனைத்துலக்கத்திற்கிடையேயான  குழு மோதல்.  விசாரணைகளின் ஆரம்பத்திலேயே  
கொலை சம்பந்தமாக   பரிதியுடன் நெருக்கமாக  இருந்த பாம்புக் குழுவை
சேர்ந்த  இருவர்  கைதானதும் தலைமைச் செயலகத்திற்கும் கொலைக்கும் எவ்வித
தொடர்பும் இல்லையென்று உறுதியாகிவிட்ட நிலையில்தான்  அடுத்ததாக அவர்களத
விசாரணை  இலங்கை புலனாய்வு பிரிவா அல்லது அனைத்துலகத்தின்  உள்வீட்டு
மோதலா? என்கிற கோணத்தில் விசாரணைகள் போய்க்கொண்டிருந்தது. 
அப்பொழுதான்  பிரான்சின் முன்னணி பத்திரிகைகளில் ஒன்றான Le
Parisienபத்திரிகையில் இலங்கையரசே  பரிதியின் கொலைக்கு பின்னால் 
இருப்பதாக ஒரு செய்தி வெளியாகியிருந்தது.

ஆனால்
இது போன்ற  அரசியல் கொலை பற்றிய செய்திகளில் தகவல் அடிப்படையாக  ஒரு
விசாரணை  அதிகாரியை மேற்கோள் காட்டியோ அல்லது உள்துறை அமைச்சர் அல்லது
அதன் குரல் தரவல்ல அதிகாரிகளை  மேற்காட்டியே செய்தி வெளியாவது  வழைமை. அதன்
அண்மைய ஊதாரணம்  பாரிசில் படுகொலை செய்யப் பட்ட மூன்று குர்திஸ்தான்
போராளிகள் பற்றிய செய்திகளை பிரெஞ்சு பத்திரிகைகள் வெளியிட்ட விதத்தினை
படித்திருந்தவர்களிற்கு புரிந்திருக்கும். ஆனால் பரிதி பற்றி Le
Parisienபத்திரிகையில் ஒரு மொட்டை செய்தியாகவே வெளிவந்திருந்தது.
அதையெல்லாம் விட்டுவிடலாம்.  இந்தக் கொலையை இலங்கை  அரசே செய்தது என
வைத்துக் கொள்வோம்.  அரசியல் கொலைகளை  கன கச்சிதமாக உளவுப் பிரிவுகள்
மூலம் மேற்குலக நாடுகளும். இரஸ்யாவும்.  இஸ்ரவேலுமே இதுவரை செய்து
முடித்திருக்கிறார்கள். அதற்காக அவர்கள் தங்கள் அனைத்து வளங்களையும்
பாவித்திருப்பதோடு கொலை நடந்து பல வருடங்களின் பின்னர் அதனோடு சம்பந்தப்
பட்டதொருவர்  ஓய்வு பெற்ற காலத்தில் ஒரு புத்தகத்தை எழுதினாலோ அல்லது
ஏதாவது ஒரு பத்திரிகையாளர் பல வருடங்களாக  நோண்டி விடயத்தை வெளியே கொண்டு
வந்தால்தான் வெளி வரும். ஆனால் அந்த உண்மைகள் வெளிவரும் போது அந்த விடயமே
மறந்து போய்விட்டிருப்பதோடு  அதை வைத்து எந்த நியாயமும் கிடைத்ததும்
இல்லை.இவங்கை போன்ற சிறிய நாடுகள் மேற்குலக நாடுகளிற்குள் புகுந்து
அரசியல் கொலைகளை செய்வதற்கு துணிய மாட்டாது காரணம் கொலையை இலங்கையரசுதான்
செய்ததென்று நேரடியாக உறுதிப் படுத்தப் பட்டால் பிரான்ஸ் போன்ற  பலமான
நாடுகளிற்கு  தங்கள் நாட்டின் பாதுகாப்பு பிரச்சனையாகி  கெளரவ பிரச்சனையாகி
அது இலங்கை மீதான அழுத்தத்தை கொடுக்கும் என்று தெரியாத அளவிற்கு 
இலங்கையரசு முட்டாள் அல்ல .

அதுவும்  Le
Parisienபத்திரிகையில் வெளி வந்தது போல் இலங்கையரசின் தூதரகம் நேரடியாக
சம்பத்தப் பட்டிருக்காது. இலங்கைத் தூதரகத்திற்கே தெரியாமல் இலங்கை
புலனாய்வுத்துறை  வேறு தரகர்கள் ஊடாக கூலிக் கொலையாளர்களை வைத்து
நடத்தியிருக்கும். அப்படியே  தரகர்கள் ஊடாக கூலிக்கு ஆளை வைத்து  பரிதியை
கொலை செய்திருந்திருந்து பிரெஞ்சு புலனாய்வுத் துறை அதை
கண்டுபிடித்திருந்தாலும்  பிரெஞ்சு அரசு  தமிழர்களிற்கு அநீதி நடந்து
விட்டது என்று இலங்கை யரசை குற்றம் சாட்டவோ ஜ.நா சபையில் இலங்கைக்கெதிராக
தீர்மானமோ. அல்லது தமிழீழத்தை வாங்கித் தரப் போவது கிடையாது. பிரான்ஸ்
தன்னுடைய நலனிற்கு தேவையான ஏதோ ஒன்று இலங்கையிடமிருந்து  பெறமுடியுமானால் 
இலங்கையரசுடன் பேரம் பேசி இலங்கையை அடிபணியவைத்து தன்னுடைய தேவையை 
தீர்துக்கொள்ளும். அதே நேரம் பரிதி கொலைக்காக  நீதி கேட்டு கூட்டம்
போட்டாலென்ன  பாரிசில் இருந்து  ஜ.நா சபைவரை பிரதட்டை  தூக்கு  காவடி 
என்று எடுத்தால் கூட ஒன்றும் நடக்கப்போவதில்லை.காரணம் பரிதி பரிதி
பிரான்சில் தடைசெய்யப் பட்டதொரு அமைப்பின் பிரதிநிதி என்பதோடு  பிரெஞ்சு
காவல்த்துறையின் கண்காணிப்பில் இருக்கின்ற ஒரு முன்னை நாள் கைதி.

ஆனால்
தற்சமயம் பரிதியின் கொலை விசாரணை உள்வீட்டு விவகாரம் என்கிற கோணத்திலேயே
தான் போய்க்கொண்டிருக்கின்றது. கைதானவர்கள் பரிதியோடு நெருக்கமாக
இருந்த ஒரு வன்முறைக் குழுவினர். பரிதி தலைமைச் செயலகத்துடன் இணைவதை
விரும்பாத சுவிஸ் ரகுபதியும். லண்டன் தனமும் கொடுத்த அழுத்தத்தினால் 
இரும்பொறையே  பாம்பு குழுவிடம் பரிதியை  போடச் சொல்லியிருக்கலாம்.
இப்படி நடந்ததை பிரெஞ்சு காவல்த்துறை உறுதி செய்தாலும்  செய்ததும் தமிழன்
செத்ததும் தமிழன் . எனவே கணக்கு தீர்த்தல் என்கிற  வகையில் இந்த கொலையை
அடக்கி கைது செய்யப் பட்டவர்கள் விசாரணை கைதிகள் என்கிற பெயரிலேயே  ஆறு
அல்லது ஏழு வருடங்கள் கழித்து எச்சரித்து விடுவித்து விடுவார்கள்.  அவர்கள்
விடுவிக்கப்பட்ட செய்தி எந்த ஊடகத்திலும் வராது. ஆனால் உண்மையில்  என்ன
நடந்தது என்பதனை  ஊடுருவி தேடல்கள் நடத்தி கண்டு பிடித்து கொலையை வெளியே
கொண்டு வரும் அளவிற்கு எம்மவரின் எந்த ஊடகமோ  ஊடகர்களோ இல்லை.  எங்களை
நாங்களே மகிழ்ச்சிப் படுத்த  எழுதும் ஊடகங்களும்   தலைப்பை மட்டும் மாற்றி
விட்டு வெட்டி ஒட்டும் ஊடகங்கள் மட்டுமே எம்மிடம் உள்ளது.எனவே பரிதியின்
கெலை என்பது  இன்னும் சில காலங்களில் மறக்கப்பட்டதொன்றாகவே மாறிவிடும்.

இது
இப்படியிருக்க  அனைத்துலகச் செயலகம் அடுத்த கட்ட ஆயுதப் போரை நடத்தப்
போவதாக கூறியிருப்பது தெய்வீகன் என்கிற  நபரை வைத்துத்தான்.தெய்வீகன்
என்பவர் யாரென்று சுருக்கமாக பார்த்து விடலாம். இவர் புலிகள் அமைப்பில் ஒரு
இளநிலை போராளி விமான ஓட்டியாக பயிற்சி பெறுவதற்காக புலிகள் அமைப்பினால் 
கிழக்கு ஜரோப்பிய  நாடொன்றிற்கு அனுப்பி விமான ஓட்டிக்கான கல்வியும் 
பயிற்சியும் பொற்றவர்  அதில் தேர்ச்சி பெறாததால்  திரும்பவும் வன்னிக்கு
அழைத்து  புலிகளின் உள்ளக புலனாய்வு பிரிவில் இணைக்கப் பட்டிருந்தார்.
இறுதிகட்ட யுத்தத்தில் இவரே வழங்கலிற்கும் பொறுப்பாக இருந்தவர். புலிகள்
அமைப்பின் இறுதி முயற்சியான ஆனந்த புரம் ஊடறுப்பு சமர் நடந்தவேளை  அதற்கு 
தலைவர் பிரபாகரனே  நேடியாக நின்று கட்டளைகளை வழங்கியிருந்ததும் அது
தோல்வியில் முடிந்து  புலிகள் அமைப்பின் முன்னணி தளபதிகளும் ஆயிரக்கணக்கான
போராளிகளும் பலியானதோடு தலைவர் பிரபாரன்  உயிர் தப்பியிருந்தார். அந்த
சண்டைக்காக மேலதிக ஆயுத மற்றும் காயமடைந்தவர்களிற்கான  அவசர மருத்துவ
உபகரணங்களை வழங்குமாறு களத்தில் நின்றிருந்த தளபதிகள்  தெய்வீகனை தொடர்பு
கொள்ள முற்பட்ட வேளை  தனது தொடர்புகள் அனைத்தையும் துண்டித்து விட்டு
காணாமல் போயிருந்தவர். மீண்டும் 2010 ம் ஆண்டு தை மாதமளவில்  இந்தியாவில்
மதுரையில் நடமாடத் தொடங்கியிருந்தார்.

 அவரோடு வெளியக
புலனாய்வுத் துறையின் புகழேந்தி  மற்றும் தென்னவன் அல்லது கரிகாலனும்
மதுரையில் தங்கியிருந்து புலிகளின் அனைத்துலக செயலகத்தின் வெளிநாட்டு
கிளைகளோடு தொர்புகளை ஏற்படுத்தி தாங்கள் இன்னமும்  பலநூறு  போராளிகளுடன்
வன்னி காடுகளிற்குள்ளேயே நிற்பதாகவும் மறு பக்கம் கிழக்கு மாகாண
காட்டிற்குள்  ராமும் தங்களோடு தொடர்பில் இருப்பதாகவும்  ராமின் 
தலைமையில் அடுத்த கட்ட தாக்குதல்களை நடத்துவதற்காக  தங்களிற்கு ஆயுதங்களை
பெறுவதற்காகவும்  அத்தியாவசிய தேவைகளிற்காவும் நிதி உதவி
கோரியிருந்தார்கள்.  அதை நம்பி அனைத்துலக செயலகமும் பணம்
அனுப்பியிருந்தார்கள்.

அன்றைய காலகட்டத்தில் தென்னவன்
என்கிற கரிகாலனும் என்னுடன் தொர்புகளை ஏற்படுத்தி கதைத்திருந்தார். பணத்தை
அனுப்பிவிட்டிருந்த அனைத்துலகச் செயலகத்தினர் தாக்குதல் எதுவும்
நடக்காததால் ஏமாற்றமடைந்து  ராமோடு தொடர்புகளை ஏற்படுத்தி ஏதாவது
தாக்குதல் செய்தால் தான்  இங்குள்ள மக்கள் நம்புவார்கள்  அப்பொழுதான் பணம்
சேகரித்து அனுப்பலாம் ஏதாவது தாக்குதலை  செய்யும்படி கேட்டிருந்தனர்.
ஆனால் இது வரை காலமும் தலைவரின் கட்டளைக்கிணங்கவே  தான்  தாக்குதல்களை
நடத்தியதாகவும்  வெளிநாட்டிலிருந்து  வரும் கட்டளைகளிற்கிணங்க தன்னால்
இயங்க முடியாது  தலைவரின் கட்டளை  வராமல்  தன்னால் எதையும் செய்ய
முடியாதென  ராம் எவ்வித தாக்குதலையும் செய்ய மறுத்து  தெய்வீகனின்
தொடர்பும் தனக்கு இல்லையென்று அவர்களிற்கு சொல்லிவிட்டிருந்தான். பின்னர்
ராமிற்கும் எனக்கும் நடந்த உரையாடல்களின்போது அதை தெரித்திருந்தான்.
அன்றை கால கட்டத்தில் தான் இலங்கை வான்படையின் உலங்கு வானுர்தியொன்று
காலநிலை காரணமாக  கட்டுப் பகுதியில் விபத்திற்குள்ளாக அதனை ராமின்
தாக்குதலிற்குள்ளானதாக  வெளிநாடுகளில் பிரச்சாரம் செய்யவும் அனைத்துலகம்
முயன்றிருந்தது.

பின்னர் சில காலங்கள் தெய்வீகனின்
தொடர்பு அறுந்து பேயிருந்ததோடு தென்னவன் (கரிகாலன் )பிரான்ஸ் வந்து
சேர்ந்ததும் மீண்டும் அனைத்துலக செயலகம் மற்றும் பழைய வெளிநாட்டு
கட்டமைப்பை சேர்ந்தவர்களோடு தொடர்புகளை ஏற்படுத்துகிறார். அப்பொழுது
மீண்டும் என்னுடன்  ஒரு தொடர்பையும் ஏற்படுத்தியிருந்தார். இவர்தான் 
தற்சமயம் அனைத்துலக செயலகத்தோடு சேர்ந்து நின்று  தெய்வீகனால் அடுத்த கட்ட
ஆயுத போரை வழிநடத்த முடியும் என்று  அவர்களையும் நம்பவைத்து 
தெய்வீகனோடு தொடர்புகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளார். ஆயுதப் போர்
நடக்கிதா இல்லையா அனைத்துலகம் மக்களையும்... தெய்வீகன் அனைத்துலகத்தையும்
ஏமாற்றுகிறாரா என்பதையெல்லாம் விட்டு விட்டு பார்த்தால். இறுதியாக  மாவீரர்
தினத்தின் போது யாழ் பல்கலைக்கழகத்து  பிரச்சனைகளின் பின்னால் யாழில் பல
மாணவர்கள் கைதுசெய்யப்பட்டனர்  . பின்னர் அதன் தொடர்ச்சியாக தமிழ்
நாட்டிலும் சில கைதுகள்  நடந்து செய்திகளில் வெளிவந்தவைதான்.  ஆனால் அதன்
பின்னால் இருந்த தெய்வீகனும் புகழேந்தியும் தமிழ் நாட்டில் மதுரையில்
சுதந்திரமாகத்தான் நடமாடுகின்றார்கள்.  அதாவது  இந்தியாவின்  இலங்கை மீதான
அடுத்த  கட்ட மேலாதிக்க நடவடிக்கைகளிற்கு தொடர்ந்தும் பலியாக போவது
நாங்களா??   அதற்கு அனுசரணை  புலிகளின் வெளிநாட்டு கிளைகளான அனைத்துலக
செயலகமா??   இது கேள்வி மட்டும் தான்  பதில் எனக்கும் தெரியாது  காலம்தான்
பதில் சொல்லும். 

இறுதியாக ஒரு வியடம்  அனைத்துலகச்
செயலக்த்தின்  டென்மார்க் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவானது  பிரியனின்
தலைமையில் அண்மைக்காலமாக  டக்லஸ் தேவானந்தாவின் ஈ.பி.டி.பி கட்சி ஊடாக
தாயகத்தில் மக்களிற்கான உதவிகளை செய்து வருகிறார்கள். அதே போல சுவிஸ்
இளையோர் அமைப்பும்  தமிழர் ஒருங்கிணைப்பக் குழுவும் தங்கள் பிரதிநிதிகளை 
கிழக்கு மாகாணத்திற்கு அனுப்பி கிழக்கு மக்களிற்கு உதவுகின்றனர்.இந்த
மாற்றம் வரவேற்கப்படவேண்டிய விடயம்.  இவர்களை முன் மாதிரியாக எடுத்து
மற்றைய நாடுகளில் உள்ள தமிழர் ஒருங்கிணைப்பு குழுக்களும் வீணே  ஊருக்கு
போகின்றவன் உதவி செய்பவன் எல்லோரையும் துரோகி என்றும் அடுத்த கட்ட
ஆயுதப்போர் என்று கதைவிட்டு காலத்தை கடத்தாமல்   தாயகத்து மக்ககளிற்கான 
உதவிகளை செய்து அவர்களது வாழ்வாதாரத்தை உயர்த்திவிடுவதே இனிவரும்
காலங்களில் செய்யக்கூடியதொன்றாகும்.செய்வார்களா????

கரிகாலன்(பிரான்ஸ்),
குட்டி(டென்மார்க்) பிரியன்,(டென்மார்க்) தனம் (இலண்டன்),
சிறீறவி'ஜெர்மனி) , அதிர்வு கண்ணன்(இலண்டன்)  பெஞ்சமின்(நோர்வே)
அம்புறுஸ்(இத்தாலி..தற்சமயம் பிரான்ஸ்) ஆகியோரது பங்கு பிரிப்புக்கள்
பற்றி இன்னொரு கட்டுரையில் தனியாக பார்க்கலாம்.  அதுவரை நன்றி வணக்கம்.

Edited by sathiri
 • Like 2
Link to post
Share on other sites

இறுதியாக ஒரு வியடம்  அனைத்துலகச்

செயலக்த்தின்  டென்மார்க் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவானது  பிரியனின்

தலைமையில் அண்மைக்காலமாக  டக்லஸ் தேவானந்தாவின் ஈ.பி.டி.பி கட்சி ஊடாக

தாயகத்தில் மக்களிற்கான உதவிகளை செய்து வருகிறார்கள். அதே போல சுவிஸ்

இளையோர் அமைப்பும்  தமிழர் ஒருங்கிணைப்பக் குழுவும் தங்கள் பிரதிநிதிகளை 

கிழக்கு மாகாணத்திற்கு அனுப்பி கிழக்கு மக்களிற்கு உதவுகின்றனர்.இந்த

மாற்றம் வரவேற்கப்படவேண்டிய விடயம்.  இவர்களை முன் மாதிரியாக எடுத்து

மற்றைய நாடுகளில் உள்ள தமிழர் ஒருங்கிணைப்பு குழுக்களும் வீணே  ஊருக்கு

போகின்றவன் உதவி செய்பவன் எல்லோரையும் துரோகி என்றும் அடுத்த கட்ட

ஆயுதப்போர் என்று கதைவிட்டு காலத்தை கடத்தாமல்   தாயகத்து மக்ககளிற்கான 

உதவிகளை செய்து அவர்களது வாழ்வாதாரத்தை உயர்த்திவிடுவதே இனிவரும்

காலங்களில் செய்யக்கூடியதொன்றாகும்.செய்வார்களா????

 • Like 1
Link to post
Share on other sites

சிலர் நான் இணைத்த காணொளியை பாரக்க முடியவில்லையென  மின்னஞ்சலில்  அறிவித்திருக்கிறார்கள்.  திருத்தியுள்ளேன்.  அதனை பாரக்க முடியாவிட்டால் அறியத் தரவும் நன்றி

Link to post
Share on other sites

இந்தக் காணோளியில் நிற்பவர்கள் ஏன் முகத்தைத் துணியால் கட்டியிருக்கிறார்கள், இவ்வளவு துணிவாக முள்ளிவாய்க்காலுக்குப் போனவர்கள்?? 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இந்த இறுதிப்பாகத்தில் கட்டுரையின் ஆசிரியரிடம் சில கேள்விகள் .பருதியின் நிர்வாகத்தின் கீழ் செயல் பட்ட தாங்கள் ,மேத்தா ,வேதா இவர்களின் கீழ் விசுவாசமாய் செயல்பட்ட தாங்கள் .இவர்களின் கைதுகளின் பின் விளையாட்டுத்துறையை பொறுப்பேற்ற தாங்கள்.அவர்கள் பங்கு பிரிக்கிறார்கள் என்று சொன்ன தாங்கள். அவர்களின் கைதுக்குப்பின் அந்த கணக்குகளை சரிவர காட்டியுள்ளீர்களா ? ஆனால் அந்த கழகங்களின் சம்மேளத்தின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் கூட்டிக்கொண்டு வந்த அந்த புண்ணியவானையும் விட்டுவிட்டு எஸ்கேப்பாகியவர் என்று எமது புலனாய்வு அன்று சொன்னது .அதன் பின் விநாயகமே[இது கடவுளல்ல ] வினை தீர்ப்பவனே என்று தஞ்சமானீர்கள் . ஆனால் தேவானந்த சாமிகளின் தாண்டவ கூத்துக்கு நிகராக இன்று ஆடிக்கொண்டிருக்கும் டக்லஸ் தேவானந்தாவின் பாதத்தில் வீழ்ந்து கிடப்பதைத்தான் எம்மால் பொறுக்க முடியாமல் உள்ளது .சங்கிலியன் வருவான் மீண்டும் .

 • Like 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அன்பான புலம்பெயர் தமிழீழ மக்களே! நீங்கள் உண்ணாமல் தின்னாமல் கொடுத்த காசும், கேட்டுக் கேள்வியில்லாமல் நீங்கள் வழங்கிய ஆதரவும் எப்படியெல்லாம் நாசமாக்கப்பட்டன என்பதை இக் கட்டுரைத் தொடரில் சாத்திரியார் விளக்குகிறார். சீமான் சொல்வதையும் நெடுமாறன் சொல்வதையும் திருமுருகன் காந்தி சொல்வதையும் திருமாவளவன் சொல்வதையும் அசராமல் கேட்கும் நீங்கள் உங்களில் ஒருவனான சாத்திரியார் சொல்வதையும் கொஞ்சம் கேளுங்கள்!

சோபா சக்தியின் முக புத்தகத்தில் இருந்து .

எத்தனையோ  பேர்  படம் காட்டியபோது  பாத்த  நாங்க நீங்க காட்டினா  பாக்காமலா விடப்போறம் ,ஆமா புலனாய்வு  எண்டு சொல்லி குலைச்சுக்கொண்டு  நிக்காம  நீங்க கண்டதையும் வெளியில சொல்லுங்க பாஸ்  சும்மா பூச்சாண்டி காட்டாம 

Link to post
Share on other sites

இறுதியாக ஒரு வியடம்  அனைத்துலகச்

செயலக்த்தின்  டென்மார்க் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவானது  பிரியனின்

தலைமையில் அண்மைக்காலமாக  டக்லஸ் தேவானந்தாவின் ஈ.பி.டி.பி கட்சி ஊடாக

தாயகத்தில் மக்களிற்கான உதவிகளை செய்து வருகிறார்கள். அதே போல சுவிஸ்

இளையோர் அமைப்பும்  தமிழர் ஒருங்கிணைப்பக் குழுவும் தங்கள் பிரதிநிதிகளை 

கிழக்கு மாகாணத்திற்கு அனுப்பி கிழக்கு மக்களிற்கு உதவுகின்றனர்.இந்த

மாற்றம் வரவேற்கப்படவேண்டிய விடயம்.  இவர்களை முன் மாதிரியாக எடுத்து

மற்றைய நாடுகளில் உள்ள தமிழர் ஒருங்கிணைப்பு குழுக்களும் வீணே  ஊருக்கு

போகின்றவன் உதவி செய்பவன் எல்லோரையும் துரோகி என்றும் அடுத்த கட்ட

ஆயுதப்போர் என்று கதைவிட்டு காலத்தை கடத்தாமல்   தாயகத்து மக்ககளிற்கான 

உதவிகளை செய்து அவர்களது வாழ்வாதாரத்தை உயர்த்திவிடுவதே இனிவரும்

காலங்களில் செய்யக்கூடியதொன்றாகும்.செய்வார்களா????

அமைப்பு ரீதியாகவும் சரி அமைப்புக்களில் நம்பி்க்கையற்ற தனி வழியில் ஆனாலும் சரி தாயக மக்களுக்கு உதவி வாழ்வாதரத்தை உயர்த்துவது ஒன்றே நடைமுறைக்கு சாத்தியமான போராட்டம். உதவி செய்பவர்களை துரோகி என்று சொல்லும் தகுதியை யாரும் அல்லது எந்த அமைப்பும் கொண்டிருக்கவில்லை. எவன் ஒருவன் துரோகி என்று சொல்கின்றானோ அவனே துரோகி. 

---------------

இப்பதிவில் உள்ள காணொளி எந்த அளவுக்கு நிலமை இருக்கின்றது என்பதற்கு நல்ல உதாரணம். தியாகங்கள் தியாக தினங்கள் இவைகளை கூட சுயநலன்களுக்கு  அடயாள அதிகாரப்போட்டிகளுக்குப் பயன்படுத்தும் ஒரு இனம் விடுதலை பெறுவது என்பது கற்பனைகளிலும் சாத்தியமில்லை.

--------------------

இத்தொடரின் ஊடாக ஒரு பொதுவான விழிப்புணர்வையும் அமைப்புகளின் அது சார்ந்தவர்களின் அடிப்படை நிலை என்ன என்பதையும் பொதுவெளியில் முன்வைத்த சாத்திரியாருக்கு நன்றிகள். இவற்றால் புலம்பெயர் மக்கள் தாயக மக்களின் இருப்பை எந்த அமைப்புகள் தக்க வைக்கும் நோக்கில் செயற்படுகின்றதோ அதன் பின்னால் செல்வார்கள். வெளிப்படையான அரசியல் நோக்கியயே தமது ஆதரவை தரமுற்படுவார்கள். அல்லது அவ்வாறு ஒன்றை உருவாக்குவது நோக்கி சிந்திப்பார்கள். எது எப்படியாயினும் மாயையானதும் மறைமுகமானதுமான கருத்துருவாக்கங்கள் மற்றும் சுயநல அடயாள அரசியல் போன்றவற்றில் இருந்து விடுபட்டு வெளிப்படையான ஒரு புதிய களம் அவசியம் என்ற புரிதலை இத் தொடர் ஏற்படுத்துகின்றது.

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சோபாசக்தி என்பவரது முகப்புத்தகத்தில் இருந்து வந்த செய்தியினை இங்கு பிரசுரிக்க அனுமதியளித்த இந்த களம் யாழ் கள உறுப்பினர் சங்கிலியன் எழுதிய கருத்தை வெட்டியது .அன்றொரு நாள் தீபன் அண்ணா ,மற்றும் விதுசா அக்கா மற்றும் போராளிகள் எதிரியின் நச்சு வாயு தந்திரத்தால் வீரச்சாவை அடைந்த வேளை புலம்பெயர் வாழ் பத்திரிக்கை ஒன்றில் பயங்கரவாதிகளின் தலைவர்கள் மாண்டனர் என்ற செய்தி வெளிவந்தது .அந்த செய்திக்கு எதிராக புலம் பெயர் வாழ் மக்கள் சென்று முறையிட்டபோது அந்த செய்தி நிறுவனத்தால் கொடுக்கப்பட்ட பதில் எங்களுக்கு செய்தி தந்தவர்கள் இவர்களே அவர்களிடம் போய் நீங்கள் சண்டை இடுங்கள் என்று கூறப்பட்டது . அப்படியே இதையும் நான் பார்க்கிறேன் .

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

எத்தனையோ  பேர்  படம் காட்டியபோது  பாத்த  நாங்க நீங்க காட்டினா  பாக்காமலா விடப்போறம் ,ஆமா புலனாய்வு  எண்டு சொல்லி குலைச்சுக்கொண்டு  நிக்காம  நீங்க கண்டதையும் வெளியில சொல்லுங்க பாஸ்  சும்மா பூச்சாண்டி காட்டாம 

அதையே சொல்லியுள்ளேன் ,புரியலையா ,யாழ்ரா அடிக்கலாம் ,ஆனால் ஓவரா அடிக்க கூடாது உடல்நலத்திற்கு கேடாகலாம் :rolleyes:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அதையே சொல்லியுள்ளேன் ,புரியலையா ,யாழ்ரா அடிக்கலாம் ,ஆனால் ஓவரா அடிக்க கூடாது உடல்நலத்திற்கு கேடாகலாம் :rolleyes:

கோழி முட்டையில் இருந்து ஆட்டுக்குட்டி  வந்தது எண்டு  எங்களுக்கும் கதை விடத் தெரியும் .நீங்க சொல்லவாறதை  தெளிவா சொல்லுங்க (ஒருக்கா ஜால்ரா அடிச்சா  சாத் அண்ணா  அம்பது பவுன்ஸ்  தாறாராம்  நீங்களும் வர்றியளா )

 • Like 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கென் கந்தையா மாதிரி ஆயிரம் கந்தையா சுத்திக்கொண்டு போனாலும் திரும்ப திரும்ப ஏமாற எம்மவர் இன்னமும் தயார்தான் .

வாற சனி டொராண்டோவில் இரவு விருந்து ,சேரும் காசில சுவிசுக்கு போய் இலங்கை அரசிற்கு எதிராக பிரச்சாரம் செய்ய போகின்றார்களாம் .போவது யார் மலையை விழுங்கி  ஏப்பம் விட்ட கோஸ்டிகள்.

சீட்டுக்காரன் ஏமாற்ற ஏமாற்ற மீண்டும் மீண்டும் சீட்டு போடுபவர்கள் போல தான் இவர்களும் .

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அன்பான புலம்பெயர் தமிழீழ மக்களே! நீங்கள் உண்ணாமல் தின்னாமல் கொடுத்த காசும், கேட்டுக் கேள்வியில்லாமல் நீங்கள் வழங்கிய ஆதரவும் எப்படியெல்லாம் நாசமாக்கப்பட்டன என்பதை இக் கட்டுரைத் தொடரில் சாத்திரியார் விளக்குகிறார். சீமான் சொல்வதையும் நெடுமாறன் சொல்வதையும் திருமுருகன் காந்தி சொல்வதையும் திருமாவளவன் சொல்வதையும் அசராமல் கேட்கும் நீங்கள் உங்களில் ஒருவனான சாத்திரியார் சொல்வதையும் கொஞ்சம் கேளுங்கள்!

சோபா சக்தியின் முக புத்தகத்தில் இருந்து .

கென் கந்தையா மாதிரி ஆயிரம் கந்தையா சுத்திக்கொண்டு போனாலும் திரும்ப திரும்ப ஏமாற எம்மவர் இன்னமும் தயார்தான் .

வாற சனி டொராண்டோவில் இரவு விருந்து ,சேரும் காசில சுவிசுக்கு போய் இலங்கை அரசிற்கு எதிராக பிரச்சாரம் செய்ய போகின்றார்களாம் .போவது யார் மலையை விழுங்கி  ஏப்பம் விட்ட கோஸ்டிகள்.

சீட்டுக்காரன் ஏமாற்ற ஏமாற்ற மீண்டும் மீண்டும் சீட்டு போடுபவர்கள் போல தான் இவர்களும் .

அடேயப்பா அர்ஜுன் அண்ணா குத்தி முறிவதை பார்க்க புல்லரிக்குது. ஏற்கனவே ஒரு இயக்க தலைவன் உட்பட பலர் பேர் தங்களுக்குள் சுடுபட்டு இறக்க அண்ணையை போன்ற இரட்டை விளையாட்டு விலையாடுபவர்களால் தான் தப்பி வர முடிந்தது.
 
இப்போ சாத்திரி அண்ணாவுக்கு கொள்கை விலக்கம் அளிக்க அண்ணை புறப்பட்டிருக்கிரார் போல. ஏதோ நடக்கட்டும் நடக்கட்டும்.
Link to post
Share on other sites

இந்தக் காணோளியில் நிற்பவர்கள் ஏன் முகத்தைத் துணியால் கட்டியிருக்கிறார்கள், இவ்வளவு துணிவாக முள்ளிவாய்க்காலுக்குப் போனவர்கள்?? 

அவுசிற்கு ஒழுங்கா போய் சேரவேணுமல்லோ அதுக்குத்தான். பிறகு அங்கிருந்து போராட்டத்தை நடத்துவார்கள். :)

Link to post
Share on other sites

கடைசிகப் பாகம் ஒரு ஆய்வுக் கட்டுரை போன்று அமைந்து விட்டது. மற்றைய பாகங்களில் நிறைய தகவல்கள் இருந்தன. இதில் இல்லை. ஏதோ அவசரத்தில் முடிக்கப்பட்டிருக்கிறது.

இதில் குறிப்பிடப்படும் கரிகாலன் ஜேர்மனிக்கும் வந்திருந்தார். தலைமைச் செயலகத்தை ஜேர்மனியில் பலப்படுத்தவே அப்பொழுது வந்திருந்தார். இப்பொழுது அனைத்துலகத் தொடர்பகத்தோடு நிற்கிறார்.

கடைசித் தொடர் எழுதுவதற்கு நேரப்பிரச்சனை காரணமாக  நீண்ட இடைவெளி எடுத்துவிட்டேன் அதோடு  மேலும் பல தகவல்களை இணைக்க நினைத்திருந்தேன் முடியவில்லை  அவற்றை தனியாக  இன்னொரு தடைவை எழுதுகிறேன். அதே நேரம்  கரிகாலன் என்பவர். (இவரை பலர் கிழக்கு மாகாண மட்டு அம்பாறை  அரசியல் பிரிவு பொறுப்பாளர் கரிகாலன் என தவறாக  நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். இவர் அந்த கரிகாலன் அல்ல அவர் இறுதி யுத்தத்தில் இறந்துவிட்டார்) முதலில் தலைமைச் செயலகம் சார்பாகத்தான் என்னோடும் கதைத்திருந்தார். பின்னர் பிரான்சில்  அனைத்துலகத்திடம் இருந்து கடை ஒன்று இவரது கைக்கு மாறிய பின்னர் இவரும்  அனைத்துகச் செயலகத்தின் பக்கம் மாறிவிட்டார்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
கிருஸ்ணேஸ்வரன் அரவிந்தன் என்ற நெல்லியடியை சேர்ந்த தென்னவன் புலனாய்வுத்துறையின் ஈபி ஆர் எல் எவ் இயக்கம் தொடர்பான புலனாய்வு வேலையில் ஈடுபட்டவர்.1995 சூரியக்கதிர் நடவடிக்கையின் போது சுண்ணாகத்தில் எறிகணைவீச்சில் காலில் காயமடைந்த ஒருவர்;
 
14:8/2009 இலேயே பிரான்ஸ்க்கு தென்னவன் வந்ததாக பிரான்ஸ் பதிவுள்ளது.இந்த தேதிக்கு முன்னரும் வந்திருக்க வாய்ப்புள்ளது.
 
இப்படியிருக்க சாத்திரியுடனும் மதுரையிலிருந்து தொடர்புகொண்டார் என்பது எந்தளவு தூரம் உண்மையான விடயம் என்பது தந்தை செல்வாக்கே வெளிச்சம்.
 
பிரான்ஸ் வந்த தென்னவன் தன்னை கடைசி நேரத்தில் சூசை கரும்புலிப்படகில் இந்தியாவுக்கு அனுப்பி வைத்ததாகவும் உங்களைத்தான்ராப்பா நாங்கள் இங்க நப்பியிருக்கிறம் என்டு சொல்லி அனுப்பிவைத்தவர் என்ற பில்டப்புகள் தென்னவன் சந்தித்த தன்ர தொடர்பான ஆட்களுக்கு சொன்னது உண்மையான விடயம்.
 
இரும்பொறைக்கும் தென்னவனுக்கும் நல்ல உறவு இருந்தது; இந்த தென்னவன்  
கரிகாலன் என்ற பெயரில் ஒர் இரு திறந்த மடல்கள் புலனாய்வுப்போராளி என்ற பெயரில் அறிக்கைகள் விட்டவர்.இவருக்கும் புகழேந்திக்கும் தொடர்பிருந்ததும் உண்மை.
 
இந்த தென்னவன் தான் தனக்கு தலைமைச்செயலகக்குழுவில் புலனாய்வுத்துறை சார்பாக ஸ்கைப்பில் பேச வினாயகத்தால் மத்தியகுழு உறுப்பினர் பதவியும் ஜேர்மனிக்கான தலைமைச்செயலக பொறுப்பும் கொடுக்கப்பட்டிருந்தது.ஜேர்மனியில் ஓர் கூட்டத்தில் அனைத்துலக பிரிவுகாரரால் நையப்புடைக்கப்பட்ட சம்பவம் நடந்த போது இவரின் தடியடிகள் பிணை நின்று பிடித்துவிட்டதும் நடந்தது.
 
இப்போது தலைமைசெயலகத்திலிருந்தும் ஒதுங்கி தமிழ் கடையொன்றில் வேலை பார்ப்பதாக தெரிகிறது.
Link to post
Share on other sites

எத்தனையோ  பேர்  படம் காட்டியபோது  பாத்த  நாங்க நீங்க காட்டினா  பாக்காமலா விடப்போறம் ,ஆமா புலனாய்வு  எண்டு சொல்லி குலைச்சுக்கொண்டு  நிக்காம  நீங்க கண்டதையும் வெளியில சொல்லுங்க பாஸ்  சும்மா பூச்சாண்டி காட்டாம 

நந்து இப்பிடித்தான் பாஸ்  பல காலமா பலர் என்னைப் பற்றி தெரியும்  எழுதப் போகிறோம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்களே யாருமே எழுதிறாங்க இல்லை பாஸ் . :( .நாலு பேர் நாலு பக்கத்தாலை எழுதினாத் தானே நாங்களும் பிரபலமாகலாம் :icon_idea: ..அதைவிட சங்கிலியன் எனக்கு விழையாட்டுத் துறை பதவி தந்திருக்கிறார்.  அது ஓடிப் பிடிச்சு  விழையாடுற விழையாட்டா? அல்லது ஒழிச்சு பிடிச்சு விழையாடுற  விழையாட்டா என்று தெளிவா எழுதேல்லை ஏனெண்டால் ஒழிச்சு பிடிச்சு  விழையாடுற விழையாட்டெண்டால் அதன் பொறுப்பை மேக்தா எனக்கு விட்டுத்தர மாட்டார். அதற்காவே சிறப்பு பயிற்சிகள் எடுத்தவர் மேக்தா. :lol: :lol: ஒடிப்பிடிக்கிற விழையாட்டு என்றால் நான் இருக்கிற இடத்திலை நான் கடற்கரையிலை ஓட மனிசிதான் கைதட்ட வேணும். முன் வீட்டுக்கர பிரெஞ்சுக்காரியா பாத்து ஏதாவது பரிசு தந்தால்தான் உண்டு. :icon_mrgreen: உலக வரைபடம் வேண்டாம். பிரான்சின்ரை  வரைபடத்தை ஒழுங்கா பாக்கத் தெரியாதவங்கள் எல்லாம்  யாழிலை எழுதிறாங்க பாஸ்...... :(

Edited by sathiri
 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெல்லியடியில் மேயர் சோதியாவின் பெற்றோரின் வீட்டுக்கு அருகாமையில் வாழ்ந்து வந்த தென்னவனுக்கு பரிதியால் ஒரு வீடியோக் கடை போட்டுக்கொடுக்கப்பட்டுள்ளது. 2009ம் ஆண்டிற்கு பின் புலம் பெயர் தேசங்களுக்கு வந்த போராளிகளை தொடர்பு கொண்ட அனைத்துலக குழு தாம் சொல்வது போன்று செயல்படுமாறு வர்ப்புறுத்தியது. அனைததுலக குழு சொல்வது போன்று செயல்படுபவர்களுக்கு லஞ்சமும் வழங்கப்பட்டது.

டென்மார்க்கிலும் ஒரு போராளியாக இருந்தவருக்கு கடை போட்டு தருகிறோம் எம்முடன் சேர்ந்து இயங்குங்கள் என வர்புறுத்தப்பட்டது அவர் அதை நிராகரித்ததால் இப்பொழுது துரோகியாக்கப்பட்டுள்ளார்.

ஈபிடிபியின் டென்மார்க் தொடர்பாளருடன் இணைந்து அனைத்துலகத்தின் டென்மார்க் பொறுப்பாளர் பிரியன் இன்டியாரெஸ்ரோரனட் என்ற உணவகத்தை 2009ம் ஆண்டு ஆரம்பித்திருந்தார். மக்களிடம் காசு சேர்த்து டக்கிளஸற்கு பணம் ஆனுப்பியது அம்பலமானதும் தான் தெரியாமல் இந்த பிழையை செய்து விட்டதாக பிரியன் இப்ப சிலரிடம் கூறியிருக்கின்றார்.

கடந்த 12ம் திகதி நடந்த நிகழ்ச்சி ஊடாக 700.000 குறோண்கள் சேகரித்துள்ள டென்மார்க் அகைத்துலக குழு 500000 குறோண்களை ஈபிடிபி க்கு அனுப்பி உள்ளதாக தெரியவந்துள்ளது.
 
Link to post
Share on other sites

அமைப்பு ரீதியாகவும் சரி அமைப்புக்களில் நம்பி்க்கையற்ற தனி வழியில் ஆனாலும் சரி தாயக மக்களுக்கு உதவி வாழ்வாதரத்தை உயர்த்துவது ஒன்றே நடைமுறைக்கு சாத்தியமான போராட்டம். உதவி செய்பவர்களை துரோகி என்று சொல்லும் தகுதியை யாரும் அல்லது எந்த அமைப்பும் கொண்டிருக்கவில்லை. எவன் ஒருவன் துரோகி என்று சொல்கின்றானோ அவனே துரோகி. 

---------------

இப்பதிவில் உள்ள காணொளி எந்த அளவுக்கு நிலமை இருக்கின்றது என்பதற்கு நல்ல உதாரணம். தியாகங்கள் தியாக தினங்கள் இவைகளை கூட சுயநலன்களுக்கு  அடயாள அதிகாரப்போட்டிகளுக்குப் பயன்படுத்தும் ஒரு இனம் விடுதலை பெறுவது என்பது கற்பனைகளிலும் சாத்தியமில்லை.

--------------------

இத்தொடரின் ஊடாக ஒரு பொதுவான விழிப்புணர்வையும் அமைப்புகளின் அது சார்ந்தவர்களின் அடிப்படை நிலை என்ன என்பதையும் பொதுவெளியில் முன்வைத்த சாத்திரியாருக்கு நன்றிகள். இவற்றால் புலம்பெயர் மக்கள் தாயக மக்களின் இருப்பை எந்த அமைப்புகள் தக்க வைக்கும் நோக்கில் செயற்படுகின்றதோ அதன் பின்னால் செல்வார்கள். வெளிப்படையான அரசியல் நோக்கியயே தமது ஆதரவை தரமுற்படுவார்கள். அல்லது அவ்வாறு ஒன்றை உருவாக்குவது நோக்கி சிந்திப்பார்கள். எது எப்படியாயினும் மாயையானதும் மறைமுகமானதுமான கருத்துருவாக்கங்கள் மற்றும் சுயநல அடயாள அரசியல் போன்றவற்றில் இருந்து விடுபட்டு வெளிப்படையான ஒரு புதிய களம் அவசியம் என்ற புரிதலை இத் தொடர் ஏற்படுத்துகின்றது.

எனக்கு தெரிந்த விடயங்களை முடிந்தளவு  சுருக்கமாக  இங்கு முன்வைத்திருக்கிறேன்.  இதனைத்தான்  எல்லாரும் ஏற்கவேண்டும் என்பதும்  நான் எதிர் பாரக்கவில்லை  எதிர்ப்பவர்களையும்  நான் எதிரியாக பார்க்கவில்லை அனைவரிற்குமே  சுயமாக சிந்திக்கும் தன்மை உள்ளது   அதேநேரம் அவரவர்  தங்கள் முடிவுகளை தாங்களோ  எல்லாவற்றையும் யோசித்து யார் பின்னால் எப்படி போவது என்று எடுக்கும் முடிவுகளை நான் மட்டுமல்ல எவருமே கட்டுப் படுத்த முடியாது.அது முடியாததும் கூட. அது நேரம் இந்தத் தொடரில் தங்கள் கேள்விகளை தொர்ச்சியாக வைத்தலர்களிடம் சில கேள்விகளை  முன்வைத்து இந்த தொடரை மட்டுமல்ல  சில காலங்களிற்கு  கதை கட்டுரை எழுதுவதையும் நிறுத்த நினைத்துள்ளேன். காரணம்  எனது புத்தகத்தை எழுதி முடிப்பதற்காக.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சிலர் நான் இணைத்த காணொளியை பாரக்க முடியவில்லையென  மின்னஞ்சலில்  அறிவித்திருக்கிறார்கள்.  திருத்தியுள்ளேன்.  அதனை பாரக்க முடியாவிட்டால் அறியத் தரவும் நன்றி

 இந்தக்காணொளியால் தானே பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் யாழில் நடக்கும் தொடர் கைதும் இடம் பெறுகின்றது.

Link to post
Share on other sites

 இந்தக்காணொளியால் தானே பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் யாழில் நடக்கும் தொடர் கைதும் இடம் பெறுகின்றது.

இந்தக் காணொளியும் ஒரு காரணம்.

Link to post
Share on other sites
இந்தத்தொடர் முடியும் வரை பொறுமையாக எல்லாவற்றையும் வாசித்தேன்...இந்த தொடரில் சம்பந்தப்படும் சம்பவங்கள் பல நிகழ்ந்த நாட்டில் இருப்பதால் கண்முண்ணால் பலவறை காணக்கூடியதாக இருந்தது..நன்றி தொடருக்கு...
Link to post
Share on other sites

சாத்திரியின் தொடரை நானும் முழுமையாக வாசித்தேன். நான் சிறுவயதிலிருந்து பல்வேறு சூழ்நிலைகளில், பல்வேறு குழுவினரின், அமைப்புக்களின், அரசுகளின் இராச்சியங்களில் பெற்ற பல்வேறு அனுபவங்களும், அவை தொடர்ப்பாக கற்றுக்கொள்ளவேண்டிய பாடங்களும் தொடர்பாய் நிறைய எழுதவேண்டும் என்று விரும்பினேன். முன்புபோல் கருத்துக்களத்தில் நீண்ட வாதங்களில் பங்குபெறுவதற்கு தற்போது நேரம் இல்லை. எனவே ஒதுங்கிக்கொள்ளவேண்டியுள்ளது.

ரமணன் எனும் பெயரில் ஒருவர் சாத்திரியின் இந்தத்தொடர் சம்மந்தமாக காட்டமான விமர்சனங்களை இங்கு எழுதிவந்தார். அவரது கருத்துக்களை தற்போது காணவில்லை. சாத்திரியின் தொடரை இங்கு விறுவிறுப்பாக நகர்த்தியதில் அவரின் பங்களிப்பும் உள்ளது என்றே கூறவேண்டும். பல சமயங்களில் நகைச்சுவையாகவும் அமைந்தன. எவரதும் கருத்துக்களுடன் உடன்படுவதோ அல்லது உடன்படாமைக்கோ அப்பால் பலரது எண்ண ஓட்டங்களை அறியமுடிந்தது.

சரித்திரத்தின் சரித்திரம் என்று ஓர் தலைப்பை இங்கு கண்ணுற்றேன். பல தடவைகள் மீண்டும் மீண்டும் அந்தத்தலைப்பு யாழ் கருத்துக்களத்தை மேலோட்டமாக நோட்டமிட்டபோது தென்பட்டது. ஒவ்வொரு தடவையும் அதைப்பார்த்தபோது சாத்திரியின் சரித்திரம் எனும் தலைப்பில் யாரோ ஏதோ எழுதியுள்ளார்களோ என்றே ஓர் உணர்வு ஏற்பட்டது. இது ரமணன் என்பவரின் கருத்துக்களை வாசித்ததன் பாதிப்போ தெரியவில்லை.

2008ம் ஆண்டு யாழ் கருத்துக்களத்தில் சூடான விவாதங்களில் ஈடுபட்டபோது சாத்திரியினால் நான் "மீட்பர்", "மாற்றுக்கருத்து மாணிக்கம்" போன்ற சில சொற்பதங்கள் மூலம் இங்கு விளிக்கப்பட்டேன். இப்போது சாத்திரியையே மாற்றுக்கருத்து மாணிக்கமாக பலரும் இங்கு விளிக்கும்போது சிரிப்பதா அல்லது அழுவதா என்று தெரியவில்லை.

Edited by கரும்பு
 • Like 1
Link to post
Share on other sites

ஒரு தொடரை எழுதுறதை விட,எழுதின பிறகு அத் தொடர் தொடர்பாக கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் சொல்லக் கூடிய தில்லும் இருக்க வேண்டும்...சாஸ்திரியிடம் அந்த தில் இல்லை

 • Like 2
Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.