ஜீவா

மாமியார் வீடு...

Recommended Posts

பகுதி-1

 

558228_408641492543473_143724017_n.jpg

வணக்கம் உறவுகளே.. :)

நீண்டநாட்களின் பின்னர் ஒரு பதிவு போட வேண்டும் என்ற உந்துதலில், அண்மையில் மேற்கொண்ட பயணம் குறித்த சில சுவாரசியமான சம்பவங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ளலாம் என்று இதை எழுதுகிறேன். பத்து நாள் போட்டு வந்து பயணக்கட்டுரை எழுதுறான் என்று பகிடி விடக்கூடாது, :rolleyes:

ஏழுமலை,ஏழுகடல் தாண்டி .. என்ற புராணக்கதைகள் போல கடல் கடந்து காதலி.......சே.../மனைவியுடன் ஒரு சந்திப்பு <_<  என்ற வகைக்குள் அடக்குகிறேன்.

 

ஒரு சில சம்பவங்கள் யாரையும் காயப்படுத்தும், அவமதிக்கும் நோக்கில் எழுதப்படவில்லை அப்படி ஏதும் யாரையும் புண்படுத்தி இருக்குமாயின் முன்கூட்டியே அதற்காய் மன்னிப்புக்கேட்டுக்கொள்கிறேன்.

*********************************************************************************************************************************

 

வாருங்கள் கதைக்கு போவோம்..

 

 

புதுவருசம் 2013உம் பிறந்திட்டுது விசாவுக்கு விண்ணப்பித்து ஆறுமாதங்கள் ஆகுது இன்னும் விசா வரவில்லை என்ற கவலை ஒருபக்கம், இதை எதிர்பார்த்தே தலை தீபாவளிக்கு போகமுடியவில்லையே என்ற வருத்தம் மறுபக்கம், இப்படியிருக்க அவளுக்கும் ஒரு இன்ப அதிர்ச்சி கொடுக்க வேண்டும், காலை முதல் நள்ளிரவு வரை தினம் வேலை செய்யும் எனக்கும் ஒரு மாற்றம் வேண்டி இருந்தது அதனால் சென்னை போவது என்று திடீர்முடிவெடுத்தேன். ஆனால் எப்படி வீட்டில் சொல்ல பத்து நாள் கடை பூட்டினால் கணக்கு பார்ப்பார்களே, வரவு செலவு பார்த்து என்னை கடுப்பேத்தி விடுவார்கள் என்று தெரியும் அதனால் எல்லா அலுவலும் முடிச்சு சொல்வதாக உத்தேசம் ஆனால் அதுக்கு முதலே சொல்ல வேண்டி வந்திட்டுது அது வேறை கதை பிறகு பார்ப்பம்.

 

தொடரும்..

 

 

Edited by ஜீவா
  • Like 10

Share this post


Link to post
Share on other sites

ஆரம்பியுங்கள்... ஜீவா, வாசிக்க ஆவலாக உள்ளோம்.

Share this post


Link to post
Share on other sites

என் தம்பி  என்று ஓடிவந்தேன்

மாமியார் வீடு என்று வேறு இருக்கு

ஏமாற்றிப்போடாதீர்கள் ஜீவா :D

Share this post


Link to post
Share on other sites

ஜீவாவின் புதினம் அறிய ஆசை..  :lol:  தொடருங்கள்..! :D

Share this post


Link to post
Share on other sites
ஜீவாவுக்கு மச்சினிச்சிமார் அதிகமோ...உங்கள் அனுபவம் சுப்பராய் தான்  இருக்கும் :lol: ...எழுதுங்கோ

Share this post


Link to post
Share on other sites

தொடர்ந்து எழுதுங்கள் ஜீவா அண்ணா. :)

Share this post


Link to post
Share on other sites

இது நல்லாயில்லை ஜீவா ஒழுங்கா ஒருபக்கம் ஆவது எழுத வேணும். :D

Share this post


Link to post
Share on other sites

மாமியார் வீட்டில் மவராசனாய் இருந்தவரே :icon_mrgreen: !! வாழியவாழியவே  :D  !!!  இண்டைக்கெண்டு பாத்து கவிதையும் உங்களுக்கு ஏத்த மாதிரி ஆடல் கவிதை போட்டிருக்கிறார்   :lol:  :lol:  . பூந்து விளையாடுங்கோ கதையிலை  :D  :D .

Share this post


Link to post
Share on other sites

கருத்து எழுதிய உறவுகள் அனைவருக்கும் நன்றி.. :)

நாளை தொடர்கிறேன்.ஜீவாவுக்கு மச்சினிச்சிமார் அதிகமோ...உங்கள் அனுபவம் சுப்பராய் தான்  இருக்கும் :lol: ...எழுதுங்கோ

 


மச்சினிச்சி ஒருத்தி தான் அவளையும் ஏதோ முறை சொல்லி தங்கச்சியாக்கி போட்டாங்கப்பா.. :(

 

நிறைய எதிர்பார்க்கிறிங்கள் போல அந்தளவுக்கு இருக்குமோ தெரியலை பார்ப்பம்.. முடிஞ்சளவு முயற்சி செய்கிறேன். :)

Share this post


Link to post
Share on other sites

தொடருங்கன், ஜீவா! காத்திருக்கிறோம்! 

 

கடவுள் கழுத்தில் தங்கிய நஞ்சில்  கொஞ்சத்தை, மாமியைப் படைக்கும் போது கலந்திருக்க வேணும்! :wub:

Share this post


Link to post
Share on other sites

தொடருங்கன், ஜீவா! காத்திருக்கிறோம்!

கடவுள் கழுத்தில் தங்கிய நஞ்சில் கொஞ்சத்தை, மாமியைப் படைக்கும் போது கலந்திருக்க வேணும்! :wub:

சந்திரனின் கதை ஞாபகத்துக்கு வருதே... ஏன்?? :D

Share this post


Link to post
Share on other sites

மாமியார் வீடு ...(தொடர்ச்சி..) பகுதி - 2

 

தைப்பொங்கலுக்கு முதல் போவது அல்லது போவதில் பிரயோசனம் இல்லை என்பதால் இயன்றளவு விரைவாக வெளிக்கிடுவதாக உத்தேசம். பொங்கலுக்கு கிட்ட தட்ட பத்து நாட்கள் தான் இருந்திருக்கும் ஒன்லைனில் விசாவுக்கு விண்ணப்பித்துவிட்டு விண்ணப்பப்படிவம்,கட்டணத்தை எல்லாம் அருகில் இருந்த கொலோனில்(köln)  உள்ள இந்தியன் விசா சென்டருக்கு அனுப்பி இருந்தேன். கேரளாவைச்சேர்ந்தவர்களால் தான் நடத்தப்படுகிறது. கடைக்கு வந்த ஒருவரால் அறிமுகப்படுத்தப்பட்டதால் எப்போதும் அங்கு தான் குடுப்பதுண்டு அதனால் இந்த முறையும் அங்கு குடுத்தேன் ஆனால் இந்த முறை வில்லங்கம் ஒண்டு விலை குடுத்த மாதிரி வந்திச்சுது, இரண்டு நாள் கழித்து இந்தியன் எம்பசியில் இருந்து போன் வந்திருந்தது. நேரில் வரச்சொல்லி என்ன கொடுமை டா என்று எனக்குள் நினைச்சவாறே,

"நான் வேலையில் இருக்கிறேன் லீவு எடுக்க முடியாது போனில் கேட்க முடியாதா என்று கேட்டேன்."

இல்லை நீங்கள் நேரில் வாருங்கள் என்றது எதிரில் அழைத்த பெண்குரல்.

 

ஏற்கனவே பத்து நாள் லீவு கடை பூட்டவேணும் இதிலை இது வேறையா வெளிக்கிடுறதா இருந்தால் இன்னும் நாலு நாள் தான் இருக்கு சாத்தியமாகுமா என்று நினைத்த நான்,

 

"இல்லை இன்று நாளைக்கு வரமுடியாது நீங்கள் எனது பாஸ்போட்டை திருப்பி அனுப்பிவிடுங்கள் என்று சொன்னேன்."

 

எதிர்முனையில் விசா வேண்டும் என்றால் நேரில் வந்து தான் ஆகவேணும் என்று தனது பெயரைக்கூறி, தொலைபேசி எண்ணைத்தந்து தேதி குறித்து விட்டு வந்து நேரில் சந்திக்கவும் என்று துண்டித்து விட்டது.

 

இப்ப என்ன செய்ய, எதுக்கும் பிரியாவிடம் சொல்லுவம் என்று சொல்ல,

அம்மா எல்லாருக்கும் நீங்கள் வாறது என்று  சொல்லிப்போட்டா, இப்ப வரமுடியாது என்று கவலைப்படுவா .. முடிஞ்சால் நாளைக்கு போட்டுவாங்கோவன்" என்றாள் என் நிலையறிந்தும்.

 

சிம்பிளா சொல்லிட்டாள் நமக்கெல்லோ தெரியும் நாம்படுறபாடு என்று மனசுக்குள் புறுபுறுத்தபடியே,

"சரி ட்ரை பண்ணுறேன்."

 

என் கறுத்த முகம் கூட அப்பப்போ சிவப்பதுண்டு , அந்த நிலை தான் இப்ப, எப்படி அண்ணா,அண்ணிட்ட சொல்ல?

அண்ணாட்டை சொன்னா ஆயிரம் கதை கதைப்பான் எதுக்கும் அண்ணியிடம் சொல்லுவம் என்று..

 

"அண்ணி நான் ஒரு கிழமைக்கு இந்தியா போட்டு வரப்போறேன்,அண்ணாட்டையும் சொல்லுங்கோ"

 

இப்ப எதுக்கடா? விசா வந்திடும் தானே ஒரேசாவா போய் கூட்டிக்கொண்டு வாவன் எதுக்கு ரெண்டு செலவு?

 

"இல்லை அண்ணி, தீபாவளிக்கும் போகமுடியலை பொங்கலுக்கு ஆவது போட்டு வருவம் என்று தான், அவர்களும் கொஞ்சம் சந்தோசப்படுவார்கள்"

 

ம்ம்ம்ம்.. இப்ப நல்ல குளிர் தான், வேலையும் குறைவாத்தான் இருக்கும்,ஆனால் அண்ணனட்டை எப்படிச்சொல்ல?

 

"எப்படியோ நீங்கள் தான் அண்ணி சொல்லவேணும், நான் நாளைக்கு ரேமின் (நியமனம்) வச்சிட்டு புதன்கிழமை ஃப்ராங்பேட்டுக்கு போட்டு வாறேன் அண்ணி"

 

இதுக்கு மேல் அண்ணி எதுவும் பேசவில்லை. புதன் கிழமை 11மணிக்கு வரச்சொன்னார்கள்.

சாதாரண ரெயினில் போக ஒருநாளாகும் பேசாமல் ICE இல் போவம் என்று ரிக்கற் புக்பண்ணிப்போட்டு

552992_408642199210069_1806183090_n.jpg

 

அங்கை போனால், இருக்கையில் அமரச்சொன்னார்கள். சில மணிநேர காத்திருப்பின் ஒருவர் வந்து குறித்த அறைக்கு வரச்சொன்னவர் முதல் கேள்வியே

"நீங்கள் எதுக்கு இந்தியப்பெண்ணை திருமணம் செய்தீர்கள்?"

சுத்தம்.. பொழுதுபோக்குக்கு தான்.. அப்படிச்சொல்லத்தான் ஆசை இருந்தாலும் அப்படிச்சொல்லேல்லை.

பிடித்திருந்தது அதுதான் காதலித்து திருமணம் செய்துகொண்டேன்.

 

"எப்படி உங்களுக்கு அறிமுகமானார்? எப்படி பழகினீர்கள்?

கேட்குறான் பாரு கேள்வி .. என்று நினைத்தவாறே யாழ் இணையத்தின் அருமை,பெருமைகளை அள்ளிவிட்டேன்.

 

"மேலை கீழை வடிவாப் பார்த்தான், பார்த்திட்டு பிசினஸ் என்று போட்டிருக்கு இந்தியாவில் இருந்து சாமான் கொண்டுவரவா போறாய் என்றான்?"

குறுக்காலை போனவன் என் அவசரம் புரியாமல் படுத்துறானெ என்று மனம் வெம்மிக்கொண்டது, என்ன செய்ய அலுவல் முடியணுமே , "இல்லை 14ம் திகதி தமிழர்திருநாள் பொங்கல் அது தான் என் மனைவியுடன் கொண்டாடவேண்டும் என்று சொன்னேன்."

 

ஏதோ திருப்தி கொண்டானோ என்னவோ தெரியாது வெயிட்டிங் ரூமில் காத்திருக்க சொல்லி விட்டு சிறிது நேரத்தின் பின் விசா குடுத்தான்.

 

முதல் வேலையா பிரியாவிடம் சொல்லிவிட்டு ரெயில் நிலையம் நோக்கி நடையைக்கட்டினேன்...

 

தொடரும்..

Edited by ஜீவா
  • Like 10

Share this post


Link to post
Share on other sites

"மாமியார் வீடு" தலைப்பைப் பார்த்தால் ஏதோ நாடக பாணி தெரியுது...என்டாலும் கதையை நல்ல விறுவிறுப்பாய் கொண்டு போறீங்கள்...தொடருங்கோ

Share this post


Link to post
Share on other sites

"எப்படி உங்களுக்கு அறிமுகமானார்? எப்படி பழகினீர்கள்? :o :o

 

நியாயமான கேள்வி ........... :icon_mrgreen: . ஏன்ராசா முதல் அடியே செப்பல் அடி போலை கிடக்கு :lol: :lol: . தொடருங்கோ....... :)

Share this post


Link to post
Share on other sites

ம்ம்ம்

சரியான பாதையில் தான் கதை பயணிக்கிறது.

நல்ல எழுத்தாற்றல் தெரிகிறது

ஏன் ஒழித்து வைப்பான்?

தொடருங்கள்

Share this post


Link to post
Share on other sites

நல்லா எழுதுகிறீர்கள். தொடருங்கோ. :)

 

என் கறுத்த முகம் கூட அப்பப்போ சிவப்பதுண்டு , அந்த நிலை தான் இப்ப, எப்படி அண்ணா,அண்ணிட்ட சொல்ல?

அண்ணாட்டை சொன்னா ஆயிரம் கதை கதைப்பான் எதுக்கும் அண்ணியிடம் சொல்லுவம் என்று..

 

:lol: :lol:

Share this post


Link to post
Share on other sites

அறியும் ஆவலில் மனசு......... இன்னும் வேகமாய் எழுதுங்கோ

Share this post


Link to post
Share on other sites

யாழ் இணையத்திலை காதலான  பல சோடியள் பிரிஞ்சிருக்கு. ஆனால் சேர்ந்த  ஒரு சிலதிலை நீங்களும். அடக்கம் என்னும் போது மகிழ்ச்சி.  தொடருங்கள். :)

Share this post


Link to post
Share on other sites

விடுப்பு அறிய ஆவலாய் உள்ளேன்....:D

Share this post


Link to post
Share on other sites

விடுப்பு அறிய ஆவலாய் உள்ளேன்.... :D

 

உங்கள் ஆவல் வீண்போகாது அண்ணா,மிகுதி விரைவில்... :)

"மாமியார் வீடு" தலைப்பைப் பார்த்தால் ஏதோ நாடக பாணி தெரியுது...என்டாலும் கதையை நல்ல விறுவிறுப்பாய் கொண்டு போறீங்கள்...தொடருங்கோ

 

கத்து குட்டி தானே, சரியாகத்தெரியவில்லை முழுவதும் படித்து சொல்லுங்கள் அக்கா.. :)

"எப்படி உங்களுக்கு அறிமுகமானார்? எப்படி பழகினீர்கள்? :o :o

 

நியாயமான கேள்வி ........... :icon_mrgreen: . ஏன்ராசா முதல் அடியே செப்பல் அடி போலை கிடக்கு :lol: :lol: . தொடருங்கோ....... :)

 

அதை ஏன் கேட்குறியள், சிலது சென்சார் பண்ணித்தான் போட வேண்டியுள்ளது. :lol::D

Share this post


Link to post
Share on other sites

தொடருங்கள் ஜீவா!! ஜீவாவின் மனைவி இந்தியத் தமிழா?? ( கேக்காட்டியும் குறை நினைப்பியள் :lol: )

Share this post


Link to post
Share on other sites

ம்ம்ம்

சரியான பாதையில் தான் கதை பயணிக்கிறது.

நல்ல எழுத்தாற்றல் தெரிகிறது

ஏன் ஒழித்து வைப்பான்?

தொடருங்கள்

 

நன்றி அண்ணா, உங்கள் போன்றோரின் ஊக்கமும்,ஆதரவும் தான் தவழும் எம்மை கை பிடித்து கூட்டிச்செல்வது போல் உள்ளது.

நன்றி அண்ணா தொடர்ந்து படியுங்கள்..... :)

நல்லா எழுதுகிறீர்கள். தொடருங்கோ. :)

 

 

:lol: :lol:

 

நன்றி துளசி சிஸ்டர்.. :rolleyes:

அறியும் ஆவலில் மனசு......... இன்னும் வேகமாய் எழுதுங்கோ

 

நன்றி அக்கா.. ஒரே நாளில் முடித்தால் திரில் இருக்காது.. :rolleyes::lol:

யாழ் இணையத்திலை காதலான  பல சோடியள் பிரிஞ்சிருக்கு. ஆனால் சேர்ந்த  ஒரு சிலதிலை நீங்களும். அடக்கம் என்னும் போது மகிழ்ச்சி.  தொடருங்கள். :)

 

நன்றி சாத்திரி அண்ணா வரவுக்கும், தகவல் பகிர்வுக்கும்.. :)

நானும் தான்! :D

 

காவடி எடுத்தாச்சு ஆடி முடிக்கத்தானே வேணும்.. :lol:

Share this post


Link to post
Share on other sites

ஆரம்பம் நல்லா இருக்கு...ஆத்துக்காரி வேற வாசிக்கின்றார் என்பதால் கவனமப்பு..!!

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.