Archived

This topic is now archived and is closed to further replies.

thanga

windows 7 தமிழில் பயன்படுத்த வழி செய்து இருக்கிறது

Recommended Posts

ஆங்கிலத்தில் மட்டுமே பார்த்தே கணினியே இனி நம் அழகு தமிழில் பார்க்கமுடியும் .

கணினி கற்று கொள்ள ஆங்கிலமும் அவசியம் இல்லை அவர் அவர் தாய் மொழியிலே கணினி இணையத்தை கற்று கொள்ளலாம் .எத்தனை மொழி வேண்டுமாயின் கற்று கொள்ளுங்கள் தாய் மொழியே மட்டும் மறவாதீர்கள் .

எத்தனை மொழி கற்று இருந்தாலும் சிந்தனை பிறப்பது தாய் மொழியில் மட்டும் தான் 

அதுபோல் vlc player,firefox ,internet explorer இவற்றிலும் தமிழ் முழுமையாக பயன் படுத்த முடியும் .

விண்டோஸில் தமிழ் திரை மாற்ற .கீழே இருக்கும் இணைப்பிற்கு போய் தமிழ் மென்பொருள் தரவிறக்க வேண்டும் //http://www.microsoft.com/downloads/details.aspx?FamilyID=a1a48de1-e264-48d6-8439-ab7139c9c14d&displaylang=ta

புரியவில்லை என்றால் தமிழுக்கு விண்டோசை எப்படி மாற்றுவது என்று இந்த விடியோவை பார்க்கவும் http://www.youtube.com/watch?v=ib2bQ2BlGjI 

 

உதவி..முகநூல்.

Share this post


Link to post
Share on other sites

நல்லதொரு பதிவு. இணைப்பிற்கு... நன்றி தங்கா.

Share this post


Link to post
Share on other sites
Windows 7 இயங்கு தளத்தை தமிழில் பயன்படுத்துவது எப்படி?
 
windows-7.jpg?w=468கணினி உலகம் மற்றும் இணையத்தில் ஒவ்வொரு நிறுவனமும் தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொள்ளவும், அதிகமான வாசகர்களை பெறவும் நிறைய வசதிகளை அறிமுகம் செய்வது வழக்கம். அதில் முக்கியமாக தங்கள் படைப்புகளை குறிப்பிட்ட மொழிகளில் தந்து அதிக பயனர்களை பெறுவது.
 
இதுவரை கூகுள், பேஸ்புக் மற்றும் பல மென்பொருட்கள் அறிமுகமான கொஞ்ச வருடங்களிலேயே இந்த விசயத்தில் அடித்து ஆட, இவர்களுக்கெல்லாம் முன்னோடியான மைக்ரோசாப்ட் கொஞ்சம் தாமதமாக இந்த விஷயத்தை கையில் எடுத்து பல வசதிகளை அதன் பயனர்களுக்கு தந்துள்ளது.
 
அந்த வகையில் இன்றைய பதிவில் உங்கள் விண்டோஸ் 7 இயங்கு தளம் கொண்ட கணினியை எப்படி தமிழில் பயன்படுத்துவது என்று பார்ப்போம்.
 
முதலில் இந்த இணைப்பில் சென்று தமிழுக்கான விண்டோஸ் 7 மொழி இடைமுகத் தொகுப்பை (Language Interface Pack – LIP) தரவிறக்கம் செய்யுங்கள். 32 பிட் அல்லது 64 பிட் ஏதேனும் ஒன்றை மட்டும். எது என்ற குழப்பத்தில் உள்ளவர்கள் 32 பிட்டை தரவிறக்கம் செய்யவும்.
 
1.png?w=640&h=110
 
இது உங்கள் கணினியில் தரவிறக்கம் ஆன பின்பு, அதை உங்கள் கணினியில் நீங்கள் இன்ஸ்டால் செய்ய வேண்டும். இன்ஸ்டால் செய்யும் போது கீழே உள்ளது போல வரும்.

 

2.png?w=320&h=248

இதில் Next என்பதை தெரிவு செய்து, பின் அடுத்து வரும் பகுதியில் I Accept the license terms என்பதை தெரிவு செய்து மீண்டும் ஒரு Next, அடுத்து மீண்டும் ஒரு Next, இப்போது தமிழ் மொழி உங்கள் கணினியில் இன்ஸ்டால் ஆகும்.

5.png?w=320&h=247

இன்ஸ்டால் ஆன பின் மீண்டும் Next என்பதை கிளிக் செய்யுங்கள். இப்போது நீங்கள் Display மொழியை தெரிவு செய்ய வேண்டும். அதில் தமிழ் என்பதை தெரிவு செய்து “Apply display language to welcome screen and system accounts” என்பதை கிளிக் செய்து “Change Display Lanugage” என்பதை கிளிக் செய்யுங்கள்.

changethedisplaylanguage.png?w=320&h=239

அவ்வளவு தான் இப்போது உங்கள் கணினியை ஒரு முறை நீங்கள் Restart செய்ய வேண்டும்.

இனி உங்கள் கணினி தமிழில் இயங்க ஆரம்பிக்கும். அனைத்து வசதிகளும், செயல்களும் தமிழில் இல்லாவிட்டாலும் பொதுவான பல விஷயங்கள் தமிழில் இருக்கும்.

    9.png?w=312&h=320 தமிழில் ஸ்டார்ட் மெனு

இனி ஆங்கிலம் தெரியாதவர்கள் கூட கணினியில் அடிப்படை விசயங்களை செய்ய முடியும்.

மீண்டும் ஆங்கிலத்துக்கு மாற: ஸ்டார்ட் மெனு >> கட்டுப்பாட்டுப் பலகம் >> காட்சி மொழியை மாற்றவும் என்பதை கிளிக் மாற்றலாம். இவ்வாறு வராதவர்கள் கட்டுப்பாட்டுப் பலகம் >> வட்டாரம் மற்றும் மொழி என்பதை கிளிக் செய்து வரும் சிறிய விண்டோவில் “விசைப்பலகைகளும் மொழிகளும்” என்கிற பகுதியில் காட்சி மொழி ஒன்றை தேர்வு செய்யவும் என்பதற்கு கீழே English என்பதை தெரிவு செய்யுங்கள்.

ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மாற (இன்ஸ்டால் செய்த பின்):  Control Panel >>   Change Display Language என்பதை கிளிக் மாற்றலாம். இவ்வாறு வராதவர்கள் Control Panel >> Region and Language என்பதை கிளிக் செய்து வரும் சிறிய விண்டோவில் Keyboards and Language என்பதில் Choose a Display Language கீழே தமிழை தெரிவு செய்து கொள்ளலாம்.

http://kkyyouth.wordpress.com/2013/02/17/windows-7-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA/

Share this post


Link to post
Share on other sites

  • Topics

  • Posts

    • Airlines and destinations[edit] Passenger[edit] Airlines Destinations Air Senok Charter: Colombo–Ratmalana Alliance Air Chennai[32] FitsAir Charter: Colombo–Ratmalana, Trincomalee Helitours Colombo–Ratmalana, Trincomalee Millennium Airlines Charter: Colombo–Bandaranaike, Colombo–Ratmalana SriLankan Airlines operated by Cinnamon Air Charter: Colombo–Bandaranaike
    • 2015 இல்ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை குறித்த தீர்மானத்தை நியாயப்படுத்தி நிதியமைச்சர் மங்கள சமரவீர கருத்து வெளியிட்டுள்ளார். பொதுஜனபெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர்  கோத்தாபய ராஜபக்ச தான் ஜனாதிபதியானால் ஐநா தீர்மானத்தை ஏற்கமாட்டேன் என தெரிவித்துள்ள நிலையிலேயே நிதியமைச்சர் மங்கள சமரவீர இதனை தெரிவித்துள்ளார். 2014 டிசம்பர் மாதமளவில் இலங்கை சர்வதேச சமூகத்திடமிருந்து தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் காணப்பட்டது என தெரிவித்துள்ள மங்களசமரவீர  இலங்கை படையினர் ஐநா அமைதிப்படை நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்பை இழந்திருந்தனர் வர்த்தக வாய்ப்புகளும் குறைவடைந்த நிலையில் காணப்பட்டன என தெரிவித்துள்ளார். தற்பெருமைக்காக முன்னெடுக்ப்பட்ட பல திட்டங்களிற்காக பெறப்பட்ட கடன்கள் காரணமாக  பொருளாதாரம் பெரும் நெருக்கடியை அவ்வேளை சந்தித்தது எனவும் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். 2015 ஜனவரி 8 ஜனாதிபதி தேர்தலின் பின்னர் , 100 நாள் திட்டத்திற்காக மக்களிடம் பெறப்பட்ட ஆணையின் அடிப்படையில்  இலங்கை அரசாங்கம் தனது சொந்த யோசனைகளை சமர்ப்பித்ததுடன் ஐநா தீர்மானத்திற்கு இணை அணுசரனை வழங்கியது எனவும் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் இலங்கை அரசாங்கம் தனது சொந்த பிரச்சினைகளிற்கு தீர்வை காண்பதற்கான இறமையுடன் கூடிய உரிமையை வலியுறுத்தியது இதன் காரணமாக சர்வதேச சமூகம் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான சூழலை தடுத்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது இலங்கையில் உறுதியான  சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்கான திட்டம், தனது சொந்த மக்களின் பிரச்சினைகளிற்கு தீர்வை காண்பதற்கான பொறுப்பை ஏற்கும் நாடு என்ற இலங்கையின் கௌரவத்தை சர்வதேச அளவில் உறுதிப்படுத்துவதற்கான திட்டம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் எமது அரசாங்கத்தின் காலத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலம் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் காலத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தினை பயன்படுத்தி சர்வதேச நடவடிக்கைகளை எடுப்பதை தடுத்து நிறுத்தினோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். பொறுப்புள்ள இறமையுள்ள நாடு என்ற அடிப்படையில்  நாங்கள் செயற்பட தவறினால் ,ஏனையவர்கள் உள்நுழைவதற்கான சூழலை ஏற்படுத்துவதன் மூலமும் எங்கள் மக்களிற்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்துகின்றோம் என்பதை அனைவருக்கும் நினைவுபடுத்த விரும்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச நியாயதிக்கத்தையும் நாங்கள் கருத்தில்கொள்ளவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/67086  
    • கடஞ்சா, 1. வீடுகளில் வைத்து சட்ட விரோத செயற்பாடுகள் (கஞ்சா விற்றல்), வரி ஏய்க்கும் செயல் பாடுகள் (வியாபாரம்) என்பன செய்தல் இப்படி அனுமதியை வேண்டும் நிலைக்கு நீதிமன்றங்களைத் தள்ளுகின்றன. அந்த உதாரணங்களைத் தான் நீங்கள் உங்கள் பிரிட்டிஷ் நடைமுறையில் காட்டியிருக்கிறீர்கள். 2. மேலே சுட்டிக் காட்டியிருப்பது போல இலங்கையில் மத போதனைக்குத் தடை கிடையாது. இது ஒன்றும் கவனிக்காமல் விடப் பட்ட விடயமல்ல! 2004 இல் கடற்கோள் நிவாரணப் பணிக்கு உதவ வந்த  என்.ஜி.ஓக்களை கட்டுப் படுத்த உறுமயவும், சந்திரிக்காவின் அரசும் இரண்டு சட்டங்களை கொண்டு வந்து நிறைவேற்ற முற்பட்டன! இரண்டும் உள்ளூர், சர்வதேச எதிர்ப்பினால் கைவிடப்பட்டன! எனவே இது ஏற்கனவே சமூக மட்டத்தில் பரீட்சிக்கப் பட்ட சட்ட முயற்சி. இனியும் இப்படியான ஒரு சட்டத்திற்கு இது தான் நிலையாக இருக்கும்! 3. இவ்விடயத்தில் நீதிமன்றிற்குப் போய் ஒரு precedence உருவாக்குவது நல்ல விடயம்! அப்படிப் போனால், தனியார் வீட்டில் கட்டாயமாக அடைத்து வைக்கப் படாமல் மத போதனையைச் செய்வதை இலங்கையின் நீதிமன்றங்கள் தடுக்காது என்பது தான் என் நம்பிக்கை. கீழ் நிலை நீதிமன்றங்கள் அப்படித் தடை போட்டாலும்  உயர் நீதிமன்றம் இப்படியான சட்டத்தை அரசியலமைப்பு மீறலாகப் பார்க்கும் என்பது என் நம்பிக்கை மட்டுமே!   4. இந்த மதமாற்றத் தடைச் சட்டங்கள் பற்றிய என் இன்னொரு பிரச்சினை, இதை எப்படி வரையறை செய்வது என்பது தான்: ஒருவன் என்ன காரணத்திற்காக மதம் மாறலாம் என்று தீர்மானிக்கும் உரிமை அவனைத் தவிர வேறு யாருக்கும் இல்லை என்பது என் நிலைப்பாடு! இதில் அரசு சொல்ல சட்டம் விதிக்க ஒன்றும் இல்லை! அப்படியொரு நிலையை மதமாற்ற விடயத்தில் ஏற்படுத்தினால் வேறு பல விடயங்களில் அரசுக்கு தனிமனிதன் மீது அதிகாரத்தை வழங்கும் போக்கை நாம் ஏற்படுத்திக் கொடுக்கிறோம். இது government overreach இன் ஒரு போக்கு! மீண்டும்: சட்டத்தால் நெறிப்படுத்தப் படாத ஒன்றை தனியார் வீட்டில் நடத்த யாரின் அனுமதியும் தேவையில்லை! இதை உங்களுக்கு மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருக்க முடியாது! நீங்கள் தமிழையும் சமூகக் கல்வியையும் இன்னொரு முறை போய் படித்து விட்டு வருவது நல்லது!
    • இலங்கையில் மத போதனை செய்ய சட்ட ரீதியில் தடை உள்ளதா இல்லையா என்பதை பற்றி நான் கருத்து தெரிவித்திருக்கவில்லை. அனுமதி இல்லாமல் மதபோதனை செய்கிறார்கள், அனுமதி தேவை என்பது பற்றியே நான் எழுதியிருந்தேன். உங்களுக்கு தமிழ் சரியாக வாசித்து புரிந்து கொள்ள முடியாவிட்டால் அதற்கு நான் பொறுப்பல்ல.
    • மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்...