-
Tell a friend
-
Topics
-
0
By தமிழ் சிறி
தொடங்கப்பட்டது
-
-
Posts
-
By தமிழ் சிறி · பதியப்பட்டது
இந்தியா, ரஷ்யாவுடன்... கொண்டுள்ள நிலைப்பாட்டை, மதிக்கின்றோம் – ஜேர்மனி உக்ரைன் போர் தொடர்பாக இந்தியா, ரஷ்யாவுடன் கொண்டுள்ள நிலைப்பாட்டை மதிப்பதாக ஜேர்மனி தெரிவித்துள்ளது. ஜேர்மனியின் இந்தியாவுக்கான தூதர் வால்டர் லிண்டர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். ஒவ்வொரு நாடும் தனது சொந்த நலன் சார்ந்து செயல்படும் உரிமை உள்ளது எனவும் தெரிவித்துள்ளார். ஆரம்பத்தில் ஐநா.சபையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டபோது, ரஷ்யாவின் படையெடுப்பை இந்தியா கண்டிக்கும் என எதிர்பார்க்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நடுநிலை வகித்ததால் இந்தியா, ஜேர்மனி இடையே உறவில் பாதிப்பு எதுவும் இல்லை எனவும் அவர் விளக்கமளித்தார். https://athavannews.com/2022/1284296 -
By தமிழ் சிறி · பதியப்பட்டது
ரஷ்ய படைகள்... கிழக்கு உக்ரைனை கைப்பற்றுவதற்காக, தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளதாக... தகவல் ரஷ்ய படைகள் கிழக்கு உக்ரைனை கைப்பற்றுவதற்காக தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் உத்தரவிற்கமைய ரஷ்யப் படையினர் கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் திகதி உக்ரைனில் இராணுவத் தாக்குதலைத் தொடங்கினர். உக்ரைன், நேட்டோ அமைப்பில் சேர்வதை எதிர்த்து ரஷ்யாவால் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போர், கிட்டத்தட்ட மூன்று மாதங்களாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. உக்ரைனில், ரஷ்யப் படையினர் அந்த நாட்டுப் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்வது, பொதுமக்களைக் கொன்றுகுவிப்பது என சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டுவருவதாக உக்ரைன் தொடர்ந்து குற்றம்சாட்டி, உலக நாடுகளிடம் முறையிட்டுவருகிறது இந்தநிலையில், கிழக்கு உக்ரைனை கைப்பற்றும் முயற்சியில் லுஹான்ஸ்க் பிராந்தியத்தில் முகாமிட்டிருந்த ரஷ்ய இராணுவத்தினரை உக்ரைன் இராணுவத்தினர் குண்டுவீசித் தகர்த்தெறிந்தாக கூறப்படுகிறது. உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் 2-ஆவது பெரிய நகரமாக கார்கிவ்-ஐ கைபற்ற தவறிய ரஷ்யா, கிழக்கு உக்ரைன் பகுதிகளை கைப்பற்றும் முயற்சியில் ஆயிரக்கணக்கான ரஷ்ய வீரர்களை குவித்து கடும் தாக்குதல் நிகழ்த்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. https://athavannews.com/2022/1284284 -
By தமிழ் சிறி · பதியப்பட்டது
உக்ரைன் துருப்புக்கள்... "செவெரோடோனெட்ஸ்கை" விட்டு, வெளியேறலாம்! உக்ரைனின் பெரிய கிழக்கு நகரமான செவெரோடோனெட்ஸ்கில் இருந்து உக்ரைன் துருப்புக்கள் வெளியேறலாம் என்று அங்குள்ள அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ரஷ்யப் படைகள் நகரத்தின் ஒரு பகுதி சுற்றியுள்ளதால், உக்ரைன் துருப்புக்கள் அவர்களை சூழ்ந்து கொள்ளப்படாமல் இருக்க வெளியேற வேண்டியிருக்கும் என லுஹான்ஸ்க் ஆளுனர் செர்ஹி ஹைடாய் தெரிவித்துள்ளார். கிழக்கு டோன்பாஸ் பகுதி முழுவதையும் கைப்பற்றுவதை ரஷ்யா ஒரு முக்கிய போர் நோக்கமாகக் கொண்டுள்ளது ரஷ்யாவின் முன்னேற்றத்தை எதிர்க்க நீண்ட தூர ஆயுதங்களை உக்ரைன் விரும்புகிறது. ஆனால் அமெரிக்கா இதுவரை அதை வழங்கவில்லை. பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன், உக்ரைனுக்கு நீண்ட தூர பல-ஏவுகணை ரொக்கெட் அமைப்புகள் தேவை என்று கூறினார். இதனிடையே, உக்ரைன் போரில் ரஷ்யா அழித்துள்ள சொத்துகளின் மதிப்பு 564-600 பில்லியன் டொலர்கள் இருக்கும் என்று உக்ரைன் பொருளாதார கல்லூரி கணித்துள்ளது. துறைமுக நகரமான மரியுபோலில் ரஷ்ய படைகளின் தாக்குதலில் தரை மட்டமான தொழிற்சாலை ஒன்றின் இடிபாடுகளின் அடியில் 70 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். https://athavannews.com/2022/1284248 -
இவரின் ஆசை வார்த்தையில் மயங்கி, வடை வாயில விழுகுதில்லையாம். மக்கள் உசார் என்று ஆதங்கப்படுகிறார்.
-
அப்போ: பொருளாதார நெருக்கடிக்கு காரணம் முன்னைய ஆட்சியாளர்களேயன்றி நாங்களில்லை என்று நீங்கள் ஆரம்பத்தில் குற்றஞ்சாட்டியது பகிடி விளையாட்டா? இப்போ, உங்களை சாடுகிறார் ரணில். அவருக்கு அவ்வளவு திறன் இருந்திருந்தால் உங்கள் கையில் நாடு விழுந்திருக்காதே? நாட்டின் இன்றைய நிலைக்கு யார் யார் எல்லாம் காரணமோ அவர்கள் ஒன்றுசேர்ந்து அனுபவிக்க வேண்டியது கடனே! என்ன இருந்தாலும் நீங்கள் வருந்தி பதவியை ஏற்றதே உங்களின் தீர்க்கப்படாத பழைய கணக்குகளை தீர்ப்பதற்கே. அதுவரையில் நீங்களே நினைத்தாலும் விலக முடியாது. விதி காத்திருக்கு உங்களுக்காக.....
-
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.