Jump to content

கொழும்பு ஃபிகர்


Recommended Posts

இரத்மலான விமான நிலையத்திலிருந்து பாணந்துறைப்பக்கம் நாலாவது தரிப்பிடம் அங்குலான சந்தி.

 

ஆடைதொழிற்சாலைகள் நிறைந்த இடம். அங்கு வேலை செய்யும் இளம் சிங்கள பெண்களுக்கும் குறைவில்லை. நானும் நியாஸும் வெள்ளிகிழமை பின்னேரங்களில் அங்குலான சந்தியில் பிற்ற கொட்டுவ போற 101 பஸ் எடுத்தோம் என்றால், வார விடுமுறையில் வீடு திரும்புகின்ற ஆடை தொழிற்சாலை அழகிகள் தான் எங்கள் பொழுதுபோக்கு.

 

பிகர்  மடிக்கிறத்துக்கு என்று எங்களிடம் ஒரு டெக்னிக் இருக்கு. நாங்கள் சீட்டிலே இருந்து கொண்டு நிக்கிற பிகருகளின் காலை சுரண்டுவோம், அவை காலை ஏறி மிதிச்சால் இந்த பிகர் மடியாது.

 

அதேவேளை அவளுகளும் திரும்ப சுரண்டினால் பிகர் மடிஞ்சிட்டு என்று அர்த்தம். இதே மாதிரி நாங்கள் நிண்டு கொண்டு, சீட்டிலே இருக்கிற பிகருகளுக்கும் செய்யலாம்.

 

பஸ் நிறைய சனம், நானும் நியாஸும் பின் சீட்டிலே இருந்து கொண்டிருந்தோம்.

 

சுப்பப... ப..... ப..... ர் பிகர்..

 

அளவான உயரம், அழகான உடம்பு, மின்னல் அடிக்கிற பார்வை, ஈரபிலாக்காய் சாப்பிடுற இளம் சிங்களத்தி..மிச்சம் எல்லாம் சென்சார்..

 

 

கையிலே ஒரு அழகான கை பை, சீட்டின் பிடிகளை இருக்கின படி கைகள்.எங்களை இடைக்கிடை பார்த்து ஒரு புன்முறுவல், அதை பார்த்து நாங்கள் பார்க்காத மாதிரி தலையை கோதி கொள்வோம்.

 

தெகிவளை சந்தியில் இருந்து எங்கள் இரண்டு பேருக்குள்ளையும் சண்டை, யார் மதிக்கிறது எண்டு. கடைசியா ஒரு  KFC சிக்கினுகாக அவனுக்கு விட்டு கொடுத்தேன்.

 

அவன் தான் சுரண்ட தொடங்கினான்.

அவள் திரும்ப சுரண்டினாள்.

ஆனால் அவன் காலுக்கு பதிலாக என் காலை.

 

அவளோ நெளிவதும் இடைக்கிடை எங்களை பார்த்து புன்னைகைப்பதுமாக இருந்தாள்.

 

நியாஸ் : மச்சான் நான் சுரண்டுறன் சிரிக்கிறாளே தவிர ஒரு பதிலையும் காணேல.

நான் : மச்சான் அவள் உன்ர கால் என்று நினைச்சு என்ர காலை சுரண்டுறாள் டா.

நியாஸ் : பரவாயில்லை விடு மச்சான், மடிஞ்சிட்டு தானே, நவலோகா வரட்டும் இறக்குவம் எண்டான்.

 

நானும் ஒரு வடிவான சிங்களத்தி காலை சுரண்டுறாள் தானே இருக்கட்டும் என்று இருந்துவிட்டேன்.

 

அவள் எங்களை பார்க்கிறதும், வெளியிலே பார்க்கிறதும். என்ர மனசுக்குள்ளே ஒரே ஜில் ஜில். எனக்கு தான் மடியபோகுது பிகர். அவன் சுரண்டியும் என்னை சுரண்டுறாள் என்றால் நான் குடுத்து வைச்சிருக்க வேணும்.

 

தெகிவளையிலே தொடங்கினது, சவோய் தாண்டியாச்சு இன்னும் தொடருகிறது.

இத்தனைக்கும் அவளுக்கு இருக்க சீட் கிடைச்சும் எங்களை பார்த்திட்டு இருக்காமல் நிண்டால்.

 

மச்சான் sure ஆக பிகர் மடிசிட்டு. சுப்பர் மச்சான்.

 

பம்பலபிட்டி சந்தியிலே மணி அடிச்சிட்டு இறங்கி போயிட்டாள்.

 

சுரண்டல் நிக்கவில்லை.

 

குனிச்சு பார்த்தால்,

 

நியாஸ் என்ர காலை சுரண்டி கொண்டு இருக்கிறான்.

 

 

(யாவும் உண்மை)

Link to comment
Share on other sites

சிங்கள பிகருகளை போடுவது சுகம்...  :wub:

உல்லாச பறவைகள் படத்தில் சுருளியும் மூர்த்தியும் பாடும் "எங்கெங்கும் கண்டேனம்மா" பாட்டுதான் நினைவு வந்தது .

 

பகலவன் எழுதியவிதம் அருமை ஆனால் கரு அப்படியல்ல .சிங்கள இடங்களில் வேலைக்கு ,படிக்க போன இடங்களில் எம்மவர் செய்த திருகுதாளங்கள் எக்கசக்கம் .இங்கு ஒரு வயது போனவர் இருக்கின்றார் அவர் தான் வேலை(போஸ்ட் மாஸ்ரர் ) செய்த இடங்களில் செய்த அநியாயங்களை எல்லாம் இப்போ பெருமையாக எடுத்துவிடுவார் .தான் பெண்களை பார்த்தவுடனேயே சொல்லிவிடுவாராம் இவர்கள் கட்டில் கேஸா இல்லையா என்று .

இப்ப ஒட்டுமொத்தமாக அதற்க்கு பதில் தான் கிடைக்கின்றது போல .

Link to comment
Share on other sites

கருத்துக்களை பதிந்த உடையார், அர்ஜுன் அண்ணா, கறுப்பி ஆகியோருக்கு நன்றி.

 

பாம்பு என்ற சகாறா அக்காவின் கதையை படித்த பாதிப்பில் எழுதியது கதை இது.

நாங்கள் செய்த பாவத்தின் வினைகளை இப்போ அறுக்கிறோம் என்ற அர்ஜுன் அண்ணாவின் வாக்கியம் எவ்வளவு தூரம் யதார்த்தமானது, என்பதை அந்த பாவங்களை செய்தவர்களுக்கும், அதற்கு துணை போனவர்களுக்கும் தான் தெரியும்.

 

 

Link to comment
Share on other sites

அட சீ........  வெக்கமாயில்லை :o ,பெடியளின்ரை காலை பெடியள் சுறண்ட <_<  <_<  ???? கறுமம்.... கறுமம்........ ^_^   அட தோலிலையாவது தெரியவேணாமோ பகலவன்  :(  ???  பேசுவன் எண்டோ நினிக்கிறீர் :lol: ?? உங்கடை எழுத்தைப் பாத்திட்டு வந்த கோபம் ம்ளங்சி யோடை போட்டுதப்பா  :D  . தொடருங்கோ  :) .

Link to comment
Share on other sites

பகலவன் அண்ணா, உங்கள் நண்பர் அந்த பெண்ணின் கால் என்று நினைத்து அவ்வளவு நேரம் உங்கள் காலை தான் சுரண்டினாரா? :lol:  நீங்களும் அந்த பெண் தான் உங்கள் காலை சுரண்டுவதாக நினைத்து விட்டீர்கள் போலிருக்கு. :icon_idea:

சா... ஆம்பிளைகளுக்கு பெண்களை மடக்க நினைப்பதே வேலையாகி விட்டது. :wub:  மாட்டுப்படும் அப்பாவி பெண்கள் பாவம்.. :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:D :D

உங்கள் ஸ்டைலில் நகைச்சுவை தூக்கல்..

கதையை நகர்த்திய விதம் சூப்பர் அண்ணா. :)

Link to comment
Share on other sites

சுருக்கமான அசத்தலான கதை.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
இப்படித்தான் யாழ்ப்பாணம் தீவுப்பகுதி நபர் ஒருவர் பாணத்துறையில், வேலையில் இருந்த போது, இன்னுமொரு சிறுபான்மை இன வீட்டில் வாடகைக்குக் அறை எடுத்து தங்கி இருந்தார்.
 
தமிழ் பட கதை போல அந்த வீட்டில் இருந்த இளம் விதவையை மடக்கி எக்குத் தப்பாக பிடி பட்டு விட அவர்களோ ஆளை குண்டுக் கட்டாக போலீஸ் ஸ்டேஷன் கொண்டு போய், உடன கலியாணம் செய்ய வேண்டும் எண்டு போராட, அங்க இருந்த போலீஸ் ராலாமி மாத்தையா, இன்ஸ்பெக்டர் வரும் வரை எல்லோரும் வெளிய இருங்க எண்டு சொல்லி, நம்ம ஆளை உள்ளார போட்டு விட்டார்.
 
கம்பி எண்ணிக் கொண்டு சோகமாக இருந்தவர், 'அடோய், என்னடா விளையாட்டு காட்டி இருக்கிறாய்' எண்டு சத்தம் வர, பார்த்தால் அவரது பள்ளிகூட நண்பர், இன்ஸ்பெக்டர் ஆக நிக்கிறார்.
 
வெளிய இருந்த ஆக்களைக் கூப்பிட்டு, நாளைக்கு காலை எல்லா ஆயித்துடன் வாருங்கோ எண்டு அனுப்பி விட்டு, இவரை இரவோட, இரவா, கொழும்பு அனுப்பி விட்டார்.
 
காலைல வந்தவர்களுக்கு, 'போட்ட அடியில ஆள் கொஞ்சம் சீரியஸ் ஆகி கொழும்பு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி இருக்குது' இன்று சொல்லப்பட்டதாம்.
Link to comment
Share on other sites

நகைச்சுவையாக எழுதியுள்ளீர்கள்.


 

83 கலவரத்தில் தமிழர்களை அடித்துத் துரத்தியவர்கள், தமிழர்களுக்கு பிறந்த பிள்ளைகள்தான் என்று சொல்வார்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதை நன்றாகத்தான் நகர்ந்தது.. ஏனோ உங்கள் நண்பர்தான் காலைச் சுரண்டுகின்றார் முடிவைப் படிக்கமுதலே ஊகத்தில் வந்தது.

 

சிங்களம் தெரியாமல் மொரட்டுவ, கட்டுப்பெத்த ஊடாக ஆடைத் தொழிற்சாலையில் வேலை செய்துவிட்டு மினி வானில் நிமிர்ந்து நிற்கமுடியாமல் வளைந்து குனிந்து அடைபட்டுக் கொண்டுவரும் சிங்களப் பெண்களுடன் பயணித்த அனுபவங்கள் உண்டு. அடிக்கடி இறங்க வேண்டிய தரிப்பிடத்தை தவறவிட்டு நடுச் சிங்கள ஊருக்குள் போய் இரண்டு மைல் நடந்தே வரவேண்டியும் இருந்தது.. :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல அனுபவப் பகிர்வு, பகலவன்!

 

ஆனால், மாடு உழக்கிறதுக்கும், மான் தடவிறதுக்கும் வித்தியாசம் இருந்திருக்குமே? :D

 

புதுப் பழக்கமா இருக்கும் போல! :o

Link to comment
Share on other sites

உங்கள் கதை நகர்த்தல் அருமை அருமை .......பல இடங்களில் பார்த்துள்ளேன் .பகலவன் .வாழ்த்துக்கள் தொடருங்கள் .மேலும் .............

 

 

 

 

 

நல்ல அனுபவப் பகிர்வு, பகலவன்!

 

ஆனால், மாடு உழக்கிறதுக்கும், மான் தடவிறதுக்கும் வித்தியாசம் இருந்திருக்குமே? :D

 

புதுப் பழக்கமா இருக்கும் போல! :o

இதுக்குத்தான் சொல்லுவது புங்கை அண்ணா போல அனுபவசாலிகளுடன் .பழக வேணுமென்று :D  :D  :lol:

Link to comment
Share on other sites

பதிவுக்கு கருத்திட்ட கோமகன், துளசி, நாதமுனி, ஜீவா, இசை, கிருபன், தப்பிலி, புங்கை, தமிழ்சூரியன் ஆகியோருக்கு நன்றிகள்.

 

உண்மையிலே கொழும்பு பேருந்துகளும், சிங்கள குட்டிகளும் ஒரு கனா காலம் தான். நான் என்ன தான் பிகருகளை இங்கே பார்த்தாலும் எங்கள் சிங்கள கிராமத்து பிகருகளின் வனப்புக்கு ஈடாகாது.

 

எனது அபிப்பிராயப்படி சிங்கள இளம் பெண்கள், தங்களுக்கான ஆடை தேர்வில் வல்லவர்கள்.தங்களின் உடலமைப்புக்கும், நிறத்துக்கும் என்ன ஆடை பொருத்தமோ அதை தேர்வு செய்து அணிவார்கள். அது அவர்களுக்கு மேலும் அழகாய் எடுத்து காட்டும்.

 

அதுக்கு எதிர்மறையாக தமிழ் பெண்கள். எந்த ஆடை மற்றவர்களுக்கு அழகோ அதை பார்த்து தாங்கள் அணிந்து ஆடை அழகையும் கெடுத்து தங்கள் அழகையும் கெடுத்து கொள்வார்கள்.

 

என்ன இருந்தாலும் சிங்கள பெண்கள், கறுப்பி சொன்னது போல நினைத்தாலே இனிக்கும்.

 

 

புங்கை,

எங்கட அனுபவங்களை அப்படியே எழுதினால், பெண்கள் சேர்ந்து என்னை யாழில் தடை செய்ய சொன்னாலும் ஆச்சரியபடுவதற்கில்லை.

 

இப்போ தான் கொஞ்சம் அடங்கி இருக்கிறோம். :lol:

 

Link to comment
Share on other sites

கொழும்பில் வாழ்ந்த ஐந்து வருடங்கள் அலாதியானவை. பலவிதமான அனுபவங்கள். அவற்றில் இப்படியான நகைச்சுவைக்குரிய  சம்பவங்களும் ஏராளம்.
பல ஞாபகங்கள் பல நண்பர்கள் பல பிகர்கள் எண்ணத்தில் வந்து போயின(ர்)

நன்றி பகலவன் :)

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பழசை கிழறிப்போட்டீங்கள்.அதோட அந்த ஈரப்பிலாக்காய் கறியையும் ஞாபகப்படுத்தி வட்டீர்கள்.

Link to comment
Share on other sites

நம்பி கொழும்புக்கு அனுப்பினவை இப்பிடியெல்லாம் பயபுள்ளையள் காலைச் சுரண்டிக்கொண்டு காரியத்தை கெடுப்பாங்களெண்டு நினைச்சேயிருக்கமாட்டினம்.
தம்பி பகலவன் பாவம் நீங்கள். :lol: கண்காணிப்பு றிமோட்டை மாறி ஒருத்தரும் அமத்தாமல் விட்டதாலை தப்பிச்சீங்கள். :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகலவனுக்கு கொழும்பு ஃபிகர்..............எனக்கு நெல்லியடி,பருத்தித்துறை தட்டிவான் ஃபிகர்.. :wub:

Link to comment
Share on other sites

நன்றி கவிதை, சஜீவன்.

 

பழசுகளை கிளருவதிலும் ஒரு சந்தோசம். அதிலும் பிகருகளை பற்றி நினைவு மீட்டி பார்ப்பதில் ஒரு தனி சுகம். அதை அனுபவித்தவனுக்கு மட்டுமே தெரியும்.

 

 

நம்பி கொழும்புக்கு அனுப்பினவை இப்பிடியெல்லாம் பயபுள்ளையள் காலைச் சுரண்டிக்கொண்டு காரியத்தை கெடுப்பாங்களெண்டு நினைச்சேயிருக்கமாட்டினம்.
தம்பி பகலவன் பாவம் நீங்கள். :lol: கண்காணிப்பு றிமோட்டை மாறி ஒருத்தரும் அமத்தாமல் விட்டதாலை தப்பிச்சீங்கள். :icon_idea:

 

நம்பி அனுபினவைக்கு நான் ஒன்றும் குறைவைக்கவில்லை அக்கா.

 

ஆர் சொன்னது அக்கா கண்காணிப்பு ரிமோட் வேலை செய்யவில்லை என்று.? உங்களை மாதிரி அக்காக்கள் தகடுவைச்சதும்,  அதுக்காகவே புட்டுக்கு மண் சுமந்த கதைகளும்  இருக்கு. அதை தனியாக எழுதுவம் எண்டு விட்டுவிட்டேன்.  :lol:

 

அக்கா, திரில்லர் கதைகளிலும் காமெடி ஸீன் இருக்கத்தானே செய்யும். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆம்பிளையள் செய்யாட்டிலும் செய்த மாதிரி ரீல் விடுவதில் மன்னர்கள் என்பது
ஒவ்வொருவரும் எழுதியிருப்பதில் இருந்து தெரியுது. சாட்சி இல்லை எண்டதுக்காக
என்னவும் சொல்லலாமே தம்பியவ. :lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக நகைச்சுவையாக கொண்டு போன கதையை முடிவில் சொதப்பி  விட்டீர்கள் பகலவன்

அவள் போனபின்பும் அவள் போனதை அறியாமல் உங்களை சுரண்டிக்கொண்டிருந்தார்  உங்கள் நண்பர் என்பது இடிக்கிறதே.

 

இதை சுட்டிக்காட்டவும் நான் தான் வரணும் என்பதும் இங்கு இடிக்கப்படவேண்டிய  ஒன்று.

நன்றாகத்தான் எல்லோரும் தாளம் போடினம் இங்கு.

 

வாழ்த்துக்கள்

தொடருங்கள்



(எனக்கும் கொழும்பில் இப்படி பல அனுபவங்கள் உண்டு

வயசு தடுக்குது......)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதை நன்றாக இருக்கு பகலவன், ஆனாலும் எனக்கும் விசுகு அண்ணாவுக்கு வந்த சந்தேகமே வந்தது.

 

அது போக உப்பிடி சுரண்டிற பெட்டைகளை (தமிழ்ப் பெட்டைகள் உள்பட) பிகெர் எண்ட வட்டத்துக்குள் கொண்டுவர முடியாது. உவையள் ஒரு குறூப்பாத் தான் திரிவினம் அவையளின்ட குறூப்பில ஒரு வடிவான பெட்டை ஆரும் ஏமிலாந்திகளின்ட காலைச் சுரண்ட மற்ற ஆள்(கள்) பணப்பை மற்றும் பெறுமதியான பொருள்களை திருடிக்கொண்டு இறங்கி விடுவார்கள். சுரண்டுவதில் அடுத்த வகை பணத்துக்காக தமது உடலை விற்கும் பெண்கள்.

 

 

Spoiler
அழகான சிங்கள பிகர்களை பாக்கவேணும் எண்டால் பன்சலவுக்கு ஒரு முழுமதி நாளில் போனால், ஒரு பவுர்ணமியை அல்ல ஆயிரம் பவுர்ணமிகளைப் பார்க்கலாம் :D
Link to comment
Share on other sites

குசா அண்ணா,

எனக்கு தட்டிவான் ஞாபகங்களையும் தூண்டிவிட்டீர்கள்.நன்றி. யாழ்ப்பாணம் - கச்சேரி, யாழ்ப்பாணம் - குறிகட்டுவான் தட்டிவான்களும், தீவகத்து பெண்களும் ஒரு தனி சுகம் அண்ணா. தீவக பெண்களிடம் வாய் கொடுத்து தப்ப முடியாது. :rolleyes:

 

நாங்கள் ரீல் விடவில்லை சுமோ அக்கா, உண்மையை தான் கொஞ்சம் ரீல் மாதிரி விடுகிறோம் சுயமதிப்பை காப்பாறுவதற்காக. :)

 

நன்றி விசுகு அண்ணா, கதையின் சுவாரிசயம் குறையக்கூடாது என்பதற்காக சில கலப்புகள் நடக்கும். அதற்கும் அண்ணன் வேண்டும் சுட்டி காட்ட. :D

 

நன்றி காவாலி, நீங்கள் எங்களை விட கொழும்பை கரைத்து குடித்தவர் என்று தெரியும். உங்கட அனுபவங்களையும் எதிர்பார்க்கிறோம். :D

 

 

Link to comment
Share on other sites

நன்றாக நகைச்சுவையாக கொண்டு போன கதையை முடிவில் சொதப்பி  விட்டீர்கள் பகலவன்

அவள் போனபின்பும் அவள் போனதை அறியாமல் உங்களை சுரண்டிக்கொண்டிருந்தார்  உங்கள் நண்பர் என்பது இடிக்கிறதே.

 

அடடா, விசுகு அண்ணா சரியா தான் யோசித்திருக்கிறார். :D

அந்த பெண் இறங்கியதை கவனிக்காமல் அந்த நண்பர் மற்ற பக்கம் பார்த்துக்கொண்டிருந்தாரோ என்று நினைத்தேன். ஆனால் ஒரு பெண்ணின் காலை சுரண்டினால் அந்த பெண்ணையே பார்த்துக்கொண்டிருந்திருப்பார் என்று நினைக்க மறந்திட்டன். :icon_idea:

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.