Archived

This topic is now archived and is closed to further replies.

தமிழரசு

மனிதனைத் தாக்கும் கம்ப்யூட்டர் வைரஸ்!

Recommended Posts

virus-1922013-150.jpg

உலகம் முழுவதும் பரவலாக கம்ப்யூட்டர்களில் வைரஸ் பரவுவதை கேட்டு இருக்கிறோம். ஆனால் அந்த கம்ப்யூட்டர் வைரஸ் மனிதனையும் தாக்கும் அபாயம் உள்ளது என்பதை கண்டறிந்துள்ளனர் விஞ்ஞானிகள். மார்க் காஸ்சன் என்ற விஞ்ஞானி ஒருவர் கம்ப்யூட்டர்களை தாக்கும் வைரஸ் மனிதர்களுக்கு வைக்கப்படும் மைக்ரோ-சிப்பையும் பாதிக்குமா என்பதை கண்டறிய முனைந்தார். அதனை உறுதி செய்யும் பொருட்டு தனது கையில் வானலை அடையாளம் (ரேடியோ ப்ரீகியுன்சி) சிப்பை தனது கையில் பொருத்திக் கொண்டார்.

  

வானலை அடையாள (ரேடியோ ப்ரீகியுன்சி) சிப் வெளி நாடுகளில் வீட்டில் வளர்க்கப்படும் நாய் மற்றும் பூனை போன்ற விலங்குகளுக்கு பிறந்த உடனே பொருத்தி விடுவர். இதன் சிப் மூலம் அதனை மீண்டும் கண்டு பிடிப்பது எளிது. மார்க் காஸ்சன் என்ற விஞ்ஞானி தனது கையில் பொருத்திய சிப்பில் கம்ப்யூட்டர் வைரஸ் பரவச் செய்தார். பின்னர் வைரஸ் பாதிப்புக்கு உள்ளான அந்த மைக்ரோ சிப் அதை தொடர்புகொள்ளும் கம்ப்யூட்டர்களையும் தாக்குகிறது என்பதையும் நிரூபித்துள்ளார். இன்றைய வாழ்வில் மனிதர்களுக்கு ஹார்ட் பீஸ்மகேர்ஸ் மற்றும் பிரைன் ஸ்டிமுலேசன் யூனிட் போன்ற கருவிகள் இந்த வைரஸால் பாதிக்கும் வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளார்.

 

எனவே மனிதர்களுக்கு பயன்படுத்தப்படும் சிப்கள் போதிய பாதுகாப்பு அம்சங்களுடன் இருக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால் மார்க் காஸ்சன் இந்த வைரஸ் அட்டாக் குறித்து கருத்து தெர்வித்துள்ள சோப்ஹோஸ் என்ற வைரஸ் சாப்ட்வேர் நிறுவனம், உடலுக்குள் வைக்கப்பட்டுள்ள மைக்ரோ சிப்பை படிப்பதற்கு ஆர் எப் ஐ டி ரீடர் வேண்டும் மேலும் அது எளிதான காரியம் இல்லை எனவும் தெரிவித்துள்ளது. ஆனால் மார்க் காஸ்சன், தனது ஆரய்ச்சி தொடரும் என்றும், நாம் போதிய எச்சரிக்கையுடன் இதுபோன்ற ஆர் எப் ஐ டி சிப்களை தயாரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=76368&category=WorldNews&language=tamil

Share this post


Link to post
Share on other sites

  • Topics

  • Posts

    • தமிழக உள்ளூர் அரசியலில் புகுந்து சீமானுக்கு சொம்பு தூக்குவதற்காக எமக்கு ஏற்கனவே பல காலம் ஆதரவு த‍ந்த பல நல்ல உள்ளங்களை திட்டி அவர்களுக்கு துரோகி பட்டம் கொடுப்பது ஈழத்தமிழர்கள் நன்றி உணர்வு அற்றவர்கள் என்ற செய்தியையே உலகத்திற்கு கொடுக்கும்.  1987 ல் இருந்து இந்திய இராணுவம் இலங்கையில் இருந்த போது அதை விமர்சித்து வைகோ தமிழகத்தில் செய்த பரப்புரை தமிழக மக்களுக்கு  பல உண்மைகளை கொண்டு போய் சேர்த்த‍து. ஜோர்ஜ் பெர்னா்டோவை ஈழபோராட்டத்திற்கு ஆதரவாகியதில்அன்று ராஜ்யசபை உறுப்பினராக இருந்த வைகோவுக்கு பெரும் பங்கு உண்டு என்பதை எவரும் மறக்கமுடியாது.   இரு முறை யுத்த காலத்தில் உயிரைப்பணயம் வைத்து  இலங்கை சென்று புலிகளின் பிரதிநிதிகளை அவர் சந்தித்திருந்தார். புலிகளை நேற்றும் ஆதரித்தேன், இன்றும் ஆதரிக்கிறேன். நாளையும் ஆதரிப்பேன் என்று நீதிமன்றத்திலேயே தெரிவித்திருந்தார். அப்படிப்பட்ட வைகோ இன்று சீமானுக்கு சொம்பு தூக்கும் சில  ஈழத்தமிழர்களின் பார்வையில் ஒரு துரோகி. யாழில் கூட வைகோவை பெட்டி கோபாலு என்று மீம்ஸ் போட்டு தமது அநாகரிகத்தை சிலர் காட்டிகொண்டனர். வைகோவின் உள்ளூர் அரசியலலின் சரி தவறுகளுக்கு அப்பால் அவர் எமது போராட்டத்திற்கு செய்த பங்களிப்பு மிக பெறுமதியானது.சீமானுக்கு  இன்று சொம்பு தூக்கும் ஈழதமிழர்கள் வைகோவின் கால் தூசிக்கு சம‍மானவகள்.   1999 ல் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 26 பேருக்கு தூக்கு என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த போது  கட்சி வேறுபாடுகளை கடந்து பலர் அந்த கைதிகளுக்கு உதவினர். இதற்காகவே ஒரு நிதியம் ஆரம்பிக்கபட்டு  மிக பிரபல்யமான வழக்கறிஞரான ராம் ஜெற்மலானி மூலம் அந்த வழக்கு  உச்ச நீதி மன்றத்திற்கு அப்பீல் செய்யபடுவதற்கு  தமிழத்தில் இருந்த பல ஈழதமிழரின் போராட்டத்தில் கரிசனை கொண்டிருந்த ஆர்வலர்கள்  காரணமாக இருந்தார்கள்.  இதற்காக அன்றைய தமிழ் வானொலிகளில் எத்தனை  தமிழக ஆர்வலர்கள் அடிக்கடி தமது ஆதரவுகருத்துகளை பகிர்ந்தனர். அவர்களின் அந்த முயற்சியால்  அந்த 26 பேரில் 19 பேர் உச்ச நீதி மன்றதால் விடுதலை செய்யப்பட்டனர். அதற்கு   துணை நின்ற  அனைவைருமே இன்று  நன்றி கெட்ட புலம்பெயர் முன்னாள்களால் துரோகிகளாக பட்டம் கொடுக்கபட்டுள்ளார்கள். ஒரே காரணம் இன்று அவர்கள் சீமானுடன் இல்லை என்பதற்காக.  1991 ன் பின்னரான  தடா /பொடா சட்டங்கள் மூலம் தமிழகத்தில் ஈழ ஆதரவு இறுக்கமாக தடை செய்யபட்ட காலத்தில் அதை மீறி  தமது உணர்வு காரணமாக ஈழத்திமிழரு போராட்டங்களை நடத்தி சிறை சென்ற  பலர் சீமான் என்ற ஒரு தனி நபருக்காக துரோகிபட்டம் கொடுக்கபட்டுள்ளார்கள்.  தமிழக அரசியல் என்பது அவர்களுக்கானது அவர்களுக்குள் ஆயிரம் முரண் இருக்கும்.அதில் சரி இருக்கும் தவறு இருக்கும்  அதில் தலையிட்டு துரோகிப ட்டம் கொடுப்பது எவ்வளவு அநாகரிகமானது என்பது இவர்களுக்கு தெரியவில்லை. அவ்வாறு பட்டம் கொடுக்க சீமானை ஆதரிக்கும்(அவர்களின் பாசையில் சொம்பு தூக்கும்)ஈழத்தமிழருக்கு என்ன தகுதி உள்ளது என்பதை அவர்கள் எண்ணிப்பார்ப்பதில்லை.   யுத்தம் நடந்த காலப்பகுதியில் தமிழகத்தில் இருந்து பல காலமாக எமக்கு ஆதரவளித்த உணர்வாளர்களுக்கும் அங்கு அவர்களது நாட்டு அரசியல் என்று உள்ளது.  அதில் அவர்கள் ஒவ்வொருவரதும் கருத்துக்கள. மாறுபடலாம். அவர்கள் நாட்டு அரசியலில்  திமுகவை ஆதரிக்கலாம் அல்லது அதிமுகவை ஆதரிக்கலாம். அல்லது ஏன் காங்கிரசை பாஜகவை கூட ஆதரிக்கலாம். அதில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை. அதறகாக அவர்கள் எமக்கு செயத பல  உதவிகளை மறந்து  துரோகிபட்டம் கொடுக்கும் இந்த நன்றி கெட்ட  கூட்டம் அதன் மூலம் தாயகத்தில் வாழும் மக்களுக்கு  எந்த நன்மையும் செய்யப்போவதில்லை.   நல்ல காலம் தாயகத்தில் வாழும் மக்கள் இந்த விடயத்தில் மிகவும் தெளிவாக உள்ளனர்.     
    • உலக ஊடகங்கள் ஒரு 6 நிறுவனக்களிடம் அகப்பட்டு சிதைந்து வருகிறது.  ஓரு நல்ல மக்களாட்சிக்கு தேவை சுதந்திர ஊடகங்கள்.  சுய சிந்தனை உள்ள சுதந்திர   பத்திரிகையாளரின் தொழில் ஆபத்தான தொழிலாக இந்த காலத்தில் உள்ளது.  மாற்று ஊடகங்கள் இருந்தாலும் மக்கள் விட்டில் பூச்சிகள் போல் பெரிய செட் போட்டு பின்னுக்கு குழந்தை விளையாட்டு கிராபிக்ஸ் போட்டால் தான் கவனிப்பார்கள். Even Vijay TV is owned by Fox!
    • என்ன செய்யிறது, இதுவும் கடந்து போகும் , போராடடத்தை மல்லினபடுத்துவர்க்கு  இந்தியாவின்  சவுத் புளொக் ஆடும் நாடகம், இதை விளங்கிக்கொள்ளாமல் எம்மவர்களும்   
    • அதை தான் நான் குறிப்பிட்டேன். ஒரு புறம் பாரிய அர்பணிப்போடும் திறமையான யுத்த தந்திரங்களுடனும் வீரத்துடனும்   புலிககளின் தளபதிகள, போராளிகள்  போரிட்டு ஏற்படுத்திய வலு சமநிலையை ஏற்படுத்த  புலிகளின் அரசியல் துறை என்பது   சர்வதேச அரசியலை மிக மோசமாக கையாண்டது. மேற்குலகில் நட்பு சக்திகளை கட்டி எழுப்ப எந்த நடவடிக்கைகளும் எடுக்க வில்லை. காப்பாற்றகூடிய சக்திகொண்ட ராஜ தந்திரியான அன்ரன் பாலசிங்கத்தை இழந்த‍து புலிகளுக்கு பேரிழப்பு என்றே கூறவேண்டும்.  இறுதி போரின் தோல்விக்கும் பேரழிவுகும் இது பாரிய காரணமாக இருந்த‍து.  இறுதி கட்ட‍த்தில் இந்தியாவை கையாள ராஜிவ் கொலை தொடர்பான சில கருத்துகளை திரு அன்ரன் பாலசிங்கம் தெரிவித்த‍தை புலிகள் அங்கீகரிக்கவில்லை.