• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Archived

This topic is now archived and is closed to further replies.

ஜீவா

மாமியார் வீடு...

Recommended Posts

தொடருங்கள் ஜீவா

Share this post


Link to post
Share on other sites

ம்... தொடருகிறேன் அண்ணா...!!!

ஆனால், மனைவி என்ற உறவில் அல்ல...

ரசிகை என்ற முறையில்...!!

 

நன்றி  பிள்ளாய்

இது யாழுக்கு புதிது.

தொடருங்கள்

Share this post


Link to post
Share on other sites

நல்ல பகிடியா கதை சொல்லுறிங்கள் . உங்கடை கதை உங்கடை ஸ்ரைலிலை வரட்டும் அதுதான் நல்லது .

நன்றி அக்கா,

வரவுக்கும் கருத்து பகிர்வுக்கும். :) உங்கள் எதிர்பார்ப்புக்கு அமைய இருக்குமோ தெரியவில்லை.

பொறுத்தருள்க..

 

ஜீவாவின் எழுத்து சுவாரசியமாகவும் நகைச்சுவையாகவும் உள்ளது.தொடருங்கள்.பிரியாவும் பின் தொடர்கிறார் போல.

 

நன்றி நுணா அண்ணா.. :)

 

அது பெரிய கதை நிழலி அண்ணாக்கு தெரியும். :rolleyes:

பிரியாவும் பார்பதனால் இன்னும் உற்சாகமாக எல்லோ எழுத வேண்டும் யீவா :D

 

ஆக மொத்தம் குடும்பத்திலை ஒரு குலைப்பன் வர பண்ணாமல் விடமாட்டியள் போல .. :D:lol:

Share this post


Link to post
Share on other sites

நன்றாக இருக்கிறது ஜீவா

Share this post


Link to post
Share on other sites

யீவா தற்சமயம் பச்சைகள் கையிருப்பில் இல்லை பின்னர் போட்டுவிடுகிறேன். நன்றாக இருக்கிறது. எழுத்துகள் வாசிக்கும் ஆவலைத் தூண்டுகின்றன. மாமியார் வீட்டுக்குப்போகபின்னால்தான் கலகலப்பு அதிகமாக இருக்கும் என்று பட்சி சொல்கிறது. படங்களும் நன்றாக இருக்கின்றன. முக்கியமாக ஒருவிடயத்தைக் கவனத்தில் எடுத்தால் வாசிப்பவர்களுக்கு இலகுவாக இருக்கும். ஒவ்வொரு பதிவுக்கும் இலக்கம் இடுங்கள். இதுவரை நான் உங்களுடைய  தொடரில் 3 ஐ வாசித்துவிட்டேன் இனி 4இலிருந்து வாசிக்கவேண்டும் என்பதை ஞாபகத்தில் வைத்திருக்க உதவியாக இருக்கும். யீவா நம்மைப் போன்றவர்களுக்கு நேரம் கம்மி. யாழில் சிலருடைய ஆக்கங்களை ஆவலோடு தேடி வாசிப்பேன் அவர்களில் நீங்களும் ஒருவர். அதுதான் அடுத்ததடவை இதற்குள் எட்டிப்பார்க்கும்போது மீண்டும் விட்ட இடத்திலிருந்து படிக்க வசதியாக இருக்கும். :rolleyes:

 

நன்றி சகாறா அக்கா, உங்கள் ஆக்க பூர்வமான கருத்துக்கு.. :)

 

உங்கள் ஆலோசனைப்படியே செய்துவிட்டேன், ஒவ்வொரு பதிவுக்கும் இலக்கம் இட்டாச்சு. நன்றி அக்கா.

Share this post


Link to post
Share on other sites

தொடருங்கள் ஜீவா அண்ணா... :)

 

நன்றி துளசி சிஸ்டர்.... :)

ஜீவாண்ணா;சூப்பர்;ஜமாயுங்கள். :)

 

வரவுக்கும், கருத்திற்கும் நன்றி வண்டி .. சீசீ.. வண்டு பிரதர்.

 

நீங்க யாரு, எங்கை இருந்து வாறிங்கள் எண்டும் எனக்கு தெரியும். :rolleyes:  அண்ணானு என்னையே கலாய்க்கிறிங்களே பிரதர். :rolleyes::lol::icon_idea:

Share this post


Link to post
Share on other sites

மாமியார்வீடு... (தொடர்ச்சி..)  பகுதி-5

 

நடந்த படியே கவுண்டரைத்தேடிய எனக்கு ஒரு இடத்தில் வியப்பாய் இருந்தது ரேஷன் கடையில் பொருட்களுக்கு காத்திருக்கும் கூட்டமளவுக்கு நெரிசல், வெள்ளைநிறமருகி கருப்பு,மாநிறங்களின் கலவையாய் இருந்தது.

அருகில் சென்று பார்த்தால் நான் தேடிவந்த அதே சென்னை செல்லும் கட்டார் எயார்வேய்ஸ் கவுண்டர்.

கூட்டம்,நெரிசல் இல்லாமல் அமைதியாக இருந்த ஜரோப்பாவின் இரண்டாவது பெரிய விமான நிலையத்தில் ஏறிய எனக்கு இது கொஞ்சம் அதிர்ச்சியே.

இவ்வளவு பெரிய கூட்டம்.. ஜேர்மன் மொழியும்,ஆங்கிலமும் கேட்ட காதுகளில் தமிழ் இன்பத்தேனாய் ஒலித்தது. எம்மவர்கள் என்ற மிடுக்கு வந்த போதும், காவலாளியின் குரல் சற்று காதுக்கு கசக்கவே செய்தது. " ப்ளீஸ் சிங்கிள் லைன்.. சிங்கிள் லைன்.." என்று ஒழுங்கின்றி நெருக்கி முட்டிமோதிக்கொண்டு நின்றவர்களை வரிசையில் நிற்கச்சொல்லி காவலாளி ஒழுங்குபடுத்திக்கொண்டிருந்தான். வரிசையின் இறுதியில் போய் நின்று கொண்டேன். இது என் முறை பாஸ்போட்டையும் என்னையும் ஒரு தடவை மேலும் கீழும் பார்த்த பெண் போடிங்காட்டில்  என்னை குத்துற மாதிரியே ஒரு குத்து குத்தி பாதி துண்டைத் தந்தாள்.

 

வருபவர்களை வரவேற்கும் விமானப்பெண், "வணக்கம்" 26D  இடது பக்கம் முன்னாலை என்றாள். 26Dதான் எனது சீற் நம்பர்.

உள்ளே நுழைந்த எனக்கு அதிர்ச்சி உண்மையில் விமானத்தில் தானா இருக்கிறேன் என்று என்னையே நான் கேட்டுக்கொண்டேன். ஏதோ "கறிக்கடைக்கு" போனது போன்ற இரைச்சல், அருகில் இருந்த சீற்றுக்குப் போய்ச்சேருவதற்கே பலமுறை "எக்ஸ்கியூஸ்மீ" சொல்ல வேண்டி இருந்தது.

 

வந்தமர்ந்து பெருமூச்சு விட்டுக்கொண்டேன், எப்படா போய்ச்சேருவேன் என்று.

விமானம் புறப்படத்தாமதம் ஆகும் என்று புரிந்துகொண்டேன், இன்னும் பலர் உள்ளே வந்தும் இருக்கைகளில் அமரவில்லை என்று ஹெட்போனைக் காதில் மாட்டி திரையைத்தட்டிக்கொண்டிருக்கிறேன்.

தனுஸ்,ஸ்ருதிஹாசன் நடித்த 3 படம் இருந்தது ப்ளே பண்ணிப்பார்த்துக் கொண்டிருக்க ஒரு நாற்பது,நாற்பத்தைந்து வயதிருக்கும் பெண்மணி வந்து அருகில் நின்றார் போடிங்காட்டையும் மேலை சீற் நம்பரையும் பார்த்தார், நான் நினைத்தேன் பக்கத்து சீற்காலியாக இருக்குது அதில் இருக்கபோறார் போல என்று நினைத்து எழுந்து வழிவிட்டேன். அவர் என்னுடைய சீற்றில் உட்கார்ந்து விட்டார். எனக்கு அப்படியே "ஷாக்" ஆயிட்டுது. நான் தான் ஒரு வேளை தப்பாக இருந்து விட்டேனோ என்று எண்ணி சீற் நம்பரைப் பார்த்து உறுதி செய்துகொண்டேன்.

 

" உங்களுக்கு ஆங்கிலம் தெரியுமா என்று ஆங்கிலத்தில் கேட்டேன்."

முறைச்சு பார்த்தார்

 

"சென்னைக்கு தானே விமானம் போகுது   தமிழாத்தான் இருக்கும் என்று எண்ணி இது என்னோட சீற் எழுந்து விடுறிங்களா என்று கேட்டேன்?"

 

பக்கத்திலை இரண்டு ஆம்பிளை பசங்க இருக்கானுங்க அதான்..

 

இதைப்பார்த்து விட்டு பின்னால் இருந்த அப்பெண்ணின் கணவன் வந்து என்ன என்று தன் மனைவிடம் விசாரிக்க,

நான் சொன்னேன் நீங்கள் இரண்டு பேரும் அருகருகில் இருங்கள் நான் விமானப்பணிப்பெண்ணிடம் சொல்லி உங்கள் இருக்கைக்கு மாறிவிடுகிறேன் என்று.

 

எப்ப சனியனை துரத்தி விடுவம் என்று நினைத்தாரோ இல்லை இந்த கொஞ்ச நேரமாவது நிம்மதியாய் இருப்பம் என்று நினைத்தாரோ என்னவோ

"பரவாயில்லை தம்பி ப்ளீஸ் இதிலையே இருக்கட்டும் என்று சொன்னார்."

இதுக்கு மேல் இதை வளர்ப்பது நாகரீகம் இல்லை என்று கருதி பக்கத்து சீட்டில் அமர்ந்து கொண்டேன்.

 

போகும் போது யாழிலை தமிழ்சிறி அண்ணா இணைக்கிற அன்றைய தினப்பலனைப் பார்த்திட்டுப் போயிருக்கலாமோ என்று நினைக்கிற அளவுக்கு அடுத்தடுத்த சம்பவங்கள் அதிரடியாய் இருந்தன..

 

எனது சீட்டில் இருந்தவர் நான் கேட்டுக்கொண்டிருந்த ஹெட்போனைக் கழட்டி விடச்சொன்னார்.

"ஒரு ஆள் பாவித்ததை மற்றவர் பாவிக்க கூடாது தானே, ஹெல்த்திலை கவனமா இருக்கிறா குட் ஆன்டி" என்று நினைத்து

நான் இருந்த சீட்டில் இருந்த பை உடைக்காத ஹெட்போனை அவரிடம் குடுத்தேன்.

 

"வேண்டாம்" என்றார்.

அப்ப படம்,பாட்டுக்கேட்கவில்லையாக்கும் என்று நினைத்து விட்டு என்பாட்டில் இருந்து விட்டேன்.

சற்று நேரத்தின் பின் திரும்பி பார்க்கும் போது நான் பார்த்த குறையில் இருந்து 3படம் ஓடிக்கொண்டிருந்தது..

 

என் தலையைக்கொண்டுபோய் சீற்றிலை முட்டவேணும் போல இருந்துச்சு..

"ஒரு வேளை வேற்றுக்கிரகவாசிகளோ என்று கூட மனம் நினைத்தது"

 

இதுக்கே இப்படியா இந்தா அடுத்தது என்று அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது..

 

விமானம் புறப்பட முதல் எல்லாரினதும் சீற்பெல்ட்,யன்னல் சாளரங்களை சரி பார்த்து விட்டு போன பின்னர் விமானம் ஓடுபாதையில் ஓடும் போது அருகில் இருந்த பெண் கைப்பையை எடுத்து தண்ணீர் போத்தல்,தண்ணீர்குவளை வைக்கும் தட்டில்

கொழுவிவிட்டார்.

 

528937_410390435701912_739634076_n.jpg

 

எனக்கு அப்படியே தூக்கிவாரிப்போட்டது, இருந்தும் முதல் பயணமாக இருக்கும் போல என்று நினைத்து

"ஆன்டி இதை இங்கை வைக்க கூடாது சீற்றுக்கு கீழை வையுங்கோ போகும் போது எடுக்கலாம் என்றேன்.."

 

பார்த்த பார்வையிலையே "எனக்கு தெரியும் நீ பொத்திட்டு இரு" என்ற மாதிரி இருந்தது.

 

"ஆன்டி" என்று சொன்னதுக்கு இந்த பார்வையா இல்லை "நீ எனக்கு வகுப்பெடுக்கிறியா" என்று இந்தப்பார்வையின் அர்த்தம் எனக்கு புரியவில்லை ஆனால் நமக்கேன் வேண்டாத வேலை, பெண் வேறு கையை பிடிச்சிட்டான், காலைப்பிடிச்சிட்டான் என்று கத்தினால் தர்ம அடி தான் விழும், உதவி செய்யப்போய் உபத்திரவம் எதுக்கு என்று நினைத்து பாட்டைக் கேட்டவாறு கண்களை மூடுவது போல நடித்துக்கொண்டிருந்தேன்.

 

விமானம் நிலையாய் பறப்பில் ஆரம்பித்த சில மணிநேரத்த்இன் பின் உணவுக்கு முதல் குடிவகைகளும்,ஸ்நாக்ஸும் குடுத்தார்கள், வாங்கி கொறித்துக்கொண்டிருக்கும் போது அருகில் இருந்தவன்.

 

"சென்னைக்கா"?

"எங்கையிருந்து வாறாய்?"

 

பதில் விசாரிப்புக்கு நான்

 

"நீங்கள்"?

 

"பஞ்சாப்,சென்னையில் வாகனச்சாரதியாய் இருக்கிறேன், ஆங்கிலமும்,தமிழும் கொஞ்சம்,கொஞ்சம் தெரியும்"

 

அத்துடன் அவன் ரெட்லேபலில் ஜஸ் போட்டுத்தரச்சொல்லி வாங்கி அடுத்தடுத்து வாங்கி குடித்துக்கொண்டிருந்தான்.

 

ஒருகல் ஒரு கண்ணாடி படத்தில் சந்தானமும்,உதயநிதி ஸ்டாலினும் அடிக்கும் கூத்துகளுக்கு எந்த விதத்திலும் குறைவில்லாத அளவுக்கு விமானப்பணிப்பெண்களை பாடாய்படுத்தி எடுத்தார்கள்.

 

"மேக்கப் போடாத பிகரைப் பார்த்தது போல இருந்தது அவர்கள் முகம்"..

 

சாப்பாடு வந்த போது அதைவிடப்பெரிய காமடி குறித்த பெண்ணுக்கு ரிக்கற் செய்தவர்கள் வெஜிட்டேரியன் என்று குடுத்திருக்க வேண்டும் போல அடையாளம் போட்டிருந்த உணவுப்பொதியை என்னிடம் ஏதும் கேட்காமலே நீட்டினாள் பணிப்பெண்.

" என்ன புதுசா இருக்கு முதலில் முதல் இருப்பவருக்கு குடுத்த பின் தானே மற்றவர்களுக்கு தருவார்கள்?! எப்படியோ நான் எனது சாப்பாட்டை திறந்து பார்க்க "வெஜ்" சரி.. எல்லாம் ஒன்று தான் என்று சாப்பிட ஆரம்பித்து விட்டேன்.

 

அருகில் இருந்த ஆன்டிக்கு என்னுடைய "நொன்வெஜ்" மாறி வந்திட்டுது.

சிக்கன் சிறு துண்டுகளாக நன்றாக அவிந்து தேங்காய்பாலில் காய்ச்சிய ஸோஷில் செய்திருப்பார்கள் போல ...

 

"என்னிடம் கேட்டார் இது சிக்கன் தானே?"

ஆமா.. ஏன்?

 

"நான் வெஜிடேரியன்"

சுத்தம்.. சீற் மாறியது உனக்கும்,எனக்கும் தானே தெரியும் பணிப்பெண்ணுக்கு எங்கை தெரியப்போகுது என்றது என் உள்மனது.

 

"இருங்கோ நான் மாத்தி வாங்கித்தாறேன்"..

 

"வேண்டாம் .. நான் மரக்கறி என்று நினைத்து சாப்பிடுறேன், சிக்கன் சாப்பிடலாம் தானே?"!  கேள்வி வேறை..

 

என்னாலை சிரிப்பை அடக்க முடியவில்லை, அந்த நேரத்து உணர்வுகளை வார்த்தைகளிலும் வடித்து விட முடியாது ..

 

அப்பா... கொஞ்ச நேரம் தூங்குவம் என்று நினைத்து கண்ணை மூடினாலும், தூக்கம் வரவில்லை ஆறுமாதத்திற்குப்பின் என்னவளைப் பார்க்கப் போறேன் என்ற உணர்வு செல்லரித்த புத்தகமாய் எட்டிப்பார்த்தது ..

நினைவுகள் மெல்ல மெல்ல உருகி கருத்தரிக்க ஆரம்பித்தன்..

 

காகிதமே இல்லாமல் மனதின் வெண்திரைகளில் அவள் வதனம் படம் வரையத்தொடங்கின, ஏக்கங்கள் நெஞ்சாங்கூட்டை பிழிவது போன்ற உணர்வு .. தூங்கினால் அவள் நினைவுகள் என்னை கொன்று விடும் போல் இருந்தன ..

 

பேசாமல் படம் பார்ப்பம் என்று நினைக்க "உச்சா" வருவது போல இருந்திச்சு ... சரி போட்டு வருவம் என்று பார்த்தால்,

பக்கத்து சீட் ஆன்டி சாப்பாடு வைத்து சாப்பிடும் தட்டை இழுத்து விட்டு தூக்கம் மற்ற பக்கத்தாலை போகலாம் என்று பார்த்தால் இரண்டுபேரைக்கடந்து போகணும், என்ன செய்ய?

 

பாக்கெட்டில் இருந்த பேனையால் அன்டியை தட்டி, "கொஞ்சம் எழும்புறிங்களா வெளிய போட்டு வாறேன்?"

 

பாத்ரூம் போனால் ஒரு கூட்டமே லைனிலை நின்றார்கள், ஒவ்வொருத்தர் போய் வரவும் ஆகக்குறைந்தது 20முதல் அரை மணிநேரமாவது ஆயிருக்கும், முட்டிட்டு இருக்குதே என்று அடக்கிட்டு போட்டு வந்ததே பெரிய சாதனை..

 

உண்மையில் எனக்குள் பல கேள்விகள் வந்து போயின ..

அன்னிய மொழிகளை, மேற்கத்தேய,அமெரிக்க கலாச்சாரங்களை, இசை,சினிமா என்று எல்லாவற்றையும் பிரதி பண்ணும் ஒரு இனக்குழுமம் அவர்களிடமிருந்து பொது நாகரீகம்,பழக்கவழக்கங்களை மட்டும் கற்றுக்கொள்ளவில்லைப்போல என்ற எண்ணவோட்டமே மனதை நெருடியது..

 

ஒரே விமானநிறுவனத்தில் இரண்டு நாடுகளுக்கிடையே நடந்த பிரயாணத்திலேயே பணியாளர்களின் கவனிப்பு,முகம்சுழிப்பு என்பதை கண்கூடாக பார்க்கும் போது எங்கே எமது அடிப்படை பிழைத்துப்போகிறது என்ற விடையம் மட்டும் மில்லியன்டொலர் கேள்வியாக தொக்கி நிற்குது..

 

"இதுவும் கனவா"

என்று நினைத்த எனக்கு இன்னும் சில நேரங்களின் பின் விமானம் தரையிறங்க உள்ளது என்ற அறிவிப்பு நெஞ்சில் பால் வார்த்தது..

 

என்னுயிரை சந்திக்கும் எண்ணம் உந்தித்தள்ள விமானத்தை விட்டு இறங்குகிறேன்.

 

தொடரும்....

 

 

 

Share this post


Link to post
Share on other sites

ஜீவா.. இதெல்லாம் சகஜமப்பா.. :D விமானம் தரையைத் தொட்டு ஓடுதளத்தில் ஓடிக்கொண்டிருக்கும்போதே எழுந்து வாசலுக்குப் போயிருப்பார்களே?? :D

 

 

Share this post


Link to post
Share on other sites

கதை நன்றாகப் போகின்றது.. விமானப் பயணங்களில் எப்போதும் நான் Aisle சீற்தான் தெரிவு செய்வேன். தேவையில்லாமல் மற்றவர்களுக்கு சிரமம் கொடுக்கக்கூடாது என்பது ஒரு காரணம்.. விமானப் பணிப்பெண்கள் போய் வரும்போது உரசிச் செல்வார்கள் என்பது அடுத்த காரணம் :icon_mrgreen:

 

 

 

 

Share this post


Link to post
Share on other sites

மாமியார்வீடு... (தொடர்ச்சி..)  பகுதி-5

 

காகிதமே இல்லாமல் மனதின் வெண்திரைகளில் அவள் வதனம் படம் வரையத்தொடங்கின, ஏக்கங்கள் நெஞ்சாங்கூட்டை பிழிவது போன்ற உணர்வு .. தூங்கினால் அவள் நினைவுகள் என்னை கொன்று விடும் போல் இருந்தன ..

 

மனிசி வாசிக்குது எண்டவுடன என்னமா பீலா வுடுறாங்கய்யா.. :lol:

 

Share this post


Link to post
Share on other sites

கலக்கிறீங்க  பாஸ்,  நான் பச்சை குத்துறதோட  சரி  ஏதாவது எழுதுவம் எண்டா வார்த்தைகள்  வருகுதில்லை .தொடருங்கள் 

Share this post


Link to post
Share on other sites

அந்தமாதிரி ரசித்து வாசிச்சேன் மச்சி. ஒருக்கா நான் லங்கா போகும்போது சிங்கை - கொழும்பு பயணத்தில் ஒருத்தன் எண்ட யன்னல் சீட்டில வந்து
குந்தீட்டான். நான் போர்டிங் பாஸ் எடுக்கும்போதே ஜன்னல் சீட்டை கேட்டு வாங்கியிருந்தேன். மரியாதையாகக் கேட்டேன், அசையவில்லை. கொஞ்சம் அந்தமாதிரி
வசனங்களைக் கலந்து விட்டேன். ஆள் எழும்பி சீட் மாரீட்டார்.

 

போனவருடம் இலங்கையில இருந்து சென்னை ஊடாக கனடா போன எனது நண்பன் தான் செத்தாலும் இனி
இந்தியா போக மாட்டேன் எண்டு சொன்னான். சென்னை எயர்  போட்டில மலசல கூட வசதி கூட இல்லை எண்டும் தான் 5 மணித்தியாலங்கள் இயற்கை உபாதைகளை அடக்கிக் கொண்டு இருந்தது எண்டும் சொன்னான். நீ போகேக்க என்ன மாதிரி நண்பா? 

Share this post


Link to post
Share on other sites

ஜீவா அண்ணா தொடருங்கள்... :)

 

உண்மையில் பயணம் என்பது மகிழ்வாக இருக்க வேண்டும். ஏதோ ஒரு விதத்தில் தடங்கல் வந்தால் விமானத்தில் இருந்து இறங்கும் வரை எரிச்சலாக தான் இருக்கும். :D

 

ஒருமாதிரி விமானத்தை விட்டு இறங்கியாச்சு. எப்ப மாமியார் வீட்டுக்கு செல்வீர்கள்? மனைவியை சந்திப்பீர்கள்? என்ன சொல்லப்போகிறீர்கள் என்பதை வாசிக்க ஆவலாக உள்ளேன். தொடருங்கள். :)

Share this post


Link to post
Share on other sites

தம்பி ஜீவா!! இரண்டுமூண்டு நாளாய் உள்ள சனம் முழுக்க இதுக்கைதான் நிக்கிது....அலையுறாங்கள்........கவனம்......மாமி வீட்டை போனவுடனை அடக்கிவாசி....... :lol:

Share this post


Link to post
Share on other sites

ஜீவா, இன்று தான் இத்திரியை பார்த்தேன்... முழுபகுதியையும் வாசித்தாயிற்று..... இப்பிடிவே விறுவிறுப்பு குறையாமல் எழுதுங்கோ... :)

Share this post


Link to post
Share on other sites

அருமையான பயணக்கட்டுரையை... படங்களுடன் பதியும் போது, நாங்களும்... பயணிப்பது போல் உணர்வு ஏற்படுகின்றது ஜீவா.
பிரியாவீட்டில் என்னமாதிரியான உபசாரம் நடந்தது... என்பதை வாசிக்க, மிகவும் ஆவலாக உள்ளோம். :)  :rolleyes:

Share this post


Link to post
Share on other sites

அன்னிய மொழிகளை, மேற்கத்தேய,அமெரிக்க கலாச்சாரங்களை, இசை,சினிமா என்று எல்லாவற்றையும் பிரதி பண்ணும் ஒரு இனக்குழுமம் அவர்களிடமிருந்து பொது நாகரீகம்,பழக்கவழக்கங்களை மட்டும் கற்றுக்கொள்ளவில்லைப்போல என்ற எண்ணவோட்டமே மனதை நெருடியது..

நாங்கள்தான் வெள்ளைகளுக்கு நாகரீகம் கற்றுக்கொடுத்த உத்தமர்கள்:D தொடுங்கோ....மன்னிக்கவும் தொடருங்கோ :D

Share this post


Link to post
Share on other sites

உண்மையில் எனக்குள் பல கேள்விகள் வந்து போயின ..

அன்னிய மொழிகளை, மேற்கத்தேய,அமெரிக்க கலாச்சாரங்களை, இசை,சினிமா என்று எல்லாவற்றையும் பிரதி பண்ணும் ஒரு இனக்குழுமம் அவர்களிடமிருந்து பொது நாகரீகம்,பழக்கவழக்கங்களை மட்டும் கற்றுக்கொள்ளவில்லைப்போல என்ற எண்ணவோட்டமே மனதை நெருடியது..

எங்களுக்கு வசதியானவற்றை மட்டும் தான், நாங்கள் எடுத்துக்கொள்வோம்! :D

 

ஏன்ரா, இந்த இனக்குழுமத்தில் வந்து பிறந்தோம், என்று நீங்கள் ஒருநாள் கூட வருத்தப் பட்டதில்லையா.ஜீவா? :icon_mrgreen:

Share this post


Link to post
Share on other sites

கண்ணா லட்டு திங்கபோற இடத்திலை இது தேவையா.

 

:D :D

நன்றி சாத்திரி அண்ணா வரவுக்கும்,கருத்து பகிர்வுக்கும். :)

நன்றாக எழுதுகின்றீர்கள்

 

நன்றி வந்தியத்தேவன் அண்ணா. :)

இப்போது தான் நடை பழக ஆரம்பிக்கிறேன்.

ஜீவா கலக்கின்றீர்கள் ,தொடருங்கள் மிக இளமையாகவும் இனிமையாகவும் இருக்கு ,

 

கொசுறு -தமிழில் அமிதாப்பின் இடத்தில் அஜித் நடித்திருந்தார்

 

நன்றி அர்ஜுன் அண்ணா கருத்து பகிர்வுக்கு.. :)

நன்றாக இருக்கிறது ஜீவா. தொடருங்கள்.

 

நன்றி தப்பிலி அண்ணா,உங்கள் அனைவரின் ஊக்கம் தான் தொடர்ந்து எழுதும் உந்துசக்தி.. :)

பிளேன் காட்டிக்கொண்டு, நெடுக மினக்கடாம, மாமி வீட்டை கெதியாக் கூட்டிக்கொண்டு  போங்கோவன், தம்பி! :D

 

பிளேனில் நடந்த சம்பவங்கள் தான் சுவாரசியம் அண்ணா.. :D

 

இருந்தாலும் விரைவில் உங்கள் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற முயற்சிக்கிறேன். :icon_idea:

தொடருங்கள் ஜீவா

 

நன்றி தமிழ்சூரியன் அண்ணா.. :)

நன்றாக இருக்கிறது ஜீவா

 

நன்றி விழி அண்ணா, உங்கள் வருகைக்கும் எழுத்திற்கும். :)

அடிக்கடி தொடரும் போடாமல் தொடருங்கோ

 

நன்றி சஜீவன் அண்ணா.

விரைவில் முடித்துவிடுகிறேன்.. :)

Share this post


Link to post
Share on other sites

மனிசி வாசிக்குது எண்டவுடன என்னமா பீலா வுடுறாங்கய்யா.. :lol:

 

உங்க மனநிலைதான்  எனக்கும். :D

 

நாம  மட்டும் தான் இப்படியெல்லாம் பீலா விட்டு மனைவியை  கைக்குள்ள வைத்திருக்கோம் என்று இதுவரை பீலாவிட்டபடி இருந்தோம்.

இவங்களும்அதை செய்யும்போது கொ :lol: ஞ்சம் சுடத்தான் செய்யுது.

சரி சரி

கண்ணைத்துடைத்துக்கொள்ளுங்கள்

 

ஜீவா

நீங்கள் தொடருங்கள்

இந்த எரிச்சல்காறர்களை  கண்டு கொள்ளாதீர்கள் :lol:  :D

Share this post


Link to post
Share on other sites

சூப்பராக இருக்கு ஜீவா. எனக்கு ஒரு 5 வயசு குறைஞ்ச மாதிரி இருக்கு, வாசிக்கும் போது . :lol:

Share this post


Link to post
Share on other sites

நல்ல தொடர், நன்றாக உள்ளது, தொடருங்கள்

Share this post


Link to post
Share on other sites

மாமியார் வீடு நல்லா இருக்குது தொடருங்கோ........

Share this post


Link to post
Share on other sites

நன்றாக எழுதுகின்றீர்கள் ஜீவா..... வாழ்த்துக்கள்...! மாமியார் வீடு தொடரட்டும் :)

Share this post


Link to post
Share on other sites