Jump to content

ரஷ்யாவில் வானத்தில் இருந்து திடீரென விழுந்த பயங்கர விண் எரிகல்.400 பேர் காயம். கட்டிடங்கள் நொறுங்கின.

easyjobs

Recommended Posts

ரஷ்யாவில் இன்று காலை திடீரென வானத்தில் இருந்து தீக்குழம்பாக எரிந்து கொண்டிருந்த

ஒர் விண்கல் கீழே விழுந்ததால், ஒரு மொபைல் உள்பட பல கட்டிடங்கள்

பாதிப்புக்குள்ளாயின. இந்த சம்பவத்தில் சுமார் 400 பேர் காயம் அடைந்தனர்.

இதில் பலர் உயிருக்கு போராடி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரஷ்ய நேரப்படி காலை 9.20 மணிக்கு, பெரும் நெருப்புக்குழம்பாக எரிந்து கொண்டு,

ஒரு மிகப்பெரிய விண்கள் ஒன்று வானவில் போன்று வளைந்து வந்து மிகவும்

பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்த ஒரு சாலையில் விழுந்ததால், பொதுமக்கள்

அதிர்ச்சியில் உறைந்தனர். இதில் 6000 சதுர அடியில் இயங்கிக்கொண்டிருந்த

துத்தநாக தொழிற்சாலை ஒன்று அடியோடு அழிந்தது. மேலும் பல கட்டிடங்கள்

நொறுங்கியது. சில கட்டிடங்களின் கண்ணாடிகள் சுக்குநூறாயின.

இதனால் பதட்டமடைந்த மக்கள் அங்கும் இங்கும் தங்கள் உயிரைக் காப்பாற்றிக்

கொள்வதற்காக ஓடினர். இதனால் பெரும் இடிபாடுகள் ஏற்பட்டன. இந்த சம்பவத்தில்

ஒரு மிகப்பெரிய மொபைல் கோபுரம் முற்றிலும் சேதமடைந்தது.

எரிகல் விழும் அதிர்ச்சி மிகுந்த படங்கள் மற்றும் வீடியோ பார்க்க...

Link to comment
Share on other sites

மக்கள் செறிவான இடத்தில் விழுந்தும் பெரியளவில் மக்கள் இறக்காதது அதியசமே.

அதேவேளை ஒரு வளர்ந்த நாடான உருசியாவிலேயே இதைப்பற்றி முன்கூட்டியே தெரியவில்லை என்றால் ஒரு மூன்றாம் உலக நாட்டில் விழுந்தால் :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிலிப்பைன்ஸ் பகுதியில் விழக்கூடும் என்று சொல்லியிருந்தார்கள். ஆனால் .. எங்கும் எதுவும் நடக்கலாம். இயற்கையை  அச்சொட்டாக  கூற முடியாது.

Link to comment
Share on other sites

மக்கள் செறிவான இடத்தில் விழுந்தும் பெரியளவில் மக்கள் இறக்காதது அதியசமே.

அதேவேளை ஒரு வளர்ந்த நாடான உருசியாவிலேயே இதைப்பற்றி முன்கூட்டியே தெரியவில்லை என்றால் ஒரு மூன்றாம் உலக நாட்டில் விழுந்தால் :(

ஏரிக்குள் விழுந்தமையால் தான் பாதிப்பு பெரிய இல்லை.

ஒரு வருடத்தில் அண்ணளவாக 40,000 தொன் நிறைக்குரிய விண்கற்கள் பூமியில் விழுகின்றன. விழுவனவற்றில் மிகச் சிலதுதான் பெரிய கற்கள். விண்மீன் மோதுகை போன்றவற்றினைத்தான் எதிர்வு கூற முடியுமாம். விண்கற்கள் வீழ்வதை கண்டறிவது கடினமாம்.

இது ரொரன்டோவில் விழுந்து இருந்தால் இண்டைக்கு நான் வேலைக்கு வந்திருக்க வேண்டி வந்திருக்காது. விண்கற்களுக்கும் மனசாட்சி இல்லை.. :(

Link to comment
Share on other sites

தம்மால் நாட்டிற்குள் வரும் ஏவுகணைகளை நிற்பாட்ட முடியும் என்கிறார்கள். அப்படியானால் ஏன் இதை நிற்பாட்ட முடியாமல் போனது?

எரிகோளின் வேகம் காரணமா?

Link to comment
Share on other sites

ரஸ்சியாவுக்கு ஒரு பாடம். இனி திரும்ப வெல்ல முடியாத அணுஆயுத போராட்டங்களுக்கு ஆயத்தப்படுத்தாமல் சர்வேத அரசியலில் விழுந்திருக்கும் ஓட்டைகளை நல்ல கொள்கைகளை வைத்து நிரப்பட்டும். உதாரணத்துக்கு தமிழருடன் எந்த வித பிணக்கும் இல்லாதிருந்த ரஸ்சியா தனது நியாயங்களை எடுத்து சொல்லியிருந்திருந்தால் இந்தியா, சீனா நிச்சயம் கேட்டிருந்திருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாஸா சொல்லியதை, ரஷ்யா அப்படியே... நம்பி விட்டது போலுள்ளது.
கீழே கொடுத்திருக்கும் இணைப்பை, சொடுக்கவும். :)

http://www.yarl.com/forum3/index.php?showtopic=116875

Link to comment
Share on other sites

இப்பிடி கல்லு விழுந்தால் எடுத்து வையுங்கோ.. நல்ல விலைக்குப் போகும்.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்பிடி கல்லு விழுந்தால் எடுத்து வையுங்கோ.. நல்ல விலைக்குப் போகும்.. :D

என்ரை வீட்டு வளவுக்குள்ளும்... கன கல்லு இருக்குது, வானத்திலிருந்து முந்தி விழுந்த கல்லாயிருக்கும் என்று நினைக்கிறன் இசை.

அதை... நீங்க மொத்தமாய் வாங்கினால்... மலிவு விலையில் விற்க, நான் ரெடி. :lol:

அதையெல்லாம் நாங்கள் கண்டுபிடிச்சிடுவம்.. :D சக்தியுள்ள காந்தத்தை கிட்டக் கொண்டுபோனால் ஒட்ட வேணும்.. கல்லும் உருகி காய்ந்து இருக்க வேணும்.. :rolleyes:

Link to comment
Share on other sites

இப்பிடி கல்லு விழுந்தால் எடுத்து வையுங்கோ.. நல்ல விலைக்குப் போகும்.. :D

முதலில் தலை போகாமல் இருக்கவேண்டும் :D

அடுத்து உங்கள் நாட்டு அரசு பறிக்காமல் இருக்கவேண்டும் :D  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ரை வீட்டு வளவுக்குள்ளும்... கன கல்லு இருக்குது, வானத்திலிருந்து முந்தி விழுந்த கல்லாயிருக்கும் என்று நினைக்கிறன் இசை.

அதை... நீங்க மொத்தமாய் வாங்கினால்... மலிவு விலையில் விற்க, நான் ரெடி. :lol:

உந்த கல்லை வாங்கி..இசைக்கலைஞன் அண்ணா...வீட்டில் தனக்கு தானே சூனியம் செய்ய மாட்டார் என்று நினைக்கிறேன்... :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில் பலர் உயிருக்கு போராடி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.ஃஃஃஃஃ ?????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதையெல்லாம் நாங்கள் கண்டுபிடிச்சிடுவம்.. :D சக்தியுள்ள காந்தத்தை கிட்டக் கொண்டுபோனால் ஒட்ட வேணும்.. கல்லும் உருகி காய்ந்து இருக்க வேணும்.. :rolleyes:

விண் கல்லுடன், சக்தியுள்ள காந்தம் ஒட்டுமா? அதனைப் பற்றிய... தகவல்களை, நீங்கள் அறிந்தவற்றை எமக்கும்.... விரிவாகக் கூறலாமே..... :rolleyes:

அப்ப தானே... எமது அறிவும் விருத்தியடையும். :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உந்த கல்லை வாங்கி..இசைக்கலைஞன் அண்ணா...வீட்டில் தனக்கு தானே சூனியம் செய்ய மாட்டார் என்று நினைக்கிறேன்... :lol:

உண்மையில்... எனது பாட்டியின், பாட்டிக்கு... பாட்டி சொன்ன கதை என்று,

எனது நேரடி பாட்டி சொன்னதை எனது கண்ணால் கேட்டனான். //விண் கல்லு விழும் போது பார்த்தால்... அதிர்ஷ்டம். அதை... விட எமது வாழைத் தோட்டத்துக்குள் விழுந்தால்.. உடனே, அதை... கிடங்கு வெட்டி, வாழைப் பாத்திக்குள் தாட்டுவிட்டால்... லட்சாதிபதி ஆகலாமாம்//

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில்... எனது பாட்டியின், பாட்டிக்கு... பாட்டி சொன்ன கதை என்று,

எனது நேரடி பாட்டி சொன்னதை எனது கண்ணால் கேட்டனான். //விண் கல்லு விழும் போது பார்த்தால்... அதிர்ஷ்டம். அதை... விட எமது வாழைத் தோட்டத்துக்குள் விழுந்தால்.. உடனே, அதை... கிடங்கு வெட்டி, வாழைப் பாத்திக்குள் தாட்டுவிட்டால்... லட்சாதிபதி ஆகலாமாம்//

உங்களுக்காவது உப்பிடி ஒரு அளவோடு நிறுத்திவிட்டார் உங்கள் பாட்டி..எங்கள் வீட்டில் என்பாட்டி..மின்னல் வாழைக்குமேல விழுந்தால் ஓடிப்போய் வாழையை ரண்டு துண்டாய் வெட்டினால் சூடாய் வந்த பொன் வாழைக்குள்ள குளிர்ந்து கட்டியாய் இருக்குமாம் எண்டு...நான் வயசுக்கு வரும்வரை பேய்க்காட்டிவிட்டார்... :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்காவது உப்பிடி ஒரு அளவோடு நிறுத்திவிட்டார் உங்கள் பாட்டி..எங்கள் வீட்டில் என்பாட்டி..மின்னல் வாழைக்குமேல விழுந்தால் ஓடிப்போய் வாழையை ரண்டு துண்டாய் வெட்டினால் சூடாய் வந்த பொன் வாழைக்குள்ள குளிர்ந்து கட்டியாய் இருக்குமாம் எண்டு...நான் வயசுக்கு வரும்வரை பேய்க்காட்டிவிட்டார்... :D

பாட்டி சொன்னதைக் கேட்டு... நானும், மண் வெட்டியோடை.... எப்ப விண்கல்லு விழும்... உடனை போய்.. வாழைத்தோட்டத்துக்குள்ளை தாக்க வேணும் என்று... கொஞ்சவருசம், பள்ளிக்கூட "ஹோம் வேர்க்கும்" செய்யாமல் வானத்தை அண்ணாந்து பாத்துக் கொண்டிருந்தனான். :rolleyes::D

உந்தக்கூத்து முடிஞ்சு பள்ளிகுடம் போக..வாத்தி மண்வெட்டியோட நிணடிருக்குமே..உங்களைத்தாக்க.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்காவது உப்பிடி ஒரு அளவோடு நிறுத்திவிட்டார் உங்கள் பாட்டி..எங்கள் வீட்டில் என்பாட்டி..மின்னல் வாழைக்குமேல விழுந்தால் ஓடிப்போய் வாழையை ரண்டு துண்டாய் வெட்டினால் சூடாய் வந்த பொன் வாழைக்குள்ள குளிர்ந்து கட்டியாய் இருக்குமாம் எண்டு...நான் வயசுக்கு வரும்வரை பேய்க்காட்டிவிட்டார்... :D

அது எப்ப  நடந்தது என்றும் சொன்னாத்தானே எமக்கு கணக்கு பார்க்க சரியாக இருக்கும்

(அது தான் நீங்க வயசுக்கு வந்தது எப்பொழுது????) :lol:  :D  :D

அதையெல்லாம் நாங்கள் கண்டுபிடிச்சிடுவம்.. :D சக்தியுள்ள காந்தத்தை கிட்டக் கொண்டுபோனால் ஒட்ட வேணும்.. கல்லும் உருகி காய்ந்து இருக்க வேணும்.. :rolleyes:

சிறியைக்கண்டால் என்னோவெல்லாம் ஒட்டுது

இந்த கல்  ஒட்டுவது பெரிய  விடயமா?

ஆனால் பாவம் கல்....... :lol:  :D  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உந்தக்கூத்து முடிஞ்சு பள்ளிகுடம் போக..வாத்தி மண்வெட்டியோட நிணடிருக்குமே..உங்களைத்தாக்க.. :D

வாத்தி, மண்வெட்டியாலை... தாக்கியிருந்தாலும் தாங்கியிருப்பன். பின் வாங்கிலை, இருந்த என்னை...  முன் வாங்கிலை வந்து இரு, என்று சொல்லிப் போட்டான் பாவி. :D  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது எப்ப  நடந்தது என்றும் சொன்னாத்தானே எமக்கு கணக்கு பார்க்க சரியாக இருக்கும்

(அது தான் நீங்க வயசுக்கு வந்தது எப்பொழுது????) :lol:  :D  :D

சிறியைக்கண்டால் என்னோவெல்லாம் ஒட்டுது

இந்த கல்  ஒட்டுவது பெரிய  விடயமா?

ஆனால் பாவம் கல்....... :lol:  :D  :D

விசுகண்ணை.... சொல்லுறதைப் பார்த்தால்... இசை, "டபிள் மீனிங்கிலை" கதைச்சிருக்கிறார் போலை கிடக்குது. :D  :D  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆஸ்டிராய்ட் DA14 ராட்சத எரிகல் பற்றிய சுவையான தகவல்கள்!

பூமியை நெருங்கும் மிகப்பெரிய, ராட்சத எரிகல் என்று கூறப்பட்ட ஆஸ்டிராய்டு டிஏ 14 என்ற எரிகல் பூமிக்கு அருகே கடந்தாலும் ரஷ்யாவில் அதன் தாக்கத்தினால் சுமார் 400 பேர் காயம்டைந்துள்ளனர். கட்டிடங்களில் ஜன்னல்கள் உடைந்துள்ளது, மேலும் செல்போன் சேவைகளும் பாதிப்படைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரஷ்யா தங்கள் பகுதியில் இதன் தாக்கம் இருக்கும் என்று கணித்ததை நாசா முன்பே மறுத்துள்ளது. ஆனால் ரஷ்யாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அது என்ன ஆஸ்டிராய்ட் டி.ஏ14 எரிகல்? இதோ சில சுவையான தகவல்கள்:

ஆஸ்டிராய்ட் டிஏ14- கண்டுபிடித்தது யார்?

ஸ்பெயினில் மல்லோர்க்காவில் உள்ள வானிலை விண்வெளி கண்காணிப்பு மையத்தினால் நடத்தப்படும் லா சக்ரா ஸ்கை சர்வே என்ற ஒன்றினால் கண்டுபிடிக்கப்பட்டது. இது பிப்ரவரி 23, 2012-இல் கண்டுபிடிக்கப்பட்டது. இதனைக் கண்டுபிடித்த அன்று அந்த எரிகல் 4.3 மில்லியன் கிலோமீட்டர்கள் தூரத்தில் இருந்தது. அவர்களது இந்த கண்டுபிடிப்பு நாசா நிதியுதவியுடன் நடக்கும் மைனர் பிளேனட் சென்டருக்கு தெரிவிக்கப்பட்டது.

இந்த ராட்சத எரிகல் போன்று இன்னும் எத்தனை இதே சைசில் உள்ளது?

அதாவது பூமிக்கு அருகில் இதுபோன்று சுமார் 5,00,000 எரிகற்கள் இருக்கிறது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதில் 1%க்கும் குறைவாகவே இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்டிராய்ட் டிஏ14 போன்ற ராட்சத எரிகற்கள் எத்தனை முறை பூமிக்கு இவ்வளவு அருகாமையில் சென்றுள்ளது?

ஒவ்வொரு 40 ஆண்டுகளுக்கும் ஒரு முறையும் இது நிகழும். அதில் 1200 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூமி மீது தாக்கம் செலுத்தும் வாய்ப்புள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.

ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட செயற்கைக் கோளுடன் எரிகல் மோதும் வாய்ப்புள்ளதா?

இப்போது விழுந்த ஆஸ்டிராய்ட் செயற்கைக் கோளை தாக்கவில்லை. ஏனெனில் ஆஸ்டிராய்ட் பூமியின் கீழ்ப்பகுதியிலிருந்து செல்லும் அணுகுறை கொண்டது இந்த ஆஸ்டிராய்ட். செயற்கைக்கோள்களின் வெளிப்புறங்களுக்கு இடையே கடந்துள்ளது. இந்தா ஆஸ்டிராய்ட் கடக்கும் இடங்களில் செயற்கை கோள்கள் இல்லை.

டிஏ14 ஆஸ்டிராய்டினால் பூமிக்கு என்ன நேரும்... அலைகள், பூமிப்பாறைகளில் தாக்கம்?

புவியீர்ப்பு சக்தியினால் ஏற்படும் தாக்கம் மிகமிகமிகச் சிறியதே.

பூமியில் இவை ஏற்படுத்தும் தாக்கம் என்றால் எப்படியிருக்கும்?

இந்த எரிகல்லினால் பூமிக்கு தாக்கம் ஏற்படாது. ஆனால் இதே அளவு ராட்சத சைசில் பூமியை தாக்கம் செய்யும் எரிகல்லாக இருந்தால் அதிலிருந்து 2.5 மெகா டன்கள் எரிசக்தி விண்வெளியில் வெளியாகும். இதனால் ஒரு குறிப்பிட்ட பகுதியில் பேரழிவு ஏற்படலாம்.

சைபீரியாவில் டுகுஸ்காவில் இதே சைஸ் எரிகல் பெரிய தாக்கம் ஏற்படுத்தியது. இது எரிகல் ஆய்வுக் குழாமில் டுகுஸ்கா நிகழ்வு என்று அழைக்கப்படுகிறது. அப்போது சுமார் 2,200 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவு காடுகளில் அனைத்தும் அழிந்து போனது.

அருகில் வரும்போது எரிகல்லை பார்க்க முடியுமா?

இந்த டிஏ14 எரிகல் பூமிக்கு அருகில் பறந்தாலும் இது சிறியதுதான். இது தெரியாது மிகவும் மங்கலாகவே இது தெரியும். இதனை பார்க்க டெலெஸ்கோப் வேண்டும். ஆனாலும் ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்காவில் இந்த எரிகல்லின் பகுதியை காண முடியும்.

http://tamil.webdunia.com/newsworld/news/letusknow/1302/15/1130215035_1.htm

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது எப்ப  நடந்தது என்றும் சொன்னாத்தானே எமக்கு கணக்கு பார்க்க சரியாக இருக்கும்

(அது தான் நீங்க வயசுக்கு வந்தது எப்பொழுது????) :lol:  :D  :D

வயசுப்பொண்ணுகள் இருக்குமிடத்தில்..என்ன கேள்வி இது.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தி, மண்வெட்டியாலை... தாக்கியிருந்தாலும் தாங்கியிருப்பன். பின் வாங்கிலை, இருந்த என்னை...  முன் வாங்கிலை வந்து இரு, என்று சொல்லிப் போட்டான் பாவி. :D  :lol:

வாத்தி உங்கள் வாழ்வில்..விளையாடிவிட்டான் தமிழ் சிறி அண்ணை... :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.