Jump to content

சென்னையில் காங்கிரஸ் அலுவலகம் முற்றுகை: மே 17 இயக்கத்தினர் கைது


Recommended Posts

இலங்கையில் இறுதிக்கட்டப் போரின் போது நடைபெற்ற போர்க்குற்றங்களுக்கு பொறுப்பேற்க வலியுறுத்தி, சென்னையில் காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்யமூர்த்தி பவனை முற்றுகையிட முயன்ற மே 17 இயக்கத்தினர் கைது செய்யப்பட்டனர்.

 

may-17a.png

 

 

இலங்கையில் இறுதிக்கட்டப் போர் நடைபெற்ற போது, வெளியுறவு அமைச்சராக இருந்த பிரணப் முகர்ஜியும், பிரதமர் மன்மோகன் சிங்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.


இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களுக்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி, தேசிய பாதுகப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன், வெளியுறவு செயலாளர் சிவசங்கர் மேனன் ஆகியோர் துணை போனதாகவும் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.

 

http://puthiyathalaimurai.tv/seized-congress-office-in-chennai

Link to comment
Share on other sites

காங்கிரஸ் கட்சியே தமிழகத்தை விட்டு வெளியேறு

 

sar.jpg



புதிதாக தமிழகத்தில் கிளம்பியுள்ள அலை திமுக – காங்கிரஸ் கூட்டணியை தமிழகத்தில் ஓர் இடத்தில் கூட வெற்றிபெற முடியாதளவுக்கு தூக்கி வீசப்போவது தெரிகிறது.

அதற்குள் அதிரடியான மாற்றத்தை ஏற்படுத்தி, ஈழத் தமிழ் மக்களின் பக்கமாக காங்கிரஸ் யூ ரேண் எடுக்காவிட்டால் வரும் தேர்தலில் மத்தியில் ஆட்சியை வைத்திருப்பது சோனியாவால் இயலாமல் போகலாம்.


கடந்த தடவை ஜெனீவாவில் சிறீலங்கா அரசுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட சர்வதேச பிரேரணையை கிழித்தெறிந்தவர் இந்திய பிரதிநிதி கோபி குமார் என்பவரே.

 

அதன் பின்னர் இந்தியா எழுதிக் கொடுத்த கண்துடைப்பு அறிக்கையே மனித உரிமைக் கவுண்சில் வந்தது.
இதற்கெல்லாம் காரணம் சோனியா அரசுதான் என்ற பார்வை தமிழகத்தில் கிளம்பியுள்ளது.

 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் ராஜா காணொளியை பார்த்து வடித்த கண்ணீர் டெல்லியில் இருக்கும் இந்திய அசோகச் சக்கரத்தின் சகதியை கழுவ முடியாது கரைந்த காட்சியையும் காண முடிந்தது.

 

போருக்கு முன் நான்கு வருடங்களும் போருக்கு பின் நான்கு வருடங்களும் சிங்கள இனவாத அரசுடன் இணைந்து மன்மோகன் சிங் அரசு சதி செய்ததாக குறை கூறியுள்ளனர்.


http://www.alaikal.com/news/?p=123002

Link to comment
Share on other sites

சோனியா தமிழகத்தைக் கைவிட்டு ரொம்ப நாளாச்சு.. எந்தக்கட்சியாவது வெற்றி பெறட்டும்.. பதவியை விட்டெறிஞ்சு கூட்டணியில் இணைத்துக் கொள்ளலாம் என்பதுதான் திட்டம்..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.