Jump to content

நேசக்கரம் இணையத்தளம் மீது சைபர் தாக்குதல்.


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

நேசக்கரம் இணையத்தளம் மீது சைபர் தாக்குதல்.
logo.png
நேசக்கரம் இணையம் மீதான சைபர் தாக்குதலினால் நேசக்கரம் இணையம் செயலிழந்துள்ளது. பதிவேற்றப்பட்ட சகல தரவுகளும் ஆவணங்களும்  அழிக்கப்பட்டு இணையம் முடக்கப்பட்டுள்ளது.  மீளவும் ஒழுங்கமைக்கும் வரை நேசக்கரம் இணையம் இயங்காதென்பதனை அறியத்தருகிறோம்.

 

இணைய வழங்கிச் சேவையினர் விரைவில் வழங்கியை சீர்படுத்தித் தந்த பின்னர் அனைத்து விபரங்களும் மீள தரவேற்றப்படும்  என்பதனை அறியத்தருகிறோம்.
 


 

தொடர்பு கொள்ள வேண்டிய விபரம் :-Nesakkaram e.V.

Hauptstrasse 210

55743 Idar-Oberstein

GermanyTelephone:(Shanthy) +49 (0)6781 70723 /Mobile – 0049 1628037418

 

nesakkaram@gmail.com

Skype – Shanthyrameshwww.nesakkaram.org 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

மிகவும் கவலைக்குரிய தகவல்

 

உங்களுக்கு பலமாக நாம் இருப்போம் சாந்தியக்கா.

பலயீனமடைந்து விடாதீர்கள்

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

மிகவும் கவலைக்குரிய தகவல்

 

உங்களுக்கு பலமாக நாம் இருப்போம் சாந்தியக்கா.

பலயீனமடைந்து விடாதீர்கள்

 

மிக்க நன்றிகள் உங்கள் அன்பிற்கு.

 

எல்லாத் தரவுகளும் அழிந்துவிட்டது. இனி ஒவ்வொன்றாக தரவேற்ற வேணும். கடந்த 3நாட்களாக இதுவரை செய்த யாவும் அழிந்துவிட்டது போன்று மனம் அமைதியில்லாமல் இருக்கிறது. 3ம் திகதிக்கிடையில் இணைய வழங்கி மீண்டும் செயற்படும் வகையில் தருவதாக சொல்லியுள்ளார்கள்.

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

மிகவும் ஈனத்தனமான, இழிந்த ஒரு செயல்!

 

தமிழனின் பொழுது விடிந்து விடக் கூடாது என்பதில், எத்தனை வஞ்சகர்கள் கவனமாக இருக்கிறார்கள்?

 

மீண்டும் தழைக்கலாம், சாந்தி!

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

கவலையான தகவல்,

 

 நீங்கள் இணையத்தளத்தில் பதிவேற்றும் அனைத்தையும் எப்பொழுதும் ஒருகொப்பி பிரதி எடுத்து இன்னுமொரு பதிவேட்டில் சேமித்து வையுங்கள்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

அழிவுகளும்,இழப்புகளும் தினம் தோறும் எமக்கு ஒரே செய்தியைத் தான் சொல்கிறது. 

தமிழன் பூமிப் பரப்பில் எங்கு வாழ்ந்தாலும், எமக்கென்றோர் தேசம் இல்லாத வரை நாம் தொடர்ச்சியாக அழிக்கப்படுவோம் என்பதே அது.
எனவே விடுதலைக்கான தேவை உள்ளவரை எமது போராட்டம் தொடர வேண்டும். 
இல்லையேல் ஒட்டு மொத்த தமிழ் இனமுமே தனது இருப்பை தொலைக்கும் காலம் தூரத்தில் இல்லை.
புதிதாய்..., மீண்டும் புதிதாய்  முழைப்போம். 
ஒன்றாய், பலமாய் எழுவோம். 
 
Link to comment
Share on other sites

சிங்களப் புலனாய்வுத் துறை செய்ய வேண்டியதை , எங்களில் உள்ளவர்கள் செய்வது கடும் கண்டனத்துக்குரியது . வெளியே சிரித்தபடி உள்ளத்தில் கொடிய விசத்தை வைத்திருக்கும் பார்த்தீனியச் செடிகள் பல்கிப் பெருகிவிட்ட நிலையையே நேசக்கரம் இணையத்தளத்தின் மீதான சைபர் தாக்குதல்கள் முகத்தில் அறைந்தால் போல் சொல்கின்றன . ஆனாலும் ,  பல கல்லெறிகளையும் , சொல்லடிகளையும் தாண்டிய நேசக்கரம் இதையும் தாண்டி வீறுநடைபோடும் என்பதில் ஐயமில்லை .

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

யார் இந்த தாக்குதலை செய்திருந்தாலும் அது கண்டனத்திற்குரியதே

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

விழ விழ  எழும் தைரியம் சாந்திக்கு  எப்போதுமே உண்டு . உங்கள்  பணி  தொடரட்டும் 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

கஷ்டப்பட்ட சனத்திற்கு நல்லது செய்வதும் கஷ்டம் போல கிடக்கு. ஈனர்களின் வழி இது.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இந்தச் செய்தியைப் பார்த்தபோது மிகவும் கவலையக இருந்தது. காய்க்கிற மரத்துக்குத்தான் கல்லெறிவிழும்.  முதுகெலும்பு இல்லாத முட்டாள் கூட்டம்.  அரங்கேற்றிய ஈனத்தனமான செயல்.

 

சாந்தியக்கா மனம் தளராமல் உறுதியாக இருங்கள். நீங்கள் எங்களுக்குத் தேவை. எங்கள் அன்பும் ஆதரவும் என்றும் உங்களுக்கு உண்டு.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இது தருணம் பார்த்து மேற்கொள்ளப்பட்ட உள்வீட்டுச் சதியாக இருக்கவே அதிக வாய்ப்புள்ளது. பங்குபிரிப்பு கதை போல... இது பற்றியும் ஒரு தொடர் எழுதலாம் போல. எப்பவும் நியாயத்தின் பக்கம் நின்றால் ஏன் இப்படி எல்லாம் நடக்கப் போகுது..! :icon_idea::rolleyes:

 

ஏன் என்றால்... நேசக்கரம் இணையத்தில் புலனாய்வுத் தகவல்களோ.. முக்கிய அரச தகவல்களோ.. இராணுவ தகவல்களோ.. இல்ல அறிவியல்.. வியாபார.. இணைய ரகசிங்களோ இல்லை. மனிதாபிமான நடவடிக்கைகளுக்குரிய தகவல்கள் மட்டுமே உண்டு. இருந்தும்.. ஏன் இது நடக்குது.. என்று யோசிச்சும் பார்க்கனும்..???! :icon_idea:

Link to comment
Share on other sites

வன்னமையாக கண்டிக்கப்பட வேண்டியது, ஆனாலும் இப்பிடியான செயல்களால் நேசக்கரம் மேலும் மேலும் வளர ஒரு உந்து சக்தியாக இருக்கும் என்றும் நம்புகின்றோம் அந்த வகையில் அழித்தொளிப்பத்தாக நினைத்துக்கொண்டு நேசக்கரம் விருட்சமாக வளர பலசாதனைகள் படைக்க நேசக்கரம் நிறுவனத்திற்கு ஒரு ஊக்கத்தை அளித்திருக்கின்றார்கள்

Link to comment
Share on other sites

நேசக்கரம் இணையத்தளம் மீது சைபர் தாக்குதல்.

 

 

நீங்கள் புலம் பெயர் தேசத்தில் இயங்குவதால் - சட்ட நடவடிக்கை எடுக்க முடியாதா?

முயற்சி செய்து இத்தகைய செயல்களை செய்பவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதோடு

மட்டுமல்ல, பெருமளவு நட்ட ஈட்டையும் பெற்றுக்கொள்ளலாம் என நினைக்கிறேன்!

எனவே தாமதிக்காமல் சட்ட நடவடிக்கையில் இறங்குவது நல்லது!

 

Link to comment
Share on other sites

சாந்தி அக்கா ஒரு hard copy யும் back up ம் கட்டாயம் உங்களிடம் இருக்க வேண்டும்.இல்லாவிட்டால் இனியாவது செய்து மன உளைச்சலை தவிர்க்கலாம். யார் இத்தகைய ஈனச்செயலை செய்தாலும் கண்டிக்கப்பட வேண்டியது.சந்தர்ப்பம் கிடைத்தால் யார் இத்தகையை செயலை செய்தார்கள் என்பதை அம்பலப்படுத்துங்கள்.
 
எம்மால் ஏதாவது உதவி செய்ய முடியுமா என தெரியப்படுத்துங்கள்.
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

உங்களது இணைய வழங்கி செர்வர்களில்(Web hosting & Database servers) தானியங்கி பிரதி தொகுப்பு மென்பொருள் (Automated Backup Software) இருக்குமே? இல்லையெனில் அதை நிறுவச் சொல்லலாம். இதன் மூலம் ஒரு நாளின் குறிப்பிட்ட நேரங்களில், நம் தலையீடு இல்லாமல் தானாகவே தரவுகளை மற்றொரு இடத்தில் பிரதி எடுத்துக்கொள்ளும் வசதிகள்(Automated scheduled backup) உண்டு. இணைய வழங்கியின் பாதுகாப்பு மென்பொருள்களை(Firewall & Intrusion Detection System) அவசியம் தற்போதைய பதிப்புக்கு(Latest version) மாற்றவும். தற்கால இணைய வழங்கி செர்வர்கள் பல்வேறு இடங்களிலிருந்து(Different countries) ஒரு தொகுப்பாக(Array & Mirrors) சாதுர்யத்துடன் செயல்படுகின்றன. உங்கள் இணைய வழங்கி செர்வர் வைத்திருப்பவரிடம் இந்த வசதி இருக்கிறதா என கேட்கலாம்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ஒரு உதவி செய்யும் அமைப்பின் மீது நடத்தப்பட்ட தாக்குதலானது, மிகவும் கீழ்த்தரமான செயல்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

கோழைத்தனமான செயல் . இந்த இருள் சூழ்ந்த தருணத்தில் இன்னும் எத்தனையோ எத்தனையோ சோதனைகளை நாம் எதிர்கொள்ளவேண்டும் .மனம் சோராமல் தொடருங்கள் அக்கா

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

சிங்களப் புலனாய்வுத் துறை செய்ய வேண்டியதை , எங்களில் உள்ளவர்கள் செய்வது கடும் கண்டனத்துக்குரியது . வெளியே சிரித்தபடி உள்ளத்தில் கொடிய விசத்தை வைத்திருக்கும் பார்த்தீனியச் செடிகள் பல்கிப் பெருகிவிட்ட நிலையையே நேசக்கரம் இணையத்தளத்தின் மீதான சைபர் தாக்குதல்கள் முகத்தில் அறைந்தால் போல் சொல்கின்றன . ஆனாலும் ,  பல கல்லெறிகளையும் , சொல்லடிகளையும் தாண்டிய நேசக்கரம் இதையும் தாண்டி வீறுநடைபோடும் என்பதில் ஐயமில்லை .

 

 

எதுக்கெடுத்தாலும் எங்களை  நோக்கி  காலைத்தூக்கவது தெரிகிறது.

 

சாந்தியே  இப்படியொரு குற்றச்சாட்டை  முன் வைக்காதபோது உங்களுக்கு எப்படி வந்தது???

ஆதாரம் தரமுடியுமா????

 

இதன் மூலம் சாந்தியக்காவுக்கு உறுதுணையாக இருப்போரையும் பிரிப்பதே நடக்கப்போகிறது.

தொடரட்டும் :(  :(  :(

இது தருணம் பார்த்து மேற்கொள்ளப்பட்ட உள்வீட்டுச் சதியாக இருக்கவே அதிக வாய்ப்புள்ளது.

பங்குபிரிப்பு கதை போல... இது பற்றியும் ஒரு தொடர் எழுதலாம் போல. எப்பவும் நியாயத்தின் பக்கம் நின்றால் ஏன் இப்படி எல்லாம் நடக்கப் போகுது..! :icon_idea::rolleyes:

 

ஏன் என்றால்... நேசக்கரம் இணையத்தில் புலனாய்வுத் தகவல்களோ.. முக்கிய அரச தகவல்களோ.. இராணுவ தகவல்களோ.. இல்ல அறிவியல்.. வியாபார.. இணைய ரகசிங்களோ இல்லை. மனிதாபிமான நடவடிக்கைகளுக்குரிய தகவல்கள் மட்டுமே உண்டு. இருந்தும்.. ஏன் இது நடக்குது.. என்று யோசிச்சும் பார்க்கனும்..???! :icon_idea:

யோசிக்க வேண்டியுள்ளது.

Link to comment
Share on other sites

சாந்தி,

இந்த இணைப்பிலிருந்து ஏதாவது எடுக்கலாமா என்று பாருங்கள் :

http://web.archive.org/web/20120423213807/http://tamilnews24.com/nesakkaram/ta/?

 

இணைப்பு வேலை செய்யாவிட்டால் http://archive.org/web/web.php என்ற இணையத் தளத்திற்குச் சென்று நேசக்கர முகவரியைக் கொடுங்கள்.

Link to comment
Share on other sites

கவலையான   செய்தி ,தங்கள்  சேவை  தொடர  வாழ்த்துகள் .

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

எதுக்கெடுத்தாலும் எங்களை  நோக்கி  காலைத்தூக்கவது தெரிகிறது.

 

சாந்தியே  இப்படியொரு குற்றச்சாட்டை  முன் வைக்காதபோது உங்களுக்கு எப்படி வந்தது???

ஆதாரம் தரமுடியுமா????

 

இதன் மூலம் சாந்தியக்காவுக்கு உறுதுணையாக இருப்போரையும் பிரிப்பதே நடக்கப்போகிறது.

தொடரட்டும் :(  :(  :(

யோசிக்க வேண்டியுள்ளது.

இதில் இருவரும் சொல்லவந்தது ஒரே விடயம்தான்.ஆனால் நீங்கள் எழுதிய பதில் ஒன்றுக்கொன்று முரணாக ஆளுக்கொரு கருத்து.ஒன்று ஒருவரை மட்டம்தட்ட,அதே கருத்தெழுதிய மற்றவரை பாராட்ட இன்னொன்று. :(  :(  :(

 

இந்தவிதமான ஆளைப்பார்த்து கருத்தெழுதும் கலாச்சாரத்தை தயவு செய்தும் யாரும் பரப்பாதீர்கள்.தயவௌ செய்து கருத்துக்கு மட்டுமே கருத்தெழுதுங்கள்.யாழின் மூத்த உறுப்பினர்கள் என்று சொல்லிக்கொள்ளும் நீங்களே இப்படி இருந்தால்??

Link to comment
Share on other sites

கவலைதரும் செய்தி.. காவல்துறையிடம் முறையிட வேண்டும் என எண்ணுகிறேன்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

நான் சொல்ல  வந்ததும் அதுதான்

இது எம்மையே அழிக்கும் என்பது.

 

இருவருடைய  கருத்தையும் உள் வாங்கியே   எழுதினேன்

ஆட்களைப்பார்க்கவில்லை.

 

ஒருவருடைய  கருத்து

எம்மவராலேயே   இது செய்யப்பட்டுள்ளது என்று

மற்றவருடைய  கருத்து அவர்களுக்குள்ளேயே  நடந்துள்ளது என்று.

 

நான் யோசிக்க வேண்டியுள்ளது என்று சொன்னது

நானே இப்படி எழுதுகின்றேன் என்பதன் மூலம்

இதனால் வரப்போகும் தீமைகளை  கருத்தில் எடுங்கள் என்பது.

இந்த திரியையும்

நேசக்கரம் மீதான தாக்குதல்களையும் திசை திருப்பிவிடாதீர்கள் என்பதே எனது கருத்து.

 

தங்களுக்கும்  நெடுக்குமான சிக்கல்களை  நான் அறிவேன்.

அதை இங்கும் தீர்த்துக்கொள்ளும் நோக்கம் வேண்டாம்.

நீங்கள் கருத்து எழுதுவதானால் இது எம்மரால் நடாத்தப்பட்டது என்பதை கண்டித்திருக்கவேண்டும்.  அல்லது அதற்கு ஆதாரம் கேட்டிருக்கவேண்டும்.இதில் இருவரும் சொல்லவந்தது ஒரே விடயம்தான்.ஆனால் நீங்கள் எழுதிய பதில் ஒன்றுக்கொன்று முரணாக ஆளுக்கொரு கருத்து.ஒன்று ஒருவரை மட்டம்தட்ட,அதே கருத்தெழுதிய மற்றவரை பாராட்ட இன்னொன்று. :(  :(  :(

 

இந்தவிதமான ஆளைப்பார்த்து கருத்தெழுதும் கலாச்சாரத்தை தயவு செய்தும் யாரும் பரப்பாதீர்கள்.தயவௌ செய்து கருத்துக்கு மட்டுமே கருத்தெழுதுங்கள்.யாழின் மூத்த உறுப்பினர்கள் என்று சொல்லிக்கொள்ளும் நீங்களே இப்படி இருந்தால்??

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • புற்றுநோய் Patients- ஐ இலவசமாக பராமரிக்கும் இடம் | Eastern Cancer Care & Hospital  
  • இயற்கை அதிசயம் A68 மெகா பனிப்பாறை: நாள்தோறும் 150 கோடி டன் நன்னீரை கடலில் கலந்த ராட்சத பனிப்பாறை ஜோனதன் அமோஸ் அறிவியல் செய்தியாளர் 6 மணி நேரங்களுக்கு முன்னர்     படக்குறிப்பு, A68 பனிப்பாறை A68 என்கிற மிகப்பெரிய பனிப்பாறை உருகுவதால் அட்லாண்டிக் பெருங்கடலில் நாள் ஒன்றுக்கு 150 கோடி டன் தண்ணீர் கலந்தது. இதை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டுமானால், பிரிட்டனில் உள்ள மொத்த மக்கள் தொகையும் ஒரு நாளில் பயன்படுத்தும் நீரைப் போல 150 மடங்கு அதிக தண்ணீர் ஒரே நாளில் கடலில் கலந்தது. A68 உலகின் மிகப்பெரிய பனிப்பாறையாக, குறைந்த காலத்துக்கு இருந்தது. கடந்த 2017ஆம் ஆண்டு அண்டார்டிகாவில் இருந்து பிரிந்த போது கிட்டத்தட்ட 6,000 சதுர கிலோமீட்டர் பரப்பு கொண்டதாக இருந்தது. ஆனால் 2021ஆம் ஆண்டில் அத்தனை பெரிய பனிப்பாறை காணாமல் போய்விட்டது. ஒரு டிரில்லியன் டன் அளவிலான பனிப்பாறையை கரைந்துவிட்டது. தற்போது விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் A68 பனிப்பாறை சுற்றுச்சூழலில் ஏற்படுத்திய தாக்கத்தைக் குறித்து ஆராய்வதில் மும்முரமாக இருக்கின்றனர். A68 பனிப்பாறை அண்டார்டிகாவிலிருந்து பிரிந்து, தெற்கு பெருங்கடல் வழியாக வடக்கு நோக்கி பயணித்து, தெற்கு அட்லாண்டிக் கடலை வந்தடைந்தது. ஆப்பிள் நிறுவன 'ஏர்டேக்' சாதனம் நம்மை ரகசியமாக கண்காணிக்கிறதா? மனித மூளையுடன் இணையும் தொழில்நுட்பம் - இது ஆபத்தா? லீட்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த குழு ஒன்று, செயற்கைக் கோளின் தரவுகளைக் கொண்டு அப்பனிப்பாறை பயணித்த வழித்தடம் முழுக்க அதன் உருவம் எப்படியெல்லாம் மாறியது என்பதைக் கணக்கிட தேவையான தரவுகளை சேகரித்து வருகிறது. எனவே, கடந்த மூன்றரை ஆண்டுகளுக்கு மேலாக அப்பனிப்பாறையின் பயணத்தில், அது உருகும் விகிதம் எப்படி மாறுபட்டது என்பதை மதிப்பிட முடிந்தது. A68 பனிப்பாறை அதன் கடைசி காலத்தில், பிரிட்டிஷ் ஓவர்சீஸ் டெரிட்டரி ஆஃப் சவுத் ஜார்ஜியா என்கிற வெப்பமான பகுதிக்கு வந்தடைந்தது.     படக்குறிப்பு, A68 பனிப்பாறையின் பயணப் பாதை இந்த ராட்சத பனிப்பாறை ஆழம் குறைவான, லட்சக் கணக்கான பென்குயின்கள், கடல் சிங்கங்கள், திமிங்கலங்கள் வேட்டையாடும் பாதையில் சிக்கிக் கொள்ளுமோ என்றும் கொஞ்ச காலத்துக்கு ஓர் அச்சம் நிலவியது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை, காரணம் A68 பனிப்பாறை மிதப்பதற்குத் தேவையான ஆழத்தை இழந்தது. "A68 பனிப்பாறை கண்டத்தின் நிலபரப்பின் மீது மோதியது போலத் தான் தெரிகிறது. அப்போது தான் பனிப்பாறை திரும்பி, சிறு துண்டு உடைவதைக் கண்டோம். அது மட்டுமே A68 பனிப்பாறையை நிறுத்த போதுமானதாக இல்லை" என பிபிசியிடம் கூறினார் அந்த ஆய்வறிக்கையின் ஆசிரியர் மற்றும் லீட்ஸ் பல்கலைக்கழகத்தின் நெர்க் சென் டர் ஃபார் போலார் அப்சர்வேஷன் அண்ட் மாடலிங்கைச் சேர்ந்த அனே ப்ராக்மான் - ஃபோல்கன். ஏப்ரல் 2021 காலத்தில், A68 பனிப்பாறை, கண்காணிக்க முடியாத அளவுக்கு எண்ணற்ற சிறிய துண்டுகளாக உடைந்தது. ஆனால் அது சுற்றுச்சூழலின் மீது ஏற்படுத்திய தாக்கங்கள் மிக நீண்ட காலத்துக்கு இருக்கும். ஜெயின்ட் டேபுலர் அல்லது ஃப்ளாட் டாப் பனிப்பாறைகள் எந்த பகுதியில் சுற்றித் திரிந்தாலும் அது இருக்கும் பகுதியில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.   பட மூலாதாரம்,CPL PHIL DYE RAF/CROWN COPYRIGHT   படக்குறிப்பு, A68 பனிப்பாறை அப்பனிப்பாறைகள் வெளியிடும் நன்னீர், கடலின் நீரோட்டத்தை மாற்றும். மேலும் இரும்பு போன்ற தாதுப் பொருட்கள், நுண்ணுயிரிகள் கடலில் கலந்து உயிரி உருவாக்கத்தை ஏற்படுத்தும். A68 பனிப்பாறை பிளவுபட்டு காணாமல் போவதற்கு முன், பிரிட்டிஷ் அண்டார்டிக் சர்வேயால், அப்பனிப்பாறைக்கு அருகில் சில எந்திர கிளைடர்களை நிலைநிறுத்த முடிந்தது. இந்த கிளைடர்கள் உட்பட பல்வேறு சாதனங்களிலிருந்து கிடைத்த தரவுகளை இதுவரை முழுமையாக பகுப்பாய்வு செய்யப்படவில்லை என்றாலும், சில ஆர்வத்தைக் தூண்டக் கூடிய விஷயங்களை வெளிப்படுத்துவதாக உயிரியல் கடல் ஆய்வு நிபுணர் பேராசிரியர் ஜெரைன்ட் டார்லிங் கூறினார். "A68 பனிப்பாறையைச் சுற்றியுள்ள பைட்டோபிளாங்க்டன் இனங்களின் தாவரங்களில் மாற்றம் ஏற்படுவதை வெளிப்படுத்தும் வகையில் மற்றும் கடலின் ஆழமான பகுதிகளில் தாதுப் பொருட்களின் படிமானங்கள் தொடர்பாக வலுவான சமிக்ஞைகள் இருப்பதாக நாங்கள் கருதுகிறோம். கிளைடரில் உள்ள சிறு துகள்களைக் கண்டறியும் சென்சார், பனிப்பாறையிலிருந்து படிமானங்கள் தொடர்பாக வலுவான சமிக்ஞைகள் கண்டுணர்ந்துள்ளது." என்று அவர் பிபிசி செய்தியிடம் கூறினார். A68 பனிப்பாறையின் மாறும் வடிவம் மற்றும் வெப்பத்தால் உருகி கடலில் நன்னீர் கலப்பது தொடர்பான விவரங்கள், 'ரிமோட் சென்சிங் ஆஃப் என்விரான்மென்ட்' என்கிற சஞ்சிகையில் பிரசுரமாகியுள்ளது. https://www.bbc.com/tamil/science-60098350
  • யுக்ரைன் பதற்றம்: அமெரிக்காவின் 'மரண' ஆயுதங்கள், ரஷ்யாவின் ஒரு லட்சம் வீரர்கள் - எல்லையில் அதிகரிக்கும் பதற்றம் 3 மணி நேரங்களுக்கு முன்னர்   பட மூலாதாரம்,GETTY IMAGES யுக்ரைனின் எல்லையில், ரஷ்யா ஒரு லட்சம் வீரர்களைக் குவித்திருக்கும் நிலையில், அமெரிக்கா அங்கு ஆயுதங்களை அனுப்பியிருக்கிறது. பிரிட்டன் தனது வீரர்களை அனுப்பத் திட்டமிட்டிருக்கிறது. இதனால் அங்கு பதற்றம் அதிகரித்திருக்கிறது. இந்த நிலையில், ரஷ்யாவுக்கு ஆதரவானவரை யுக்ரைனின் அதிபராக நியமிக்க விளாதிமிர் புதின் திட்டமிட்டிருப்பதாக பிரிட்டன் குற்றம்சாட்டியுள்ளது. முன்னெப்போதும் இல்லாத வகையில், யுக்ரைன் எம்.பி. யெவென் முரயேவ் என்பவரது பெயரைக் குறிப்பிட்டு, அவரை நாட்டின் அதிபராக்க ரஷ்யா முயல்வதாக பிரிட்டன் வெளியுறவுத் துறை கூறியிருக்கிறது. ரஷ்யா 100,000 துருப்புக்களை யுக்ரைனுடனான தனது எல்லைக்கு அருகில் குவித்துள்ளது. ஆயினும் யுக்ரைன் மீது படையெடுக்கப் போவதாக வெளியாகும் தகவல்களை மறுத்துள்ளது. ரஷ்யா யுக்ரைனுக்குள் ஊடுருவினால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என பிரிட்டன் அமைச்சர்கள் எச்சரித்துள்ளனர். சோவியத் ஒன்றியம் வீழ்ந்த போது பொருளாதார நெருக்கடியால் தான் டாக்சி ஓட்டியதை நினைவுகூர்ந்த புதின் மோதி - புதின் சந்திப்பு: இந்திய, ரஷ்ய உறவை அமெரிக்கா, சீனா விரும்பவில்லையா? "இன்று வெளியாகியிருக்கும் தகவல்கள் யுக்ரைனைத் தகர்ப்பதற்கு ரஷ்ய எடுத்துவரும் நடவடிக்கையின் அளவை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன." என்று பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் லிஸ் ட்ரஸ் கூறினார்: "ரஷ்யா பதற்றத்தைத் தணிக்க வேண்டும். ஆக்கிரமிப்பையும் தவறான தகவல் கொண்ட பரப்புரையையும் முடிவுக்கு கொண்டு வர வேண்டும். ராஜீயப் பாதையை தொடர வேண்டும்" "பிரிட்டனும், கூட்டாளிகளும் மீண்டும் மீண்டும் கூறி வருவது போல், யுக்ரைனில் ரஷ்ய ராணுவ ஊடுருவல் என்பது கடுமையான சேதத்தை ஏற்படுத்தும் ஒரு பெரிய மூலோபாய தவறாக இருக்கும்." 2014 ஆம் ஆண்டு கிரிமியாவை தன்னுடன் இணைத்துக் கொண்ட போது யுக்ரைனின் பகுதியை ரஷ்யா கைப்பற்றியது. 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ரஷ்யப் படைகள் எல்லையில் குவிக்கப்பட்ட நிலையில், மற்றொரு படையெடுப்பு அல்லது ஊடுருவல் நிகழலாம் என்று மேற்கத்திய, யுக்ரைனிய உளவு அமைப்புகள் கூறுகின்றன. ஆனால் எந்தத் தாக்குதலுக்கும் திட்டமிடவில்லை என்று ரஷ்யா மறுத்துள்ளது. பிரிட்டன் வெளியுறவு அமைச்சகம் "தவறான தகவல்களைப் பரப்புகிறது" என்றும், " ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை நிறுத்தவும்" தனது ட்விட்டர் பக்கத்தில் ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் வலியுறுத்தியது. ஊடக அதிபரான முராயேவ் 2019 தேர்தலில் அவரது கட்சி 5% வாக்குகளைப் பெறத் தவறியதால், அவருக்கு யுக்ரைன் நாடாளுமன்றத்தில் இடம் கிடைக்கவில்லை. பிரிட்டன் வெளியுறவு அமைச்சகம் "குழப்பத்தில் இருப்பதாக தெரிகிறது" என்று அவர் அப்சர்வர் செய்தித்தாளிடம் கூறியுள்ளார். "இது தர்க்கத்துக்கு ஒவ்வாதது. நான் ரஷ்யாவில் தடை செய்யப்பட்டுள்ளேன். அங்குள்ள எனது தந்தையின் நிறுவனத்தில் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது" என்று முராயேவ் கூறினார். ரஷ்ய உளவு அமைப்புகளுடன் தொடர்புகளைப் பேணி வருவதாகக் வேறு நான்கு யுக்ரைனிய அரசியல்வாதிகளையும் பிரிட்டன் வெளியுறவு அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. 2014 இல் பதவியில் இருந்து அகற்றப்பட்ட ரஷ்ய ஆதரவு அதிபர் விக்டர் யானுகோவிச்சின் கீழ் பிரதமராக பணியாற்றிய மைகோலா அசாரோவும் அவர்களில் அடங்குவர். அஸரோவ் பின்னர் ரஷ்யாவுக்குத் தப்பிச் சென்றார், அங்கு அவர் நாடுகடந்த ஒரு பொம்மை அரசாங்கமாக பரவலாக அறியப்பட்ட ஒன்றை நிறுவினார். யுக்ரைனிய தேசிய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு கவுன்சிலின் முன்னாள் துணைத் தலைவரான வோலோடிமிர் சிவ்கோவிச் என்பவரின் பெயரையும் பிரிட்டன் வெளியுறவு அமைச்சகம் கூறியிருக்கிறது. ரஷ்ய உளவுத்துறையுடன் தொடர்பு இருப்பதாகக் கூறி அவருக்கு அமெரிக்கா தடைகளை விதித்திருக்கிறது.   பட மூலாதாரம்,EPA   படக்குறிப்பு, எல்லையில் யுக்ரைன் அதிபர் வோலோதிமிர் ஜெலென்ஸ்கி யானுகோவிச்சின் ஆட்சியில் துணைப் பிரதமர்களாகப் பணியாற்றி செரி அர்புஸோவ், அன்ட்ரி க்ளுயேவ் ஆகியோரின் பெயர்களையும் பிரிட்டன் வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது. சனிக்கிழமையன்று யுக்ரைனில் பதற்றத்தைக் குறைக்க ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சரும் அவரது அமெரிக்க வெளியுறவு அமைச்சரும் பேச்சுக்களை நடத்திய சில மணி நேரங்களுக்குப் பிறகு, அமெரிக்கவின் "மரண உதவி" சனிக்கிழமை கீவ் வந்தடைந்தது. முன்கள வீரர்களுக்கான வெடிமருந்துகள் உள்ளிட்டவை இந்தத் தொகுப்பில் அடங்கும். 2015 ஆம் ஆண்டிலிருந்து டஜன் கணக்கான பிரிட்டிஷ் துருப்புக்கள் யுக்ரைனில் பயிற்சிக்காக தங்கியுள்ளன. 2014-இல் ரஷ்யா கிரைமியா மீது படையெடுத்ததைத் தொடர்ந்து உக்ரைனின் கடற்படையை மீண்டும் கட்டியெழுப்ப உதவ பிரிட்டனும் உறுதியளித்துள்ளது. இந்த வார தொடக்கத்தில், ஆயுதங்கள் மற்றும் கூடுதல் துருப்புக்களை யுக்ரைனுக்கு அனுப்புவதாகவும் அறிவித்தது. பிரிட்டன், அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் பல முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகள் தங்களில் ஒருவருக்கு எதிராகத் தாக்குதல் நடத்தப்படுவது அனைவருக்கும் எதிரான தாக்குதலாகக் கருதுகின்றன. புதினுக்கு என்ன வேண்டும்? ஐரோப்பாவில் கிழக்கை நோக்கி நேட்டோ விரிவடையாது என்று 1990ல் அளித்த உத்தரவாதத்தை அமெரிக்கா மீறிவிட்டது என்று ரஷ்யாவின் அதிபர் புதின் நீண்ட காலமாகக் கூறி வருகிறார். "அவர்கள் எங்களை ஏமாற்றிவிட்டார்கள்!" என்று கடந்த மாதம் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார்.   பட மூலாதாரம்,RUSSIAN DEFENCE MINISTRY ஆனால் அப்போதைய சோவியத் தலைவரான மைக்கேல் கோர்பச்சேவுக்கு சரியாக என்ன வாக்குறுதி அளிக்கப்பட்டது என்பதில் பல்வேறு மாறுபட்ட விளக்கங்கள் தரப்படுகின்றன. அப்போதிருந்து, சோவியத் ஒன்றியத்தைச் சேர்ந்த, கிழக்கு ஐரோப்பிய நாடுகள் நேட்டோவில் இணைந்துள்ளன. அவற்றில் போலந்து, லிதுவேனியா, லாட்வியா மற்றும் எஸ்டோனியா ஆகியவை ரஷ்யாவுடன் எல்லைகளைக் கொண்டுள்ளன. இந்த விரிவாக்கம் மற்றும் அதன் எல்லைகளுக்கு அருகே நேட்டோ துருப்புக்கள் மற்றும் ராணுவ உபகரணங்கள் இருப்பது அதன் பாதுகாப்புக்கு நேரடி அச்சுறுத்தல் என்று ரஷ்யா வாதிடுகிறது. 2014 ஆம் ஆண்டு யுக்ரைனியர்கள் தங்கள் ரஷ்ய சார்பு அதிபரை பதவியில் இருந்து அகற்றியபோது, தெற்கு உக்ரைனில் உள்ள கிரைமியா தீபகற்பத்தை ரஷ்யா கைப்பற்றியது. அப்போதிருந்து, யுக்ரைனின் ராணுவம் ரஷ்யாவின் எல்லைகளுக்கு அருகிலுள்ள கிழக்குப் பகுதிகளில் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களுடன் போரில் ஈடுபட்டுள்ளது. https://www.bbc.com/tamil/global-60100576
  • கிரிப்டோ பற்றிய உங்களதும் கோசானினது புரிதல் சிறப்பானது, ஆனால் எனக்கு கிரிப்டோ பற்றிய புரிதல் பூச்சியம், நீங்கள் கிரிப்டோவில் தற்போது முதலிடுவது ஏன் வாய்ப்பானது என கூறுகிறீர்கள், விலை குறைவாக இருப்பதாலா? அல்லது விலை இதற்கு மேல் குறையாது என நினைக்கிறீர்களா, அதற்கு ஏதாவது காரணம் உண்டா? (Fundamental, Technical or Market sentiment) எனது கிரிப்டோ தொடர்பான கருத்து வெறும் Technical analysis அடிப்படையில் கூறப்படுவதுதான். அதுவும் எனது Technical analysis அறிவு அடிப்படை அறிவு மட்டுமே, அதனால் அதில்  பல தவறுகள் இருக்கலாம். நான் மேலே கூறியது போல விலை இறங்காமல் இருப்பதற்கு சாத்திய கூறுகள் அதிகம். Fundamental அறிவு பூச்சியம் என்றே சொல்லலாம், கிரிப்டோ மட்டுமல்ல அனைத்து சந்தைகளிலும் எனது Fundamental அறிவு பூச்சியம். ஆனால் எனது முதலீட்டினை Fundamental analysis அடிப்படையிலேயே ஆரம்பித்தேன். நான் முன்பு ஒரு மருத்துவ நிறுவனத்தில் வேலை செய்தேன், அந்த நிறுவனம் மிக பெரிய பன்னாட்டு நிறுவனம், அந்த நிறுவனம் அவுஸ்திரேலியாவில் உள்ள ஒரு சிறிய மருத்துவ நிறுவனம் ஆராய்சி நிலையில் ஒரு தொழில்னுட்பத்தை கண்டுபிடித்திருந்த, (VAST Platform) தொழில்னுட்பத்தை 240 மில்லியனுக்கு வாங்கியிருந்தார்கள். மேலதிக ஆராய்சிகான செலவை எமது நிறுவனம் ஏற்றுக்கொண்டதுடன்  அந்த தொழில்னுட்பத்தில் எமது நிறுவனம் தயாரிக்கும் மருந்தில் வரும் வருமானத்தில் ஒரு பகுதியை வழங்க ஒத்து கொண்டது. இது நிகழ்ந்தது 2013 இல் அந்த தொழில்னுட்பத்தினடிப்படையில் மருந்து தயாரிப்பு 2020 அளவில் ஏற்படும் என கூறினார்கள். இந்த ஒப்பந்தம் கைசாத்தாகிய 3ஆம் நாள் அந்த சிறிய நிறுவனத்தின் பங்கினை எனது கையிருப்பில் இருந்த பெரும் பகுதியான பணத்தில் 0.41 சத விலை படி வாங்கினேன். விலை தொடர்ச்சியாக இறங்க ஆரம்பித்தது, எனக்கு விளங்கவில்லை  ஒரு சிறிய நிறுவனம் பெரிய நிறுவனத்துடன் ஒப்பந்தம் கைசாத்திட்டுள்ளது விலை ஏற வேண்டும் அதற்கு பதிலாக ஏன் இறங்குகிறது? ஆனால் ஒன்று மட்டும் புரிந்தது அந்த நிறுவனம் ஒரு தங்க முட்டையிடும் வாத்து ஏதோ ஒரு தற்காலிக காரணமாக விலை இறங்குகிறது, எனவே மிகுதியிருந்த காசில் 0.35 விலை படி இன்னுமொரு தொகுதி பங்குகள் வாங்கினேன்.( Beginners mistake) ஒரு மாதத்திற்குள்ளாக கிட்டத்தட்ட அரைவாசி விலையை நெருங்குவது போல இருந்தது. மே மாதமளவில் அந்த பங்கு முழுவதையும் சந்தை விலைப்படி விற்றேன் 0.28 படி அதுதான் அப்போது ஆகக்குறைந்த விலை. எனது திட்டம் விலை மேலும் குறைந்த பின் அதை திருப்பி வாங்குவது, அத்துடன் அந்த இழப்பினை வரியில் தள்ளுபடி செய்யலாம் (ஆனால் அவ்வாறு வரி சலுகை பெற முடியாது என்பதை பிறகு அறிந்து கொண்டேன்). நான் விற்ற 6 மாதத்திற்குள்ளாக  கிட்டத்தட்ட 0.80 மேல் விலை சென்றது ஆனால் அதனை என்னால் திருப்பி வாங்க முடியவில்லை ஏனென்றால் நான் விற்ற 0.28 தான் மிக குறைந்த விலை. சிறிது காலத்தின் பின் அந்த சிறிய நிறுவனத்தின் பங்கு விலை வீழ்ச்சியடைந்து, இறுதியில் காணாமல் போய்விட்டது. பல முதலீட்டாளருக்கு கை கொடுக்கும் Fundamental analysis எப்போதும் எனக்கு மட்டும் காலை வாரிவிடுகிறது. பங்கு சந்தை பற்றிய எந்த அறிவுமில்லாத காலத்தில் வாங்கிய பங்கு, பின் அதனை அவசரப்பட்டு நட்டத்திற்கே விற்றதை நினைக்க மனவருத்தமாகவிருந்தது, ஆனால் இப்போது அதனை நினைத்து பார்க்கும் போது  அந்த வர்த்தகத்தில் நான் செய்த ஒரே சரியான விடயம் அந்த பங்குகளை தெரிந்தோ தெரியாமலோ விற்றதுதான், ஏனென்றால் விலை ஏன் இறங்குகிறது என தெரியவில்லை, அதற்குமேலும் அந்த பங்குகளை வைத்திருந்து ஒரு வேளை அதற்கு மேலும் விலை இறங்கி, விலை ஏறாமலே அந்த பங்கு காணாமல் போயிருந்தால் முழு பணத்தினையும் இழந்திருப்பேன்.   
  • ஹஸ்பர்_ சிங்களம், தமிழ் மொழி பாட கற்கை நெறிகளை பூர்த்தி  செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இடம் பெற்றது.   இலங்கை தேசிய சமாதானப்பேரவையின் ஒருங்கிணைப்புடன் சேர்விங் கியூமனிட்டி பௌன்டேசன் மூலமாக ஏற்பாடு செய்த 90 மணித்தியாலய சிங்கள மற்றும் தமிழ் பாடநெறிகளை பூர்த்தி செய்தவர்களுக்கே இச் சான்றிதழ் திருகோணமலையில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் இன்று (22) இடம் பெற்றது. "நல்லிணக்கத்திற்கான மொழி" எனும் தொனிப்பொருளில் இடம் பெற்ற இப்பாடநெறியானது சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நோக்கில் இரண்டாம் மொழி சிங்களத்தை மேம்படுத்தும் நோக்கிலும் அரச ஊழியர்கள்,சிவில் சமூக செயற்பாட்டாளர்கள்,சர்வமத தலைவர்கள் ஆகியோர்களுக்காக நடாத்தப்பட்ட இப்பாடநெறியானது திருகோணமலை,அக்குறனை,பேருவளை ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்களுக்காக தமிழ் சிங்கள ஆகிய மொழியில் நடாத்தப்பட்டது. இப்பாடநெறிகளை முழுமையாக பூர்த்தி செய்த 53 நபர்களுக்கு இதன் போது சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.  திருகோணமலை நகர சபை முன்றலில் இருந்து பிரதான வீதி ஊடாக சமாதான நடை பவணியும் இடம் பெற்றது.  சிங்களம் தமிழ் போன்ற மொழிகள் அரச கரும மொழிகளாக காணப்படுகிறது இவ்வாறான மொழிகளை ஒருவருக்கொருவர் சிங்கள தமிழ் சகோதரர்கள் கற்றிருப்பது அவசியமாக கருதப்படுவதுடன் அரச சேவைக்கு இவ்வாறான மொழிகளை கற்றிருப்பதும் சேவைகள் வழங்குவதில் சிரமங்கள் இன்றி திறம்பட செயற்பட முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இக் கற்கை நெறியானது தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுச் செயற் திட்டம் ஊடாக அமுல்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  குறித்த இவ் நிகழ்வில் பிரதம அதிதியாக திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் கலந்து கொண்டு சான்றிதழ்களை வழங்கி வைத்தார். மேலும் குறித்த நிகழ்வுக்கு இலங்கை தேசிய சமாதானப் பேரவையின் தலைவர் கலாநிதி ஜோ வில்லியம்,நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி ஜெகான் பெரேரா,உதவி முகாமையாளர் என்.விஜயகாந்தன் மற்றும் திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் சத்யப் பிரியா ,சேர்விங் கியூமனிட்டி பௌன்டேசன் நிறுவனத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஏ.எம்.ஆசிக்,சர்வமத தலைவர்கள், பாடநெறி பங்குபற்றுனர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.   Hasfar A Haleem BSW (Hons) Journalist https://www.madawalaenews.com/2022/01/blog-post_305.html
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.