Jump to content

மாமியார் வீடு...


Recommended Posts

உங்கள் அனுபவப் பகிர்வு மிக நன்றாக , அதோடு அதன் அனுபவங்கள் 
அழகாக இருக்கிறது. தொடர்ந்து வாசித்துக் கொண்டு தான் இருக்கிறேன் .  உடனுக்குடன் நான் வாசிக்கும் பதிவுகளுக்கு கருத்து எழுத நேரம் தான் கிடைப்பது அரிது. .. இருந்தும் எல்லோருடைய பதிவுகளையும் வாசிப்பேன். அந்த வகையில் உங்கள் பதிவும் ஒன்று..தொடருங்கள்..
Link to comment
Share on other sites

  • Replies 276
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜீவா.. இதெல்லாம் சகஜமப்பா.. :D விமானம் தரையைத் தொட்டு ஓடுதளத்தில் ஓடிக்கொண்டிருக்கும்போதே எழுந்து வாசலுக்குப் போயிருப்பார்களே?? :D

 

:D :D :Dஉண்மை தான் மாம்ஸ்,

நடந்த சம்பங்களில் கால்வாசி கூட இதில் எழுதப்படவில்லை, அந்தளவு நிலமை மோசம்.. :D:lol:

கதை நன்றாகப் போகின்றது.. விமானப் பயணங்களில் எப்போதும் நான் Aisle சீற்தான் தெரிவு செய்வேன். தேவையில்லாமல் மற்றவர்களுக்கு சிரமம் கொடுக்கக்கூடாது என்பது ஒரு காரணம்.. விமானப் பணிப்பெண்கள் போய் வரும்போது உரசிச் செல்வார்கள் என்பது அடுத்த காரணம் :icon_mrgreen:

 

:D :D

நீங்கள் சொல்கிறீர்கள் நான் சொல்ல முடியாது.. :rolleyes::icon_idea:

 

வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றி கிருபன் அண்ணா. :)

மனிசி வாசிக்குது எண்டவுடன என்னமா பீலா வுடுறாங்கய்யா.. :lol:

 

 

மாம்ஸ் நீங்க ஒரு முடிவோடை தான் இருக்கிறிங்கள் என்று தெரியுது.. அதுக்காக நான் எழுதாமல் விடுறதா இல்லை..... :D:lol::icon_mrgreen:

 

ஏற்கனவே சூனா பானா காமடிக்கு விளக்கம் சொல்லி முடியலைப்பா..... :rolleyes::icon_idea:

கலக்கிறீங்க  பாஸ்,  நான் பச்சை குத்துறதோட  சரி  ஏதாவது எழுதுவம் எண்டா வார்த்தைகள்  வருகுதில்லை .தொடருங்கள் 

 

இப்படியே சொல்லுறத்ஐ விட்டு சட்டு புட்டு னு எழுதுங்கோ, நாங்களும் படிக்கணும்,பச்சை குத்தணும்லே..

 

கடை வித்த கதைய எழுதினாலே யாழ்ழை பிச்சுக்கொண்டு ஓடும் அண்ணா.. :D

 

கனக்க கதைக்கான கரும்பை .. சீ.. கருவை வைத்துக்கொண்டு எழுதாமல் இருந்தால் என்ன நியாயம்?? :icon_idea:

 

நன்றி அண்ணா உங்கள் வருகைக்கும் கருத்துக்கும். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அந்தமாதிரி ரசித்து வாசிச்சேன் மச்சி. ஒருக்கா நான் லங்கா போகும்போது சிங்கை - கொழும்பு பயணத்தில் ஒருத்தன் எண்ட யன்னல் சீட்டில வந்து

குந்தீட்டான். நான் போர்டிங் பாஸ் எடுக்கும்போதே ஜன்னல் சீட்டை கேட்டு வாங்கியிருந்தேன். மரியாதையாகக் கேட்டேன், அசையவில்லை. கொஞ்சம் அந்தமாதிரி

வசனங்களைக் கலந்து விட்டேன். ஆள் எழும்பி சீட் மாரீட்டார்.

 

போனவருடம் இலங்கையில இருந்து சென்னை ஊடாக கனடா போன எனது நண்பன் தான் செத்தாலும் இனி

இந்தியா போக மாட்டேன் எண்டு சொன்னான். சென்னை எயர்  போட்டில மலசல கூட வசதி கூட இல்லை எண்டும் தான் 5 மணித்தியாலங்கள் இயற்கை உபாதைகளை அடக்கிக் கொண்டு இருந்தது எண்டும் சொன்னான். நீ போகேக்க என்ன மாதிரி நண்பா?

 

 

 நான் முதன் முதல் அவளைப்பார்க்க  2011 சென்னை சென்ற போது உன் நண்பன் சொன்னது போலத்தான் இருந்தது. அவ்வளவு கேவலம். நான் முகம் கழுவி ஃப்ரெஷ் ஆக.. :rolleyes:  போகலாம் என்று பார்த்து அங்கு அப்படி எதையுமே காணவில்லை,நாத்தம் குடலைப் பிடுங்க வந்து விட்டேன்,அதற்கு பிறகு ஒரு முறை கூட நான் போகவில்லை அதனால் இப்ப எப்படி என்று தெரியாது. ஆனால் டெல்லி எயார்போட் நல்ல சுத்தம்.

 

பொதுவாகவே நான் பொதுக்கழிப்பிடங்களை பாவிப்பது குறைவு அப்படியான இடங்களில் நான் நினைச்சு போய் இருந்தாலும் வராது.. :unsure:  ஆனால் "உச்சா" மட்டும் போவதுண்டு.. :D

 

நன்றி நண்பா வரவுக்கும், கருத்து பகிர்வுக்கும். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜீவா அண்ணா தொடருங்கள்... :)

 

உண்மையில் பயணம் என்பது மகிழ்வாக இருக்க வேண்டும். ஏதோ ஒரு விதத்தில் தடங்கல் வந்தால் விமானத்தில் இருந்து இறங்கும் வரை எரிச்சலாக தான் இருக்கும். :D

 

ஒருமாதிரி விமானத்தை விட்டு இறங்கியாச்சு. எப்ப மாமியார் வீட்டுக்கு செல்வீர்கள்? மனைவியை சந்திப்பீர்கள்? என்ன சொல்லப்போகிறீர்கள் என்பதை வாசிக்க ஆவலாக உள்ளேன். தொடருங்கள். :)

 

ஆனால் இப்படியான சில சந்தர்ப்பங்களும் மறக்க முடியாத நினைவுகளைத் தந்துவிடுவது உண்டு, இல்லையெனில் இப்படி என்று எழுதவேண்டும் என்ற எண்ணமே வந்திருக்காதல்லவா?

இதில் இன்னும் சில சுவாரசியமான சம்பவங்கள் நடந்துள்ளன ஆனால் அவற்றை தவிர்த்து தான் எழுதியுள்ளேன். :rolleyes:

 

நன்றி சிஸ்டர் உங்கள் வரவுக்கும், கருத்து பகிர்வுக்கும். :)

தம்பி ஜீவா!! இரண்டுமூண்டு நாளாய் உள்ள சனம் முழுக்க இதுக்கைதான் நிக்கிது....அலையுறாங்கள்........கவனம்......மாமி வீட்டை போனவுடனை அடக்கிவாசி....... :lol:

 

:D :D

நன்றி தாத்தா தங்கள் மேலான கருத்தை சிரமேற்கொள்கிறேன்.

வரவிற்கும்,கருத்து பகிர்விற்கும் நன்றி தாத்தா.. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாமியார் வீடு... (தொடர்ச்சி..) பகுதி - 6

 

550352_408641639210125_110441921_n.jpg

 

இறங்கியதும் விறு விறு என்று நடக்கத்தொடங்கி விட்டேன், ஒவ்வொரு நொடியும் அவளைப் பார்க்கும் ஆவலைத்தூண்டி விட்டன .. தாமதிக்கும் ஒவ்வொரு தடவையும் தவணை முறையில் மரணம் என்பதை அப்போது உணர்ந்தேன்.

ஆனால் அதே கண நேரத்தில் வேறு விமானமும் வந்திருக்கும் போல அதிகாலை 3.10 மணிக்கே கூட்டம் அதிகமாக இருந்தது.

கூட்டம் குறைந்த வரிசையில் நின்றேன்.

 

எப்படி எல்லாரும் பாடமாக்கி வைத்திருப்பார்களோ என்னவோ இங்கும் இமிக்கிரேசனில் அதே கேள்வி தான்.

 

"எதற்காக அடிக்கடி வருகிறாய்?"

"எங்கு தங்கப் போறாய்?"

 

"மனைவி இந்தியரா?"

 

இந்த கேள்விக்கணைகள் எல்லாம் முடியும் கடைசித் தறுவாய் இது.

 

படிகளில் இருந்து விரைவாய் இறங்கி வந்து கைப்பை,உடல்சோதனை முடித்து பொதி சேகரிக்கும் பகுதியில் காத்து நிற்கிறேன்.

என்னை காக்க வைக்க கூடாது என்றோ என்னவோ விரைவாகவே என் பொதி வந்து விட்டது, ஆனால் பதட்டம் தான் அதிகரித்துக்கொண்டிருந்தது இன்னும் முதன் முதலாக சந்திப்பது போன்ற படபடப்பு நெஞ்சில்...

 

வாசலில் நின்ற பொலிஸ் பாஸ்போட்டை பார்த்து விட்டு தந்ததும், வாசலுக்கு வரும்போதே உறவினர்,நண்பர்களை அழைத்துப்போக வந்த கூட்டம் காத்திருந்தது, என் கண்களும் என்னவளைத்தேடின ஆனால் ஏமாற்றம் தான் மிச்சம், எங்கும் அவளைக் காணவில்லை.

 

இந்தியா வந்ததும் பாவிக்க என்று சொல்லி ஒரு சிம் காட் தந்திருந்தாள், இரண்டாவது போனில் சொருகி அழைக்கலாம் என்று பார்த்தால் இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது. முதல் வரும் போது வேலை செய்ததே இப்போது என்ன ஆச்சு என்று நினைத்தவாறே எனது போனில் இருந்து அழைப்போம் என்று பார்த்தால் ரோமிங் செய்யாததால் அதிலிருந்தும் அழைப்பு மேற்கொள்ள முடியவில்லை.

 

எவ்வளவு எதிர்பார்ப்பு, படபடப்பு இருந்ததோ அதே அளவு கோவம் வந்தது.

இதில் "டாக்‌ஷி" வேணுமா? எங்கை போறிங்கள்?? " காசு மாத்தி தரவா"? என்று கேட்கும் போது எரிச்சல் தான் வந்தது.

நான் முதன் முதல் அவளைச் சந்திக்க வந்த போதும் இப்படித்தான் வந்தது..

இருவரும் தேடியே களைத்த்இருந்தோம். எத்தனை ஆசைகளோடு காதலைச் சொல்ல வந்தனான் முதல் சந்திப்பிலேயே அவளைத் திட்டித் தீர்த்தவை தான் ஞாபகம் வந்தன.. எனக்கு காத்திருக்கும் அளவுக்கு பொறுமையில்லை, அது அவளுக்கும் தெரியும், அதனாலேயே மற்றைய பயணங்களின் போதெல்லாம் மணிக்கணக்காய் முதலில் வந்து காத்திருப்பாள்.

 

ஆனால் இன்று ..!!!

 

டக்‌ஷி வேணுமா என்று கேட்டு வந்தார் ஒருவர்.

"போன் இருக்கா? ஒருக்கால் போன் பண்ணவா"?

 

நம்பரை சொல்லுங்கள்..?

டயல் பண்ணி றிங் போனதும் தந்தார்?

 

ஹலோ?

நான் ஜீவா(எனது உண்மையான பெயரைச் சொன்னேன்) பேசுறேன்.

 

என்ன நித்திரையா? இப்ப எத்தனை மணி? உனக்கு சொல்லுறது விளங்காதா? வராதை நான் டக்‌ஷி பிடிச்சுவாறேன்.

 

"சொறி..சொறி..சொறி..சொறி ... மாமா தான் பிந்திட்டார் வெளிக்கிட்டார், இருங்கோ அரை மணித்தியாலத்துக்குள்ளை வந்திடுறேன்".

 

சரி இது ஒரு டாக்‌ஷி கார ஆளின்ரை போனிலை கதைக்குறேன் கெதியா வா..

 

"அண்ணை எவ்வளவு காசு"? பரவாயில்லை என்ரை டாக்‌ஷியிலையே வாங்கோ அப்ப சேர்த்து தாங்கோ"

 

அந்த ஆள் எனக்கு பொடிகாட் போல நின்றார். வேறு யாரும் வந்து டாக்‌ஷி வேணுமா என்று கேட்டால்,

எனக்காய் அவரே பதில் சொன்னார் " அவர் என்ரை டாக்‌ஷியிலை வரப்போறார்"

 

முக்கால் மணிநேரம் இருக்கும் மொத்தமாய் காத்திருந்திருப்பேன்,அப்போ தான் மாமாவும்,அவளும் வந்தார்கள்.

 

அவளைப்பார்த்ததுமே கோவம் எல்லாம் போனாலும் கோவமாய் இருப்பது போலவே நடித்துக்கொண்டேன்..

 

"சொறி குட்டிமா"

 

"போடி நீயும் உன் சொறியும்"..

 

"கோவமா என்மேலை? மாமா தான் பிந்திட்டார் நீ தானே சொன்னாய் போடிங் எல்லாம் முடிச்சு வெளிய வர நாலு,நாலரை ஆகும் என்று அதான் அவர் கொஞ்சம் தூங்கிட்டார்.."

 

" கெதியா நான் வந்திட்டன், ஏன் கொஞ்சம் முதலே வந்திருந்தால் என்ன குறைஞ்சா போயிடுவிங்கள்?"

 

"ஏன் நீ எனக்காக கொஞ்சம் காத்திருக்க கூடாதா?"

 

"வேண்டாம், இதுக்கு மேலை பேசினால் சண்டை தான் வரும் நட .. அடுத்த முறை வரும் போது வந்திடாதையுங்கோ நானெ டாக்‌ஷி பிடிச்சு வந்திடுறேன்."

 

நடக்கும் போதே என் பொதியைப் பிடித்து அவள் இழுக்க பின்னால் வந்த டாக்‌ஷிகாரர் எங்கள் கைகளில் இருந்து பிடுங்கி டாக்‌ஷி ஸ்ரான்ட் நோக்கி நடந்தார்.

 

"யார் அவர்? எதுக்கு அவர் இழுத்துக்கொண்டுபோறார்"?

 

"அவற்றை போனிலை தான் உனக்கு கோல் பண்ணினான், அவற்றை டாக்‌ஷியிலையே போவம்"

 

"நீ உண்மையா லூசடா, தெரியாதவங்களை இப்படியா பக்கத்திலை வச்சிட்டு இருப்பாய்? ஏதும் ஒண்டு நடந்திட்டால்??"

 

"தெரியும்லே அப்ப வேளைக்கே வந்திருக்கலாம் லே"

 

"மாமா வந்து அண்ணை, வளசரவாக்கம் போகணும் எவ்வளவு?

 

500 ரூபா..

"எது 500ஆ???? நாங்கள் லோக்கல் தான், பக்கத்திலை இருக்கிற வளசரவாக்கத்திற்கு 500 ரூபாவா? 300 ரூபா தாறேன் வா.."

 

"அண்ணை நான் ஒரு மணியித்திலாத்துக்கு மேலை சவாரி போகாமல் அவர் கூடவே இருக்கிறேன்.."

 

நான் சொன்னேன் சரி பாவமா இருக்கு குடுங்கோ

 

ஒரு மாதிரி பேசி 400ரூபாக்கு சரி என்று சொன்னான்.

 

மாமா எங்களை டாக்‌ஷியில் ஏற்றிவிட்டு தான் மோட்டார்சைக்கிளில் வாறேன் என்று சொல்லிவிட்டார்.

 

"அருகருகே நாம், இருந்தும் நான் ஒதுங்கி இருப்பது போல் பாவனை பண்ணினேன், அவளும் வேணுமென்று தள்ளியே இருந்தாள்"

 

"மனம் பேசத்துடித்தாலும், கோவம் போல் நடித்துக்கொண்டேன், ஆனால் அடிக்கடி அவள் பார்க்காத போது அவளையே ரசித்துக்கொண்டேன். தெருவிழக்கின் ஒளிப்பிழம்பில் தங்கத்தாரகையாய் மின்னினாள்.."

 

"நான் பார்க்கும் போது அவள் திரும்பிக்கொண்டாள், அவள் பார்க்கும் போது நான் திரும்பிக்கொண்டேன்"

 

அன்று தை பதின்மூன்று போகிப் பொங்கல் தெருவெல்லாம் பழையனவற்றை எரித்துக்கொண்டிருந்தார்கள்.

 

அதையே சாட்டாக வைத்து "நல்லா இருக்குல்லே"?

 

"என் கையில் முஸ்டியால் குத்தியவள், நான் ஒருத்தி பக்கத்திலை இருக்கிறேன், என்னை விட உனக்கு அது நல்லா இருக்கா?"

 

சொறி.. கொஞ்சம் கோவம் அதான்.

 

"இடைவெளி குறைந்து கைகளைக்கோர்த்தவாறே.. அவள் தோளில் சாய்ந்தேன்.."

 

"............................... வேணாம்டா, ட்றைவர் கண்ணாடியில் பார்ப்பான்.."

 

வீடு வந்ததும் இறங்கும் போது வரவேற்பு அந்த மாதிரி இருந்திச்சுது.. அதிகாலை என்பதால் வீதியெங்கும் யாருமே இல்லை 

டாக்ஷியில் இருந்து இறங்க கால் வைக்குறேன் "நாய் ஒன்று ஜீன்ஸைப் பிடித்து இழுக்குது.."

 

மறுபக்கத்தால் இறங்கியவள் பார்த்து சிரித்துக் கொண்டு எப்படிச் சென்னையின் வரவேற்பு என்றாள்?

 

"நக்கலாடி உனக்கு? ... சூ..சூ என்று துரத்தி விட்டு, ட்ரைவரிடம்  காசைக் குடுத்துவிட்டு இருவரும் கைகோர்த்தபடி வீடுநோக்கி நடக்கிறோம்......

 

தொடரும்.....

Link to comment
Share on other sites

அவள் பார்க்காத போது அவளையே ரசித்துக்கொண்டேன். தெருவிழக்கின் ஒளிப்பிழம்பில் தங்கத்தாரகையாய் மின்னினாள்.."

 

நோட் த பொயின்ற்........... :icon_mrgreen:   எதுக்கும் ஒரு பத்து வரியம் கழிய உதவும்  :lol: :lol:  கையை கோத்து கொண்டு போனியளாம் :D  பேந்து  :unsure:  ??  தொடருங்கோ :) .

Link to comment
Share on other sites

நல்லா இருக்கு... :) ஆனால் பிரியா அக்கா பார்க்கிறா என்று ஐஸ் வைத்து வைத்து எழுதுகிறீர்கள்... :lol::icon_idea: மாமா மோட்டார் சைக்கிளில் வந்தது நல்லதா போய் விட்டது. இல்லையா? :lol: தொடருங்கள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேற்கூறிய... பதிவைப் பார்த்த போது... கொஞ்ச பதட்டத்துடன்,  ஆனந்தக் கண்ணீர் வழிந்தது.

பிரியாவின் அம்மா... அதாவது உங்கள் மாமி, எப்படி... உங்களை வரவேற்றா? என்று அறியும் ஆவல் எம்மை, தூண்டுது. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவள் பார்க்காத போது அவளையே ரசித்துக்கொண்டேன். தெருவிழக்கின் ஒளிப்பிழம்பில் தங்கத்தாரகையாய் மின்னினாள்.."

 

நோட் த பொயின்ற்........... :icon_mrgreen:   எதுக்கும் ஒரு பத்து வரியம் கழிய உதவும்  :lol: :lol:  கையை கோத்து கொண்டு போனியளாம் :D  பேந்து  :unsure:  ??  தொடருங்கோ :) .

 

பத்து வரியத்துக்குப் பின்னரான வாழ்க்கையை இப்பவே நினைக்கக் கூடாது கோமகன் அண்ணா.

இந்த நொடியை,இந்தநாளை சந்தோசமாக அனுபவிக்கணும் னு தான் ஆசை.. :D

 

நன்றி அண்ணா வரவிற்கும்,கருத்துப் பகிர்விற்கும். :)

Link to comment
Share on other sites

அட  பாவி வரசளவாக்கமா நல்லாயிரு :lol: அங்க ஆட்டோ காரன்  கூட வர பஞசிப்படுவானே  சதுர கட்டிடமா??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட  பாவி வரசளவாக்கமா நல்லாயிரு :lol: அங்க ஆட்டோ காரன்  கூட வர பஞசிப்படுவானே  சதுர கட்டிடமா??

 

 எனக்கு நீங்கள் கூறுவது புரியவில்லை சாத்திரி அண்ணா?

வளசரவாக்கத்தில் நீங்கள் குறிப்பிடும் இடம் எங்கே? என்ன சதுர கட்டிடம்?

 

சுத்தமா ஒன்றும் புரியவில்லை.. :rolleyes:

(விபரமாகச் சொல்லுங்கள் கேட்டாவது சொல்கிறேன். :) )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக போகுது ..பொடியின் வஞ்சகமிலாத  நேரஞ்சல் :D

Link to comment
Share on other sites

முடியவில்லை.. முடியவில்லை.. முடியவில்லை.. :D

 

ஐஸ் வச்சு முடிஞ்சாப்பில சொல்லுங்கப்பா.. வாறன்.. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முடியவில்லை.. முடியவில்லை.. முடியவில்லை.. :D

 

ஐஸ் வச்சு முடிஞ்சாப்பில சொல்லுங்கப்பா.. வாறன்.. :lol:

எங்களுக்கு ஜலதோஷம் வந்ததுதான்  மிச்சம்  பாஸ்  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லா இருக்கு... :) ஆனால் பிரியா அக்கா பார்க்கிறா என்று ஐஸ் வைத்து வைத்து எழுதுகிறீர்கள்... :lol::icon_idea: மாமா மோட்டார் சைக்கிளில் வந்தது நல்லதா போய் விட்டது. இல்லையா? :lol: தொடருங்கள். :)

நன்றி துளசி சிஸ்டர் உங்கள் கருத்துக்கு.. :)

 

ஜஸ் எல்லாம் இல்லை, அது தான் உண்மையும், கதைக்கு சுவாரசியத்தையும் தருவது,

பிரியா என்ற கேரக்டரை மறந்து விட்டு படியுங்கள். :D

மேற்கூறிய... பதிவைப் பார்த்த போது... கொஞ்ச பதட்டத்துடன்,  ஆனந்தக் கண்ணீர் வழிந்தது.

பிரியாவின் அம்மா... அதாவது உங்கள் மாமி, எப்படி... உங்களை வரவேற்றா? என்று அறியும் ஆவல் எம்மை, தூண்டுது. :)

 

இதுக்கே வா????? :rolleyes:

இதுக்கு உங்க பெர்ஃபோர்மன்ஸ் ரொம்ப ஓவர் ..... :D:lol::icon_mrgreen:

 

நன்றி சிறியண்ணா உங்கள்,வரவிற்கும் கருத்து பகிர்விற்கும். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானும் உங்களுடைய தொடரை பின் தொடருகின்றேன், தொடருங்கோ ஜீவா...

கண்டுகனகாலம் அக்கா.

 

நன்றி அனைவரையும் காக்க வைக்காமல் விரைவிலேயே முடித்துவிடுகிறேன். :)

சூப்பர் ஜீவா தொடருங்கள் 

 

நன்றி வாத்தியார் அண்ணா, உங்கள் ஊக்கத்திற்கு.. :)

நன்றாக போகுது ..பொடியின் வஞ்சகமிலாத  நேரஞ்சல் :D

 

நன்றி நிலா அக்கா, வருகைக்கும், கருத்துப்பகிர்வுக்கும்.. :)

 

அதனால் இத்தனை உறவுகளுடன் சந்தோசமாக இருக்கிறேன். :)

Link to comment
Share on other sites

ஜீவா நல்லா எழுதுகிறீர்கள். இளமையும் புதுமையும் நகைச்சுவையும் நன்றாக தெரிகிறது. அப்படியே என் வாழ்கையை பின்னோக்கி பார்த்த மாதிரி இருக்கு ஜீவா.

 

உங்கள் தேர்வுகள் நிச்சயம் பிழைக்காது. உங்கள் எதிர்பார்ப்புகளும் கூட.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முடியவில்லை.. முடியவில்லை.. முடியவில்லை.. :D

 

ஐஸ் வச்சு முடிஞ்சாப்பில சொல்லுங்கப்பா.. வாறன்.. :lol:

 

:D :D :D (மூன்று தரம் சிரிப்புக்குறி)

 

உண்மையைச்சொன்னா மட்டும் யார் தான் மாம்ஸ் நம்புறாங்க ??? :rolleyes::lol:

Link to comment
Share on other sites

நல்லாயிருக்கு ஜீவா.... தொடர்ந்து எழுதுங்கள். :)

ஆத்துக்காரி வேற திரும்பவும் யாழில வந்திருக்கா போல. :wub:  ம்ம்ம்ம்ம் ஜமாய்ங்க. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்களுக்கு ஜலதோஷம் வந்ததுதான்  மிச்சம்  பாஸ்  :)

 

__ayurvedisches_kopfschmerzbalsam.png

 

இதுக்கே இப்படினா இன்னும் எவ்வளவு இருக்கு.. :D:lol::icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரி சரி.....

அடக்கி வாசிக்கிறீங்கள் என்று தெரியுது.....

மாமி வீட்டுக்கு போய் இறங்கும்போதே நாய்தான் வரவேற்குது :icon_mrgreen:  எனக்கு அந்த நாய் வரவேற்ற விதம்தான் பிடிச்சிருக்கு.... வயிறு கொழுவிப்போச்சு... இனிமேல் உங்கள் மாமியார் வீட்டை வாசிக்கும்போது கவனமா இருக்கோணும் என்று முடிவுகட்டியிருக்கிறேன். :lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாமியார் வீடு .....(தொடர்ச்சி..) பகுதி - 7

 

486100_408642282543394_111833619_n.jpg

(படம்: வெயிலில் எடுத்த நம் இருவரின் நிழல்)

 

வீதியில் இருந்து அருகில் தான் வீடு, போகும் போதே பறை மேளம் போல ஒரு சத்தம்.

"அட நமக்கு இவ்வளவு வரவேற்பா..! அந்தளவுக்கு எதுவும் சாதிக்கலையே"

 

"சரி .. சரி.. இருக்கட்டும்" என்று நினைக்கும் போது அந்த சத்தம் எதிர்த்திசையில் ரொம்ப தூரத்தில் நகர்வது போல இருந்தது..

நல்ல காலம், அவளட்டைக் கேட்கலை.

 

வீட்டை நமக்காகவே அத்தையும்,சித்தியும்(அதுவும் ஒரு அத்தை தான்) விஷாலியும்(மாமாவின் மகள்)  வாசலில் நமக்காகக் காத்திருந்தார்கள். உள்ளே போனதும் அத்தை சுடச்சுட கோப்பி தரக் குடிச்சுக்கொண்டு இருக்கும் போது இவளும்,விஷாலியும் அடிபிஞ்ச கோப்பை போல மண்ணால் செய்த வட்ட வடிவ கோப்பையில் மாட்டுத்தோல் கட்டின மேளம் போல ஒன்றை வைத்து தட்டிக்கொண்டிருந்தார்கள்.

 

"அட எனக்காகத் தானே"?

 

"நினைப்புத்தான்".. இங்கை போகிக்கு இப்படி தான் அடிச்சு கிழிக்க வேணுமாம், அது தான் முறை, அடிச்சிட்டு இருக்கோம்.

 

"இரடி உன்னை அப்புறமா கவனிச்சுக்கிறேன்"

..........................(சென்சார்)

 

குளித்து முடித்து விட்டு வந்து நியூஸ் பேப்பர் படித்துக்கொண்டிருக்க மதிய உணவு தயாராகிக் கொண்டிருந்தது.

 

மறுநாள் தைப்பொங்கல், பின்னேரம் கரும்பு,தோரணம் எல்லாம் வாங்கி வந்து வாசலில் கட்டி விட்டு விடியலை வேண்டிக் காத்திருக்கிறோம். ஆனால் எனக்கு பழைய ஊர் நினைவுகள் தான் வந்து போயின..

 

"பொங்கலுக்காக எல்லாம் நாங்கள் எழும்பவதில்லை பல்லு மினுக்க முதல் ஆற்றை பட்டம் முதல் ஏத்துறது என்று தான் பக்கத்து வீட்டுப் பொடியளோடை போட்டி.. ஆனால் அன்றைக்கு அன்று பார்த்து காத்தடிக்காது. எப்படியாவது ஒரு "வாலாக்கொடி"யாவது ஏத்திவிட்டிருப்பேன்,அதுக்கே படுற பாடு இருக்கே.. வீட்டு கூரையிலை ஏறி நின்று நான் பிடிக்க அக்காவை இழுக்கச் சொல்லிட்டு

இரங்கி ஓடிவந்து நான் உச்சி ஏத்திட்டு தான் பல்லு மினுக்கி குளிப்பேன். பிறகு எங்கை கோயிலுக்கு போட்டு வர அம்மா முற்றத்திலை மாட்டு சாணகத்தாலை வட்டமா மெழுகி மூன்று கல்லு வச்சு அதிலை பொங்க பக்கத்து  அடுப்பிலை அக்கா வடை சுட ..

 

எப்படா பொங்கி முடிப்பாங்க தோட்டத்திலை போய் "அப்பத்தட்டிய" கிளப்புவம் என்று தான் மனம் துடிக்கும்.

சாப்பிட்டதும் ஓட்டம் தான், பட்டம் ஏத்துறது சின்ன விசயம் அதை வீட்டை கொண்டுவர படுற பாடு இருக்கே.. நாலைஞ்சு கூட்டுகள் பக்கத்திலை நிற்க நூல்க்கட்டைய கறண்ட் கம்பிக்கு மேலாலை எல்லாம் எறிஞ்சு மரங்கள்ளை முட்டாமல் தட்டாமல் கொண்டுவந்து வீட்டை கட்டும் போது இருக்கிற சந்தோசம் இருக்கே .."திருவிழாவிலை தேர் இழுத்து முடித்தமும் "அரோகரா" சொல்லிக் கை தட்டுவது போல இருக்கும்.

 

அதோடை விடுவமா பின்னேரம் பருத்திட்துறை முனைக்குப் போனால் பட்டப்போட்டி நடக்கும், அதை சாட்டிட்டு அமாவாசையட்ட படிக்கிற பெட்டையளும், கூடுதலா வியாபாரி மூலை,பருத்தித்துறைப் பெட்டையளும் குடும்பமா வருவாளுங்க பார்த்து சைட் அடிச்சிட்டு வந்து இரவு பொடியள் தொடுத்து விட்ட பட்டத்திற்கு லைற் போடுவங்கள், அதையும் முடிச்சிட்டு வர வீட்டை படுத்திடுங்கள், மதிலாலை குதிச்சு வீட்டு முன் வாசல்லை நாய் போல தூங்கிற சந்தோசம் இருக்கே""..!!

எல்லாவற்றையும் புலம்பெயர்ந்து தொலைத்த எமக்கு நினைவுகள் மட்டும் தான் அசைபோடமுடிந்தன..

கிட்டத்தட்ட ஜந்து வருடங்களின் பின் பொங்கல் கொண்டாட வந்திருக்கிறேன்."

 

நினைவிலே இருந்த என்னை பிரியாவின் குரல் வழமைக்கு திருப்பியது..

"வாங்கோ பாட்டி வீட்டை போட்டு வருவம்.."

 

நல்ல தூக்கத்தில் இருந்த எம்மை அத்தையின் குரல் அலாரமாய் ஒலித்தது

"மணியாச்சு சீக்கிரம் வாங்க."

 

எழுந்து நேரத்தை பார்த்தால் 7மணி..

9மணிக்கு மாமா வருவார் நீ கோயிலுக்கு போகணும் டா..

 

"நான் குளிச்சிட்டு வந்து உன்ரை உடுபை எடுத்திட்டு வாறேன் சரியா, நீ அவ்வளவும் தூங்கு?"

 

"போனவளின் கையை இழுத்து .. ஒன்னு குடுத்திட்டு போ.. !!"

 

"சீ....................."!!!

 

இவள் அத்தை கூட,சித்தி கூட வடைக்கு உழுந்து அரைக்க போறேன் என்றாள்.. நானும் மாமாவும் "பெரிய பாளையம் பவானி அம்மன்" கோவிலுக்குப் போனோம்.. திருப்பதி போகும் வழியில் ஒரு கிராமம்.

 

போகும் போதே ஒவ்வொரு இடத்தைப்பற்றியும் பற்றி விளக்கப்படுத்திக்கொண்டு வந்தார் மாமா.

புழல் மத்திய சிறை, செங்குன்றம் என்று எல்லாவற்றையும் சொன்னார். சென்னைக்கு குடிநீர் செங்குன்றத்திலிருந்து தான் வருவதாய் சொன்னார். சென்னையின் இரைச்சல்கள்,நாற்றங்களை தாண்டி அழகான கிராமமாய் இருந்தது.

 

ஆகப்பெரிய கோவில் இல்லை ஆனால் கூட்டம் அதிகம் வரும் போல வரிசை கட்டி இருந்தார்கள்.

நாங்கள் போனபோது கூட்டம் குறைவு, அங்கு அம்மனின் தலை மட்டும் தான் மூலஸ்தானத்தில் இருந்தது.

 

வந்ததும் எங்களுக்காய் பொங்கல் தயாராய் இருந்தது.

 

"நாலு நாள் அங்கு லீவு என்பதால் எல்லாரும் இருந்தார்கள், ஒவ்வொருத்தர் ஒன்று சொல்ல கடைசியிலை ஆன்மிகச் சுற்றுலாவாய்ப் போனது எனது பொழுது"

 

மறுநாள் மாட்டுப்பொங்கல் .. "திருத்தணி"க்குப் போவதாய் முடிவாயிற்று, ஆன்டியும்,மாமாவும் பைக்கில் வர நாங்கள் கோயம்பேடு போய், அங்கிருந்து திருத்தணிக்கு பஸ்ஸில் பயணமாகிறோம்.

 

தொடரும்..

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இடங்களைப் பற்றிய 'நேர்முக வர்ணனை' அருமை, ஜீவா!

 

ம்ம்.. ஊரில் இருந்திருந்தால், நல்லூர்க் கந்தசாமி கோவில் தேர்முட்டியில் இருந்து, தேர்த் திருவிழா நேர்முக வர்ணனை கொடுக்ககக் கூடிய எல்லாத் தகுதிகளும் உங்களிடம் இருக்கு! :D

 

ஆனால், பொம்பிளைப் பிள்ளையள், அதிகமா வாற இடம்! அது தான் கொஞ்சம் யோசிக்க வேண்டிக் கிடக்கு! :D     

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.