ஜீவா

மாமியார் வீடு...

Recommended Posts

ஆரம்பம் நல்லா இருக்கு...ஆத்துக்காரி வேற வாசிக்கின்றார் என்பதால் கவனமப்பு..!!

 

ம்ம்ம்

கொஞ்சம் வித்தியாசமாகத்தான் இருக்கும். :icon_idea:

Share this post


Link to post
Share on other sites

தொடருங்கள் ஜீவா!! ஜீவாவின் மனைவி இந்தியத் தமிழா?? ( கேக்காட்டியும் குறை நினைப்பியள் :lol: )

 

கேட்பதற்கு இப்படி வேறு ஒரு ஜடியா இருக்கா???? நீங்கள் கில்லாடியான ஆள் தான் அலை அக்கா.. :D:lol:

Share this post


Link to post
Share on other sites

தொடருங்கோ.. தொடருங்கோ... நானும் படிக்கிறேன்... :rolleyes:

 

இதைப் படிக்கும்போது சூனா பானாதான் ஞாபகத்துக்கு வந்தார்.. :lol:

 

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

இதைப் படிக்கும்போது சூனா பானாதான் ஞாபகத்துக்கு வந்தார்.. :lol:

 

 

முடியலை..www.animated-animation.de_smiley_3d_gifs

Share this post


Link to post
Share on other sites

இப்பத்தான் விசாவே கிடைத்திருக்கின்றது. அதற்குள்ளேயே களத்தில் இத்தனை அட்டகாசமான வரவேற்புகள்


மாமியார் வீட்டில்  இன்னும் அட்டகாசமாக இருக்கும் என நம்பலாமா ஜீவா :D  


வாழ்த்துகள்  தொடருங்கள் ஜீவா. 

Share this post


Link to post
Share on other sites

மாமியார் வீடு ... (தொடர்ச்சி ...) பகுதி- 3

 

ரெயில் நிலையம் வந்து எனது இடத்துக்கான ரெயில் புறப்படும் நேரத்தை பார்த்த போது மதியம் 1.12க்கு என்று இருந்தது,

அரை மணித்தியாலத்துக்கு மேலை இருக்கே .. உடனே "கம்ப்ஸ்"

c01befcf54317a2d27772e0ec7cc9abe_standar

பேக்கரியில் சாப்பிட்டு, கோப்பி குடிச்சிட்டு கிளம்ப நேரம் சரியாய் இருந்தது.

 

கடுகதியில் செல்லும் ரயிலில் காதோரம் mp33 பிளேயரில் இளையராஜாவின் இனியகானங்களைக் கேட்டவாறே இயற்கையின் அழகை ரசித்தவாறே வீடுவந்து சேர 3.30 மணி.

419711_409581702449452_36445061_n.jpg74691_409581609116128_1695125475_n.jpg

 

வந்து முகத்தை கழுவி விட்டு, குருவி கொத்தினது போல மதிய சாப்பாட்டை அள்ளி எறிந்து விட்டு வேலைக்கு வந்து எல்லா அலுவலும் முடிந்து இணையத்தில் விமான ரிக்கற் தேடினால் எல்லா விமான ரிக்கற்றும் விலை அதிகமாய் இருக்கு நாளைக்கு பார்ப்போம் என்று விட்டிட்டேன். மறு நாள் சிக்கினது யாழ் உறவு ஒருத்தர் தான்.

 

யோவ்.. மொக்கை போடுறிங்களா பேசாமல் எனக்கு ஒரு உதவி பண்ணுங்கோ என்று ரிக்கற் பார்த்து சொல்லுங்கோ என்று அன்பாய் சொல்ல அண்ணரும் தேடிப்பிடிச்சு ஏர் இந்தியாவிலை மலிவா கிடக்கு போறியா என்றார்?

"ஏன்பா என்னை கொல்லப்பார்க்கிறிங்களா? ஏற்கனவே நான் ஒருக்கால் போய் பட்டது காணாது என்று" "என்ன ஒரு கொலைவெறி"..

 

ஏற்கனவே நான் எல்லா வெப்சைட்டும் பார்த்து களைச்சிட்டேன் நீங்கள் தான் அடிக்கடி போறனிங்களே ஏதும் டிராவல் ஏஜென்சி தெரிஞ்சால் சொல்லுங்கோ என்றதோடு தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டது.

சிறிது நேரத்தின் பின் தொடர்புகொண்டு எமிரேட்ஸ் ல 800€க்கு கிட்ட வரும் போறியா?

 

"ஏர் இந்தியாவிலை போறதுக்கு இது பரவாயில்லை எதுக்கும் சொல்லுறேன்"

 

அப்ப தான் பைல் ல திறந்து பார்க்க பழைய ஈ-ரிக்கற் ஒன்று இருந்தது அந்த நம்பருக்கு தொடர்புகொண்டு கேட்க சரி கட்டார் எயார்வேய்ஸ்சில் ரெயில் அன்ட் ஃப்ளை கொஞ்சம் மலிவா நாலு ரிக்கற் இருக்கு புக் பண்ணட்டா?

 

நாள் வேறை இல்லை இதிலை யோசிக்க என்ன இருக்கு சரி ஓ.கே பண்ணிடுங்க என்று சொல்லிட்டு வச்சாச்சு.

 

வெள்ளிக்கிழமை ரிக்கற் ரெயில் நிலையத்தில் அடிச்சு எடுத்தாச்சு சனி 11மணிக்கு ஃபிளைட். டோஹா ட்ரான்சிற்.

 

உடுப்பொன்றும் எடுக்கலையே, என்ன கொண்டுபோக என்ற தவிப்பு மட்டும் மனசை வாட்டி எடுத்தது. இருப்பது ஒரு இரவுப்பொழுது தான் காலை 6.42க்கு ரெயின். என்ன செய்ய சரி ஏதேனும் வாங்குவோம் என்று போக வழியில் வந்தார் அண்ணாவின் நண்பர் ஒருவர்.

 

மட்டக்களப்பைச் சேர்ந்தவர், அண்ணாவின் நீண்ட நாள் நண்பர். வந்த நாள் முதல் என்னுடனும் நல்ல பழக்கம், எங்கள் வீட்டில் ஒருத்தர் போல இன்ப துன்பம் எல்லாவற்றிலும் இருக்கும் ஒருவர்.

 

"என்ன கடை பூட்டோ?"

ஓம் அண்ணா நாளைக்கு ஃபிளைட் அதான் ஏதும் உடுப்பு பார்க்கலாம் என்று.

 

"நானும் உன் கடைக்கு தான் வந்தனான் நீ இல்லை பிறகேன் நானும் கூடவே வாறேன்"

 

சரி வாங்கோ..

 

எனக்கு தேவையான எல்லாம் வாங்கியாச்சு, ஒரே ஒரு முக்கியமானதை எடுக்கலாம் என்றால் என்கூடவே வாறாரே, என்னெண்டு அதை எடுக்க,இங்கை அது சாதாரணமாக இருந்தாலும் அவருக்கு முன் அதை எடுக்க என்ன நினைப்பாரோ? "வெட்கம் வேறு வந்து தொலைத்தது" எப்படி காய் வெட்டலாம்? மனசுக்குள் ஒரு ஜடியா..!! சிறியண்ணா கை ஃபுல்லா சாமான் இருக்கு ஹான்ட் க்ரீம் எடுக்க மறந்துட்டேன், குறை நினைக்காதையுங்கோ ஒருக்கா எடுத்து கொண்டு வாறிங்களோ நான் பில் போடுறன்.

"சரி என்றவர் வருவதற்குள் எடுத்து பில் போடுமிடத்தில் வைத்து விட்டேன்"

 

பிரியாக்கும்,விஷாலிக்கும் ஏதும் வாங்குவம் என்று பார்த்தால், அது தான் பெரிய காமடி..

 

நான் எதை எடுத்தாலும் "எங்கை காட்டு பார்க்கலாம்"?

இந்தாங்கோ எப்படி அண்ணா இருக்கு?

 

இது கழுத்து பெருசா இருக்கு இதை அங்கை இருக்கிறதுகள் போட மாட்டுதுகள் வேறைய பாரு..

 

மறுபடியும் இன்னொன்றை காட்டி இது எப்படி இருக்கு?

"இது நல்லா இல்லை வேறை பார்"!!

 

எட்டு பத்து உடுப்புக்கு மேலை பார்த்திருப்பேன் ஒன்றும் சரியில்லை என்று சொல்லிப்போட்டார்,

 

"வேலியிலை போற ஓணானைப்பிடிச்சு வேட்டிக்குள்ளை விட்ட கதையாப்போச்சு என் நிலமை"

 

"எனக்குனு வந்து வாய்க்கிறாங்க வைரவருக்கு நாய் வாய்ச்சது போல.." கோவம் வந்தாலும் அவர் மனதை காயப்படுத்த முடியவில்லை, சமாளித்தேன்.

 

சரி வாங்கோ அண்ணா பில் போட்டிட்டு போவம். நான் ஒரு மணித்தியாலத்துக்கு பிறகு கடை திறப்பேன் என்று எழுதிப்போட்டு வந்தனான் ஆரும் காத்திருக்க போகுதுகள். இஞ்சை வாங்கிற காசுக்கு அங்கை வாங்க்கி குடுக்கிறேன் என்றாச்சு.

 

கடையிலை தான் வச்சு இருந்த சாமான்களை எல்லாம் பொதி பண்ணிவிட்டு, எனது ஆவணங்களையும் எடுத்து எல்லாவற்றையும் சரி பார்த்து விட்ட பின் தான் நிம்மதியாய் இருந்தது.

 

காலமை 6.30க்கு போனால் தான் 6.42 ரெயின் எடுக்க முடியும். அந்த நேரம் அண்ணா,அண்ணியிடம் வேறு சொல்ல முடியாது வார இறுதி பிள்ளைகளும் அதிகம் தூங்குவார்கள் அதனால் இரவே எல்லாம் சொல்லி முடித்து விட்டு.

காலை 5.30க்கு எல்லாம் எழும்பி குளிச்சு வெளிக்கிட்டு ரெயில் நிலையம் நோக்கி நடக்க ஆரம்பிக்குறேன்..

 

தொடரும்.....

 

 

Edited by ஜீவா
  • Like 8

Share this post


Link to post
Share on other sites

தொடருங்கள்.... :)
பேக்கரியின் படம் ஏதோ இணைக்க முயற்சித்திருக்கிறீர்கள். படம் வரவில்லை. அதை ஒருக்கா சரிபாருங்கள். :rolleyes:

 

"வேலியிலை போற ஓணானைப்பிடிச்சு வேட்டிக்குள்ளை விட்ட கதையாப்போச்சு என் நிலமை"

 

"எனக்குனு வந்து வாய்க்கிறாங்க வைரவருக்கு நாய் வாய்ச்சது போல.." கோவம் வந்தாலும் அவர் மனதை காயப்படுத்த முடியவில்லை, சமாளித்தேன்.

 

அவர் இதை வாசிக்க மாட்டாரோ? :D

 

Share this post


Link to post
Share on other sites

தொடருங்கள்....மாமியும் அம்மாதான், அம்மா வீட்டை போறீங்க...ஞாபகமிருக்கட்டும்

Share this post


Link to post
Share on other sites

மாமியார் வீடு ... (தொடர்ச்சி ...)

 

எனக்கு தேவையான எல்லாம் வாங்கியாச்சு, ஒரே ஒரு முக்கியமானதை எடுக்கலாம்

என்றால் என்கூடவே வாறாரே, என்னெண்டு அதை எடுக்க,இங்கை அது சாதாரணமாக

இருந்தாலும் அவருக்கு முன் அதை எடுக்க என்ன நினைப்பாரோ? "வெட்கம் வேறு

வந்து தொலைத்தது" எப்படி காய் வெட்டலாம்? மனசுக்குள் ஒரு ஜடியா..!!

சிறியண்ணா கை ஃபுல்லா சாமான் இருக்கு ஹான்ட் க்ரீம் எடுக்க மறந்துட்டேன்,

குறை நினைக்காதையுங்கோ ஒருக்கா எடுத்து கொண்டு வாறிங்களோ நான் பில்

போடுறன்.

"சரி என்றவர் வருவதற்குள் எடுத்து பில் போடுமிடத்தில் வைத்து விட்டேன்"

 

தொடரும்.....

 

நன்றாக இருக்கு மச்சி. அத வாங்கிறதுக்கு ஏனப்பா தயக்கம்? இப்பத்தானே விதவிதமான பிலேவரில வேற வருகுது.

 

https://www.youtube.com/watch?v=btKG7fK124A

 

இந்த கிளிப் தாண்டா ஞாபகத்துக்கு வந்திச்சு...

Share this post


Link to post
Share on other sites

இப்பத்தான் விசாவே கிடைத்திருக்கின்றது. அதற்குள்ளேயே களத்தில் இத்தனை அட்டகாசமான வரவேற்புகள்

மாமியார் வீட்டில்  இன்னும் அட்டகாசமாக இருக்கும் என நம்பலாமா ஜீவா :D  

வாழ்த்துகள்  தொடருங்கள் ஜீவா. 

 

வரவிற்கும், கருத்துப்பகிர்வுக்கும் நன்றி வாத்தியார் அண்ணா, :)

 

உங்கள் அனைவரின் எதிர்பார்ப்புக்கும் அமைய எழுத முயற்சிக்கிறேன் அண்ணா.

Share this post


Link to post
Share on other sites

தொடருங்கள்.... :)

பேக்கரியின் படம் ஏதோ இணைக்க முயற்சித்திருக்கிறீர்கள். படம் வரவில்லை. அதை ஒருக்கா சரிபாருங்கள். :rolleyes:

 

 

அவர் இதை வாசிக்க மாட்டாரோ? :D

 

 

நன்றி துளசி சிஸ்டர்.

 

படம் வேறு இணைத்துள்ளேன் பாருங்கள்.

 

"அவருக்கு மட்டுமல்ல வீட்டில் யாருக்கும் தெரியாது நான் யாழில் எழுதுவது.".. :rolleyes:

Share this post


Link to post
Share on other sites

தொடருங்கள்....மாமியும் அம்மாதான், அம்மா வீட்டை போறீங்க...ஞாபகமிருக்கட்டும்

 

நன்றி வந்தியத்தேவன் அண்ணை.. :unsure::blink:  வரவுக்கும் கருத்துக்கும். :)

 

உண்மை தான், எனக்கு இரண்டு அம்மாக்கள். :)

நன்றாக இருக்கு மச்சி. அத வாங்கிறதுக்கு ஏனப்பா தயக்கம்? இப்பத்தானே விதவிதமான பிலேவரில வேற வருகுது.

 

 

 

இந்த கிளிப் தாண்டா ஞாபகத்துக்கு வந்திச்சு...

 

அட பாவி.. :lol:  இப்படி பத்த வச்சிட்டியேடா.. எல்லாருக்கும் படிக்க புரியும் என்று நான் நாசூக்காக எழுத இப்படி பப்ளிக்கா வீடியோ கிளிப் வேறை போட்டு காட்டுறியேடா????? :( :(

 

குடும்பத்திலை குழப்பம் வராமல் விட்டால் சரி தான்.. :D:lol:

Edited by ஜீவா

Share this post


Link to post
Share on other sites

நல்ல பகிடியா கதை சொல்லுறிங்கள் . உங்கடை கதை உங்கடை ஸ்ரைலிலை வரட்டும் அதுதான் நல்லது .

Share this post


Link to post
Share on other sites

ஜீவாவின் எழுத்து சுவாரசியமாகவும் நகைச்சுவையாகவும் உள்ளது.தொடருங்கள்.பிரியாவும் பின் தொடர்கிறார் போல.

Share this post


Link to post
Share on other sites

பிரியாவும் பார்பதனால் இன்னும் உற்சாகமாக எல்லோ எழுத வேண்டும் யீவா :D

Share this post


Link to post
Share on other sites

மாமியார் வீடு ...... (தொடர்ச்சி..) பகுதி - 4

 

200699_409999009074388_1312669324_n.jpg

 

அதிகாலை என்பதால் புகையிரத நிலையத்திலும் சரி, ரெயிலிலும் சரி கூட்டம் அதிகம் இருக்கவில்லை.

ஆனால் சில நாழிகைகள் கழித்து டுசில்டோவ் புகையிரத நிலையத்தில் இறங்கி ICE ரெயில் எடுக்க வேண்டி இருந்தது. அங்கிருந்து தான் நேரடியாக ஃப்ராங்பேட் விமானநிலையம் செல்லும்.

 

தானியங்கி கஃபே  மெசினில் ஒரு கோப்பி அடிச்சுக்கொண்டு பிளாட்போர்மில் ரெயினுக்காக காத்திருக்கும் போது

"வெறிக்குட்டி ஒண்டு வந்து லைற்றர் இருக்கா எண்டிச்சுது"

முதல் நாள் டிஸ்கோ அல்லது பார்ட்டிக்கு போட்டு வந்து படுத்திருப்பான் போல உடுப்பு கொஞ்சம் நல்லா இருந்திச்சுது.

 

"இல்லை நான் புகைப்பதில்லை" என்றேன்.

 

"அப்புறம் எதுக்கு இங்கை வாறாய்?" என்று சொல்லிட்டு ஏதோ சொல்லிக்கொண்டு போனான்.

 

கஞ்சாவோ,கொஹைனோ அடிச்சிருப்பான் போல .. அந்த நினைப்பிலையே இருக்கானே, டிஸ்கோவுக்கும்,ரெயில் நிலையத்துக்கும் வித்தியாசம் தெரியாமல்..

 

அடக்கடவுளே! இதை எல்லாம் விபரிக்க அகராதியிலை தான் சொல்லெடுக்கவேணும் என்று சொல்லிக்கொண்டது மனது..

 

நல்ல காலம் அதிக நேரம் காத்திருக்க தேவை இல்லை என்பதால் ரெயினும் வந்துவிட்டது.

 

ஜன்னலோரம் தொங்கிய நாளிதழை எடுத்து பார்த்து கொண்டு mp3 யில் பாட்டுக்கொண்டு வர விமானநிலையம் வந்ததே தெரியவில்லை.

 

72895_408642349210054_547532433_n.jpg

 

558303_408642942543328_698575111_n.jpg

 

கட்டார் எயார்வேய்ஸ் இருக்கும் கவுண்டரைத் தேடிப்பிடித்து போர்டிங்காட்டை எடுத்துக்கொண்டு உடற்சோதனை எல்லாம் முடிந்து விமானத்தில் ஏறுவதற்கு முன் இருந்த நேரத்தில் ஊருக்கும்,பிரியாவுக்கும் சொல்லிவிட்டு விமானத்தில் ஏற சரியாக இருந்தது.

 

 

550007_409581692449453_106609364_n.jpg

 

ஒரு சிலரைத்தவிர அனேகம் வெள்ளை நிறத்தவர்களாகவே இருந்தனர். ஆரவாரமில்லாத அமைதியான பயணம், மதிய உணவு முடிந்ததும் அனேகர் தூங்கி இருந்தனர், ஒரு சிலர் புத்தகங்கள் படிக்க நான் இங்லிஷ் விங்லிஷ் படம் பார்த்துக்கொண்டிருந்தேன்.

சிறீதேவியின் நடிப்பு அருமை. உறவினர் விழாக்கள்,பணி,புலம்பெயர்ந்து என்ற பல காரணங்களுக்காய் குடும்பத்தை விட்டு வரும் பெண்கள் அன்னிய நாட்டில் படும் மொழிப்பிரச்சனையை சுவாரசியமாகச் சொல்லும் படம். அதுவும் "சிறீதேவியின் லட்டு சூப்பர்".. :rolleyes:

 

திருமண நிகழ்வில் ஒவ்வொருவரும் தம்பதியினரை வாழ்த்தும் போது சிறீதேவியின் முறை வரும் போது பேசும் வசனங்கள் நெகிழ்ச்சி. ஒரு காட்சியில் அமிதாப்பச்சனும் நடித்திருந்தார்.

 

படம் முடிந்ததும் எப்படி தூங்கினான் என்பது தெரியாது " பயணியர் கவனத்திற்கு இன்னும் சில மணி நேரங்களில் டோஹா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க உள்ளது, பயணிகள் சீட்பெல்ட்டை மாட்டுமாறு" அறிவிப்புக்கேட்டுத்தான் கண்விழித்தேன். நடு சீற் என்பதால் டோஹாவின் அழகை தரிசிக்க முடியவில்லை.

 

விமானத்திலிருந்து "பாக்" கை எடுத்துக்கொண்டு வரும் போது தான் பார்த்தேன் விமானத்திரிப்பிடத்திலேயே வி.ஜ.பி பிரமுகர்கள் வந்து இறங்குவது போல இறங்க அங்கிருந்து பஸ் மூலம் உரிய பகுதியில் சேர்த்தார்கள்.

46288_408641565876799_1960153000_n.jpg

 

 

மறுபடி டோஹா விமானநிலையத்திலும் உடற்சோதனை முடித்துக்கொண்டு சென்னை செல்லும் கட்டார் எயார்வேய்ஸ் கவுண்டரை நோக்கி நடக்கிறேன்.

 

தொடரும் .......

 

,

Edited by ஜீவா
  • Like 13

Share this post


Link to post
Share on other sites

யீவா தற்சமயம் பச்சைகள் கையிருப்பில் இல்லை பின்னர் போட்டுவிடுகிறேன். நன்றாக இருக்கிறது. எழுத்துகள் வாசிக்கும் ஆவலைத் தூண்டுகின்றன. மாமியார் வீட்டுக்குப்போகபின்னால்தான் கலகலப்பு அதிகமாக இருக்கும் என்று பட்சி சொல்கிறது. படங்களும் நன்றாக இருக்கின்றன. முக்கியமாக ஒருவிடயத்தைக் கவனத்தில் எடுத்தால் வாசிப்பவர்களுக்கு இலகுவாக இருக்கும். ஒவ்வொரு பதிவுக்கும் இலக்கம் இடுங்கள். இதுவரை நான் உங்களுடைய  தொடரில் 3 ஐ வாசித்துவிட்டேன் இனி 4இலிருந்து வாசிக்கவேண்டும் என்பதை ஞாபகத்தில் வைத்திருக்க உதவியாக இருக்கும். யீவா நம்மைப் போன்றவர்களுக்கு நேரம் கம்மி. யாழில் சிலருடைய ஆக்கங்களை ஆவலோடு தேடி வாசிப்பேன் அவர்களில் நீங்களும் ஒருவர். அதுதான் அடுத்ததடவை இதற்குள் எட்டிப்பார்க்கும்போது மீண்டும் விட்ட இடத்திலிருந்து படிக்க வசதியாக இருக்கும். :rolleyes:

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

தொடருங்கள் ஜீவா அண்ணா... :)

Share this post


Link to post
Share on other sites

"சிறீதேவியின் லட்டு சூப்பர்".. :rolleyes:

கண்ணா லட்டு திங்கபோற இடத்திலை இது தேவையா.

Share this post


Link to post
Share on other sites

ஜீவா கலக்கின்றீர்கள் ,தொடருங்கள் மிக இளமையாகவும் இனிமையாகவும் இருக்கு ,

 

கொசுறு -தமிழில் அமிதாப்பின் இடத்தில் அஜித் நடித்திருந்தார்

Share this post


Link to post
Share on other sites

ஜீவாவின் எழுத்து சுவாரசியமாகவும் நகைச்சுவையாகவும் உள்ளது.தொடருங்கள்.பிரியாவும் பின் தொடர்கிறார் போல.

ம்... தொடருகிறேன் அண்ணா...!!!

ஆனால், மனைவி என்ற உறவில் அல்ல...

ரசிகை என்ற முறையில்...!!

  • Like 2

Share this post


Link to post
Share on other sites

நன்றாக இருக்கிறது ஜீவா. தொடருங்கள்.

Share this post


Link to post
Share on other sites

பிளேன் காட்டிக்கொண்டு, நெடுக மினக்கடாம, மாமி வீட்டை கெதியாக் கூட்டிக்கொண்டு  போங்கோவன், தம்பி! :D

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.