Jump to content

கார் வாங்கப் போறம் - நாடகம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்


முகத்தார் வீடு நாடகம் வாசித்ததில் இருந்து நானும் ஒன்று எழுத வேண்டும் என்று எண்ணினேன். அதுதான்...........

 

 


சாத்தர் : முனியம்மா, முனியம்மா 

முனியம்மா : என்ன இழவுக்கு இப்பிடிக் கத்திறியள். எத்தின தரம் சொல்லிப் போட்டன் முனியம்மா எண்டு கூப்பிட வேண்டாம் எண்டு. நான் மினி எண்டு என்ர பேரை மாத்தி எவ்வளவு நாளாச்சு. 

சாத்தர் : நீ என்ன தான் மாத்தினாலும் எனக்கு நீ முனிதான். இன்னும் நீ வெளிக்கிடேல்லையே ?
 
முனியம்மா  : பொறுங்கோ வாறன் கொஞ்சம் வடிவா வெளிக்கிட்டுக் கொண்டு வரவேண்டாமே.

சாத்தர் : அதுசரி. என்ன கலியாணத்துக்கே போறம். கார் வாங்கப் போறமப்பா.

முனியம்மா : கொஞ்சம் வடிவா வெளிக்கிட்டுப் போனால் என்னைப் பாத்திட்டாவது காசைக் கொஞ்சம் குறைச்சுசொல்லுவான்.

சாத்தர்: நீ அடிச்சிருக்கிற லிப்ச்டிக்கைப் பாத்திட்டு அவன் கூடச் சொல்லப்போறன். 

முனியம்மா  : உங்களுக்கு எப்பவும் பகிடிதான். 

சாத்தர்: மனதுக்குள் ( உண்மையச் சொன்னாலும் பகிடியா நினைக்கிறியே ) நான் உன்னோட பகிடி விடாம ஆரோட விடுறது.

முனியம்மா  : சரி அப்பா முதல்ல எந்தக் கடைக்குப் போவம்.

சாத்தர்: என்ன நீ எதோ உடுப்புக் கடைக்குப் போற மாதிரிக் கேட்கிறாய். இது காரப்பா கார்.

முனியம்மா  : உடுப்பே நாலுகடை ஏறி இறங்கி வாங்கிறம். காரை இன்னும் எத்தினை கடை ஏறி இறங்கி வாங்.கவேணும்

சாத்தர்: என்னதான் ஏறியிறங்கி வாங்கினாலும் கடைசியில எனக்கு வந்த கதிதானே அதுக்கும்.

முனியம்மா : என்னப்பா முணுமுணுக்கிறியள். கொஞ்சம் பிலத்துச் சொல்லுங்கோ.

சாத்தர்: ஒண்டுமில்லையப்பா சும்மா என்னுக்குள்ள கதைச்சனான்.

முனியம்மா : வரவர நீங்கள் உங்களுக்குள்ளயே தனியக் கதைக்கிறியள். ஒருக்கா டாக்டர் இட்டை உங்களைக் கூட்டிக் கொண்டு போக வேணும்.

முனியம்மா காருக்குள் ஏறி கதவை அடித்துச் சாற்றுகிறார்.

சாத்தர்: மெதுவாச் சாத்தப்பா. நீ அடிக்கிற அடியில கார் கதவு களரப் போகுது.

முனியம்மா : அடிச்சுச் சாத்தினால்தான் நான் விழாமல் இருக்கலாம். எப்ப கதவு திறக்கும் எப்ப டிக்கி திறக்கும் எண்டு உங்களுக்கே தெரியாது. எதுக்கும் வடிவாக் காரை ஓடுங்கோ.

சாத்தர்: நீ சத்தம் போடாமல் வந்தாலே கார் ஒழுங்காப் போகும். வாய் திறக்காமல் வா.

முனியம்மா : எந்த இடத்துக்குப் போறியள்  எண்டு சொல்லுங்கோ. அந்த இடம்  வரும் வரை நான் கதைக்கேல்லை.

சாத்தர் : அதுதான் லண்டனிலேயே பெரிய கார் கொம்பனி. வயிற் சிற்றியில  இருக்கிறது.

முனியம்மா  : அதோ அப்பா! இண்டைக்குத் தான் நீங்கள் உருப்படியா ஒண்டு செய்யிறியள். 

சாத்தர்: உனக்கேத்ததெண்டா உந்த வசனத்தை எத்தினை தரம் எண்டாலும் சொல்லுவாய்.

முனியம்மா  : தேவையில்லாமல் கதைக்காமல் ரோட்டைப் பாத்துக் காரை ஓட்டுங்கோ.

சாத்தர்: இந்தக் காருக்கு என்னப்பா குறை. அஞ்சு வருசமா வச்சிருக்கன்.

முனியம்மா  : நீங்கள் அஞ்சு வருசமா வச்சிருக்கிரியள். கார் பத்து வரிசப் பழசு.

சாத்தர்: நீயும்தான் பத்துவரியப் பழசு. அதுக்காக நான் மாத்திப் போட்டனே? கார் ரோட்டில ஓடுதுதானே. பிறகென்ன??

முனியம்மா  : நானும் காரும் உங்களுக்கு ஒண்டாப் போட்டமே ஆ..... ஓடுதுதான்.  உதிலும் பாக்க சிலோனில இருந்து ஒரு மாட்டு வண்டில்
வாங்கிக்கொண்டு வந்து ஓட்டியிருக்கலாம். வாறவன் போறவன் எல்லாம் ஓவடேக் செய்துகொண்டு போறாங்கள்.


சாத்தர்: இப்ப உன்ர அரியண்டத்தாலதான் வேற கார் எடுக்க ஓமெண்டனான்.எனக்கு இந்தக் கார் காணும்.

முனியம்மா : அவளவள் கோவிலுக்கு பென்சிலையும், BMW விலையும் வந்திறங்க, நான் மட்டும் இந்த டப்பாக் கார்ல போறனான்.

சாத்தர்: எந்தக் கார்ல போனா என்ன உனக்கு அவை வீட்டுச் சாப்பாடே. ஒழுங்கா உழைச்சு உந்தக் காருகள் ஓடுறவை குறைவு. கள்ளக்காட் போடுறவனும், கவுன்சில் க்ளைமில இருக்கிறவங்களும் தான் சும்மா வாற காசைச் சேத்துவச்சு உப்பிடியான காறுகள் வாங்கிறது .

முனியம்மா : கள்ளக்காட் போடவும் துணிவு வேணுமெல்லோ.

சாத்தர்: என்னை உள்ள தள்ளிறதிலேயே குறியா இரு. நல்லதுக்கு இப்ப காலமில்லை.

முனியம்மா : என்னும் எவ்வளவு நேரமப்பா???

சாத்தர்: வந்திட்டம் இன்னும் நாலு மைல் தான். 
 

 

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
 

 

முனியம்மா:  ஐயோ இவ்வளவு காருகள் நிக்கிது.

சாத்தர்: எடி எடி ஆத்தா, காரைப் பாக் பண்ணின பிறகு இறங்கு. பிறகு உன்னை வேணுமெண்டு கொலை செய்யப் பாத்ததெண்டு நான்தான் உள்ளுக்குப் போகவேண்டி வரும்.

முனியம்மா : கெதியா வாங்கோப்பா.

சாத்தர்: அவசரப்பட்டு ஓடி என்ன செய்யப் போறாய்? ஆறுதலா ஒவ்வொண்டாப் பாப்பம்.

முனியம்மா : இன்சரப்பா இது நல்ல வடிவா இருக்கப்பா. இதை எடுப்பமே?

சாத்தர்: உது நாலாயிரம் போட்டிருக்கிறான்.உந்த விலை எங்களுக்குச் சரி வராது. அங்கால வா.

முனியம்மா : இது இன்னும் நல்லா இருக்கப்பா இதை வாங்குவம்.

சாத்தர்: கொஞ்சம் பொறப்பா. எல்லாத்தையும் பாத்திட்டு முடிவு செய்வம்.

முனியம்மா  : இன்சரப்பா இந்தக்கார் எவ்வளவு பெரிசு ஓடினா இப்பிடிக் காறேல்லோ ஓடவேணும்.

சாத்தர்: காரே ஓடத் தெரியாது அதுக்குள்ளே நினைப்பை பார்.

முனியம்மா : உந்தக் கார் ஓடத் தெரியாத கதை இனிமேல் கதைக்கக் கூடாதெண்டு அண்டைக்குச் சொன்னனான் எல்லே.

சாத்தர்: ஒண்டில்ல இரண்டில்ல எட்டுத் தரமெல்லெ பெயில் விட்டனி.

முனியம்மா : நான் ஒண்டும் செய்ய மாட்டன் எண்ட தயிரியம் உங்களுக்கு.

சாத்தர்: பின்ன, இஞ்ச சட்டி பானை ஒண்டும் இல்லை. காரும் வேண்டாம் ஒண்டும் வேண்டாம் வாங்கோ போவம் எண்டு சொல்லு பாப்பம்.

முனியம்மா : எனக்கென்ன விசரே. எப்பிடியும் வீட்டில வந்துதானே இருக்கப் போறியள். பிறகு பாத்துக் கொள்ளுறன்.

சாத்தர்: சரியப்பா கோவிக்காதை உன்னோட பகிடி விடாமல் நான் ஆரோட விடுறது.

முனியம்மா : இது நல்ல வடிவான காரப்பா இதைத்தான் கட்டாயம் எடுக்கிறம்.

சாத்தர்: போடி இவளே. காரின்ர  விலையைப் பாத்தனியே? வடிவாம் வடிவு. வடிவை வச்சு என்ன செய்யிறது.

முனியம்மா : ரோட்டில ஓடிக்கொண்டு போகேக்க நாலுபேர் பாப்பினமெல்லெ.

சாத்தர்: ஓ பாப்பினம். பாத்திட்டு வந்து அவதான் பெற்றோல் அடிக்கப் போயினம் உன்ர காருக்கு. இந்தக் காருக்கு பெற்றோல் அடிச்சுக் கட்டுமே. அதோட நான்  ரேசே ஓடப் போறன் இந்தக் காரை வாங்கி.

முனியம்மா : உங்களுக்கு உந்தக் கஞ்சத்தனம் போகவே போகாது.

சாத்தர்: மூவாயிரம் பவுன்ஸ் கொண்டு கார் எடுக்க வந்திருக்கிறன். என்னைக் கஞ்சன் எண்ணிறாய்.

முனியம்மா : இஞ்ச ஒரு காரையும் மூவாயிரத்துக்குள்ள காணேல்லையே அப்பா.

சாத்தர் :அதுதான் நானும் யோசிக்கிறன். வேற கடைக்குப் போவம் வா முனி.

முனியம்மா : இத்தன காருகள் இருக்கு. இத விட்டிட்டு வேறை கடையோ. இண்டைக்கு இங்கதான் கார் எடுக்கிறது.

சாத்தர் : காசில்லாமல் என்னண்டப்பா கார் தருவாங்கள் ?

முனியம்மா : காட் குடுத்தாலும்  தருவாங்கள்.

சாத்தர் : நான் காட்டைக் கொண்டு வரேல்லை.

முனியம்மா : நீங்கள் உப்பிடிச் சொல்லுவியள் எண்டுதான் உங்கட காட்டை நான் எடுத்துக் கொண்டு வந்தனான்.

சாத்தர் : மனதுள் (இவளுக்குத் தெரியாமல் ஒளிச்செல்லோ வச்சனான். என்னண்டு எடுத்தவள்) நானே காட்டைக் காணேல்லை எண்டு தேடினனான். எங்க இருந்ததப்பா.

முனியம்மா : என்ர உடுப்பு அலுமாரிக்குள்ளேயே  எனக்குத் தெரியாமல் ஒளிச்சு வைக்கிரியள்  என்ன?

சாத்தர் : நான் ஏனப்பா ஒளிச்சு வைக்கிறான். கை தடுமாறி வச்சிருப்பன்.

முனியம்மா : அப்பிடி வச்சதும் நல்லதாப் போச்சுப் பாத்தியளே.

சாத்தர் : இவளின்ர உடுப்புக்குக் கீழ வச்சால் எடுக்க மாட்டாள் எண்டு நினைச்சா. கோதாரி என்ர கேடுகாலம் போயும் போயும் கார் வாங்க வாற நேரமே இவளின்ர கையில காட் கிடைக்க வேணும்.

முனியம்மா : திரும்ப என்னப்பா முனுமுனுப்பு?

சாத்தர்: ஒண்டும் இல்ல இண்டைக்கு ஆற்ற கண்ணில முளிச்சனான் எண்டு யோசிக்கிறான்.

முனியம்மா : வீட்டில இருக்கிறது நானும் நீங்களும்தான். இதில ஒண்டில் என்னில முழிச்சிருக்க வேணும். அல்லது சுவரிலையோ முகட்டிலயோதான் முளிச்சிருப்பியள் .

சாத்தர் : இண்டைக்கு எதோ நினைப்பில உன்னில முழிச்சிட்டன் போல கிடக்கு.

முனியம்மா : என்னில முளிச்சபடியாத்தான் இண்டைக்கு புதுக் கார் வரப்போகுது.

சாத்தர்: கூடவே கடனும் ஏறப்போகுது.

முனியம்மா : உயிரோட இருக்கேக்க ஆசைப்பட்டதை  அனுபவிச்சுப் போடவேனுமப்பா.

சாத்தர் : உதச் சொல்லிச் சொல்லி நீயே எல்லாத்தையும் அனுபவிக்கிறாய். நான் உழைச்சு உழைச்சு ஒடாத் தேயிறன்.

முனியம்மா : உடன உங்கட புராணம் பாட வெளிக்கிடாதைங்கோ. வாங்கோ அங்காலையும் போய்ப் பாப்பம்.

சாத்தர் : இதோட நிப்பாட்டுவம். அங்கால சரியான விலை கூடின காருகள் தான் இருக்கு.

முனியம்மா : நெடுகவே அப்பா எடுக்கப் போறம். இங்க இதைப் பாருங்கோ. நீங்கள் சொன்ன மாதிரி டீசல் கார். எனக்குப் பிடிச்ச கறுப்புக் கலர். பிறகென்ன ? 

சாத்தர்: விலையைப் பாத்தனியே? ஐயாயிரத்தி எழுநூற்றி ஐம்பது 

முனியம்மா : அதுக்கென்ன. எனக்கு இந்தக் கார்தான் வேணும்.

சாத்தர் : மினி சின்னப் பிள்ளை மாதிரி அடம் பிடிக்காதை. உந்தக் காசுக்கு எடுத்துப் போட்டு வட்டி கட்டவே எக்கச்சக்கம் வந்திடும்.

முனியம்மா : மினி எண்டு கூப்பிட்டா நான் உடன நீங்கள் சொல்லுறதுக்குத் தலை ஆட்டுவன் எண்டு நினைச்சியளே. இந்தக் கார்தான் வேணும்.

சாத்தர் : இதுக்கு மாதா மாதம் தீனி போட்டுக் கட்டாதெடியப்பா.

முனியம்மா : நான் ஆசைப்பட்டது எதைத்தான் ஒழுங்கா வாங்கித் தந்தனியள்.

முனியம்மா கண்ணைக் கசக்குகிறார்.

சாத்தர் : ஆக்கள் பாக்கினம் அழாதை. எதோ நான் உன்னைக் கொடுமைப் படுத்திறதெண்டுநினைக்கப் போறாங்கள். அழுதழுது உன்ர ஆசை எல்லாத்தையும் நிறைவேத்திப் போடுறாய். ( நீண்ட பெருமூச்சு விடுகிறார் சாத்தர்)

முனியம்மா : நான் உங்களை விட்டா ஆரிட்டையப்பா கேக்கிறது?

சாத்தர் : இண்டைக்கு வர முதல் என்ர பலனைப் பாத்துப் போட்டு வெளிக்கிட்டிருக்க வேணும். ம் ...........

 

 

 

தொடரலாம் ...........

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்
  • Like 9
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாத்தர், மானநட்ட வழக்குப் போடாம இருக்கும் வரைக்கும், நாடகம் ஒக்கே! :D

Link to comment
Share on other sites

Quote: "முனியம்மா : அடிச்சுச் சாத்தினால்தான் நான் விழாமல் இருக்கலாம். எப்ப கதவு திறக்கும் எப்ப டிக்கி திறக்கும் எண்டு உங்களுக்கே தெரியாது. எதுக்கும் வடிவாக் காரை ஓடுங்கோ".

 

இந்த வார்த்தை இங்கு பாவித்தால் ஒரு மாதிரி பார்ப்பார்கள் :lol:


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கோ.......சுமோ

Link to comment
Share on other sites

நீண்ட காலத்தின் பின்பு யாழ் பழைய நிலைக்குத் திரும்புவதற்கான அறிகுறிகள் ஆங்காங்கே தெரிகின்றன . நீங்கள் முகத்தாரின் பாணியில் ஒருநாடகம் எழுதியதை நிட்சயம் பராட்டவேண்டும் . ஒரு கார் வாங்கப்போவதை " வெத்திலை போட வைக்கும் " பக்குவம் கண்டு பிரமிக்கின்றேன் . ஒரு கதைசொல்லிக்கான பக்குவத்தை விரைவில் அடைந்ததையிட்டு மகிழ்சி . மேலும்  கிராமியத் தமிழில் எழுதும் பொழுது சிறிது அவதானம் வேண்டும் ( உ + ம் = டாக்டர் இட்டை = டாக்குத்தரிட்டை , டப்பாக் கார்ல போறனான்.= ஓட்டைக் காறிலை போறன் ,வச்சிருக்கன் = வைச்சிருக்கிறன் ) இவைகளையும் , எழுத்துப் பிழைகளையும் கவனத்தில் கொள்ளுங்கள் . உங்கள் நாடகத்திற்குப் பாராட்டுக்கள் சுமே .

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்தைப் பகிர்ந்துகொண்ட உறவுகள் சகாறா, புங்கை, புத்தன், கோமகன் ஆகியோருக்கு நன்றி.

 

 

சாத்தர், மானநட்ட வழக்குப் போடாம இருக்கும் வரைக்கும், நாடகம் ஒக்கே! :D

 


சாத்தர் மானநட்ட வழக்குப் போட்டால் நாங்களும் போடப் புலனாய் வழக்கு இருக்கெல்லே புங்கை.

 

 

படத்துக்கு நன்றி வந்தி.

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பலரும் கருத்தெழுதாததில் இருந்து நாடகம் நன்றாக இல்லை என்று தெரிகிறது. இனிமேல் எழுதவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாடகம் நன்றாக இல்லை என்று யாரும் சொல்லவில்லையே மெசோ ஆன்ரி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் சுமே

 

முதலில் நாடகத்துக்கும் நேரத்திற்கும் நன்றிகள்

 

பலரும் கருத்தெழுதாததில் இருந்து நாடகம் நன்றாக இல்லை என்று தெரிகிறது. இனிமேல் எழுதவில்லை.

 

 

 

இனி உங்களது இந்த அங்கலாய்ப்புக்கு கருத்து எழுதுவது என்றால்

இப்படி எழுதலாம்

ஒரு இடத்தில் கூட சிரிப்பு வரவில்லை.

காரணத்தை  யோசித்து பார்த்தேன்

நீங்கள் புது எழுத்தாளர் என்ற ரீதியில் நான் வாசிக்கவில்லை

அதற்கு  காரணம் நானுமில்லை

முதல் வரிகளே முகத்தார்வீடு என்று ஆரம்பிப்பதால் அதனுடன் ஒன்றி  வாசித்துவிட்டேன்  என நினைக்கின்றேன்.

 

மீண்டும் தற்போது திரும்ப வாசித்தேன்

தொடருங்கள்

நன்றாக இருக்கிறது

இன்னும் நன்றாக உங்களுக்கு எழுத வரும்......... :icon_idea:

Edited by விசுகு
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பலரும் கருத்தெழுதாததில் இருந்து நாடகம் நன்றாக இல்லை என்று தெரிகிறது. இனிமேல் எழுதவில்லை.

தொல்லை தாங்க முடியலைடா சாமீமீமீ :D  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிராமிய உடையாடலில்  கதைப் பகிர்வுக்கு நன்றி. எல்லோர்  வீட்டிலையும்  நடக்கும் நிகழ்வு என்பதால். சற்று சுவாரசியம் இல்லாமல் காணபடுகிறது.  அவ கார் ஓட மாட்டா ஏன் இ ரண்டு கார்  வாங்க  வேணும்.   இரண்டு பிள்ளைகளையும் ( அவர்களின் ஆசை கள் விருப்பங்கள்)சேர்த்துஎழுதினால்   நல்லாய் இருக்கும்.

Edited by நிலாமதி
Link to comment
Share on other sites

நன்றாக இருக்கிறது மெசோ அக்கா, தொடருங்கள்.  :D  முகக்குறிகளையும் பயன்படுத்துங்கள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பலரும் கருத்தெழுதாததில் இருந்து நாடகம் நன்றாக இல்லை என்று தெரிகிறது. இனிமேல் எழுதவில்லை.

அப்பிடி நினைக்காதேங்கோ சிஸ்டர்! தொடருங்கள்  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல வடிவாய் நாடகம் எழுதி இருக்கிறிங்கள் உங்களுக்கு எனது பாராட்டுக்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களை எழுதிய உறவுகள் கிருபன், விசுகு அண்ணா, சஜீவன்,நிலா அக்கா,
துளசி,கறுப்பி, குமாரசாமி அண்ணா, மைத்திரேயி ஆகிய உறவுகளுக்கு நன்றி.

நல்லதோ கெட்டதோ ஒரு சொந்த ஆக்கத்திற்கு கருத்துகள் வராவிடில் மனம் சோர்ந்துவிடுகிறது.

சஜீவன் மனதுக்குள் திட்டிக் கொண்டு வந்து எழுதினாலும் நன்றி. :D

விசுகு அண்ணா தவறுகளைச் சுட்டிக் காட்டும்போதுதான் நான் திருந்த இடமுண்டு. நன்றி அண்ணா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதோ கெட்டதோ ஒரு சொந்த ஆக்கத்திற்கு கருத்துகள் வராவிடில் மனம் சோர்ந்துவிடுகிறது.

 

 

வலைப்பதிவுகளை வைத்துக்கொண்டு பின்னூட்டத்திற்காக ஏங்குபவர்களை நினைத்துப் பார்த்தேன்! எப்படித்தான் எழுதித் தள்ளுகின்றார்களோ!

Link to comment
Share on other sites

கடந்த ஞாயிறு யாழ்கள முகத்தாருடன்  கதைத்திருந்தேன். கடந்த இலங்கை சுதந்திர தினத்தையடுத்து மீண்டும் யாழ் களம் இலங்கையில் தடை செய்யப் பட்டிருப்பதாகவும்  அதனால் புறொக்சி மூலமாக பார்க்க மட்டுமே முடிகிறது  கருத்தெழுவது சிரமமாக  இருப்தால் எதுவும் எழுதுவதில்லை யென்று  தெரிவித்திருந்தார்.  அதே நேரம்  அதைப்போன்றதொரு நாடகத்தை  எழுத முயற்சித்த  சுமேக்கு பாராட்டுக்கள்.ஆனால் நாடகத்தில் என்னத்தை சொல்ல வந்தீர்கள் என்கிற அந்த செய்தி தெளிவில்லாமல் இருக்கின்றது. தொடரும் என்று போட்டிருப்பதால் சொல்ல வரும் செய்தியை பலரும் எதிர்பார்ப்பதால்  கருத்துக்களை வைக்கமல்  இருந்திருக்கலாம்.

Edited by sathiri
Link to comment
Share on other sites

ம்.......... சாத்தாரின் கதையும் மினியின் கதையும் இலங்கையின் கிராம மக்களின் சம்பாசனைக்குச் சரியானது, ஆனால் வெளி நாட்டுக்கு வந்தும் முன்னேறாமல் கார் ஓடிக்கொண்டு இப்பிடிக் கதைகிறவையும் இருப்பினமா எண்டு தெரியவில்லை. தொடருங்கள் உங்களால் இன்னும் நல்லாய் எழுத முடியும் சுமோ! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என் தொந்தரவு தாங்காது வந்து கருத்தெழுதிய கிருபன், வந்தி ஆகியோர்க்கும் ,வழக்கு வைக்காமல் கருத்தெழுதிய சாத்திரிக்கும், உண்மையை எழுதிய அலைக்கும் நன்றி. ஒவ்வொருவரும் தவறுகளைச் சுட்டும் போதுதான் என்னால் திருந்தமுடியும். :)

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் சுமே அக்கா, ஒரு கடினமான பணியை தொடங்கியமைக்கு. நாடகங்களில் காட்சி அமைப்பும் வசன சுருக்கமும் அவசியமாகிறது. நறுக்கெனும் வசனங்களும் மனங்களின் பிரதிபலிப்பும், காட்சி ஓட்டமுமே வாசகர்களை கட்டிவைக்கும். இன்றைய காலங்களில் வாசகர்களுக்கு வாசிப்பதற்கான நேரம் குறைவு. அவர்களை விறுவிறுப்பாக கட்டிவைக்க வேண்டியது படைப்பாளியின் கடமையாகிறது. தொடர்ந்து எழுதுங்கள் காத்திருக்கிறோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
சுமோ முயற்சிக்கு பாராட்டுக்கள்...நாடகத்தின் கருப் பொருளாக வேறு எதையாவது எடுத்திருக்கலாம் என்பது என் கருத்து...நல்ல எழுத்தாற்றல் உங்களுக்கு இருக்குது பயன்படுத்துங்கள்
 
நாடகத்தோடு சம்மந்தப் படாமல் ஒரு கேள்வி கிருபன் போன்ற ஆண்கள் உங்களை அன்ரி எனக் கூப்பிட்டால் பேசாமல் இருக்கும் நீங்கள் அவருடைய வயதுடைய பெண்கள் அன்ரி எனக் கூப்பிட்டால் எப்படி எடுத்துக் கொள்வீர்கள்?...உண்மையான பதில் தேவை
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் என்னைத் தெரிந்தபடியால் வேண்டுமென்றேதான் அப்படி எழுதுது. அதனால் எனக்கு ஒன்றுமில்லை. என்னைத் தெரிந்தவர்கள் வேண்டுமென்றே கூப்பிட்டால்
ஒன்றும் செய்ய முடியாது. தெரியாதவர்கள் கூப்பிட்டாலும் ஒன்றும் சொல்ல  மாட்டேன் ரதி :D .நீங்கள் வேண்டுமானாலும் கூப்பிடுங்கள் :lol: :lol:

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.