Jump to content

நேசக்கரம் இணையத்தளம் மீது சைபர் தாக்குதல்.


Recommended Posts

நேசக்கரம் இணையத்தளம் மீது சைபர் தாக்குதல்.
logo.png
நேசக்கரம் இணையம் மீதான சைபர் தாக்குதலினால் நேசக்கரம் இணையம் செயலிழந்துள்ளது. பதிவேற்றப்பட்ட சகல தரவுகளும் ஆவணங்களும்  அழிக்கப்பட்டு இணையம் முடக்கப்பட்டுள்ளது.  மீளவும் ஒழுங்கமைக்கும் வரை நேசக்கரம் இணையம் இயங்காதென்பதனை அறியத்தருகிறோம்.

 

இணைய வழங்கிச் சேவையினர் விரைவில் வழங்கியை சீர்படுத்தித் தந்த பின்னர் அனைத்து விபரங்களும் மீள தரவேற்றப்படும்  என்பதனை அறியத்தருகிறோம்.
 


 

தொடர்பு கொள்ள வேண்டிய விபரம் :-



Nesakkaram e.V.

Hauptstrasse 210

55743 Idar-Oberstein

Germany



Telephone:(Shanthy) +49 (0)6781 70723 /Mobile – 0049 1628037418

 

nesakkaram@gmail.com

Skype – Shanthyramesh



www.nesakkaram.org



 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் கவலைக்குரிய தகவல்

 

உங்களுக்கு பலமாக நாம் இருப்போம் சாந்தியக்கா.

பலயீனமடைந்து விடாதீர்கள்

Link to comment
Share on other sites

மிகவும் கவலைக்குரிய தகவல்

 

உங்களுக்கு பலமாக நாம் இருப்போம் சாந்தியக்கா.

பலயீனமடைந்து விடாதீர்கள்

 

மிக்க நன்றிகள் உங்கள் அன்பிற்கு.

 

எல்லாத் தரவுகளும் அழிந்துவிட்டது. இனி ஒவ்வொன்றாக தரவேற்ற வேணும். கடந்த 3நாட்களாக இதுவரை செய்த யாவும் அழிந்துவிட்டது போன்று மனம் அமைதியில்லாமல் இருக்கிறது. 3ம் திகதிக்கிடையில் இணைய வழங்கி மீண்டும் செயற்படும் வகையில் தருவதாக சொல்லியுள்ளார்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் ஈனத்தனமான, இழிந்த ஒரு செயல்!

 

தமிழனின் பொழுது விடிந்து விடக் கூடாது என்பதில், எத்தனை வஞ்சகர்கள் கவனமாக இருக்கிறார்கள்?

 

மீண்டும் தழைக்கலாம், சாந்தி!

Link to comment
Share on other sites

கவலையான தகவல்,

 

 நீங்கள் இணையத்தளத்தில் பதிவேற்றும் அனைத்தையும் எப்பொழுதும் ஒருகொப்பி பிரதி எடுத்து இன்னுமொரு பதிவேட்டில் சேமித்து வையுங்கள்.

Link to comment
Share on other sites

அழிவுகளும்,இழப்புகளும் தினம் தோறும் எமக்கு ஒரே செய்தியைத் தான் சொல்கிறது. 

தமிழன் பூமிப் பரப்பில் எங்கு வாழ்ந்தாலும், எமக்கென்றோர் தேசம் இல்லாத வரை நாம் தொடர்ச்சியாக அழிக்கப்படுவோம் என்பதே அது.
எனவே விடுதலைக்கான தேவை உள்ளவரை எமது போராட்டம் தொடர வேண்டும். 
இல்லையேல் ஒட்டு மொத்த தமிழ் இனமுமே தனது இருப்பை தொலைக்கும் காலம் தூரத்தில் இல்லை.
புதிதாய்..., மீண்டும் புதிதாய்  முழைப்போம். 
ஒன்றாய், பலமாய் எழுவோம். 
 
Link to comment
Share on other sites

சிங்களப் புலனாய்வுத் துறை செய்ய வேண்டியதை , எங்களில் உள்ளவர்கள் செய்வது கடும் கண்டனத்துக்குரியது . வெளியே சிரித்தபடி உள்ளத்தில் கொடிய விசத்தை வைத்திருக்கும் பார்த்தீனியச் செடிகள் பல்கிப் பெருகிவிட்ட நிலையையே நேசக்கரம் இணையத்தளத்தின் மீதான சைபர் தாக்குதல்கள் முகத்தில் அறைந்தால் போல் சொல்கின்றன . ஆனாலும் ,  பல கல்லெறிகளையும் , சொல்லடிகளையும் தாண்டிய நேசக்கரம் இதையும் தாண்டி வீறுநடைபோடும் என்பதில் ஐயமில்லை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யார் இந்த தாக்குதலை செய்திருந்தாலும் அது கண்டனத்திற்குரியதே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விழ விழ  எழும் தைரியம் சாந்திக்கு  எப்போதுமே உண்டு . உங்கள்  பணி  தொடரட்டும் 

Link to comment
Share on other sites

கஷ்டப்பட்ட சனத்திற்கு நல்லது செய்வதும் கஷ்டம் போல கிடக்கு. ஈனர்களின் வழி இது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தச் செய்தியைப் பார்த்தபோது மிகவும் கவலையக இருந்தது. காய்க்கிற மரத்துக்குத்தான் கல்லெறிவிழும்.  முதுகெலும்பு இல்லாத முட்டாள் கூட்டம்.  அரங்கேற்றிய ஈனத்தனமான செயல்.

 

சாந்தியக்கா மனம் தளராமல் உறுதியாக இருங்கள். நீங்கள் எங்களுக்குத் தேவை. எங்கள் அன்பும் ஆதரவும் என்றும் உங்களுக்கு உண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது தருணம் பார்த்து மேற்கொள்ளப்பட்ட உள்வீட்டுச் சதியாக இருக்கவே அதிக வாய்ப்புள்ளது. பங்குபிரிப்பு கதை போல... இது பற்றியும் ஒரு தொடர் எழுதலாம் போல. எப்பவும் நியாயத்தின் பக்கம் நின்றால் ஏன் இப்படி எல்லாம் நடக்கப் போகுது..! :icon_idea::rolleyes:

 

ஏன் என்றால்... நேசக்கரம் இணையத்தில் புலனாய்வுத் தகவல்களோ.. முக்கிய அரச தகவல்களோ.. இராணுவ தகவல்களோ.. இல்ல அறிவியல்.. வியாபார.. இணைய ரகசிங்களோ இல்லை. மனிதாபிமான நடவடிக்கைகளுக்குரிய தகவல்கள் மட்டுமே உண்டு. இருந்தும்.. ஏன் இது நடக்குது.. என்று யோசிச்சும் பார்க்கனும்..???! :icon_idea:

Link to comment
Share on other sites

வன்னமையாக கண்டிக்கப்பட வேண்டியது, ஆனாலும் இப்பிடியான செயல்களால் நேசக்கரம் மேலும் மேலும் வளர ஒரு உந்து சக்தியாக இருக்கும் என்றும் நம்புகின்றோம் அந்த வகையில் அழித்தொளிப்பத்தாக நினைத்துக்கொண்டு நேசக்கரம் விருட்சமாக வளர பலசாதனைகள் படைக்க நேசக்கரம் நிறுவனத்திற்கு ஒரு ஊக்கத்தை அளித்திருக்கின்றார்கள்

Link to comment
Share on other sites

நேசக்கரம் இணையத்தளம் மீது சைபர் தாக்குதல்.

 

 

நீங்கள் புலம் பெயர் தேசத்தில் இயங்குவதால் - சட்ட நடவடிக்கை எடுக்க முடியாதா?

முயற்சி செய்து இத்தகைய செயல்களை செய்பவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதோடு

மட்டுமல்ல, பெருமளவு நட்ட ஈட்டையும் பெற்றுக்கொள்ளலாம் என நினைக்கிறேன்!

எனவே தாமதிக்காமல் சட்ட நடவடிக்கையில் இறங்குவது நல்லது!

 

Link to comment
Share on other sites

சாந்தி அக்கா ஒரு hard copy யும் back up ம் கட்டாயம் உங்களிடம் இருக்க வேண்டும்.இல்லாவிட்டால் இனியாவது செய்து மன உளைச்சலை தவிர்க்கலாம். யார் இத்தகைய ஈனச்செயலை செய்தாலும் கண்டிக்கப்பட வேண்டியது.சந்தர்ப்பம் கிடைத்தால் யார் இத்தகையை செயலை செய்தார்கள் என்பதை அம்பலப்படுத்துங்கள்.
 
எம்மால் ஏதாவது உதவி செய்ய முடியுமா என தெரியப்படுத்துங்கள்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களது இணைய வழங்கி செர்வர்களில்(Web hosting & Database servers) தானியங்கி பிரதி தொகுப்பு மென்பொருள் (Automated Backup Software) இருக்குமே? இல்லையெனில் அதை நிறுவச் சொல்லலாம். இதன் மூலம் ஒரு நாளின் குறிப்பிட்ட நேரங்களில், நம் தலையீடு இல்லாமல் தானாகவே தரவுகளை மற்றொரு இடத்தில் பிரதி எடுத்துக்கொள்ளும் வசதிகள்(Automated scheduled backup) உண்டு. இணைய வழங்கியின் பாதுகாப்பு மென்பொருள்களை(Firewall & Intrusion Detection System) அவசியம் தற்போதைய பதிப்புக்கு(Latest version) மாற்றவும். தற்கால இணைய வழங்கி செர்வர்கள் பல்வேறு இடங்களிலிருந்து(Different countries) ஒரு தொகுப்பாக(Array & Mirrors) சாதுர்யத்துடன் செயல்படுகின்றன. உங்கள் இணைய வழங்கி செர்வர் வைத்திருப்பவரிடம் இந்த வசதி இருக்கிறதா என கேட்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு உதவி செய்யும் அமைப்பின் மீது நடத்தப்பட்ட தாக்குதலானது, மிகவும் கீழ்த்தரமான செயல்.

Link to comment
Share on other sites

கோழைத்தனமான செயல் . இந்த இருள் சூழ்ந்த தருணத்தில் இன்னும் எத்தனையோ எத்தனையோ சோதனைகளை நாம் எதிர்கொள்ளவேண்டும் .மனம் சோராமல் தொடருங்கள் அக்கா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களப் புலனாய்வுத் துறை செய்ய வேண்டியதை , எங்களில் உள்ளவர்கள் செய்வது கடும் கண்டனத்துக்குரியது . வெளியே சிரித்தபடி உள்ளத்தில் கொடிய விசத்தை வைத்திருக்கும் பார்த்தீனியச் செடிகள் பல்கிப் பெருகிவிட்ட நிலையையே நேசக்கரம் இணையத்தளத்தின் மீதான சைபர் தாக்குதல்கள் முகத்தில் அறைந்தால் போல் சொல்கின்றன . ஆனாலும் ,  பல கல்லெறிகளையும் , சொல்லடிகளையும் தாண்டிய நேசக்கரம் இதையும் தாண்டி வீறுநடைபோடும் என்பதில் ஐயமில்லை .

 

 

எதுக்கெடுத்தாலும் எங்களை  நோக்கி  காலைத்தூக்கவது தெரிகிறது.

 

சாந்தியே  இப்படியொரு குற்றச்சாட்டை  முன் வைக்காதபோது உங்களுக்கு எப்படி வந்தது???

ஆதாரம் தரமுடியுமா????

 

இதன் மூலம் சாந்தியக்காவுக்கு உறுதுணையாக இருப்போரையும் பிரிப்பதே நடக்கப்போகிறது.

தொடரட்டும் :(  :(  :(

இது தருணம் பார்த்து மேற்கொள்ளப்பட்ட உள்வீட்டுச் சதியாக இருக்கவே அதிக வாய்ப்புள்ளது.

பங்குபிரிப்பு கதை போல... இது பற்றியும் ஒரு தொடர் எழுதலாம் போல. எப்பவும் நியாயத்தின் பக்கம் நின்றால் ஏன் இப்படி எல்லாம் நடக்கப் போகுது..! :icon_idea::rolleyes:

 

ஏன் என்றால்... நேசக்கரம் இணையத்தில் புலனாய்வுத் தகவல்களோ.. முக்கிய அரச தகவல்களோ.. இராணுவ தகவல்களோ.. இல்ல அறிவியல்.. வியாபார.. இணைய ரகசிங்களோ இல்லை. மனிதாபிமான நடவடிக்கைகளுக்குரிய தகவல்கள் மட்டுமே உண்டு. இருந்தும்.. ஏன் இது நடக்குது.. என்று யோசிச்சும் பார்க்கனும்..???! :icon_idea:

யோசிக்க வேண்டியுள்ளது.

Link to comment
Share on other sites

சாந்தி,

இந்த இணைப்பிலிருந்து ஏதாவது எடுக்கலாமா என்று பாருங்கள் :

http://web.archive.org/web/20120423213807/http://tamilnews24.com/nesakkaram/ta/?

 

இணைப்பு வேலை செய்யாவிட்டால் http://archive.org/web/web.php என்ற இணையத் தளத்திற்குச் சென்று நேசக்கர முகவரியைக் கொடுங்கள்.

Link to comment
Share on other sites

கவலையான   செய்தி ,தங்கள்  சேவை  தொடர  வாழ்த்துகள் .

Link to comment
Share on other sites

எதுக்கெடுத்தாலும் எங்களை  நோக்கி  காலைத்தூக்கவது தெரிகிறது.

 

சாந்தியே  இப்படியொரு குற்றச்சாட்டை  முன் வைக்காதபோது உங்களுக்கு எப்படி வந்தது???

ஆதாரம் தரமுடியுமா????

 

இதன் மூலம் சாந்தியக்காவுக்கு உறுதுணையாக இருப்போரையும் பிரிப்பதே நடக்கப்போகிறது.

தொடரட்டும் :(  :(  :(

யோசிக்க வேண்டியுள்ளது.

இதில் இருவரும் சொல்லவந்தது ஒரே விடயம்தான்.ஆனால் நீங்கள் எழுதிய பதில் ஒன்றுக்கொன்று முரணாக ஆளுக்கொரு கருத்து.ஒன்று ஒருவரை மட்டம்தட்ட,அதே கருத்தெழுதிய மற்றவரை பாராட்ட இன்னொன்று. :(  :(  :(

 

இந்தவிதமான ஆளைப்பார்த்து கருத்தெழுதும் கலாச்சாரத்தை தயவு செய்தும் யாரும் பரப்பாதீர்கள்.தயவௌ செய்து கருத்துக்கு மட்டுமே கருத்தெழுதுங்கள்.யாழின் மூத்த உறுப்பினர்கள் என்று சொல்லிக்கொள்ளும் நீங்களே இப்படி இருந்தால்??

Link to comment
Share on other sites

கவலைதரும் செய்தி.. காவல்துறையிடம் முறையிட வேண்டும் என எண்ணுகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் சொல்ல  வந்ததும் அதுதான்

இது எம்மையே அழிக்கும் என்பது.

 

இருவருடைய  கருத்தையும் உள் வாங்கியே   எழுதினேன்

ஆட்களைப்பார்க்கவில்லை.

 

ஒருவருடைய  கருத்து

எம்மவராலேயே   இது செய்யப்பட்டுள்ளது என்று

மற்றவருடைய  கருத்து அவர்களுக்குள்ளேயே  நடந்துள்ளது என்று.

 

நான் யோசிக்க வேண்டியுள்ளது என்று சொன்னது

நானே இப்படி எழுதுகின்றேன் என்பதன் மூலம்

இதனால் வரப்போகும் தீமைகளை  கருத்தில் எடுங்கள் என்பது.

இந்த திரியையும்

நேசக்கரம் மீதான தாக்குதல்களையும் திசை திருப்பிவிடாதீர்கள் என்பதே எனது கருத்து.

 

தங்களுக்கும்  நெடுக்குமான சிக்கல்களை  நான் அறிவேன்.

அதை இங்கும் தீர்த்துக்கொள்ளும் நோக்கம் வேண்டாம்.

நீங்கள் கருத்து எழுதுவதானால் இது எம்மரால் நடாத்தப்பட்டது என்பதை கண்டித்திருக்கவேண்டும்.  அல்லது அதற்கு ஆதாரம் கேட்டிருக்கவேண்டும்.



இதில் இருவரும் சொல்லவந்தது ஒரே விடயம்தான்.ஆனால் நீங்கள் எழுதிய பதில் ஒன்றுக்கொன்று முரணாக ஆளுக்கொரு கருத்து.ஒன்று ஒருவரை மட்டம்தட்ட,அதே கருத்தெழுதிய மற்றவரை பாராட்ட இன்னொன்று. :(  :(  :(

 

இந்தவிதமான ஆளைப்பார்த்து கருத்தெழுதும் கலாச்சாரத்தை தயவு செய்தும் யாரும் பரப்பாதீர்கள்.தயவௌ செய்து கருத்துக்கு மட்டுமே கருத்தெழுதுங்கள்.யாழின் மூத்த உறுப்பினர்கள் என்று சொல்லிக்கொள்ளும் நீங்களே இப்படி இருந்தால்??

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.