• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sign in to follow this  
arjun

கறுப்பு பெட்சீட்.

Recommended Posts


 

அப்பா போன்” மகனிடம் இருந்து போனை வாங்குகின்றேன்.“அண்ணை நான் இங்கு பீட்டர்”“பீட்டர் ““அண்ணை கொம்பனியில இருந்த காரைநகர் பீட்டர் ““டேய் எப்படி இருக்கின்றாய்? எங்க இருக்கின்றாய்?”“ அண்ணை நான் கனடா வந்து ஒட்டாவில் படித்துமுடித்துவிட்டு இப்ப டெக்ஸ்சசில்
வேலை எடுத்து போய்விட்டன், நீங்கள் எப்படி இருக்கின்றீங்கள் அண்ணை ? ஒட்டாவாவில்
இருக்கும் போது நீங்கள் அயன்சின் அக்காவை கலியாணம்  கட்டி டொராண்டோவில் இருப்பதாக கேள்விப்பட்டனான்
.பிள்ளைகள் இருக்கா அண்ணை?”“ இரண்டு பெடியங்கள்,வளர்ந்துவிட்டார்கள் .இப்ப என்ன இருந்தா போல என்ரை நினைவு”“போன மாதம் டொராண்டோவிற்கு ஒரு செத்த வீட்டிற்கு வந்தனான் ,அங்கு நந்தனை
கண்டனான் ,அப்ப பழைய கொம்பனி கதைகள் கதைக்கும் போது உங்கடை கதையும் வந்தது
,அவன்தான் போன் நம்பரும் தந்தவன்”“கலியாணம் கட்டியாச்சா”“இரண்டு பெண் பிள்ளைகளும் இருக்கினம்,அடுத்த முறை டொராண்டோ வரும்போது கட்டாயம்
உங்கட வீட்டிற்கு வருகின்றேன் ,நீங்களும் அமேரிக்கா பக்கம் வந்தால் டெக்சாசிற்கும்
வாருங்கோ ,என்னோடேயே நிக்கலாம்.உங்க கனக்க கொம்பனி ஆட்கள் இருக்கினம். ஒட்டாவாவில்
படிப்புடன் இருந்ததில் பெரிதாக எவருடனும் தொடர்பு ஏற்படவில்லை ,நந்தனுடன்
மாத்திரம் தான் அடிக்கடி கதைப்பேன் ,அவன்தான் நான் படிக்கவும் உதவிசெய்தவன் வேறென்ன
பிறகு சந்திப்பம்.நான் இப்பவும் அந்த கறுப்பு பெட்சீட்டை நினைத்து சிரிக்கின்றனான்,
மறந்து போனிங்களோ. ““எல்லாவற்றையும் அடிக்கடி நினைக்க சிரிப்பும் வரும் அழுகையும் வரும் ,அந்த
கறுப்பு பெட்சீட் தேவனும் இங்குதான் இருக்கின்றான் ,சரி பிறகு கதைக்கின்றன். BYE.” .போனை வைத்துவிட்டு  பீட்டர் சொன்ன கறுப்பு
பெட்சீட்டை நினைத்து பார்க்கின்றேன்.சென்னையில் கே கே.நகரில் நாங்கள் இருந்த வீட்டின் மொட்டைமாடி அந்த ஏரியாவிலேயே
மிக உயரமானது. சுற்ற வர தென்னை ,மா மரங்கள் என்று சூழப்பட்டு ஆனி.ஆடி என்று அள்ளும்
வெக்கையிலும் எங்கள் மொட்டை மாடி குளிர்மையாக இருக்கும் .அதைவிட குளிர்மை அதிலிருந்து
காலையில் அயலில்  கோலம்போடும் கன்னிகைகள்
தொடங்கி பின்னர் அழகான யூனிபோமுடன் வலம்வரும் ஊர்சிவசிகள் , மாலையில் சயிக்கிளில்
டுயுசன் என்று பவனி வரும் ரம்பைகளின் தரிசனம்.  நாங்களும் பாடசாலை? என்ற ஒன்றில் படித்துக்கொண்டு
இருந்ததால் எங்களுக்கும் படிக்கின்ற பெடியங்கள் என்ற நினைப்பு .அந்த மொட்டைமாடியுடன் கூடிய  முழு வீட்டில்
பதினெட்டு பெயர்கள் இருந்து படித்துக்கொண்டு இருந்தோம்.இந்த பதினெட்டு பெயர்களும்
முழு முகாம்களிலும் இருந்து முதல் படிப்பு முடித்து அடுத்த நிலைக்கு தெரிவு
செய்யபட்டவர்கள்.அனைத்து பிரதேசங்களிலும்(STANDARDIZATION?) இருந்து மாணவர்களை தெரிவு செய்ய
வேண்டும் என்ற நிலைப்பாட்டால் தமிழ் பிரதேசங்கள் அனைத்திலும் இருந்தும்  வந்திருந்தார்கள் .பாடசாலையின் பெயர் –தமிழிழ சமூக கல்லூரி( TAMILEELAM SCHOOL OF SOCIAL SCIENCE) .அதை சுருக்கி T3S
என்று அழைப்போம்.அதிபர் –இப்போ
லண்டனில் இருக்கின்றார் . அவர் அங்கு தங்குவதில்லை .பாடசாலைக்கும் அந்த பதினெட்டு
பேருக்கும் பொறுப்பு நான்தான் . பாடசாலை –வீட்டிற்கு
அடுத்து இருக்கும் பாவனையில் இல்லாத சத்துஉணவு கூட மண்டபம்  ,இதன் முன் பெரிய மைதானம் இருக்கு .கே கே நகர்
இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடுவார்கள் .நாங்களும் இடைக்கிடை விளையாடுவோம்படிப்பு -முழுக்க முழுக்க ஆங்கிலத்தில். இதனால் பலர் பட்ட பாடு சொல்லிமாளாது .ஒரு
சின்ன குட்டி கதை. இரவு மொட்டை மாடியில் படுத்திருக்கின்றேன் ,அருகில் ஏழு எட்டு
பேருக்கு ஒருவர் (எனது மனைவியின் தம்பி) ஆங்கிலம் படிப்பிக்கின்றார் .புத்தகம் WREN AND MARTIN
GRAMMER  BOOK , IDIOMS  விளங்கபடுத்திக்கொண்டு
இருக்கின்றார் .CARRY COALS TO
NEWCASTLE  . புதுமாளிகை என்றால்  அங்கு எல்லா சாமான்களும்  இருக்கும் அங்கு போய் நிலக்கரி வேண்டுமா என்று
கேட்டால் யார் வாங்குவார்கள்? நான் மெல்ல திரும்பி நல்லா இருக்கு
விளக்கம்.இங்கிலாந்தில் NEWCASTLE என்ற இடம் இருக்கு அங்கு தான் பெரும் நிலக்கரி எடுப்பார்கள்
அதானால் தான் அந்த பழமொழி வந்தது என்று சொல்ல இரண்டும் ஒன்றுதான் என்று
சமாளித்துவிட்டான்.)ஆங்கிலம் –ஒரு இந்திய பெண் ஆசிரியை .மிக கண்டிப்பானவர் ,எவரும் தமிழில் ஒரு
வார்த்தை பேசக்ககூடாது.இரண்டாம் பாடம் - மார்க்சிசம் ,கொம்னியுசம் பற்றி இந்திய கொம்னியூசிற்
கட்சியில் இருந்து மூன்று பெயர்கள் மாறி மாறி வருவார்கள்.த .பாண்டியனும் ஒருவர்.மதிய இடைவேளை-சாப்பாடு,சிலர் குட்டித்தூக்கம் .மூன்றாம் பாடம் –உலக அரசியல் ,சர்வதேச உறவுகள்,அரசியல் விஞ்ஞானம்,சமூக
விஞ்ஞானம்,மனோ தத்துவ இயல் –சென்னை பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் ,பத்திரிக்கை
ஆசிரியர்கள்.சூரிய நாராயணா ,மனோகரன் இன்னும் சிலர் .சனி -சிலவேளை காலை ஆங்கில வகுப்பு இருக்கும் ,சனி மாலையும் ஞாயிறும் விடுதலை .பெரிய வீடு ,மொட்டை மாடி ,முன்னுக்கு அழகிய மைதானம்.ஆங்கிலத்தில் படிக்கும்
பெடியங்கள் (போராளிகள்?). இதனால் உமா, அனைத்து முக்கிய உறுப்பினார்களும்
அடிக்கடி விஜயம் செய்வார்கள்.,ஞாயிறு காலைகளில் மத்திய குழு கூட்டங்களும் இங்கு
நடக்கும் .இந்த T3S இல் தான் அஜீவனை நான் சந்தித்தது.அஜீவன்
வீடியோ படங்களும் எடுத்துக்கொண்டிருந்ததால் அவர் வெளியில் போய் வர அனுமதியுண்டு .மற்றவர்கள்
அயலில் உள்ள கடைகளுக்கு சாமான்கள் வாங்க அதுவும் கொப்பியில் பதிந்து விட்டு
போகலாமே ஒழிய மற்றப்படி வேறெங்கும் போகமுடியாது .இந்த சமயத்தில் அதிபர் உமாவிடம்
கதைத்து  ஞாயிறுகளில் இவர்கள் படிப்பு
சம்பந்தமாக மேலதிக தேவைகளுக்கு (பகிடியாக FACTS  எடுக்க
போகின்றது என்போம் ) கன்னிமாரா நூலகத்திற்கு  செல்ல அனுமதி பெற்றிருந்தார் .அதன் பின் எல்லோரும்
எப்ப ஞாயிற்றுகிழமை வரும் என்று காவல் இருப்பார்கள் .அனுமதியும் பஸ்ஸில் போக பணமும்
நான் தான் கொடுப்பது ஆக கூடியது நான்கு மணித்தியாலங்கள் தான் அனுமதி. ஞாயிறு காலை கன்னிமாரா
நூலகதிற்குள் போகும் போது  சிரிப்பாக
இருக்கும் ஆழுக்கொரு கொப்பியுடன் ஏதேதோ புத்தகங்களை புரட்டிக்கொண்டு சீரியசாக
இருப்பார்கள் .பயந்த பெடிகள் நூலகம் முடிய வீடு திரும்பிவிடுவார்கள். ஆனால் பலர் ஒரு பத்துநிமிடம்
கன்னிமாராவில் இருந்துவிட்டு அவனவன் படம் பார்க்க ,உறவினர்கள் வீடு என்று போக
தொடங்கிவிட்டார்கள் .எனக்கு எல்லோரும் இருட்ட முதல் வந்தால் காணும் என்று கண்டும்
காணாமல் விட்டுவிடுவேன் ,இதனால் பலர் சிகரெட் பத்தவும் தொடங்கியிருந்தார்கள்
இன்னமும் இரண்டு மாதத்தில் முகாம்களுக்கு திரும்ப போகின்றார்கள் என்ற எண்ணம்
அவர்களை எதுவும் கேட்டாமல் தடுத்துவிட்டது .இந்த காலகட்டத்தில் தான் பெசன்ட்நகரில் பாலசிங்ககத்தின்  வீடு  குண்டுவைக்கப்பட்டது
,பொலிஸ் எமது வீட்டிற்கு வந்து இதில் எங்களுக்கு தொடர்பு இருக்கு என்று மூன்று
பேரை காவல் நிலையம் கொண்டுபோகபோவதாக சொன்னார்கள்.செயலதிபரின் அனுமதியிலாமல் யாரும்
வர முடியாது என்று ஒரே அடியாக மறுத்து அவர்களுடன் பெரிய வாய்த்தர்க்கபட்டு பின்னர்
ஒருவர் அருகில் இருக்கும் கடைக்கு போய் உமாவிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உமா
அவர்களை தான் ஒரு இடத்தில் சந்திப்பதாக சொல்ல அதை வந்து போலீசிடம் சொல்லி அவர்களை
அனுப்பிவைத்தோம் .( உமா போலீசிடம் உங்களது மேலிடம் தான் வைத்தது அவர்களிடம் போய்
விசாரியுங்கள் என்று சொன்னதாக அறிந்தேன்)ஒரு இரவு ஏழுமணியிருக்கும் சத்துஉணவுகூடத்தில் இருந்து எமது போராட்டம் தேசிய
இனபோராட்டமா ? அல்லது வர்க்க போராட்டமா ? என விவாதம் பெரிதாக களை கட்டிகொண்டிருந்த
நேரம் எமது வீட்டிற்கு முன்பாக நின்று ஒரு தமிழ் நாட்டு இளைஞன் தகாத வார்த்தைகளால்
பெரிய சத்தமாக கத்திக்கொண்டு சயிக்கிளுடன் நிற்கின்றான் .ஒருத்தரையும் எழும்பி
வரவேண்டாம் என்று சொல்லிவிட்டு அவனிடத்தில் ஓடுகின்றேன் .அவன் அப்போது அந்த கறுப்பு பெட்சீட் கதையை சொல்லுகின்றான் .(தொடரும் ) 

எழுத்து சிறிதாக இருந்ததால் எடிற் பண்ணினேன் .

Edited by arjun
 • Like 8

Share this post


Link to post
Share on other sites

ஒரு இரவு ஏழுமணியிருக்கும் சத்துஉணவுகூடத்தில் இருந்து எமது போராட்டம் தேசிய

இனபோராட்டமா ? அல்லது வர்க்க போராட்டமா ? என விவாதம் பெரிதாக களை கட்டிகொண்டிருந்த

நேரம் எமது வீட்டிற்கு முன்பாக நின்று ஒரு தமிழ் நாட்டு இளைஞன் தகாத வார்த்தைகளால்

பெரிய சத்தமாக கத்திக்கொண்டு சயிக்கிளுடன் நிற்கின்றான் .ஒருத்தரையும் எழும்பி

வரவேண்டாம் என்று சொல்லிவிட்டு அவனிடத்தில் ஓடுகின்றேன் .

யாழ்ப்பாணத்தில் இருந்த தேநீர்க்கடைகளில் ' தயவு செய்து இங்கு அரசியல் பேசாதீர்' என்று பெரிதாக ஒரு பலகையில் எழுதித் தூக்கியிருப்பார்கள்!

 

ஆனாலும் அதற்காக ஒருவரும் விவாதங்களை நிறுத்துவதில்லை.

 

ஒருவேளை இது எமது கலாச்சாரத்தின் ஒரு பகுதியோ எனப் பல தடவைகள் சிந்தித்ததுண்டு!

 

உங்கள் கதை தொடரட்டும்!  :D

 

Share this post


Link to post
Share on other sites

(ஒரு இரவு ஏழுமணியிருக்கும் சத்துஉணவுகூடத்தில் இருந்து எமது போராட்டம் தேசிய

இனபோராட்டமா ? அல்லது வர்க்க போராட்டமா ? என விவாதம் பெரிதாக களை கட்டிகொண்டிருந்த

நேரம் எமது வீட்டிற்கு முன்பாக நின்று ஒரு தமிழ் நாட்டு இளைஞன் தகாத வார்த்தைகளால்

பெரிய சத்தமாக கத்திக்கொண்டு சயிக்கிளுடன் நிற்கின்றான் .ஒருத்தரையும் எழும்பி

வரவேண்டாம் என்று சொல்லிவிட்டு அவனிடத்தில் ஓடுகின்றேன்)

.இன விடுதலையுடன் கூடிய வர்க்க போரை ஈழத்துக்கு வெளியே அழகாக நடத்திய போராளிகள்.அனைத்து அடக்கு முறைகளையும் உடைத்தெறிவோம் என்றவர்கள்.ஈழ தமிழ் மக்களின் அனுமதியின்றி மாலைதீவின் விடுதலைக்காய் போராடியவர்கள்.இவர்கள் சிந்திய குருதியின் ஈரம் தமிழகத்தின் சவுக்கம் காடுகளிலும் மாலைத்தீவின் கடற்கரையோரங்களிலும் பெண் போராளிகளின் குருதி மணியன் தோட்டத்தின் புதைகுளிககளிலும் இன்னும் காயாமல் உள்ளது.

வீரவணக்கங்கள்.

Share this post


Link to post
Share on other sites

அர்ஜுன் அண்ணா,

 

மனப்பாரங்களை குறைக்கவும், நாங்கள் அறியாதவற்றை அறியவும், நாங்கள் செய்தவற்றை நாங்களே நினைவு மீட்டி பார்க்கவும், மற்றவர்களுக்கு அவர்களின் ஞாபகங்களை திருப்பி கொடுக்கவும் நீங்கள் எழுத வேண்டும். உங்கள் எழுத்துக்கள் உங்கள் அனுபவத்தின் வடிவங்களாக அழகாக மிளிர்கின்றன.

 

தயவு செய்து தொடர்ந்து எழுதுங்கள். உங்கள் பதிவுகளும் எங்களுக்கு வேண்டும்.

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
எழுதுங்கள் அண்ணா தெரியாத பல விச‌யங்களை உங்கள் கதை மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம்

Share this post


Link to post
Share on other sites

தொடருங்கள்!

காலத்தின் தேவை இது.


 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

அவன் அப்போது அந்த கறுப்பு பெட்சீட் கதையை சொல்லுகின்றான் .


(தொடரும் )

 

இறுதியாக ராசவள்ளிக்கிழங்கு கதை எழுதியதாக ஞாபகம் . நீண்ட இடைவெளியின்பின்பு எழுதுகின்றீர்கள் . எனது மனங்கனிந்த பாராட்டுக்கள் அர்ஜுன் . கறுப்பு பெட்சீட் கதையை நானும் கேட்க ஆவலாக இருக்கின்றேன் .

Share this post


Link to post
Share on other sites

இந்தியனின் சிவப்பு கரை போட்ட கருப்பு பெட்சீட்டா அதுக்கு பின்னலை பல கதைகள் நினைவுக்கு வருகின்றது. தொடருங்கள்

Share this post


Link to post
Share on other sites

தொடருங்கள்.

அம்மன் கோயிலடி சத்துணவுக் கூடமும் விளையாட்டு மைதானமும் ஞாபகம் இருக்கிறது.


 

ஏண்ணை!.... லண்டனில இருந்து Reading போறதுக்கு இவ்வளவு காலம் எடுக்குதா?

இதையும் பார்த்துத் தொடருங்கள். :D

http://www.yarl.com/forum3/index.php?showtopic=108536#entry803204

Edited by தப்பிலி

Share this post


Link to post
Share on other sites

தொடருங்கள்.

அம்மன் கோயிலடி சத்துணவுக் கூடமும் விளையாட்டு மைதானமும் ஞாபகம் இருக்கிறது.

 

ஏண்ணை!.... லண்டனில இருந்து Reading போறதுக்கு இவ்வளவு காலம் எடுக்குதா?

இதையும் பார்த்துத் தொடருங்கள். :D

http://www.yarl.com/forum3/index.php?showtopic=108536#entry803204

 

அர்ஜீன் அண்ணா தண்ணீ போட்டு எழுதத் தொடங்கிட்டு பிறகு மறந்திருப்பார் :lol:

Share this post


Link to post
Share on other sites

150071_125971870796218_6384493_n.jpg

எல்லோரும் படத்தோட கதை எழுதுகின்றார்கள் என்று தேடியதில் அகப்பட்ட சில படங்கள் .

பிள்ளைகள் எவ்வளவு சீரியசாக கை கட்டிக்கொண்டு நிக்கினம் .155770_125970757462996_3643705_n.jpg

சத்துணவு கூடத்திற்கு முன் இருக்கும் மைதானம் ,இறுதிநாள் பிரதம விருந்தினராக வரும் கம்னியூனிஸ்ட் கட்சி தலைவர் கல்யாணசுந்தரம் .76903_125970574129681_5051053_n.jpg

இதுதான் அந்த மொட்டைமாடி .கட்டம் போட்ட சேட்டுடன் இருப்பது உமா ,நாடியில் கை வைத்திருப்பது சித்தார்த்தன் ,திரும்பி பார்ப்பது வாசு .150008_125970924129646_7442915_n.jpg

அது ஒரு கனா காலம் .தாடியுடன் நடுவில் நிற்பவர்தான் அதிபர் .

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

திரும்பி பார்ப்பது மட்டு வாசுவா?? வாசு தேவா

Share this post


Link to post
Share on other sites

150071_125971870796218_6384493_n.jpg

எல்லோரும் படத்தோட கதை எழுதுகின்றார்கள் என்று தேடியதில் அகப்பட்ட சில படங்கள் .

பிள்ளைகள் எவ்வளவு சீரியசாக கை கட்டிக்கொண்டு நிக்கினம் .

 

 

தொடருங்கள்... இதில ஒருவரைப்பற்றி எழுதலாம்....

Share this post


Link to post
Share on other sites

பின்னூட்டம் விட்ட அனைவருக்கும் நன்றி ,

தப்பிலி அந்த கதை மிச்சம் எழுதிவிட்டு பின்னர் ஏதோ நினைவில் விட்டுவிட்டேன் .

ரதி போத்தல் உடைப்பதுதான் ஆனால் போத்தலே வாழ்க்கை இல்லை ,

சாத்திரி அது பரமதேவாவின் அண்ணை வாசுதான் .மனைவி இங்கு இருக்கின்றார் .

வந்தி  நீங்கள் அறிந்ததை நானும் அறிய ஆவல் .

Share this post


Link to post
Share on other sites

 

பரமதேவாவின் அண்ணை வாசுதான்

 

இவர்களில் ஒருவரா  தந்தை செல்வாவின் வாகனச்சாரதியாக இருந்தவர்?

Share this post


Link to post
Share on other sites

 

 

இவர்களில் ஒருவரா  தந்தை செல்வாவின் வாகனச்சாரதியாக இருந்தவர்?

அது வாமதேவன் என்று நினைக்கிறேன்

 

வாமதேவன் மிகவும் திறமையான ஒரு வாகனசாரதி என்றும், ஆரம்ப காலங்களில் நடந்த வங்கிகொள்ளைகளுக்கு இவர் தான் கார் சாரதியாக இருந்ததாகவும் நண்பர்கள் சொல்லி

கேள்விபட்டுள்ளேன்.

Edited by நவீனன்

Share this post


Link to post
Share on other sites

 

 

இவர்களில் ஒருவரா  தந்தை செல்வாவின் வாகனச்சாரதியாக இருந்தவர்?

 

நவீனன் கூறியது மாதிரி தந்தை செல்வாவின் சாரதி வாமதேவன். அவர் அதிகம் பம்பாயில்தான் இருந்தார். வக்கீலுடன் சேர்ந்து இயங்கி இருந்தார் என நினைக்கிறேன்.

Share this post


Link to post
Share on other sites


 

மிகவும் உரத்த  குரலில்
கெட்டவார்த்தைகளில் திட்டிக்கொண்டிருந்த அவனை நான் அணுகி“சத்தம் போடாதை ,என்ன பிரச்சனை” என்று கேட்டேன் .“தனியாக இருக்கின்ற பொம்பிளை வீட்டிற்குள் உங்கட ஆள் ஒருவன் நேற்றிரவு
பாய்ந்துவிட்டான்,ஆளை இப்ப அனுப்பு “என்றான் .“சும்மா நீ நினைத்தபடிக்கு ஒன்றும் செய்ய முடியாது,இங்கிருப்பவர்கள்
அப்படியானவர்களும் இல்லை,என்ன நடந்தது என எனக்கு தெரியாது ,ஏதும் நடந்திருந்தால்
ஆளை பிடித்து தண்டனை கொடுக்கலாம் ,எதற்கும் நாளை வா ,விசாரித்துவைக்கின்றேன்
“என்றேன் .அவன் குடித்து வேறு இருந்தான் ,சயிக்கிளை உருட்டிக்கொண்டு ‘ நாளைக்கு வாறான்
அவன் வேணும்” என்று கொண்டு போய்விட்டான்.பெடியங்கள் எல்லாம் என்ன ? என்ற மாதிரி பார்த்துக்கொண்டு நிற்கின்றார்கள் .ஏதோ
இசக்கு பிசக்காக நடந்துவிட்டது என்பதை விளங்கிவிட்டார்கள் .“இரவு கள்வன் யாரோ அடுத்தவீட்டிற்குள் எங்கட மொட்டை மாடியால் தான் வந்தவனாம்
,எங்களில் யாரையோ சந்தேகப்படுகின்றான்.அவனுக்கு வெறி  இருந்தாலும் எல்லாரையும் விசாரிக்கின்றேன் என
அனுப்பிவிட்டேன்.நாளை திரும்ப வருவான் ” என்று 
பெடியங்களிடம் சொன்னேன் .அடுத்த சனி நடக்க இருக்கும் கூட்டத்தில் தங்களது ஆய்வுக்கட்டுரையை சமர்பிக்க வேண்டுமேன்பதில்
எல்லோரும் ஆர்வமாக இருந்ததில் கலைந்துவிட்டார்கள். படித்த அந்த மூன்று மாதத்திலும்
ஒவ்வொரு மாதம் முடியவும் ஒவ்வொரு குரூப்பும் (மொத்தம் நாலு குரூப்) ஒரு
தலையங்கத்தின் கீழ் ஆய்வுக்கட்டுரையை சமர்பிக்க வேண்டும்.சனி மாலை மூன்று பேர்கள்
தலைமையில் இது நடக்கும் ,பார்வையாளர்கள் பலர் (இயக்க ஆட்கள் ) கலந்து கொள்வார்கள்
.குரூப்பின் தலைவர் பார்வையாளர்கள்  மத்தியில் தங்களது கட்டுரையை வாசித்து அவர்கள்
கேட்கும் கேள்விகளுக்கு பதிலும் அழிக்கவேண்டும் இதனால் எல்லோரும் குரூப் குரூப்பாக
இருந்து ஒரே  படிப்பு .கட்டுரைக்கான தலையங்கங்கள்  தமிழிழத்தின் வெளிநாட்டு கொள்கை  (இதுதான்
எனது குரூப்பிற்கு தந்தது)போராட்டத்தில் மகளிர் பங்களிப்பு.எமது போராட்டமும் சர்வதேச அங்கீகாரமும்ஐக்கியமும் போராட்டமும் (மாற்று இயக்கங்கள் ,இனங்கள் )வழக்கம் போல் இரவு சாப்பாடு எல்லோரும் கூடி இருந்து சாப்பிட்டுவிட்டு (காலை –இட்டலி
அல்லது தோசை எடுப்பு சாப்பாடு ,மதியம் சமையல் நாங்களே செய்து சாப்பிடுவோம், இரவு
பாணும் சம்பலும் ) மொட்டைமாடிக்கு படுக்க போகின்றோம்.ஒரு 4x8 கோரை பாய் ,கருப்பில் சிவப்பு கோடு போட்ட பெட்சீட் ,ஒரு
அலுமினிய பிளேட் ,ஒரு ரம்ளர் இதுதான் ஒவ்வொருவரினதும் சொத்து ,அதைவிட உடுப்புகள்
இரண்டோ மூன்றோ சோடிகள் ஒரு பையில் வைத்திருப்பார்கள் .ஆளுக்கு ஆள் பாயையும்
பெட்சீட்டையும் தூக்கிக்கொண்டு மொட்டைமாடிக்கு  போனாலும் ஒருபாயிலேயே பத்து பேர் மரவள்ளி கிழங்கு
அடுக்கிய மாதிரி படுத்துக்கிடந்து பல கதை பேசிக்கொண்டிருப்பார்கள் .ஒருவன் எந்த
நாளும் “வெள்ளை புறா ஒன்று போனது கையில் வராமலே” என தனது பழைய காதலியை நினைத்து
பாடாமல் படுக்கமாட்டான் .நான் எப்பவும் தனியாகத்தான் .பொறுப்பாளர் என்பதாலோ
மற்றவர்களை கொஞ்சம் எட்ட வைக்கும் எனது சுபாவத்தினாலோ அல்லது பயிற்சி ஒன்றாக
எடுக்காத காரணத்தினாலோ என்னவோ எப்பவும் நான் சற்று அந்நியம் தான் ,இருந்தாலும்
அவர்களின் கதைகள் கேட்டு ரசித்துக்கொண்டு இருப்பேன் .இன்று மொட்டைமாடிக்கு
வந்து நாலு பக்கமும் சுற்றி பார்க்கின்றேன் .முன்பக்கம் வீதியுடன் வாசல் ,இடதுபக்கம்
இருக்கும் வீடு எமது வானொலிகாரர் குடும்பத்துடன் இருக்கின்றார் (இப்போ பிரான்சில்
இருந்து இடைக்கிடை யாழில் எட்டி பார்ப்பவர்) வலது பக்கம் சத்துணவு கூடம் சற்று
இடைவெளி விட்டு தள்ளி இருக்கின்றது .பின்பக்கம் உமாவின் பெற்றோர்,சகோதரி,புருஷன்
,இரண்டு சிறு பிள்ளைகள் .இவர்கள் இருக்கும் வீட்டு மொட்டைமாடியில் ஒரு இளம்
பெண்ணும்  ஒரு குழந்தையும்
இருக்கின்றார்கள் .இந்த பெண்ணின் வீட்டிற்கு தான் எமது பெடியன் ஒருவன் பாய்ந்ததாக
ஒருவன் வந்து கத்திவிட்டு நாளை வருவதாக போய்விட்டான்.அவர்கள் வீட்டு
மொட்டைமாடிக்கும் எமது வீட்டு மொட்டைமாடிக்கும் இடையில் ஒரு ஆறு அடிகள் இடைவெளி இருக்கும்
.அந்த இடைவெளிக்குள் நேரே கீழே அந்த வீட்டு ஒரு கிணறு இருக்கு . அந்த இடைவெளியை
கீழே பார்க்கவே பயமாக இருக்கும் அதை விட உமாவின் பெற்றோர் அங்கு இருந்ததால் சற்று
அடக்கியே வாசிப்போம் .அந்த மொட்டை
மாடிபெண்ணுக்கு ஒரு முப்பது வயது இருக்கும்,ஒரு குழந்தை இருக்கு. தனியாகத்தான்
எப்போதுமே கண்ட ஞாபகம் .ஆளைப்பார்த்தால் நடிகை சரிதா மாதிரி இருக்கும் அசல்
நாட்டுக்கட்டை.முந்தானையை இரண்டு பெரிய மேட்டிற்கு இடையால் நான்றாக இறுக்கி
வாரிக்கட்டி பின்புற சேலைக்குள் செருகி இருப்பார், ஜக்கேட்டிற்கும் சேலைக்கும்
இடையில் பென்னாம் பெரிய இடைவெளி எண்ணெய் பூசியது போல மினுங்கிக்கொண்டே இருக்கும்.மொட்டை
மாடியில் இருப்பதால் குடத்துடன் தண்ணீர் கொண்டுவருவதும் ,கொடியில் உடுப்பு காய போடுவதும்
,மத்தியான வெய்யிலில் கூட நடை பழகுவதும் என்றும் ஆள் அழகை காட்டிக்கொண்டு
அங்குதான் நிற்கும்.இவ்வளவு பெடியங்கள் காய்ந்து அடுத்த வீட்டில் இருக்கின்றார்கள்
என்று நான்றாக தெரியும்.நாம் எல்லோரும்
சும்மா சில நேரம் அவாவின் சேட்டைகள்  பற்றி
சிலாகிப்பதுடன் அந்த பெண் நினைவு மறைந்துவிடும்.எங்களுக்கு  அதில் ஈடுபாடு இல்லை என்பது இல்லை. முகாமில்
மரக்கறி வாங்க போன தோழர் ஒருவர் ஒரு பெண்ணுடன் தகாத உறவு வைத்து பயிற்சியில்
இருந்த அனைவருக்கும்  முன்  வைத்து அவர் மாதக்கணக்கில் வாங்கிய அடி பற்றி
திரும்ப திரும்ப கதைப்பார்கள் .அதனால் அந்த நினைப்பே எவருக்கும் வருவதே இல்லை
,தனிய அங்க லட்சணங்கள் பற்றி அங்கலாய்ப்பதுடன் முடிந்து விடும் அனைவரின் கனவும் .பின்னிரவாக மொட்டைமாடி
மெல்ல அமைதியாகி அனைவரும் தூங்கிபோகின்றார்கள் .நாளைக்கு அவன் வந்தால் நான் என்ன
செய்வது? உண்மையில் யாரும் பாய்ந்திருப்பார்களா? முறைப்படி தலைமைக்கு அறிவித்தால்
கண்டவன் எல்லாம் புலனாய்வு என்று வந்து எல்லோரையும் போட்டு குழப்பி சில வேளை
அடித்தும் விசாரணை செய்து ஆளை பிடித்துவிட்டால்? நித்திரை வருகுதில்லை. மொட்டை
மாடி எங்கும்  கறுப்பு பெட்சீட்டால்
போர்த்தியபடி தூங்குகின்றார்கள்.இதில் யாராக
இருக்கும் பாய்ந்தது?  இவன் சிவா தான்
தாக்குதலுக்கு போய் செத்தாலும் அதற்கு முதல் இந்த இரண்டு வருட வெப்புசாரத்தை
தீர்க்க  நாலு சிங்களத்திகளுக்கு அலுவல்
பார்க்காமல் விடமாட்டன் என்று சொல்லுகின்றவன்குளிக்கேக்கை எந்த
வித உடுப்பும் இல்லாமல் ஆளுக்கு ஆள் தண்ணி எத்தி நிர்வாணாமாக எங்கும் அலைந்து
திரியும் சைமன்,நேதாஜி,ரவி,வில்லியம் .அமுசடைக்கையாக என்ன
செய்கின்றான் என்றே தெரியாமல் இருக்கும் பவன்ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்
இன் டுயுவல் படத்தில் யார் அந்த டிரைவர் என்று எல்லோரையும் ஐமிச்ச படுவதுபோல்
நானும் அனைவரையும் பற்றி யோசிக்கின்றேன்.சாட்சிக்காரன் காலில்
விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழுவது மேல் என்று முடிவெடுத்து நாளை விடிய அந்த
பெண்ணிடமே என்ன நடந்தது என்று கேட்க முடிவெடுத்துவிட்டு தூங்கிவிடுகின்றேன் .(தொடரும் )   

Edited by arjun
 • Like 3

Share this post


Link to post
Share on other sites

Quote: " முறைப்படி தலைமைக்கு அறிவித்தால் கண்டவன் எல்லாம் புலனாய்வு என்று வந்து எல்லோரையும் போட்டு குழப்பி சில வேளை அடித்தும் விசாரணை செய்து ஆளை பிடித்துவிட்டால்"

 

உள்ளுக்குளேயே ஒற்றுமையில்லை

 

 

Quote: "மாடிபெண்ணுக்கு ஒரு முப்பது வயது இருக்கும்,ஒரு குழந்தை இருக்கு. தனியாகத்தான்
எப்போதுமே கண்ட ஞாபகம் .ஆளைப்பார்த்தால் நடிகை சரிதா மாதிரி இருக்கும் அசல்
நாட்டுக்கட்டை.முந்தானையை இரண்டு பெரிய மேட்டிற்கு இடையால் நான்றாக இறுக்கி
வாரிக்கட்டி பின்புற சேலைக்குள் செருகி இருப்பார், ஜக்கேட்டிற்கும் சேலைக்கும்
இடையில் பென்னாம் பெரிய இடைவெளி எண்ணெய் பூசியது போல மினுங்கிக்கொண்டே இருக்கும்.மொட்டை
மாடியில் இருப்பதால் குடத்துடன் தண்ணீர் கொண்டுவருவதும் ,கொடியில் உடுப்பு காய போடுவதும்
,மத்தியான வெய்யிலில் கூட நடை பழகுவதும் என்றும் ஆள் அழகை காட்டிக்கொண்டு
அங்குதான் நிற்கும்.இவ்வளவு பெடியங்கள் காய்ந்து அடுத்த வீட்டில் இருக்கின்றார்கள்
என்று நான்றாக தெரியும்."

 

அவ என்ன செய்கின்றா என்று எந்தநேரமும் புலனாய்வு செய்திருந்தால் எப்படி பெடியளை கவனிச்சனீங்கள்?

 

Share this post


Link to post
Share on other sites

தொடரும் போட்டு கொலைவெறி வரபண்ணுறாங்கள்

Share this post


Link to post
Share on other sites

தொடரும் போட்டு கொலைவெறி வரபண்ணுறாங்கள்

 

ஜி நேசனின் ரசிகர் போல கிடக்கு. பொறுத்த இடத்தில வந்து 'தொடரும்' போடுவார். :D

Share this post


Link to post
Share on other sites

ஜி நேசனின் ரசிகர் போல கிடக்கு. பொறுத்த இடத்தில வந்து 'தொடரும்' போடுவார். :D

 

ஆகா நீங்களும்  ஜி நேசன் படிச்சிருக்கிறீங்களா? அவரின் பாலை வன ரோஜாக்கள்  ஒழித்து வைத்து படித்து  அடியெல்லாம் வாங்கியிருக்கிறன்.. எப்படி  அவரால்  அந் காலத்திலேயே  அப்படியெல்லாம் எழுத முடிந்தது என்று இப்பவும்  யோசிப்ததுண்டு. :wub:

Share this post


Link to post
Share on other sites

ஆகா நீங்களும்  ஜி நேசன் படிச்சிருக்கிறீங்களா? அவரின் பாலை வன ரோஜாக்கள்  ஒழித்து வைத்து படித்து  அடியெல்லாம் வாங்கியிருக்கிறன்.. எப்படி  அவரால்  அந் காலத்திலேயே  அப்படியெல்லாம் எழுத முடிந்தது என்று இப்பவும்  யோசிப்ததுண்டு. :wub:

 

அவர் எழுதும் பாணி மிக வித்தியாசமானது.

 

ஓரளவு எழுத்துக் கூட்டி அம்புலிமாமா வாசிக்க ஆரம்பித்ததுமே,  தீவீர இலக்கியத் தேடலில் ஜமேலா / பட்லி / பெண் அடிமை / கறுப்பு  ராஜா வாசித்து இலக்கிய தாகம் தீர்த்துக் கொண்டோம். :D

Edited by தப்பிலி

Share this post


Link to post
Share on other sites

அர்ஜுன் அண்ணா,

நடந்தவை,தெரிந்தவற்றை எந்த விருப்பு,வெறுப்புக்களும் இன்றி உண்மையாய் எழுதுங்கள், தனிப்பட்ட சொந்த அனுபவங்களை எழுதுவது வேறு இப்படி ஒரு இனத்தின் விடுதலையை உண்மையாய் எழுதும் போது அது சரி,பிழைகளுக்கு அப்பால் சரியான தகவல்களை அடுத்த சந்ததிகளுக்கு கொண்டு செல்லும்.

 

உண்மையான,சரியான தகவல்கள் தெரியாமல் யாரும்,யாரையும் விமர்சனம் செய்வது என்பது ஏளனத்திற்குரியது.

போராட்டத்தின் ஆரம்ப காலங்களில் எல்லாம் நாங்கள் பிறந்திருக்கவே இல்லை அப்படி இருக்க,வாசித்ததும் செவிவழி செய்திகளையும் வைத்து முடிவெடுப்பதென்பது எவ்வளவு தூரம் நம்பிக்கையானது என்பது கேள்விக்குறியே, அந்த வகையில் அடுத்த சந்ததிக்காக உங்களுக்கு தெரிந்த ஆரம்பகாலப் போராட்ட வரலாற்றை நேர்மையாக எழுதுங்கள்.

 

புலிகள்,புளொட்,ரெலோ என்று எல்லா அமைப்பிலும் சில தலைசிறந்த வீரர்கள் இருந்ததும், தலைமைகளின் சரியான வழிகாட்டுதல் இல்லாமல் தமிழீழம் என்ற ஒரே இலட்சியத்துக்காக போரடப்போய் வீரத்தின் விளைநிலங்களாய் ஆனதும்,

வழிமாறிப்போனதும் கண்முனே நடந்த ஒன்று, அந்தப்பொறுப்புணர்ந்து எழுதுங்கள்.

 

(இது ஆலோசனை அல்ல, உங்களுக்கு சொல்லுமளவுக்கு வயதும்,அனுபவமும் இல்லை ஆனால் வரலாறுகள் திரிக்கப்படக்கூடது என்ற ஒரே நோக்கத்தில் தான்)

 

தொடர்ந்து எழுதுங்கள். :)

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • வடக்கில் இராணுவ ஆட்சியை ஏற்படுத்துவதற்கு கோத்தாபய அரசாங்கம் முயற்சிக்கிறது - மாவை வடக்கில் இராணுவ ஆட்சியை ஏற்படுத்துவதற்கு கோத்தாபய அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினரின் நிதி ஒதுக்கீட்டியில் கிராஞ்சி செல்சிற்றி விளையாட்டுக் கழகத்திற்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றது. அங்கு கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,  நாட்டில் என்றுமில்லாத வகையில் கடந்த காலத்தில் தான் ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் ஒன்றிணைந்து ஒரு நல்லாட்சி அரசாங்கத்தை அமைத்தது. இந்தக் காலத்தில் இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகளும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வந்தன.  வடக்கிற்கு அதிகளவான  அபிவிருத்தி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதும் இந்தக் காலப்பகுதியில் தான், இருப்பினும் ஜனாதிபதித் தேர்தலின் பின்னர்  அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்காக முன்னைய அரசாங்கத்தால் ஒதுக்கீடுசெய்யப்பட  நிதியை  இந்த அரசாங்கம் விடுவிக்காது செயற்பட்டு வருகின்றது.  அது மட்டுமன்றி கடந்த அரசாங்கத்தால் செய்யப்பட்டு வந்த வேலைத்திட்டங்களையும் இடை நிறுத்தியுள்ளது. தேர்தலுக்கு பின்னரான சூழலில் தமிழ் மக்களுக்கு என்ன நடக்கப்போகின்றது என்ற சூழலில் ஐ.நாவில் கொண்டு வரப்பட்ட பிரேரணைகளையும் அதிலிருந்து விலகுவதாகவும் அரசாங்கம் அறிவித்துள்ளது.  இது ஒரு புறம் இருக்க மறுபுறத்தில் வேலை வாய்ப்பு வழங்குவதாகக்கூறி அந்த நேர்முகத் தேர்வில் இராணுவத்தினரைப் பயன்படுத்தியுள்ளது. வடக்கில் சிவில் நிர்வாகத்தைக் குழப்பி இராணுவ ஆட்சிக்குள் தமிழ் மக்களை வைத்திருப்பதற்கான முயற்யாகவே இதன் வெளிப்பாடு உள்ளது. இத்தகைய விடையங்களை தமிழ் மக்கள் சரியாக முறையாகப் புரிந்துகொள்ளவேண்டும். அரசாங்கத்தின் இத்தகைய நடவடிக்கைகளுக்கு இங்குள்ள சிலரும் இணைந்து செயற்படுகின்ற நிலைமை காணப்படுகின்றது. தமிழ் மக்கள் கடந்த காலங்களில்தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு எவ்வாறு ஆதரவை வழங்கினார்களோ! அத்தகைய ஆதரவை தொடர்ந்தும் வழங்கி தமிழ் தேசியக் கூட்டமைப்பை பலப்படுத்தவேண்டும். என தெரிவித்தார்.   https://www.virakesari.lk/article/76772  
  • ”உள்­ளக விசா­ரணை என்­பது இலங்கை அர­சாங்­கத்தின் ஏமாற்று வேலைத்­திட்டம்” - .வெ.கிரு­பா­கரன் உள்­ளக விசா­ரணை  என­பது இலங்கை அர­சாங்­கத்தின் நீண்­ட­கால ஏமாற்­றுத்­திட்­ட­மாகும்.  முள்­ளி­வாய்க்­காலின் பின்னர் உள்­ளக விசா­ர­ணைகள், உள்­ளக விசா­ர­ணைகள் என்று  11 வரு­டங்கள்  சென்­று­ விட்­டன. அதன் பின்னர் இரா­ணு­வ­ வீ­ரர்கள் மன்­னிக்­கப்­பட்­டுள்­ளார்கள். மர­ண­ தண்­டனை பெற்­ற­வர்கள் விடு­தலை செய்­யப்­பட்­டுள்­ளார்கள்.இவை­தான் இலங்கை அர­சாங்­கத்தின் வேலைத்­திட்டம். எனவே உள்­ளக விசா­ர­ ணை­களில்  சர்­வ­தே­சத்­துக்கும்  நம்­பிக்­கை­யில்லை.  இனி­வரும் காலங்­களில் அது இறுக்­க­மான தீர்­மா­னத்­துக்கு வழி வகுக்கும் என தமிழர் மனித உரி­மைகள் மையத்தின் தலைவர் ச.வெ.கிரு­பா­கரன் தெரி­வித்தார். ஐக்­கிய நாடுகள் மனித உரிமைகள் பேர­வையின் 43ஆவது கூட்­டத்­தொ­ட­ருக்கு வருகை தந்­தி­ருந்த நிலையில் பேரவை வளா­கத்தில்  வீர­கே­ச­ரிக்கு அவர் வழங்­கிய செவ்­வி­யி­லேயே இதனைத் தெரி­வித்தார்.  செவ்­வியின் விபரம் வரு­மாறு, கேள்வி: மனித உரிமைகள் பேர­வையின்  பிரே­ர­ணைக்­கான இணை அனு­ச­ரணை வழங்­கு­வதிலிருந்து இலங்கை அர­சா­னது வில­கி­யுள்­ளது. இதனை உங்கள் அமைப்­பா­னது எவ்­வாறு பார்க்­கி­றது? பதில்: இதைப் ­பற்றி நாங்கள் நீண்ட கால­மா­கவே சொல்லி வரு­கின்றோம். உண்­மையில் இந்த  இணை அனு­ச­ரணை என்­பதில் எந்தப் பயனும் இல்லை. ஆனால் இதன் மூலம் இந்தத் தீர்­மா­னத்தை  வலிந்­த­தாக ஏற்­ப­டுத்த இலங்­கையின் முன்­னைய அர­சாங்கம் இதனைப் பயன்­ப­டுத்­தி­யது. தற்­போ­தைய அர­சாங்கம்  அர­சியல் இலா­பங்­க­ளுக்­காக இந்த இணை அனு­ச­ரணை வழங்­கு­வதிலிருந்து வில­கு­கி­றது. இதிலிருந்து வில­கு­வதால் இவர்­க­ளுக்­குத்­தான் ஆபத்து. இவ்­வாறு  வில­கு­வதால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கும் இதில் வேலை­ செய்யும் செயற்­பாட்­டா­ளர்­க­ளுக்கும் வேலை என்­பது மிகவும் இல­குவாகும். காரணம் சர்­வ­தே­ சத்தின் முன் இதனை விட்டு விலகிச் செல்­கிறோம் என்று இலங்கை தெரி­வித்­த­தா­னது  உங்­க­ளுக்குத் தெரியும். சர்­வ­தேச மனித உரி­மைகள் அமைப்­புகள் பல ஏற்­க­னவே இதனைக் கண்­டித்­துள்­ளன.  எனவே இதே பார்­வை­யில்­தான பல நாடு­களும் இதனைக் கவ­னிக்கும் என­பது எமது கருத்து. கேள்வி: இணை அனு­ச­ர­ணை­யி­லி­ருந்து  வில­கி­யி­ருக்­கின்றோம். ஆனால் மனித உரிமைகள் பேர­­வையின் பிரே­ர­ணை­யி­லி­ருந்து வில­க­வில்லை. எனவே உள்­ளக விசா­ர­ணைகளை உரிய முறையில் முன்­னெ­டுக்கத் தயா­ராக இருப்­ப­தாக  என்று அமைச்சர் தினேஷ் குண­வர்­த்தன தெரி­வித்­துள்ளார். இதனை நீங்கள் எவ்­வாறு கரு­து­கி­றீர்கள்.  உள்­ளக விசா­ர­ணைகள் உரிய முறையில் நடை­பெ­றுமா? பதில்: உள்­ளக விசா­ர­ணைகள் என­பது இலங்கை அர­சாங்­கத்தின் நீண்­ட­கால ஏமாற்­றுத்­திட்டம் உங்­க­ளுக்கு நன்­றாகத் தெரியும். 83 மற்றும் அதற்கு முன்னர் கூட பல உள்­நாட்டு ஆணைக்­கு­ழுக்கள்  அமைக்­கப்­பட்­டன. அதன் அறிக்­கை­களும் வெளி­வ­ர­வில்லை. முறை­யான எதுவும் நடை­பெ­ற­வு­மில்லை.  விசே­ட­மாக முள்­ளி­வாய்க்­காலின் பின்னர்  உள்­ளக விசா­ர­ணைகள், உள்­ளக விசா­ர­ணைகள் என்று  11 வரு­டங்கள் சென்­று­ விட்­டன. அதன் பின்னர் இரா­ணு­வ­ வீ­ரர்கள் மன்­னிக்­கப்­பட்­டுள்­ளார்கள். மர­ண­ தண்­டனை பெற்­ற­வர்கள் விடு­தலை செய்­யப்­பட்­டுள்­ளார்கள். இவை­தான் இலங்கை அர­சாங்­கத்தின் வேலைத்­திட்டம். எனவே உள்­ளக விசா­ர­ ணை­களில்  சர்­வ­தே­சத்­துக்கும்  நம்­பிக்­கை­யில்லை. எனவே இனி­வரும் காலங்­களில் அது இறுக்­க­மான தீர்­மா­னத்­துக்கு வழி வகுக்கும். கேள்வி: ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் ­ச­பைக்கு ஓர் எல்­லை­யுண்டு. அதைத் தாண்டி அசாங்­கத்தின் ஒத்­து­ழைப்பின்றிச் செயற்­பட முடி­யாது. இவ்­வா­றான நிலையில் இலங்கை விவ­கா­ரத்தை  சர்­வ­தேச குற்­ற­வியல் நீதி­மன்­றத்­துக்கு  கொண்டு செல்­லப்­போ­வ­தாக சில தரப்­பி னர் கூறி­ வ­ரு­கின்­றனர். இது சாத்­தி­யமா அல்­லது அதற்கு எவ்­வா­றான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­ட ­வேண்டும்? பதில்:  உண்­மையில் சர்­வ­தேச மனித உரி­மைகள் சபையின் வேலைத்­திட்­டங்­களைப் பார்த்தால் இலங்கை அர­சா­னது இனியும் தொடர்ந்து மறுத்து வந்தால் மனித உரி­மைகள் சபையின் இந்த விட­யத்தை பாது­காப்புச் சபைக்கு அல்­லது பொதுச்­ச­பைக்குக் கொண்டு செல்ல முடியும். அப்­படி கொண்­டு­செல்­லப்­பட்டால் அது தொடர்பில் ஆரா­யப்­பட்டு அடுத்த கட்ட நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­ப­டலாம். இது போன்ற விட­யங்கள் சில நாடு­க­ளுக்கு இடம்­பெற்றும் உள்­ளன.  கேள்வி: இந்தப் பிரே­ர­ணைக்கு நல்­லாட்சி அர­சாங்கம் இணை அனு­ச­ரணை வழங்­கி­யது. தற்­போது  இணை அனு­ச­ர­ணையில் இருந்து வில­கி­யுள்­ளது. இந்தச் சம­யத்தில் இந்­தியா,  பிரித்­தா­னியா போன்ற நாடுகள் எத்­த­கைய நிலை­பாட்டை எடுக்­க­ வேண்டும் என உங்­க­ளது அமைப்பு எதிர்­பார்க்­கி­றது? பதில்:  உண்­மையில் எங்­களைப் பெறுத்­த­வரை அர­சியல் மற்றும் பொறுப்புக் கூறல் விட­யங்­களில் இந்­தியா, பிரித்­தா­னியா, அமெ­ரிக்கா போன்ற நாடு­க­ளுடன் மேல் ­மட்­டத்தில் வேலைத்­திட்­டங்கள் எடுக்­கப்­ப­ட­ வேண்டும். அர­சியல் தீர்வு பிரச்­சி­னையைப் பெறுத்­த ­வரை இந்­தி­யாவை கடந்து யாரும் எமக்கு எத­னையும் செய்­யப்­போ­வ­தில்லை. எனவே எத்­தனை சர்ச்­சைகள் வந்­தாலும் நாம்  இந்­தியா மூலம்தான் அர­சியல் தீர்வுத் திட்ட வேலைத்­திட்­டங்­களில் இறங்­க­ வேண்டும். கேள்வி: மனித உரிமைகள் பேர­வையால் 2012 முதல் தீர்­மா­னங்கள் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளன. ஆனால் இலங்‍கை அர­சாங்­க­மா­னது அவற்றைப் பூர­ணப் ­ப­டுத்­தாமல் காரணம் கூறி வரு­கின்­றது. எனவே புலம்­பெயர் அமைப்­புகள் இதற்கு எவ்­வா­றான அழுத்­தங்­களைக் கொடுக்­க ­வேண்டும். ஏனென்றால் புலம்­பெயர் அமைப்­பு­க­ளி­டையே இன்று ஒற்­றுமை இல்­லாத ஒரு நிலை காணப்­ப­டு­கி­றது. பதில்: நீங்கள் கூறு­வது சரிதான். இன்று புலம்­பெயர் அமைப்­புகள் இடையே ஒற்­று­மை­யில்­லாத ஒரு நிலை­தான் காணப்­ப­டு­கி­றது. இந்த அமைப்­புகள் தம்­மி­டையே போட்­டி ­போட்­டுக்­கொள்­ளாமல் உரிய முறை­யி­லான வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுக்­க ­வேண்­டும். ஐ.நா. வுக்கு வருவது என்பது ஒரு சாதாரண விடயமாகியுள்ளது.  முன்பு தொழில்சார் வல்லுனர்கள், பேராசிரியர்கள், சட்டவல்லுனர்கள் போன்ற நிபுணர்களை நாம் அழைத்து வந்தோம்.ஆனால் இன்று சிலர் அரசியல் தேவைகளுக்காகவும் பணம் ‍சேர்ப்பதற்காகவும் வருகின்றனர். அரசாங்கம் எப்பொழுதும் அவர்கள் சார்பாக சிறந்த ராஜதந்திரியைத்தான் ஐ.நா.வுக்கு அனுப்பும். எனவே நாமும் அதற்கேற்ப திறமையான நபர்களை இவ்விடயத்தில் ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். இங்கு நடைபெறுகின்ற விடயங்களை ஆராய்ந்து   ஐ.நா. பிரதி நிதிகளைச் சந்தித்து ராஜதந்திர ரீதியாக செயற்பட்டு ஒற்றுமையாகச் செயற்பட வேண்டும்.      https://www.virakesari.lk/article/76796  
  • "சர்­வ­தேச நாடுகள் அழுத்தம் பிர­யோ­கிக்­க­ வேண்­டிய தேவை ஏற்­பட்­டுள்­ளது" - கஜேந்­திரகுமார் புதிய அர­சாங்கம் ஆட்­சிக்கு  வந்து மூன்று மாத ­காலப் பகு­தி­யி­லேயே சர்­வ­தேச நாடுகள் அதி­ருப்தி தெரி­விக்கும் வகையில் நடந்து கொண்­டுள்­ளது. இந்த அர­சாங்­கத்தின் போக்கில் சர்­வ­தேச நாடுகள் அழுத்தம் பிரயோ­கிக்க வேண்­டிய ஒரு தேவை  தற்­போது அதி­க­ரித்­துள்­ளது.  ஆகவே அந்த அழுத்­தங்களை எந்­தெந்த இடங்­களில் பிர­யோ­கிக்க வேண்டும் என்­பதில் சர்­வ­தேச நாடுகள் கவனம் செலுத்த வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்­ன­ணி யின்  தலைவர் கஜேந்­திரகுமார் பொன்­னம்­பலம் தெரி­வித்தார்.  ஜெனி­வா­வுக்கு வருகை தந்­துள்ள கஜேந்­திரகுமார் கேச­ரிக்கு வழங்­கிய செவ்­வி­யி­லேயே இவற்றைக் குறிப்­பிட்டார்.  அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,  கேள்வி: மனித உரிமைகள் பேர­வையின்  பிரே­ர­ணைக்­கான இணை அனு­ச­ரணை வழங்­கு­வதிலிருந்து இலங்கை அர­சா­னது வில­கி­யுள்­ளது. இதனை உங்கள் கட்சி எவ்­வாறு பார்க்­கி­றது? பதில்: ஏற்­க­னவே இலங்கை கடந்த ஐந்து வரு­டங்­க­ளாக இணை அனு­ச­ரணை வழங்­கி­யி­ருந்­தாலும் கூட  அதனை நடை­மு­றைப்­ப­டுத்­தாமல் மூடி­ ம­றைத்­தது.  மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் அதனை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தில்லை என சிங்­கள மக்கள் மத்­தியில்  உறு­தி­யாகக் கூறி­ வந்­தனர்.  ஆனால் இன்று கோத்த­பாய அர­சாங்கம்  இணை அனு­ச­ர­ணை­யி­லி­ருந்து  வில­கு­வ­தாக வெளிப்­ப­டை­யாக அறி­வித்­துள்­ளது. பாதிக்­கப்­பட்ட தமிழ் மக்­க­ளுக்கு கடந்த‍ ஐந்து வரு­டங்­க­ளாக எவ்­வித பிர­யோ­ச­னமும் கிடைக்­க­வில்லை. எனவே இலங்கை அர­சாங்­கத்தின் இந்த அறி­வித்தல் இதனை பலப்­ப­டுத்­து­வ­தா­கவே இருக்கும். எனவே உறுப்பு நாடுகள்  தொடர்ந்தும் தமி­ழர்­க­ளு­டைய பொறுப்புக் கூறலை ஐ.நா.வில் முடக்கி வைத்­தி­ருப்­பது நியா­யப்­ப­டுத்த முடி­யாத ஒரு நிலை­மையை இலங்கை அர­சாங்­கமே எமக்கு ஏற்­ப­டுத்திக்  கொடுத்­துள்­ளது. இதனை ஒரு சாத­க­மான ஒரு விட­ய­மா­கத்­தான்  நான் பார்க்­கின்றேன். கேள்வி: இலங்கை  இணை அனு­ச­ர­ணை­யி­லி­ருந்து வில­கி­ய­தற்கு பிரித்­தா­னியா உள்­ளிட்ட நாடுகள் தமது அதிருப்­தியை வெளி­யிட்­டுள்­ளன. அந்த நிலையில் அர­சாங்கம் செய்­ததைச் சரி என்ற நிலையில் நீங்கள் கூறு­கின்­றீர்கள். இதில் எந்தளவு நியாயம் இருக்­கி­றது? பதில் :  அர­சாங்கம் செய்­ததை சரி என்று நான் கூற வர­வில்லை. அர­சாங்­கத்தின் பக்­க­மி­ருந்து பார்க்­கின்ற போது அவர்­க­ளுக்கு அது சரி­யாக இருக்­கலாம். எங்­க­ளு­டைய பக்­கத்­தி­லி­ருந்து பார்க்­கின்ற போது  நிறை­வேற்­றப்­பட்ட ஒரு தீர்­மானம்  கடந்த ஐந்து வரு­டங்­க­ளாக  எவ்­வித முன்­னேற்­றமும் காணப்­ப­டாத நிலை­யி­லேயே இருந்தது. ஆனால் காணாமல் ஆக்­கப்­பட்ட அலு­வ­ல­கத்­தையும்  இழப்­பீட்டு அலு­வ­ல­கத்­தையும்  காட்டி ஏதோ முன்­னேற்றம் இடம்­பெற்­றுள்­ள­தாக  காட்­டப்­பட்டு பாதிக்­கப்­பட்ட  மக்­க­ளது குரல்கள் முடக்­கப்­பட்­டன. இந்த இரண்­டையும் பாதிக்­கப்­பட்ட மக்கள் முற்­றாக மறுக்­கின்­றனர். இவ்­வா­றான    நிலையில் இலங்கை அர­சாங்­கமே இணை அனு­ச­ர­ணை­யி­லி­ருந்து வில­கு­வ­தாக  கூறியுள்ளது. அவர்கள் முன்­னேற்றம் இடம்­பெற்­றுள்­ள­தாக  எந்த விட­யத்தைக் கூறி  தமிழ் மக்­களின் குரல்­களை  முடக்­கி­னார்­களோ    அதை வைத்து இனி  தமிழ் மக்­களின் குரல்­களை  முடக்க முடி­யாது என்­று தான் நாம் கூறு­கின்றோம். கேள்வி: அவ்­வாறு தமிழ் மக்­களின் குரல்­களை முடக்க முடி­யாது என்றால் அடுத்த கட்ட நட­வ­டிக்கை என்ன? அதற்கு ஏதா­வது  யோசனை  உங்­க­ளிடம் உள்­ளதா?   பதில்:  பொது­வா­கவே  சர்­வ­தேச நாடுகள் இலங்கை மீது தற்­போது அதி­ருப்­தியை தெரி­வித்து வரு­கின்­றன. முன்­னைய ரணில் – மைத்­திரி அர­சாங்­க­மா­னது  சர்­வ­தேச நாடு­க­ளுடன்  ஒத்­து­ப்போ­கின்ற ஓர் அர­சாக காணப்­பட்­டது. ஆனால்  இந்தப் புதிய அர­சாங்கம் ஆட்­சிக்கு  வந்து மூன்று மாத ­காலப் பகு­தி­யி­லேயே சர்­வ­தேச நாடுகள் அதி­ருப்தி தெரி­விக்கும் வகையில் நடந்து கொண்­டுள்­ளது. இந்த அர­சாங்­கத்தின் போக்கில் சர்­வ­தேச நாடுகள் அழுத்தம் பிர­யோ­கிக்க வேண்­டிய ஒரு தேவை  தற்­போது அதி­க­ரித்­துள்­ளது.  ஆகவே அந்த அழுத்­தங்களை எந்­தெந்த இடங்­களில் பிர­யோ­கிக்க வேண்டும் என்­பதில் சர்­வ­தேச நாடுகள் கவனம் செலுத்த வேண்டும்.  குற்­ற­வியல் தீர்ப்­பா­ய­மொன்றை உரு­வாக்கி அதன் ஊடாக அழுத்தம் பிர­யோ­கிப்­பது  பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு பொறுப்புக் கூறலை அடை யக் கூடிய வாய்ப்பை பெற்றுக் கொடுக்கும். இதைத்தான் நாம் 2012 ஆம் ஆண்டு முதல் கூறி­ வ­ரு­கிறோம்.  இதில் பாதிக்­கப்­பட்ட மக்­களின் பிர­தி­நி­தி­க­ளுக்கு பாரிய பொறுப்­புள்­ளது கடந்த காலங்­களில் இவர்­க­ளது அச­மந்­தப்­ போக்­கி­னால்தான் கடந்த 8 வரு­டங்­க­ளாக இந்த மனித உரி­மைகள் ­பே­ர­வையில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்­கான தீர்வு இழு­பறி நிலையில் உள்­ளது. இலங்­கையில் அடுத்து வரப்­போ­கின்ற பாரா­ளு­மன்றத் தேர்­தலில் பொறுப்பு வாய்ந்த பிர­தி­நி­திகள்  தேர்ந்­தெ­டுக்­கப்­பட்டு அவர்கள் இது குறித்து கவனம் செலுத்த வேண்டும். கேள்வி: சர்­வ­தேச குற்­ற­வியல் நீதி­மன்­றுக்கு இலங்கை விவ­காரம் கொண்டு செல்­லப்­பட வேண்டும் என  கடந்த பல வரு­ட­ கா­ல­மாக கூறி­ வ­ரு­கின்­றீர்கள். இந்­நி­லையில் ஒரு­சில தரப்­புகள் அவ்­வாறு கொண்டு செல்ல முடி­யாது எனக் கூறி வரு­கின்­றன. எனவே இது குறித்து உங்கள் கருத்து என்ன? பதில்: தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு மாத்­தி­ரமே இவ்­வாறு கொண்டு செல்ல முடி­யாது எனக் கூறி வரு­கின்­றது. காரணம் இலங்கை ரோம் சட்­டத்தில் கைச்­சாத்­தி­ட­வில்லை.   இவ்­வாறு ரோம் சட்­டத்தில் கைச்­சாத்­தி­டாத தரப்­புகள் சர்­வதேச நீதி­மன்­றுக்குச் செல்­வ­தாயின்  பாது­காப்பு சபை ஊடா­கத்தான் கொண்டு செல்ல வேண்டும். ஆனால் பாது­காப்பு சபை யில் மஹிந்த ராஜ­க் ஷ­வுக்கு மிகவும் விசு­வா­ச­மான  சீனா போன்ற நாடுகள் அங்கம் வகிக்­கின்­ற­மையால் அவர்கள் தங்­க­ளு­டைய வீட்டோ போன்ற அதி­கா­ரத்தைப் பயன்­ப­டுத்தி குற்­ற­வியல் நீது­மன்­றுக்கு இலங்­கையை கொண்டு செல்­வ­தற்­கான நடை­மு­றையை தோற்­க­டிப்­பார்கள் என்­ப­துதான் அவர்­க­ளு­டைய கருத்­தா­க­வுள்­ளது.   இவர்­க­ளு­டைய  இந்தக் கருத்­தா­னது ஒன்று மக்­க­ளுக்கு உண்­மையை அவர்கள் கூற விரும்­ப­வில்லை அல்­லது  குற்­ற­வியல் நீதி­மன்றம் சம்­பந்­த­மான அண்­மைக்­கால நடை­மு­றை கள் குறித்த போதிய அறி­வின்மை என்­பதைக் காட்­டு­கின்­றது. உதா­ர­ண­மாக மியன்­மாரை எடுத்­து­க்கொண்டால் மியன்மார் ரோம் சட்­டத்தில் கைச்­சாத்­தி­ட­வில்லை.  அதே­நேரம் சீனா மியன்­மா­ருக்கு மிகவும் நெருங்­கிய நாடு. உல­கமே மியன்­மா­ருக்கு எதி­ரா­ன­போது சீனா அவர்கள் பக்கம் நின்­றது. இது தெரிந்ததும் குற்­ற­வியல் நீதி­மன்றம் அண்­மைக்­கா­ல­மாக  குற்றம் நடை­பெ­று­கின்ற நாடு­களை குற்­ற­வியல் நீதி­மன்­றுக்குக் கொண்­டு­வந்து விசா­ரணை நடத்­து­கின்­றது. ஆகவே அவர்கள் எப்­படி விசா­ரிக்­கின்­றார்கள் என்றால், மியன்­மாரில் குற்றம் அதி­க­ரிக்­கின்­ற­போது மக்கள் தஞ்சம் கேட்டு பங்­களாதேஷ் போன்ற நாடு­களை நோக்­கி நக­ரலாம். அதன்­போது பங்­க­ளாதேஷ் போன்ற நாடுகள் குற்­ற­வியல் நீதி­மன்றில் அங்கம் வகிக்­கின்­ற­மையால் அதனைக் காரணம் காட்டி விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­மாயின் இலங்கை விவ­கா­ரமும் சாத்­தி­ய­மாகும். ஆகவே ஈழ­த்த­மி­ழர்­களின் பிரச்­சி­னைக்கு மனித உரிமைகள் பேர­வையில் மாத்தி ரமே தீர்வுள்ளது எனக் கூறுவது பாதிக்கப்பட்ட மக்களுக்குச் செய்யும் மிகப் பெரிய துரோகமென்றே  கூற வேண்டும்.  கேள்வி: தற்போது அரசாங்கம் இணை அனுசரணையிலிருந்து விலகிய பின்னர் தாங்கள் உள்ளக கட்டமைப்பின் கீழ் விசாரணைகளை ஆரம்பிக்கப் போவதாக அறிவித்துள்ளது. அது சாத்தியப்படுமா? பதில்  பாதிக்கப்பட்ட மக்கள் ஒருபோதும் அப்படியொரு முயற்சிக்கு ஒத்துழைக்கப் போவதில்லை. அதுமட்டுமன்றி மனித உரிமைகள் ஆணையாளர் தன்னுடைய வாய்மொழி அறிக்கையில் கூட தெளிவாகத்  தெரிவித்திருந்தார் , அப்படிப்பட்ட நடைமுறையை முற்றுமுழுதாக எதிர்த்திருந்தார். அது அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்தாகத்தான் அமைந்திருந்தது. ஆகவே இது சாத்தியப்படாது.  ஜெனிவாவிலிருந்து எஸ்.ஸ்ரீகஜன்   https://www.virakesari.lk/article/76794
  • கொரோனா வைரஸ் ஒரு நூற்றாண்டுக்கு ஒரு முறைவரும் கிருமி நோய்- பில் கேட்ஸ் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் முன்னாள் தலைவரும் தலைமை நிர்வாகியுமான பில்கேட்ஸ் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை ஏற்கனவே 100 மில்லியன் டாலர்களை கொரோனோ வைரஸ் நோய்க்கு எதிராக போராடுவதற்கு வழங்குவதாக உறுதியளித்துள்ளது.பில்கேட்ஸ் இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசின் தலையங்கத்தில் எழுதி உள்ளதாவது:- ஒரு நூற்றாண்டுக்கு ஒரு முறை இது போன்ற நோய்க்கிருமி தாக்குதல் இருக்கும். கொரோனா வைரஸ் ஒரு நூற்றாண்டுக்கு ஒரு முறைவரும் கிருமி நோய் ஆகும். ஆப்பிரிக்கா மற்றும் தெற்காசியாவில் உள்ள நாடுகள் இந்த கொரோனா வைரஸ் நோயை எதிர்க்க இப்போது தயாராக இருப்பதன் மூலம், நாம் உயிர்களைக் காப்பாற்ற முடியும், மேலும் இந்த வைரஸின் உலகளாவிய சுழற்சியை குறைக்கலாம். சீனாவில் முதன்முதலில் தோன்றி இப்போது 46 நாடுகளுக்கு பரவியிருக்கும் கொரோனா வைரஸ் நோய் மத்திய கிழக்கு சுவாச நோய்க்குறி (MERS) அல்லது கடுமையான கடுமையான சுவாச நோய்க்குறி (SARS) போன்ற நோய்களை விட மிகவும் கொடுமையானது ஆகும் கொரோனா வைரஸின் தாக்குதலை குறைக்க குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகள் தங்கள் சுகாதார அமைப்புகளை வலுப்படுத்த உதவுமாறு பணக்கார நாடுகளை கேட்டு கொண்டார்.(15)   http://www.samakalam.com/செய்திகள்/கொரோனா-வைரஸ்-ஒரு-நூற்றாண/
  • முல்லைத்தீவு மாவட்டத்துக்கான புதிய அரச அதிபராக க.விமலநாதன் நியமனம் Feb 29, 20200   மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலையின் பழைய மாணவரான க.விமலநாதன் முல்லைத்தீவு மாவட்டத்துக்கான புதிய அரச அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.மேலதிக அரசாங்க அதிபராகவும் பல்வேறு அரச உயர் பதவிகள் வகித்து வந்த நிலையிலேயே முல்லைத்தீவுக்கான புதிய அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.சமூக நலனோம்பு மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் மேலதிக செயலாளராக கடமையாற்றிய க.விமலநாதன் மட்டக்களப்பை பிறப்பிடமாக கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.(15)   http://www.samakalam.com/செய்திகள்/முல்லைத்தீவு-மாவட்டத்த-19/