Jump to content

தோல்வியில் மீளுவோம் (நிக்சன்)

Recommended Posts

தோல்வியில் மீளுவோம்

205757_300135520088885_1650431238_n-300x

நீண்ட பயணம்….,

முடிவு வரும் ஆனால் பாதை

கடினமானது.

தெரிந்து பயணம் செய்தான்

எங்கள் தலைவன்.

வெற்றிகள் வந்தது தோல்விளும் கூடவே….!

பயணத்தின் பாதை

அது மிகக் கொடுமையானதாய்

கொத்துக் கொத்தாய் விலை கொடுத்தோம் …..!

சென்னீரும் கண்ணீரும் சேர்வையாய்

குருதியாற்றில் குளிர்தோடிய பயணம்

அது முடியும் தருவாயில்…..!

இதோ கனவின் கடைசித்துளி

நிசமாகியதாய் நினைவு.

நாங்கள் வென்றோம்…..!

பாதியில் பயங்கரக்கனவு போல்

பறிபோன கனவின் மீதமாய்

தோற்றுப் போனோம்….!

பயணம் முடியாமல் தோல்வியாய்

பயணவழி வந்தவர்கள்

பயணம் முடியாமல் பாழ் சிறைகளிலும்

பயங்கர அறைகளிலும்…..!

எனினும் எல்லைகளை எட்டும்வரை

பயணத்தில் தங்கள் பாதையை தெரிந்த

சிலர் மட்டுமே வந்தவழி நடக்க

வரலாற்றைச் சுமந்தபடி….!

பாதிவழி முடியாத

பயணத்தை முடித்துவைக்க

பார்த்திபன்கள் பயணிக்கத் தொடங்கியுள்ளார்…..!

இலட்சிய வேர்களின் உறுதியில்

மீளுவோம் மீண்டும் எழுவோம் என்ற உறுதி

எழுதப்படும் வரலாறாய் தொடர்கிறது உறுதியுடன்….!

காலநதியோடு கரை(லை)ந்திடாமல்

காலச்சூரிய ஒளிதேடிய கடைசி யாத்திரை

மீளும் உறுதியோடு…..!

காலத்தை மாற்ற புறப்பட்ட போராளி நினைவாக !

- நிக்சன் -

http://thesakkaatu.com/doc2627.html

Link to comment
Share on other sites

பயணம் முடியாமல் தோல்வியாய்

பயணவழி வந்தவர்கள்

பயணம் முடியாமல் பாழ் சிறைகளிலும்

பயங்கர அறைகளிலும்…..!

இதற்கு தீர்வுகளை தேடுபவர்களை துரோகிகள் என்று வகைப்படுத்தினால் எவ்வாறு கடைசி யாத்திரை உறுதிப்படும் ???  இணைப்பிற்கு நன்றி சாந்தி .

Link to comment
Share on other sites

தோல்வியில் மீளுவோம்

205757_300135520088885_1650431238_n-300x

நீண்ட பயணம்….,

முடிவு வரும் ஆனால் பாதை

கடினமானது.

தெரிந்து பயணம் செய்தான்

எங்கள் தலைவன்.

வெற்றிகள் வந்தது தோல்விளும் கூடவே….!

பயணத்தின் பாதை

அது மிகக் கொடுமையானதாய்

கொத்துக் கொத்தாய் விலை கொடுத்தோம் …..!

சென்னீரும் கண்ணீரும் சேர்வையாய்

குருதியாற்றில் குளிர்தோடிய பயணம்

அது முடியும் தருவாயில்…..!

இதோ கனவின் கடைசித்துளி

நிசமாகியதாய் நினைவு.

நாங்கள் வென்றோம்…..!

பாதியில் பயங்கரக்கனவு போல்

பறிபோன கனவின் மீதமாய்

தோற்றுப் போனோம்….!

பயணம் முடியாமல் தோல்வியாய்

பயணவழி வந்தவர்கள்

பயணம் முடியாமல் பாழ் சிறைகளிலும்

பயங்கர அறைகளிலும்…..!

எனினும் எல்லைகளை எட்டும்வரை

பயணத்தில் தங்கள் பாதையை தெரிந்த

சிலர் மட்டுமே வந்தவழி நடக்க

வரலாற்றைச் சுமந்தபடி….!

பாதிவழி முடியாத

பயணத்தை முடித்துவைக்க

பார்த்திபன்கள் பயணிக்கத் தொடங்கியுள்ளார்…..!

இலட்சிய வேர்களின் உறுதியில்

மீளுவோம் மீண்டும் எழுவோம் என்ற உறுதி

எழுதப்படும் வரலாறாய் தொடர்கிறது உறுதியுடன்….!

காலநதியோடு கரை(லை)ந்திடாமல்

காலச்சூரிய ஒளிதேடிய கடைசி யாத்திரை

மீளும் உறுதியோடு…..!

காலத்தை மாற்ற புறப்பட்ட போராளி நினைவாக !

- நிக்சன் -

http://thesakkaatu.com/doc2627.html

இலட்சிய வேர்களின் உறுதியில்

மீளுவோம் மீண்டும் எழுவோம் என்ற உறுதி

எழுதப்படும் வரலாறாய் தொடர்கிறது உறுதியுடன்….!

இணைப்பிற்கு நன்றி

Link to comment
Share on other sites

இலட்சிய வேர்களின் உறுதியில்

மீளுவோம் மீண்டும் எழுவோம் என்ற உறுதி

எழுதப்படும் வரலாறாய் தொடர்கிறது உறுதியுடன்….!

இணைப்பிற்கு நன்றி

என்னெண்டு எழுவது என்று தெரியவில்லையே :(  ஒற்றுமை இல்லை எம் இனத்திடம் 

Link to comment
Share on other sites

நிக்சனாலை ஒற்றுமை பற்றி  இப்ப கவிதை  மட்டுதான் எழுத முடியும்

Link to comment
Share on other sites

நிக்சனாலை ஒற்றுமை பற்றி  இப்ப கவிதை  மட்டுதான் எழுத முடியும்

அப்ப RPG எடுத்துக் கொண்டு போய் போராடச்சொல்றீங்களா ?

நிக்சன் என்ற மனிதன் பற்றி உங்கள் மதிப்பீடு இவ்வளவுதானா ? :mellow:

Link to comment
Share on other sites

என்னெண்டு எழுவது என்று தெரியவில்லையே :(  ஒற்றுமை இல்லை எம் இனத்திடம் 

35வருட போராட்டம் கூட ஒற்றுமையின்றித்தான் நடந்தது அலை. ஆனால் ஒன்றுபட்ட ஒரு தலைமையின் கீழ் ஒன்றுபட்டு நின்று போராடியவர்களினாலேயே ஒத்தவராத ஒற்றுமையின் கதவுகள் திறக்கப்பட்டு ஒருங்கிணைந்தது. இப்போதும் அதே பாதையை மறவாத மாறாதவர்களின் கனவுகள் தம்மோடு போராடிய தாங்கள் நேசித்த மக்களை நேசித்து மடிந்து போன மாவீரர்களுக்காகவே தங்கள் பயணத்தை தொடர்கிறார்கள்.

Link to comment
Share on other sites

அப்ப RPG எடுத்துக் கொண்டு போய் போராடச்சொல்றீங்களா ?

நிக்சன் என்ற மனிதன் பற்றி உங்கள் மதிப்பீடு இவ்வளவுதானா ? :mellow:

எனக்கு யார் நிக்சன் என்று தெரியாது சாந்தி சொல்லுவீர்களா?

நல்ல அருமையான விளக்கம்  உண்மையும் கூட ஏதோ ஒரு இடத்தில ஒரு சிறு பொறி இல்லாமலா போய் விடும் தமிழர்கள் போட்ட உணவில் வளர்ந்த உடலில் பிரபாகரன் என்ற உப்பு ஒரு போராளின் உடலில் கூடவா இல்லாமலா போய் விடும்

Link to comment
Share on other sites

அப்ப RPG எடுத்துக் கொண்டு போய் போராடச்சொல்றீங்களா ?

நிக்சன் என்ற மனிதன் பற்றி உங்கள் மதிப்பீடு இவ்வளவுதானா ? :mellow:

நன் சொல்லவந்தது ஒற்றுமை பற்றி கதைச்சாலோ. அதுக்கான முயற்சிகள் எடுதாலோ. அவனை துரோகியாகி. முடக்கி. விடுவார்கள். இது சொந்த அனுபவம் என்றபடியால் நிக்சனும் கவிதை எழுதிறதோடு நிக்கிறது நல்லது நாடு நாடு என்று நிக்சன் இழந்தது போதும். அதைத்தான் சொன்னான்
Link to comment
Share on other sites

எனக்கு யார் நிக்சன் என்று தெரியாது சாந்தி சொல்லுவீர்களா?

அலை அக்கா இந்த நிக்ஸன் தான் இவர்  நினைக்கிறன் 

நிக்ஸன் பற்றி கேணல் வீரத்தேவன் நினைவு குறிப்பிலிருந்து............

1996ஆம் ஆண்டு 9ஆம் மாதம் ஆரம்பத்தில் மட்டு அம்பாறை மாவட்ட

புலனாய்வுப்பகுதிக்குப் பொறுப்பாளராக இருந்த திரு நிக்சன் அவர்கள் வவுனியா

மாவட்ட புலனாய்வுப்பொறுப்பை ஏற்றிருந்த காலம் நிக்சன் அவர்களின் பணிகளை

செவ்வனே செய்வதற்காக வவுனியாவுக்கான புலனாய்வு வேலைகளை எற்கனவே செய்த

அனுபவம் இருந்ததால் பொட்டு அம்மான் அவர்களால் நியுட்டன் அவர்களின்

நிர்வாகத்தில் இருந்த என்னை  நிக்சன் அவர்களின் நிர்வாகத்துக்கு

மாற்றப்பட்டேன். 09-09-1996 ஆம் ஆண்டு பண்டிவிரிச்சானில் உள்ள அடர்ந்த

காட்டுப்பகுதிக்குள் மிக இரகசியமாக நிக்சன் அவர்களின் வவுனியாவுக்கான

நடவடிக்கை  முகாம் அமைத்திருந்தது.

http://nerudal.com/nerudal.54909.html

சாந்தி அக்கா இவரோ இந்த கவிதை எழுதிய நிக்ஸன்?

dam நீங்கள் குறிப்பிடும் நிக்சன்தான் இந்தக் கவிதையை எழுதி நிக்சன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.