Jump to content

நேசக்கரம் இணையத்தளம் மீது சைபர் தாக்குதல்.


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

யார் இந்த தாக்குதலை செய்திருந்தாலும் அது கண்டனத்திற்குரியதே! ஒரு உதவி செய்யும் அமைப்பின் மீது நடத்தப்பட்ட தாக்குதலானது, மிகவும் கீழ்த்தரமான செயல்.இன்னும் தமிழனின் பாவங்கள் தீரவில்லையா?
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

மிகவும் ஈனத்தனமான, இழிந்த ஒரு செயல்!

 

தமிழனின் பொழுது விடிந்து விடக் கூடாது என்பதில், எத்தனை வஞ்சகர்கள் கவனமாக இருக்கிறார்கள்?

 

மீண்டும் தழைக்கலாம், சாந்தி!

 

எத்தனைமுறைதான் தளிர்ப்பது என்ற விரக்திதான் மேலெழுகிறது.

 

கவலையான தகவல்,

 

 நீங்கள் இணையத்தளத்தில் பதிவேற்றும் அனைத்தையும் எப்பொழுதும் ஒருகொப்பி பிரதி எடுத்து இன்னுமொரு பதிவேட்டில் சேமித்து வையுங்கள்.

 

5வருட ஆவணங்கள் இனி ஒவ்வொன்றாய் தரவேற்ற எற்படப்போகிற சிரமங்கள் தான் துயரைத்தருகிறது. உங்கள் அன்புக்கு நன்றிகள் சுந்தரம்.

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

தைரியம் தரும் வார்த்தைகள் தந்த விசுகு,சுந்தரம் , புங்கையூரான் ,கோமகன் ,ரதி, கடுந்தெறல் அரசு,நந்தன்,தப்பிலி,காவாலி,சுண்டல் ,ஆராவமுதன்,நுணாவிலான் ,ராஜவன்னியன்,தமிழ் சிறி,தமிழ்சூரியன்,கறுப்பி,இணையவன்,வண்டுமுருகன்,இசைக்கலைஞன்,
BLUE BIRD,Gari,அனைவரின் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றிகள்.
நீங்கள் புலம் பெயர் தேசத்தில் இயங்குவதால் - சட்ட நடவடிக்கை எடுக்க முடியாதா?

முயற்சி செய்து இத்தகைய செயல்களை செய்பவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதோடு
மட்டுமல்ல, பெருமளவு நட்ட ஈட்டையும் பெற்றுக்கொள்ளலாம் என நினைக்கிறேன்!

எனவே தாமதிக்காமல் சட்ட நடவடிக்கையில் இறங்குவது நல்லது!
 

 

இந்த சைபர் தாக்குதல் இந்தோனேசிய ஐடியிலிருந்து செய்யப்பட்டுள்ளது. இதற்கு எதிராக எத்தகைய நடவடிக்கையை எடுக்கலாம் என்பது பற்றி அது தொடர்பான சிலரிடம் ஆலோசனை கேட்டுள்ளேன்.பார்ப்போம்.
 

Link to post
Share on other sites

கவலை தரும் விடயம்.

 

ஏதாவது ஒரு விதத்தில் என் உதவி தேவைப்பட்டால் சொல்லவும்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சாந்தி அக்கா ஒரு hard copy யும் back up ம் கட்டாயம் உங்களிடம் இருக்க வேண்டும்.இல்லாவிட்டால் இனியாவது செய்து மன உளைச்சலை தவிர்க்கலாம். யார் இத்தகைய ஈனச்செயலை செய்தாலும் கண்டிக்கப்பட வேண்டியது.சந்தர்ப்பம் கிடைத்தால் யார் இத்தகையை செயலை செய்தார்கள் என்பதை அம்பலப்படுத்துங்கள்.
 
எம்மால் ஏதாவது உதவி செய்ய முடியுமா என தெரியப்படுத்துங்கள்.

 

back upஇருக்கிறது 5வருட தரவுகளை ஒவ்வொன்றாக புதிதாகவே அப்டேற் செய்ய முடியும். மாற்றுவழியேதும் இல்லை. இதில் www.tamilwebradio.com,www.tamilnews24.com,www.chiddu.com ,www.nesakkaram.orgஆகிய நான்கு சேவர்களும்

முடக்கப்பட்டது.இந்த நான்கும் ஒரே வழங்கியில் இருந்தது. மற்றையவற்றில் அதிகம் எதுவும் இருக்கவில்லை. நேசக்கரத்தில் தான் எல்லாம் சேவ் பண்ணி வைத்திருந்தேன்.

பிரதான வழங்கியின் மூலம் எல்லாவற்றையும் அழித்தவிட்டார்கள். சில தரவுகள் எனது back upஇலும் இல்லை. உதவி தேவைப்படும் போது கட்டாயம் உதவிகள் கேட்பேன்.

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

மிக கவலையான விடயம் .

எவ்விடர் வந்தாலும் மனித நேய பணி தொடரட்டும்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கவலையான செய்தி ..மீண்டு வருவீர்களென நம்பிக்கையுடன் இருங்கள்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமாக மீண்டுவருவீர்கள்.உங்களுக்கு அந்த துணிவு தைரியம் இருக்கு சாந்தி.

Link to post
Share on other sites

எதுக்கெடுத்தாலும் எங்களை  நோக்கி  காலைத்தூக்கவது தெரிகிறது.

 

சாந்தியே  இப்படியொரு குற்றச்சாட்டை  முன் வைக்காதபோது உங்களுக்கு எப்படி வந்தது??? ஆதாரம் தரமுடியுமா????

 

இதன் மூலம் சாந்தியக்காவுக்கு உறுதுணையாக இருப்போரையும் பிரிப்பதே நடக்கப்போகிறது.

தொடரட்டும் :(  :(  :(

யோசிக்க வேண்டியுள்ளது.

 

விசுகு ஐயாவிற்கு வணக்கம் .  தமிழ் மிகவும் இனிமையான மொழி . அதில் நாகரீகமே மேலோங்கிநிற்கும் . என்னை நாலுகால் பிராணியாக்கியதில் தங்கள் தமிழ் மொழி மீதானபற்றை என்னால் உணரமுடிகின்றது . மேலும் இந்தோனேசியாவில் இருந்து மொசார்ட் , சி ஐ ஏ , மற்றும் றோ உளவுப்பிரிவுகள் நேசக்கரத்திற்கு சைபர் தாக்குதலை மேற்கொள்வதற்கு நேசக்கரம் ஒன்றும் இராணுவ வலையமைப்பு இல்லை . நன்றி வணக்கம் .

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

விசுகு ஐயாவிற்கு வணக்கம் .  தமிழ் மிகவும் இனிமையான மொழி . அதில் நாகரீகமே மேலோங்கிநிற்கும் . என்னை நாலுகால் பிராணியாக்கியதில் தங்கள் தமிழ் மொழி மீதானபற்றை என்னால் உணரமுடிகின்றது . மேலும் இந்தோனேசியாவில் இருந்து மொசார்ட் , சி ஐ ஏ , மற்றும் றோ உளவுப்பிரிவுகள் நேசக்கரத்திற்கு சைபர் தாக்குதலை மேற்கொள்வதற்கு நேசக்கரம் ஒன்றும் இராணுவ வலையமைப்பு இல்லை . நன்றி வணக்கம் .

 

நன்றி கோ

தங்கள் விளக்கத்துக்கு.

 

ஆனால் தற்பொழுதுதான் சாந்தியக்கா இந்தோனிசியா பற்றி  எழுதியுள்ளார்.

அது ஆரம்பத்திலேயே உங்களுக்கு தெரிந்திருப்பது உங்களது திறமையைக்காட்டுகிறது.

 

 

எது எப்படியாயினும் எனது கருத்து தவறாக தெரிந்துள்ளது.

அதை வரவேற்று சாந்தியக்காவும்  ஐீவாவும் நவீனனும் விருப்பு வாக்கு இட்டதை மதித்து என் தவறை ஏற்றுக்கொள்கின்றேன்.

 

நான் யாழுக்கு வருவதற்கு ஒரு நோக்கமுண்டு.

அதற்கு எதுவுமே தடையாவதை விரும்பவில்லை.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

எட்டப்பர்கள் செய்துவிட்டு தேசியவாதிகள் மீது குற்றம் சாட்டலாம் கவனம் இதன் மூலம் சாந்திய தன்கள் வலையில் சிக்க வைக்க முயற்சி செய்யலாம் 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

உங்களது இணைய வழங்கி செர்வர்களில்(Web hosting & Database servers) தானியங்கி பிரதி தொகுப்பு மென்பொருள் (Automated Backup Software) இருக்குமே? இல்லையெனில் அதை நிறுவச் சொல்லலாம். இதன் மூலம் ஒரு நாளின் குறிப்பிட்ட நேரங்களில், நம் தலையீடு இல்லாமல் தானாகவே தரவுகளை மற்றொரு இடத்தில் பிரதி எடுத்துக்கொள்ளும் வசதிகள்(Automated scheduled backup) உண்டு. இணைய வழங்கியின் பாதுகாப்பு மென்பொருள்களை(Firewall & Intrusion Detection System) அவசியம் தற்போதைய பதிப்புக்கு(Latest version) மாற்றவும். தற்கால இணைய வழங்கி செர்வர்கள் பல்வேறு இடங்களிலிருந்து(Different countries) ஒரு தொகுப்பாக(Array & Mirrors) சாதுர்யத்துடன் செயல்படுகின்றன. உங்கள் இணைய வழங்கி செர்வர் வைத்திருப்பவரிடம் இந்த வசதி இருக்கிறதா என கேட்கலாம்.

 

இந்த நுட்பத்தில் அதிகம் தேர்ச்சியுள்ள எனது மகன் பலமுறை சொல்லிக் கொண்டிருந்தான். அண்மைக்காலங்களில் நடைபெற்று வந்த சைபர் தாக்குதல் பற்றி. நான் தான் பிள்ளைக்கு அடிக்கடி சொல்வேன் நேசக்கரத்தை முடக்கி ஒருவருக்கும் ஒரு பயனும் இல்லை. ஒருவரும் ஒண்டும் செய்யமாட்டினமெண்டு. ஆனால் அண்மைய இடுகைகளில் குறித்தளவு பிள்ளை செய்து வைத்திருந்தததால் அவை மட்டும் தப்பித்தது. நீங்கள் குறித்த மேற்படி முறை பற்றி மகனிடம் சொன்னேன். ஏற்கனவே பிள்ளை சொன்னதை நான் அக்கறைப்படுத்தாமையின் தாக்கத்தை புரிந்து கொண்டேன். எனினும் காலம் போனபின்னரான எனது ஞானம் எதுவும் செய்ய முடியாது போய்விட்டது. இனிவரும் காலங்களில் எதுவும் நடக்கலாம் என்ற எச்சரிக்கையோடிருப்பேன். நன்றிகள் தங்கள் கருத்துக்கு.

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சாந்தி,

இந்த இணைப்பிலிருந்து ஏதாவது எடுக்கலாமா என்று பாருங்கள் :

http://web.archive.org/web/20120423213807/http://tamilnews24.com/nesakkaram/ta/?

 

இணைப்பு வேலை செய்யாவிட்டால் http://archive.org/web/web.php என்ற இணையத் தளத்திற்குச் சென்று நேசக்கர முகவரியைக் கொடுங்கள்.

 

முயற்சித்தேன் குறித்தசில எடுக்கக்கூடியதாகவுள்ளது. நன்றிகள் இணையவன்.

கவலை தரும் விடயம்.

 

ஏதாவது ஒரு விதத்தில் என் உதவி தேவைப்பட்டால் சொல்லவும்.

 

வழங்கியின் செயற்பாடு திரும்ப கிடைத்ததும் கேட்கிறேன். நன்றிகள்.

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கவலை தரும் செய்தி கண்டு பிடியுங் யார் அந்த இந்தோனேசிய ரவுடி கும்பல்கள் என்று

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

நேசக்கர இணையம் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டிருப்பது பல வகையான சந்தேகத்தைத் தருகிறது. சாந்தி இது தொடர்பாக பேசும்போது மிக அவதானமாக இருக்கவும் என்பதை மட்டும்தான் என்னால் சொல்லமுடியும். மிகவும் வருத்தத்திற்குரியது. எங்கிருந்து ஏவப்பட்டிருக்கிறது. இதனை முடக்குவதால் யாருக்கு லாபம்? தற்சமயம் ஏற்படப்போதும் சந்தேகங்களும் குழப்பங்களும் எவ்வகையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பனவற்றில் மிக அவதானமாக இருக்கவேண்டிய சமயம்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவலையான விடயம்

 

இது கோழைகளின் தாக்குதல்

 

உங்களை பின்வாங்க வைப்பதே இந்த கோழைகளின் நோக்கம்

 

அவர்களின் நோக்கம் நிறைவேறமால் நீங்கள் பொது பொலிவுடன் மீண்டும் தொடருங்கள் உங்கள் சேவையை.

 

மனதிற்க்கு கஷ்டமான விடயம்தான், இதைவிட எவ்வளவோ கஷ்டங்களை கண்டிருப்பீர்கள், இதெல்லாம் தூசி என தட்டிவிட்டு முன்னேறுங்கள்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கவலையான தகவல்,

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சாந்தி அக்கா கவலையான விடயம், மனதை தளரவிட வேண்டாம், இதுவும் கடந்து போகும்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

தங்கள் ஆதரவை வழங்கிய அனைத்து யாழ் கள உறவுகளுக்கும் நன்றிகள். நேசக்கரம் இணையம் மீண்டும் இன்றிலிருந்து இயங்கத் தொடங்கியுள்ளது.சாந்தி அக்கா கவலையான விடயம், மனதை தளரவிட வேண்டாம், இதுவும் கடந்து போகும்

 

இதுவும் கடந்து இன்று மீண்டும் உயிர்த்துள்ளது உடையார்.
 நிச்சயமாக மீண்டுவருவீர்கள்.உங்களுக்கு அந்த துணிவு தைரியம் இருக்கு சாந்தி.

 


தைரியம் என்னிடம் இருக்கோ இல்லையோ தைரியத்தோடு திரும்பி வாவென்ற உங்கள் அன்பு மீண்டும் துளிர்க்க வைக்கிறது.மிக கவலையான விடயம் .

எவ்விடர் வந்தாலும் மனித நேய பணி தொடரட்டும்

நன்றிகள் Arjun.கவலையான செய்தி ..மீண்டு வருவீர்களென நம்பிக்கையுடன் இருங்கள்.

 

நன்றிகள் நிலாமதி.
 கவலை தரும் செய்தி கண்டு பிடியுங் யார் அந்த இந்தோனேசிய ரவுடி கும்பல்கள் என்று

 

நன்றிகள் பையன்.
 நேசக்கர இணையம் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டிருப்பது பல வகையான சந்தேகத்தைத் தருகிறது. சாந்தி இது தொடர்பாக பேசும்போது மிக அவதானமாக இருக்கவும் என்பதை மட்டும்தான் என்னால் சொல்லமுடியும். மிகவும் வருத்தத்திற்குரியது. எங்கிருந்து ஏவப்பட்டிருக்கிறது. இதனை முடக்குவதால் யாருக்கு லாபம்? தற்சமயம் ஏற்படப்போதும் சந்தேகங்களும் குழப்பங்களும் எவ்வகையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பனவற்றில் மிக அவதானமாக இருக்கவேண்டிய சமயம்.

 

நன்றிகள் சகாரா.
 கவலையான விடயம்

 

இது கோழைகளின் தாக்குதல்

 

உங்களை பின்வாங்க வைப்பதே இந்த கோழைகளின் நோக்கம்

 

அவர்களின் நோக்கம் நிறைவேறமால் நீங்கள் பொது பொலிவுடன் மீண்டும் தொடருங்கள் உங்கள் சேவையை.

 

மனதிற்க்கு கஷ்டமான விடயம்தான், இதைவிட எவ்வளவோ கஷ்டங்களை கண்டிருப்பீர்கள், இதெல்லாம் தூசி என தட்டிவிட்டு முன்னேறுங்கள்

 

நன்றிகள் வந்தியதேவன்.
 எட்டப்பர்கள் செய்துவிட்டு தேசியவாதிகள் மீது குற்றம் சாட்டலாம் கவனம் இதன் மூலம் சாந்திய தன்கள் வலையில் சிக்க வைக்க முயற்சி செய்யலாம் 

 

நன்றிகள் றமணன்.

யாரையும் நொந்து யாரையும் சந்தேகப்படவில்லை. ஆனால் செய்தவர்கள் நன்றாயிருக்கட்டும்.
 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

உங்கள் நம்பிக்கைக்கு கிடைத்த  ப ரிசு ...மீண்டும் வரா வண்ணம் அவதானமாய் இருங்கள்.

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.