Jump to content

பண்பில்லா நகரம்


Recommended Posts

அடிப்படை பண்பில்லா நகரம் என்றால் அது மும்பை தானாம். ஆம், உலக நாடுகளில் 35 நகரங்களின் வரிசையில் இதற்காக "முதல் பரிசை' பெற்றுள்ளது.

சாலையில் போகும் போது கண் தெரியாத ஒருவர் போகிறார், நமக்கென்ன என்று போகாமல், அவரை சாலையின் குறுக்கே கடக்க உதவுவது, ஒருவர் காயம் பட்டால், குறைந்த பட்சம் பைக்கை அப்புறப்படுத்துவது, இதெல்லாம் தான் பண்பு. மனிதாபிமானம், கருணை, இரக்கம் எல்லாம் சேர்ந்தது தானே பண்பு. அடிப்படை பண்புகள் என்று சில உண்டு. அந்த பண்புகள் இருந்தால் தான் மனிதன். அப்படிப்பட்ட பண்பு மிக்க மனிதர்கள் அதிகம் இல்லாத நகரங்கள் என்று 35 நகரங்களை தொகுத்துள்ளது ரீடர்ஸ் டைஜஸ்ட் இதழ். மிக மோசமான விஷயங்களுக்காக தரப்படும் "ராஸ்ப்பெரி விருது' இப்போது, பண்பில்லா நகரங்களுக்கு தந்துள்ளது இந்த இதழ்.

இதற்காக பல நாடுகளில் உள்ள 35 நகரங்கள், சர்வேக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

ஆபீஸ், ஓட்டல், மருத்துவமனை போன்ற இடங்களில் தன் பின்னால் ஒருவர் வருகிறார் என்றவுடன், கதவை பிடித்துக்கொண்டு வழிவிடுவது, பேப்பர் கட்டு, பைல்கள் விழுந்துவிட்டால், அவற்றை சேகரிக்க உதவுவது, எந்த பொருள் வாங்கினாலும், பில் பணம் செலுத்தியவுடன் நன்றி சொல்வது என்று மூன்று முக்கிய பண்புகளை வைத்து சர்வே செய்யப்பட்டது.

மும்பையில் அப்படிப்பட்ட மூன்று பண்புகளிலும் பல இடங்களிலும் பல தரப்பினரும் மிக குறைவாகவே மதிப்பெண் வாங்கியுள்ளனர். எங்கும் இப்படிப்பட்ட அடிப்படை பண்பு காணப்படவில்லை என்கிறார்கள் இந்த சர்வே எடுத்தவர்கள்.

ஆனாலும், ஐரோப்பிய கூட்டமைப்பில் சேர்ந்து ஏழு மாதங்களே ஆன ருமேனியா நாட்டின் தலைநகர் புகாரெஸ்ட் நகரை விட, மிக மோசமாக இல்லை என்பது தான் மும்பைக்கு கிடைத்த ஆறுதல்.

மும்பையை போலவே, லண்டன், பாரீஸ் மக்களுக்கும் பண் பில்லை என்பதையும் சர்வே எடுத்தவர்கள் கண்டுபிடித்து விமர்சித் துள்ளனர். பதினெட்டு ஐரோப்பிய நகரங்களில் எடுக்கப்பட்ட சர்வேயில், இரண்டு நகரங்களுமே பத்தாவது இடத்தை பகிர்ந்து கொண் டுள்ளன. அமெரிக்காவின் நியூயார்க் நகரம், மிகுந்த பெருமிதத்தை அடைந்துள்ள நகரம். ஆம், அங்கு பண்பு, கருணை என்பது 80 சதவீதம் மக்களிடம் நிறைந்துள்ளது என்று சர்வே கூறுகிறது. கடந்த 2001ம் ஆண்டு நடந்த பயங்கர குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு பின்னர், மக்களிடம் அக்கறை, பரிவு, கருணை எல்லாம் அதிகரித்து விட்டது என்கின்றனர் சர்வே நிபுணர்கள்.

இதையடுத்து, சுவிட்சர்லாந்தின் ஜூரிச், கனடாவின் டொரன்டோ, பிரேசிலின் சுவா பாலோ, ஜெர்மனியின் பெர்லின் ஆகிய நகரங்கள் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Thanks:Dinamalar..

Link to comment
Share on other sites

மும்பையை போலவே, லண்டன், பாரீஸ் மக்களுக்கும் பண்பில்லை என்பதையும் சர்வே எடுத்தவர்கள் கண்டுபிடித்து விமர்சித்துள்ளனர்.

லண்டனில் பண்பு என்பது இல்லை என்பதிலும் மிகக் குறைவு எனபதே சரி. வீதியில் ஒருவர் விபத்தில் சிக்கி உயிருக்காக போராடும் போதும் கூட வீதி ஒழுங்குகளைக் கவனிக்காது வாகனங்களைச் செலுத்துவது முதல்...அனைத்திலும் மனிதாபிமானமற்ற செயற்பாடுகள்..அவதானிக்கப்படு

Link to comment
Share on other sites

இதையடுத்து, சுவிட்சர்லாந்தின் ஜூரிச்

இதை சி*5 பார்த்தாரா???

Link to comment
Share on other sites

முதலாவதாக இருந்த ரொன்றோவிற்கு என்ன ஆச்சு?

தகவலுக்கு நன்றி சுண்டல்.

Link to comment
Share on other sites

முதலாவதாக இருந்த ரொன்றோவிற்கு என்ன ஆச்சு?
:P :P :P :P

சுண்டல் எங்கை இப்படி தகவல் எல்லாம் சுடுறியள். எனிவே நன்றி இணைப்புக்கு :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:P :P :P :P

சுண்டல் எங்கை இப்படி தகவல் எல்லாம் சுடுறியள்

தினமலர் என்று சுண்டல் குறிப்பட்டதினைப் பார்க்கவில்லையா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலாவதாக இருந்த ரொன்றோவிற்கு என்ன ஆச்சு?

தகவலுக்கு நன்றி சுண்டல்.

நீங்கள் போனபின்பு பின்னுக்குப்போய் விட்டது

Link to comment
Share on other sites

நீங்கள் போனபின்பு பின்னுக்குப்போய் விட்டது

:(:D:(:(

Link to comment
Share on other sites

:(:D:(:(

நல்ல காலம் நீங்கள் இருவரும் வந்திருந்தால் மும்பாய்க்கு அடுத்தாக போயிருக்கும். தப்பியது ரொன்றோ. :(:(

Link to comment
Share on other sites

யாருக்காவது இந்த சேர்வே செய்த கம்பனியின் இணைப்பு தெரியுமா?

Link to comment
Share on other sites

www.rd.com

உங்கள் பதில் கருத்து மிகச்சுருக்கமாக உள்ளது. தயவு செய்து 1 வரியிற்கு கூடியதாக உங்கள் கருத்தினை எழுதுங்கள்

Link to comment
Share on other sites

New York USA 80%

Zurich Switzerland 77

Toronto Canada 70

Berlin Germany 68

São Paulo Brazil 68

Zagreb Croatia 68

Auckland New Zealand 67

Warsaw Poland 67

Mexico City Mexico 65

Stockholm Sweden 63

Budapest Hungary 60

Madrid Spain 60

Prague Czech Republic 60

Vienna Austria 60

Buenos Aires Argentina 57

Johannesburg South Africa 57

Lisbon Portugal 57

London United Kingdom 57

Paris France 57

Amsterdam Netherlands 52

Helsinki Finland 48

Manila Philippines 48

Milan Italy 47

SydneyAustralia 47(கந்தப்பு இருக்கும் இடம் :(:D )

Bangkok Thailand 45

Hong Kong 45

Ljubljana Slovenia 45

Jakarta Indonesia 43

Taipei Taiwan 43

Moscow Russia 42

Singapore 42

Seoul South Korea 40

Kuala Lumpur Malaysia 37

Bucharest Romania 35

Mumbai India 32

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

SydneyAustralia 47(கந்தப்பு இருக்கும் இடம் :):lol: )

இதற்கு நான் காரணமல்ல புத்தன், தூயா, சுண்டலும் காரணங்களாக இருக்கக்கூடும்

Link to comment
Share on other sites

ச்சா இந்த கந்தப்புவால் தான் இப்படி கடசிக்குள்ள இருக்கிறம்....இவர் இங்கு வர முதல் பண்பில்லா நகரங்களில் முதலாவதாக சிட்னி இருந்தது...எவ்வளவு கஸ்டபட்டம்... என்டைக்கு கந்தப்பு வந்தாரோ அதில் இருந்து சிட்னி திருந்த ஆரம்பிச்சிட்டுது...

Link to comment
Share on other sites

எங்கட தமிழீழ தலைநகர் திருகோணமலையில ஆய்வு செய்யேல்லயா :evil:

Link to comment
Share on other sites

ஹை குருவிகள்..!!!.

லண்டனில அப்படித்தான் இருக்கும் ஏனென்டா எல்லா நாட்டு தலைநகரங்களிலும் வெளிநாட்டவர்கள் தான் அதிகம் இருப்பார்கள். அத்துடன் தலைநகரங்களில் அனேகமாக வசிப்பவர்களுக்கு பொருளாதாரதேவைகள் அதிகம். அதோடு குற்றங்கள் கூடியவையும் ஆக நெருக்கடி மிகுந்த இடங்களுமானதால் அனேகமானவர்களுக்கு குறையவோ கூடவோ மனஉழைச்சல் பிரச்சனைகள் இருக்கும்.

அதேபோல் லண்டன் நகரிலும் அதிகம்இருக்கிறது... நீங்கள் சாலையோரம் ஒருவரை நிறுத்தி ஓர் இடத்திற்குசெல்லும் வழிகேட்பதே மிகக் கஸ்டம்..ஏனென்றால் எல்லாரும் அவ்வளவு பிஸி...

அதனால் இப்படியான கருத்துக் கணிப்பு எடுக்கவேண்டுமானால் எப்பவும் ஒரு நாட்டில் பலவிதமான இடங்களுக்கு போய் கருத்து எடுத்தால் ஓரளவுக்கு அந்த நாட்டுமக்கள் எப்படி என்று ஒரு கருத்துப்பாட்டுக்கு வரலாம்..

யு.கே பொடியன் இருப்பது பேமிங்ஹாமில் ...வந்துபாருங்கள் இங்கு ஒருமுறை... மக்கள் மிகவும் சினேகமானவர்கள்... நான்கூட லண்டனில் பத்துவருடங்கள் வாழ்ந்திருந்தாலும் இனிஅங்கு போய் இருப்பதை எண்ணிப்பார்க்க கூடவிரும்பவில்லை...ஏனென்றால் அங்கு எல்லாமிருந்தும் அமைதி இல்லை...

நன்றி

யுகே பொடியன்

Link to comment
Share on other sites

அங்கை ஆய்வு செய்யப்போறவைக்கு யாரும் கிளேமோர் வச்சால் பிரச்சனையாயிடும் நித்திலா...

கொஞ்சம் பொறுங்கோ தமிழீழம் கிடைக்கட்டும்

Link to comment
Share on other sites

பொடியா இந்த கருத்துக்கணிப்பு நகரங்களைப் பற்றியது. நாட்டைப்பற்றியதல்ல.

(என்னை விட வயதில் கூடவோ தெரியாது உங்கட பேர் தான் அப்பிடி பொடியா என்று கூப்பிட வைக்குது.)

Link to comment
Share on other sites

ÍÀ¢ò¾¢Ãý... ¿¸Ãí¸¨Ç ÁðΧÁ ¨ÅòÐ ±Îì¸ôÀÎõ ¸ÕòÐ츽¢ôÒ¸û «ó¾ó¾ ¿¡ð¨¼ÔÁøÄÅ¡ À¡¾¢ì¸¢ÈÐ..

«¾¡É¡Ä þó¾ ¿¸Ãì ¸ÕòÐ츽¢ôÒ ´Õ §¾¨Å¢øÄ¡¾ §Å¨Ä...

;-)

Link to comment
Share on other sites

சரியான தகவல் தான். பண்பில்லாத தமிழரை பார்க்க வேண்டும் என்றால் அதுவும் லண்டனில் தான்.

மற்றைய ஜரோப்பிய நகரத் தமிழர்களை ஒப்பிடும்போது லண்டன் தமிழர்கள் தான் பண்பாடில்லாதவர்கள்

Link to comment
Share on other sites

சரி கரவெட்டி எத்தனையாவது இடம் என்று சொன்னார்களா? :P :P :P :P

தம்பி வினித் உங்கடை நகரத்தை சர்வே செய்ய வந்தவர்கள் கறவை இளவரசியை கேள்விப்பட்டவுடன் உங்கடை நகரம்தான் ஒழுக்கம் பண்பு நிறைந்தது என்று போய்விட்டார்களாம்.

காதுக்குள்ளை ஒரு கேள்வி மகேசுவை இப்ப ஆர் வைச்சிருக்கினம் :?: :?: :?: :?:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 1988 இல் இருந்து 1997 (என நினைக்கிறேன்) நடைமுறையில் இருந்த இலங்கை தமிழ் இலக்கியம் தரம் 10, 11 பாட நூலில் “சிரிக்க தெரிந்த பாரசீகன்” என்று ஒரு கட்டுரை இருந்தது. நல்ல ஜோக்குகள் பல அதில் கையாளப்பட்டிருந்தது. அதில் (நினைவில் இருந்து) ஒரு ஜோக்: அரசவையில் ஒருவன் பொய்யாக தன்னை இறைதூதன் என கூறிய வழக்கை விசாரிக்கிறார் கலிபா. கலிபா: உனக்குத் தெரியுமா, பொய்யாக தம்மை இறைவனால் அனுப்பபட்ட தூதர் என கூறி மக்களை ஏமாற்றிய பலரை நான் கடும் சித்திரவதையுடன் கூடிய மரண தண்டணைக்கு ஆளாக்கியுள்ளேன்! குற்றம் சாட்டபட்டவர்: ஓ….கலிபா! நன்றே செய்தாய்….. நான் எவரையும் அவ்வாறு அனுப்பவில்லை!!!
    • விடுமுறைகள் தொடங்க போகுது. நம்மவர்கள் கூடுதலாக மத்திய கிழக்கூடாகவே பயணிக்கிறார்கள். ஆனபடியால் சட்டுபுட்டென்று அலுவல்களை முடியுங்கோ.
    • சிறிதோ பெரிதோ தவறு தவறு தானே அண்ணா.  இவர்கள் பலமுறை செய்து ருசிப்பட்டவர்களாக இருக்க வாய்ப்புண்டு. ஆனால் ஏழை எளிய மக்களாக இருந்து அமெரிக்க படிப்புக்கு முயற்சித்து அதன் அழுத்தம் காரணமாக இவ்வாறு நடந்திருந்தால் இவர்களுக்காக நானும் இரங்குகிறேன்.
    • இஸ்ரேல் இரானுக்குள் (நின்று, அதன் முகவர்களை பாவித்து) தாக்குதல் செய்தது போல தோன்றுகிறது. இப்படி செய்வதற்கு இஸ்ரேல்   இரு கூட்டங்களை பாவிக்கிறது. ஒன்று, ஈரானில் இருந்து இஸ்ரேலுக்கு வந்த  யூதர்களால். இவர்களால் ஈரானியர்களாகவே (Persian) இரானுக்குள் புழங்க முடியும்.  ஈரானின் இப்போதும் யூதர்கள் இருக்கிறார்கள், அனால், முன்பை விட மிக குறைவு. மற்றது, ஈரானில் கொடூர ஆட்சி ஷா வுக்கு, மொசாட், Savak எனும் கொடூர (இரகசிய) போலீசை உருவாக்கி கொடுத்தது.   உண்மையில், Savak ஐ உருவாக்கி தருமாறு ஷா கேட்டது CIA இடம். ஏனெனில், CIA தான், பிரித்தானியரின் வேண்டுதலில் , 1953 இல்  ஈரானின் உண்மையான சனநாயக   அரசை கவிட்டு, Sha ஐ ஆட்சிக்கு கொண்டுவந்தது. இந்த  ஈரானின் உண்மையான சனநாயக ஆட்சி 1953 இல்  கவிழ்த்தலின் முக்கிய காரணம், அன்றைய உண்மையான சனநாயக ஈரானிய அரசாங்கம் எண்ணெய் வளத்தை, கம்பனியை தேசியமயப்படுத்தியது, அதில் பிரித்தானியரின் BP தேசியமயப்படுத்தப்பட்டது. CIA அதன் குளிர் யுத்தத்தை வேலைப்பளுவால்,  Savak ஐ பயிற்சி அளித்து உருவாகுவதை Mosad இடம் அளித்தது. Mosad கொடூர Savak ஐ உருவாக்கியது. ஷா, Savak  இன் மிக கொடுமையான ஆட்சியை எதிர்க்க ஈரான் மண்ணில் அதுவாக பிறந்ததே இந்த முல்லாக்கள். முல்லாக்கள் ஆட்சியை பிடித்து, அகப்பட்ட Savak எல்லோரையும் (கொடூரமாக) கொன்றது, அனால், ஈரான் பெரும்பான்மை மக்கள் அதை வரவேற்றனர் அல்லது நிம்மதி அடைந்தனர். (முல்லாக்களுக்கும், ஈரான் மக்களுக்கும் உள்ள உறவு மேற்கால் சொல்லப்படுவது போல ஒரே வெறுப்பு அல்ல. சிலவற்றை எதிர்க்கிறாரக்ள் , சிலவற்றை வரவேற்றுகிறாரக்ள், முக்கியாக, அணுத்துறை, தொழில்நுட்ப வளர்ச்சி, இராணுவ வளர்ச்சி, குறிப்பாக அமெரிக்கா எதிர்ப்பு போன்றவை. மேற்கின் பிரச்சனை, மசகு, படிம எண்ணை, வாயு  நழுவி, மசகு, படிம எண்ணெய், வாயுவில் தவழ்ந்து மசகு, படிம எண்ணெய், வாயுவில் விழும்  ஈரானில், மேற்கிற்கு  ஒத்து ஊதக்கூடிய ஆட்சி இல்லாதது, ஈரானின் மக்கள் பற்றி முதலை கண்ணீர்  வடிக்கிறது).  முல்லாக்கள் கொன்று  எஞ்சிய Savak இன் எச்சம், சொச்சத்தை, Mosad தத்தெடுத்து பேணி வருகிறது, இரானுக்குள் இருந்து ஆட்தேர்வும் செய்கிறது, தாக்குதலுக்கு பாவிக்கிறது.  (சிறு குறிப்பு: இப்போதைய யூதர், தம்மை யூதர் என்று அழைக்கத்தொடங்கியது, சைரஸ் கிமு 500-550 களில் அவர்களை (யூதரை) (இப்போதைய ஈரானில்) அடிமை சிறைவாசத்தில் இருந்து  விடுவித்து, விடுவிக்கப்பட்டவர்கள் Judea வந்ததினால் என்று அவர்களே சொல்கிறார்கள். அதன் முதல் (யூதர்கள்) இஸ்ரேல் இன் புதல்வர்கள் என்றே அழைக்கப்பட்டார்கள். இங்கு இஸ்ரேல் என்பது, ஆபிரகாமின் பேரன் Jacob, இஸ்ரேல் (இராச்சியம் அல்ல) என்று பெயர் மாற்றப்பட்டவர் (கடவுளினால் என்கிறது விவிலியம்), அதுக்கும் முதல், Canaan (இப்போதைய இஸ்ரேல், பலஸ்தீன், பகுதி ஜோர்டான், சிரியா)  ஐ பிடிக்கும் வரையிலும் ஆபிரகாம் ஐயும் உள்ளடக்கி Hebrew என்ற அடையாளம் என்கிறது (Hebrew) விவிலியம். ).  (இன்னொரு வளமாக, திராவிடர் என்ற கூட்டமும், இப்போதைய ஈரானின் சாகிறோஸ் மலைப்பகுதியில் இருந்து வந்த, ஒழுங்குபடுத்தப்பட்ட விவசாயத்தை வாழ்வாதரமாக கொண்ட மக்கள் கூட்டம் என்பதற்கு விஞ்ஞான  ஆதாரங்கள் பெருகி வருகிறது. இதில் ஒரு பகுதியை சிறீனிவாச ஐயங்கார், 1920 களில் சொல்லி இருந்தார்.)
    • போட்டியில் இணைந்துகொண்ட @கறுப்பிக்கும் @Eppothum Thamizhan க்கும் வெற்றிக்கனியைப் பறிக்க வாழ்த்துக்கள்! @கறுப்பி 17 கேள்விக்கு பதிலைத் தாருங்கள்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.