யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு

Archived

This topic is now archived and is closed to further replies.

Mathan

ராஜீவ் படுகொலை - புலிகள் வருத்தம்

Recommended Posts

ம்.. ரஜீவ் தலைப்புக்கைநிண்டு தாத்தா கொசிப்.. நல்லாவே இல்லை.. அதை விடுவம்.. உதயன் பத்திரிகையிலை தாங்கள் செய்ததெண்டு ஒப்புக்கொளேல்லையெண்டு செய்தி வந்திருக்கிது.. இதையும் ராஜதந்திர நடவடிக்கையெண்டு சொல்லுறதோ..அல்லது................................. :?:

கேள்வி கேக்க வேணும்தான்.... ஆனா சாதிச்சவை சொன்னால் கேக்கக்கபடாது.... இந்தியனோடை ஒட்டி வந்து அடிவாங்கிக்கொண்டு ஓடிப்போய் இந்தியாவில பதுங்கீட்டு பிறது சிங்களவனோடை வந்து ஒட்டினவை சொன்னால் கேக்கலாம்.....

அது சரி புலி ஆதரவாளர் எண்டு போட்டுத்தள்ளின சனத்தை நாங்கள்தான் போட்டனாங்கள் எண்டு எப்ப நீங்க உரிமை கோரப்போறீங்க..... சொல்லாமல் இருக்கிறதுக்கும் ஏதாவது இராஜதந்திரம் இருக்கா...???

Share this post


Link to post
Share on other sites

ம்.. ஏதொ அவங்கள்தான் இழுத்துக்கொண்டுபோய் வைச்சு பேட்டி குடு எண்டு சொன்னமாதிரியிருக்கு உங்கடை கதை.. சொன்னதை காட்டினாங்கள்.. குடுத்தவருக்கு அறிவு எங்கை போச்சு?

இந்திராகாந்தியை கொலைசெய்தது ஒரு சிங்.. அதேஅரசாங்கத்திலை தற்போதைய பிரதமர் மன்கோகன்சிங்(தலைப்பாசிங்) அப்படியிருக்கேக்கை அது தனிமனித கொலையாயிருந்தாலென்ன கூட்டுக் கொலையாயிருந்தாலென்ன..

இராஜீவை தாங்கள் கொல்ல இல்லை எண்டு புலிகள் எப்பவாவது சொன்னவையே.....??? அப்பிடி உங்கட ஆக்கள் தானே சொல்லுகினம்....!

அதேமாதிரி உரிமை கோர இல்லைத்தானே....! அப்பிடி பாலா அண்ணா எங்கயாவது சொல்லி இருக்கிறதாய் காட்ட ஏலுமே...??? சும்மா உளராதேயுமோய்...!

Share this post


Link to post
Share on other sites

ம்.. கொலைசெய்தும் கொலைசெய்யாத ஒன்றுக்கு தேவையில்லாமல் வருத்தம் தெரிவிச்சு பிரச்சனையை ராஜதந்திரம் பண்ணியிருக்கு..

நல்லாயிருக்கப்பா.. :P

இராஜீவை தாங்கள் கொல்ல இல்லை எண்டு புலிகள் எப்பவாவது சொன்னவையே.....??? அப்பிடி உங்கட ஆக்கள் தானே சொல்லுகினம்....!

அதேமாதிரி உரிமை கோர இல்லைத்தானே....! அப்பிடி பாலா அண்ணா எங்கயாவது சொல்லி இருக்கிறதாய் காட்ட ஏலுமே...??? சும்மா உளராதேயுமோய்...!

Share this post


Link to post
Share on other sites

அப்பு தலா உவருடையை நோக்கம் தெள்ளத் தெளிவா தெரியுது தானே பிறகேன் நேரத்தை வீணாக்குறீர்?

உங்களை சொல்லி என்ன உவை நிர்வாக குழு என்று குந்தியிருக்கிறவைக்கு சைட்சாஜர் வைச்சா எல்லாம் பக்குவமா நடக்கும் :evil:

Share this post


Link to post
Share on other sites

சில விசமிகளுக்கு பதில் அளிப்பதாக நினைத்துக் கொண்டு, மீண்டும் ஒரு இந்திய எதிர்பலையைத் தூண்ட வேண்டாம். பழையவற்றை மறந்து, ஒன்று கூடும் என்று பாலா அண்ணாவின் சொற்கள் புரிந்திருந்தால் இத்தலைப்பில் விவாதிக்க வேண்டிய தேவை இருக்காது!

Share this post


Link to post
Share on other sites

இந்தியா - ஈழம்

இன்று தமிழ் ஈழப் பிரச்சனை தமிழகத்தில் மறுபடியும் பேசப்படுவது "சிலருக்கு" எரிச்சலாகவே அமைந்து இருக்கிறது. கடந்த காலங்களில் "தமிழீழ ஆதரவாளர்கள்" அனைவரும் "இந்தியாவின் எதிரிகள்" அல்லது "பிரிவினைவாதிகள்" என முன்நிறுத்தப்பட்ட வாதத்தை மீண்டும் நிலை நிறுத்த இவர்கள் தலைப்பட்டுள்ளார்கள்.

"தமிழீழ ஆதரவாளர்கள்" இந்தியாவின் இறையான்மைக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடியவர்கள் என்ற எண்ணத்தை விதைப்பதன் மூலம், இப் பிரச்சனை குறித்து பேசு முனைபவர்களிடம் ஒரு அச்சத்தை ஏற்படுத்துவது தான் இவர்களின் நோக்கமாக உள்ளது.

சில ஆங்கில, தமிழ் பத்திரிக்கைகள் தொடங்கி அத்தகைய சிலரை தமிழ் வலைப்பதிவுகளிலும் காண முடியும். "இந்திய தேசியத்தை" முன்னிலைப்படுத்தி அதன் மூலம் தங்களின் அரசியல் சார்புகளை மறைத்து, ஈழம் குறித்து பேச முற்படுபவர்களை பயமுறுத்துவது, தமிழீழ நோக்கங்களை தமிழகத்தில் மறுபடியும் எழாமல் மழுங்கடிப்பது என்பன தான் இவர்களின் நோக்கங்களாக இருந்து வந்திருக்கிறது.

இந்திய தேசிய ஆதரவாளர்கள், தமிழீழ ஆதரவாளர்களாக இருக்க முடியாது என்று "சிலரால்" நிலைநிறுத்தப்பட்ட கருத்தாக்கத்தில் இருந்து நான் மாறுபடுகிறேன். இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சியடைந்து, அந்தப் பொருளாதார வளர்ச்சியில் தமிழகமும் இன்று முன்னிலையில் இருக்கும் பொருளாதாரச் சூழலில் வளர்ந்த எனக்கு, எந்த உரிமைகளும் இந்தியாவில் மறுக்கப்பட்டதில்லை. இந்தியாவில் தமிழகம் ஒரு அங்கமாக இருப்பது எனக்கு மகிழ்ச்சியையே ஏற்படுத்துகிறது.

சுதந்திரம் அடைந்த காலக்கட்டத்தில் கேட்டு மறுக்கப்பட்ட மாநில சுயாட்சியை விட, வளர்ச்சியடைந்த நிலையில் இன்று மைய அரசில் தமிழகத்தின் முக்கியமான பங்களிப்பு நிகழ்ந்துள்ளது. இந்தியாவின் பன்முகத்தன்மை, இன்று மைய அரசின் கூட்டாட்சி நிலையில் வெளிப்பட்டுள்ளது. "தமிழன்" என்று நாம் தொடர்ந்து பராமரித்து வந்த அடையாளமும் இதற்கு ஒரு முக்கிய காரணம். தமிழன் என்று நாம் பராமரித்து வந்த அடையாளத்தின் இந்த தாக்கம் தான் இந்திய தேசியத்தில் தமிழகத்திற்கு கணிசமான பங்களிப்பை ஏற்படுத்தி, இன்று இந்தியாவின் ஒரு முக்கியமான பொருளாதார மாநிலமாக தமிழகத்தை மாற்றியிருக்கிறது. இந்தியா என்றில்லாமல், ஆசியாவில் பொருளாதார வளர்ச்சியடைந்து கொண்டிருக்கும் பிராந்தியங்களில் தமிழகம் முன்னிலை அடைந்திருக்கிறது.

இவ்வாறான சூழலில், தமிழகத்தில் பிரிவினை என்பது எந்தளவுக்கு அர்த்தமற்ற விவாதம் என்பது நமக்கு தெரியும். இந் நிலையில், ஈழம் பற்றிய விவாதக் களம் அமையும் பொழுதெல்லாம், தமிழகத்தில் பிரிவினையை நுழைப்பது சிலரின் வாடிக்கையாக இருந்து வருகிறது. இவர்கள் இந்திய தேசியத்தைப் பேசுபவர்கள் என்பதை விட தமிழீழத்தை எதிர்ப்பதற்கு இந்திய தேசியத்தை பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பது தான் உணமையான நிலை.

தமிழீழம், இன்று தமிழகத்தில் இருப்பவர்களின் ஆதரவு/எதிர்ப்பு நிலையைச் சார்ந்து இல்லை. தமிழீழம் குறித்த ஆதரவு/எதிர்ப்பு நிலை சர்வதேச தளத்திற்குச் சென்று விட்டது. எதிர்கால உலகப் பொருளாதார/இராணுவ உறவுகள் குறித்த பார்வையில் இவை அலசப்படுகின்றன. இத்தகைய நிலையில் தங்களின் உத்திகளை புலிகள் எப்படி அமைக்கிறார்களோ, சூழ்நிலைக்கு தக்கவாறு மாற்றுகிறார்களோ, அதைப் பொறுத்தே தமிழீழம் அமைவதோ, ஒன்றுபட்ட இலங்கை அமைவதோ இருக்க முடியும்.

இந்தியாவின் Strategic நடவடிக்கைகள் கூட அவ்வாறே இருப்பதாக நான் கருதுகிறேன். அதனுடைய சில அறிகுறிகள் தொடர்ந்து வெளிப்பட்டு கொண்டிருக்கின்றன. நேற்று வெளியான இந்திய அமெரிக்க அணுத்துறை ஒத்துழைப்பிற்கான அமெரிக்க செனட்டின் ஆதரவு கூட எதிர்கால பொருளாதார/இராணுவ உறவுகள் குறித்து கட்டியம் கூறுகின்றன. இந்தியா எதிர்கால பொருளாதார வல்லரசாகும் சூழலில், இந்தியாவை தன் பக்கம் வைத்துக் கொள்ள அமெரிக்கா நினைக்கிறது. அமெரிக்காவுடன் நெருங்குவதன் மூலம் எதிர்காலத்தில் எழக்கூடிய சீனாவின் சவாலை சமாளிக்க இந்தியா நினைக்கிறது. இந் நிலையில் தான் தனது கடந்த கால வெளியுறவு கொள்கைகளில் நிறைய மாற்றங்களை இந்தியா தற்பொழுது கொண்டு வந்துள்ளது. எதிர்காலத்திலும் இருக்கும் சூழ்நிலைகளைப் பொறுத்து நிறைய மாற்றங்கள் ஏற்படும். ஏனெனில் Strategic உத்திகள் dynamicக, யதார்த்தங்களைச் சார்ந்து தான் இருக்குமே தவிர, உணர்ச்சிப் பூர்வமாக என்றுமே இருந்ததில்லை.

சில ஆங்கிலப் பத்திரிக்கையாளர்களின் "வெறித்தனமான" அபிமானங்களோ, "சில" குழுக்களின் உணர்ச்சி மிகுந்த கூக்குரல்களோ இந்தியாவின் கொள்கைகளை வகுப்பதில் தாக்கத்தை ஏற்படுத்த முடியாது.

இந்தியாவை முன்னிலைப்படுத்தி ஈழம் குறித்து Pack செய்யப்படும் என்னுடைய பதிவுகளின் நோக்கங்களும், இந்தியாவின் நோக்கங்களைச் சார்ந்து தான் வெளிப்பட்டுகொண்டிருக்கிறது.

http://thamizhsasi.blogspot.com/2006/06/bl...og-post_30.html

Share this post


Link to post
Share on other sites

ம்.. கொலைசெய்தும் கொலைசெய்யாத ஒன்றுக்கு தேவையில்லாமல் வருத்தம் தெரிவிச்சு பிரச்சனையை ராஜதந்திரம் பண்ணியிருக்கு..

நல்லாயிருக்கப்பா.. :P

அதுக்கு பேர் இராஜ தந்திரம் இல்லை... வேண்டுகோள்... இந்த இலவு கூட தெரியாமல் எப்பிடியோ குப்பை கொட்டுறீர்...??? :roll: :roll: :roll:

Share this post


Link to post
Share on other sites

அந்த ஒரு உயிர் தானா உயிர் ?

மூத்த பத்திரிiகாயளரும் சிறந்த பத்திரிகையாளருமான பத்திரிகையாளர் எஸ்.எம்.கோபாலரத்தினம் அவர்கள் 13.02.2001 எழுதிய ஆசிரியர் தலையங்கம் தற்காலத் தேவைகருதி பதிவிடுகிறேன்.

smg17xr.th.jpg

smg28sk.th.jpg

smg37oz.th.jpg

smg42le.th.jpg

Share this post


Link to post
Share on other sites

ராஜீவ் உயிர்தான் உயிர் மற்றதெல்லாம் ?

இப்படித்தான் கேட்கத் தோன்றுகிறது.

Share this post


Link to post
Share on other sites

இது அவர்கள் நேரம். ஆடட்டும்.

எங்களுக்கும் காலம்வரும்.

நம்பிக்கையோடு இருங்கள்.

Share this post


Link to post
Share on other sites

:twisted: உந்த மந்திவந்தனன் ஆசியன் திரி(வு)பூனையின் உளவாளி!

mathi@kumar.dk என்பவன் இங்கே "வெப்மாஸ்டர்" ஆக இருகிறானாம் என்று எனக்கு ஒருவர் தெரிவித்திருந்தார்!

உவனுக்கு நான் பதில் கூறவில்லை, மாறாக பத்திரிகையில் சேறுமா தெரிவித்த கருத்துக்கே என் பதில். உந்தப் பிறவிகள் தாங்களும் உணரமாட்டார்கள், மற்றயவரையும் கேலிக்காக்குவார்கள்.

வெறுப்புடன் அல்லிகா

Share this post


Link to post
Share on other sites

:twisted: உந்த மந்திவந்தனன் ஆசியன் திரி(வு)பூனையின் உளவாளி!

mathi@kumar.dk என்பவன் இங்கே "வெப்மாஸ்டர்" ஆக இருகிறானாம் என்று எனக்கு ஒருவர் தெரிவித்திருந்தார்!

உவனுக்கு நான் பதில் கூறவில்லை, மாறாக பத்திரிகையில் சேறுமா தெரிவித்த கருத்துக்கே என் பதில். உந்தப் பிறவிகள் தாங்களும் உணரமாட்டார்கள், மற்றயவரையும் கேலிக்காக்குவார்கள்.

வெறுப்புடன் அல்லிகா

அப்பஉது டென்மார்க் துரையின்ரை கோஸ்டி. அவற்றை கதையிலேயே விளங்குது. கொஞ்ச நாளா நிகழ்சிகள் அது இது என்று அலைஞ்சவையள் ஆக்கள் தேறேல்ல போல அது தான். இஞ்ச வந்து குலைக்கீனம்.

Share this post


Link to post
Share on other sites

ராஜீவ் காந்தி கொலையும் பாலசிங்கத்தின் பேட்டியும்

விடுதலை புலிகளின் அரசியல் ஆலோசகர் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் கடந்தவாரம் இந்தியத் தொலைக்காட்சி சேவையொன்றுக்கு அளித்திருந்த பேட்டியில் முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி 15 வருடங்களுக்கு முன்னர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாகத் தெரிவித்த கருத்து இலங்கை மற்றும் இந்திய ஊடகங்களில் மாத்திரமல்ல, பிரதான சர்வதேச ஊடகங்களிலும் பெரும் முக்கியத்துவத்தைப் பெற்றிருக்கிறது. இரு நாடுகளினதும் பிரதான பத்திரிகைகள் சகலதுமே அவரின் கருத்துக் குறித்து அவற்றின் கொள்கை நிலைப்பாடுகளுக்கு ஏற்ப ஆசிரிய தலையங்கங்களைத் தீட்டியிருக்கின்றன. அரசியல் வட்டாரங்களிலும் அக்கருத்து பலவிதமான விமர்சனங்களுக்கு உள்ளாகியிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

கலாநிதி பாலசிங்கம் லண்டனில் வைத்து இந்தியாவின் என்.டி.ரி.வி. தொலைக்காட்சிச் சேவைக்கு அளித்த பேட்டி கடந்த செவ்வாய்க்கிழமை இரவு ஒளிபரப்பப்பட்டது. 1991 மே 21 இல் சென்னைக்கு சமீபமாகவுள்ள ஷ்ரீ பெரும்புதூரில் ராஜீவ் காந்தி குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக கருத்துத் தெரிவித்த அவர், `அது ஒரு மிகப்பாரிய - வரலாற்று முக்கியத்துவ அனர்த்தம். நாம் அதற்காக மிகவும் வருந்துகின்றோம். கடந்த காலத்தைப் புறந்தள்ளி வைத்துவிட்டு இந்திய அரசாங்கமும் மக்களும் பெருமனதுடன் இலங்கை இனநெருக்கடியை வித்தியாசமான நோக்குடன் அணுக வேண்டுமென்று வேண்டுகோள் விடுக்கின்றோம்' என்று குறிப்பிட்டிருந்தார். கடந்த காலத்தைப் போன்று கசப்பான சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாது என்ற உறுதிமொழியை விடுதலைப் புலிகளால் இந்தியாவுக்கு வழங்க முடியுமா என்று கலாநிதி பாலசிங்கத்திடம் கேட்கப்பட்டபோது, `எந்தவொரு சூழ்நிலையின் கீழும் இந்தியாவின் நலன்களுக்கு எதிராக நாம் செயற்படமாட்டோம் என்ற உறுதிமொழியை இந்தியாவுக்கு தெரிவித்திருக்கின்றோம். ராஜீவ் காந்தியின் கொலைக்குப் பின்னர் இலங்கைப் பிரச்சினையில் பற்று அறுந்த அணுகுமுறையையே இந்தியா கடைப்பிடித்து வருகிறது. சமாதான முயற்சிகளில் இந்தியா தீவிரமாக பங்கேற்க வேண்டும் என்றே நாம் விரும்புகின்றோம்' என்று பதிலளித்திருக்கிறார்.

கலாநிதி பாலசிங்கம் அளித்த பேட்டியை நாமெவரும் முழுமையாகப் பார்க்கவில்லை. அது முழுமையாக இன்னும் ஒளிபரப்பப்படவுமில்லை என்றே அறிய முடிகிறது. இந்தியாவில் ஒளிபரப்பப்பட்ட பேட்டியின் ஒரு பகுதியை அடிப்படையாக வைத்து ஊடகங்களில் வெளியான செய்திகளையே நாம் அறிந்திருக்கிறோம். முன்னாள் இந்தியப் பிரதமரைக் கொலை செய்தமைக்காக விடுதலை புலிகள் பகிரங்கமாக மன்னிப்பு கோரியிருப்பதாகவே பெரும்பாலான ஊடகங்கள் கலாநிதி பாலசிங்கத்தின் பேட்டியை அர்த்தப்படுத்திக் கொண்டன என்பதில் சந்தேகமில்லை. ஆனால், ராஜீவ் காந்தியை விடுதலை புலிகள் தான் கொலை செய்தார்கள் என்பதை அவர்களின் அரசியல் ஆலோசகர் ஒத்துக் கொண்டிருப்பதாகவோ, அக் கொலைக்காக இந்தியாவிடம் மன்னிப்புக் கோருவதாகவோ கருதக் கூடியதாக கலாநிதி பாலசிங்கத்தின் வார்த்தைப் பிரயோகங்களில் இருந்து உறுதி செய்து கொள்ளக்கூடியதாக இருக்கவில்லை. தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியிடம் கருத்துக் கேட்கப்பட்டபோது, `கலாநிதி பாலசிங்கத்தின் கூற்று குழப்பமானதாகவும் எதுவுமே தெளிவற்றதாகவும் இருக்கிறது' என்று பதிலளித்திருப்பதை இக்கட்டத்தில் நினைவுபடுத்துவது பொருத்தமானதாக இருக்கும்.

ஆனால், பேட்டி ஒளிபரப்பான மறுநாளே இந்திய வெளியுறவு இணையமைச்சர் ஆனந்த் சர்மா `ராஜீவ்காந்தி கொலையை இந்திய அரசாங்கம் ஒருபோதும் மன்னிக்கப் போவதில்லை. இந்திய மக்களும் அக்கொலையை ஒரு போதும் மறந்து விடப் போவதில்லை' என்று அதே தொலைக்காட்சிக்குத் தெரிவித்தார். விடுதலை புலிகளை ஒரு போதும் மன்னிக்கக் கூடாது என்று வலியுறுத்தியே இலங்கையின் சிங்கள மற்றும் ஆங்கிலப் பத்திரிகைகளும் இந்தியாவின் பிரதான பத்திரிகைகளும் கருத்து வெளி யிட்டன. கருத்துகளைத் தான்தோன்றித்தனமாக வெளியிடுவதில் பெயரெடுத்த அரசியல்வாதிகளும் அவ்வாறே பேசினார்கள். ஆனால், கலாநிதி பாலசிங்கத்தை பேட்டிகண்ட இந்தியச் செய்தியாளர் தற்போதைய சூழ்நிலையில் எதற்காக முன்னாள் பிரதமரின் கொலை தொடர்பில் கேள்வியை எழுப்புவதில் அக்கறை காட்டினார் என்பதும் அக்கேள்விக்கு விடுதலை புலிகளின் ஆலோசகர் அளித்த பதிலுக்கு ஊடகங்கள் எதற்காக அளவுக்கு மிஞ்சிய முக்கியத்துவத்தைக் கொடுப்பதில் அக்கறை காட்டின என்பதும் இங்கு ஊன்றிக் கவனிக்கப்பட வேண்டிய விடயங்கள் என்பது எமது அபிப்பிராயம்.

உண்மையிலேயே, ராஜீவ் காந்தி கொலை தொடர்பில் விடுதலை புலிகள் தரப்பினால் வருத்தம் தெரிவிக்கப்பட்டிருப்பது இது தான் முதற்தடவையல்ல. இலங்கை அரசாங்கத்துடன் போர் நிறுத்த உடன்படிக்கையை செய்துகொண்ட பின்னர் 2002 ஏப்ரல் 10 இல் வன்னியில் நடத்திய செய்தியாளர்கள் மகாநாட்டில் விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ராஜீவ் காந்தி கொலை குறித்து அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையில், `அது ஒரு துன்பியல் நிகழ்வு' என்று தெரிவித்திருந்தார். கலாநிதி பாலசிங்கமும் பிரபாகரனின் அந்தப் பதிலின் தொனியிலேயே தொலைக்காட்சிப் பேட்டியில் இப்போது கருத்துத் தெரிவித்திருக்கிறார். இலங்கையில் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வந்து தேசிய இனப் பிரச்சினைக்கு அரசியல் இணக்கத் தீர்வொன்றைக் காண்பதற்கான எந்தவொரு முயற்சியுமே இந்தியாவின் ஆதரவும் பங்கேற்பும் இன்றி பயனளிப்பதென்பது அறவே சாத்தியமில்லை என்று முழு உலகமுமே நம்புகின்ற நிலையில், சமாதான முயற்சிகளில் இந்தியாவின் தீவிர பங்கேற்பை நாடி விடுதலை புலிகளின் சார்பில் கலாநிதி பாலசிங்கம் கருத்துத் தெரிவித்திருப்பதில் தவறேதும் இருக்கமுடியாது. முன்னரும் பல சந்தர்ப்பங்களில் அவர் இந்தியா தொடர்பில் இத்தகைய கருத்துகளை வெளியிட்டிருக்கிறார்.

இலங்கை தமிழ் மக்களும் இனநெருக்கடிக்கு இணக்கத் தீர்வொன்றைக் காண்பதற்கு மாத்திரமல்ல, தங்களுக்கு நேருகின்ற தற்போதைய அவலங்களுக்கு முடிவைக் காணவும் இந்தியாவின் ஒத்துழைப்பையும் ஆதரவையும் நாடி நிற்கிறார்கள். இலங்கையில் மீண்டும் போரையொத்த சூழ்நிலை தோன்றியிருக்கும் இவ் வேளையில், ஒரு தசாப்தத்துக்கும் கூடுதலான காலமாக இலங்கை நெருக்கடியில் தூரவிலகி நிற்கும் இந்தியா மீண்டும் அக்கறையைக் காண்பிக்க நிர்ப்பந்திக்கக் கூடியதாக தமிழ் நாட்டு மக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் மத்தியில் தோன்றிவரும் உணர்வலைகளைத் திசை திருப்பி விடுவதற்கு ராஜீவ் காந்தி கொலை தொடர்பான கலாநிதி பாலசிங்கத்தின் கருத்தை இரு நாடுகளிலுமுள்ள சில சக்திகள் தாராளமாகப் பயன்படுத்த முயற்சிக்கின்றனவா என்பதே எமக்குத் தோன்றும் வலுவான சந்தேகம்.

-தினக்குரல்

Share this post


Link to post
Share on other sites

சிங்களப்பத்திரிகையில் இருந்து

பிரபாகரனின் அனுமதியின்றி இந்தியாவிடம் மன்னிப்பு கோரினார் பாலசிங்கம்

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பூர்வாங்க அனுமதியைப் பெற்றுக்கொள்ளாமலே புலிகள் அமைப்பின் நியாயவாதி அல்லது பிரதம பேச்சாளராகிய அன்ரன் பாலசிங்கம் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொல்லப்பட்டது சம்பந்தமாக இந்தியாவிடம் மன்னிப்பு கோரியுள்ளார் எனவும் இதனால் பிரபாகரனுக்கும் பாலசிங்கத்துக்குமிடையே பாரதூரமான மோதல் நிலை உருவாகியுள்ளதாகவும் வடக்கிலிருந்து கிடைக்கும் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இவ்வாறு அன்ரன் பாலசிங்கம் இந்திய அரசிடம் மன்னிப்புக் கோரியதைத் தொடர்ந்து பிரபாகரன் கடுமையான கோபத்துக்குள்ளாகியதாகவும் அவர் தனது செய்மதித் தொடர்பு மூலம் இயங்கும் தொலைபேசி மூலமாக லண்டனிலிருக்கும் அன்ரன் பாலசிங்கத்துடன் அவரசமாகத் தொடர்பு கொண்டு அவசியமில்லாத நேரத்தில் அவசியமில்லாத பிரச்சினைகளை உருவாக்குவதாக கடுமையாகப் பேசி பாலசிங்கத்தின் மீது குற்றம் சுமத்தியதாகவும் குறித்த வடபகுதி தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் மேற்படி குற்றச்சாட்டுக்கு பாலசிங்கம் பதிலளித்திருப்பதாகவும் அப்பதிலில் அவர் தெரிவித்திருப்பதற்கேற்ப, இந்தியாவின் என்.டி.ரீ.வி. தொலைக்காட்சி சேவையின் ஜேர்மன் நாட்டு பெண் அறிவிப்பாளர் ஒருவரே தன்னுடன் குறித்த செவ்வியை நடத்தியதாகவும் அதன் பின்னர் அச்செவ்வி பற்றி தொகுப்புரையை மேற்படி பெண் அறிவிப்பாளர் வெளியிடும் போது அவரின் தேவைக்கேற்ப பேச்சுவார்த்தை விடயங்களைத் திரித்துக் கூறியிருப்பதாகவும் பாலசிங்கம் பிரபாகரனுக்கு அறிவித்துள்ளார் எனவும் குறித்த தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

எவ்வாறாயினும் பாலசிங்கத்துக்கு பிரபாகரன் அளித்த பதிலில் பாலசிங்கம் அவர்மீது தான் வைத்திருக்கும் நம்பிக்கையை உடைத்துவிட்டார் எனக் கூறியிருப்பதாகவும் மேலும் இது சம்பந்தமாக பாலசிங்கத்திடம் பிரபாகரன் சில முக்கிய விடயங்களைத் தெளிவாகத் தெரிவித்திருப்பதாகவும் தெரிகிறது. பிரபாகரன் இவ்வாறு கூறியிருப்பதற்கேற்ப முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டது அந்த காலகட்டத்தில் நிலவிய அரசியல் சூழ்நிலையில் ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான சம்பவம் எனத் தெரிவித்துள்ளார். மேலும் மேற்படி இந்திய தொலைக்காட்சி சேவை தான் இந்திய அரசிடம் மன்னிப்புக் கோருவதாகத் தெரிவித்திருக்கும் விடயத்திலேயே பெரும் பிரச்சினை எழுந்திருப்பதாகவும் அந்தத் தகவலை தான் மறுப்பதாகவும் பிரபாகரன் கூறியுள்ளதாகத் தெரிகிறது. இந்த விடயத்தில் பிரபாகரனுக்கும் பாலசிங்கத்துக்கும் இடையே பாரதூரமான கருத்துமோதல் நிலை உருவாகியுள்ள போதும் இறுதியில் இவ்விடயம் பற்றி புலிகள் அமைப்பின் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்ரர் "ஹிந்து" பத்திரிகைக்குத் தெரிவிக்கையில், மேற்படி மன்னிப்புக் கோரல் விடயம்பற்றி புலிகள் இயக்கத் தலைவர் தனது கருத்தை வெளியிட்டுள்ளார் என்றும் மட்டுமே கூறியுள்ளார். -லங்காதீப 02.07.2006-

http://www.thinakkural.com/news/2006/7/4/s...ws_page5669.htm

Share this post


Link to post
Share on other sites

யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு


 • Topics

 • Posts

  • பொன்னாலை மற்றும் கல்விளான் கிராமங்களில் மதம் பரப்பும் நோக்கத்துடன்  கூட்டம் நடத்துவதற்கு முற்பட்ட மத சபை ஒன்றின் உறுப்பினர்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர்.   குறித்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றது. அது தொடர்பில் தெரியவருவதாவது,  பொன்னாலையில், குறித்த மதத்தை சார்ந்த மக்கள் எவரும் வசிக்காத இடத்தில், தனியார் காணி ஒன்றில் இசை நிகழ்வுடன் கூடிய கூட்டம் ஒன்றை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. வெளி இடத்தில் இருந்து பஸ் ஒன்றிலும் மோட்டார் சைக்கிள்களிலுமாக நூற்றுக்கணக்கானோர் கொண்டுவந்து இறக்கப்பட்டனர். இதை அவதானித்து அங்கு சென்ற அவ்வூர் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் இருவர் யார் அனுமதி வழங்கியது என அப்பகுதி மக்களைக் கேட்டபோது அவர்கள், தாங்களாகவே வந்து இங்கு கூட்டம் நடத்துகின்றார்கள் என்றனர்.   எதற்காகக் கூட்டம் நடத்துகிறீர்கள் என வந்தவர்களிடம் கேட்டபோது, நோய், பிணிகளில் இருந்து மக்களை விடுவிப்பதற்கான நிகழ்வு எனப் பதிலளித்தனர். அப்படியாயின் வைத்தியசாலைகளை மூடிவிட்டு நீங்களே ஜெபியுங்கள் என ஆத்திரத்துடன் கூறிய அவ் இளைஞர்கள் உடனடியாக இந்த இடத்தில் இருந்து வெளியேறுங்கள் என அவர்களை எச்சரித்தனர். பொன்னாலை பூர்வீகமாக சைவப் பூமி. இங்கு மதம் பரப்பும் செயற்பாடுகளில் ஈடுபட்டால் விளைவுகள் விபரீதமாக முடியும் என ஊரவர்களுடன் இணைந்து அவர்களைக் கடுமையாக எச்சரித்தனர். உடனடியாக இந்த இடத்தை விட்டு வெளியேறுங்கள் எனக் கூறி பலவந்தமாக அவர்களை வெளியேற்றினர்.   பொன்னாலையில் இருந்து வெளியேற்றப்பட்ட குறித்த குழுவினர்  அயல் கிராமமான கல்விளானில் கூட்டத்தை நடத்த முயற்சித்தனர். அதன் போது அந்தப் பகுதியைச் சேர்ந்த சனசமூக நிலையத்தின் பிரதிநிதிகள் அங்கு சென்று அவர்களைப் பலவந்தமாக வெளியேற்றினர். இதேவேளை, மதம் பரப்பும் நோக்கத்துடன் எந்தக் எவர் பொன்னாலை மற்றும் கல்விளானுக்குள் நுழைந்தாலும் பலவந்தமாக வெளியேற்றப்படுவார்கள் என ஊர் இளைஞர்கள் எச்சரித்துள்ளனர். https://www.virakesari.lk/article/60910?fbclid=IwAR3d1QTf5XtuHWdBTlAfZgAyfzWncsAhLvMuvy62BtiFO_XI-ODt4-EUS9s
  • இலங்கை கிழக்கு மாகாணம்: 300 தமிழர் கிராமங்கள், முஸ்லிம் கிராமங்களாக மாற்றப்பட்டுள்ளன - முன்னாள் முதலமைச்சர் விக்னேஷ்வரன் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில்   இதை பகிர Messenger   இதை பகிர டுவிட்டரில்   இதை பகிர மின்னஞ்சல்   பகிர்க இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் சுமார் 300 தமிழர் கிராமங்கள், முஸ்லிம் கிராமங்களாக மாற்றப்பட்டுள்ளதாக, வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளருமான சி.வி. விக்னேஷ்வரன் குற்றம்சாட்டியுள்ளார். கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு பிரதேசத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசியபோது இதனை அவர் கூறினார். இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் 9000 தமிழ் பெண்கள், இஸ்லாத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாக, தன்னிடம் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் பௌத்த பிக்குவுமான அத்துரலியே ரத்ன தேரர் கூறியதாகவும் இதன்போது விக்னேஷ்வரன் குறிப்பிட்டார். "எமது காணிகள் மற்றும் உரிமைகள் பறிபோவதோடு, எமது பெண்களும் பறிபோகின்றனர்" என்றும் இதன்போது அவர் விக்னேஷ்வரன் தெரிவித்தார். இதனையடுத்து, 300 தமிழர் கிராமங்கள் முஸ்லிம் கிராமங்களாக மாற்றப்பட்டமையை நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் உங்களிடம் உள்ளனவா என்று, முன்னாள் முதலமைச்சர் விக்னேஷ்வரனிடம் பிபிசி தமிழ் வினவியது. அதற்கு அவர் பதிலளிக்கையில், பத்திரிகையொன்றில் சில வருடங்களுக்கு முன்னர் வெளியான தொடர் கட்டுரைகளின் மூலம் இதனை தான் அறிந்து கொண்டதாக கூறியதோடு; "ஆதாரங்களை நீங்களே தேடிப்பார்க்க வேண்டும்" என்றார். இலங்கையில் இனி இந்த உடை அணியக்கூடாது: ஏன் தெரியுமா? ”இலங்கையில் இந்து அடையாளங்களை அழிக்கும் முயற்சி நடக்கிறது” "தமிழர் - முஸ்லிம் மக்களுக்கிடையில் முறுகல் நிலை ஏற்பட்டுவிடும் என்பதற்காக, இந்த உண்மையை சொல்லாமல் இருக்க முடியாது" என்றும் அவர் பிபிசி யிடம் கூறினார். இந்நிலையில், முன்னாள் முதலமைச்சர் விக்னேஷ்வரன் கூறியுள்ள இந்த விடயமானது, தமிழர் - முஸ்லிம் நல்லுறவை பாதிக்கும் என, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா கவலை தெரிவித்துள்ளார். விக்னேஷ்வரன் கூறுகின்றமை போல் தமிழர் கிராமங்கள் முஸ்லிம் கிராமங்களாக மாற்றப்பட்டிருந்தால், அது தொடர்பில் ஆராய்ந்து அந்தக் கிராமங்களை முடியுமான வரை தமிழர்களிடம் ஒப்படைக்க வேண்டிய தேவை தமிழர், முஸ்லிம் மக்களின் தலைமைகளுக்கு உள்ளதாகவும் ஹிஸ்புல்லா சுட்டிக்காட்டியுள்ளார். அதேவேளை, "பல முஸ்லிம் கிராமங்கள் தமிழர் கிராமங்களாக மாற்றப்பட்டுள்ளதாக, முஸ்லிம் தரப்பினரும் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்" எனவும் ஹிஸ்புல்லா குறிப்பிட்டுள்ளார். "முன்னாள் முதலமைச்சர் விக்னேஷ்வரன் தன்னிடத்தில் முழுமையான ஆதாரங்கள் இல்லாமல், இந்த விடயத்தைக் கூறியிருக்க மாட்டார் என்று நம்புகிறேன். ஆகவே, அவர் குறிப்பிட்ட 300 தமிழர் கிராமங்களும் எந்த மாவட்டத்தில் உள்ளன என்ற விவரத்தினை அவசரமாக ஊடகங்கள் மூலமாக தெரியப்படுத்த வேண்டும்" என்றும் ஹிஸ்புல்லா வேண்டுகோள் விடுத்துள்ளார். https://www.bbc.com/tamil/sri-lanka-49069613
  • ஃபேஸ்புக் தமிழக இளைஞருக்கு 20 லட்சம் வெகுமதி கொடுத்தது - காரணம் தெரியுமா? சாய்ராம் ஜெயராமன்,பிபிசி தமிழ் 6 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில்   இதை பகிர Messenger   இதை பகிர டுவிட்டரில்   இதை பகிர மின்னஞ்சல்   பகிர்க Image captionலக்ஷ்மன் முத்தையா இன்ஸ்டாகிராம் செயலிலுள்ள ஒரு மிகப் பெரிய பாதுகாப்பு குறைபாட்டை கண்டறிந்த தமிழகத்தை சேர்ந்த கணினி பாதுகாப்பு ஆய்வாளரான லக்ஷ்மன் முத்தையாவை பாராட்டி ஃபேஸ்புக் நிறுவனம் 30,000 அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 20 லட்சம் ரூபாய்) வெகுமதி அளித்துள்ளது. ஏற்கனவே 30க்கும் மேற்பட்ட முறைகள் ஃபேஸ்புக் நிறுவனத்திடமிருந்து இதுபோன்ற வெகுமதியை பெற்றுள்ள லக்ஷ்மன், இம்முறை எதற்காக, எப்படி இந்த வெகுமதி வென்றுள்ளார் என்பதை அறிந்துகொள்வதற்காக பிபிசி தமிழ் அவரிடம் பேசியது. அதிகரிக்கும் ஹேக்கிங் சம்பவங்கள் உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தும் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர், கூகுள் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்களின் சேவைகளில் மிகப் பெரிய பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக அவ்வப்போது செய்திகள் வெளிவருகின்றன. அதன் மூலம், எண்ணிலடங்கா புகைப்படங்கள், காணொளிகள் என பயன்பாட்டாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் அவர்களது ஒப்புதல் இல்லாமலே பொதுவெளியில் வெளியாகும் ஹேக்கிங் சம்பவங்கள் அதிகரித்து வண்ணம் இருக்கின்றன. படத்தின் காப்புரிமைGETTY IMAGES இந்நிலையில், தனது ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சேவைகளில் பாதுகாப்பு குறைபாட்டை கண்டறியும் வல்லுநர்களுக்கு வெகுமதி அளிக்கும் வழக்கத்தை கொண்டுள்ள ஃபேஸ்புக் நிறுவனம், அதன் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட திட்டத்தின் மூலமாகவே லக்ஷ்மனனுக்கும் இந்த வெகுமதியை அளித்துள்ளது. "நான் என்ன கண்டறிந்தேன்?" 20 லட்சம் ரூபாய் வெகுமதியை பெறுவதற்கு காரணமான கண்டுபிடிப்பு குறித்து லக்ஷ்மனிடம் கேட்டபோது, "சுருக்க சொல்ல வேண்டுமென்றால், மற்ற சமூக ஊடகங்களை போன்று இன்ஸ்டாகிராமிலும் மறந்து போன கடவுச் சொல்லை மாற்றியமைப்பதற்கான வழி உள்ளது. அதாவது, உங்களது பயனர் பெயரை பதிவிட்டு, அதோடு பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண்ணுக்கு சரிபார்ப்பு எண்ணை பெற்று, அதை உள்ளீடு செய்வதன் மூலம் கணக்கை மீட்டெடுக்க முடியும். இந்த வழியிலுள்ள பாதுகாப்பு குறைபாட்டை பயன்படுத்தி எந்த இன்ஸ்டாகிராம் பயனரின் கணக்கையும் ஹேக் செய்யும் முடியும் என்பதை ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு தெரியப்படுத்தியதன் மூலமே எனக்கு இந்த வெகுமதி கிடைத்துள்ளது" என்று அவர் கூறுகிறார். ஹுவாவேவை பார்த்து மிரள்கிறதா அமெரிக்கா? காரணம் என்ன? நொடிக்கு 7ஜிபி வேகம்; 5ஜி தொழில்நுட்பம் உங்களுக்கு தேவையா? ஒரு இன்ஸ்டாகிராம் பயனர் தனது கணக்கில் உள்நுழைவதற்கான கடவுச்சொல்லை மறந்துவிட்டு, தவறான கடவுச்சொல்லை ஒரு குறிப்பிட்ட முறைகளுக்கு மேலாக பதிவு செய்தால், அக்கணக்கு முடக்கப்படும். அதே போன்று, கடவுச்சொல்லை மாற்றுவதற்கு, பதிவு செய்த அலைபேசிக்கு வரும் எண்ணை பதிவு செய்யும் இந்த முறையில் ஹேக் செய்வதை தடுக்கும் வசதியை இன்ஸ்டாகிராம் ஏற்படுத்தவில்லையா என்று அவரிடம் கேட்டபோது, "நீங்கள் உங்களது இன்ஸ்டாகிராம் செயலியின் கடவுச்சொல்லை மறந்துவிட்டு, புதிய கடவுச்சொல்லுக்காக வேண்டுகோள் விடுப்பதாக வைத்துக்கொள்வோம். அதன் பிறகு, உங்களது அலைபேசிக்கு ஆறு எண்கள் கொண்ட குறுஞ்செய்தி பாதுகாப்பு சரிபார்ப்புக்காக அனுப்பப்படும். அதை உள்ளீடு செய்வதன் மூலம் நீங்கள் புதிய கடவுச்சொல்லை ஏற்படுத்தி உங்களது கணக்கை மீண்டும் பயன்படுத்த முடியும். இவ்வாறாக அனைத்து இன்ஸ்டாகிராம் பயன்பாட்டாளர்களுக்கும் அனுப்பப்படும் பாதுகாப்பு சரிபார்ப்பு எண்கள், அந்நிறுவனத்தின் ஒரு குறிப்பிட்ட பத்து லட்சம் எண்ணிக்கை கொண்ட தொகுப்பிலிருந்து எடுத்தாளப்படுகிறது. படத்தின் காப்புரிமைFACEBOOK இதில் முக்கியமான விடயம் என்னவென்றால், ஒரு இன்ஸ்டாகிராம் பயனரின் கணக்கோடு தொடர்புடைய அலைபேசி எண்ணுக்கு அந்த பத்து லட்சம் தொகுப்பிலிருந்து எந்த எண்கள் சரிபார்ப்புக்காக அனுப்பப்படுகிறது என்பதை கண்டறிவதன் மூலம் அந்த கணக்கை ஹேக் செய்ய முடியும். இந்த பாதுகாப்பு குறைபாட்டை நிரூபிப்பதற்காக, நான் 1,000 மைக்ரோ கணினிகளை பயன்படுத்தி ஒரே சமயத்தில் இரண்டு லட்சம் எண்களை உள்ளீடு செய்தேன்" என்று லக்ஷ்மன் விளக்குகிறார். ஒரே சமயத்தில் 1,000 கணினிகள் எப்படி சாத்தியம்? ஒரு இன்ஸ்டாகிராம் கணக்கிற்கு இரண்டு லட்சம் புதிய கடவுச்சொல் கோரிக்கைகளை அனுப்பவது சாத்தியமா? இதுபோன்ற இயல்புக்கு மாறான செயல்பாட்டின்போது, அக்கணக்கு உடனுக்குடன் அடையாளம் காணப்பட்டு முடக்கப்படாதா? என்று அவரிடம் கேட்டபோது, "நீங்கள் ஒரேயொரு கணினியில்/ ஐபி முகவரியில் இருந்து நூற்றுக்கும் குறைவான தவறான கடவுச்சொல்லை உள்ளீடு செய்தாலே அந்த இன்ஸ்டாகிராம் கணக்கு முடக்கப்பட்டு விடும். ஆனால், இதுவே வேறுபட்ட கணினி/ ஐபி முகவரியிலிருந்து ஒரே இன்ஸ்டாகிராம் கணக்கின் கடவுச்சொல்லை மாற்ற முயற்சித்தால் அதை தடுக்கும் தற்காப்பு அமைப்பு இன்ஸ்டாகிராமிடம் இல்லை என்பதையே இதன் மூலம் நான் நிரூபித்து காண்பித்தேன். இன்ஸ்டாகிராம் பயனர்களின் அந்தரங்க தரவுகள் கசிவு - நீங்கள் அச்சமடைய வேண்டுமா? உங்கள் கைபேசியிலுள்ள அந்தரங்க தகவல்கள் இப்படியும் திருடப்படுமா? ஒரே நேரத்தில் ஆயிரம் உண்மையான கணினிகளை பயன்படுத்துவதற்கு பதிலாக, அமேசான் நிறுவனத்தின் மேகக்கணினியக தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அதன் மூலம் சில நிமிடங்களுக்கு 1,000 மைக்ரோ கணினிகளை வாடகைக்கு எடுத்து இதை நிகழ்த்தினேன். இதற்காக நான் சுமார் 3,500 ரூபாய் மட்டுமே செலவிட்டிருப்பேன்" என்று தனது கண்டுபிடிப்பை விளக்குகிறார் லக்ஷ்மன். தனது பணிசார்ந்த வாழ்க்கையில் ஏற்றத்தை அடைவதற்காக, இதுபோன்ற மிகப் பெரிய பாதுகாப்பு குறைபாட்டை கண்டுபிடிக்கும் பணியில் சில ஆண்டுகளாக இடைவேளைக்கு பிறகு, கடந்த மார்ச் மாதம் களத்தில் இறங்கியதாக கூறுகிறார் இவர். "இரண்டு மாதகால கடுமையான சோதனைகளுக்கு பிறகு இன்ஸ்டாகிராமிலுள்ள இந்த குறைபாட்டை கடந்த மே மாதம் கண்டறிந்தவுடன் ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு அனுப்பினேன். நான் அனுப்பிய தகவல்கள் போதுமானதாக இல்லாததால், ஃபேஸ்புக் நிறுவனத்தின் கோரிக்கையின்படி, எனது சோதனை தொடர்பான செய்முறை காணொளியையும், மேலதிக விளக்கத்தையும் ஜூன் மாதம் அனுப்பிய நிலையில், கடந்த 10ஆம் தேதி எனக்கு இந்த வெகுமதி அளிக்கப்படுவதாக ஃபேஸ்புக் தரப்பில் தெரிவிக்கப்பட்டது." அடுத்தது என்ன? படத்தின் காப்புரிமைGETTY IMAGES காரைக்குடியை பூர்விகமாக கொண்ட லக்ஷ்மன் முத்தையா, அங்கு தனது பள்ளிக்கல்வியை முடித்துவிட்டு, சென்னையிலுள்ள தனியார் பொறியியல் கல்லூரில் 2014ஆம் ஆண்டு கணினி பொறியலில் இளங்கலை பட்டம் பெற்றவர். அதன் பிறகு 2015ஆம் ஆண்டு வரை தனியார் நிறுவனத்தில் இணையதள வடிவமைப்பாளராக பணியாற்றிய இவர், அதற்கடுத்த ஆண்டு தனது நண்பர்களுடன் இணைந்து 'நெட்மை சாஃப்ட்' எனும் மின்னணு பாதுகாப்பு மற்றும் இணையதள வடிவமைப்பு நிறுவனத்தை சென்னையில் தொடங்கி நடத்தி வருகிறார். முன்னதாக, 2013ஆம் ஆண்டு டிசம்பரில், ஒரு ஃபேஸ்புக் பயனரால் பிளாக் செய்யப்பட்ட ஒருவர், தொடர்ந்து தன்னை பிளாக் செய்தவருடன் தொடர்பு கொள்ளும் வகையிலான பாதுகாப்பு குறைபாட்டை கண்டறிந்ததற்காக 4,500 டாலர்கள் வெகுமதியும், 2015ஆம் ஆண்டு பிப்ரவரியில், ஒரு ஃபேஸ்புக் பயனர் மற்றொருவரின் கணக்கிலுள்ள புகைப்படங்களை அழிக்கக் கூடிய குறைபாட்டை கண்டறிந்ததற்காக 12,000 டாலர்களும், அதே ஆண்டு மார்ச் மாதம் ஒருவருக்கு தெரியாமலேயே அவரது ஃபேஸ்புக் செயலியில் பதிவேறியுள்ள புகைப்படங்களை, அதே அலைபேசியில் பதியப்பட்டுள்ள மற்ற செயலிகளின் தயாரிப்பாளர்கள் பார்க்கக் கூடிய குறைபாட்டை கண்டறிததற்காக 10,000 டாலர்களும் என இதுவரை ஃபேஸ்புக் நிறுவனத்தின் தயாரிப்புகளிலுள்ள பாதுகாப்பு குறைபாடுகளை கண்டறிந்ததன் மூலம் மட்டும் பல்லாயிரக்கணக்கான டாலர்களை அந்நிறுவனத்திடமிருந்து வெகுமதியாக பெற்றுள்ளார் லக்ஷ்மன் முத்தையா. "தொழிற் வாழ்க்கையில் முன்னேற்றம் பெறுவது மட்டுமின்றி, கோடிக்கணக்கானோர் பயன்படுத்தும் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சேவைகளிலுள்ள குறைபாட்டை கண்டறிந்து வெளிப்படுத்துவது மக்களுக்கு பலனளிக்கும் என்பது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துவதோடு, எனது பணியை உத்வேகத்துடன் தொடருவதற்கு உதவுகிறது" என்று பெருமையுடன் கூறுகிறார் லக்ஷ்மன் முத்தையா. https://www.bbc.com/tamil/science-49064934
  • சந்திராயன்-2 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது 27 நிமிடங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில்   இதை பகிர Messenger   இதை பகிர டுவிட்டரில்   இதை பகிர மின்னஞ்சல்   பகிர்க படத்தின் காப்புரிமைISRO கடந்த வாரம் ஏவப்படுவதாக இருந்து கடைசி நேரத்தில் நிறுத்தப்பட்ட இந்தியாவின் இரண்டாவது நிலவுப்பயணத் திட்டமான சந்திரயான்-2 இன்று திங்கள் கிழமை பிற்பகல் இந்திய நேரப்படி 2.43 மணிக்கு ஏவப்பட்டது. ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் வின்வெளி மையத்தில் உள்ள ஏவு தளத்தில் இருந்து இந்த விண்கலத்தை சுமந்துகொண்டு ஜி.எஸ்.எல்.வி. மார்க் III ராக்கெட் சீறிப்பாய்ந்தது. கடந்து செல்க டுவிட்டர் பதிவு இவரது @isro   இதைப் பற்றி 9,032 பேர் பேசுகிறார்கள்       முடிவு டுவிட்டர் பதிவின் இவரது @isro இந்தப் பயணத்தின் சிறப்பு சந்திரயான்-2 என்பது மூன்று பகுதிகளை உடைய ஒரு விண்கலத் தொகுப்பு. இதில், நிலவை சுற்றி வரும் கலன் ஒன்றும், நிலவில் தரையிறங்கும் கலன் ஒன்றும், நிலவின் தரைப்பரப்பில் ஊர்ந்து சென்று ஆய்வுகள் செய்யும் உலாவி (ரோவர்) ஒன்றும் இருக்கும். சுற்றுவட்டக் கலனில் இருந்து, தரையிறங்கும் கலன் 'விக்ரம்' பிரியும். தரையிறங்கும் விக்ரம் கலனில் இருந்து பிறகு 'பிரக்யான்' உலாவி பிரியும். இந்த வின்கலத் தொகுப்பு இஸ்ரோவின் ஜி.எஸ்.எல்.வி. மார்க்3 செலுத்து வாகனம் (ராக்கெட்) மூலம் விண்ணுக்கு ஏவப்படும். இந்தியா உருவாக்கியதிலேயே மிகவும் சக்திவாய்ந்த இந்த செலுத்துவாகனம் 640 டன் எடையுள்ளது. 44 மீட்டர் அல்லது 144 அடி உயரமுடையது. ஏறத்தாழ 14 மாடி கட்டடத்தின் உயரத்துக்கு சமமானது இதன் உயரம். Image captionசந்திரயான் விண்வெளியில் பிரசவிக்கப் போகும் ஜி.எஸ்.எல்.வி. மார்க் III செலுத்துவாகனம். 2008-ம் ஆண்டு இந்தியா தமது முதல் நிலவுப் பயணத் திட்டமான சந்திரயான்-1 ஐ ஏவியது. இந்த விண்கலன் நிலவில் தரையிறங்கவில்லை. நிலவைச் சுற்றிவந்து நிலவில் தண்ணீர் இருக்கிறதா என்பது பற்றி முதல் விரிவான ஆராய்ச்சியை தமது ரேடார்கள் உதவியோடு நடத்தியது. 150 மில்லியன் டாலர் செலவில் தயாரிக்கப்பட்டுள்ள தற்போதைய சந்திரயான்-2 திட்டம் தண்ணீர் மற்றும் தாதுப் பொருட்கள் நிலவில் இருப்பது பற்றியும், 'நிலவு'நடுக்கம் (புவியில் நடந்தால் 'நில நடுக்கம்'. நிலவில் நடந்தால் 'நிலவு நடுக்கம்') தொடர்பாகவும் ஆய்வுகள் செய்யும். சந்திரயான்-2 எப்போது போய்ச்சேரும்? நேற்று ஞாயிறு மாலை 6.43 மணிக்கு சந்திரயானை சுமந்துள்ள ஜி.எஸ்.எல்.வி. மார்க்3 செலுத்துவாகனத்தை ஏவுவதற்கான கவுண்ட் டவுன் தொடங்கியது. திங்கள் பிற்பகல் இந்த செலுத்துவாகனம், சென்னை அருகே உள்ள ஸ்ரீஹரிக்கோட்டா சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து புகையும், நெருப்பும் கக்கியபடி கிளம்பும். ஆனால், 3.84 லட்சம் கி.மீ. பயணம் ஒரே மூச்சில் முடிந்துவிடாது. உண்மையில் சந்திரயான் விண்கலத் தொகுப்பின் மூன்று பாகங்களில் ஒன்று நிலவில் தரையிறங்குவது செப்டம்பர் 6 அல்லது 7-ம் தேதி தான் நடக்கும். ஏனென்றால் சந்திரயான்-2 நேர்க்கோட்டுப் பாதையில் நிலவை நோக்கிப் பயணிக்காமல் புவியைச் சுற்றி சுற்றி அடுத்தடுத்து பெரிய வட்டப் பாதையில் பயணித்து ஒரு கட்டத்தில் நிலவின் சுற்றுவட்டப்பாதையில் நுழையும். நிலவின் சுற்றுப் பாதையில் பயணிக்கும் கலனில் இருந்து நிலவில் தரையிறங்கும் கலன் பிரிவதில் இருந்து தரையிறங்குவது வரையிலான 15 நிமிடங்கள்தான் விஞ்ஞானிகளுக்கு மிகவும் சவாலானதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் டாக்டர் சிவன். https://www.bbc.com/tamil/science-49070127
  • 10 நபர்கள் 45 பேருக்கு சட்டப்படி இந்த அடி அடித்துள்ளார்கள் என்றால் என்ன சொல்லவது ஜக்கி சான், ஜெட்லீ, சம்மொ, டொனி ஜா, டொனி யென் போன்ற martial art நடிக வீரர்கள் இந்த நாட்டில்தான் வாழ்கின்றார்கள். சுவரா இந்த இனதெரியாதோர் இவர்களின் வில்லன்களின் அடியாட்களாக இருக்கும்