Sign in to follow this  
வல்வை சகாறா

பாம்பு

Recommended Posts


 

குறிப்பு.

 

பாதைகள் மூடப்பட்டு, இராணுவத்தால் சூழப்பட்ட பகுதிக்குள் இருந்து வெளியேறுவது என்பது அவ்வளவு இலகுவானதல்ல. இரவுகளில் மட்டுமே பயணங்கள் இருளுக்குள் சன நெரிசல்படும் குளுவன் காடுகளூடாக….. சேறு சகதி என நீர்வழிப்பயணங்களாகவும் 90 களின் ஆரம்பங்களில் யாழ்ப்பாண மக்களின் பயணங்கள் அமைந்தன.

 

 

 

பாம்பு

Mia_Ngoo--large-msg-114707533575.jpg

 

 

“க்வ்”………. முனகலும் இல்லாமல் அழுகையும் இல்லாமல் ஈனசுரத்தில் எழுந்து அடங்கியது குரல். அடிவயிற்றைக் கைகளால் அழுத்தியபடி இருண்ட கொட்டிலுக்குள் அவ்வுருவம் சுருண்டு விழுந்தது.

 

அந்தக்கரையில் இருந்த திடீர் தேனீர் கடையின் முன்னால் டிரம்மில் கிடந்த தண்ணீரில் சேறாகிய பஞ்சாபியைக் கழுவிக் கொண்டாள் சுபாங்கி. ஈரம் சொட்டச்சொட்ட பஞ்சாபி உடலோடு ஒட்டியது. சிறு குடிலான திடீர் தேனீர்கடையில் லாந்தர் சின்ன மின்மினியாக அந்த இருளுக்குள் ஒளிதரும் தேவதையைப்போல் சிரித்தது. அந்தத் தேவதையின் சிரிப்பை அதிகம் பரவவிடாமல் மேல்பக்கம் தடுக்கப்பட்டதில் உயிர்ப்பயம் தெரிந்தது. அக்கடையில் சுடச் சுட வாய்ப்பனும் பிளேன் ரீயும் வாங்கித் தந்த தகப்பனிடம் ஆனந்தைக் கொடுத்துவிட்டுச் சாப்பிடும் நேரத்தில்….., பேரிரைச்சலோடு சடசடவென மழை கிளம்ப…, அங்கு தற்காலிகமாக வேயப்பட்ட அரைகுறை நிலையில் தென்பட்ட குடில்களுக்குள் நின்றவர்கள் ஓடி ஒதுங்கிக் கொண்டார்கள். சுபாங்கியும் தந்தையும் கூடவே பயணம் செய்யும் சுபனும் சுபாங்கியின் மகன் ஆனந்த்தைத் தூக்கிக் கொண்டு அக்குடில் ஒன்றுக்குள் புகுந்து கொண்டனர்.

 

பேரிரைச்சலுடன் இடி முழங்கியபடி மழை சோவென்று பெய்து கொண்டிருந்தது. வெளிச்சமற்ற குடில்களுக்குள் ஆளையால் நெருக்கியபடி நின்றவர்கள்…பயணம் எப்படி தொடர்வது என்ற அங்கலாய்த்து நிற்க, பிள்ளைக்கு மழைச்சாரல் அடிக்காது காக்க சுபாங்கி குடிலின் தாழ்ந்த முனைக்குள் சென்று நின்று கொண்டாள். குடிலின் முன் பகுதியில் தகப்பனும் சுபனும் மழை நிற்கும் நேரம் அவசரமாக தொடரவேண்டிய பயணத்திற்காக அந்தரப்பட்டனர். சுபாங்கிக்கும் அவர்களுக்கும் இடையில் வேறு சிலர் புகுந்து நிரவிக் கொண்டார்கள்.

 

இருள், தனிமை, மழை ஆனந்த் கண்களை இறுக மூடியபடி தாயை இறுக்கிகட்டிக் கொண்டான். அவன் பயத்தைப் போக்க சுபாங்கியும் அந்த மழலையின் முதுகையும் தலையையும் வருடியபடி நிற்க முதுகில் ஏதோ ஊர்ந்தது. மனம் கிலீரிட்டது. ஏற்கனவே அவ்விடத்தில் பாம்புகள் அதிகம் என்ற பயம் குளிரைத்தாண்டி நடுக்கத்தைக் கொடுத்தது. ஊர்வதும் நிற்பதுமாக சிறிது நேரம் நகர்ந்தது. அருகில் இருப்பர்களை பார்க்கமுடியில்லை அந்தகார இருள் மின்னல் அடிக்கும் இடைவெளிக்குள் பார்த்தால்தான் உண்டு. மழைக்காக ஒதுங்கியவர்கள் தன்னுடன் நிற்பதை சுபாங்கியால் உணர முடிந்தது. மனதிற்குள் இல்லாத கடவுள்களை எல்லாம் கூப்பிட்டு வேண்டுதல்களை அடுக்கிக் கொண்டேபோனாள். திரும்பிப் பார்க்க அவளுக்குப் பயமாக இருந்தது.

 

நேரம் ஆக ஆக ஊர்வதில் வித்தியாசங்கள் தோன்ற ஆரம்பித்தன. மெல்ல ஏறியும் இறங்கியும் அசையத் தொடங்கியது. இரண்டு கைகளாலும் பிள்ளையை அணைத்திருந்தவள். பாம்பு எங்கிருந்து நீள்கிறது என்பதை அந்த இருட்டுக்குள் அறிய முற்பட்டாள். இருமருங்கிலும் நெருக்கமாகப் பலர். சுபாங்கி முதுகை நெளித்து சற்று முன்னகர்ந்தாள்.. ஊர்ந்த பாம்பு சட்டென நின்றது. வெளியே மழை விட்டேனா பார் என்று விசமத்திற்கு தலை விரித்தாடியது. இடைவெளிவிட்டு மீண்டும் தொடங்கிய பாம்பு சற்று அழுத்தமாக உரச ஆரம்பித்தது. அந்த இருளுக்குள் எந்தப்பக்கத்தில்இருந்து பாம்பு ஊர்கிறது என்பதை அடையாளங் காணுவதற்காக பல்லைக் கடித்தபடி இரும்பாக நின்றாள் சுபாங்கி. இப்போது பாம்புக்கு சற்று துணிவு வந்துவிட்டதுபோல் அலையோதும் உரசலுடன் அவள் கைகளுக்கு இடையால் பட்டென நுழைந்து அவள் தனத்தை வெறித்தனமாக தொட்டுவிட்டு சட்டென மறைந்தது.

 

மழை மெதுவாக தூர ஆரம்பித்தது. முன்னுக்கு நின்ற தகப்பனும் சுபனும் குடையை விரித்துக் கொண்டு ஒரு மைல் தூரம் நடந்தால் உடனடியாக வாகனத்தைப் பிடிக்கலாம் என்று பயணவழிகாட்டி சொல்வதாக சுபாங்கியை முன்னே வரும்படி அழைத்தனர். இவர்களுடன் பயணத்தில் ஈடுபட்டிருந்த மற்றவர்களும் திபுதிபுவென தமது பொருட்களை எடுத்துக் கொண்டு வெளியேற ஆரம்பித்தனர்.சுபாங்கி கால்களுக்குள் முறிந்து கிடந்த சிலாகையை குனிந்து எடுத்துக் கொண்டாள். இருளில் குனிவைத் தனக்குச் சாதகமாக எண்ணிய பாம்பு முன்னரைக்காட்டிலும் உசுனத்துடன் நெருங்கியது.

 

விறுவிறென்று ஒற்றைக்கையை உதறியபடி மற்றக்கையால் பிள்ளையை அணைத்தபடி வெளியே வந்த சுபாங்கி சுபன் விரித்துக் கொடுத்த குடையை வாங்கி பயண வழிகாட்டியை நோக்கி மற்றவர்களுடன் தந்தையோடு சேர்ந்து நடந்தாள்.   

Edited by வல்வை சகாறா
  • Like 5

Share this post


Link to post
Share on other sites

கதை நன்றாகத்தான் இருக்கிறது. முதலில் உண்மையான பாம்பின் கதைதான்
கூறப்போகிறீர்கள் என்று பயந்துவிட்டேன். எனக்கு பாம்பு என்றாலே பயம்.
மனிதரிலும் பாம்பு பரவாயில்லை.

Share this post


Link to post
Share on other sites

ம்ம்ம்

Share this post


Link to post
Share on other sites

கதை நன்றாகத்தான் இருக்கிறது. முதலில் உண்மையான பாம்பின் கதைதான்

கூறப்போகிறீர்கள் என்று பயந்துவிட்டேன். எனக்கு பாம்பு என்றாலே பயம்.

மனிதரிலும் பாம்பு பரவாயில்லை.

 

பாம்புக்கதைகள் என்றால் எனக்கு கேட்க ஆசை. அதற்காகவே சின்ன வயதில் காளிங்கன் கதையை அடிக்கடி பேரனிடம் கேட்பேன் எத்தனை தடவை சொல்லியிருப்பாரோ தெரியவில்லை. நீங்கள் வித்தியாசமாக இருக்கிறீர்கள்.

 

வருகைக்கும் பதிவுக்கும் நன்றி சுமேரியர். :rolleyes:

Share this post


Link to post
Share on other sites

ம்ம்ம்

 

விசுகு அண்ணா "ம்ம்ம்" என்று இழுத்திருக்கிறீங்கள். ஏன் வார்த்தைகள் வரவில்லையோ? :mellow:

Share this post


Link to post
Share on other sites

விசுகு அண்ணா "ம்ம்ம்" என்று இழுத்திருக்கிறீங்கள். ஏன் வார்த்தைகள் வரவில்லையோ? :mellow:

 

 

கோபம் வருகுதில்ல.............

 

சகாரா படம்(பாம்பு) என்று  பார்க்க ஓடிவந்த எனக்கு எவ்வளவு கடுப்பு வரும்(நாலு வரி கதையைப்படித்ததும்.) :D

Share this post


Link to post
Share on other sites

லைட் அணைந்தால்   அனேக ஆண்கள் பாம்புகள் தான் ,
அதற்கு இடம் பொருள் காலம் இல்லை .

 

Share this post


Link to post
Share on other sites

கோபம் வருகுதில்ல.............

 

சகாரா படம்(பாம்பு) என்று  பார்க்க ஓடிவந்த எனக்கு எவ்வளவு கடுப்பு வரும்(நாலு வரி கதையைப்படித்ததும்.) :D

 

நாங்கள் பாம்புப்படமும் போடுவமெல்லோ..... :icon_mrgreen:

 

Share this post


Link to post
Share on other sites

நாக பாம்பா, நல்ல பாம்பா, தண்ணிப்  பாம்பா

எல்லாவற்றிற்கும் கொத்துவதுதான் குணம்.

Share this post


Link to post
Share on other sites

தரமான உருவகக் கதைக்குப் பாராட்டுக்கள் . பாம்புகள் என்றும் , எதிலும் , எங்கேயும் நீக்கமற நிறைந்திருக்கும் . நாம்தான் இந்தப் பாம்புகளில் இருந்து  அவதானமாக எம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் . என்னவாக இருந்தாலும் பாம்புக்குப் பால் ஊற்றுவது எமது பிழை தானே ???  அத்திபூத்த உருவகக் கதைக்குப் பாராட்டுக்கள் .

Share this post


Link to post
Share on other sites

நாக பாம்பா, நல்ல பாம்பா, தண்ணிப்  பாம்பா

எல்லாவற்றிற்கும் கொத்துவதுதான் குணம்.

நான் நினைக்கிறேன் இந்தப்பாம்புக்கு பொத்துறது தான் குணம் போல :D

Share this post


Link to post
Share on other sites

இது ஏதோ ஈவ்டீசிங் கதை போல் உள்ளது.. :D அண்மையில் கமல் படம் வெளிவந்த பாதிப்பில் குழப்பமாக எழுதியுள்ளார் கதாசிரியர்..! :lol:

Share this post


Link to post
Share on other sites

வெறும் வரட்டுக் கவுரவங்களுக்கும், எழுதப் படாத சமூக விதிகளுக்கும், பழக்கப் பட்டுப் போன பாம்பு போல இருக்கு! :o

 

இந்த வகையான பாம்புகள், அடிக்கடி செட்டையை மாற்றிக்கொள்ளும் தன்மை கொண்டவையாக இருக்கும்!  :D

 

இது என்ன தொடரா, வல்வை? :icon_mrgreen:

Share this post


Link to post
Share on other sites

கதையில் உள்ள படத்திற்கும் கதைக்கும் சம்பந்தமில்லை. அழகியைப் பாம்பு இறுக்கி அணைப்பது போன்று படத்தைப் போட்டுவிட்டு பாம்பை அடிக்க சிலாகையை தூக்குவது மாதிரிக் கதை போவது சரியா?

Share this post


Link to post
Share on other sites

சகாறா அக்கா, இடப்பெயர்வின் போது காடுகளுக்கூடான பயணங்களின் போது பாம்புகள் இருக்கலாம் என்ற அச்சம் இருந்தாலும் இதில் அந்த பெண் மேல் ஊர்ந்த பாம்பு என்று கூறியது ஆண் ஒருவரை தானே. :D

இது தொடருமா? அல்லது முடித்து விட்டீர்களா? :rolleyes:

Share this post


Link to post
Share on other sites

சகாறா அக்கா, இடப்பெயர்வின் போது காடுகளுக்கூடான பயணங்களின் போது பாம்புகள் இருக்கலாம் என்ற அச்சம் இருந்தாலும் இதில் அந்த பெண் மேல் ஊர்ந்த பாம்பு என்று கூறியது ஆண் ஒருவரை தானே. :D

 

இதுவரி நீங்கள் வில்லங்கமாக புகுந்து கேட்டவற்றில் அல்லது ஆலோசனை சொன்னவற்றில் சரியாக சொல்லி இருக்கிறீர்கள்.வாழ்த்துக்கள் அக்கா. :D

Share this post


Link to post
Share on other sites

தாயகத்தில் இ.போ.ச. பஸ்சிற்குள்ளும் தனியார் போக்குவரத்து வாகனங்களுள்ளும் எத்தனையோ பாம்புகள் படமெடுப்பதை பார்த்திருக்கிறேன். நல்லதொரு கதையை நறுக்கென்று சொன்ன சகாராவுக்கு பாராட்டுக்கள்.

Share this post


Link to post
Share on other sites

கதை நன்றாக இருக்கின்றது. பாராட்டுக்கள். கதையின் முகப்பில் வந்த சித்திரமும் முடிவில் வந்த சிலாகையும்  ஒரு குறும்படம் பார்த்த உணர்வைத் தந்தன.

 
பாம்பு, பாம்பாட்டி, மகுடி,கூடை, பார்வையாளர்கள் என்ற சீன் எப்போதுமே அகவெளியியில் உணர்வுகளின் cocktailலினைத் தோற்றுவிப்பன தான். பாம்பிற்கு மனிதனைப் போன்று உணர்வுகளை வெளிப்படுத்தும் முகம் இல்லை, அல்லது பாம்பு வெளிப்படுத்தும் உணர்வுகளை மனிதனால் முற்றாகப் புரிய முடிவதில்லை. ஆனால் பாம்பாட்டிக்கு முகமுண்டு. பார்வையாளர்கள், பாம்பைப் பார்க்கும் அளவிற்குப் பாம்பாட்டியினையும் பார்ப்பார்கள். பாம்பின் விசம் அகற்றப்பட்டுவிட்டது என்று உறுதியளிக்கப்படினும் கூட எங்கே அந்தப் பாம்பு தன்னைத் கொத்திவிடுமோ என்ற தோரணையில், முதன்முதலாக வெடிகொழுத்தும் சிறுவனைப் போல, பாம்பாட்டி ஊதிக்கொண்டிருப்பதாய்ப் பார்ப்பவர்களிற்குத் தெரியும். மேலும், வயிற்றுப் பிளைப்பிற்காகப் பாம்பாட்டி ஊதிக்கொண்டிருக்கையிலும், மகுடி ஊதுவது தொழிலிற்கு அப்பால் பாம்பாட்டிக்குப் பிடித்ததொன்றோ என்றும் தோன்றும். அது போல, பாம்பு ஆடுவது மகுடி இசை அதற்குப் பிடித்ததால் நிகழ்கிறதா, அல்லது அதன் சக்தியினை மேவி அந்த இசை அதனை அவ்வாறு ஆட்டுவிக்கின்றதா என்றும் தோன்றும். மொத்தத்தில் பாம்பு, அது சிறைவைக்கப்பட்டிருக்கும் ஓலைப் பெட்டி, பாம்பாட்டி, மகுடி என்பனவெல்லாம் கட்டுப்பாடுகளாகவும், அத்துமீறல்களாகவும், இயல்பிற்கு அப்பாற்பட்டனவாகவும் பார்வையாளரிற்குத் தெரிகின்ற அதே நேரத்தில்; ஆபத்தான, இயல்பிற்குப் புறம்பான,அத்துமீறப்படும் அந்தத் தருணங்களைப் பாம்பாட்டியும் பாம்பும் ரசிக்கிறார்கள் என்றும் பார்வையாளர்களிற்கு எண்ணத்தோன்றும். மேற்படி காட்சி சார்ந்த பார்வையாளர்களின் இந்த அகவெளி முரண், சில்லறைகளைப் பெட்டிக்குள் விளச்செய்கின்றது. இருப்பினும், பார்வையாளர்களின் மனதிற்குள் வாழ்கின்ற ஒழுங்கு சார்ந்த ஏதோ ஒரு எதிர்பார்ப்பு, மகுடி நிறுத்தப்படின் அந்தப் பாம்பு அந்தப் பாப்பாட்டியினைக் கொத்தும், அப்படி அது கொத்தினால் பாம்பாட்டி சாவான் என்று அவர்களை நம்பச் செய்கின்றது. பாம்பு பாம்பாட்டியின் வாசிப்பை ரசிப்பது போல் தெரியினும், உண்மையில் அது கொத்துவதற்கான தருணம் பாத்துத் தான் ஆடுகிறது என்றும் பார்வையாளர் நம்புவர். ஆனால், இதெல்லாம் பாம்பிற்கும் பாப்பாட்டிக்கும் முற்றிலும் அப்பாற்பட்ட பார்வையாளரின் மனவெளி வாசிப்புக்குள் மட்டும் தான்.
 
உங்கள் கதையின் முகப்பில் வந்த அழகியினைச் சுத்திய பாம்பின் சித்திரமும், முடிவில் வந்த சிலாகையும் குறித்த காட்சி சார்ந்த பார்வையளாரின் அகவெளியினைக் காட்டிநிற்கின்றனவோ என்று தோன்றுகின்றது.

 

Share this post


Link to post
Share on other sites

கதையில் உள்ள படத்திற்கும் கதைக்கும் சம்பந்தமில்லை. அழகியைப் பாம்பு இறுக்கி அணைப்பது போன்று படத்தைப் போட்டுவிட்டு பாம்பை அடிக்க சிலாகையை தூக்குவது மாதிரிக் கதை போவது சரியா?

 

ஐக் அடிக்கும் கதையை எழுதுவதற்கு தெரிவு செய்த இடம் சரியில்லை

Share this post


Link to post
Share on other sites

இப்பொழுதெல்லாம் இப்படியான பாம்புகளிற்கு இன்னும் வாய்பளிக்கும் வண்ணம் எமது மண்ணின்  கலாச்சாரம் மழுங்கடிக்கப்பட்டுள்ளது சகாரா . உலகெங்கும் இப்படியான பாம்புகள் உலவுகின்றன. .. பெண்கள் தான் உஷாராக வேண்டும். 

நடப்பை நகர்த்திய விதம் மிக நன்று... 

Share this post


Link to post
Share on other sites

உலகில் தைரியமற்ற பாம்புகள் தான் ஒருவரின் சூழ்நிலையை தனக்குச் சாதகமாக்கி படர நினைக்கும். இது ஒரு கோழைப் பாம்பு.

 

இங்கு பாம்புகள் எவ்வளவு அதிகமோ அதே போன்று பற்றிப் படர்ந்து தன் வலைக்குள் சிக்க வைக்கும் சிலந்திகளும் அதிகம். பாம்புகளும் சிலந்திகளும் கொண்டது தான் இந்த சமூகம்.

 

இக் கதையில் கையாளப்பாட்ட சொற்களில் தனித்து ஒட்டாமல் நிற்கும் ஒரு சொல்லாக 'தனம்' என்று சொல்லு இருக்கு.

 

Share this post


Link to post
Share on other sites

பாம்பிற்கு போட்டியாக ஒரு சிலந்தி கதை எழுதினால் போச்சு .

Share this post


Link to post
Share on other sites

லைட் அணைந்தால்   அனேக ஆண்கள் பாம்புகள் தான் ,

அதற்கு இடம் பொருள் காலம் இல்லை .

 

இடம் பொருள் காலம் இல்லை என்றால் லைட் அணைத்தாலும் ஒன்றுதான் விட்டாலும் ஒன்றுதான் அர்யூன். :rolleyes:

Share this post


Link to post
Share on other sites

தரமான உருவகக் கதைக்குப் பாராட்டுக்கள் . பாம்புகள் என்றும் , எதிலும் , எங்கேயும் நீக்கமற நிறைந்திருக்கும் . நாம்தான் இந்தப் பாம்புகளில் இருந்து  அவதானமாக எம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் . என்னவாக இருந்தாலும் பாம்புக்குப் பால் ஊற்றுவது எமது பிழை தானே ???  அத்திபூத்த உருவகக் கதைக்குப் பாராட்டுக்கள் .

 

நன்றி கோமகன்.

சூழலை சாதகமாகப் பயன்படுத்தி விழுங்கும்  பாம்புகளிடம் அவ்வளவு சீக்கிரம் தப்பித்துவிடமுடியாது. இக்கருத்தின் மூலம் எதிர்பாலரிடம் தவறு இருக்கிறது என்று நிறுவ முயல்கிறீர்கள். இலகுவாக குற்றச்சாட்டுகள் வைத்து இரு பாலரும் வாதிடலாம். கட்டற்ற சுதந்திரம், எதனையும் எவரும் எப்படியும் ஆளலாம் என்னும் பயமற்ற தன்மையும் இப்படியான நிகழ்வுகளைத் தோற்றுவிக்கும் அதற்கு ஆண் பெண் இரு பாலரும் விதிவிலக்கல்ல. :rolleyes:

 

நாக பாம்பா, நல்ல பாம்பா, தண்ணிப்  பாம்பா

எல்லாவற்றிற்கும் கொத்துவதுதான் குணம்.

 

அப்ப கொத்தாத பாம்பே இல்லை தப்பிலி? :D

 

Edited by வல்வை சகாறா

Share this post


Link to post
Share on other sites

எனக்கும் கொஞ்சம் சந்தேகமாய் உள்ளது.விரைவில் யாழ்களமாடும் தேர்தல் வருமோ என்ற கேள்வியுமுண்டு.

:rolleyes:

 

ஏன் மறுபடியும் என்னை பாம்புக்குரூப்பிற்கு தலைவியாக்கத் திட்டமா? நடக்காது நீலப்பறவை :icon_mrgreen:

நான் நினைக்கிறேன் இந்தப்பாம்புக்கு பொத்துறது தான் குணம் போல :D

 

கொத்துறதா? பொத்துறதா? :blink::unsure:

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this