Jump to content

இணையம் வெல்வோம் 1- 23


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இணையம் வெல்வோம் - 1

 


 

Inaiyam_Velvom_1.jpg

ஆரொன் ஸ்வார்ட்ஸ், சிகாகோ நகரைச் சேர்ந்த 26 வயது அமெரிக்க வாலிபர்.

இன்று இணையத்தளங்களின் இண்டு இடுக்கிலெல்லாம் உபயோகிக்கப்படும் தகவலூட்டம் (RSS - web feed) எனும் தொழில்நுட்பத்தினை உருவாக்கிய முக்கியப் புள்ளிகளில் ஒருவராக இணையம் கூறும் நல்லுலகிற்கு அறிமுகமாகும் பொழுது அவருக்கு வயது வெறும் 14. தன் ஆழ்ந்த அறிவாற்றல் மூலம் ஏதெனும் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி கைகொள்ளாமல் சம்பளம் வாங்கி, விடுமுறையில் பட்டாம்பூச்சிகளோடு விண்ணைத்தாண்டும் வாய்ப்புகள் இருந்தாலும், அதையெல்லாம் தவிர்த்து கட்டற்ற தகவல் களஞ்சியமாக இணையத்தினை மாற்றுவதில் தீவிர ஈடுபாடு கொண்ட ஆரொன், இன்று வாசகர்களே செய்திகளின் முக்கியத்துவத்தைத் தீர்மானிக்கும் செய்தித்தளமாக புகழ்பெற்று விளங்கும் www.reddit.com தளத்தின் நிறுவனர்களில் ஒருவர்.

Aaron.jpg

ஆரொன் ஸ்வார்ட்ஸ்

இணையத்தில் உள்ள தகவல்கள் அனைத்தும் உலகத்திலுள்ள அனைவருக்கும் இலவசமாகக் கிடைக்க வேண்டும் என்று போராடும் Open Access Movement எனும் குழுவின் கதாநாயகன், அதற்கு எதிராக அமெரிக்க அரசு கொண்டு வந்த SOPA (Stop Online Piracy Act) எனும் சட்டத்தினை எதிர்த்து Demand Progress எனும் இயக்கத்தினை ஆரம்பித்து அதில் வெற்றியும் கண்டவர். கட்டற்ற தகவல் களஞ்சியமான விக்கிப்பீடியாவின் முக்கிய ஆர்வலர்.

ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் ஒரு வருடம் சமூகவியல் படித்து விட்டு அங்கு அறிவுப்பூர்வமான சூழல் இல்லை என்று காரணம் கூறி விலகி கல்வியாளர்களை வியர்க்க வைத்தவர். பின்பு ஹார்வர்டில் ஒழுக்கவியல் குறித்தான ஆராய்ச்சிப் படிப்பில் சேர்ந்தார். தமிழ் சினிமாவில் காதலர்களுக்கே யோசனை சொல்லும் குழந்தைகளுக்கு இணையாக கணிணித் தொழில்நுட்பத்தில் சிறு வயதிலேயே கோலோச்சிய ஆரொனின் சிந்தனையெல்லாம் இணையத்தில் தகவல்களை அனைவருக்கும் இலவசமாகக் கிடைக்கச் செய்வதிலேயே இருந்தது. தன் 21வது வயதில் அமெரிக்க நீதிமன்றங்களின் வழக்கு விசாரணை ஆவணங்களை இணையத்தில் கட்டணச்சேவை மூலம் தரவிறக்கம் செய்து கொள்ள ஏற்பாடு செய்திருந்த PACER (Public Access to Court Electronic Records) என்னும் தளத்தின் வழங்கியில் தன் சொந்த செலவில் ஏறக்குறைய அனைத்து ஆவணங்களையும் தரவிறக்கம் செய்து இணையத்தில் இலவசமாக உலவ விட்டு உலகத்தின் பார்வையைத் தன் பக்கம் திருப்பியவர். இதுகுறித்து உள்ளூர் போலீஸ் முதல் FBI வரை விசாரணை செய்தும் முடிவில் குற்றம் சாட்ட சட்டத்தில் இடமில்லாத காரணத்தால் விடுவிக்கப்பட்டவர்.

இப்படி இணைய உலகின் அசகாயசூரனாக அனைவராலும் பார்க்கப்பட்ட ஆரொன், கடந்த ஜனவரி 11, 2013 அன்று புரூக்ளினில் உள்ள தனது அடுக்குமாடிக் குடியிருப்பில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி, ஆரொன் குறித்து அறிந்தவர்களனைவருக்கும் பேரதிர்ச்சியையும், தாங்க முடியாத கோபத்தையும் ஏற்படுத்தியது. கோபத்திற்குக் காரணம் தற்கொலைக்கு முன்பான 24 மாதங்களில் ஆரொனின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள். அமெரிக்க பல்கலைக்கழகங்களின் ஆராய்ச்சிக் கட்டுரைகளின் ஆவணக் களஞ்சியமான JSTOR (Journal Storage) எனும் இணையத்தளத்தின் வழங்கியில் இருந்து எக்கச்சக்கமான ஆவணங்களைத் தரவிறக்கம் செய்தார் ஆரோன். இத்தளத்திலிருந்து எல்லோராலும் தரவிறக்கம் செய்து விட முடியாது. ஆனால் ஹார்வர்டின் ஆராய்ச்சி மாணவர் என்ற வகையில் ஆரொனுக்கு JSTOR தளத்தினைப் பார்வையிடவும், தரவிறக்கம் செய்து கொள்ளவும் உரிமை இருந்தது. இது தவிர MIT (Massachusetts Institute of Technology) வளாகத்தினுள் இருக்கும் வலையமைப்பில் உங்களை விருந்தினராகப் பதிவு செய்து கொண்டாலும் JSTOR தளத்திற்குச் சென்று தேவையான ஆவணங்களை யாரும் பதிவு செய்து கொள்ள முடியும்.theft.jpg

ஆரொன் MIT வளாகத்தினுள் ஒரு மடிக்கணிணியினை வைத்து விருந்தினராக அவர்களின் வலையமைப்பில் பதிவு செய்து, தான் எழுதிய ஒரு நிரல் மூலம் கிட்டத்தட்ட அனைத்து ஆவணங்களையும் தரவிறக்கம் செய்ய ஆரம்பித்தார். ஒரு குறிப்பிட்ட கணிணி மட்டும் ஏகப்பட்ட ஆவணங்களைத் தொடர்ந்து மேய்வதைக் கண்ட கண்காணிப்பாளர்கள் அந்த கணிணியின் MAC (Media Access Control) முகவரியினைத் தடை செய்தனர். வலையமைப்பின் பாதுகாப்பு சூட்சுமங்களை அறிந்த அன்பர்களுக்கு MAC முகவரியினை மாற்றுவதன்பது நம்மூரில் திரைப்படங்களுக்குத் தடை விதிக்கக் கோரி வழக்குப் போடுவதை விட எளிதானது. தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத ஆரொன் ஆவன செய்து தனது தரவிறக்க வேட்டையினைத் தொடர்ந்தார். JSTOR வலையமைப்பின் கண்காணிப்பாளர்கள் இம்சை தொடர்வது கண்டு, இம்முறை எத்தடையினையும் உருவாக்காமல், அதன் மூலத்தை நோக்கி தங்கள் தேடல் குதிரையை முடுக்கி விட்டனர், அது சென்று சேர்ந்த இடம் ஆரொன். கையும், கணிணியுமாக மாட்டிக் கொண்ட ஆரொன், ஆவணங்களனைத்தையும் திரும்ப ஒப்படைத்து JSTOR உடனான பஞ்சாயத்தினை முடித்து கொண்டார். MIT இது குறித்து வாயே திறக்கவில்லை.

ஆனால் ஆரொனைத் தொடர்ந்து கண்காணித்து வந்த அமெரிக்க அரசாங்கம் இப்பிரச்சினையை விடுவதாக இல்லை. MAC முகவரியினை மாற்றியது, நிரல் மூலம் விதிமுறைக்குப் புறம்பாக ஆவணங்களைத் தரவிறக்கம் செய்தது, மற்றும் பலப்பல காரணங்களைக் கூறி ஆரொன் மேல் வழக்குத் தொடர்ந்தது. இன்று பிறந்த குழந்தையை, இது வளர்ந்து 25 வயதில் திருடுவதற்குத் தான் இது பிறந்திருக்கிறது என்று கூறி கைது செய்வது போல, தரவிறக்கம் செய்த ஆவணங்களை, மாட்டியிருக்காவிட்டால் அவற்றை இணையத்தில் உலவ விட்டிருப்பார் ஆரொன் என்பதும் அமெரிக்க அரசின் முக்கியக் குற்றச்சாட்டு.

MAC முகவரியினை மாற்றுவதென்பது அனேக இணைய வல்லுநர்களின் அன்றாட நடவடிக்கைகளில் ஒன்று, ஆனால் சட்டப்படி அது ஆள்மாறாட்டம், தவறாக அடையாளப்படுத்தி ஏமாற்றுதல் போன்ற குற்றங்களுக்கு ஒப்பாகும் என்று ஒப்பாரி வைத்ததின் விளைவாக ஆரொனுக்கு சுமாராக 35 வருடங்கள் சிறையும், 1 மில்லியன் டாலர் அபராதமும் விதிக்க சட்டத்தில் இடமிருப்பதாக நீதிமன்றம் கூறியது, அதுவரை குற்றத்தினை ஒத்துக் கொள்ளாத ஆரொன், ஒப்புக் கொண்டால் குறைந்தபட்ச தண்டனை வழங்க வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்தது. விசாரணை, வாய்தா என்று இவ்வளவும் நடந்து முடிய இரண்டு வருடங்கள் ஆனது, இதனால் தொடர்ந்து ஏற்பட்ட மன உளைச்சலும், குற்றத்தினை ஒப்புக் கொள்ளாவிட்டால் கிடைக்கப் போகும் தண்டனை குறித்தான பயமும் ஆரொனை தூக்கில் தஞ்சமடைய வைத்து விட்டது.

மேலே ஆரொனின் மேல் சாட்டப்பட்டுள்ள அனைத்தும் கணிணி வலையமைப்புக் குறித்து அறிந்த, உணர்ச்சி வசப்படும் நபர்கள் அனைவரும் அவ்வப்போது செய்யும் செயல்கள். ஆனால் சட்டத்தின் படி உங்கள் வலையமைப்பில் உங்கள் அடையாளத்தினை வலையமைப்பு எண் மூலமாகவோ அல்லது MAC முகவரி மூலமாகவோ விதிமுறைகளை மீறி தரவிறக்கம் செய்வதை எந்த நாட்டிலும், எவரையும் ஆதாரமிருந்தால் தண்டிக்க முடியும். தினம், தினம் ராமசாமியும், கந்தசாமியும் இவற்றைச் செய்யும் பொழுது ஏன் ஆரொனை நோக்கி இப்படி கழுகெனப் பாய்ந்தது அமெரிக்க அரசு?. காரணம் விக்கிலீக்ஸ் மற்றும் அனானிமஸ்.

wikileaks_julian_assange_105973874.jpg

ஜூலியன் அசான்ஞ்

Collateral Murder காணொளியினை விக்கிலீக்ஸ் தளத்திற்கு வழங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டு மூன்று வருடங்களுக்கு மேல் சிறையிலிருந்து வழக்கு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வரும் பிராட்லி மேனிங் விசாரணையின் போதும், சிறையிலும் நடத்தப்படும் விதம் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு செய்திருந்தார் ஆரொன். மேலும் இணையத்தில் கட்டற்ற தகவல் முறையினைத் தடுக்கும் சட்டமான SOPA வினை எதிர்த்து வெற்றி காண்பதில் ஆரொனுக்கு உறுதுணையாக இருந்தது அனானிமஸ் எனும் இணையப் போராளிகள் இயக்கம். இது இரண்டுமே அமெரிக்க அரசாங்கத்தின் ரேடார் பார்வையில் ஆரொனைக் கொண்டு வந்து நிறுத்தியது.

இணையத்தின் எதிர்காலத்தை ஆழ்ந்த தொழில்நுட்ப அறிவாலும், சமூகப் பார்வையாலும் நிர்ணயிக்கப்போகும் சக்திகளில் ஒன்றாகப் பார்க்கப் பட்ட ஆரொனின் மரணத்திற்குப் பிறகு, ஆரொன் எங்கள் நீண்ட கால நண்பர் என்றும், தாங்கள் வெளியிட்ட சில தகவல்களை அனுப்பியவர்கள் யார் என்பதற்கான ஆதாரமில்லையென்றாலும் ஆரொன் கொடுத்திருக்கலாம் என்று சேதாரமில்லாமல் தங்கள் தொடர்பினைத் தெரிவித்து விக்கிலீக்ஸ் அஞ்சலி தெரிவித்தது, 2010-2011 காலகட்டத்தில் விக்கிலீக்ஸின் ஜூலியன் அசான்ஞ் உடன் நேரடித் தொடர்பில் ஆரொன் இருந்ததாகவும் சந்தேகிக்கப்படுகிறது. விக்கிலீக்ஸ் தங்கள் நட்பினைக் கூறி அஞ்சலி செலுத்த, அதிரடி ஆட்டக்காரர்களான அனானிமஸ் குழு அஞ்சலி செய்த விதம் அமெரிக்க அரசை அலற விட்டது. சட்டத்தினையும், அதன் விளைவானத் தண்டனைகளையும் காட்டி, நெருக்கடியில் தள்ளி ஆரொனை தற்கொலைக்குத் தூண்டியதாக அமெரிக்க நீதித்துறையினை நேரடியாகக் குற்றம் சாட்டிய அனானிமஸ், அவர்களின் இணையத்தளங்களுள் ஒன்றான www.ussc.gov தளத்தினை ஹேக் செய்து, அதில் ஆரொனுக்கு அஞ்சலி செலுத்தும் வாசகங்களை  வலையேற்றினர். அதிர்ந்து போன அமெரிக்க அரசு, உடனே வலைத்தளத்தினை சரி செய்தது. அடுத்த சில நாட்களில் அதே தளத்தினை மீண்டும் ஹேக் செய்து தங்கள் வலிமையை உணர்த்திய அனானிமஸ், தளத்திற்கு வருபவர்கள் இன்புறும் வண்ணம் கணிணியில் குழந்தைகள் விளையாடும் ஒரு விளையாட்டினையும் வலையேற்றி அமெரிக்க அரசிற்கு வெறியேற்றியது. மேலும் வழங்கியில் இருந்த அனைத்து குறியீடாக்கப்பட்ட ஆவணங்களனைத்தையும் (encrypted files) இணையத்தில் விநியோகித்தது. ஆரொனின் தற்கொலைக்குக் காரணமான இணையக் குற்றங்களுக்கானக் கடும் சட்டங்களை மாற்றியமைக்கா விட்டால் விநியோகிக்கப்பட்ட ஆவணங்களை அனைவரும் படிக்கும் வண்ணம் அவற்றுக்கான குறியீட்டுச் சொற்களை வெளியிடப் போவதாகவும் மிரட்டல் விடுத்தனர்.

Anonymous.jpg
அமெரிக்காவின் போர்முறைகளில் ஒன்றாக இணைய யுத்தம் (Cyber warfare) மாறி பலகாலமாகிவிட்ட சமயத்தில், உலக நாடுகளில் தங்கள் வலையமைப்பின் பாதுகாப்புக்காக அதிகம் செலவு செய்யும் நாடான அமெரிக்காவிற்கு அனானிமஸின் வலைத்தளத் தாக்குதல் வரலாற்றில் மறைக்க முடியாத வடு. இச்சம்பவத்திற்கு பிறகு அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சகம் சுமார் 2500க்கும் மேலான வலையமைப்புப் பாதுகாப்பு வல்லுநர்களை வேலைக்கு அமர்த்தப் போவதாக அறிவித்திருப்பதின் மூலம் இச்சம்பவத்தின் ஆழத்தினை புரிந்து கொள்ளலாம். அமெரிக்கர்களின் வரிப்பணத்தில் கணிசமான அளவினை முழுங்கும் அளவிற்கு வலையமைப்பின் பாதுகாப்பிற்கு எப்படி செலவு செய்கிறார்கள், அப்படி என்ன தான் ஒன்றுக்கு பத்தாய் பூட்டுகள் போட்டாலும் அதனை போகிற போக்கில் போட்டுத்தள்ளும் இந்த அனானிமஸ் குழுவினரின் வலிமையின் ரகசியம் என்ன, அவர்கள் யார், அவர்களின் வீரதீர சாகசங்கள், சத்தமில்லாமல் திரைமறைவில் நடக்கும் இணைய யுத்தங்களின் கருப்புப் பக்கங்கள், அவற்றுக்கு பலியான ஆரொன் போன்றவர்கள், இவற்றின் மூலம் இணையமென்னும் ரத்த பூமியில், பஞ்சு மிட்டாயும், குருவி ரொட்டியும் தேடி மனம் போன போக்கில் பின் விளைவுகள் குறித்து அறியாமல் அலைந்து திரியும் சாமனியர்களாகிய நாம் கற்றுக் கொள்ள வேண்டியவை என்ன...?

தொடர்வோம்

 


    - 4தமிழ்மீடியாவுக்காக தமிழரசன்

நன்றி http://www.4tamilmedia.com/cont/special-series/11825-inaiyam-velvom-1



இணையம் வெல்வோம் -2

hacking.jpg

இணையமென்னும் ரத்த பூமியில், பஞ்சு மிட்டாயும், குருவி ரொட்டியும் தேடி மனம் போன போக்கில் பின் விளைவுகள் குறித்து அறியாமல் அலைந்து திரியும் சாமனியர்களாகிய நாம் கற்றுக் கொள்ள வேண்டியவை என்ன...?

இப்படிக் கேட்கும் ஒருவருக்கு இணையமும் , தமிழும், சரிவரத் தெரிந்திருக்க வேண்டும்.தமிழரசனுக்கு இது இரண்டுமே நன்றாகத் தெரிந்திருக்கிறது என்பதை, வீக்கிலீக்ஸ் பற்றி உலகமே பரபரத்துக் கொண்டிருந்த வேளையில், அக்குவேறு ஆணிவேறென ' சுடுதண்ணி 'வலைப்பதிவில் தொடராக இவர் எழுதியபோதே தெரிந்து கொண்டோம்.

துரத்திப் பிடிக்கப் பாரத்த்தால் மனுசன் பாதுகாப்பு வளையங்கள் அமைத்தவாறு எட்டி நின்றே பேசினார். ஆனால் உரையாடல்களில் நெருங்கி வந்தபின், 'விக்கிலீக்ஸ்' குறித்து அவர் எழுதிய தொடரரை 4தமிழ்மீடியாவில் வெளியிட அனுமதி தந்தபோது, அதனை வாரந்தோறும் தொடராக வெளியிட்டிருந்தோம். பின்னர் 4தமிழ்மீடியாயின் இணைய வழங்கியினை மாற்றிய வேளையில், அத் தொடர் நிறுத்தப்பட்டது. ஆனால் அத் தொடரில் அவர் எழுதிய பல விடயங்கள் இணையப் பாவனையில் கருத்திற் கொள்ளப்பட வேண்டியவை என்பதனை உணர்ந்திருந்தோம்.

வெளிநாடொன்றில் இணையம் தொடர்பான பணியிலிருக்கும் அவரைத் தமிழ்நாட்டில் சந்தித்த போது, தமிழர்களிடத்தில் இணையப் பாவனை குறித்த அலட்சியம், அரசுகள் இதிற் காட்டி வரும் இறுக்கம், உலகம் சந்தித்து வரும் மாற்றங்கள் எல்லாவற்றையும் உள்ளடக்கிய ஒரு தொடரை 4தமிழ்மீடியாவில் எழுதவேண்டும், அது தமிழ்மக்களுக்கு இணையம் குறித்த புரிதல்களைத் தருவதாக அமைய வேண்டுமென கேட்டிருந்தோம். என்னென்ன விடயங்கள் குறித்து எழுதுவது என விரிவாகப் பேசிய பின் இத் தொடருக்குத் தமிழரசன் தந்த தலைப்பு "இணையம் வெல்வோம் ".

சென்ற வாரம் தொடங்கிய இந்தத் தொடர், இனி வாரந்தோறும் வருகையில், உலகளாவிய இணையம், உங்கள் உள்ளங்கையில் வந்தது போல் உணர்வீர்கள். ஏனெனில் தமிழரசனின் லாவகமான தமிழ், எளிமையாக, இலகுவாக இந்தத் தொடருக்குள் பயணிக்க உதவும். இத் தொடர் குறித்த உங்கள் எண்ணப்பதிவுகளை, கருத்துக்கள் பகுதியில் எழுதிச் செல்லுங்கள். அது தமிழரசனுக்கும், எங்களுக்கும் இருட்டில் பயணிப்பது போன்ற எண்ணத்தினை இல்லாது செய்யும் என்பதை வாசகர்களாகிய உங்களுக்கும், உங்கள் சார்பான வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தமிழரசனுக்கும் தெரிவித்து மகிழ்கின்றோம். - 4Tamilmedia Team

funny%2Bposter.jpeg

வலையமைப்பின் பாதுகாப்புக்கென சராசரியாகத் தனியார் நிறுவனங்களே மூன்று முதல் நான்கு மில்லியன் டாலர்கள் செலவு செய்யும் போது, கொம்பு முளைத்த அரசாங்கங்களைப் பற்றி சொல்லவே தேவையில்லை. இவ்வளவுப் பணத்தை வைத்து எப்படி செலவழிப்பது, கண்ணுக்குத் தெரியாத எதிரியிடமிருந்து எப்படிக் கணிணி வலையமைப்பைப் பாதுகாப்பது போன்ற கேள்விகள் உங்கள் காதுகளுக்குள் ரீங்காரமிடலாம்.

பிறந்தநாள், மஞ்சள் நீராட்டு, திருமணம் மற்றும் முதலிரவு போன்ற விழாக்களுக்கு ப்ளெக்ஸ் போர்டுகள் வைப்பதில் வையகத்தின் முன்னோடிகளான நாம், எப்படி அவற்றிற்கு வாழ்த்து வசனங்கள் எழுத 12 பேர் கொண்ட குழு வைத்து ஒரு அமைப்பாகத் திறம்பட செயல்படுகிறோமோ, அதைப் போலவே ஒவ்வொரு நிறுவனத்திற்கும் வலையமைப்பின் வடிவமைப்போர், அவற்றை வடிவமைப்புத் திட்டத்தின்படி நிறுவுவோர், செயல்பாட்டின் போது சிக்கல்கள் ஏற்பட்டால் சரி செய்வோர், பாதுகாப்பு வல்லுநர்கள் போன்ற பல அணிகள் சேர்ந்து தான் ஒரு வலையமைப்பின் தரத்தினை நிர்ணயிக்கிறார்கள்.

network%2Bsecurity_1.JPGமேற்சொன்ன அணிகளுக்கு வழங்கப்படும் ஊதியம், மற்றும் வலையமைப்பு உபகரணங்கள், குறிப்பாக வலையமைப்பின் பாதுகாப்புக்கென பிரத்யேகமான உபகரணங்கள் ஆகியவை தான்  நிறுவனங்களின் பணப்பெட்டிகளுக்கு கடும் சேதாரம் விளைவிக்கும் காரணிகள். இவற்றை வெறுமனே வாங்கி வைத்து விட்டால் மட்டும் பாதுகாப்புக்கு உத்தரவாதமா?, இல்லவே இல்லை. வலையமைப்பின் பாதுகாப்பென்பது இருமனம் இணையும் திருமணம் போல,  இருக்கும் காலம் வரை பராமரித்துக் கொண்டே இருப்பதும்,  ஒவ்வொரு காலகட்டத்திலும் மாறுபடும் தேவைகளுக்கேற்ப பாதுகாப்பு உபகரணங்களின் கட்டமைப்புகளில் மாற்றங்கள் செய்வதும் அவசியம்.

 இவ்வளவு சிரமப்பட்டு வலையமைப்பினை ஏன் பாதுகாக்க வேண்டும், உண்மையாகவே ஆபத்துகள் அதிகமா இல்லை எல்லாம் மனப்பிராந்தியா போன்ற எண்ணங்கள் நமக்கு அலைமோதுவது இயல்பான விஷயம். பொதுவாக இணையத்திற்கு செல்ல வழியில்லாத வலையமைப்புகளுக்கு ஆபத்துக் குறைவு. எனவே தான் இராணுவங்களின் போர் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படும் கணினி வலையமைப்புகள் திறந்தவெளி இணையத்தில் மேய்வதற்கு விடப்படுவதில்லை. இணைய இணைப்பில் இருக்கும் ஒவ்வொரு கணிணியும், லட்சுமண ரேகைக்குப் பின்னிருக்கும் சீதையினைப் போலத்தான், திக்குதெரியாத காடான இணையத்தில், எட்டுத் திக்கிலும் மாயவலை விரிக்கப்பட்டிருக்கும்.   இங்கு வில்லன்கள் வைரஸ், ட்ரோஜன், மால்வெர், ஸ்பைவெர் மற்றும் சில்லறை ஏமாற்று வேலைகளாகக் கூட இருக்கலாம்.

Remove%2BFake%2BAntivirus%2Bfrom%2Byour%


நீங்கள் சிவனே என்று சினிமா கிசுகிசு படித்துக் கொண்டிருக்கும் பொழுது திடீரென்று உங்கள் கணிணிக்கு கல்லீரலில் வீக்கமென்றும் எங்கள் மருந்து மூலம் சரிசெய்து வேகமாய் செயல்பட வையுங்கள் என்றும் திரையில் தகவல் தோன்றலாம் அல்லது கடும் வைரஸ் பாதிக்கப்பட்டுள்ள உங்கள் கணிணியினைக் காப்பாற்ற உடனே இங்கு க்ளிக்கவும் என்று உங்களைக் கலவரப்படுத்தலாம். இவற்றைக் கண்ட உடனே காஷ்மீர் வில்லன்களை அழிக்க மதுரையிலிருந்து லாரியில் கிளம்பும் விஜயகாந்தைப் போல் அவசரப் பட்டு விடக் கூடாது. உங்கள் வீட்டுத் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது, சட்டென  பாடுபவர் உங்கள் பெயரைக் குறிப்பிட்டு ‘அழகேசண்ணே இவ்வளோ பக்கத்துல உக்காந்து டிவி பார்க்காதீங்கண்ணே, கண்ணு கெட்டுப் போயிரும்’ என்று சொன்னால் எந்த அளவிற்கு நம்புவீர்களோ அந்தளவுக்குத் தான் நம்ப வேண்டும்.

email_scam.jpgஇது தவிர வாங்காத லாட்டரியில் கிடைத்த பல கோடிப் பரிசுப்பணத்தினை அனுப்பி வைக்க கொரியர் செலவுக்கு 500 ரூபாய் கேட்கும் அன்பர்கள், ஏதோ ஒரு நாட்டில் இராணுவப் புரட்சியின் போது பெரும் பணம் சுருட்டிய பின் மரணமடைந்த இராணுவத் தளபதிகள் அல்லது அரசியல்வாதிகளின் 18 முதல் 25 வயதிற்குட்பட்ட, உங்களிடம் சகலத்தையும் ஒப்படைக்கத் தயாராக இருக்கும் கல்யாணமாகாத அழகு மகள்கள், ஒரு மணி நேரத்திற்கு முன் உங்களுடன் ரோட்டுக் கடையில் பஜ்ஜி தின்ற அதே நண்பர் லண்டன் மாநகரில் கடவுச்சீட்டு, பணம், செல்பேசி  என அனைத்தையும் தொலைத்து விட்டு நடுரோட்டில் அபலையாய் உங்கள் பணத்தை எதிர்பார்த்துத் திரிவதாய் சொல்லும் மின்னஞ்சல்கள், என இணையத்தில் நமக்காக விரிக்கப்பட்டிருக்கும் வலைகளின் பட்டியல் மிக நீளம். இவற்றில் இரண்டு வகை உண்டு. உங்கள் பணத்தினையோ அல்லது உங்கள் கணிணியில் இருக்கும் தகவல்களையோ குறி வைப்பவை ஒரு வகை, நம்மை முட்டாளாக்குவதோடு மட்டுமே திருப்தியடைந்து சரக்கடித்து திருப்தியடைவது இரண்டாம் வகை, உதாரணத்திற்கு இது திருப்பதி பெருமாளின் அபூர்வ புகைப்படம் உடனே முகப்புத்தகத்தில் 100 பேருடன் பகிர்ந்து கொள்ளவும் அல்லது உங்கள் முகப்புத்தகக் கணக்கு முடக்கமாகி விடும் என மிரட்டுவதும், உடனே கடமையே  கண்ணாயினாராக அப்படியே அதனைச் செய்வதும் இணையத்தின் அன்றாட நிகழ்வுகள். பேருந்து நிலையங்களில் அம்பாளின் திருவிளையாடல் குறித்துச் சொல்லி, உடனேயே அதனை அஞ்சலில் 50 பேருக்கு அனுப்பச் சொல்லி மிரட்டும் துண்டுப்பிரசுரங்களின் பல நவீன அவதாரங்களில் இதுவும் ஒன்று.

மிகச்சமீபத்திய உதாரணமாக LinkedIn நிறுவனத்தின் சர்ச்சைக்குரிய மார்க்கெட்டிங் உத்திக்குப் பலியானவர்களைச் சொல்லலாம். நந்தன வருடம், தைத் திங்கள், மூகூர்த்தம் நிறைந்த ஒரு சுபயோக சுபதினத்தில் LinkedIn நிறுவனம் தங்களது பயனாளர்களாகிய ஏறத்தாழ 20 மில்லியன் பேருக்கு ‘எங்கள் தளத்தில் கணக்கு வைத்திருப்பர்களிலேயே நீங்கள் தான் பவர் ஸ்டார், உங்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்’ என்ற பொருள் படும் விதத்தில் கண்ணைக் கவரும் வடிவமைப்பில் ஒரு மின்னஞ்சலை அனுப்பியது. அந்த மின்னஞ்சலின் அடிப்பகுதியில் அத்தகவலை முகப்புத்தகம், டிவிட்டர் மற்றும் இன்னபிற சமூக வலைத்தளங்களுக்கு பகிர்ந்து கொள்வதற்கான வசதியும் கொடுக்கப்பட்டிருந்தது, கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.

LinkedIn-Meme-Top-1-Percent-Marketing.jp

இதற்கு பலியான ஆடுகளின் எண்ணிக்கை மிக அதிகம். ஒரே கல்லில் உலக அளவில் பல மாங்காய்களைச் சராமாரியாகப் போட்டுத்தள்ளியது LinkedIn நிறுவனம். இதன் மூலம் அவர்கள் அடைந்த பயன், சகட்டுமேனிக்கு சமூக வலைத்தளங்களில் ஆடுகளின் மூலமாக LinkedIn நிறுவனத்திற்குக் கிடைத்த இலவச விளம்பரம், மற்றும் சில உணர்ச்சிவசப்பட்ட பணக்கார ஆடுகள் தங்களது LinkedIn கணக்கினை கட்டணச் சேவைக்கு மாற்றியது மூலம் கிடைத்த வருமானம். அதாவது நாம் இவ்வளவு பிரபலமாகிற அளவுக்கு கூட்டம் கூட்டமாக யாரெல்லாம் தங்களது விவரங்களை LinkedIn தளத்தில் பார்வையிடுகிறார்கள் என்பதனை அறியும் அவாவின் விளைவாக LinkedIn நிறுவனத்திற்கு கிடைத்த அல்வா எக்கச்சக்கம். எங்கோ, எப்போதோ கைதவறி LinkedIn தளத்தில் கணக்கைத் தொடங்கி விட்டு, அந்தப்பக்கம் திரும்பிக்கூட பார்க்காத பல பேருக்கும் இம்மின்னஞ்சல் கிடைக்கும் பாக்கியம் பெற்றது குறிப்படத்தக்க அம்சம்.

மேற்கூறிய அனைத்து உதாரணங்களிலுமே பலியாவதா வேண்டாமா என்பதனை நம் செயல்களே தீர்மானிக்கின்றன. மிகச்சாதரணமாக ஏதாவது ஏடாகூடமான தளத்தில் பார்க்கக் கூடாததைப் பார்த்தக் காய்ச்சலில் எதிலாவது கைதவறி ஒரு முறை க்ளிக்கினால் கூட உங்கள் கணிணி பாதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது. வேகமாக செயல்படுவதுதான் மேதமை என்று நினைத்து கண்டபடி தட்டச்சிக் கொண்டே இருப்பது,  மற்றும் மவுஸ் மூலம் படபடவென க்ளிக்குவது போன்ற வியாதியஸ்தர்கள் இதற்குப் பலியாவது உறுதி.

Budget.jpg
எளிதாகத் தோன்றும் சில சமாச்சாரங்கள் இணையத்தொழில்நுட்பத்தில் விளைவிக்கும் சேதம் கனவிலும் நினைக்க முடியாத அளவிற்கு இருக்கும். இது போன்ற மிகச் சாதரணமாகத் தோன்றும் பொறிக்கு சில சமயம் அமெரிக்க வெள்ளை மாளிகை மற்றும் உலகத்தின் மிகப்பெரிய இராணுவத் தளவாடங்களை உற்பத்தி செய்யும் நிறுவனமான லக்ஹீட் மார்ட்டின் போன்ற முதலைகளும் சிக்கியிருக்கின்றன. வெள்ளை மாளிகையிலும், லக்ஹீட் மார்டின் நிறுவனத்திலும் வலையமைப்பின் பாதுகாப்புக்கு அள்ளி இறைத்திருப்பார்கள் என்பதையும், அங்கு பணிபுரிபவர்களுக்கு வலையமைப்பின் பாதுகாப்புக் குறித்து பயிற்சியளித்திருப்பார்கள் என்பதையும் சொல்லித் தெரியவேண்டியதில்லை. இருந்தாலும் அவர்களை வீழ்த்துவதற்கு ஹேக்கர்கள் பயன்படுத்திய ஆயுதம் Spear Phishing Attack.

அப்படி அத்தாக்குதலில் என்ன விசேஷம்?

அதனைத் தெரிந்து கொள்ளச் சற்றுப் பொறுத்திருங்கள்.

    - 4தமிழ்மீடியாவுக்காக தமிழரசன்

நன்றி http://www.4tamilmed...naiyam-velvom-1



இணையம் வெல்வோம் -3

 
 

Network%2BSecurity%2BAnalyst.jpg

திடீரென்று உங்கள் வீட்டுக் கதவைத் தட்டி காவல்துறையின் சீருடையில் ஒருவர் அதிகாரத் தோரணையில் விசாரித்தால் அனேகம் பேர் நிச்சயம் அந்த நபர் தங்கபதக்கம் சிவாஜியோ அல்லது வால்டர் வெற்றிவேல் சத்யராஜாகவோ தான் இருக்க வேண்டும் என்று நம்பி. 

கடகடவென நேற்று வைத்த மீன் குழம்பு முதல் இன்று காலை பல் விளக்கியது வரை விவரித்து புல்லரிக்க வைத்து விட வாய்ப்பிருக்கிறது. அப்படி ஒரு சந்தர்ப்பத்தில் சிக்கினால் முதலில் சீருடையில் இருப்பவர் உண்மையிலேயே காவல்துறையைச் சேர்ந்தவர் தானா என்று அடையாளப் படுத்திக் கொள்வேன் என்று கூறும் அன்பர்கள் தங்கள் தோளில் தட்டிக் கொடுத்துக் கொண்டு தொடரவும். கிட்டத்தட்ட அப்படியொரு சூழ்நிலையினை மின்னஞ்சல் மூலம் உருவாக்கி உங்களை உணர்ச்சி வசப்பட வைத்து பலியாடாக்குவது தான் Spear Phishing Attack.

ஒரு நல்ல திடம், மணம், சுவை நிறைந்த Spear Phishing தாக்குதலைச் சமைக்கத் தேவையான பொருட்களில் முதன்மையானது தரமான பலியாடு மற்றும் அதன் மின்னஞ்சல் முகவரி,  பலியாட்டின் நம்பிக்கைக்குரிய ஒருவரின் அல்லது எதைச் சொன்னாலும் உடனே செய்ய வைக்கக் கூடிய பணியிடத்தின் உயரதிகாரியின் பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரியும் ஆகும். இவற்றுடன், தாக்குதலுக்கென பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட virus, malware, spyware போன்ற ஆயுதங்களுடன் களமிறங்குதல் சிறப்பு. இவையெல்லாம் நம் தெரு முக்கில் உள்ள மளிகைக் கடையில் கிடைத்து விடாது எனபதை நினைவில் கொள்ளவும். முதலில் virus, spyware and malware ஆக செயல்படப்போகும் நிரல்களை எழுதும் திறன் வேண்டும். அந்த நிரல்கள் கணிணி மற்றும் வலையமைப்புப் பாதுகாப்புக்கான மென்பொருட்கள் மற்றும் தொழில்நுட்பங்களால் கண்டுபிடிக்க முடியாத வகையில் இருக்க வேண்டும். ஒரு வேளை உங்கள் தாக்குதல் வெற்றிகரமாக முடிந்தால் பலியாட்டின் கணிணியிலிருந்தும் அதன் வலையமைப்பில் இருந்து உங்களின் நிரல் உங்களிடம் தொடர்பு கொள்ள ஏதுவாக ஒன்றோ அல்லது உங்களது தாக்குதலின் நீள, அகலத்திற்கேற்ப பல வழங்கிகளோ இணையத்தின் இணைப்பிலிருக்க வேண்டும்.

 Impersonation.jpg


பொதுவாக Spear Phishing Attack என்பது பெரும் நிறுவனங்களின் வலையமைப்பிற்குள் நுழைவதற்கும் அவர்களின் தகவல்களைத் திருடுவதற்குமே பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. மேற்சொன்ன அனைத்தும் தயாரான பின், யாரைத் தாக்கப் போகிறோம் என்பதை முதலில் தீர்மானிக்க வேண்டும். உதாரணத்திற்கு உங்களின் தாக்குதலை ABC என்ற நிறுவனத்தின் மீது செயல்படுத்த வேண்டுமென்றால் முதலில் அங்கு வேலை பார்க்கும் நபர்களின் பெயர்கள் அவர்கள் பணிபுரியும் துறை, மேலதிகாரிகள், முதலாளிகள் போன்ற தகவல்களனைத்தையும் சேகரிக்க வேண்டும். இவையெல்லாம் கிடைத்ததும், பூப்போட்டுப் பார்த்து எளிதாக ஏமாற்றப்படுவதற்கு ஏற்றவகையில் அமைந்திருக்கும் பெயரைத் தேர்ந்தெடுக்கவும். தகவல் தொழில்நுட்பத்துறை சாராதவராகவும், தமிழ்ப் பெயராகவும் கிடைத்தால் சிறப்போ சிறப்பு.

Network%2BSecurity%2BAnalyst.jpg

உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவரின் துறை மேலாளரின் பெயரிலோ அல்லது உயரதிகாரியின் பெயரிலோ ஒரு மின்னஞ்சலை அனுப்பி, அதில் நயமாக பேசி, அவரின் கணிணியில் உங்கள் நிரலை விதைக்க வேண்டியது உங்களின் சாமர்த்தியம். ‘இத்துடன் இணைத்திருக்கும் கோப்பினைப் பிழைதிருத்தி அனுப்பவும்’ என்று சொல்லலாம், அல்லது ‘சென்ற வாரவிடுமுறையில் குடும்பத்துடன் கச்சத்தீவிற்கு சுற்றுலா சென்றிருந்தோம்.. புகைப்படங்களைப் பார்க்க இங்கு செல்லவும்’ என்று சொல்லி இணையத்திற்கு வரவைத்தும் உங்கள் நிரலை நிறுவலாம். எப்படி மற்றொருவரின் மின்னஞ்சல் முகவரியின் பெயரில் நாம் மின்னஞ்சல் அனுப்ப முடியும் என்று  மண்டைக்குள் விளக்கெரியும் நண்பர்கள் கூகுளாடவும், அதிக நேரமிருப்பவர்கள் இணைய நிரல்கள் எழுதக் கற்றுக் கொள்ளவும் பரிந்துரைக்கப்படுகிறது. இத்தாக்குதலில் பயன்படுத்தப்படும் மின்னஞ்சல்களின் முகவரிகள் மிகச்சரியாக இருக்கும் காரணத்தால் உணர்ச்சிவசப்பட்டு பல பேர் பலியாவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதன் மூலம் நடைபெறும் சிறு தவறு மூலம் நீங்கள் பணிபுரியும் நிறுவனத்தின் அல்லது உங்கள் கணிணி இருக்கும் வலையமைப்பின் சகல சங்கதிகளையும் எங்கோ ஒருக்கும் கட்டுப்பாட்டு வழங்கியிடம் அனுப்பிக் கொண்டிருப்பீர்கள்,

மெதுவாக பரவும் விஷம் போல உங்கள் கணிணியிலிருந்து கிடைக்கும் மேலதிகத் தகவல்கள் மூலம் கிட்டத்தட்ட வலையமைப்பில் இருக்கும் ஒவ்வொருவரையும் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமும் பலியாடாக மாற்றி, ஒரு நாள் நிறுவனத்தின் மொத்த மானமும் ஊடகங்களிலும், இணையத்திலும் மணக்க மணக்க பிரியாணியாகப் படைக்கப்படும். இது போன்ற தாக்குதலுக்குப் பலியாவது பெரும்பாலும் அரசாங்கத் துறைகள், இராணுவம், விண்வெளி மற்றும் அணு ஆய்வு மையங்கள், தொழில்நுட்பத் துறை நிறுவனங்கள் அதிலும் குறிப்பாக வலையமைப்பின் பாதுகாப்புத் துறை நிறுவனங்கள். பொதுமக்களுக்குத் தெரிந்தே விடக்கூடாத உண்மைகள் சந்தி சிர்ப்பதும், அதனால் ஏற்படும் அரசியல் சதிராட்டங்களும் தான் அரசாங்கம் இத்தகையத் தாக்குதல் மூலம் சந்திக்கும் பாதிப்புகள். மற்ற தனியார் நிறுவனங்கள் இதன் மூலம் பெருத்த பொருள் நஷ்டம் அடைந்து ஊமைக்காயத்துடன் அவையடக்கத்துடன் சங்கடப்பட்டு கூனிக் குறுகும் நிலைக்கு ஆளாவார்கள்.

spear-fishing-thumb.jpg
இராணுத்தளவாடங்களைத் தயாரிக்கும் உலகின் முன்னணி நிறுவனமான லக் ஹீட் மார்ட்டின் மற்றும் வலையமைப்புப் பாதுகாப்பற்கானத் தொழிநுட்பத்துறையின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான RSA போன்ற முதலைகள் இத்தாக்குதலினால் ஏற்பட்ட பொருளாதார இழப்புகளுக்கு பூஜ்ஜியங்கள் மிகமிக அதிகம். மிகவும் ரகசியத் தகவல்களை கையாளும் நிறுவனங்கள் இது போன்று ஒருவர் செய்யும் சிறு தவறினால் தங்கள் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையினை இழந்து விடுவதும், RSA போன்ற ஊரில் உள்ள மற்றவர்களின் வலையமைப்பின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் நிறுவனங்கள் மற்றவர்களால் கேலியும், கிண்டலும் செய்யப்படும் நிலைக்கு ஆளாவதுமே இது போன்ற தாக்குதல்களைக் கண்டு அனைவரும் அஞ்சுவதற்குக் காரணம்.

இதுவரை நாம் கனவிலும் நினைத்திராத எத்தனையோ தொழிநுட்பங்கள் வலையமைப்பின் பாதுகாப்பிற்காக அறிமுகப்படுத்தப்பட்டிருந்தாலும் உலகம் இருக்கும் வரை சவாலாக இருக்கப் போவது மனித தவறுகள் மட்டுமே. ஹேக்கர்கள் தங்கள் திறமையை விட அதிகம் நம்புவதும் இவற்றைத்தான். யாராவது தொலைபேசியில் ‘ஐயாம் மேஜர் சுந்தர்ராஜன் ஸ்பீக்கீங், நான் தான் மேஜர் சுந்தர்ராஜன் பேசுறேன்’ என்று சொன்னால் உடனே நம்பி தங்களின் கடவுச்சொல் முதல் வீட்டு நிலைக்கதவில் சாவி ஒளித்து வைத்திருக்கும் இடம் வரை பதார்த்தமாக பகிர்ந்து கொள்ளும் அன்பர்கள் இருக்கும் வரை இது போன்ற தாக்குதல்கள் வெள்ளை மாளிகை முதல் நேமத்தான்பட்டி வரை தொடர்ந்து கொண்டு தான் இருக்கும்.

TopSecret1.jpg
இதற்குத் தீர்வே இல்லையா?. இருக்கிறது. மின்னஞ்சலில் வெறும் தகவல்களை மட்டுமே பரிமாறும், கோப்புகளையோ அல்லது இணையச்சுட்டிகளையோ அனுமதிக்காத நிறுவனங்களும் அமைப்புகளும் உண்டு. குறிப்பிட்டக் கால இடைவெளியில் அனைத்து பணியாள்ர்களையும் அழைத்து வலையமைப்பின் பாதுகாப்புக் குறித்துக் காதைத் திருகி  வகுப்பெடுத்து, விழிப்பாக இருந்து கொள்ள அறிவுரைகள் வழங்கி செம்மைப்படுத்தும் நிறுவனங்களும் உண்டு. இது போன்று இணையத்தின் மூலம் தொடுக்கப்படும் தாக்குதல்கள் வெற்றியடைகிறதா அல்லது தோல்வியடைகிறதா என்பது அதனை நடத்தும் ஹேக்கர்களுத்தானேத் தெரியும். ஒரு வேளை வெற்றியடைந்து விட்டால், பாதிக்கப்பட்ட நிறுவனங்கள் எப்படி, எப்பொழுது அதனைக் கண்டுபிடிப்பார்கள்?.

இங்கு தான் ‘காவல்துறை உங்கள் நண்பன்’ என்ற அறிவிப்புப் பலகையுடன் உலா வரும் வலையமைப்புப் பாதுகாப்பு வல்லுநர்களைப் பற்றி நாம் தெரிந்து கொள்வது அவசியமாகிறது. பொதுவாக சிறுநகரங்களிலும், குக்கிராமங்களிலும் ஊருக்குள் புதிதாக ஒரு காகம் வந்தால் கூட சரியாகக் கண்டுபிடித்து, பயணம் தொடங்கிய இடம், செல்லும் இடம், பார்க்கப் போகும் நபர், அவருக்கு எந்த வகையில் சொந்தம் என்று சகலத்தையும் அலசிய பின் அனுப்பி வைக்கும் ஜெய்சங்கர்கள் ஊருக்கு வெளியே சுமைதாங்கிக் கல்லின் மேலோ அல்லது பாலத்திலோ இருந்து கொண்டு எப்படி ஊருக்குள் வருவோர், போவோரை அளவெடுப்பார்களோ கிட்டத்தட்ட அதே வேலையினை உங்கள் கண்ணி வலையமைப்பில் பார்ப்பவர்கள் தான் இவர்கள். இவர்களின் உலகம் முற்றும் மாறுபட்டது, இவர்கள் பார்வைபடும் இடமெல்லாம் வலையமைப்பு எண்களும்(IP Address) மற்றும் வலைத்தொடர்பு எண்களுமே (port) நிறைந்திருக்கும். ஆயிரக்கணக்காண நபர்கள் பணியாற்றும் இடமாக இருந்தாலும் இத்துறையில் இரண்டு அல்லது மூன்று பேர் தான் இருப்பார்கள். இவர்களால் எப்படி மிகப்பெரிய வலையமைப்பின் பாதுகாப்பினைக் கட்டுப்படுத்த முடிகிறது, எப்படி வலையமைப்பின் தாக்குதல் ஏற்பட்டாலோ அல்லது பாதுகாப்புக் குறைபாட்டினால் பாதிக்கப்பாட்டாலோ இவர்களின் கண்களுக்கு மட்டும் அது தெரியவருகிறது?.. இவர்கள் பயன்படுத்தும் தொழில்நுட்பங்கள் என்ன?

தொடர்வோம்..

    - 4தமிழ்மீடியாவுக்காக தமிழரசன்

நன்றி http://www.4tamilmed...naiyam-velvom-1

Link to comment
Share on other sites

http://youtu.be/WaPni5O2YyI

 

 

Anonymous Hacks US Government Site, Threatens Supreme 'Warheads'
anonymousmask.jpg
The hacktivist group Anonymous hacked the U.S. federal sentencing website early Saturday, using the page to make a brazen and boisterous declaration of "war" on the U.S. government.

The group claims mysterious code-based "warheads," named for each of the Supreme Court Justices, are about to be deployed.

As of midnight Pacific time, the front page of Ussc.gov — the Federal agency that establishes sentencing policies and practices for the Federal courts — is filled with a long screed in green on black, together with this YouTube video:

 

 

All areas of ussc.gov other than the front page appear to be functioning normally. In other words, there's no denial of service attack or widespread vandalism. (Update, an hour later: it's getting a little slow and has all the hallmarks of a DDoS.)

At the bottom of the page is a series of nine files, mirrored three times. Each file is named for a current U.S. Supreme Court Justice.

The statement opens with a lament for Aaron Swartz, the Reddit programmer and Internet activist who committed suicide earlier this month. Promising revenge for his treatment at the hands of a federal prosecutor, the screed veers into some of the most inflammatory — dare we say hyperbolic — language we've seen on a simple front page hack.

The group talks of planting "multiple warheads" on "compromised systems" on various unnamed websites, and encourages members to download a given file from ussc.gov that is "primed, armed and quietly distributed to numerous mirrors." It has given the warhead "launch" the name of "Operation Last Resort," the text said:

Here's the list of files the group is encouraging its followers to download:

There has been a lot of fuss recently in the technological media regarding such operations as Red October, the widespread use of vulnerable browsers and the availability of zero-day exploits for these browsers and their plugins. None of this comes of course as any surprise to us, but it is perhaps good that those within the information security industry are making the extent of these threats more widely understood.

Still, there is nothing quite as educational as a well-conducted demonstration...

Through this websites and various others that will remain unnamed, we have been conducting our own infiltration. We did not restrict ourselves like the FBI to one high-profile compromise. We are far more ambitious, and far more capable. Over the last two weeks we have wound down this operation, removed all traces of leakware from the compromised systems, and taken down the injection apparatus used to detect and exploit vulnerable machines.

We have enough fissile material for multiple warheads. Today we are launching the first of these. Operation Last Resort has begun...

 

Screen-Shot-2013-01-26-at-12.16.33-AM-64

What's in the files, and does it have anything to do with the recent "Red October" series of security breaches, thought to be prevalent in China and Russia? Anonymous plays coy:

What "collateral damage" is the hacktivist group talking about — and is there anything to their threats? We're continuing to update this story, but give us your take in the comments.

The contents are various and we won't ruin the speculation by revealing them. Suffice it to say, everyone has secrets, and some things are not meant to be public. At a regular interval commencing today, we will choose one media outlet and supply them with heavily redacted partial contents of the file. Any media outlets wishing to be eligible for this program must include within their reporting a means of secure communications.

We have not taken this action lightly, nor without consideration of the possible consequences. Should we be forced to reveal the trigger-key to this warhead, we understand that there will be collateral damage. We appreciate that many who work within the justice system believe in those principles that it has lost, corrupted, or abandoned, that they do not bear the full responsibility for the damages caused by their occupation.

It is our hope that this warhead need never be detonated.

http://mashable.com/2013/01/26/anonymous-hack-government-website-declares-war/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணையம் வெல்வோம் - 4

 
 

Network%2BTraffic.jpg

வலையமைப்புப் பாதுகாப்பு வல்லுநர்களுக்கு இரு பெரும் பொறுப்புகள் உண்டு. ஒன்று தாங்கள் கண்காணிக்கும் வலையமைப்பினை எந்தவித தாக்குதலுக்கும் பலியாகாமல் வருமுன் காப்பது,

அது முடியாதபட்சத்தில் அதனைக் கண்டுபிடித்து சீராக்குவது. படிப்பதற்கு எளிதாகத் தோன்றினாலும், மிகவும் சிரமமான, தகவல் தொழில்நுட்ப வேலைகளில் முதலிடம் இதற்குத் தான்.

தாங்கள் பாதுகாக்க வேண்டிய வலையமைப்பின் கட்டமைப்பு, பயன்பாட்டுக்கு உள்ள பாதுகாப்புத் தொழில்நுட்பங்கள், அணுதினமும் மாறிவரும் பாதுகாப்புச் சூழலை கிரகித்து வருதல், தங்கள் வலையமைப்பின் பயன்பாடு குறித்தான தகவல்களை விரல் நுனியில் வைத்திருத்தல், நடு ராத்திரி தூக்கத்தில் எழுப்பினாலும் முனகல் சத்தம் கூட போடாமல் வேலை பார்க்கத் தயாரயிருத்தல் ஆகியவை இவர்களின் அத்தியாவசியமான அம்சங்கள். இவர்களுக்குள்ளும் குறிப்பிட்ட தொழில்நுட்பத்தின் சிறப்பு வல்லுநர்கள், கணினித் தடயவியல் நிபுணர்கள், வலைக் கட்டமைப்புக் ஆலோசகர்கள் என பலவகைக் குழுக்கள் உண்டு. உதாரணத்திற்கு ஒரு நிறுவனத்தில பணி நேரத்தில் வேலை பார்க்காமல் அளவு கடந்து வலை மேய்பவர்கள், சக ஊழியர்களிடம் சாட்டில் வரம்பு மீறி சதா ஜொள்ளித் திரிபவர்கள், போட்டியாளர்களிடமோ அல்லது எதிரிகளிடமோ முக்கிய, ரகசியத் தகவல்களை வலை மூலம் கருணா வேலை செய்பவர்கள் என்று கணிணித் திரைக்குப்பின் முகம் மறைந்திருப்பதால் மிகவும் பாதுகாப்பாக இருப்பதாக நினைத்துக் கொண்டு அட்டகாசம் செய்யும் சகலரையும் கையும், கணிணியுமாகப் பிடித்து பீதியூட்டுவது இவர்களின் அன்றாட பணிகளில் சாதாரணம். இதன் பின்விளைவுகளாக குற்றம் செய்பவரின் வாழ்க்கையில் ஏற்படும் பாதிப்புகள் மிகக்கடுமையாக இருக்கும். சிறை, வேலை இழப்பு, விவாகரத்து, சமயங்களில் தற்கொலை என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம், பொதுவாக இது போன்ற பின் விளைவுகள் குறித்து பாதுகாப்பு வல்லுநர்களுக்கு எதுவும் தெரியாதவாறு அவர்கள் பணிபுரியும் நிறுவனங்கள் பார்த்துக் கொள்ளும். அதன் மூலம் ஏற்படும் மன உளைச்சலும், குற்றவுணர்ச்சியும் அடுத்த முறை ஒரு வலைக்குற்றத்தினைப் பற்றி விசாரணை செய்யும் பொழுது பாதிக்க வாய்ப்பிருப்பதே காரணம்.

ticker-penetration-testing-943x345.jpg

எல்லோரையும் போல சாதரணமாக நேர்முகத்தேர்வு, குற்றவியல் பின்னணி குறித்தான விசாரணை போன்ற சம்பிரதாயங்கள் முடிந்து பணியில் சேரும் சாதா வல்லுநர்களும் உண்டு, ஜீன்ஸ்-டீஷர்ட் அணிந்து வரவேற்பறையில் இருக்கும் வண்ணத்துப்பூச்சிகளைக் கவிழ்த்து வலையமைப்பினை ஹேக் செய்து தங்களின் சகல திறமைகளையும் நிரூபித்து அசத்தலாக நுழையும் சூப்பர் வல்லுநர்களும் உண்டு, இவர்கள் உள்ளே நுழைந்ததும் செய்யும் முதல் வேலை வலையமைப்பின் கட்டமைப்பினை அலசித் துவைத்துக் காயப்போடுவது தான். காரணம் ‘ஊசி இடம் கொடுத்தால் தானே நூல் நுழைய முடியும்’ என்று ஐம்பது வருடங்களுக்கு முன்பே நம்மூர் வக்கீல்கள் பாலியல் வல்லுறவு வழக்குகளுக்கென சிறப்பாகக் கண்டுபிடித்த அதே தத்துவம் தான்.

வலையமைப்பு என்பது உங்கள் வீட்டைப் போன்றது. எந்தெந்த இடத்தில் ஜன்னல், நிலைக்கதவு, வாசல் வைக்க வேண்டும் என்று ஒரு முறை இருக்கிறதோ அதே போன்று வலையமைப்பிலும் இருக்கிறது. வீட்டுக்கு வெளியில் இருந்து உள்ளே நுழைய ஏதுவாயிருக்கும் முன்வாசல், பின் வாசல், ஜன்னல் கதவுகளை எப்படி சிறப்புக் கவனத்துடன் கனத்த இரும்புக் கம்பிகளைக் கொண்டும், பெரிய அளவு பூட்டுக்களையும் போட்டு அலங்கரித்து அழகு பார்க்கிறோமோ அதைப் போலவே வலையமைப்பினிலும் வடிவமைப்பிற்கான சாஸ்திர, சம்பிரதாயங்கள் உண்டு. ஒவ்வொரு வலையமப்பிலும் இரண்டு புள்ளிகள் சிறப்புக் கவனம் பெறுகின்றன. ஒன்று உள் வலைப்போக்குவரத்து வெளியே இணையத்துக்குச் செல்லும் வழி (Egress Point) மற்றது இணையத்தில் இருந்து வரும் வலைப்போக்குவரத்து உங்கள் நிறுவனத்தின் உள்வலையமைப்பிற்குள் நுழையும் வழி (ingress Point). உங்கள் வீட்டில் உங்களுக்கு இணைய வசதியினை தரும் நிறுவனத்தின் வலைத்தொடர்பு சாதனமே உள்ளே நுழைவதற்கும், வெளியே செல்லுவதற்குமானத் தொடர்புப் புள்ளியாக விளங்குகிறது என்பதனை நினைவில் கொள்ளவும்.

igress-egress_points.png

உதாரணத்திற்கு நீங்கள் பணிபுரியும் நிறுவனத்தில் இருந்து ஒரு இணையத்தளத்தின் முகவரியினை உங்கள் உலாவியில் உள்ளிடும் பொழுது உங்களின் வலைப்போக்குவரத்து வெளியே இணையத்திற்குச் சென்று (egress point) நீங்கள் கேட்கும் தகவல்களை அத்தளத்தின் வழங்கியிடம் தெரிவிக்கும். அதற்குப் பதிலாக வழங்கி தரும் தகவல்களை இணையத்திலிருந்து உங்கள் நிறுவனத்தின் வலையமப்பிற்குள் (ingress point) கொண்டு வந்து சேர்க்கும். ஒரு வலையமைப்பின் பாதுகாப்பு அரண் இந்த இரண்டு புள்ளிகளிளும் தான். வலையமைப்பில் இருந்து வெளியே செல்லும் தகவல்கள் அனைத்தும் அனுமத்திக்க பட்ட இடத்திற்கு மட்டும் செல்வதையும், அவை எந்தவித வில்லங்கம் இல்லாத தகவல் பறிமாற்றம் என்பதையும் உறுதி செய்வது பாதுகாப்பு வல்லுநர்களுடைய பணி. சிலநேரம் நிறுவனத்தில் பணிபுரியும் கணக்குப்பிள்ளை திடீரென ’30 நாட்களுக்குள் ஹேக்கராவது எப்படி?’ படித்து விட்டு வந்து நிறுவனத்தின் வலையமைப்புக்குள் இருந்து கொண்டு நாசாவின் இணையத்தளத்திற்குள் ராக்கெட் விட்டு உங்களுக்கு காய்ச்சல் வரவைக்க வாய்ப்பிருப்பதால் தாங்கள் நிர்வகிக்கும் வலையமைப்பின் பயனாளர்கள் யார், அவர்கள் வலையமைப்பிற்கு வெளியே இணையத்திற்கு எதற்கெல்லாம் செல்கிறார்கள், எங்கெல்லாம் செல்கிறார்கள் என்பதைக் கட்டுக்குள் வைத்திருப்பது பாதுகாப்பு வல்லுநர்கள் பணிகளில் ஒன்று.

அதே போன்று இணையத்தில் இருந்து உங்கள் உள்வலையமைப்பிற்குள் வரும் தகவல்களான மின்னஞ்சல்கள், பயனாளர்கள் உலாவியின் வழியாகக் கேட்டுப்பெறும் அனைத்து வகையான இணையத்தளங்கள் என அனைத்தையும் கட்டுப்பாடோடும், கண்காணிப்பிலும் வைத்திருப்பது அவசியம். இவையனைத்தையும் கண்காணிப்பதும், கட்டுக்குள் வைத்திருப்பதும் அவ்வளவு எளிதல்ல. இவ்வளவுத் தகவல்களும் திரைக்காட்சிகளாகத் துல்லியமாக திரையில் தோன்றப்போவதில்லை, இவையனைத்தும் வலையமைப்பு எண்களாகவும் (IP Address), வலைத்தொடர்பு எண்களாகவுமே காணக்கிடைக்கும் (Port numbers), இப்படி எங்கேங்கே காணினும் எண்களாக காட்சி தரும் தகவல்களை எப்படி இனங்கண்டு கொள்வது?. வலையமைப்பினில் உள்ள ஒவ்வொரு உபகரணத்திற்கும், உங்கள் கணிணி உட்பட உள்ள முகவரி மற்றும் அடையாளம் தான் வலையமைப்பு எண். உங்கள் வலைதொடர்பின் முறையினைப் பொறுத்து (protocol)) பயன்படுத்தப்படும் வலைத்தொடர்பு எண் மாறுபடும். உலாவியில் நாம் பொதுவாக பயன்படுத்தும் இணையத்தள மேய்தலுக்கு (http) 80, கோப்புகள் பகிரப் பயன்படுத்தபடும் FTPக்கு (File Transfer Protocol) 21, பாதுகாப்பான இணையத்தளத் தொடர்புக்கு பயன்படுத்தப்படும் குறீயீட்டு முறைப்படுத்தப்பட்ட வலைப்போக்குவரத்துக்கு 443 இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். இது போல நாம் கணிணியில் செயல்படுத்தும் ஓவ்வொரு நிரலுக்கும் அல்லது மென்பொருளுக்கு என்று தனிக்குணங்களில் அவைப் பயன்படுத்தப்படும் வலைத்தொடர்பு எண்களும் உண்டு.

Different%2Btechnologies%2Bfor%2Bnetwork

இப்படி, வலையமைப்பினுள் இருக்கும் ஒவ்வொரு சாதனத்தின் வலையமைப்பு எண்களையும் அவர் பயன்படுத்தும் அனைத்து வகையான வலைத்தொடர்பு எண்களையும் பார்த்துப் பார்த்துக் கண்கள் சிவந்த பாதுகாப்பு வல்லுநர்களுக்கு இவையனைத்தும் தலைகீழ் மனப்பாடம். இவர்களின் விவாதங்களின் போது மென்பொருட்களின் பெயர்களைத் தனியே உச்சரிப்பது அரிது அப்படியே உச்சரித்தாலும் கூடவே வலைத்தொடர்பு எண்களைக் குறிப்பிட மறக்க மாட்டார்கள். அத்தனைத் தகவல்களையும் அறிந்து வைத்திருந்தாலும் 24 மணி நேரமும் வலையமைப்பின் செயல்பாடுகளைக் கட்டுக்குள் வைத்திருப்பது மிகக் கடினம். பாதுகாப்பு வல்லுநர்களின் வேலையை எளிதாக்க மின்னஞ்சல் (Email Security gateway), இணையதளப் பயனளார்களின் போக்குவரத்து (Web Gateway/URL Filtering), இணையத் தள வழங்கிகளுக்கு (Web Application Firewall), பொதுவான வலைப்போக்குவரத்து (Network Security – IPS/IDS), தகவல் இழப்பினைத் தடுத்தல் (Data Loss Prevention) என பலவிதமான தொழில்நுட்பங்கள் உண்டு.

இப்படி ஆயிரம் தொழில்நுட்பங்கள் இருந்தாலும், அசகாய சூரர்களான பாதுகாப்பு வல்லுநர்கள் இருந்தாலும், இணைய உலகின் வலைப்பாதுகாப்புக்கான அச்சாணியாக விளங்கும் சமாச்சாரம் ஒன்று உள்ளது. அது இன்றி வலையுலகில் அணுவும் அசைவதில்லை. ஒரு வலையமைப்பினை கட்டுடைத்து உள்நுழைவதை விடவும் இதனை அழித்தலோ அல்லது மாற்றியமைத்தலோ மிகப்பெரியக் குற்றமாகக் கருதப்படும். அது என்ன?

தொடரும்…

   - 4தமிழ்மீடியாவுக்காக தமிழரசன்

நன்றி http://www.4tamilmed...naiyam-velvom-1

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணையம் வெல்வோம் - 5

 

lock-your-computer-up.jpg

வலையமைப்புப் பாதுகாப்பின் அச்சாணியாக விளங்குவது செயற்பதிவு (event log) என்னும் சமாச்சாரம் தான்.

அதில் அப்படி என்ன விசேஷம் என்றால், எந்த ஒரு கணிணி, வலையமைப்பு உபகரணங்கள் மற்றும் நாம் பயன்படுத்தும் மென்பொருட்கள் இவையனைத்தும் வெளிப்பார்வைக்கு நாம் சொல்வதெல்லாம் செய்யும் விளையாட்டுப் பொருளாகத் தெரிந்தாலும், பயனாளராகிய நாம் என்னெவெல்லாம் செய்யச் சொல்கிறோம், அதனைச் செயல்படுத்துவதன் மூலம் உங்கள் கணிணி, கோப்புகள் மற்றும் உங்கள் வலையமைப்பில் நிகழும் மாற்றங்கள் அனைத்தும் செயற்பதிவுகள் மூலம் சேமிக்கப்படுகின்றன.

‘இன்னைக்கி எங்க வீட்ல தோசை சுட்டோம்’ என்று சொன்னால் கூட, எங்கள் ஆட்சிக்காலத்தில் தான் அதற்கு மாவாட்டிக் கொடுத்தோம் என்று பெருமை பாராட்டும் சட்டமன்றத்தில் எப்படி நம் அரசியல்வியாதிகள் தங்கள் திருவாய் மலர்ந்தருளும் அனைத்தும் பதிவு செய்யப்படுகின்றதோ கிட்டத்தட்ட அதைப்போலவே உங்கள் மென்பொருள், வலையமைப்புப் போக்குவரத்து அனைத்தும் பதிவு செய்யப்பட்டு ஒரு கோப்பினில் சேமித்து வைக்கப்படும். ஒரு வித்தியாசம், செயற்பதிவுகளில் இருந்து எதையும் சபைக்குறிப்பில் இருந்து நீக்கி விடுவதைப்போல அழித்து விட முடியாது. உடனே செயற்பதிவுகள் எப்படி இருக்கும் என்று பார்த்து விடத் ‘துடிக்குது புஜம், ஜெயிப்பது நிஜம்’ என்று திமிறும் அன்பர்கள் உங்கள் கணிணி Windows இயங்குதளத்தில் செயல்படுவதாக இருந்தால் Control Panel -> Event Viewer சென்று சுற்றிவரவும்.

கேட்பதற்கு எளிமையாக இருக்கும் இந்த செயற்பதிவுகள் தரும் தகவல்களின் ஆழம் மிகமிக அதிகம். செயற்பதிவுகள் மூலம் உங்கள் கணிணியோ அல்லது வலையமைப்பு உபகரணமோ எத்தனை மணிக்கு இயங்க ஆரம்பிக்கிறது, நிறுத்தப்படுகிறது என்பது முதல், யாரெல்லாம் உள்நுழைகிறார்கள், அவர்கள் என்னென்ன மென்பொருட்களைப் பயன்படுத்துகிறார்கள், எந்தெந்த கோப்புகளை பயன்படுத்துகிறார்கள், எவற்றைப் படிக்கிறார்கள், எவற்றில் மாற்றம் செய்கிறார்கள், கணிணியின் வெப்பமதிகமாகி காய்ச்சலடிக்கிறதா, செயலி (processor) அதிக வேலைப்பளுவால் மூச்சுத்திணறுகிறதா, உபகரணத்தினுள் வெப்பத்தினை வெளியேற்ற வைத்திருக்கும் காற்றாடி சுற்றுகிறதா என்பது வரை அனைத்தும் வருடம், மாதம், தேதி, மணி, நிமிடம், நொடி என்று அத்தனை விவரங்களையும் ஒரு கணிணியிலோ/வலையமைப்பு உபகரணத்திலேயோ கண்டுபிடிக்க முடியும்.

event_logs_raining.jpg

இந்த செயற்பதிவுகள் தான் இணையக் குற்றங்களுக்கு சட்டரீதியான ஆதாரம். எந்த ஒரு முறையான வலையமைப்பிலும் செயற்பதிவுகளை மாற்றம் செய்வதோ, பார்வையிடுவதோ பொதுப்பயனாளர்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருக்கும். அதை மீறி ஏதாவது குறுக்கு வழியில் அதனை அழிப்பதோ, மாற்றம் செய்வதோ கடும் பின்விளைவுகளை ஏற்படுத்தும். இவை சட்டரீதியான விசாரணைகளுக்கு முக்கிய ஆதாரங்களாக நீதிமன்றங்களால் எடுத்துக் கொள்ளப்படுமென்பதை அவ்வளவு எளிதாகப் படித்து விட்டுக் கடந்து சென்றுவிட முடியாது. செயற்பதிவுகளுக்கு உண்மையிலேயே அது பதிவு செய்யும் செயல்களுக்கான ஆணைகளைத் தரும் மனிதர் யார் என்பது தெரியாது, அதனைப் பொருத்தவரை ஒவ்வொரு செயலுக்கும் ஒரு பயனாளர் பெயர் தான் காரணம். குறிப்பிட்ட ஒரு செயல்பாடு நடக்கும் பொழுது அந்தக் கணிணியிலொ அல்லது வலையமைப்பு உபகரணத்திலோ எந்த பயனாளர் உள்நுழைந்திருக்கிறாரோ அவர் பெயர் தான் பதிவு செய்யப்படும்.

அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டிருக்கும் பொழுது பட்சி கூப்பிடுகிறதென்று சலனப்பட்டு உங்கள் கணிணியினை பூட்டாமல் காபி குடிக்கப் போனாலோ அல்லது உங்கள் கடவுச்சொல் அடிக்கடி மறந்துபோய் இம்சிக்கிறதென்று கணிணித்திரையின் மேலேயே ஒரு காகிதத்தில் கோவில் மின்விளக்கிற்கு உபயம் எழுதும் அளவுக்கு பெரிதாக அதனை எழுதி வைத்தாலோ உங்களை நிமிடத்தில், மறுநாள் காலை அனைத்து தொலைக்காட்சி நிருபர்களும் ‘இவர் இப்பத்தான் இப்படியா இல்ல சின்ன வயசிலேர்ந்தே ஒரு மாதிரி தானா?’ என்று உங்கள் வீட்டுத் தெருவில் விசாரிக்கும் அளவுக்கு பிரபலமான குற்றவாளியாக்க முடியும். ஏனெனில் உங்கள் கணிணியின் மூலமாகவோ அல்லது உங்களின் வடமில்லா வலையமைப்பு மூலமாகவோ உள்நுழைந்து இணைய இணைப்பினைப் பயன்படுத்தி யாராவது வழக்குப் போடும் அளவிற்கு மானமிருக்கும் பிரபலங்களை மானக்கேடாகத் திட்டி மின்னஞ்சலாம், டிவிட்டலாம், உங்கள் உலாவியில் பயன்படுத்தும் மின்னஞ்சல், முகப்புத்தகம் ஆகியவற்றின் கடவுச்சொற்களை உங்கள் வசதிக்காக உலாவியிலேயே (remember password feature) சேமித்து வைக்கும் ஆசாமியாக நீங்கள் இருந்து விட்டால் மிகச் சிறப்பு, இப்படி செய்யப்படும் அனைத்து குற்றங்களுக்கும் தொழில்நுட்ப ரீதியாக விசாரணை நடத்தும் போது, முக்கிய ஆட்டக்காரராக ஆடப்போவது செயற்பதிவுகள் மட்டுமே. செயற்பதிவுகள் பயனாளர் பெயரை மட்டுமே சொல்லும், அதனைப் பயன்படுத்திய மனிதர் யாரென்பது குறித்து சட்டமும், செயற்பதிவும் கொஞ்சம்  கூட அலட்டிக் கொள்ளப்போவதில்லை.

cyber-crime.jpg

பிறகு இது குறித்து யார் தான் கவலைப்படுவது?. நாம் தான். இதனை மனதில் வைத்துத்தான் ஒவ்வொரு பயனாளரும் தங்கள் கடவுச்சொற்களை இறுக்கி முடிந்து வைத்துக்கொள்ளுங்கள், உங்கள் வீட்டில் வடமில்லா வலையமைப்பு இருந்தால் அதனைக் கடுமையானக் கடவுச்சொல் மூலம் பூட்டி வையுங்கள் என்று வன்மையாக வலையமைப்புப் பாதுகாப்பு வல்லுநர்கள் பரிந்துரைக்கிறார்கள். ‘நாங்களும் காசு கொடுத்து வாங்கிட்டோம்ல’ என்று வடமில்லா வலையமைப்பு உபகரணங்களை வாங்கி வைத்து விட்டு மார்தட்டும் மைனர் குஞ்சுகள் தயவு செய்து அது எந்த அளவு பாதுகாப்பாக இருக்கிறது என்பதனை, அதனை நிறுவ வரும் வல்லுநரிடம் நறுக்கென்று கேட்டு, அதனை செயல்படுத்தவும் சொல்லவும். இதனை இங்கு அழுத்திச் சொல்லக் காரணம் எந்தப் பொருள் வாங்கினாலும், எப்பொழுதும் நாம் படிக்காமலேயேக் கையெழுத்திடும் காகிதங்களின் நிபந்தனைகள் பட்டியலில் பாதுகாப்புப் பாலெல்லாம் அழும் குழந்தைகளுக்கு மட்டும் கொடுக்கவும் என்று தான் இருக்கும். எனவே மறக்காமல் அழுது வைக்கவும். இப்படி நிபந்தனை விதிப்பது, வாரத்திற்கு இருமுறை ‘அக்கா… மறந்து போச்சு.. கொஞ்சம் மாத்திக் கொடுங்களேன்’ என்று வாடிக்கையாளர்கள் சேவைக்கு வரும் கடவுச்சொல் மறந்து போனவர்களின் அன்புத்தொல்லைகளைத் தவிர்க்கவும், அதற்குத் தேவைப்படும் தொழில்நுட்ப வல்லுநரின் கூடுதல் மணித்துளிகளுக்கான ஊதியமும் என்பது குறிப்பிடத்தக்கது.event_logs_count.jpg

இப்படி நம் கணிணிகளிலும், சாதாரண வலையமைப்பு உபகரணங்களிலுமே இவ்வளவு தகவல்கள் கிடைத்தால், வலையமைப்பின் பாதுகாப்புக்கென பயன்படுத்தப்படும் சிறப்பு உபகரணங்கள் சொல்லும் கதைகள் இன்னும் சுவாரசியம். காலை அலுவலகத்திற்குச் சென்றதும் சூடான காபி சுவைத்துக் கொண்டே நாளெடுகளின் செய்திகளை நிதானமாக வலைமேய்ந்த பின் வேலை பார்க்க ஆரம்பிக்கும் பழக்கமுள்ள தனிநபர் அந்த நேரத்தில் மட்டுமே சில நூறு செயற்பதிவுகளை உருவாக்க முடியும் என்றால், நூற்றுக்கணக்கான பயனாளர்கள் பணிபுரியும் நிறுவனங்களின் வலையமைப்பின் வேலைநேரத்தில் உண்டாகும் வலையமைப்புக் போக்குவரத்துகள், கணிணி, இணையம்/மின்னஞ்சல் தொடர்பான செயல்பாடுகள் மொத்தமாக உருவாக்கும் செயல்பதிவுகள் மில்லியன்/பில்லியன் எண்ணிக்கையில் இருக்கும்.

ஒரு வலையமைப்பில் குறிப்பிட்ட நேரத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதனை செயற்பதிவுகள் மூலமே பாதுகாப்பு வல்லுநர்கள் கண்காணிக்கிறார்கள். அதிலும் வெளிவலைப்போக்குவரத்து உள்நுழையும் இடத்திலும், உள்வலைப்போக்குவரத்து வெளியேறிச் செல்லும் இடத்திலும் உள்ள வலையமைப்பு உபகரணங்களின் செயற்பதிவுகளைக் கண்காணிப்பது மிகவும் முக்கியம். உதாரணத்திற்கு வலைத்தடுப்பு உபகரணத்தின் (firewall) செயற்பதிவுகளை நேரடியாக பார்வையிட்டால் கணிணித் திரையில் செயற்பதிவுகள் மும்மாரி பொழியும், நயாகரா நீர்வீழ்ச்சிக்கடியில் குடை பிடித்து நுழைந்த அனுபவம் கிடைக்கும். இவற்றை ஒவ்வொரு பக்கமாக எச்சில் தொட்டுப் புரட்டிப் படித்து முடிப்பதற்குள் அடித் தொண்டை வரண்டு, கண்கள் இருட்டி, மயக்கமே வந்து விடும், நடைமுறைக்கும் ஒத்துவராது. ஒவ்வொரு செயற்பதிவினையும் நூறு அல்லது ஆயிரக்கணக்கான கணிணிகள், வலையமைப்பு உபகரணங்கள், பயனாளர்கள் உள்ள ஒரு வலையமைப்பில் சோதித்துப் பார்ப்பதென்பது ‘தமிழகத்தில் தடையில்லா மின்சாரம்’ என்பதை விடவும் கடினம், நிச்சயம் சாத்தியமில்லை.

hacker.jpg

ஒரு வலையமைப்பில் வெளியிலிருந்தோ அல்லது உள்ளிருந்தோ நடத்தப்படும் வலைத்தாக்குதல்களை சில நிமிடங்களில் கண்டுபிடித்து விருது வாங்குவதில் வல்லவர்களான பாதுகாப்பு வல்லுநர்கள், மலைக்கும் அளவு எண்ணிக்கையில் இருக்கும் செயற்பதிவுகளை எப்படி கட்டி மேய்க்கிறார்கள்?, எத்தகையத் தாக்குதல்களை ஹேக்கர்களிடமிருந்து இவர்கள் எதிர்கொள்கிறார்கள், எல்லோராலும் ஹேக்கிங் செய்ய முடியுமா?, இவ்வளவு தொழில்நுட்பங்கள் இருந்தாலும் ஏன் ஹேக்கர்களின் தாக்குதலை எல்லா நேரங்களிலும் தடுக்க முடிவதில்லை?....

தொடர்வோம்..

   - 4தமிழ்மீடியாவுக்காக தமிழரசன்

நன்றி http://www.4tamilmed...naiyam-velvom-1

Link to comment
Share on other sites

உங்கள் தகவலுக்கு நன்றி purmaal  சீக்கிரமா தொடருங்கள் மிகுதியை.இணையதளங்களை  எப்படி ஹேக் செய்வது என்பது பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை.

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் அவனில்லை மன்னிக்கவும் இத்தொடர் எழுதுபவர்
சுடுதண்ணி என்ற பெயரில் எழுதும் தமிழரசன் அவருடைய பதிவுகளையே இங்கு இனைத்துள்ளேன். இணையதளங்களை ஹேக் செய்வது என்பது 4ம்தலைமுறை  காலகட்டத்தில்
இருக்கின்றோம். சில தமிழ் பிளக்கர்ஸ் ஹேக் பற்றி சொல்லிவிட்டு அவர்களுடைய மென்பொருளில்
exe யில் உருமறைப்புடன் server வைத்துள்ளார்கள் கவனமாகஇருக்க வேனும். உங்கள் ஆசைக்கு
linux ல் backtrackஎனப்படும் சாமான்(

Operating System)

நல்லது இது ஓரு திறந்தவெளி மென்பொருள் அதனுடைய
ரகசிய நிரல்கள் மூலம் இணையம் மீது தாக்குதல் மட்டுமல்ல முகநூல் மின்னஞ்சல்etc அனைத்தையும்
உங்கள் கட்டுபாட்டுக்குள் வர வைக்கலாம் என்ன சிறிது உபுன்டு (linux) தெரிந்தால் போதும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழை ஹக் பண்ண ஏதாவது வழி இருக்கோ :D ...நேற்று யாரோ பிரான்சில் இருந்து ரதியின்ட இமெயில கள்ளப் பாஸ்வேட் போட்டு ஓபின் பண்ண பாத்திருக்கினம் :) அந்த ஜடியில என்ன இருக்குது என்று அதை திறக்க வெளிக்கிட்டவை என்று தெரியல்ல :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணையம் வெல்வோம் - 6

THURSDAY, 21 MARCH 2013 17:59

Girls+Group.jpg

கடந்து செல்லும் தாவணிகளின் எண்ணிக்கை நூறானாலும் அல்லது ஆயிரமாயேனாலும் எப்படி ஒரு வயசுப் பையனின் கண்களும், மூளையும் பரபரத்துக், கடகடவென அத்தனையையும் அலசி, ஒன்றே ஒன்றைத் தேர்ந்தெடுத்து நிலை குத்தி நிற்கிறதோ, கிட்டத்தட்ட அதே வேகத்தோடும், விவேகத்தோடும்,

வந்து குவியும் வலையமைப்பின் அத்தனை செயற்பதிவுகளையும் ஆராய்ந்து முக்கியமான தகவல்களை மட்டும் பாதுகாப்பு வல்லுநர்களின் கவனத்திற்குக் கொண்டு செல்லும் தொழில்நுட்பம் தான் Security Incident and Event Management (SIEM).

SIEM தொழில்நுட்பம் களிமண் போன்றது. குரங்கும் பிடிக்கலாம், பிள்ளையாரும் பிடிக்கலாம் என்பது இதன் தனிச்சிறப்பு. ஒரு வலையமைப்பில் எந்தெந்த உபகரணங்கள், கணிணிகள், வழங்கிகளின் செயற்பதிவுகள் தேவை, அவற்றினை SIEM தொழில்நுட்ப உபகரணங்களுக்கு தங்கள் செயற்பதிவுகளை அனுப்பி வைக்கத் தேவையான நிரல்கள்/உத்தரவுகளை வழங்குதல் ஆகியவை பாதுகாப்பு வல்லுநர்களின் பொறுப்பு. மேலும் இப்படித் திரட்டும் செயற்பதிவுகளை வைத்து SIEM தொழில்நுட்பம் என்ன செய்ய வேண்டும் என்பதை நிரல்கள் மூலம் செயல்பட வைப்பதும் அவர்களின் வேலை. அப்படி என்னவெல்லாம் இதன் மூலம் செய்ய முடியும்?.SIEM-Simplified-Process.jpg

உதாரணத்திற்கு ஒரு நிறுவனத்திற்குப் பல நகரங்களில் கிளை நிறுவனங்கள் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். தினசரி டெல்லிக் கிளையிலிருந்து வலையமைப்பில் உள்நுழையும் சிதம்பரம் என்ற ஊழியர், அனைவரும் அலறும் வண்ணம் தீடீரென ஒருநாள் சிவகங்கையில் இருந்து வலையமைப்பில் உள்நுழைந்தால் SIEM தொழில்நுட்பத்தின் மூலம் கண்டுபிடிக்கலாம். சமயங்களில் நீங்கள் முக்கிய வேலையாக வெளியூர் சென்று முகப்புத்தகம் பார்க்காமல் முகம் வியர்த்து, கை நடுங்கி அவசர, அவசரமாக நீங்கள் உங்கள் பயனாளர் கணக்கினுள் உள்நுழைந்தால், நீங்கள் வழக்கமாக வரும் இணைய இணைப்பின் மூலம் உள்நுழையவில்லை என்று எச்சரிக்கக் கண்டிருப்பீர்கள். அதெல்லாம் கிட்டத்தட்ட SIEM வகை எச்சரிக்கைகள்.

வலையமைப்புப் பாதுகாப்பு வல்லுநர்களுக்கு SIEM மிகவும் சக்தி வாய்ந்த ஆயுதம், தாங்கள் நினைத்த வண்ணம், குறிப்பிட்ட சந்தேகத்திற்கிடமான சூழ்நிலைகளில் மட்டும் பாதுகாப்பு எச்சரிக்கைகளை அளித்து மில்லியன்/பில்லியன் எண்ணிக்கையிலான செயற்பதிவுகளை பின்னாளில் விசாரணக்குத் தோதாக சேமித்து வைக்கும் உற்ற தோழன்.

ஆதிகாலத்தில் ஹேக்கர்கள் சரவெடி போன்று தாக்குதல் நடத்துவது தான் வழக்கம். ஒரு இணையத்தளத்தில் பயனாளர் பெயர், கடவுச்சொல் உள்ளிடும் உள்நுழையும் பக்கம் (login page) இருந்தால் அதற்கு கண்ணிமைக்கும் நேரத்தில் நூற்றுக்கணக்கான உள்நுழையும் முயற்சிகளை நிரல்கள் மூலம் மேற்கொள்வது வழக்கம். ஒரு கடவுச்சொல்லை வைத்து பல பயனாளர்களின் பெயர்களை முயற்சி செய்வது, ஒரு பயனாளர் பெயரை வைத்து பலக் கடவுச்சொற்களை முயற்சி செய்வது, ஒவ்வொரு வலையமைப்பு உபகரணங்களுக்கு அதனைத் தயாரிக்கும் நிறுவனங்களின் பிரத்யேக பயனாளர் பெயர்/கடவுச்சொல் இருக்கும் (factory default admin account),  அவற்றை முயற்சி செய்வது இப்படி பலவகைத் தாக்குதல் சகட்டு மேனிக்கு நடக்கும்.

இதனைத் தவிர்க்கத் வலையமைப்பு பாதுகாப்பு வல்லுநர்கள் சில பரிந்துரைகளை முன்வைத்தனர். ஒவ்வொரு வலையமைப்பு உபகரணத்தின் தயாரிப்பு நிறுவனங்களின் பயனாளர் கணக்கின் கடவுச்சொல்லை மாற்றுவது, மூன்று முறைக்கு மேல் தவறான கடவுச்சொல் அளிக்கும் பயனாளர் கணக்கினை செயலிழக்கச் செய்வது, ஒரே வலையமைப்பு எண்ணில்/கணினியில் இருந்து குறிப்பிட்ட அளவுக்கு மேல் உள்நுழையும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டால், குறிப்பிட்ட கால அளவிற்கு அந்த வலையமைப்பு எண்ணைத் தடை செய்வது, CAPTCHA தொழில்நுட்பம் மூலம் தானியங்கி நிரல்கள் மூலம் தொடுக்கப்படும் முயற்சிகளைத் தவிர்ப்பது ஆகியவை அவற்றுள் சில.

ஊரே உலையில் விழுந்தாலும் எப்படி நாம் அன்று திரைப்படம் வெளியானால் அதற்கு திரைவிமர்சனம் எழுதி குதூகலிப்பதை நிறுத்துவதில்லையோ, அதைப் போல ஹேக்கர்களுக்கு தன் முயற்சிதனைக் கைவிடுதலும், தளர்ந்து போதலும் பழக்கமன்று.

தாக்கப்போகும் வலையமைப்புகளை, இப்படிக் காட்டாற்று வெள்ளம் போல பாய்ந்து, பிராண்டினால் நிச்சயம் கண்டுபிடித்து விடுவார்கள், அதனால் ஒரு பலனும் இல்லை என்று உணர்ந்த ஹேக்கர்கள், கொண்டு வந்த மறுமலர்ச்சித் திட்டம் தான் APT எனப்படும் Advanced Persistence Threat. ‘இதயம்’ திரைப்பட முரளியைப் போன்று ஒரே இடத்தை பொறுமையாகக் குறி வைத்து அடிமேல் அடி வைத்தால் அம்மியும் நகரும் என்பதற்கேற்ப நிதானமாக மாதக்கணக்கில் நேரம் எடுத்து தாக்குதல் நடத்தி வெற்றி பெறும் போர் முறை தான் APT. இத்தகையத் தாக்குதல் நடத்துவதற்கு எந்த அளவு தேர்ந்த மதியும், நுட்பமும், நிதானமும் தேவையோ, அதனைவிட அதிகம் தேவை இவற்றைக் கண்டுபிடித்துத் தடுப்பதற்கு.

BF_Attack_defn.jpg

ஒரு பயனாளரின் பெயர் மட்டும் உங்களுக்குத் தெரிகிறது, கடவுச்சொல் தெரியவில்லை என்று வைத்துக் கொள்வோம். பயனாளர் கணக்கினை உடைத்து உள்நுழையும் முயற்சிகளுக்கு என்றே கடவுச்சொல் பட்டியல்கள் உண்டு. அது கிட்டத்தட்ட அகராதியில் உள்ள அத்தனை வார்த்தைகளையும், கணிணியின் விசைப்பலகையின் மூலம் உள்ளிடக்கூடிய அத்தனை எழுத்துக்கள்/எண்கள் அனைத்தையும் விதவிதமாகக் கூட்டமைத்தும் இருக்கும். இவையனைத்தும் எழுத்தின் எண்ணிக்கையின் படி வரிசைப்படுத்தப்பட்டிருக்கும். இதன் காரணமாகத் தான் கடவுச்சொற்களின் நீளம் இத்தனை எழுத்துக்கள் இருக்க வேண்டும், அனைத்து வகை எழுத்துக்கள், எண்கள் இவற்றின் கலவையாக இருக்க வேண்டும் போன்ற பரிந்துரைகள் பயனாளர்களுக்கு வழங்கப்படுகின்றன, அப்படி செய்வது மூலம் உங்கள் கணக்குப் பாதுகாப்பான ஒன்று நினைத்து விடக் கூடாது, திங்கள் கிழமை போக வேண்டிய மானம் சனிக்கிழமை போகும், அவ்வளவே. ஆனால் இதன் மூலம் வலையமைப்பு பாதுகாப்பு வல்லுநர்களுக்கு இது போன்ற தாக்குதலை கண்டுபிடிப்பதற்குப் போதிய கால அவகாசம் கிடைக்குமென்பதே முக்கியக் காரணம்.

user_from_different_country.jpg

அளவுக்கு மேல் பெருத்துக் கொழுத்த நிறுவனங்கள் தங்களின் இணையத்தளத்தின் வழங்கிகள் (Web Servers), உலகமெங்கும் பரவியிருக்கும் வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களின் கோப்புப் பறிமாற்றத்திற்கான வழங்கிகள் (FTP servers), எங்கிருந்து வேண்டுமானாலும் இணையத்தின் மூலம் நிறுவனத்தில் உள்வலையமைப்பிற்குள் பாதுகாப்பாக நுழைவதற்கான  VPN (Virtual Private Network) போன்றவற்றை இணையத்தின் மூலம் உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் நாம் தொடர்பு கொள்ள முடியும். இது போன்ற நிறுவனங்கள் இணையப் பாவனையில் இருக்கும் தங்களின் வழங்கிகளின் பாதுகாப்பினை உறுதியாக வைத்திருப்பது அவசியம், இல்லையேல் ஹேக்கர்கள் இணையத்தள வழங்கியில் உள்நுழைந்து உங்களின் இணையத்தளத்தின் முதல் பக்கத்தில் ‘இன்னும் 15 நாள்ல கரண்ட் வந்துரும்’ என்று பாண்டிச்சேரி நாரயணசாமியை பேசவைக்க முடியும்.

Advanced_persistent_Threat.jpg

ஹேக்கர்களிலும் பல விதமானவர்கள் உண்டு. ஒரு வலையமைப்பின் மீது தாக்குதல் நடத்தி வெற்றியடைந்து உள்நுழைந்த உடன் அலறி அடித்து, கோப்புகளை அள்ளிச் சுருட்டி, செயற்பதிவுகளை அழித்து, “அசந்தா அடிக்கிறாது உங்க பாலிசி, அசராம அடிக்கிறது என் பாலிசி’ என்பது போன்ற முத்திரை வசனங்களை இணையத்தளங்களில் வலையேற்றி, சில நிமிடங்களில் அந்த இடத்தையே ரணகளமாக்கிச் செல்பவர்களும் உண்டு. உள்நுழைந்த சுவடே தெரியாமல் அப்படியே அமைதியாக மாதக்கணக்கில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி ஆணிவேர் வரை ஒட்டு மொத்தத் தகவல்களையும் மொத்தமாக, நிதானமாக உருவும் வித்தைக்காரக்ளும் உண்டு.

மேற்சொன்ன அத்தனை சூழ்நிலைகளையும் ஒரு தேர்ந்த வலையமைப்புப் பாதுகாப்பு வல்லுநர் SIEM தொழில்நுட்பத்தின் மூலம் கண்டுபிடித்துத் தடுக்க முடியும். SIEM தொழில்நுட்பத்தினை ஒரு வலையமைப்பில் நிறுவி, நிர்வகிப்பதும், ஷங்கர் படத்தைத் தயாரிப்பதும் ஒன்று, எவ்வளவு பணம் போட்டாலும் முழுங்கும் வல்லமை வாய்ந்தது.

HP, IBM, McAfee, RSA போன்ற நிறுவனங்களின் SIEM தயாரிப்புகளே இன்றைய தேதிக்கு முண்ணனியில் இருப்பவை. இவற்றை வாங்கி நிறுவவதற்கும், அதனைத் திறம்பட நிர்வகித்து அவற்றின் முழுத்திறனையும், பயனையும் பெற்றிடத் திறமையுள்ள பாதுகாப்பு வல்லுநர்களை வேலைக்கு வைத்துக் கொள்வதற்கும் நல்ல கனமான பணப்பை முக்கியம். இப்படி விதவிதமான தொழில்நுட்பங்கள் மூலம் தங்கள் வலையமைப்பிற்கு அரண் அமைக்கும் அளவிற்கு இவர்களை மிரட்டும் ஹேக்கர்களின் பிரபலமான தாக்குதல் வகைகள் என்ன, அவற்றை எதிர்கொள்ளும் உத்திகள் என்ன?...

தொடர்வோம்..

   - 4தமிழ்மீடியாவுக்காக தமிழரசன்

நன்றி http://www.4tamilmed...naiyam-velvom-1

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இணையம் வெல்வோம் - 7

 

hackers.jpg

ஹேக்கிங் என்பது ஒரு பெண்ணின் மனதை போல மிக ஆழமானது.

எப்படி எப்பொழுதுமே ஒரே மாதிரியான உத்தியினைப் பயன்படுத்தி எல்லாப் பெண்களையும் கவர முடியாதோ அதே போல, இப்படித்தான் ஹேக்கிங் செய்ய வேண்டும் என்று அறுதியிட்டுச் சொல்லும் நேரடி வழிமுறைகளோ, செயல்முறை விளக்கங்களோ கிடையாது. உலகில் உள்ள வலையமைப்புகள் ஒவ்வொன்றும் ஒரு விதம், அவற்றுக்குத் தகுந்தவாறு தாக்குதல் உத்தியினைச் சமயோசிதமாக மாற்றியமைத்து வெற்றி பெறுபவர்களே ‘புத்திமான் பலவான்’ விருதினைப் பெறும் தகுதியினைப் பெறுகிறார்கள்.

30-day-challenge_0.jpg

பிறகு எப்படித்தான் இதனைக் கற்றுக் கொள்வது?. மணிமேகலைப் பிரசுரத்தின் ‘30 நாட்களில் தொப்பையைக் குறைப்பது எப்படி?’ வகையிலானப் புத்தகம் ஒன்றினை வாங்கி, 31வது நாளில் ‘நானும் ஒரு ஹேக்கர் தெரியும்ல’ ஒரு மீசை முறுக்க வாய்ப்பேயில்லை. வலையமைப்புகளின் அரிச்சுவடி தலைகீழ் மனப்பாடமாகத் தெரிந்து வைத்துக் கொள்ளுதலும், பொதுவாக வலைப் பாதுகாப்புக்கெனப் பின்பற்றப்படும் சிறப்பு ஏற்பாடுகள் குறித்தும் சகலமும் அறிந்திருத்தல் சிறப்பு. வயல்காட்டில் கட்டவிழ்த்தக் காளையைப் போல் தறிகெட்டு ஓடி, கையும் களவுமாக மாட்டும் போது சட்ட நடவடிக்கைகளால் உங்கள் பொன்னான எதிர்காலம் புண்ணாகிப் போகும் வாய்ப்புகள் பற்றி அறிந்திருத்தல் அதனினும் சிறப்பு. ஆக மொத்தம் வெற்றிகரமான ஹேக்கர் ஆவதற்குத் தேவையான முக்கிய தகுதிகள் குறித்து ஒரு பக்க அளவில் விவரி என்று யாராவது கேட்டால் வலையமைப்புகளில் தன் அடையாளம் மறைத்து களமாடும் அளவிற்கு ஆழ்ந்த தொழில்நுட்ப அறிவு, சம்பந்தப்பட்ட நாடுகளில் உள்ள இணையக் குற்றத்திற்கான சட்டங்கள் பற்றிய விழிப்புணர்வு, நிறைய பொறுமை, சமயோசிதமாக தாக்குதல்களை வலையமைப்பிற்கேற்ப மாற்றியமைக்கும் திறன் ஆகியவை என்று பதில் சொல்லி முழு மதிப்பெண்கள் வாங்கிக் கொள்ளவும். சுருக்கமாக சொன்னால் நல்ல அறிவார்ந்த களவாணித்தனம் வேண்டும்.

எதற்குக் கையேந்தினாலும் இல்லையென்று சொல்லாமல் வாரி வழங்கும் வள்ளலான இணையத்தில் ஏன் ஹேக்கிங் பற்றி நேரடியானத் தகவல்கள் எளிதில் கிடைப்பதில்லை, அப்படிக் கிடைத்தாலும் சித்தர்கள் பாடல் மாதிரி எதைச் சொன்னாலும் அதைப் பொடி வைத்துச் சொல்லியே தலைவலிக்க வைக்கிறார்களே என்று கவலையுறும் அன்பர்கள் கவனத்திற்கு, அப்படி ஏதாவது இணையத்தில் சொல்லி வைத்து அதைப்படித்து ஆர்வக்கோளாரான நண்பர்கள், ‘அதைப்பார்த்துத் தான் ஹேக்கிங் பழகலாமுன்னு உங்க வலைப்பக்கமா வந்தேன்’ என்று எங்காவது வில்லங்கமான இடத்தில் தலையை சொறியும் பட்சத்தில் ஆப்பு இரண்டு பேருக்குமே உண்டு என்பதே காரணம்.

15063-cybercrime-1354954524-559-640x480.

ஹேக்கிங் என்பதனை ஒரு வீட்டில் திருடச் செல்வதோடு ஒப்பிடலாம். முதலில் எந்த வீட்டில் திருட போகிறோம் என்பதனை முடிவு செய்ய வேண்டும், பிறகு அங்கு மாட்டிக்கொண்டால் எந்தெந்த இடத்திலெல்லாம் இரத்தம் கட்டும் அளவுக்கு உள்காயமாக அடிப்பார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். பிறகு வீட்டில் எத்தனை நுழைவுப்பாதைகள் உள்ளன,  தேவையானவற்றை ஆட்டையைப் போட்ட பிறகு தப்பிக்க எத்தனை வழிகள் உள்ளன, எத்தனை சன்னல்கள், எத்தனைக் கதவுகள், எத்தனைப் பூட்டுகள், பாதுகாப்புக்கு நாய் இருக்கிறதா, அப்படி இருந்தால் அதற்குப் போட ரொட்டித் துண்டுகள், வீட்டில் எத்தனை பேர் இருக்கிறார்கள், நாம் நுழையும் நேரத்தில் யாரும் முழித்திருப்பார்களா, அவர்களின் தினசரி நடவடிக்கைகள் ஆகியவற்றை வேவுப் பார்த்து தெரிந்து வைத்துக் கொண்டு பிறகு செயலில் இறங்குவதைப் போலவே தான் ஹேக்கிங்கும்.

வீடுகளில் சுவரேறித் திருடுபவர்களிலும், ஹேக்கர்களிலும் இரண்டு வகை உண்டு. ஒன்று வெற்றிகரமாக உள்நுழைந்ததும் உள்ளிருக்கும் அத்தனைப் பொருட்களையும் அள்ளியெறிந்து பரபரப்பாக சுருட்டிக் கொண்டு அந்த இடத்தையே ரணகளமாக்கிச் செல்பவர்கள், நகையோ அல்லது பாத்திரமோ போன்ற குறிப்பிட்ட பொருளை மட்டுமே குறி வைத்து நுழைந்து அதனை மட்டும் கவர்ந்து வந்த தடமின்றி வெளியேறிச் செல்பவர்கள். இந்த இரண்டாவது வகை தான் ஆபத்தானவர்கள், காரணம் இவர்களை கண்டுபிடிப்பது கடினம்.

house_dogs_security.jpg

இப்படியெல்லாம் சிரமப்படாமல் பட்டப்பகலிலேயே சேலையோ, வாசனைத்திரவியமோ அல்லது பித்தளைப்பாத்திரம், வெள்ளி, தங்க நகைக்களுக்கு மெருகேற்றுவதற்கோ என்று சொல்லு அழகாக பேசி வீட்டுக்குள் நுழைந்து சுருட்டும் வல்லவர்களும் உண்டு. ஹேக்கிங்கில் இதற்குப் பெயர் ‘Social Engineering’. உங்களிடம் நெருங்கிப் பழகி கடவுச்சொற்களைத் தட்டச்சும் பொழுது எட்டிப்பார்ப்பதும், உங்கள் பிறந்தநாள், குடும்பத்தினர்களில் பெயர்கள், படித்தப் பள்ளிக்கூடம் இப்படி அனைத்து தகவல்களையும் திரட்டி உங்களைப்போன்றே வலையமைப்பினுள் நுழைவது (Identity Theft), தொலைபேசியில் திடீரென அழைத்து உங்கள் வங்கியிலிருந்து பேசுவதைப்போலவோ அல்லது மேலதிகாரியைப் போலவோ அல்லது உங்கள் நிறுவனத்தின் கணிணித்துறையில் பணிபுரிபவரைப் போலவோப் பேசி நேரடியாகக் கடவுச்சொற்களை வாங்குவது ஆகியவை இதில் அடக்கம்.

மேற்சொன்னவாறு வேவுபார்த்து வலையமைப்பின் கட்டமைப்பினை ஆராய்வதற்குப் பெயர் ‘Reconnaissance Scan’. அதாவது உங்கள் வலையமைப்பில் என்னென்ன உபகரணங்கள் உள்ளன, அவற்றின் வலையமைப்பு எண்கள், உள்நுழைவதற்கு ஏதுவாக இருக்கும் வலைத்தொடர்புப் புள்ளிகள், கணிணிகள், இயங்குதளங்கள் மற்றும் மென்பொருட்கள், அவற்றின் வெளியீட்டு எண்கள் (Versions) ஆகியவற்றைத் திரட்டுவது தான் ஹேக்கிங்கின் முதல் படி. இதனைச் செய்வதற்கு ஏராளமான மென்பொருட்கள் இணையத்தில் பரவிக் கிடக்கின்றன, அவற்றில் பல நமக்கு மிகவும் பிடித்த விஷயமான “இலவச’ மென்பொருட்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நிரல்கள் எழுதும் வரம் பெற்றவர்கள் கொஞ்சம் முயன்றால் தாங்களே எழுதிக்கொள்ளலாம்.

reconnaissance_Scan.jpg

Reconnaissance குறித்து இன்னும் விரிவாகத் தொடர்வதற்கு முன்னால் வலையமைப்பு எண்கள் குறித்து ஒரு முக்கிய விஷயத்தினைத் தெரிந்து கொள்ள வேண்டும். வலையமைப்பு எண்கள் எல்லாம் பார்க்க ஒரே மாதிரி இருந்தாலும் அவற்றுக்குள்ளும் வர்க்க பேதம் உண்டு. உள்வலையமைப்பிற்குள் மட்டுமே அனுமதிக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட எண்களும் (non-routable Private IP Addresses), இணைய வெளியில் உல்லாச உலா வர அனுமதிக்கப்பட்ட உயர்வகை எண்களும் இருக்கின்றன (routable public IP Addresses).

உதாரணத்திற்கு உங்கள் வீட்டிலுள்ள கணிணியின் உள் வலையமைப்பு எண் (192.168.x.x) வழியாகத் தகவல்கள் வெளியே இணையத்திற்குப் பயணிக்கும் போது உங்களுக்கு இணையவசதியினை வழங்கும் நிறுவனத்தின் உபகரணமான Modem/Router இன்  வெளி வலையமைப்பு எண் மூலமாக தான் தொடர்பு கொள்ளும். உங்கள் வலையமைப்பிற்கு வெளியே இருந்து எந்தத் தகவல் போக்குவரத்தும் நேரடியாக உங்கள் கணிணியின் வலையமப்பு எண்ணைத் தொடர்பு கொள்ள முடியாது. அவையனைத்தும் உங்களின் வெளிவலையமைப்பு எண் மூலமாகத் தான் உங்களை வந்தடைகிறது. உங்கள் வெளி வலையமைப்பு எண்ணைத் தெரிந்து கொள்ள நிறைய இணையத்தளங்கள் இருக்கின்றன. உதா: http://www.myipaddress.com

உங்கள் வீட்டிலிருக்கும் modem/router உபகரணத்தினை ஒவ்வொரு முறை நீங்கள் மின்னிணைப்பினைத் துண்டித்து இயக்கும் பொழுதும் உங்களுக்கு உங்களுக்கு இணையவசதியினை வழங்கும் நிறுவனம் புதிய வலையமைப்பு எண்ணையோ அல்லது அதே எண்ணையோ வழங்கும். பெரும் நிறுவனங்கள் இது போன்ற மாற்றத்தினை தாங்க முடியாது, வலையமைப்பின் கட்டமைப்பு மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காக தங்களுக்கென வெளி வலையமைப்பு எண்களைப் பணம் செலுத்தி வாங்கி வைத்திருப்பார்கள். எந்த ஒரு வெளி வலையமைப்பு எண்ணையும் யார் பெயரில் இருக்கிறது என்று உலகத்தில் எங்கிருந்தாலும் இணையத்தின் மூலம் கண்டுபிடிக்க முடியும் (WHOIS search)..

The-Secret-World.jpg

Reconnaissance செயல்பாட்டின் முதல் கட்டம் தாக்கப்போக்கும் வலையமைப்பில் உள்ள வெளி வலையமைப்பு எண்கள் என்னென்ன என்று கண்டுபிடித்து அந்த எண்ணுடன் செயல்படும் உபகரணத்தில் எந்த வலைத்தொடர்புப் புள்ளிகளெல்லாம் தொடர்புக்கெனத் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது என்பதனை கண்டறிவது தான் (Host Sweep and Port Scan).

தொடர்வோம்.

   - 4தமிழ்மீடியாவுக்காக தமிழரச

நன்றி http://www.4tamilmed...naiyam-velvom-1

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி பெருமாள். மிகப் பயனுள்ள அனைவரும் அறிந்திருக்க வேண்டிய விடயங்களை உள்ளடக்கிய பகிர்வு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி 

மெசொபொத்தேமியா சுமேரியர்

 தமிழில் hack பற்றி எழத தயக்கம் ஆனால் பின்வரும் ling ல் சிங்களத்தில் SQL injection தொடக்கம் dosவரை ytயில் சொல்லி பாடம் நடத்துகின்றார் நாங்கள்?????????????

 

http://www.youtube.com/user/ashankodagoda/videos

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

இணையம் வெல்வோம் - 8

 

While-cyber-defenders-must-confront-the-இணையம் தொடர்பான விரிவான புரிதலை ஏற்படுத்தும் வகையில் 4தமிழ்மீடியாவின் சிறப்புத் தொடரான இணையம் வெல்வோம் எனும் இத் தொடர் வெளிவரத் தொடங்கிய சில வாரங்களுக்குள்ளாகவே

விருப்பத்துக்குரிய தொடராக பலராலும் வாசிக்கப்பட்டு வருகிறது. வாரந்தோறும் தடங்கலின்றித் தொடர்ந்து வந்த நிலையில் கடந்த சில வாரங்களாக இத் தொடர் தடைப்பட்டிருந்தது. இத் தொடரினை மிகச் சிறப்பாக எழுதி வரும் தமிழரசன்,  விபத்தொன்றினை எதிர்கொண்டதன் அழுத்தங்களிலிருந்து மீளெழுந்து வரும்  வரையிலான காலப்பகுதியாக, கழிந்திருந்தன இந் நாட்கள்.

வலிகள் மறந்து, மீண்டும் இணையம் வெல்வோம் தொடரோடு வாசகர்களைச் சந்திக்க வந்திருக்கும் தமிழரசனை  "இதுவும் கடந்து போகும்.. இன்னமும் உயரம் தொடலாம்.. " என்னும் வாழ்த்துக்களோடும் நன்றிகளோடு வரவேற்கின்றோம் -4Tamilmedia Team

இணையம் வெல்வோம் !

ஒரு வலையமைப்பை வேவு பார்த்து அதிலிருக்கும் வலையமைப்பு எண்கள், வெளித்தொடர்புக்காகத் திறந்து வைக்கப்பட்டிருக்கும் வலைத்தொடர்பு புள்ளிகள் ஆகியவற்றை அறிந்து கொள்ள ஹேக்கர்கள் மேற்கொள்ளும் Reconnaissance Scan முடிந்த பின் கிடைத்தத் தகவல்களுக்கேற்ப தங்கள் தாக்குதல் குறித்து திட்டமிடுவார்கள். இந்த தாக்குதல் எந்த ரூபத்தில் வருமென்று யாராலும் கணிக்க முடியாதபடி வித்தியாசமாக யோசிக்கும் கில்லாடி ஹேக்கர்களும், அவற்றை எதிர்கொள்ளும் போது தாக்குதலில் விதத்தை வைத்தே அவர்களின் இடம், வயது, உபயோகப்படுத்தும் மென்பொருட்கள் முதற்கொண்டு அவர்கள் வயதுக்கு வந்த நேரம் வரை புட்டுப்புட்டு வைக்கும் வலையமைப்பு பாதுகாப்பு வல்லுநர்களும் வாழும் ஒரே அதிசய உலகம் தான் இணையம்.

ஒரு வலையமைப்பின் வாஸ்து விவரங்கள் அனைத்தையும் வேவு பார்த்து முடித்த பின் (Reconnaisance Scan), கிடைத்த விவரங்களிற்கு ஏற்றவாறு வலைத்தாக்குலை முன்னெடுப்பதுதான் அடுத்த கட்டம். இந்த கட்டத்தில் தான் ஒரு வலையமைப்பில் தொடர்பு கொள்ளக்கூடிய உபகரணத்தின் அல்லது கணினியின் இயங்குதளம் என்ன, எந்தவிதமான பயன்பாட்டிற்கு அது பயன்படுத்தப்படுகிறது, என்னென்ன மென்பொருட்கள் இருக்கின்றன, சரவணா ஸ்டோர்ஸில் வாங்கியதா இல்லை ரத்னா ஸ்டொர்ஸிலா போன்ற விவரங்கள் வரை சகலமும் திரட்டப்படும்.

உலகில் உள்ள அனைத்து பொருட்களுக்கும், உயிர்களுக்கும் ஒரு பலவீனம் இருக்கும். அது புகழ்ச்சி, மது, மாது, சூதும் உணவு, பணம், பேஸ்புக் லைக்குகள், அதிகம் பரிந்துரைக்கப்பட்ட இடுகை, மதம், சாதி இப்படி எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். கிட்டத்தட்ட இதே தத்துவ விஞ்ஞானம் வலையமைப்புகளுக்கும், கணிணிகளுக்கும் கூட செல்லுபடியாகும்.  இயங்குதளங்கள் (OS), அனைத்து வலையமைப்பு உபகரணங்கள் (Network Appliances), தகவல்தளங்கள் (Databases) மற்றும் இந்த உலகத்தையே இணையத்தில் மேய விடும் உலாவிகள் இப்படி சகலமும் அடிப்படையில் ஏதோ ஒரு கணிணி மொழியில் எழுதப்பட்ட மென்பொருட்கள் தான் என்பதை நினைவில் கொள்ளவும்.

இரவும், பகலும் வீட்டுக்குக் காய்கறி கூட வாங்காமல் உழைக்கும் மென்பொருள் வல்லுநர்களின் மிகப்பெரிய சவால், அவர்கள் தயாரித்த மென்பொருட்கள் பொதுப்பயன்பாட்டுக்கென்று சந்தையில் விற்பனைக்குச் சென்றபின், அதில் இது நொட்டை, அது நொள்ளை என்று குறை சொல்லும் வாடிக்கையாளர்கள் தான். இது போன்ற குற்றச்சாட்டுகளைக் கேட்டு சீதையைப்போன்று தீக்குளிக்கத் தோன்றினாலும், அது மிகவும் சுடும்  என்பதால் குறிப்பிட்ட கால இடைவெளியில் அதுநாள் வரை தெரிவிக்கப்பட்டக் குறைகளை நிவர்த்தி செய்து புத்தம் புதிய ஈஸ்ட்மென் கலரில் பதிப்புருக்கள் (versions) வெளியிடுவது வழக்கம்.

2-min-exp-base.jpg

இது போன்ற குறைபாடுகளைத் தவிர்க்கத்தான் அனைத்து மென்பொருள் நிறுவனங்களும், தயாரித்த மென்பொருட்களை சோதனை செய்து பார்க்க, குறை கண்டுபிடித்தே பெயர் வாங்கும் சோதனையாளர்கள் (testers)) குழுவினை உருவாக்கியது. இவர்கள் செய்யும் சோதனை பெரும்பாலும் குறிப்பிட்ட மென்பொருளின் பயன்பாட்டைச் சார்ந்ததாகவே இருக்கும்.

Vulnerabilities-Threats.jpg

இன்றைய இணைய உலகில் பொதுப்பயன்பாட்டுக்கென எழுதப்படும் நிரல்கள்/மென்பொருட்களின் பாதுகாப்புத் திறன் குறித்து விரிவான அலசலோ அல்லது சோதனையோ செய்வது மிகமிக அரிது. காரணம் ஒரு மென்பொருளில் அல்லது நிரலின் எந்த விதமான குறைபாடுகளை (Vulnerabilities) ஹேக்கர்கள் பயன்படுத்துவார்கள் என்பதையும், அதன் மூலம் என்னென்ன விளைவுகளை ஏற்படுத்துவார்கள் என்பதையும் எல்லோரலும் கணித்து விட முடியாது. பாதுகாப்பு வல்லுநர்களோ அல்லது ஹேக்கர்களோ தாங்களே முன்வந்து சொல்லும் வரை யாருக்கும் தெரியப்ப்போவதில்லை.

நிறுவனங்கள்/மக்கள் அதிகமாகப் பயன்படுத்தும் மென்பொருட்களில் கூட சில சமயங்களில் பாதுகாப்புக் குறைபாடுகள் கடந்த காலங்களில் கண்டறியப்பட்டு வலையமைப்பு நிலவரம் கலவரம் ஆன வரலாறுகள் பல உண்டு. அதற்காக கூடலூரில் முருகேசன் அந்த மென்பொருளைப் பயன்படுத்தினால் கூட பெரும் ஆபத்து, அந்த மாவட்டமெங்கும் விஷவாயுக் கசிவு ஏற்படும் போன்ற பீதிகளைக் கெளப்பும் வதந்திகளை நம்ப வேண்டாம். ஒரு வேளை அதி தூரம் பயணிக்கக்கூடிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைத் தளமோ, ஈரானுக்காக யுரேனியத்தினை பதப்படுத்தும் உலையோ உங்கள் வீட்டு கணிணி மூலம் செயல்படுத்தப் பட்டால் கவலைப்படுவதில் நியாயம் உண்டு.

microsoft-windows-exploits.jpg

உதாரணத்திற்கு உலகமெங்கும் உள்ள அனைத்து வீடுகளில் சீனப்பொருட்களுக்கு இணையாக இடம்பிடித்த ஒரே அமெரிக்கத் தயாரிப்பான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் இயங்குதளத்தினை எடுத்துக் கொள்வோம். பிரதி மாதம் இரண்டாவது செவ்வாய்க்கிழமை கணிணி உலகம் சம்பள நாளாக இல்லாத பட்சத்தில் எதிர்பார்க்கும் முக்கிய விஷயம் மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிடும் விண்டோஸ் இயங்குதளத்தின் பாதுகாப்புக் குறைபாடுகளை சரி செய்வதற்கான நிரல்திட்டுகள் (patches). கடந்த பதினைந்து வருடங்களுக்கும் மேலாக அந்த காலகட்டத்தில் பயன்பாட்ட்டுள் இயங்குதள பதிப்பிற்கான இந்த மாதாந்திர வெளியீடு நடந்து கொண்டே தான் இருக்கிறது, அடுத்த நாளே அடுத்த வெளியீட்டிற்கான குறைபாடுகள் கண்டுபிடித்து வெளியிடுவதற்கான பணிகள் ஆரம்பமாகி விடும்.

குறைபாடுகள் கண்டுபிடிக்கப்பட்ட அன்றே அதனைப் பயன்படுத்தி தாக்குதலை தொடுத்து அனைவரையும் திணறடிக்கும் அதிரடி ஹேக்கர்களைக் கையாள்வது தான் இருப்பதிலேயே கடினமான பணி (Zero Day Attack).  கன்னித்தீவு கதை போல் இது தொடர்ந்து கொண்டே தான் இருக்கப் போகிறது. இதன் மூலம் பாதுகாப்பு குறைபாடுகளை முழுமையாக சரிசெய்து எவ்வளவு கடினம் என்பதை அறிந்து கொள்ளலாம். மைக்ரோசாப்ட் போன்ற திமிங்கலங்களையேத் திணறடிக்கும் இப்பிரச்சினை சிறு நிறுவனங்களுக்கு எவ்வளவு சவாலாக இருக்குமென்பதையும் ஊகித்துக் கொள்ளலாம்.

ஒரு மிகப்பெரிய நிறுவனம் தன் இணையத்தளங்களை ஒரு விண்டோஸ் இயங்குதளத்தில் செயல்படும் வழங்கியின் மூலம் இணையத்தள சேவையினை வழங்கி வருகிறது. அதனை ஹேக்கர்கள் தாக்க முற்படும் பொழுது அதன் இயங்குதளம் மற்றும் அதன் பதிப்புரு (OS Version) ஆகியவற்றினை அறிந்ததும் செய்யும் முதன் வேலை அதன் பாதுகாப்புக் குறைப்பாடுகள் என்னென்ன அதில் எவற்றைப் பயன்படுத்தினால் என்ன மாதிரியான பயன்கள் கிடைக்கும் போன்ற தகவல்களைத் திரட்டி, தேவைக்கேற்ப செயல்படுத்துவார்கள். அந்நிறுவனத்தின் வழங்கியினைப் பராமரிக்கும் நபர் பிரதி மாதம் மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிடும் பாதுகாப்பு நிரல்திட்டுகளை (security patches) நிறுவாமல் இருக்கும் பட்சத்தில் நிறுவனத்தின் இணையத்தளம் சந்தி சிரிக்கவும், வழங்கியின் முழுக் கட்டுப்பாடும் ஹேக்கர்களின் கைக்கு செல்லவும் வாய்ப்புகள் பிரகாசம்.

எனவே பயன்பாட்டில் இருக்கும் மென்பொருட்களின் பாதுகாப்புக் குறைபாடுகள் குறித்து ஏதேனும் தகவல்கள் வெளியானால் அவற்றை விரல்நுனியில் வைத்திருப்பதும், அவற்றை சரி செய்வதற்கான திட்டங்களை வரைவு செய்து செயல்படுத்துவதும் பாதுகாப்பு வல்லுநர்களின் பணிகளில் ஒன்று. பாதுகாப்புக் குறைபாடுகளைப் பற்றியோ அவற்றை உபயோகித்து வலையமைப்புகளை கட்டுடைத்து உள்நுழையும் விதம் குறித்தோ அனைத்து ஹேக்கர்களும் தாங்களே சொந்தமாக ஆராய்ச்சி செய்து கண்டுபிடிப்பதில்லை. இணையத்தில் அது குறித்த தகவல்கள் ஏராளமாகக் கிடைக்குமென்பதால் அது அவர்களுக்கு ஒரு பிரச்சினையே இல்லை,

பாதுகாப்பு நிரல்திட்டுகளை நிறுவுவதென்பது நீச்சலடிப்பதைத்  தரையில் இருந்து பார்ப்பதைப் போன்று தோன்றினாலும், ஆயிரக்கணக்கில் உலகில் பல்வேறு மூலைகளில் பரந்து விரிந்துள்ள நிறுவனங்களின் கணிணிகளைப் பராமரிப்பதென்பது மனைவியைச் சமாளிப்பதினும் கடிது. அவற்றை நிறுவுவதால் வேறேதெனும் மென்பொருள் செயல்பாட்டுகளுக்குப் பாதிப்பு ஏற்படுமா, மீள் இயக்கம் (reboot) செய்ய வேண்டுமா அப்படியென்றால் தொழிலுக்கு பாதிப்பு ஏற்படுத்துமா போன்ற பல விஷயங்களை பரிசோதித்து செயலில் இறங்க வேண்டும். பெரும்பாலும் இந்த வேலையை பெரும் நிறுவனங்களில் செய்யும் அன்பர்கள் ராக்கோழிகளாக இருப்பதைக் காண முடியும். மற்றவர்கள் அனைவரும் பணி முடிந்து சென்று மறுநாள் திரும்பி வரும் போது ஒவ்வொருவரின் கணிணியும் புதிய நிரல்திட்டுகளோடு பாதுகாப்பாக இருப்பதினை உறுதி செய்யும் பணியே இவர்களின் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு மற்றும் பல.

LANDesk-Endpoint-Security-Management2.jp

முழு இரவும் ஒவ்வொரு கணிணிக்கும் சென்று வேலை செய்ய வேண்டுமா என்ற சந்தேகம் தோன்றுபவர்களுக்கு, இதற்கென்றே பிரத்யேக மென்பொருட்கள் இருக்கின்றன (endpoint management). ஒரு கணிணியில் இருந்து கொண்டே அந்த வலையமைப்பில் இருக்கும் அனைத்து கணிணிகளிலும் என்னென்ன மென்பொருட்களை/நிரல்களை நிறுவலாம், நீக்கலாம் என்பதனைக்கூடத் தீர்மானிக்க முடியும்.

இப்படி ஹேக்கர்களுக்கும், பாதுகாப்பு வல்லுநர்களுக்கும் இடையேயான போலீஸ்-திருடன் விளையாட்டின் வாயிலாக எத்தனை சுவராஸ்யமான அத்தியாயங்களை உலகம் கண்டிருக்கிறது.

தொடர்வோம்.

 

   - 4தமிழ்மீடியாவுக்காக தமிழரசன்

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இணையம் வெல்வோம் - 9

Inaiyam_Velvom_Pic+%25284%2529.jpg

ஆதிகாலம் தொட்டே எந்த ஒரு நாட்டின் தலைவரோ அல்லது மன்னரோ நூற்றுக்கு நூறு சரியாக நீதிபரிபாலனம் செய்து ஆட்சி செய்திருக்க வாய்ப்பேயில்லை. அப்படி சொல்லப்படும் பழம் வரலாறு அனைத்தும் அந்தந்த கால கட்டத்தில் எழுதத்தெரிந்தவர்கள் அவிழ்த்து விட்ட பொய்மூட்டைகளாகத்தான் இருக்கும்.

இணையம் இல்லா காலகட்டத்தில் ஆட்சியிலும், அதிகாரத்திலும் இருந்தவர்கள் தங்களுடைய வரலாற்றைச் சிறிதும் சேதாரமில்லாமல் பதிவு செய்து கொள்வதையும் அல்லது மக்களுக்கு அவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கக் கூடிய செய்திகளை மட்டுமே கொண்டு சேர்ப்பதையும் கிரிக்கெட்டில் மேட்ச் பிக்ஸிங் செய்வதைப் போல எந்த சிரமும் இல்லாமல் சீரோடும் சிறப்போடும் செய்து வந்தனர். அதையும் மீறி உண்மை உழைப்பு, நீதி, புரட்சி, ஈயம், பித்தளை என்று முக்கியவர்கள் அனைவரும் கச்சிதமாக நசுக்கப்பட்டு இருந்த இடம் தெரியாமல் பரிசுத்தமாகக் கிருமிநாசினி ஊற்றிக் கழுவப்படுவது தொன்று தொட்ட வழக்கமாகவே இருந்து வந்தது,

இணையம் புழக்கத்திற்கு வந்த காலகட்டத்தில். அதன் வீச்சும், வீரியமும் அதிகார வர்க்கத்திற்கும், அவர்களின் மந்திராலோசனை வட்டத்தில் வறுத்த முந்திரி சாப்பிட்டுக்கொண்டு ‘நாட்டில் மாதம் மும்மாரி பொழிந்து கொண்டே இருக்கிறது மன்னா’ என்று தங்கள் கருத்துக் கூடாரத்திலிருந்து ஆட்சியாளர்கள் வெளிவராமல் பத்திரமாகப் பார்த்து கொண்ட அதிமேதாவிகளுக்கும் இம்மியளவும் புரியவில்லை. ‘பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவு பார்க்க இனிமேல் மாலை முரசுக்குத் தொங்க வேண்டாமாம், இன்டெர்நெட்லேயே வந்துருமாம்’ என்கிற அளவிலேயே இணையம் தொடர்பான பார்வை உலக நாடுகளுக்கு இருந்து வந்தது. அதுநாள் வரை பொதுமக்களுக்குத் தடையாயிருந்த தகவல் தொடர்பு என்ற ஒற்றை விஷயத்தின் அத்தனை கதவுகளையும் ஒரே நேரத்தில் தகர்த்தெறிந்த பெருமை இணையத்திற்கு உண்டு. ஒரு கணிணியும், இணைய இணைப்பும் இருந்தால் போதும், வேறேந்த தகவல் தொடர்பு சாதனமும் தேவையில்லை என்ற நிலை உருவானது.

இணையத்தின் வளர்ச்சி அதிகரிக்க, அதிகரிக்க உலக நாடுகள் அதற்கு எப்படியெல்லாம் எதிர்வினை புரிந்தார்கள் என்பதனை பார்த்தாலே இணையத்தைப் பற்றி அவர்களின் புரிதல் சிரிப்பாய்ச் சிரிக்கும். இணையத்தின் மூலம் சல்லிசாய் அல்லது இலவசமாய் எந்த நாட்டுக்கும் தொலைபேசும் மென்பொருட்கள் வந்ததும் அவற்றைப் பயன்படுத்துவதற்குத் தடை, ஏதாவது ஒரு வலைப்பக்கத்தில் அவர்களுக்குப் பிடிக்காத சங்கதிகள் இருந்த்தால் அந்த இணையத்தளத்திற்குத் தடை என்று உலக நாடுகளின் கைங்கர்யத்தில் அரங்கேறிய நகைச்சுவைக் காட்சிகள் ஏராளம்.

இணையம் ஒரு கட்டற்ற காட்டாறு, யாரும் அதனைக் கட்டி வைக்கவோ, எவரும், எவரையும் கட்டுப்படுத்தவோ முடியாது, அதே நேரத்தில் ஒவ்வொருவரின் அசைவும் பதிவு செய்யப்பட்டுக் கொண்டே இருக்கின்றன என்பதையும் நினைவில் கொள்ளவும். அதுவரை அமைதியாக இருந்து விட்டு, மனைவி ஊருக்குப் போனதும் என் பொண்டாட்டி ஊருக்குப் போயிட்டா என்று கும்மாளமிடும் ரங்கமணிக்கள் மாட்டிக் கொள்வது நிச்சயம்.


Inaiyam_Velvom_Pic+%25282%2529.jpg
ஒரு நாட்டின் அடித்தளமே ஊடகங்கள் தான், ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் ஒன்று, பேனா கத்தியை விடக் கூர்மையானது போன்றவற்றைக் கேட்டு வளரும் குழந்தைகள் பாவம். ஆட்சிக்கு வந்தவுடன் அத்தனை ஊடக அதிபர்களையும் வலைக்குள் விழ வைப்பதுதான் சம்பிரதாய வழக்கம். தங்கள் தவறுகளை மறைப்பதற்காகவும், பணத்திற்காகவும் ஊடகங்களும், அரசுகளும் போட்ட பேயாட்டத்தில் வரலாற்றில் புதைக்கப்பட்ட உண்மைகள் எண்ணிலடங்காதவை. இன்றும் ‘எம்.ஆர்.இராதா ஏண்ணே எம்.ஜி.ஆர சுட்டாறு’ என்றும், ‘சுபாஷ் சந்திர போஸை எப்ப வந்தாலும் பிடிச்சுக் கொடுப்போம்னு சொல்லித்தான் சுதந்திரம் கிடைச்சுச்சாமே’ டீக்கடையில் மண்டையைப் பிய்த்துக் கொள்ளும் அப்பிராணி குடிமக்களே அதற்கு சாட்சி. சாமாளிப்புச் செலவு அளவிற்கு மீறிய கட்டத்தில் ஆட்சிக்கு வரும் அரசியல் கட்சிகளே ஊடகங்களை நடத்த ஆரம்பித்த கொடுமைகளும் அனேக நாடுகளில் நடந்தன.


இணையம் வந்த பிறகு இதற்கெல்லாம் வேலையில்லாமல் போய்விட்டது. சாலை விபத்தில் அடிபட்டுக் கிடக்கும் ஒருவருக்கோ, திருட்டில் நகையைப் பறிகொடுத்து ஒருவருக்கோ ‘யாருமே உதவிக்கு வரல, கலி முத்திருச்சி’ என்று,  தான் உதவி செய்கிறோமோ இல்லையோ, சம்பவத்தை முனைப்பாக புகைப்படத்துடன் டிவிட்டரிலோ, பேஸ்புக்கிலோ அல்லது வலைபதிவிலோ பதிந்து ஜனநாயகக் கடமையாற்றுவது இன்று சர்வசாதரணமாகி விட்டது. அதிகாரவர்க்கங்கள் பொது இடங்களில் நடக்கும் எந்த விஷயத்தினையும் ஊடகங்கள் வாயிலாக மக்களிடமிருந்து மறைத்துக் விடலாம் என்பது காலாவதியாகிப் போன (கு)யுக்தியாக மாறிப்போனது. உலகின் மற்ற மூலைகளில் இணையத்தின் கட்டற்ற தகவல்தொடர்பால் ஒவ்வொரு தினமும் எத்தனையோ சமூக மாற்றத்திற்கு வித்திடுகிறார்கள், மக்களுக்கான நல்ல மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறார்கள். நாம் என்ன செய்திருக்கிறோம், சினிமா விமர்சனப்பதிவுகள் மூலம் இணையப்பதிவர்களுக்கான சிறப்புக் காட்சிகளுக்கு மட்டுமே ஏற்பாடு செய்திருக்கிறோம். நமக்கு சினிமா தானே முக்கியம்.

இணையத்தின் மூலம் ஒவ்வொரு தனிமனிதனும் ஒரு ஊடகக்கருவியாய் மாறிப்போனதில் மிகவும் தடுமாறிப் போனது அரசாங்கங்கள் தான். இணையத்தினைக் கட்டுப்படுத்த கன்னாபின்னாவெனெ இணையக் குற்றங்களுக்கான சட்டங்கள் தாறுமாறாக வரையப்பட்டன. நீங்கள் நினைப்பது போல அச்சட்டங்கள் சுலபமானவை அல்ல மிக விபரீதமானது, ஒரு நாட்டின் அத்தனை இணைய இணைப்பினையும் துண்டிக்கவோ, உளவு பார்க்கவோ அனுமதிக்கும் சர்வாதிகாரத்தினை அரசாங்ககளுக்கு வழங்கும் தன்மையுடையது. அதனை வரைவு செய்யும் அதிகாரிகளோ அல்லது அரசியல்வாதிகளோ, பயன்படுத்தும் சட்டத்தரணிகளோ அத்தொழில்நுட்பத்தில் புலமை வாய்ந்தவர்களா இல்லையா என்பதை நீங்களே தூக்கத்திலிருந்து விழித்து முடிவு செய்து கொள்ளலாம். ஒரு குறிப்பிட்ட ப்ளாக்கர் வலைப்பதிவினைத் தடைசெய்வதற்குப் பதிலாக ஒட்டுமொத்தமாக அனைத்து வலைப்பதிவுகளையும் (*.blogspot.com) தடைசெய்த கொடுமையெல்லாம் இந்தியாவில் நடந்து, உலகமே வாயால் சிரித்து வைத்த சம்பவங்களெல்லாம் கூட உண்டு.

Inaiyam_Velvom_Pic+%25281%2529.jpg
சட்டங்களை நிறைவேற்றும் மசோதாக்களுக்கு மக்கள் மன்றத்தில் வாக்களிக்கும் அரசியல்வியாதிகளின் இணையம் குறித்த விழிப்புணர்ச்சி பற்றி சொல்லவே தேவையில்லை. அதற்கு அருமையான, கிளுகிளுப்பான உதாரணம் அமெரிக்காவின் நியூயார்க் நகரின் காங்கிரஸ் உறுப்பினர் அந்தோணி வினர் (Anthony Weiner). இளம் வயது, கவர்ச்சித் தோற்றம், அரசியலில் அசுர வளர்ச்சி என்று நியூயார்க் மாநகரத்தில் உள்ள அனைத்து  சொப்பன சுந்தரிகளின் கனவுக் கண்ணன். அண்ணனும் கிடைத்த வாய்ப்புகளிலெல்லாம் கோலடிக்கும் திறன்மிக்க கால்பந்து வீரரைப்போல எழில்மிகுப் பாவையர்களை வாசிப்பதில் கில்லாடி. இப்படி மைனர் குஞ்சாக வலம் வந்து கொண்டிருந்த அந்தோணியின் மனதில் ஆழமாக கொக்கியைப் போட்டு மோதிரம் மாட்டியவர் இந்தியா-பாகிஸ்தானின் கூட்டுத்தயாரிப்பான ஹுமா (Huma Abedin). இவர் ஹிலாரி கிளிண்டனின் முக்கிய உதவியாளர் என்பதும் பில் கிளிண்டன் தலைமையில் திருமணம் நடந்தேறியதும் குறிப்பிடத்தக்கது. மணமானாலும், ஆடிய காலும், பாடிய வாயும் வேண்டுமானால் சும்மா இருக்கலாம், அந்தோணியால் முடியவில்லை. ஒரே நேரத்தில் பல இடங்களில் பல தளங்களில் களமாடிக்கொண்டிருந்த அந்தோணிக்கு விதி இணையத்தில் வீதி உலா வந்தது.

Inaiyam_Velvom_Pic+%25283%2529.jpg
தனிமையில் இனிமை காணும் பொருட்டு அந்தோணி சில கிளுகிளுப்பான படங்களை ஒரு கிளியிடம் யதார்த்தமாக டிவிட்டரில் பகிரப்போக, ஒரு சிறிய தவறால் அது அந்த கிளிக்கு மட்டும் செல்லாமல்  அந்தோணியை டிவிட்டரில் தொடரும் அத்தனை பேருக்கும் பதார்த்தமாக பல்லைக்காட்டியது. போதை இறங்கிய அடுத்த சில நிமிடங்களில் தவறை உணர்ந்த அந்தோணி படங்களை டிவிட்டரில் இருந்து நீக்கி விட்டு, போர்வையை இறுக்கிப் போர்த்திக் கொண்டுத் தூங்கி விட்டார். அந்த சில நிமிட இடைவெளியில் இணையத்தில் அந்த புகைப்படப்பதிவுகளை நகலெடுத்த ஒருவர் நல்லெண்ண அடிப்படையில் ஊடக நிறுவனம் ஒன்றிற்கு அனுப்பி வைத்து, அவர்களின் இணையத்தளத்தில் சுடச்சுட வெளிவந்தும் விட்டது.

Inaiyam_Velvom_Pic+%25281%2529.jpg
அந்த புகைப்படத்தை பார்த்து அத்தனை பேருக்கும், அந்தோணி உள்பட குளிர்க்காய்ச்சலே வந்து விட்டது. மறுநாள் அந்தோணி எங்கும் நடமாட முடியவில்லை. எங்கு போனாலும் ஒரே கேள்வி ‘அது உங்களோடதா?’. அனைத்து தொலைக்காட்சிகளும் ஊரிலுள்ள கருத்துக் கந்தசாமிகளனைவரையும் ஒரு அரைவட்ட மேஜையில் அமரவைத்து அப்படத்தினை உத்து, உத்துப் பார்த்து உருக்குலைந்து போனார்கள். உள்ளாடை எந்த நிறுவனத்தின் தயாரிப்பு, அளவு என்ன,  அந்தோணி அதனை எந்தக் கடையில் வாங்கினார் என்பது வரைக்கும் ஆராய்ச்சி நீண்டு கொண்டே இருந்தது.

Inaiyam_Velvom_Pic+%25282%2529.jpg
நிலைமை கைமீறி போவதை உணர்ந்த அந்தோணி, அதனைச் சமாளிக்க அள்ளிவிட்ட சரடுகள் மேலும் அவரை அதளபாதாளத்திற்குத் தள்ளியது

தொடர்வோம்.

 

   - 4தமிழ்மீடியாவுக்காக தமிழரசன்

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

எந்தவொரு மனிதனின் வெற்றியும், தோல்வியும் நெருக்கடியான தருணங்களில் அவன் எப்படி எதிர்வினை புரிகிறான் என்பதைப் பொறுத்தே நிர்ணயிக்கப்படுகிறது.

துரதிர்ஷடவசமாக அந்தோணிக்கு பதட்டத்தில் வார்த்தைகள் தறிகெட்டு ஓடி அவரது ஒட்டு மொத்த அரசியல் வாழ்க்கைக்கே கரும்புள்ளியாகிப்போனது. அடுத்து வந்த நாட்களில் இது போல இணையத்தில் படங்களை வெளியிட்டு பல்பு வாங்கும் அன்பர்களுக்கானக் குறிச்சொல்லாக மாறிப் போனார் அந்தோணி.

 

டிவிட்டரில் வெளியிட்ட படங்கள் ஊடகங்களில் கல்லா கட்ட ஆரம்பித்ததும் முதலில் அந்தோணி உதிர்த்த முத்து தனது டிவிட்டர் கணக்கினை யாரோ ஹேக் செய்து அப்படங்களை வெளியிட்டிருக்கிறார்கள், அது தனது படங்களே இல்லை என்பது தான். பின்னர் படங்கள் தன்னுடையதாக இருக்க வாய்ப்பிருக்கிறது ஆனால் டிவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என்றார். இது குறித்து ஏன் காவல்துறையிடம் புகார் தெரிவிக்கவில்லை என்ற கேள்விக்கு இது கேலிக்காக யாரோ செய்திருக்கிறார்கள், அவர்கள் மேல் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க விரும்பவில்லை ஆயினும் அவர்கள் யாரென்று தெரிந்து கொள்ளும் பொருட்டு தனியார் நிறுவனம் ஒன்றின் மூலம் விசாரித்து வருவதாகக் கூறினார்.

மேலே அந்தோணி சொன்ன அனைத்து வசனங்களும் அவருக்கே ஆப்பாக அமைந்தது. முதலில் அந்தோணி போன்ற பிரபலங்களின் இணையக் கணக்குகள் ஹேக் செய்யப்படுதென்பது இணைய பாதுகாப்பு வல்லுநர்களால் கூர்ந்து நோக்கப்படும். காரணம் எந்த யுக்தியினைப் பயன்படுத்தி சம்பந்தபட்டவர்களின் கணக்கு களவாடப்பட்டது என்பது முதல், எந்த இடத்தில் ஏற்பட்ட பாதுகாப்புக் குறைப்பாட்டினால் இது நிகழ்ந்தது வரையிலான அனைத்து சமாச்சாரங்களையும் அலசி காயப்போட்டு, அதனைப் பாடமாக வருங்கால சந்ததியினருக்கு கல்வெட்டில் எழுதி வைப்பது வழக்கம். அதிலும் அந்தோணி குறிப்பிட்டது இன்று அனைத்து அரசு, தனியார், பாதுகாப்பு அமைப்புகள் தொடங்கி அதிபர், பிரதமர், வார்டு கவுன்சிலர் வரை டிவிட்டரில் டிவிட்டித் தள்ளுவது சகஜமாகி விட்ட காலகட்டத்தில் ஒரு டிவிட்டர் கணக்குத் திருடு போனது இணைய உலகில் சலசலப்பினை உண்டாக்கியது. செய்தி வெளியாகியதும் பீதியில் அமெரிக்க அரசியல்வாதிகள் சில பேர் தங்கள் கடவுச்சொற்களை மாற்றியதும் நடந்தது.

அந்தோணி செய்த தவறு, இது குறித்து கணினி மற்றும் இணையப் பாதுகாப்பு வல்லுநர்களிடம் கலந்தாலோசிக்காமல் போகிற போக்கில் நினைத்தையெல்லாம் ஊடகங்களில் பேசியது தான். முதலில் செல்பேசி, புகைப்படக் கருவிகள் முதலான மின்னணு உபகரணங்கள் மற்றும் கணிணியில் உருவாக்கப்படும் அனைத்துக் கோப்புகளுக்கும் Header meta data என்னும் தலைப்பகுதி ஒன்று இருக்கும். அதில் கோப்பு முதன்முதலில் உருவாக்கப்பட்ட இடம், நேரம், உபகரணம், ஏதேனும் மாற்றங்கள் செய்யப்பட்டால் அது குறித்த தகவல்கள் அனைத்தும் இருக்கும். உதாரணத்திற்கு உங்கள் செல்பேசியில் எடுக்கப்பட்ட படத்தினை நீங்கள் இணையத்தில் பகிர்ந்தால் நீங்கள் வைத்திருக்கும் செல்பேசியின் வகை. தயாரிப்பு நிறுவனத்தின் தகவல், GPS வசதியிருந்தால் எடுத்த இடம், நேரம், தேதி மற்றும் ஒளி வெளிச்சம் குறித்து அனைத்து தகவல்களும் அந்த புகைப்படகோப்பின் தலைப்பகுதியில் இருந்து அறிந்து கொள்ள முடியும். எனவே அந்தோணியின் படம் அவருடைய செல்பேசியில் இருந்து தான் எடுக்கப்பட்டதென்பதை மறைக்க வாய்ப்பேயில்லை.

 

அதே போல உங்கள் செல்பேசி அல்லது கணிணி மூலம் இணையத்தில் எங்கு சென்றாலும் உங்கள் வருகை அந்தந்த தளங்களின் வழங்கிகளில் பதிவு செய்யப்படும். உங்கள் இடம், வலையமைப்பு எண், தளத்தில் நுழைந்த நேரம், செலவிட்ட நேரம், வெளியேறிய நேரம், படித்த பக்கங்கள், புகைப்படங்களையோ அல்லது கருத்துக்களையோ பதிவேற்றினால் அது குறீத்த விவரங்கள் ஆகிய ஒவ்வொன்றும் அங்கு கிடைக்கும். வலையமைப்பு எண்ணின் மூலம் உங்களுக்கு இணைய வசதி தரும் நிறுவனத்தினைக் கண்டுபிடித்து நீதிமன்றத்தின் மூலம் அவர்களை அணுகினால் உங்கள் ஒட்டுமொத்த இணைய நடவடிக்கைகளும் பந்தி வைக்கப்படும்.

இணையத்தளங்களை நடத்தும் நிறுவனங்களுக்கும் இது பொருந்தும். எனவே அந்தோணி தனது புகைப்படங்களை டிவிட்டர் தளத்தினில் இருந்து நீக்கினாலும் முன்பு பதிவேற்றிய புகைப்படங்கள் அதற்கு பயன்படுத்தப்பட்ட இணைய இணைப்பு ஆகியவை அந்தோணியினை நோக்கிக் கைகாட்டும் என்பதை அவர் உணராததன் விளைவே இத்தனை சங்கடங்களும். இதையெல்லாம் உணர்வதற்குள் அந்தோணியின் மதிப்பும் மரியாதையும் அவர் படங்களைப்போலவே ஊடகங்களால் நிர்வாணமாகக் காட்சியளித்தது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பிரதிநிதி இப்படி புகைப்படக் கலை வித்வானாக நேரங்கழித்ததும், நேர்மையின்றி பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டதும் அந்தோணியின் அரசியல் மற்றும் குடும்ப வாழ்க்கை இரண்டையும் தாக்கியது. உடனடியாக ஊடக சந்திப்பிற்கு ஏற்பாடு செய்த அந்தோணி தான் ஆரம்ப காலத்திலிருந்தே ஒரு ஜகதலப்பிரதாபன் என்பதையும், தன் மனைவிக்கும், தேர்ந்தெடுத்த மக்களுக்கும் உண்மையை மறைத்த பாவி என்பதையும் இரு கன்னங்களிலும் கண்ணீர் பிழிந்து வழிய ஒப்புக் கொண்டார். தனது ட்விட்டர் கணக்கினை மூடியதோடு பதவியினையும் ராஜினாமா செய்தார்.

 

தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கிய அந்தோணி, நேரே நெடுஞ்சான் கிடையாக சென்று விழுந்தது மனைவி ஹூமாவின் கால்களில் தான். மறப்போம், மன்னிப்போம் என்ற கொள்கையின் படி கண்கள் பனித்து, இதயம் இனித்து ஹூமா அந்தோணியை ஏற்றுக் கொண்டார். இது போன்ற அஜால்குஜால் வேலைகளில் கழக முன்னோடியான, திருமணத்தினை நடத்தி வைத்த பில் கிளிண்டனிடமும் தனியாக மன்னிப்புக் கேட்டுக் கொண்டது தனிக் கிளைக்கதை. சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் தன் டிவிட்டர் கடையினை அகலத்திறந்த அந்தோணி தான் தீவிர அரசியலுக்குத் திரும்புவதாகவும், நியூயார்க் நகர மேயர் தேர்தலில் போட்டியிடப்போவதாகவும் அறிவித்த போது ஊடகங்கள் வெளியிட்ட செய்தித்தலைப்பு சகல தரப்பினராலும் ரசிக்கப்பட்டது. பார்க்க படம்

 

அந்தோணியின் அனுபவம் நித்திரை கொள்ளும் வரை இணையத்திலேயே உழன்று கொண்டு எதையாவது வலையேற்றியே தீர்வது என்று கொலைவெறி பிடித்த அன்பர்கள் அனைவருக்கும் ஒரு பாடம். மேலும் இது போன்ற இணையம் மற்றும் கணிணி குறித்தான விழிப்புணர்வு இல்லாத அரசியல்வாதிகள் தான் இணையக்குற்றங்களுக்கான சட்டங்களை நிறைவேற்ற பக்கோடா தின்று கொண்டோ அல்லது தங்கள் செல்பேசியில் ஆபாசப்படங்களை பார்த்துக் கொண்டே வாக்களித்து நிறைவேற்றும் அபாயத்தினை நாம் உணர்ந்து கொள்ளவும் சரியான உதாரணம்.

மரத்தடி டீக்கடையில் அரசியல், சினிமா மற்றும் ஊர்வம்பு பேசி, டீ சூடு ஆறுவதற்குள் காஷ்மீர், பாலஸ்தீனம், கச்சத்தீவு, ஈழம், அணு உலை போன்ற விவாதங்களுக்குத் தீர்ப்புச் சொல்லி பெருமிதம் கொள்ளும் கலாச்சாரத்தில் ஊறிப்போனத் தமிழ்ச்சமூகம் அதனை அப்படியே இணையத்தில் வலையேற்றியிருக்கும் இக்காலத்தில் இணையம் குறித்தான சட்ட திட்டங்கள் குறித்து அறிந்து கொள்வது அவசியம்.

அரசுகளின் பார்வையில் இணையம் என்பது தேசியச் சொத்து, தகவல்களை வலையேற்றும் ஒவ்வொரு தனி நபரும் ஒரு ஊடகக்கருவி என்பதனை நினைவில் கொள்ளவும். நண்பர்களிடம் அரட்டையடித்த பழக்கத்தில் இணையத்தில் எந்தவொரு தனிநபரைப் பற்றியும் ஆதாரமில்லாமல் அவதூறு கூறுவது குற்றம். பேச்சு சுதந்திரம், தனி மனித உரிமை வெங்காயங்களுக்கெல்லாம் இங்கு இடமில்லை. நம்மூரில் இன்னும் எவரும் தங்களை பற்றி இணையத்தில் யார் என்ன பதிவு செய்திருக்கிறார்கள் என்பதனைப் பற்றி பொருட்படுத்துவதில்லை, அப்படியொரு நிலை வெகு சீக்கிரத்தில் வரும்.

வெட்டியரட்டையில் பேசுவது போல இணையத்தில் வேடிக்கைக்காக பேசினாலும், சம்பந்தப்பட்ட நபர் நினைத்தால் உங்களை பராசக்தி சிவாஜி போல கோர்ட்டில் பிளிற வைக்க முடியும். இதற்கு தமிழ்த் திரைப்பட பின்னணிப் பாடகி ஒருவரின் சமீபத்திய சட்ட நடவடிக்கைகள் ஒரு உதாரணம். அதே போல வட இந்தியத் தொழிலாளர்கள் வதந்தியால் தென்னகத்திலிருந்து தங்கள் ஊருக்குக் கிளம்பிய நேரத்தில் இந்திய அரசு செல்பேசி குறுந்தகவல்களுக்கு விதித்த கட்டுப்பாடுகள் குறித்து நீங்கள் மறந்திருக்க வாய்ப்பில்லை. ஒரு அரசால் தகவல் தொழில்நுட்பத்தினை எப்படியெல்லாம் கட்டுப்படுத்த முடியுமென்பதற்கு அது ஒரு சின்ன உதாரணம்.

 

சமீப வருடங்களில் எந்த நாட்டில் மக்கள் போராட்டத்திற்கு கிளர்ந்தெழுந்தாலும், அதனை வலுவிழக்கச் செய்யும் முதல் வேலை ஒட்டு மொத்த இணையத்தையும் நாடு முழுவதும் செயலிழக்கச் செய்வது தான். இதில் கொடுங்கோல் சர்வாதிகார நாடுகள் முதல் காந்தி தேசங்கள் வரை விதிவிலக்கில்லை. அதற்கான அதிகாரத்தினை அரசின் முதன்மைப் பதவி விகிப்பவர்களுக்கு வழங்கும் சட்டங்கள் அமல்படுத்தப்பட்டிருக்கின்றன என்பதனை நினைவில் கொள்ளவும்.

இவ்வளவு கடுமையான சட்டங்களை எந்த நாடும் தனித்தனியாக சொந்த அறிவில் யோசித்து செய்யவில்லை. அனைத்து நாடுகளின் இணையம் குறித்தான சட்டங்களும் கிட்டத்தட்ட ஈயடிச்சான் காப்பி என்பதை உணர்ந்து கொள்ளலாம். அதனை அரசுகள் பயன்படுத்தும் சூழ்நிலை வரும் போது தான் அதன் வீரியத்தினை நாம் உணர முடியும். இணையத்தினைப் பயன்படுத்தும் ஒரு சாமனியனின் பார்வையில் இது தனி மனித சுதந்திரத்தின் மீதான தாக்குதல். அரசின் பார்வையில் நாட்டின் பாதுகாப்புக்கான அத்தியாவசியம்.

 

இந்த சட்டங்களெல்லாம் எங்களுக்கு தெரியாமலேயே நிறைவேற்றி விட்டார்கள், இது மிகப்பெரும் அநீதி, அக்கிரமம், அடக்குமுறை என்று சேகுவரா சட்டைகள் அணிந்து கொண்டு பொங்கும் அன்பர்களுக்கும், டொரண்டில் ஒரு திரைப்படத்தினைத் தரவிறக்கம் செய்வதெல்லாம் ஒரு குற்றமா, இதையெல்லாம் தட்டிக் கேட்க இங்கு ஆளே இல்லையா என்று கதறும் அப்பாவிகளுக்குமான பிரத்யேக காயகல்ப லேகியமாக அவதரித்தவர்கள் தான் “அனானிமஸ்.”

தொடர்வோம்.

   - 4தமிழ்மீடியாவுக்காக தமிழரசன்

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

இணையம் வெல்வோம் 11

anonymous1.jpg

அனானிமஸ் – இன்றைய தேதிக்கு இணைய உலகின் பாதுகாப்பு வல்லுநர்களும்,  மக்களுக்கு எதிராகவோ அல்லது மக்களிடம் இருந்து ஏதேனும் முக்கிய உண்மைகளை மறைத்து வைத்து கபடநாடகம் ஆடும் பெரும் நிறுவனங்களும், அரசுகளும், அவற்றின் அதிகார மையங்களும் கேட்டவுடன் அதிரும் வார்த்தை.

 ‘பேரைச் சொன்னாலே சும்மா அதிருதில்ல’, ‘அசந்தா அடிக்கிறது உங்க பாலிசி, அசராம அடிக்கிறது எங்க பாலிசி’, சொல்வதைச் செய்வோம், செய்வதைச் சொல்வோம், போன்ற நமக்குப் பரிச்சயமான பல அதிரடி வசனங்களுக்கு இன்றைய தேதியில் மிகச் சரியான உதாரணமாக இருப்பவர்கள் தான் அனானிமஸ்.

உலகிற்கு ‘இணைய யுத்தம்’ என்ற புதிய போர்முறையினை முழு அளவில் அறிமுகப்படுத்தி ஊருக்கெல்லாம் கண்காட்சி வைத்த இணையத்தின் ராபின் ஹூட்கள். “Anonymous - We are Legion. We do not forgive. We do not forget. Expect us” என்ற அறிமுக வசனத்துடன் இவர்கள் இணைய உலகில் அடியெடுத்து வைத்த நாள் முதல் இன்று வரைக்கும் பலத்த கரவொலியுடன் அரங்கு நிறைந்த காட்சிகளுக்கு இவர்கள் உத்தரவாதம். இவர்கள் யார், என்ன செய்கிறார்கள், எதற்காக இவர்கள் மேல் உலகின் மிகப்பலம் வாய்ந்த நாடுகள் அனைத்தும் கண்கொத்திப் பாம்பாய் கண்காணிக்கின்றன?,எவருமே தப்பிக்க முடியாத இணையத்தில் இவர்கள் மட்டும் எப்படி தப்பிக்கிறார்கள்? போன்ற கேள்விகளால் அவதியுறும் அன்பர்கள் மேலே படிக்கவும்.

Anonymous-banner-635.jpg
வலையுலகில் அனானிமஸ் குழுமம் என்பது கடவுள் மாதிரி, உணர மட்டுமே முடியும், யார் இயக்குகிறார்கள் என்று இன்று வரைக்கும் யாருக்கும் தெரியாது. உலகின் பல்வேறு பகுதிகளிலும் இருக்கும் கணிணி வல்லுநர்கள் முக்கியமாக வலைப்பாதுகாப்பில் கரை கண்டவர்களால் செயல்படுத்தப்படும் இக்குழுமத்தின் கட்டமைப்பு வித்தியாசமானது. அதன் காரணமாகவே இன்று வரை அனானிமஸ் யார் என்பது மர்மமாகவே நீடிக்கிறது. இவர்களுக்கு தானைத்தலைவரோ, புரட்சிப்புயலோ, தளபதியோ, கொ.ப.செ என்றோ யாரும் இல்லை. இருந்தாலும் கோபால் பல்பொடிக்கு அடுத்த படியாக பர்மா, மலேசியா மற்றும் உலக நாடுகள் அனைத்திலும் கிளை இவர்களுக்கு உண்டு.
இணையத்தில் பெயரிலிகளாக உலா வரும் இவர்களின் புகழ் திக்கெட்டும் பரவக்காரணம் போராடுவதற்கு இவர்கள் எடுத்துக் கொள்ளும் காரணிகளும், அதற்காக இவர்கள் எதிர்கொள்ளும் அதிகார மையங்களும் தான். அமெரிக்க அரசு இயந்திரங்கள், உலகின் பெரும்பாலான உளவு அமைப்புகள், மக்களை ஏமாற்றி பெரும்பணத்தில் திளைக்கும் பெரும் நிறுவனங்கள் இப்படி யாரையும் எதிர்க்க இவர்கள் எள்ளளவும் தயங்குவதில்லை. காலையில் மனைவி வீட்டில் போராட்டத்தினை அறிவித்து விட்டு மதிய உணவுக்குத் துணைவி வீட்டில் கை கழுவும் ஏமாற்று வேலைகளை இவர்கள் செய்வதில்லை. இந்த நாள், இந்த நேரம் உங்கள் வலையமைப்பில் உள்நுழைவோம், உங்கள் இருப்பினை இணையத்தில் இல்லாது செய்வோம் என்று சொல்லி அதனை சொன்னபடி செயல்படுத்துவதில் அசகாய சூரர்கள்.

images-1.jpg
2012 ஆண்டு நியூயார்க் நகரிலும், ஸ்பெயினிலும் துவங்கிய ஆகிரமிப்புப் போராட்டங்கள் உலகின் 82 நாடுகளிலுள்ள 951 நகரங்களில் பரவி பிரம்மாண்டமாய் அசுர வளர்ச்சி பெற்ற போது அதற்கு முழு ஒத்துழைப்பினை வழங்கியது அனானிமஸ் அமைப்பு. எங்கு காவல்துறை போராட்டக்காரர்களிடம் அத்துமீறினாலும் உடனே அதனைப் படம்பிடித்து இணையத்தில் வெளியிட்டு ஊடகங்களுக்கு காய்ச்சலேற்றினார்கள். அத்தோடு நில்லாமல் குறிப்பிட்ட காவல்துறை ஊழியர் அத்துமீறினால் அவரின் வீட்டு முகவரி, தொலைபேசி எண், தொலைநகல் எண் ஆகியவை வலையேற்றப்படும். அனானிமஸ் ஆதரவாளர்கள் அக்காவலரின் அக்கிரமத்தைக் காட்டும் புகைப்படங்களை ஆயிரக்கணக்கில் அஞ்சலிலும், தொடர்ந்து நிரல்கள் மூலம் நிறுத்தாமல் தொலைபேசியில் அழைத்தும், அடர் கறுப்பு பக்கங்களை தொலைநகல் அனுப்பியும் அட்டகாசம் செய்தனர்.

julian-assange-s-tv-show-to-premiere-nex


அதே போல தங்கள் அட்டகாசங்களை வெளியிட்டு சங்கடத்தில் தவிக்க விட்ட விக்கிலீக்ஸ் தளத்தினை முடக்க நினைத்த அமெரிக்க அரசாங்கத்திற்கு ஏதுவாக விக்கிலீக்ஸ் தளத்திற்கு வரும் நன்கொடைகள் அனைத்தையும் முடக்கிய விசா மற்றும் மாஸ்டர்கார்ட் நிறுவனங்களின் இணையதள வழங்கிகளை பல மணி நேரம் முடக்கிய தருணத்தில் உலகின் ஒட்டு மொத்த பார்வையும் இவர்கள் பக்கம் திரும்பியது. விக்கிலீக்ஸ் தளத்தின் நிறுவனரான ஜூலியன் அசான்ஞ் லண்டனில் கைது செய்யப்பட்ட போது லண்டன் நகரம் குலுங்க அனானிமஸ் குழுமத்தினர் முகமூடி அணிந்து பெருந்திரளாக ஆர்ப்பாட்டம் செய்து அசரவைத்தனர். 
சமீபத்திய வருடங்கள் அரசுக்கெதிராக போராட்டங்கள் நடந்த எகிப்து, துருக்கி, துனிசியா, அமெரிக்கா, கனடா, ஜப்பான், சிரியா போன்ற அனைத்து நாடுகளிலும் ஒவ்வொரு நிமிடமும் நடக்கும் விஷயங்களை எவ்வித மட்டுறுத்தலும் இல்லாமல் உடனுக்குடன் இணையத்தில் வெளியிட்டு முக்கிய பங்காற்றியது அனானிமஸ் அமைப்பு. எவ்வித மட்டுறுத்தலும், பக்கசார்பும் இல்லாத ஊடகங்கள், மக்களிடம் எதையும் மறைத்து வைக்காமல், ஒளிவு மறைவின்றி செயல்படும் அரசாங்கம், முழு சுதந்திரத்துடன் கூடிய இணையம் என்று இவர்களுக்கும், விக்கிலீக்ஸ் அமைப்புக்கும் கிட்டத்தட்ட கொள்கை அளவில் வித்தியாசம் அதிகமில்லை.

slide_229489_1387072_free.jpg

விக்கிலீக்ஸ் அமைப்பு சட்ட ரீதியாக, அடிப்படைக் கட்டமைப்புடன் செயல்படும் ஊடக நிறுவனம். அனானிமஸ் அப்படி இல்லை, ஒத்த கருத்துடைய கணிணித் தொழில்நுட்பத்தில் தேர்ந்த வல்லுநர்கள் நாலு பேர் சேர்ந்து கூட அனானிமஸ் பெயரில் செயல்பட முடியும். நீங்கள் எதை என்ன காரணத்திற்காக போராடுகிறார்கள், எதற்காகப் போராடுகிறீர்கள் என்பதைப் பொறுத்து உங்களுக்கு உலகமெங்கும் பரவியிருக்கும் போராளிகள் உங்களோடு சேர்ந்து இணைய யுத்தம் நடத்துவார்கள். அதே போல இணைய உலகில் நடந்து வரும் இத்தகைய சம்பவங்களை மூக்கு நுனியில் இருக்கும் கண்ணாடியினை அழுத்தி ஏற்றி விட்டு உற்றுக் கவனித்து வரும் அன்பர்களுக்கு விக்கிலீக்ஸ் தளத்தில் வெளிவந்த அனேக சமாச்சாரங்கள் அனானிமஸ் குழுமம் வழங்கியதாக இருப்பதை உணரலாம்.

பின்விளைவுகளைப் பற்றி கவலைப்படாமல் துடிப்புடன் செயல்படும் அனானிமஸ் அதர்மத்தை கண்டிக்க எப்பொழுதுமே தயங்கியதில்லை. அனானிமஸ் குழுமம் வழங்கிய அமெரிக்க பாதுகாப்புத் துறை ஒப்பந்த நிறுவனமான ஸ்ட்ரட்போர் அமைப்பின் கோப்புகளை அனைத்தையும் விக்கிலீக்ஸ் வெளியிட்ட பொழுது அந்த வலைப்பக்கத்தினை பார்வையிடும் பொழுது நன்கொடை கேட்டு விளம்பரங்கள் வந்த பின்னர் கோப்புகள் தெரியுமாறு விக்கிலீக்ஸ் வெளியிட்டதும், பணம் செலுத்தி கோப்புகளைப் பார்க்கச் சொல்லும் வகையில் இருந்த அவ்விளம்பரங்களை கண்டித்து அனானிமஸ் அமைப்பினர் பொங்கியெழுந்து விட்டனர்.

OccupyWallStreet0-2.jpg

\பின்னர் அவர்கள் வேண்டுகோளுக்கிணங்க விளம்பரங்களை நீக்கி விக்கிலீக்ஸ் வெளியிட்டது. ஒன்றுக்குள் ஒன்று என விமர்சிக்கப்பட்ட அனானிமஸும், விக்கிலீக்ஸும் முட்டிக் கொண்டது அனைவராலும் ஆச்சர்யத்துடன் கவனிக்கப்பட்டாலும், நீதிடா, நேர்மைடா, நியாயம்டா என நாட்டாமையாக மாறி கர்ஜித்த அனானிமஸ் அமைப்பின் கொள்கைப் பிடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது,

Cyberwar.jpg
தங்கள் நடவடிக்கைகள் மூலம் அனைத்து தரப்பினரின் ஆதரவையும் பெற்ற அனானிமஸ் அமைப்பின் பலமே வலையமைப்புத் தாக்குதல்கள் தான். தங்களுக்கென பிரத்யேகத் தாக்குதல் முறைகளைக் கையாண்டு வலையமைப்புப் பாதுகாப்பு வல்லுநர்களை  திக்குமுக்காடச் செய்வது இவர்களின் பிரசித்தம். அதே போல எத்தனையோ விதவிதமான வித்தைகள் மூலம் வலையமைப்பினைப் பாதுகாக்கும் அரண்களான பாதுகாப்பு வல்லுநர்களிடையேயும் அனானிமஸ், விக்கிலீக்ஸ் அமைப்பின் பால் பாசமும், அபிமானமும் கொண்டவர்கள் பெருக ஆரம்பித்தது விபரீத விளவுகளை உண்டாக்கியது. இதற்கு சமீபத்திய உதாரணம் எட்வர்ட் ஸ்னொடன்.
‘அனானிமஸ் வலையமைப்புத் தாக்குதல் யுக்திகள், ஸ்நொடன் மற்றும் அவர் போல அனானிமஸ் அமைப்பிலிருந்து முகமூடி களைந்து வெளியிலகிற்கு வந்தவர்கள் குறித்தும் வரும் பகுதிகளில் தொடர்வோம்.
 

- 4தமிழ்மீடியாவுக்காக தமிழரசன்

http://www.4tamilmedia.com/cont/special-series/15677-inaiyam-velvom-11

Link to comment
Share on other sites

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

இணையம் வெல்வோம் 12

THURSDAY, 26 SEPTEMBER 2013 08:22

Internet-connectivity-problems.jpgஇணையத்தில் வம்பிழுப்பதற்கும், அடாவடி செய்வதற்கும், கைவசம் ஆதாரமில்லாமல் அவதூறு பேசுவதற்கும் , உங்கள் தலையில்

மண்ணை வாரிப் போட்டுக் கொள்வதற்கும் பெரிய வித்தியாசம் ஏதுமில்லை. இணையத்தில் பதிவு செய்யப்படும் அத்தனையும் கல்வெட்டில் பொறித்தாற் போல பல தலைமுறைக்கும் உங்கள் பெயர் சொல்லும்.

உலகில் ஒவ்வொரு வலையமைப்பும் கட்டமைக்கப்படும் பொழுது அதற்குத் தேவையான அத்தனை பாதுகாப்பு வசதிகளையும் கவனத்தில் கொண்டே உருவாக்கப்படுகின்றன. இத்தனை கவனமாக உருவாக்கப்படும் வலையமைப்பில், குற்றம் நிரூபிக்கப்பட்டால் வாழ்நாள் முழுவதும் கம்பிக்குப் பின்னால் ஒன்றாம் வாய்ப்பாடு படிக்க வைக்கக் கூடிய கடும் சட்டதிட்டங்கள் உள்ள கால கட்டத்தில் அரசுகளையும், மிகப்பெரிய நிறுவனங்களையும் எதிர்த்து இணையத்தில் நடவடிக்கைகள் மேற்கொள்வது நீங்கள் நினைப்பது போல் அவ்வளவு எளிதல்ல, கரணம் தப்பினால் மரணம் தான். ஆனால் அதை சிரமமே இல்லாமல் போகிற போக்கில் வெற்றிகரமாக சுவடே இல்லாமல் சர்வசாதாரணமாக நடத்திக் காட்டும் கில்லாடிகள் தான் அனானிமஸ்.

முதலில் அவர்கள் எப்படி தங்கள் அடையாளங்களை மறைக்கிறார்கள் என்று தெரிந்து கொள்வோம். இணையப்போராளிகள் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் இவர்கள் யாரும் பொழுது போகாமல் சமூக வலைத்தளங்களில் திரைப்பட நடிகர், நடிகைகளின் கிசுகிசுக்களை பதிவதையோ அல்லது தங்களின் அபிமான அரசியல்வாதிகளுக்கு சொம்பு தூக்குவதையே கடமையாக ஆற்றும் நபர்களோ அல்ல.

இவர்கள் அனைவரும் வலைப்பாதுகாப்புப் பற்றியும், வலையமைப்பின் கட்டமைப்பு சாஸ்திரங்களையும் கரைத்துக் குடித்தவர்களாகவோ மற்றும் கனத்த சம்பளத்துடன் கூடிய வேலையில் இருப்பவர்களாகவோ இருப்பவர்கள். இணையத்தில் உங்கள் அடையாளத்தினை மறைக்க பல வழியிருக்கிறது. இணையம் என்பது ஒவ்வொரு மனிதனின் தனியுரிமை, அதில் தான் விரும்பினால் மட்டுமே தன் அடையாளத்தினை வெளிப்படுத்திக் கொள்ளலாம், இப்படி பாதுகாப்பினைக் காரணமாகச் சொல்லி மக்களை இணையத்தில் வேவு பார்ப்பது படுபாதகம் என்று குரல் கொடுக்கும் பல லாபநோக்கற்ற நிறுவனங்கள் வலைத்தளங்களை இயக்கி வருகின்றன. அவற்றின் ஆர்வலர்கள் அதற்கெனெ TOR போன்ற சிறப்பு மென்பொருட்களைத் தயாரித்து இலவசமாக வழங்கி வருவது குறித்து சினிமா நூற்றாண்டு விழாவில் யார் எந்த வரிசையில் உட்கார்ந்து அவமானப்பட்டார்கள் என்று தேடிப்படித்து கவலைப்படும் நம்மில் பலபேருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

url.jpg

உதாரணத்திற்கு TOR உலாவியில் குறிப்பிட்ட முறையில் உலாவினால் உங்களை இணையத்தில் அடையாளம் கண்டுபிடிக்க முடியாது, மேலும் உங்களின் இருப்பிடத்தினை இணையத்தில் வெளிச்சம் போட்டுக்காட்டும் வலையமைப்பு எண்ணை நீங்கள் விரும்பும் நாட்டைச் சேர்ந்ததாக மாற்றிக் கொள்வதும் சாத்தியம். இது போன்ற சித்து விளையாட்டுக்கள் மூலமே அனானிமஸ் தங்கள் அடையாளத்தினை மறைத்துச் செயல்படுகிறார்கள்.

அப்படிப்பட்ட திறமையானவர்கள் அனானிமஸ் குழுமத்திற்காக களமாட வருவது அத்தனை எளிதல்ல அப்படியே வந்தாலும் பல நாட்டு அரசுகளோடும், அரசு இயந்திரங்களை தங்கள் மீசையைப் போல தங்கள் நோக்கத்திற்கு வளைக்கும் செல்வாக்கு மிக்க நிறுவங்களோடும் மோதும் பொழுது எண்ணிக்கை மிகச் சொற்பமே. நாம் இதுவரைத் தெரிந்து கொண்ட அனைத்து வலையமைப்புப் பாதுகாப்பு யுக்திகளையும் வைத்துப் பார்க்கும் பொழுது சிலக்குறிப்பிட்ட வலைத்தாக்குதல் முறைகளுக்கு எண்ணிக்கையும், சர்வதேச ரீதியில் பல்வேறு நாடுகளின் வலையமைப்பு எண்களும் அவசியம். இத்தனை சிக்கல்கள், அடையாளம் தெரிந்து விட்டால் வேலை பறிபோய், தீவிரவாதியாகவோ அல்லது தேசத்துரோகியாகவோ சமூகத்திற்கு அடையாளம் காட்டப்பட்டு வாழ்நாள் முழுதையும் சிறைக்குள் கும்மியடிக்க வேண்டிய அபாயம் இவையனைத்தையும் சமாளிக்கும் விதத்தில் தான் இவர்கள் தாக்குதல் திட்ட மிடப்படும்.

o-ANONYMOUS-facebook.jpg

வலையமைப்பு பாதுகாப்பு வல்லுநர்களின் சவால்களில் வலையமைப்பு தாக்குதல் முறைகளை ஆய்வு செய்து அவற்றின் தாக்குதல் முறைகளை வகைப்படுத்தி அதற்கேற்ப வலைப்பாதுகாப்பு அரண்களைக் கட்டமைப்பதும் ஒன்று. அவ்வாறு இதுவரை நடந்துள்ள அனானிமஸ் தாக்குதல்களை அலசி,

துவைத்துக் காயப்போட்டதன் மூலம் கண்டறிந்த விவரங்களைத் தான் இப்பொழுது பார்க்கப்போகிறோம். ஒவ்வொரு அனானிமஸ் தாக்குதலுக்கும் உண்டான காலப்பகுதி நான்கு முதல் ஐந்து வாரங்கள். முதல் வாரம் தனி நபரோ அல்லது சிறு குழுவோ தங்கள் பார்வையில் மக்களுக்கு அநீதி நிகழ்வதற்குக் காரணமாகக் கருதும் அரசாங்கத்தினையோ அல்லது நிறுவனத்தினையோ சாதரணமாக சமூக வலைத்தளங்களில் முன்மொழிவார்கள்.

இது அந்தந்த காலகட்டத்திற்கேற்ப மாறுபடும். அணுசக்தி உலைகளின் கதிர்வீச்சின் உண்மை அளவினைக் குறைத்து ஊடகங்கள் துணையுடன், யாருக்கும் எந்த பாதிப்பும் உண்டாகாது என்று புழுகும் அரசாகவோஅல்லது மக்களின் வரிப்பணத்தில் இராணுவப் படையெடுப்பிற்கு ஆயுதங்கள் வழங்குவதற்காக கொள்ளைக் காசு வாங்கும் குத்தகை நிறுவனங்களாகவோ அல்லது தேர்தல் பிரச்சாரத்தில் தவறான தகவல்களைத் தரும் சராசரி அரசியல்வாதியாகவோ இருக்கலாம்.

இவ்வாறு முன்மொழியப்படும் இலக்குகள் முதலில் தீவிர அனானிமஸ் செயல்பாட்டார்களால் வழிமொழியப்பட வேண்டும். இத்தகவல் பறிமாற்றங்கள் அனைத்தும் திரைமறைவிலேயே நடக்கும். இவர்கள் யாருக்கும் மற்றவர்கள் ஒருவரையும் தெரியாது என்பதை நினைவில் கொள்ளவும். ஒவ்வொருவருக்கும் ஒரு புனைப்பெயர் மட்டுமே பகிர்ந்துகொள்ளாப்படும் அதுவும் மாற்றப்பட்டுக்கொண்டெ இருக்கும். இந்த சிறு குழு ஒரு மனதாக இலக்கினைத் தீர்மானித்ததும் அவரவர் விருப்பப்பட்ட தாக்குதல் முறைகளைக் கையாண்டு தேவையானத் தகவல்களைத் திரட்ட இரண்டாம் மற்றும் மூன்றாம் வாரத்தில் செயல்பட ஆரம்பிப்பார்கள்.

Police-Anonymous-HD.jpg

இத்தாக்குதல்களின் நோக்கம் இலக்கில் இருக்கும் வலையமைப்பினைக் கட்டுடைத்து அவற்றின் பயனாளர் பெயர்கள், கடவுச்சொற்கள், அவர்கள் செய்யும் தவற்றினை அம்பலப்படுத்தும் கோப்புகள் ஆகியவற்றைக் கைப்பற்றுவதே ஆகும். சில சமயங்களில் பழம் நழுவி, பாலில் விழுந்து பின் வாயிலும் விழுந்த கதையாக இலக்காகக் கருதப்படும் வலையமைப்பிற்குள் இருக்கும் பயனாளர்களே அனானிமஸ் ஆர்வலர்களாக மாறி தாங்களே முன்வந்து தகவல்களை தந்துதவுவதும் நடப்பதுண்டு. இத்தாக்குதல்கள் பெரும்பாலும் வலையமைப்பில் இணையத்தின் மூலம் எட்டக்கூடிய வழங்கிகளின் பலவீனங்களைக் கண்டறிந்து அவற்றைத் தங்கள் வசம் கட்டுப்பாடில் கொண்டு வருவது, மின்னஞ்சல் மூலம் தவறான உரல்களை அளித்து பயனாளர்கள் அவற்றைப் பயன்படுத்தும் பொழுது அவர்களின் தகவல்களை கவர்வது (phishing) போன்றவை உள்ளடங்கும்.

இந்த இரண்டு வாரங்கள் தான் வலைப்பாதுகாப்பு வல்லுநர்களுக்கும், அனானிமஸ் குழுமத்திற்கும் நடக்கும் கடும் மல்யுத்தம். ஒரு வலையமைப்பின் பாதுகாப்புத் தரம் இந்த இரண்டு வாரத்தில் பல்லிளித்து விடும். இத்தாக்குதல்களனைத்தும் எங்கிருந்து நடத்தப்படுகிறது, யாரால் நடத்தப்படுகிறது என்று யாருக்கும் தெரியாது. தனித்தனியாகவோ அல்லது சிறு குழுக்களாகவோ பிரிந்து சென்று நடத்தும் இத்தாக்குதல்கள் வெற்றியடையும் பட்சத்தில் இலக்கில் இருந்து உருவப்பட்ட கோப்புகள், இதர தகவல்கள் அனைத்து பறிமாறிக் கொள்ளப்பட்டு வெளியுலகிற்கு விக்கிலீக்ஸ் மூலமோ அல்லது வேறு இணையத்தளங்களிம் மூலமோ அம்பலத்தில் ஏற்றப்படும்.

ஒருவேளை அனைத்தும் தோல்வியில் முடிந்தால், அடுத்த கட்ட ஆட்டம் தான் DDOS (Distributed Denial of Service) எனப்படும் தாக்குதல் முறை. இது தான் கடைசி ஆயுதம். இதன் மூலம் எந்த தகவல் இழப்பினையும் ஏற்படுத்து முடியாத போதும், இலக்கின் இணைய வழங்கிகள் அனைத்தையும் சிறிது நேரத்திற்கு செயலிழக்க செய்வதன் மூலம் இணையத்தில் இலக்கின் இருப்பினை இல்லாமல் செய்து அவமானப்படுத்துவதே நோக்கம்.

DDoS1.jpg

இந்த கட்டத்தினை அடைந்தால் இரண்டு விஷயங்களை நாம் உணர்ந்து கொள்ளலாம். ஒன்று இலக்காக நிர்ணயிக்கப்பட்ட வலையமைப்பின் பாதுகாப்புத் திறன் சிறப்பு, அவற்றினை செயல்படுத்தும் பாதுகாப்பு வல்லுநர்களின் அயராத உழைப்பு, மூன்று அனைத்து ஊடகங்களின் கவனத்தினைக் கவரும் வகையில் பெரும்பான்மை மக்கள் பயன்படுத்தும் சமூக வலைத்தளங்களான பேஸ்புக், டிவிட்டர், யூடியூப் ஆகியவற்றில் DDOS தாக்குதல் குறித்து பகிரங்கமாக நாள், நட்சத்திரம், மூகூர்த்த நேரம் ஆகியவை அறிவிக்கப்படும் .இத்தாக்குதலுக்கெனெ எழுதப்பட்ட நிரல்கள் தயார் நிலையில் இருக்கும். இத்தாக்குதலுக்கு பங்கேற்பார்களின் எண்ணிக்கை மிக முக்கியமென்பதால் இந்த ஏற்பாடு. நீங்கள் உசிலம்பட்டியில் இருந்து கொண்டு இணையத்தில் எகிப்து புரட்சியாள்ர்கள் படித்து கண்கள் சிவந்து, கன்னம் துடித்து உணர்ச்சிவசப்பட்டால் கூட உங்களால் இத்தாக்குதலில் பங்கேற்ற முடியும்.  எப்படி?. 

தொடர்வோம்…..

- 4தமிழ்மீடியாவுக்காக தமிழரசன்

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

இணையம் வெல்வோம் 13

china-computer-hac_1963116c.jpg

DDoS (Distributed Denial of Service) Attack என்பது வலையமைப்புப் பாதுகாப்பு வல்லுநர்களிடையே மிகப்பிரசித்தம். இணையத்தில் கடைவிரித்திருக்கும் பிரபல நிறுவனங்கள், வங்கிகள், அரசுத் துறைகள் ஆகியவற்றுக்கு கடமையாற்றும் வலைப் பாதுகாப்பு நிபுணர்கள் சந்திக்கும் கேள்விகளில் தவிர்க்க முடியாத ஒன்று DDoS தாக்குதலைச் சமாளிக்க என்னென்ன வழிமுறைகளைக் கையாள்கிறீர்கள் என்பது தான்.

DDoS தாக்குதல் என்றால் என்ன, எதற்காக அனானிமஸ் குழுவினர் அதனை தங்களின் கடைசி ஆயுதமாக பயன்படுத்துகிறார்கள், எப்படி போவோர், வருவோரை எல்லாம் இத்தாக்குதலில் இணைய வைக்க முடியும் என்பது  குறித்துப் பார்ப்போம். வலையமைப்பினைக் கட்டமைக்கும் போது எப்படி முக்கியமான தகவல்கள் அடங்கிய வழங்கிகளை, நிறுவனத்தில் பணியாற்றும் அன்பர்கள் மட்டுமே பயன்படுத்தும் உள் வலையமைப்புக்களை மூடி வைக்கிறோமோ அதைப் போலவே சில விஷயங்களை இணையத்தில் திறந்து வைப்பது தவிர்க்க முடியாதது.

DDOS-Attack.jpgஉதாரணத்திற்கு ஒரு நிறுவனத்தின் இணையத்தளத்தினை பொதுமக்கள் பார்வைக்காக இணையத்தில் பந்தி வைத்துத்தான் ஆக வேண்டும், அது போன்ற வழங்கிகள் அவற்றின் பயன்பாட்டுக்கேற்ற தகவல் பறிமாற்ற முறைகளின் படி வரும் வேண்டுகோள்களுக்கு பதிலளிக்கத் தான் வேண்டும். 

உங்கள் உலாவியில் ஒரு இணையத்தளத்திற்கு செல்லும் போது, அதன் வழங்கி http/https வழிமுறையில் வைக்கபடும் வேண்டுகோள்களுக்குப் பதிலளிக்கும் விதமாகத் தான் அதன் முகப்புப் பக்கங்கள் உங்கள் கணிணித் திரையில் காட்சியளிக்கின்றன. இதில் வேண்டுகோள்கள் போயஸ் கார்டனிலிருந்து வந்தாலும், கோபாலபுரத்திலிருந்து வந்தாலும், கேட்பது சமையல் குறிப்பாக இருந்தாலும், சமந்தாவின் படமாக இருந்தாலும் எந்த பாரபட்சமுமின்றி பதிலளிப்பது தான் இணைய தள வழங்கிகளின் வேலை. இந்த ஒரே காரணத்திற்காகத் தான் DDoS தாக்குதல் பெரும்பாலும் வழங்கிகளை முடக்கிப் போடுகின்றன. DDoS தாக்குதல் என்பது மிக எளிதான் ஒரு விஷயம். பெரும் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும் ரோட்டோரப் புரோட்டாக் கடைகளின் சாப்பிடும் புரோட்டாவைத் தவிர்த்து மற்ற அனைத்தையும் கவனித்துச் சாப்பிடும் அனைவரும் வியந்து போவது,  ஒரே நேரத்தில் பறிமாறும் பணியாளர்கள் பலர் சொல்லும் ஆர்டர்களையும் திரும்பிக் கூட பார்க்காமல் தலையை மட்டும் அசைத்து ஆமோதித்து ஆர்டர் கொடுத்த அதே வரிசையில் முட்டைப் புரோட்டாக்களையும், ஆம்லேட்டுக்களையும் விளாசித்து தள்ளும் புரோட்டா மாஸ்டரின் திறமையைப் பார்த்துத் தான். கூட்டத்தோடு கூட்டமாக நீங்களும் சத்தமாக ரெண்டு புரோட்டா, நாலு ஆப் பாயில் என்று கூவிப் பார்த்திருக்கிறீர்களா?. கூடுதலாக ஒரு குரல் கேட்டதும், மாஸ்டர் மண்டை காய்ந்து போய்,  கடைசியாக சொன்ன ஆர்டர்கள் அனைத்தையும் சரிப் பார்த்த பின்பே தன் பணியைத் தொடர்வார்.

DDoS-PNG_2.jpg

அவரால் குறிப்பிட்ட நபர்கள் கொடுக்கும் ஆர்டர்களை மட்டுமே சமாளிக்க முடியும், அதற்கு மேல் என்றால் எழுதி வைத்து சமாளிக்கவோ அல்லது குளறுபடிகள், தாமதத்தோடு தான் அவர் தன் பணியைச் செய்ய முடியும்.

இதில் புரோட்டா மாஸ்டர் தான்  நிறுவனங்களின் வழங்கிகள், பறிமாறும் பணியாளர்கள் தான் உண்மையாக வழங்கியின் பயன்பாட்டாளர்கள், கூட சேர்ந்து குரலெழுப்பி கலகம் விளைவிக்கும் கண்மணிகள் தான் DDoS தாக்குதல் தொடுப்பவர்கள். DDoS தாக்குதலுக்குத் தேவையான முக்கிய அம்சங்கள் ஒவ்வொரு நொடிக்கும் பல லட்சங்கள் வேண்டுகோள்களை சமர்ப்பிப்பதும், தாக்குதல் தொடுக்கும் கணிணிகள் வெவ்வேறு நாடுகளில்/இடங்களில் (வெவ்வேறு வலையமைப்பு எண்கள் தேவை) இருப்பதுவும் ஆகும்.

operationpayback.jpg

இதனைச் செயல்படுத்துவதற்கு நிரல் எழுதும் பயில்வானாகவோ அல்லது இணையத்தில் பரவிக்கிடக்கும் எண்ணற்ற நிரல்களில் சத்தான ஒன்றைத் தேர்வு செய்து தங்கள் கணிணியில் அதனை செயல்படுத்த வைக்கும் திராணியுள்ள விஜயகாந்த்தாகவோ இருக்க வேண்டும்.  தாக்கப்படும் பெரும் நிறுவனங்களின் வழங்கிகள் செயலிழந்து போனால் உடனே ஊடகங்களில் பரபரப்பாக மானம் கப்பலேற்றப்படும். அதனால் தான் உலகமெங்கும் கிளைகள் பரப்பியிருக்கும் அனானிமஸ் DDoS தாக்குதலை தங்கள் கடைசி ஆயுதமாக பயன்படுத்தத் தேர்ந்தெடுத்தனர். 

வலைப்பாதுகாப்புக்கென பணத்தை வாரியிறைக்கும் இன்றைய காலகட்டத்தில் சகல அதிகாரங்கள் படைத்த அரசு இயந்திரங்களையும், அவற்றை மறைமுகமாக இயக்கும் அல்லது அவற்றால் மறைமுகமாக இயக்கப்படும் பெருநிறுவனங்களின் இணைய வழங்கிகளை இந்த நாள், இந்த நேரம் தாக்கப் போகிறோம் என்று சொல்லி அடிப்பது விளையாட்டுக் காரியமில்லை. இன்றைய இணைய வழங்கிகளின் செயல்திறனை மீறிய தகவல் போக்குவரத்தை உருவாக்கித் திணறடிப்பதற்கென்றே சிறப்பு நிரல்களை எழுதி சமூக வலைத்தளங்களில் சரியாக முகூர்த்த நேரத்தில் உலவ விடுவது அனானிமஸ்களின் வழக்கம்.

home-office-down.jpg

அவ்வாறு வெளியிடப்படும் உரல்களை க்ளிக்கிய தருணம் நிரல்கள் உங்கள் கணிணி அல்லது செல்பேசியில் தரவிறக்கம் செய்யப்பட்டு செயல்பட ஆரம்பித்து விடும். சட்டத்தின் படி உங்கள் உங்கள் கணிணி அல்லது செல்பேசி தீங்கு விளைவிக்கும் நிரல்களால் பாதிக்கப்பட்டு தாக்குதலில் பங்கு கொள்வதால் நீதிமன்றத்தில் ஒரு வண்டு முருகனை வைத்துக் கூட உங்களால் எந்த பாதிப்பும் இன்றி வெளியில் வந்து வந்து விட முடியும்.

ஆச்சர்யமாக DDoS தாக்குதல்கள் சில நேரங்களில் இயல்பாக நடைபெறுவதுண்டு. உதாரணத்திற்கு நம்மூரில் பெட்டிக்கடை இணையத்தளங்கள் பத்தாம் வகுப்பு மற்றும் பணிரெண்டாம் வகுப்புத் தேர்வு முடிவுகளை வெளியிடும் போது ஒவ்வொரு மாணவனின் ஒட்டு மொத்த சுற்றமும், நட்பும் தனித்தனியாக இணையத்தளத்திற்குப் படையெடுக்கும் பொழுது நீங்கள் உணர்ந்திருக்க அதிகம் வாய்ப்பிருக்கிறது. ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் டெண்டுல்கர் முதல் இரட்டைச்சதமடித்த பொழுது புகழ்பெற்ற கிரிக்கெட் இணையத்தளமான www.cricinfo.com தளத்திற்கு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இத்தாக்குதலை மிகத்துல்லியமாக தடுத்து நிறுத்த எந்த வழிமுறையும் இல்லை. அப்படியே தடுத்து நிறுத்தினாலும் அதில் உண்மையான பயனாளர்களின் போக்குவரத்தும் பாதிக்கப்படும். எப்படிப் பார்த்தாலும் தாக்குதல் நடத்துபவர்களுக்கு வெற்றியே.

இத்தாக்குதல் முறையைப் பயன்படுத்தி அனானிமஸ் எண்ணற்ற இணையத்தளங்களை முடக்கியிருக்கின்றன அவற்றில் முக்கியமானவை மற்றும் ஊடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவை விசா மற்றும் மாஸ்டர்கார்ட் நிறுவனங்களின் இணையத்தளங்கள்.

anonymous_amazon.top.jpg

இத்தாகுதல் முறையில் போதுமான நபர்கள் இல்லை என்று கூறி  தங்கள் தோல்வியினை அனானிமஸ் குழுவினர் ஒத்துக்கொண்டு ஒதுங்கிய இணையத்தளம் www.amazon.com. மேலே குறிப்பிடப்பட்டத் தாக்குதல்கள் அனைத்தும் விக்கிலீக்ஸ்க்கிற்கு ஆதரவாக நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இத்தாக்குதல்கள் நடைபெறும் போது வலைப்பாதுகாப்பு நிபுணர்களின் பணியிடமும் ( Security Operations Center), தாக்குதலை நடத்தும் நபர்களுக்கும் நடக்கும் உரையாடல்களும், தாக்குதலுக்குள்ளாகும் வழங்கிகளின் நிலைமாறுதல்களும் ஒரு போர்க்களத்திற்கு சற்றும் குறைவில்லாத பரபரப்போடு இருக்கும். இரு குழுக்களும் வழங்கிகளை முடக்கவும், காப்பாற்றவும் படும்பாடு சொல்லி மாளாது. மிகச்சமீபமாக இத்தகைய சைபர் யுத்தங்களின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளன.

எதிர்காலத்தில் ஆயுதங்கள் ஏந்தி போருக்குச் செல்வது மறைந்து, ஒரு நாட்டின் அரசு வலையமைப்புக்களை கட்டுடைத்து, கையகப்படுத்தி போரில் வென்று வசப்படுத்தும் நாள் வெகுதொலைவில் இல்லை. இதற்கு சமீபத்திய உதாரணம் ஈரானின் அணு உலை வலையமைப்புக் கணிணிகளில் தகவல் திரட்டும் நிரல்களை நிறுவி நடத்தப்பட்ட தாக்குதல் வலைப்பாதுகாப்பு உலகில் மிகப்பிரசித்தம். நடத்தியது யார் என்று சொல்லித் தெரியவேண்டியதில்லை என்றாலும், சான்றுடன் இதுவரை நிரூபிக்கப்படவில்லை. இன்றையத் தேதியில் ரகசியமாக இத்தகைய சைபர் யுத்தங்களுக்கு எல்லா நாடுகளும் தங்கள் சத்துக்கு ஏற்றவாறு தயார் படுத்திக் கொண்டிருந்தாலும், முன்னணியில் இருப்பது நமது பக்கத்து வீட்டுக்காரரான சைனா என்பது உபரித்தகவல். 

தங்களின் தொழில்நுட்ப பலத்தினையும், சட்ட திட்டங்களிம் ஓட்டைகளையும் வைத்து கபடி ஆடிக்கொண்டிருந்த அனானிமஸ் குழுவினரை அடக்குதென்பது அமெரிக்க அரசிற்கு பெரும் சவாலாக இருந்தது. இணையத்தின் மாயத்திரைகளுக்குப் பின்னால் தங்கள் அடையாளங்களை மறைத்துக் கண்கட்டி வித்தை காட்டி வந்த இவர்களுக்கென்றே ஒரு சிறப்புத் திட்டம் தயாரிக்கப்பட்டது. அத்திட்டம் பல அனானிமஸ் அன்பர்களை வெளியுலகிற்கு இழுத்து வந்தது. அத்திட்டம் என்ன?..

தொடர்வோம்…

- 4தமிழ்மீடியாவுக்காக தமிழரசன்

இணையம் வெல்வோம் 14

Image_1+%25283%2529.jpg

அமெரிக்காவின் வரலாற்றை, அங்குள்ள மக்களின் வாழ்க்கை முறையை 2001 செப்டம்பர் 11க்கு முன், பின் என நளைய ஆரம்பப் பள்ளி மாணவர்கள் படிக்குமளவுக்கு தலைகீழாய் புரட்டிப் போட்டது இரட்டைக் கோபுரத் தாக்குதல் அல்லது நிகழ்ச்சி.

கம்யூனிச நாடுகளின் மேல் மேற்குலக மேதாவிகள் வைக்கும் முக்கியக் குற்றச்சாட்டு அங்கு தனிமனித சுதந்திரம் இல்லை. ஒவ்வொரு தனிமனிதனின் நடவடிக்கைகளும் கண்காணிக்கப்படுகின்றன என்பது. ரஷ்யாவின் ஆதிக்கத்திலிருந்த கிழக்கு ஜெர்மனியில் இத்தகைய கண்காணிப்புகள் மிகப்பிரபலம். இப்படி ஊர் உலகமெல்லாம் அரசு இயந்திரங்கள் நடத்தும் கண்காணிப்பு நடவடிக்கைகளைக் கண்டு கைகொட்டிச் சிரித்த அமெரிக்க மக்கள் தங்களுக்கே அது போன்ற நிலை வருமென்று எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். செப்டம்பர் 11க்குப் பிறகு தேசியப் பாதுகாப்புக்காக என்று சொல்லிவிட்டுத் தங்கள் படுக்கையறையை எட்டிப் பார்த்தால் கூட “God Bless America” என்று மயிர்க்கூச்செரியக் கூவுமளவிற்கு அனைவரும் அரண்டு போயிருந்தார்கள். ஊடகங்களும் அதனை நியாயப்படுத்தின. 

Image_1+%25281%2529.jpg

ஆனால் அமெரிக்க அரசின் கண்காணிப்பின் நீள, அகலம் எட்வர்ட் ஸ்நோடன் ஊடகங்களின் அவிழ்த்து விடும் வரை யாருக்கும் உறுதியாய்த் தெரிந்திருக்கவில்லை. செப்டம்பர் 11க்குப் பிறகு அமெரிக்காவில் கல்யாணத்தின் முதல் பந்தியில் சாப்பாடு பறிமாறும் வேகத்திற்கு இணையாக தேசியப்பாதுகாப்பினை பலப்படுத்துகிறோம் என்ற பெயரில் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. அதில் ஒன்று தான் FISA (Foreign Intelligence Surveillance Act) எனப்படும் சட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள். அதன் மூலம் எந்த நீதிமன்ற ஆணையுமின்றி அரசு சந்தேகப்படும் எந்த ஒரு நபரின் தொலைத்தொடர்புகளை அரசு அதிகாரிகள் கண்காணித்து அலசி ஆராயலாம் என்பது தான். இங்கு தொலைத்தொடர்பு என்பது இணையம், தொலைபேசி மற்றும் செல்பேசி என சகல இலத்திரனியல் சாதனங்கள் மூலம் ஏற்படுத்தபடும் தகவல் தொடர்புகள் என்பதனை நினைவில் கொள்ளவும். இந்த அசுர பலத்தின் வீச்சினையும், வீரியத்தினையும் சட்டென்று பலருக்குப் புரிபடுவதில்லை. இணையம் எப்படி செயல்படுகிறதென்பதின் சூட்சுமம் அறிந்தவர்களுக்கு இதில் உள்ள ஆபத்தும், ஆழமும் புரிந்திருந்தது.

Image_1+%25286%2529.jpg

மொட்டைக்குத் திருப்பதி போல, இணைய வழங்கிகளுக்கு அமெரிக்கா. உலகத்திலிருக்கும் முக்கால்வாசி இணைய வழங்கிகள் அங்கு தான் இருக்கிறது. தேசிய அளவின் இணையப்போக்குவரத்தினைக் கண்காணிப்பதன் மூலம் உசிலம்பட்டியில் இருந்து உங்கள் செல்பேசியின் ‘வாட்ஸ் அப்’ பில் யார், யாரிடம் மரியாதையுடம் பேசுகிறீர்கள், அல்வா கொடுக்க முயற்சிக்கிறீர்கள் என்பதெல்லாம் கூட கண்காணிக்க முடியும்.

Image_1+%25282%2529.jpg

இங்கு கண்காணிப்பதென்பது உங்கள் இணைய நடவடிக்கைகளை எப்போதும் ஒருவர் தோளோடு தோளாய் நின்று கண்காணிக்கிறார் என்பதல்ல. இங்கு சகலமும் சேமிக்கப்படுகிறது. சகலமும் என்றால் ச..க..ல..மு...ம். உங்கள் கணிணி எத்தனை மணிக்கு இணைகிறது, வலையமைப்பு எண், உங்கள் இணைய வசதி வழங்கும் நிறுவனம், வேலை நேரத்தில் பேஸ்புக் போவது முதல், சினிமா கிசுகிசு படித்துக் கொண்டே VOIP மூலம் தொலைத்தொடர்பில் இருப்பது வரை அத்தனையும். சேமிக்கப்படும் தகவல்களனைத்தையும் அரைத்துச் சலித்து தேவையானதை மட்டும் எடுத்துக் கொடுக்க SIEM போன்ற வலைப்பாதுகாப்புத் தொழில்நுட்பங்கள் உள்ளன. உதாரணத்திற்கு சமீபத்தில் பாஸ்டன் மாரத்தானில் நடந்த குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்டது ‘pressure cooker bombs’ என்று தெரிந்த பிறகு கூகுளில் Pressure Cooker Bombs என்று தேடியவர்கள் வீடுகளுக்கு அமெரிக்கப் போலீசார் விருந்துக்குச் சென்ற சம்பவங்களின் மூலம் இணையக் கண்காணிப்பின் ஆழத்தினை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

Image_1+%25287%2529.jpg

இதில் இரண்டு விஷயங்களைக் கவனத்தில் கொள்ள கனமாகப் பரிந்துரைக்கப் படுகிறது. முதலாவது அமெரிக்க இணைய வழங்கிகள் அமெரிக்கர்களுக்கு மட்டுமானது அல்ல. அவற்றில் இருக்கும் இணையத்தளங்களை உலகம் முழுவதிலும் உள்ள பயனாளர்கள் வருகை தருகிறார்கள். நீங்களும், நானும், உலகமெங்கும் உள்ள அரசியல் தலைவர்கள், இராணுவப்பாதுகாப்பு மற்றும் அணு உலை மைய அலுவலகங்கள் இப்படி அனைத்தும். இவையனைத்தையும் ஒரு தனி நாடு கண்காணிக்க முடியுமென்பது மிக அபாயகரமானது. இதன் மூலம் குறிப்பிட்ட எந்த தனி நபரையும் குறிவைத்துத் தகவல்கள் சேமிக்க முடியும், மேலும் உங்கள் இணையப்பழக்க வழக்கங்களை வைத்து உங்கள் கணிணியில் நிரல்களை நிறுவி நீங்கள் இணையத்தில் இணைப்பில் இல்லாத  போதும் என்னென்ன செய்கிறீர்கள் என்பதைக் கண்காணிக்க முடியும். இரண்டாவது விஷயம் நம் வாழ்வில் இரண்டறக் கலந்து விட்ட இணையத்தில் நீங்கள் என்னென்ன செய்கிறீர்கள் என்பது மூலம் மனிதர்களைத் நல்லவர்கள்/கெட்டவர்கள் என்பதாகத் தரம்பிரிக்க முடியும்.

Image_1+%25285%2529.jpg

உதாரணத்திற்கு உங்கள் உணவுப்பழக்க வழக்கங்கள், உடல் ஆரோக்கிய விவரங்கள், பிடித்த/பிடிக்காத விஷயங்கள், அரசியல் சார்பு, குடும்பம், நட்பு, தொடுப்பு இப்படி அனைத்தும். இப்படி ஒரு தனி நபரை இணைய நடவடிக்கைகள் மூலம் தரம்பிரித்தலை அமெரிக்கா தங்கள் நாட்டின் பாதுகாப்புக்காக ஆரம்பித்து வைத்தாலும், இணையமும் ஒரு காலத்தில் போர்க்காலங்களில் இராணுவப் பயன்பாட்டுக்கென கண்டுபிடித்து இன்று கொத்தமல்லி சட்னி வைக்கக் கூட இணையத்தினைப் பயன்படுத்தும் அளவுக்கு அதன் வளர்ச்சியினைப் பார்க்கிறோம்.

 அதே போல் அடுத்த இருபது ஆண்டுகளுக்குள் எதிரில் இருக்கும் நபரின் முகத்தினைப் படம் பிடித்து, அடையாளம் கண்டு, அவரைப் பற்றிய சகல விவரங்களையும் அவருடைய இணைய நடவடிக்கைகளை வைத்துப் பட்டியலிடக் கூடிய சக்தியுடன் இலத்திரனியல் சாதனங்கள் பயன்பாட்டுக்கு வரும்.

Image_1+%25284%2529.jpg

அது போன்ற கால கட்டங்களில் எந்த ஒரு மனிதனும் தங்கள் நம்பிக்கைக்குரிய நபர்கள்/நண்பர்கள் மத்தியில் மட்டுமே தங்கள் முகத்தினையோ அல்லது தங்கள் அடையாளப்படுத்தியோ கொள்வார்கள். உதாரணத்திற்கு நீங்கள் மானாட மயிலாட பார்த்து விட்டு அதிமுகவின் பொதுக்குழுக் கூட்டத்திற்குச் சென்றால் உள் நுழைந்ததும் எச்சரிக்கை ஒலி அடிக்கச் செய்யுமளவிற்கு வளரப் போகும் விஷயம் தான் இந்த இணையக் கண்காணிப்பு (Project PRISM).

இவற்றையெல்லாம் அமெரிக்க அரசு செய்கிறது என்று உலகிற்கு மறுக்க முடியாத ஆதாரங்களுடன் வெளியிட்டு இதன் ஆபத்தினை பற்றி எடுத்துரைத்த எட்வர்ட் ஸ்நோடனை அரசாங்கத்துடன் வெள்ளைக் காக்கை மேய்க்கும் பெரும் ஊடகங்கள் உளவாளி, மோசடிக்காரன் என்று ஆர்ப்பரித்து அடங்கின.

Image_1+%25288%2529.jpg

ஸ்நோடன் குறித்து விரிவாக, தனியாகப் பார்ப்போம். எல்லாம் சரி இதன் மூலம் அனானிமஸ் அன்பர்களுக்கு வந்த பிரச்சினைகள் என்ன, அவர்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டார்கள், மேலும் மைக்ரொசாப்ட், கூகுள் போன்ற நிறுவனங்கள் பிரத்யேகமாகப் பயன்படுத்தும் குறியீட்டு முறையை (encrpytion) எப்படி அமெரிக்க அரசாங்கள் கட்டுடைத்து அனைத்துத் தகவல்களையும் பார்க்கும் பலம் பெற்றது போன்ற விவரங்களைப் பின்வரும் பகுதிகளில் காண்போம்.

தொடர்வோம்.

- 4தமிழ்மீடியாவுக்காக தமிழரசன்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது மெயில் இரண்டு மூன்று தடவையும் skype இரண்டு தடவையும் கக் செய்யப்பட்டது. எனக்கு அதுபற்றிய அறிவு மிகக் குறைவு. உடனேயே பாஸ் வேட்டை மாற்றவும் இல்லை. இரு வாரங்கள் சென்ற பின்னரே மாற்றினேன். மாற்றிய பிறகும் அவர்கள் ஊடுருவ முடியுமா என்று கொஞ்சம் விளக்கமாகக் கூற முடியுமா பெருமாள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கவும் எனக்கு இதுபற்றிய தேடல் மட்டுமே மற்றும்படி பெரிதாக சொல்லும்படி இல்லை உங்கள் பிரச்சினைக்கு தீர்வு உடணடியாக பாதுகாப்பு கேள்வி பதில் மாற்றிவிடுதல் நன்று பாஸ்வேர்டை குறைந்தது ஒரு மாதத்திற்க்குமேல் உபயோகிக்க வேண்டாம் மாற்றிகொள்ளுங்கள் கைத்தொலைபேசிமூலம் கிடைக்கும் பாதுகாப்பு நம்பர்களுக்கு என தனியாக மற்றவர்களுக்கு தெரியாத ஒரு கைபேசி இலக்கம் வைத்திருப்பது நல்லது  இணையம் ஒரு மாயை கூடுமானமட்டும் உங்கள் உண்மையான தரவுகளை தவிர்த்தல் நல்லது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி பெருமாள்.

Link to comment
Share on other sites

  • 6 months later...
  • கருத்துக்கள உறவுகள்

இணையம் வெல்வோம் 15

 

iv2.jpg

முள்ளிவாய்க்கால் முற்றத்தின் சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டதைக் கேள்விப்பட்ட திமுகவினரைப்போல் வாயெல்லாம் பல்லாக மனமகிழ்ச்சியோடு வாழ்ந்து கொண்டிருந்த அனானிமஸ் குழுவினர் மற்றும் இணையத்தில் தங்கள் அடையாளங்களை மறைத்து வாழும் சாமானியர்களின் வாழ்க்கையிலும், வாயிலும் மண்ணை அள்ளிப் போட்டது அமெரிக்க அரசு.

இணையத்தில் குறியீட்டு முறைப்படி தகவல் பறிமாற்றம் செய்தாலும் அவற்றை சேமித்து அதன் குறியீட்டு முறையினைக் கட்டுடைத்துத் தகவல்களைப் படிப்பதை குற்றமற்ற ஒன்றாக மாற்றும் வண்ணம் சட்டங்கள் வளைக்கப்பட்டன. குறியீட்டுமுறையின் வீரியம் அதிகமாக இருந்தால் சம்பந்தப்பட்ட மைக்ரோசாப்ட், கூகுள் போன்ற நிறுவனங்களின் உதவியை நாடுவது, ஒரு குறிப்பிட்ட பயனாளர் கணக்கின் கடந்தகால பதிவுகள் அனைத்தையும் அந்நிறுவனங்களின் மூலம் பெறுவதற்கான அதிகாரங்களையும் அமெரிக்க பாதுகாப்புத் துறை கைவரப்பெற்றது.

இது போன்ற வேண்டுகோள்களுக்கெல்லாம் நாட்டின் பாதுகாப்பு என்ற பெயரில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பணிந்து போக வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டன. மீசை மடங்காத, விரைப்பான நிறுவனங்கள் தங்கள் தொழிலையே இழுத்து மூடிய சம்பவங்களும் நடந்தன. இது கிட்டத்தட்ட நூறு வீடுகள் இருக்கும் ஒரு ஊரில், ஒரு திருடனின் வீட்டைக் கண்டுபிடிப்பதற்காக அத்தனை வீட்டினையும் முன் அனுமதியின்றி, யாருக்கும் தெரியாமல் உட்புகுந்து வேவு பார்க்கலாம் என்பது போன்ற ஒரே நேரத்தில் பகீர் மற்றும் கிளுகிளுப்பு இரண்டும் கலந்த ஒரு விஷயம்.

iv5.jpg

அது மட்டுமின்றி அமெரிக்க உளவு அமைப்புகள் அனானிமஸ் ஆதரவாளர்கள்/ஆர்வலர்கள் போர்வையில் அவர்களின் செயல்பாடுகளில் பங்கெடுத்துக் கொள்ளவும், இணையத்தில் தங்கள் அடையாளத்தினை மறைத்துக் கொள்ள விரும்புவர்கள் பெரும்பான்மையாகப் பயன்படுத்தும் TOR வலையமைப்பிலும் பங்கேற்பாளர்களாக உருமாறி தங்கள் கணிணிகள் மூலம் பயணிக்கும் தகவல்களைக் கண்காணிக்கவும் ஆரம்பித்தார்கள். இந்தக் காலகட்டத்திற்குப் பிறகு கணிணி/இணைய வல்லுநர்கள் மத்தியில் பலத் துயரச் சம்பவங்கள் நடக்க ஆரம்பித்தன.

அச்சம்பவங்கள் அனைத்தும் அனானிமஸ் தொடர்பானவை என்பதற்கான நேரடி ஆதாரங்கள் ஏதும் பொதுவில் வைக்கப்படவில்லையென்றாலும், அவற்றின் மூலம் அனானிமஸ் அல்லது அமெரிக்க அரசுக்கு எதிராக இணையத்தில் அடையாளங்களை மறைப்பது மற்றும் ஊடகங்களின் தணிக்கை முறை ஆகியவற்றுக்கெதிராக நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்புடையவர்கள் என்று பெரிதும் நம்பப்படுகிறது.

அமெரிக்க அரசு இத்தனை பிரயத்தனப்பட்டாலும் அவர்களுக்கு கைகொடுத்ததென்னவோ எதிரிகளைக் கவிழ்க்க பயன்படும் தொன்றுதொட்ட பாரம்பரிய வழக்கமான காட்டிக்கொடுக்க உள்ளிருக்கும் ஆட்களை வளைக்கும் தந்திரம்  தான். இணையத்தில் மாயமான்களாய் வலம்வரும் அனானிமஸ் அன்பர்களை அவ்வாறு வளைத்த வரலாறு அதிரிபுதிரி திருப்பங்கள் திருப்பங்கள் நிறைந்த மசாலாத் திரைப்படங்களை மிஞ்சிய ஒன்று. அக்கதையினைப் பார்ப்போம்.

முதலில் சட்டமாற்றங்கள் மூலம் இணையக்குற்றங்கள் மிகப்பெரும் தேசத்துரோக வழக்குகளைப் போல கையாளப்பட்டது. சிறு குற்றங்களுக்குக் கூட பல்லாண்டு சிறைத்தண்டனை, கட்டவே முடியாத அபராதத் தொகை போன்ற அஸ்திரங்கள் ஏவப்பட்டன. அனானிமஸ் அன்பர்கள் முகமூடி மாயாஜாலக்காரர்களாக இருந்தாலும் பெரும்பான்மையனோர் மிக இளம் வயதினர், அதிமுக்கிய இணையப் பாதுகாப்புத் துறைகளின் பதவிகளை அலங்கரித்தவர்களாகவோ அல்லது அதனை எதிர்நோக்கியவர்களாக இருந்தனர்.

iv7.jpg

அமெரிக்க அரசின் கடும் தண்டனைகளும், வழக்கில் சிக்கி விட்டால் தங்கள் எதிர்காலம் சாகும்வரை சின்னாபின்னப்படுத்தப்படும் என்பது அவர்களிடையே ஒரு மனக்கலக்கத்தினை ஏற்படுத்தியிருந்தது. இதில் நாம் முதலில் சந்திக்கப் போகும் நபர் ‘சிக்கி’ என்று செல்லமாக அழைக்கப்படும் 20 வயதாகும் சிகர்துர் தொர்டர்சன். மேலே படத்தில் புத்தம் புதிய பால் டின்னைப் போல புசுபுசுவென விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசான்ஞ் உடன் காட்சியளிக்கும் சிறுவன் தான் சிகர்துர். இந்தப் பொடிப்பயல் எப்படி ஜூலியனுடன் என்று உங்கள் மனதில் தோன்றும் அதே கேள்வியும் ஆச்சர்யமும் அனைவருக்கும் தோன்றியது. ஜூலியனுனிருந்தவர்கள் அனைவருமே சின்னஞ்சிறுசு, அறியாத வயசு என்று ஜூலியனை கடுமையாக எச்சரித்தனர். விதி வீதியில் விளையாடியது, ஜூலியன் கேட்கவில்லை.

ஜூலியன் சிகர்துர் மேல் வைத்த நம்பிக்கைக்குக் காரணம் இருந்தது.  ஐஸ்லாந்தைச் சேர்ந்த சிகர்துர்,  ஜூலியனைப் போலவே தனிமை நிறைந்த சிறுவனாக வளர்ந்ததும், தன் 12 வயதிலேயே கணிணிகள் மேல் காதல் கொண்டு ஒரு இணையத்தளத்தினை ஹேக் செயத்ததும், 14 வயதில் குடும்பத்துடன் விமானப்பயணம் மேற்கொள்கையில், ஐஸ்லாந்தின் முக்கிய நிதி நிறுவனமான ‘மைல்ஸ்டோன்’னின் முக்கியஸ்தரான தன் சக பயணியின் மடிக்கணிணியினை சரி செய்து கொடுத்ததன் மூலம் அந்நிறுவனத்திலேயே வேலை கிடைக்கப்பெற்றதும் சிகர்துரின் திறமையைச் சொல்லும். சிகர்துரின் வீரியம் புரியாமல் மைல்ஸ்டோன் நிறுவனம் கொடுத்த வேலை அவர்களின் வலையமைப்பில் சிதறிக்கிடக்கும் அதிமுக்கிய ஆவணங்களைத் தேடிப்பிடித்து அவற்றை முற்றாக அழிப்பது.

சாக்லேட் சாப்பிடும் வயதாக இருந்தாலும், இந்த வேலைக்கு இவ்வளவு காசா என்ற கேள்வி சிகர்துருக்கும் இருந்து வந்தது. தான் அழிக்க வேண்டிய ஆவணங்களை பிரதி எடுத்து வீட்டுக்குக் கொண்டுவந்து அவற்றைப் படிக்க ஆரம்பித்ததும் சிகர்துருக்கு அந்நிறுவனத்தின் பெரிய தலைகள் ஈடுபட்டுள்ள மோசடிகளும், அதில் ஐஸ்லாந்து அரசியல்வாதிகளின் தொடர்பும் புரியவந்தது. இது நடந்த வருடம் 2009, கடும் பொருளாதார நெருக்கடியில் ஐஸ்லாந்து தத்தளித்த நேரம். சிறுவயது முதலே ‘ஏதாவது செய்யனும் பாஸ்’ என்று ஆசை கொண்டிருந்த சிகர்துருக்கு இது அரிய சந்தர்ப்பமாகத் தோன்றியது.

தன் அடையாளத்தினை தெரியப்படுத்தாமல் சுமார் 600 gb அளவிலான கோப்புகளை முக்கிய ஊடகங்களுக்கு சிகர்துர் மூலம் பந்தி வைக்கப்பட்டு, மைல்ஸ்டோன் நிறுவனத்தின் மானம் அடுத்த நாள் தலைப்புச் செய்தியில் சந்தி சிரித்தது. அதுவரை சிறப்பாக அனைத்தையும் கடந்து வந்த சிகர்துர் சந்தித்த முதல் துரோகம் தன் வகுப்புத் தோழன் தன்னைக் காட்டிக் கொடுத்தது தான். மைல்ஸ்டோன் கோப்புகளை பகிரங்கப்படுத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு, வழக்கும் தொடுக்கப்பட்டது, வாழ்க்கையே வெறுத்துப் போன சிகர்துருக்கு தெரிந்த ஒரு விடிவெள்ளி ஐஸ்லாந்து ஊடகத்தில் பழக்கமான கிறிஸ்டைன்.

iv4.jpg

இந்த கிறிஸ்டைன் வேறு யாருமல்ல, விக்கிலீக்ஸின் அதிகாரப்பூர்வ ஊடகத்தொடர்பாளர். அந்த காலகட்டத்தல் அப்பொழுது தான் விக்கிலீக்ஸ் சிறிதாக அனைவரின் கவனத்தையும் ஈர்க்க ஆரம்பித்த நேரம், சிகர்துர் பகிரங்கப்படுத்திய கோப்புகள் ஐஸ்லாந்தில் புயலைக்கிளப்பியதைக் கண்ட கிறிஸ்டைன், அகில உலகத்தையும் உறைய வைத்த ‘colateral murder’ காணொளியினை வெளியிடும் பணிகளுக்காக ஐஸ்லாந்தில் மையம் கொண்டிருந்த ஜூலியன் அசான்ஞ்சிடம் சிகர்துரை அறிமுகப்படுத்திய அந்த கணம் ஜூலியனுக்கு ஏழரை ஆரம்பித்தது.

iv3.jpg

தன்னைப் போலவே சிறுபிராயத்தினை கொண்டிருந்ததும், தன் சொந்த மகனின் வயதினை ஒத்திருந்த சிகர்துரிடம் அடுத்த சிலமணி நேரங்களின் தனியே அமர்ந்து சூப் சாப்பிடுமளவுக்கு மனதால் நெருங்கியிருந்தார் ஜூலியன். அடுத்த சில வாரங்களில் ஜூலியனின் நம்பிக்கைகுரிய உள்வட்டத்தில் சிகர்துருக்கு இடமளிக்கப்பட்டது. நினைத்த நேரத்தில் ஜூலியன் தொடர்பு கொள்ள குறியீட்டுமுறைப்படுத்தப்பட்ட கைப்பேசி வழங்கப்பட்டது, ‘colateral murder’ காணொளியின் தயாரிப்புப் பணியிலும் பங்களிக்கும் வாய்ப்பு கிடைத்தது சிகர்துருக்கு. முதலில் penguinX என்றும், பின்னர் ‘Q’ என்றும் புனைப்பெயரால் சிகர்துரை அனைவரும் அழைக்க ஆரம்பித்திருந்தனர்.

iv.png

தொடர்து பலபேரும் ஜூலியனிடம், சிகர்துருக்குக் கூடி வரும் முக்கியத்துவத்தினை எச்சரித்தையும் மீறி விக்கிலீக்ஸ் நிறுவனத்தில் அதிகாரப்பூர்வ விவாதத்தளங்களை(chatroom/forum) நிர்வாகம் செய்யும் பொறுப்பு சிகர்துருக்கு வழங்கப்பட்டது. கேட்க சாதாரணமாக இருந்தாலும் இது நடந்த பொழுது ஸ்வீடனில் ஆடிய கபடி ஆட்டத்திற்காக இன்டர்போல் ஜூலியனைத் தேடிய நேரம், collateral murder காணொளியின் வெளியீட்டுக்குப் பின்னர் அமெரிக்க உளவுத்துறை தன் கழுகுக் கண்களை ஜூலியனின் மேல் அழுந்தப் பதித்திருந்த நேரம். விக்கிலீக்ஸின் விவாதத்தளங்களுக்கு வருபவர்கள் அமெரிக்க உளவாளிகளாகக் கூட இருக்கலாம், ஒவ்வொருவரையும் எடை போட்டு அனுமதிக்க வேண்டிய பெரும் பொறுப்பு சிகர்துரின் பிஞ்சுக்கைகளில் வரப்போகும் விபரீதங்களை அறியாமல் ஊஞ்சலாடிக் கொண்டிருந்தது.

தொடரும்.

Photos : Inernet

- 4தமிழ்மீடியாவுக்காக தமிழரசன்

இணையம் வெல்வோம் 16

 

hacking_wordcloud.jpg

சிட்டுக்குருவி சிகர்துரின் தலையில் பனங்காய் வைத்த கணக்காய், விக்கிலீக்ஸின் சகல விஷயங்களிலும் கலந்து களமாடும் வல்லமை ஜூலியனால் வழங்கப்பட்டிருந்தது.

உலகமெங்கும் இருக்கும் அமெரிக்க தூதரக அதிகாரிகள் அந்தந்த நாட்டுத் தலைவர்களை கவுண்டமணியும் காது பொத்தும் அளவிற்கு நாராசமாய் கிண்டலடித்தும், நாட்டின் நிலவரங்களையும் தெரியப்படுத்தும் மின்னஞ்சல்களை ஐரோப்பிய யூனியனில் இருக்கும் முக்கிய ஊடக நிறுவனங்களுக்கு வழங்கும் வேலை சிகர்துருக்கு வழங்கப்பட்டதிலிருந்து சிகர்துரின் முக்கியத்துவத்தினை நாம் அறிந்து கொள்ளலாம். ஜூலியனின் வயதுக்கு வந்த மற்ற ஆலோசர்களும், நண்பர்களும் ஏதேனும் அசம்பாவிதம் நடக்காமலா போய்விடும் என்று ‘நாந்தேன் அப்பவே சொன்னேன்ல’ சொல்வதற்குக் காத்திருந்தனர்.

anonymous2.jpg

விக்கிலீக்ஸ் சார்பாக சிகர்துர் உலகம் சுற்றிக் கொண்டிருந்த நேரம் ஜூலியன் லண்டன் சிறையிலிருந்து பிணையில் வெளியாகி, விக்கிலீக்ஸ் ஆர்வலரான கேப்டன் வேகன் ஸ்மித்திற்குச் சொந்தமான எல்லிங்ஹாம் ஹால் பண்ணை வீட்டில் தங்கியிருந்தார். அங்கிருந்து அரசியல் தஞ்சம் கேட்டு ஈக்வடர் நாட்டு தூதரகத்திற்கு செல்லும் காலம் வரையிலும் ஜூலியனை நெருக்கமாக அடிக்கடி சந்தித்த நபர்களில் சிகர்துரும் அடக்கம். இன்று வரையிலும் ஜூலியன் லண்டனிலுள்ள ஈக்வடர் நாட்டுத் தூதரகத்தில் தங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவாகவே சந்தேகப்பிராணியான ஜூலியன் தன்னுடன் இருக்கும் அனைவரையும் வேவு பார்க்குமளவுக்கு மன அழுத்தத்தில் இருந்த நேரம், அவ்வாறு வேவு பார்க்கப்பட்டவர்களில் தங்கியிருந்த பண்ணை வீட்டின் சொந்தக்காரரான கேப்டன் வேகன் ஸ்மித்தும் ஒருவர். இப்படி வேவு பார்த்து தகவல்களைத் திரட்டி ஜூலியனுக்கு அனுப்பி வைப்பது சிகர்துரின் வேலைகளுல் ஒன்று. வேவு பார்ப்பதென்றால் சம்பந்தப்பட்ட நபர்களின் கணிணியிலிருக்கும் தகவல்களை மொத்தமாக சுருட்டி அவற்றை அலசி ஆராய்வது, தினசரி நடவடிக்கைகள், சந்திப்புகள் ஆகியவற்றை நுண்ணிய கண்காணிப்புக் கருவிகள் மூலம் பதிவு செய்வது போன்றவையாகும்.

kayla-on-twitter.jpg

ஜூலியனை மேலும், மேலும் சந்தோசப்படுத்த, தனது அதிகாரங்கள் அதிகரிப்பது ஒருவித போதையாகி, பெயர்பெற்ற ஹேக்கர்களிடம் தொடர்புகளை ஏற்படுத்தி அவர்கள் மூலம் விக்கிலீக்ஸ் வெளியிடுவதற்கான ஆவணங்களை சேகரிப்பதில் கொண்டு போய் விட்டது. காக்கர் (Gawker) வலைப்பதிவுத் தளத்தினை கட்டுடைத்து தங்கள் பெயரினைப் பெரிதும் பேச வைத்த நோசிஸ்(Gnosis) எனும் ஹேக்கர் குழுவிடம் தொடர்பினை ஏற்படுத்திக் கொண்ட சிகர்துர், பின்னர் அவர்கள் மூலம் 16 வயதே ஆன பெண் கேலா(Kayla) மற்றும் நியூயார்க்கைச் சேர்ந்த 30 வயது நபர் சாபு(Sabu) ஆகியோரின் அறிமுகம் கிடைத்தது. கேலாவின் மூலம் பல கோப்புகள் கிடைத்தது சிகர்துருக்கு. முக்கியமாக ஐஸ்லாந்து அமைச்சரக இணையத்தளங்கள் மற்றும் மின் நிறுவனமான லான்ட்ஸ்நெட் ஆகியவற்றின் தளங்கள் தகர்ப்பதும் கேலாவின் உதவியோடு சிகர்துர் நடத்தி முடித்தாலும், அதில் எதிர்பார்த்த கிளுகிளுப்பும், கிக்கும் சிகர்துருக்குக் கிடைக்கவில்லை.

gnosis.jpg

சாபுவிடம் தொடர்பு கொண்டு தான் இன்னும் பெரிதாக எதிர்பார்ப்பதாகவும், அவற்றினை விக்கிலீக்ஸ் மூலம் வெளியிடுவதற்கு ஆவண செய்வதாகவும் சிகர்துர் சொல்ல, சாபுவோ முதலில் சிகர்துருக்கு விக்கிலீக்ஸில் இருக்கும் தொடர்பினை உறுதிப்படுத்தாமல் எதுவும் செய்ய மறுக்க, நேரடியாக ஜூலியனுடன் பேசிய பிறகே சாபு உதவி செய்ய சம்மதித்தாக சிகர்துர் சொன்னாலும் என்ன நடந்தது என்பது சாபுவுக்கும், ஜுலியனுக்குமே வெளிச்சம். அதற்குப் பிறகு வரிசையாக நடந்தேறியது அதிரடி சம்பவங்கள்.

sabu120611_1_560.jpg

சாபு

ஹேக்கிங் கில்லாடியான சாபுவின் திறமை அனானிமஸ் உலகில் மிகப்பிரபலம். லல்செக் (lulzec) எனப்படும் ஹேக்கிங் குழுவின் நிறுவனர்களின் ஒருவர். லல்செக்கின் அதிரடி அட்டகாசங்கள் மிகப்பிரசித்தம். இவர்களின் தாக்குதலுக்கு அமெரிக்காவின் சிஐஏ இணையத்தளம் கூட தப்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சாபுவின் திறமைகளின் வீரியம் சிகர்துர் கேட்டு முடிக்கும் முன்பே தகவல்களை கொட்டும் வேகத்தில் தெரிந்தது, கேட்ட கோப்புகள் எந்த நிறுவனம் அல்லது அமைப்பிற்குச் சொந்தமாக இருந்தாலும் உடனே அவர்களின் வலையமைப்பிற்குள் புகுந்து சுருட்டி அள்ளிவந்து கொட்டுவதில் சாபு கில்லாடி. அமெரிக்க பாதுகாப்பு மற்றும் உளவு அமைப்புகளுடன் சேர்ந்து இயங்கும் தனியார் நிறுவனங்களான ஸ்ட்ரட்போர் (stratfor), லக்ஹீட் மார்ட்டின் (lockheed martin) உள்ளிட்ட நிறுவனங்களின் மின்னஞ்சல்களின் தொகுப்புகள் சாபுவின் மூலம் சிகர்துருக்குக் கையளிக்கப்பட்டது. இவை பின்னாளில் விக்கிலீக்ஸ் மூலம் வெளிவந்த போது பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியது. அமெரிக்கப் பாதுகாப்பு மற்றும் உளவு அமைப்புகளின் செயல்படும் முறைகள், முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்ட விதங்கள் என அனைத்தும் சந்தி சிரித்தன. பாகிஸ்தானில் சுட்டுக்கொல்லப்ப்ட்ட பின்லேடனின் உடலுக்கு உண்மையில் என்ன நடந்தது போன்ற தகவல்கள் இம்மின்னஞ்சல்கள் மூலம் வெளிவந்தன.

1345418643-julian-assange-at-the-ecuador

ஆரம்பத்தில் கிளுகிளுப்பாக இருந்தாலும், சாபுவின் மூலம் தகவல்கள் மளமளவென கொட்டத் தொடங்கியதும், அத்தகவல்களின் வீரியமும் சிகரிதுரின் நிலைமையை ஷகீலா படம் பார்த்த வயசுப்பையனைப் போலாக்கியது. சாமத்தில் கெட்ட கனவுகள் வர ஆரம்பித்தன. நள்ளிரவில் எப்.பி.ஐ கதவை உடைத்துக் கொண்டு சிகர்துரை அள்ளிப் போவது போலான பீதியை உண்டாக்கும் பயங்கள் தோன்ற ஆரம்பித்தன சிகர்துருக்கு. உலகமெங்கும் பரவியிருக்கும் காக்கர், நோசிஸ், மற்றும் லல்செக் போன்ற சிறு குழுக்கள் சேர்ந்தது தான் அனானிமஸ் என்பதும் அவர்களின் சகவாசம் எத்தகைய சிக்கலில் கொண்டு விடும் என்பது சிகர்துருக்கு மெல்ல மெல்லப் புரிய ஆரம்பித்த போது தான் எந்த அளவுக்கு எதில் புதைந்திருக்கிறோம் என்பது தெரிந்தது. அது போக மற்றுமொரு விஷயமும் சிகர்துர் மனதை அரித்துக் கொண்டிருந்தது.

Sigurdur.jpg

அது கொலட்ரல் மர்டர் காணொளி மற்றும் தூதரக மின்னஞ்சல்களை விக்கிலீக்ஸிக்கு அளித்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு வழக்கினைச் சந்தித்து வரும் பிரட்லி மேனிங்கின் வழக்கினை நடத்துவதற்காக ஆர்வலர்களால் ஆரம்பிக்கப்பட்ட பிரட்லி மேனிங் பாதுகாப்பு இயக்கத்திற்குப் பெருந்தொகை ஒன்றை நன்கொடையாகத் தருவதாக வாக்களித்திருந்த ஜூலியன் அதனை நிறைவேற்றவில்லை. அது குறித்த மனவருத்தமும் சிகர்துருக்கு ஜூலியனின் மீதிருந்த மதிப்பினை, நம்பகத்தன்மையைச் சிதைத்திருந்தது.

ஆகஸ்ட் 23, 2011 அன்று அதிகாலை சுமார் மூன்று மணி அளவின் தூக்கம் வராமல் மன அழுத்தத்தில் தவித்த சிகர்துர் ஒரு முடிவுக்கு வந்து ‘உங்களைச் சந்திக்க வேண்டும்’  என்ற தகவலுடன் மின்னஞ்சல் ஒன்றை ஐஸ்லாந்து தலைநகர் ரெஜவிக்கில் (Reykjavik) உள்ள அமெரிக்கத் தூதரகத்திற்கு அனுப்பு, உடனே வந்து சந்திக்க அழைப்பு வருகிறது சிகர்துருக்கு.

காலம் எத்தனையோ புதிர்களை நமக்கு போட்டுக் கொண்டே இருக்கிறது. விக்கிலீக்ஸ் மற்றும் அனானிமஸ், அவர்களுக்குக்கிடையே உள்ள தொடர்புகள், தகவல் பறிமாற்றங்கள், விக்கிலீக்ஸ் விவாதத்தளங்களில் பங்கு பெற்றவர்கள் என்று சகல விவரங்களும் தெரிந்த,  ஜூலியனிடம் நெருங்கிப் பழகிய சிகர்துர் அமெரிக்கத் தூதரகத்திற்குச் சென்று வாக்குமூலமளிக்க செல்லத் தயாராகிக் கொண்டிருந்தது அத்தகைய புதிர்களில் ஒன்று. சிகர்துர் மூலம் வெளிச்சத்திற்கு வந்த அனானிமஸ்கள், விக்கிலீக்ஸிற்கு ஏற்பட்டப் பின்னடைவு, தொடர்ந்து ஏற்பட்ட முக்கிய மரணங்கள்…

- 4தமிழ்மீடியாவுக்காக தமிழரசன்

இணையம் வெல்வோம் 17

 

unnamed.jpg

அமெரிக்கத் தூதரக வளாகத்தில் அமெரிக்க அதிகாரிகள் காட்டிய அனைத்து ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு அதிகாரப்பூர்வ ஆள்காட்டியாக அவதாரமெடுத்திருந்த சிகர்துருக்கு கொடுக்கப்பட்ட வேலை, தொடர்ந்து அமெரிக்க உளவு அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பதும், விக்கிலீக்ஸ், அனானிமஸ் இடையிலான தொடர்புகள், அடுத்தடுத்து வரப்போகும் விக்கிலீக்ஸ் வெளியீடுகள் குறித்தத் தகவல்களை அனுப்புவதும் தான்.

வந்த சுவடே தெரியாமல் சிகர்துர் கட்டுக்குலையாமல் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அன்று முதல் எப்.பி.ஐ உடன் தினமும் நேரடித்தொடர்பில் இருந்தார் சிகர்துர். விக்கிலீக்ஸ் தளங்களில் நடைபெறும் விவாதங்கள், வெளியிடத்தயாராகும் கோப்புகள், சாபு மூலம் கொட்டும் தகவல்கள் அனைத்தும் சிகர்துர் மூலம் நேரலையில் அமெரிக்கா கண்டுகளித்துக் கொண்டிருந்தது.

sabu-informer-4f5a590-intro.jpg

சாபுவின் கைங்கர்யத்தில் கிடைத்த ஸ்ட்ரட்போர் தகவல்களையே தாளிக்க முடியாமல் இருந்த சிகர்துருக்கு சாபுவிடம் இருந்து சிரிய அரசாங்கத்தின் மின்னஞ்சல் வழங்கியிலிருந்து லவட்டப்பட்ட 96GB அளவிலான மின்னஞ்சல்கள் வந்து சேர்ந்தது. பின்னாளில் சிரியா கோப்புகள் என்ற பெயரில் விக்கிலீக்ஸ் மூலம் அவை வெளியிடப்பட்டு உள்நாட்டு கலவரம் நடந்த அந்த நாட்களில் மேற்கத்திய நாடுகளும், அந்நாட்டு நிறுவனங்களும் போட்ட இரட்டை வேடங்கள் வெளிச்சத்திற்கு வந்து பரபரப்பை ஏற்படுத்தியது. இவை அனைத்தும் வெளிவருவதற்கு முன்பே அமெரிக்காவிற்கு சிகர்துர் மூலம் தகவல் சொல்லப்பட்டது. இப்படி அமெரிக்காவின் ஜேம்ஸ்பாண்டாக செயல்பட்டுக் கொண்டிருந்த சிகர்துருக்கு சங்கு ஒரு தொலைபேசி வடிவில் வந்தது. 

விக்கிலீக்ஸின் ஊடகத் தொடர்பாளரும், சிகர்துரை ஜூலியனுக்கு அறிமுகம் செய்து வைத்தவருமான கிறிஸ்டைன் இடமிருந்து வந்த அழைப்பின் மூலம் சிகர்துர் மேல் விக்கிலீக்ஸ் பணம் ஐம்பதாயிரம் அமெரிக்க டாலர்கள் கையாடப்பட்டதாகக் குற்றப்பத்திரிக்கை வாசிக்கப்பட்டு, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படப் போவதாக சொல்ல, தனக்கு இனி இங்கு இடமில்லை என்ற முடிவுக்கு வந்து விக்கிலீக்ஸின் தொடர்பு எல்லைக்கு வெளியே சிகர்துர் என்ற சிட்டுக்குருவி சர்ரென்று பறந்தது.

Jeremy_hammond_111313.jpg

தனக்கு நேர்ந்த இக்கட்டான சூழ்நிலை குறித்து அமெரிக்காவிற்குத் தெரிவித்து இனி தன்னால் தகவல்கள் தர இயலாது என்று சொன்ன சிகர்துர், வாஷிங்டன் வரவழைக்கப்பட்டு மூளையில் இருக்கும் மிச்சச் சொச்சத் தகவல்களும் சுத்தமாக சுரண்டி எடுக்கப்பட்டது. இம்முறை சிகர்துர் மூலம் விக்கிலீக்ஸ் உடன் தொடர்பில் இருக்கும் அத்தனை பேர்களும் கவனமாக பதிவு செய்து சக்கையாக அனைத்துத் தகவல்களையும் கறந்து ஐஸ்லாந்தில் துப்பப்பட்டார் சிகர்துர். அடுத்த சில நாட்களில் 2012 மார்ச் மாதம் வரிசையாகக் கைதுக் காட்சிகள் அரங்கேறின. லல்செக் ஹேக்கிங் குழுவின் நிறுவனர்களில் ஒருவரும் சாபுவின் நெருங்கிய கூட்டாளியுமான ஜெரொமி ஹமன்ட் (Jeremy Hammond) அமெரிக்காவிலும், சிகர்துருடன் தொடர்பில் இருந்த கேலா இங்கிலாந்திலும் வைத்து கைது செய்யப்பட, அதன் பின் ஊடகங்களி வெளியான செய்திகளில் சிகர்துருக்கு பல ஆச்சர்யங்கள் காத்திருந்தன. 

16 வயதே ஆன பெண்ணாக ஹேக்கிங் உலகில் அறியப்பட்ட கேலா உண்மையில் 25 வயது ஆண் ரயான் (Ryan Ackroyd) என்பதும், ஜெரோமி ஹமண்ட் குறித்துத் தகவல் கொடுத்தது சாபு தான் என்பதும், அதற்கு ஒரு வருடத்திற்கு முன்பே 2011 ஜூன் மாதம் சாபு அமெரிக்க உளவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு ஆள்காட்டிக் கொடுக்க சம்மதித்த காரணத்தால் ரகசியமாகப் பிணையில் விடுவிக்கப்பட்டு ஹேக்கிங் உலகில் உலவ விடப்பட்ட உளவாளி என்பதும் தெரிய வந்த சிகர்துருக்குக் பேரரசின் திரைப்படம் பார்த்ததைப் போன்ற பாதிப்பில் கன்னாபின்னாவென தலைசுற்றிக் கிறங்கினாலும் அப்பொழுது தான் பல விஷயங்கள் தெளிவாகியது.

Kayla+Aka+Ryan.jpg

ஒவ்வொரு முறையும் சிகர்துர் எப்.பி.ஐ இடம் சாபு குறித்தத் தகவல்கள் அளித்த போதும் மேற்கொண்டு அது குறித்த தகவல்களோ அல்லது கேள்விகளோ சிகர்துரிடம் கேட்கப்படவில்லை. அமெரிக்கப் பாதுகாப்பு அமைப்புகளின் வரலாற்றில் மிகப்பெரியத் தகவல் கசிவு விக்கிலீக்ஸ் வெளியிட்ட ஸ்ரட்போர் மின்னஞ்சல்கள் மற்றும் சிரியாவின் உள்நாட்டு கலவரத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்ட நேரத்தில் இரட்டை வேடம் போட்ட அத்தனை பேரையும் அம்பலப்படுத்திய விக்கிலீக்ஸின் ‘சிரியா கோப்புகள்’ ஆகிய இரண்டும் அமெரிக்க உளவு அமைப்புகளுக்குத் தெரிந்தே விக்கிலீக்ஸிற்குக் கையளிக்கப்பட்டிருக்கிறது. தன் கோவணம் காற்றில் பறந்தாலும் ஜூலியனைக் கையும் களவுமாக நேரடியாக அமெரிக்க சட்டப்படி குற்றவாளியாக நடக்க வைத்து, சிறைபிடிக்க விரிக்கப்பட்ட வலைதான் இத்தனை நாடங்கங்களும், காட்சிகளும். குற்றத்தினை நடக்காமல் தடுக்க வேண்டிய அமெரிக்க பாதுகாப்பு அமைப்புகளே அவற்றை நடக்க வேடிக்கைப் பார்த்த விதம் அனைவருக்கும் ஆச்சர்யத்தையும், ஜூலியன் மேல் அமெரிக்க வைத்திருக்கும் குறியின் தீவிரத்தையும் புரியவைத்தது.

Julian+Assange+and+Free+Jeremy+Hammond.j

சாபுவிற்கு சற்றும் குறைவில்லாத ஹேக்கிங் நிபுணரும், தீவிர  இணையப் போராளியுமான ஜெரொமி ஹமன்ட், ஸ்ரட்போர் மின்னஞ்சல்கள் வெளியீட்டு விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டு பத்தாண்டுகள் சிறைத் தண்டனையும், சாபுவுடன் தொடர்பில் இருந்த கேலா/ரயான் 30 மாத சிறை தண்டனையும் அனுபவித்துக் கொண்டிருப்பது உபதகவல். அது வரை ஏகப்பட்ட சட்டச்சிக்கல்களைச் சந்தித்தாலும், சளைக்காமல் சமாளித்து லண்டனில் பிணையில் வெளிவந்திருந்த ஜூலியன் மேற்படி சம்பவங்களுக்குப் பின்னர் இதற்கு மேல் ரத்த பூமியில் உலவ முடியாது என்று முடிவு செய்து ஈக்வடர் தூதரகத்தில் அரசியல் தஞ்சம் கேட்டு குடியறியதில் இருந்து இவற்றின் பின்விளைவுகளால் ஜூலியன் தலைக்கு வரவிருந்த ஆபத்தினை உணரலாம்.  அன்று தூதரகத்தின் உள்நுழைந்த ஜூலியன் இன்றும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

கையாடல் செய்ததாகச் சொல்லப்பட்ட பணம் ஜூலியனின் அனுமதியுடன் தன் கைச்செலவுக்கு எடுத்தது என்று சிகர்துரும், சிகர்துர் சொல்லும் அளவுக்கு ஜூலியனோ அல்லது விக்கிலீக்ஸ் நபர்கள் யாருமோ சிகர்துரை அளவுக்கு மீறி நம்பவில்லை என்று க்றிஸ்டைனும் முன்னுக்குப் பின் முரணாக சொன்னாலும், விக்கிலீக்ஸ் குறித்து சிகர்துர் தான் எப்.பி.ஐ இடம் போட்டுக் கொடுத்தது என்று ஜனவரி மாதம் 2013க்குப் பிறகு தான் ஜூலியனுக்கும், க்றிஸ்டைனுக்கும் சந்தேகத்திற்கு இடமின்றி ஊர்ஜிதமானது, தகவல் உபயம் க்றிஸ்டைனின் நண்பரான ஐஸ்லாந்தின் முன்னாள் உள்துறை அமைச்சர்.

maxresdefault.jpg

2012 மார்ச் மாதத்தின் கைதுச் சூறாவளிக்குப் பிறகு பல மர்ம மரணங்கள் இணைய உலகை உலுக்கத் தொடங்கின. அவர்கள் அனைவருமே ஒரு வகையில் இணைய சுதந்திரத்தில் பாதுகாப்பின் பெயரில் கைவைக்கும் அமெரிக்க அரசிற்கு எதிராகக் கொடிபிடித்தவர்கள். 

எப்.பி.ஐ , என்.எஸ்.ஏ மற்றும் சி.ஐ.ஏ அமைப்புகளின் கையில் அனானிமஸ் மற்றும் விக்கிலீக்ஸ் உடன் தொடர்புடையவர்களாக மாட்டியவர்கள் யார் யாரென்பது சம்பந்தப்பட்ட தலைகளுக்கே வெளிச்சம். சில வேளை யாரென்றே தெரியாமல் தங்கள் அடையாளங்களை மறைத்து செயல்பட்டவர்களாகக் கூட அவர்கள் இருக்கலாம் என்று பெரிதும் நம்பப்படுகிறது. அவ்வாறு மரணித்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் பத்திரிக்கையாளர் மெக்கேல் ஹேஸ்டிங், நாம் முதன் முதலில் பார்த்த இணைய ஆரவலர் ஆரோன் ஸ்வார்ட்ஸ், உலகப்புகழ் பெற்ற ஹேக்கிங் மன்னன் பெர்னபி ஜக் ஆகியோர். இவர்கள் அனைவரின் மரணத்திற்கும் உள்ள ஒற்றுமை இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்னதாக அமெரிக்க உளவு அமைப்புகளால் விசாரணைக்கோ அல்லது கண்காணிப்பிற்கோ உள்ளாக்கப் பட்டவர்கள்.

tweet.png

இணையப்போரளிகளுடன் கண்ணாமூச்சி ஆடி, ஆடி அலுப்பில் இருந்த அமெரிக்க பாதுகாப்பு அமைப்புகளின் பயணத்தில் மிகப்பெரும் திருப்புமுனையாக அமைந்தது சாபுவின் கைது. ஊரே வியந்து பார்க்கும் ஹேக்கிங் சாகசக்காரரான சாபு, கைதவறி தன் அடையாளத்தினை மறைக்காமல், தனது உண்மையான வலையமைப்பு எண்ணுடன் இணையத்தில் ஒரே ஒரு முறை இணைந்தது தான் மாட்டிகொண்டதற்கான காரணம். அத்தனை துல்லியமாக வைத்த குறி தப்பாமல் இணையத்தில் யாரையும் கண்டுபிடிக்க முடியும் என்பதற்கு சாபுவின் சம்பவம் சாட்சி. சிகர்துருக்கோ அல்லது சாபுவுக்கோ தாங்கள் அளித்த தகவல்கள் மூலம் நடக்கப் போகும் விபரீதங்கள் குறித்து தெரிந்திருக்கவில்லை. இதில் தப்பியவர்கள் ஈக்வடர் தூதரகத்தில் தஞ்சம் புகுந்த முன்னெச்சரிக்கைப் புலியான ஜூலியனும், ரஷ்யாவில் தஞ்சமடைந்திருக்கும் எட்வர் ஸ்நோடனும் மட்டுமே.

தொடர்வோம்…

Photos : Inernet

- 4தமிழ்மீடியாவுக்காக தமிழரசன்

இணையம் வெல்வோம் 18

 

 

அமெரிக்க உளவுத்துறை அமைப்புகளுக்கும் இணையப்போராளிகளுக்கும் இடையேயான கண்ணாமூச்சி ஆட்டத்தில் 2013ம் வருடம் மிக முக்கியமானது.  2012 மார்ச் மாதத்தில் சிகர்துர் மற்றும் சாபு மூலமாக தங்கள் வசப்பட்ட தகவல் பறிமாற்றங்கள் மற்றும் கைது நடவடிக்கைகள் மூலம் அமெரிக்காவின் கை ஓங்கியிருந்த நேரம். இந்த பின்னடைவின் உடனடி விளைவு 2012 ஜூன் மாதம் ஜூலியன் அசான்ஞ் ஈக்வடர் தூதரகத்தில் குடித்தனம் புகுந்தது தான்.

2013 ஜனவரியில் 26 வயதே ஆன ஆரோன் ஸ்வார்ட்ஸின் தற்கொலை. மே மாதம் எட்வர்ட் ஸ்நோடன் ஹாங்காங் தப்பியோட்டம், பின்னர் ஜூன் மாதம் புகழ்பெற்ற பத்திரிக்கையாளரான மைக்கெல் ஹேஸ்டிங் மற்றும் ஜூலையில் ஹேக்கர்களின் சூப்பர் ஸ்டார் பர்னபி ஜாக்ஆகியோரின் மரணம் என இணைய வல்லுநர்களின் உலகம் திகில் திருவிழாவில் தடுமாறித் தவித்தது.

 

எட்வர்ட் ஸ்நோடன் அமெரிக்காவின் இணையக் கண்காணிப்புக் குறித்து வெளியிட்டத் தகவல்களை நம்மில் எத்தனை பேர் ஆழ்ந்து படித்திருக்கிறோம் என்று தெரியவில்லை. அமெரிக்க வரலாற்றில் நாட்டின் பாதுகாப்புக்காக எதுவும் செய்யலாம் என்று ஆழ்ந்த மயக்கத்தில் இருந்த மக்களை தட்டியெழுப்பிய நிகழ்வுக்குச் சொந்தக்காரர் ஸ்நோடன். முப்பது வயதிற்குள் CIAவில் பணிபுரிந்த அனுபவம், அமெரிக்கப் பாதுகாப்பு அமைப்பான NSAவிற்காக ஹவாய்த் தீவில் வேலை, அழகான காதலி, அன்பான குடும்பம், 2 லட்சம் அமெரிக்க டாலர் வருடச்சம்பளம் இவையனைத்தையும் தியாகம் செய்வதற்கு ஸ்நோடன் தயாராக இருந்தது தான் அனைவரையும் வியப்பிலாழ்த்தியதற்குக் காரணம். ஸ்நோடன் கணிணிகளை, வலையமைப்புகளை நிர்வகிக்கும் பணிகளைச் செய்து வந்த காரணத்தால் எத்தகையத் தகவல் கோப்புக்களையும் அணுகுவதற்கும், வலையமைப்புப் பாதுகாப்பில் சிக்காமல் இருப்பதற்கும் எந்தவித தடையுமில்லை.

 

கை நிறைய பணம், தீவின் கடற்கரையோரத்தில் ரசனையான வாழ்க்கை இவற்றை விட, PRISM என்றழைக்கப்படும் NSAவின் கண்காணிப்பு வலையின் தீவிரம் ஸ்நோடனை அசைத்துப் பார்த்தது. அதன் மூலம் நீங்கள் அந்தியூரில் இருந்து மின்னஞ்சல் அனுப்பினாலும், மின்னஞ்சல் வழங்கி அமெரிக்காவில் இருந்தால் முழு மின்னஞ்சலையும் அப்படியே கண்காணிக்க முடியும். இணையத்தில் பெரும்பாலான வழங்கிகள் அமெரிக்காவில் இருந்து செயல்படும் காரணத்தாலும், உலகின் பெரும்பான்மை இணையப்போக்குவரத்த அமெரிக்க நிறுவனங்களால் கையாளப்படுவதாலும் PRISM எனும் ஆக்டோபஸின் கரங்களுக்குள் சிக்கிய சில்வண்டுகளில் நீங்களும் நானும் கூட அடக்கம். உலகின் முக்கிய தலைவர்கள் சுமார் 122 பேர் வரை இதன் மூலம் NSAவின் நேரடிக் கண்காணிப்பில் இருந்திருக்கிறார்கள், அதில் பாரதப் பிரதமர் அலுவலகமும் அடக்கம். கிட்டத்தட்ட உலகின் மிகப்பெரிய கண்காணிப்புத் திட்டத்தில் NSAவில் பணியில் இருக்கும் பாதுகாப்பு வல்லுநர்களுக்கு இதை விடப் பெரும்பேறு ஏதுமில்லை.

 

கண்காணிக்கும் கண்களை யாரும் கண்காணிப்பதில்லை என்பது தான் சோகம். தங்களை யாரும் கண்காணிக்கவில்லை, யாருக்கும் தாங்கள் கண்காணிப்பது தெரியவும் போவதில்லை என்ற காரணங்கள் கண்களை மறைக்க இந்த இணையக் கண்காணிப்பு தொடாத எல்லையே இல்லை. தங்களுக்கு விருப்பமான ஆண்/பெண் தனிநபர்களைக் கூட கண்காணித்துத் தூண்டில் போட்டு மீன் பிடிப்பது கூட நடந்திருக்கிறது J. இந்த காட்டாறில் மைக்ரோசாப்ட், கூகுள் போன்ற பிரம்மாண்டங்கள் எல்லாம் மண்டியிட்டு ‘கேளுங்கள் கொடுக்கப்படும்’ நிலைக்குப் போனாலும், ஸ்நோடனின் தனிப்பட்ட மின்னஞ்சல் சேவையினை வழங்கி வந்த நிறுவனமான லாவாபிட், தகவல்களை அளிக்க மறுத்து நிறுவனத்தையே மூடி விட்டு நிமிர்ந்து சென்ற சம்பவமும் நடந்தேறியது.

 

இத்தனையும் ஸ்நோடன் சொல்லும் வரை உலகில் யாருக்கும் தெரியாது. இவ்வாறான கண்காணிப்பு மிக அருவருப்பானது என்றும் NSAவின் இந்த கண்காணிப்பு முறை கிழக்கு ஜெர்மனியின் கம்யூனிச அரசு தங்களின் பாதுகாப்பு அமைப்பான STASI  மூலம் செயல்படுத்திய கண்காணிப்புத் திட்டத்தினை நினைவு படுத்துவதாக ஜெர்மனியின் சான்சலரான ஏஞ்சலா மார்கெல் குமுறினார். STASIயின் தீவரத்தினையும், கண்காணிப்பின் வீச்சினையும் மேலும் அறிந்து கொள்ள ஆவல் கொள்ளும் அன்பர்கள் The Lives of Others என்ற அற்புதமான திரைப்படத்தினைப் பார்த்துத் தெரிந்து கொள்ளவும். அமெரிக்க அரசு இது குறித்து மன்னிப்புக் கோரியதும், மற்ற புத்திசாலி உலக நாடுகளின் அரசு அமைப்புகள் தங்கள் சொந்த வழங்கிகளை வைத்துக் கொள்வதன் முக்கியத்துவத்தை உணர்த்தியதையும், அதிபுத்திசாலி நாடுகள் மக்களை இப்படியும் கண்காணிக்கலாமா என்று கற்றுக் கொண்டதுமே ஸ்நோடன் நமக்களித்த தகவல்கள்  மூலம் நிகழ்ந்த விளைவுகள். இதற்கு ஸ்நோடன் அளித்த விலை மிக மிக அதிகம்.

 

தி கார்டியன் பத்திரிக்கையில் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் முன்னரே ஹாங்காங் சென்ற ஸ்நோடனின் கடவுச்சீட்டு ரத்து செய்யப்பட்ட நிலையில் ரஷ்யாவிற்கு அழைத்துச் சென்று அங்கு அரசியல் தஞ்சம் கிடைக்க ஆவன செய்தது வரை பார்த்து பார்த்து முறை செய்தது விக்கிலீக்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது. விக்கிலீக்ஸ் தொடர்பு, நாட்டின் பாதுகாப்பு ஆவணங்களை வெளியிட்டது  போன்ற காரணங்களால் தேசத்துரோகியென பலராலும் விமர்சிக்கப்பட்டாலும், இணையத்தில் மக்களின் தனிப்பட்ட உரிமைகளை நிலைநாட்டும் போராட்ட வரலாற்றில் ஸ்நோடனுக்கு மிகப்பெரிய பங்குண்டு என்பதை மறுக்க முடியாது. நாட்டை விட்டு தப்பியோடியிருக்காவிட்டால் பர்னபி ஜாக், மைக்கெல் ஹாஸ்டிங் ஆகியோரப் போல் மர்மமான முறையில் ஸ்நோடன் மரணமடைந்திருந்தாலும் ஆச்சர்யமில்லை.

 அனானிமஸ், விக்கிலீக்ஸ் மற்றும் ஏனைய இணையப் போராளிகளுக்கு இருக்கும் பெரும் சவாலே தங்களின் கண்களுக்குத் தெரியும் அக்கிரமங்களை அல்லது அது குறித்தத் தகவல்களை பொது மக்களுக்கு எப்படி கொண்டு சேர்ப்பது என்பது தான். என்ன தான் இன்று அணியும் ஆடைகளின் அனைத்துப் பைகளிலும் இலத்திரனியல் சாதனங்கள் நிறைந்திருக்கும் வாழ்க்கை முறை சில பேருக்கு சாத்தியப்பட்டாலும், இன்னும் பத்திரிக்கை  மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள் மூலம் செய்திகளைத் தெரிந்து கொள்ளும் பலபேர் இருக்கத்தான் செய்கின்றனர். விக்கிலீக்ஸின் உலகளாவிய வீச்சுக்கு முக்கிய காரணம் ஜூலியனின் வெகுஜன ஊடகவியலாளர்களுடனானத் தொடர்புகள்.

 

மக்களிடம் உண்மையை மறைக்கும் அரசாங்கங்களையும், அவற்றுக்குத் தங்கள் சுயலாபத்திற்காக ஒத்து ஊதும் ஊடக நிறுவனங்களின் முதலைகளையும் எதிர்த்துப் போராடும் இணையப் போராளிகள் தங்கள் போராட்டத்தினை மக்களிடம் எடுத்துச் செல்வதற்கு ஊடகங்களையே நாட வேண்டியிருந்தது. அது போன்ற தருணங்களில்  தீவிரக் கொள்கை பிடிப்புள்ள, கதைகளிலும், காவியங்களிலும் மட்டுமே நாம் கேட்டறிந்த நிஜமான சமூக மாற்றத்திற்காக உழைக்க வேண்டும் என்ற காரணத்திற்காகவே அப்பணியினைத் தேர்ந்தெடுத்து விரும்பிச் செய்யும் சில பத்திரிக்கையாளர்கள் தான்.

விரல் விட்டு எண்ணக்கூடிய அது போன்ற பத்திரிக்கையாளர்களில் ஒருவர் தான் மைக்கெல் ஹேஸ்டிங்.  33 வயதே ஆன துடிப்பான பத்திரிக்கையாளரான மைக்கெல் ஹேஸ்டிங் யாரும் எதிர்பாரா வகையில் மர்மமான/ சந்தேகத்திற்கிடமான முறையில் கார் விபத்தில் 2013 ஜூன் மாதம் உயிரழந்தார். காரணம் ?

Photos : Inernet

- 4தமிழ்மீடியாவுக்காக தமிழரசன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
சிறப்பான எழுத்து! எளிமையான தமிழ் சொற்கள் !
இணைப்பிற்கு  நன்றிகள்! 
Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்
இணையம் வெல்வோம் 19

 

1+%25281%2529.jpg

மைக்கெல் ஹாஸ்டிங்கின் விபத்து நடந்த இடம்

இன்றையத் தலைமுறை பத்திரிக்கையாளர்களின் ஆதர்ச நாயகன் மைக்கெல் ஹேஸ்டிங். எங்காவது பத்திரிக்கை அலுவலகத்தில் தேநீர் வாங்கிக் கொடுக்கும் வாய்ப்பு கொடுத்தால் கூட வாகனத்தில் PRESS என்று எழுதிக் கொண்டு எங்கும், எதிலும் சிறப்புச் சலுகையை எதிர்பார்க்கும் நபர்களையும், உச்சந்தலையில் இடியே விழுந்தாலும் தான் சார்ந்திருக்கும் சாதி அல்லது அரசியல் கட்சிகளை நியாயப்படுத்தியே தீருவேன் என்று தலையால் தண்ணீர் குடிக்கும் கோமாளிகளையும் மட்டுமே பார்த்தறிந்த நமக்கு மைக்கேல் ஹேஸ்டிங்கின் வாழ்க்கை ஒரு பாடம். சதா பார்லிமென்ட் லைட்ஸ் சிகரெட் புகையும், கையுமாய் துடிப்பும், துள்ளலும் நிறைந்த கிட்டத்தட்ட மெளன ராகம் கார்த்திக்கின் மேலை நாட்டு வடிவம் தான் மைக்கெல்.

michael-hastings-elise-jordan.jpg

மைக்கெல் ஹாஸ்டிங்கும் அவரது காதலியும்

நியூயார்க்கில் பிறந்தாலும், லாஸ் ஏஞ்சலிஸ் வாழ்க்கை, புத்தம் புது மெர்சிடஸ், உலகளாவிய புகழ், பத்திரிக்கைத்துறை விருதுகள், அழகான காதலி, கை நிறைய பணம் என்று இருந்தாலும், எழுத்தின் மூலம் மக்களுக்கு உண்மையைச் சொல்ல வேண்டும் என்ற வேட்கை என்றும் குன்றாமலிருந்து அதனாலேயே அகால மரணடைந்த போது மைக்கெலுக்கு வயது வெறும் 33.

hastings131111_560.jpg

2002ல் நியூஸ் வீக்கில் மூலம் நடந்த மைக்கெலின் பத்திரிக்கையுலகப் பிரவேசம், பின்னர் பஸ்பீட் (Buzzfeed) மற்றும் ரோலிங்ஸ்டோன் (Rollingstone) நிறுவனங்களோடு பணிபுரியும் வரைக்கும் நாளும், பொழுதும் மென்மேலும் வளர்ந்து கொண்டே போனது. செய்தி சேகரிப்புக்காக ஈராக்கில் கிடையாய்க் கிடந்த காலத்தில், மைக்கெலுடன் இருப்பதற்காகவே அங்கு பணிபுரியச்சென்ற காதலி ஆண்ட்ரியா ஆயுததாரிகளால் சுட்டுக் கொல்லப்பட, வெகு சீக்கிரத்தில் திருமணம் செய்து கொள்ளவிருந்த மைக்கெல் வாழ்க்கையை சோகம் கவ்வியது. தனது காதலியுடனான ஈராக் நாட்களை I lost my love in Baghdad என்ற தலைப்போடு மைக்கெலின் முதல் புத்தகமாக வெளிவந்து மிகுந்த வரவேற்பையும், அதே சமயம் பலத்த விமர்சனங்களையும் பெற்றது.

1+%25281%2529.jpg

மைக்கெல் ஹாஸ்டிங் எழுதிய I Lost My Love in Baghdad புத்தகம்

அதன் பின்னர் சர்வதேச கவனத்தினை ஈர்க்கும் வண்ணம் ஆப்கானிஸ்தானில் களமிறங்கியிருக்கும் அமெரிக்கத் துருப்புகளின் தளபதியான ஸ்டான்லி மெக்கிறிஸ்டல் குறித்து இவர் எழுதிய கட்டுரை அமெரிக்க அரசியலில் கிளப்பிய சூட்டைத் தணிக்க அதிபர் ஒபாமாவின் வேண்டுகோளுக்கு அல்லது மிரட்டலுக்கு இணங்க ஸ்டான்லி மெக்றிஸ்டல் ராஜினாமா செய்ய வேண்டியதாயிற்று.

Barack_Obama_meets_with_Stanley_A._McChr

ஒபாமாவுடன் கலந்துரையாடும் ஸ்டான்லி மெக்கிறிஸ்டல்

மெக்கிறிஸ்டலும் அவரது சகாக்களும் ஒபாமா மற்றும் அவரது அலுவலக, அமைச்சரவை அன்பர்கள் குறித்து நக்கலாக சிலாகித்து சிலிர்த்துக்  கொண்டதனைத்தும் கட்டுரையாக வடித்து, அமெரிக்க அதிபரை அலட்சியமாக நினைக்கும் படைத்தளபதி என்கிற ரீதியில் கடந்த கால போர் சாகசங்கள் மீது கட்டியுழுப்பியிருந்த மெக்கிறிஸ்டலின் பிம்பங்களை சூறையாடிய பெருமை மைக்கெலுக்கு உண்டு. தனிப்பட்ட முறையில் மெக்கிறிஸ்டல் தனது சகாக்களோடு உரையாடியது குறித்து வெளியிட்டது விமர்சனத்துக்குள்ளானாலும், ஆப்கானிஸ்தானில் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளின் குறைபாடுகளனைத்தையும் வெளிக்கொணர்ந்த விதம் மைக்கெலுக்கு புகழையும் அதே சமயம்  அதிகாரவர்க்கப் பகையையும் சம்பாதித்துக் கொடுத்தது.

operators.JPG

மைக்கெல் ஹாஸ்டிங் எழுதிய The Operators புத்தகம்

ஒரு நிலைச்சார்பாக, சுயலாபத்துக்கான செயல்திட்டத்துடன் செயல்படும் ஊடக அன்பர்களுடன் பொது இடத்தில் நாராசமாக வாய்த்தகராறில் ஈடுபடும் அளவுக்கு மைக்கெலுக்கு கோபம் இருந்தது. அதிகார வர்க்கத்தின் அட்டகாசங்களைத் தோலுரிக்க வேண்டுமென்ற எண்ணமும், ஊடகத்துறையில் பரவியிருந்த அரசியல் அதிகார வர்க்கத்தின் சார்பு நிலை மீதான கோபமும் இயற்கையாக அனானிமஸ் மற்றும் விக்கிலீக்ஸ் தொடர்புகளை மைக்கெலுக்கு ஏற்படுத்திக் கொடுத்தது. லண்டனிலுள்ள பண்ணை வீட்டில் பிணையிலிருந்த ஜூலியனை நேரில் சந்தித்த மிகச்சில நபர்களில் மைக்கெலும் ஒருவர். ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட அனுபவங்களை தொகுத்து The Operators என்ற பெயரில் புத்தகமாக வெளியிட்ட மைக்கெல், அதன் பின்னர் தேர்ந்தெடுத்த குறி சிஐஏ இயக்குநர் ஜான் பிரனன் மற்றும் ஸ்நோடன் அம்பலப்படுத்திய அமெரிக்க உளவு அமைப்புகளின் இணையக் கண்காணிப்புத்திட்டம்.

CIA+director_John+Brennan.jpg

ஜான் பிரனன்

இதற்கிடையில் தன் நீண்ட நாள் தோழியான எலைஸ் ஜோர்டானைத் திருமணம் செய்திருந்த மைக்கெல், ஜான் பிரனன் மற்றும் இணையக் கண்காணிப்புக் குறித்தான தனது கட்டுரை வெளிவருவதற்கு முன்னரே சர்ச்சைக்குறிய சாலை விபத்தில் அகால மரணமடைந்தார்.

ஜூன் 18, 2013 அன்று அதிகாலை 4.25 மணிக்கு தனது மெர்சிடஸ் காரில் சென்ற மைக்கெல், அதிவேகத்தில் சாலையோரத்திலிருந்த பனைமரத்தின் மீது மோதி சம்பவ இடத்திலேயே தீக்கிரையாகிப் பலியானார். இந்த விபத்து நடப்பதற்கு சில மணி நேரத்திற்கு முன்பு தனது நெருங்கிய நண்பர்களுக்கு FBI அதிகாரிகள் தனக்கு நெருக்கமானவர்களை விசாரித்து வருவதாகவும், தாங்கள் விசாரணைக்கு உட்படும் பட்சத்தில் வழக்கறிஞர்கள் துணையின்றி ஏதும் பேச வேண்டாமென்றும், மிகப்பெரியக் கட்டுரை ஒன்றிற்காக உழைத்துக் கொண்டிருக்கிறேன், சிறிது காலம் தொடர்பில் இல்லாமல் இருக்கப் போகிறேன் என்று மைக்கெல் மின்னஞ்சல் அனுப்பியதும், அவர்களில் ஒருவர் விக்கிலீக்ஸின் வழக்கறிஞர் ஜெனிபர் ராபின்சன் என்பது குறிப்பிடத்தக்கது.

hastings131111_2_560.jpg

மைக்கெல் ஹாஸ்டிங்

சிஐஏ மற்றும் தேசியப் பாதுகாப்பு அமைப்பின் இணையக் கண்காணிப்புக் குறித்து மைக்கெல் யாரிடமெல்லாம் தகவல் சேகரித்தார் என்பது பொதுவில் இதுவரை வெளிவரவில்லையென்றாலும் அவை குறித்தானத் தகவல்களை அவரிகளின் அலுவலகங்களுக்கு அடுத்தபடியாக பெறக்கூடிய கைராசியான ஸ்தாபனம் விக்கிலீக்ஸ் மற்றும் அனானிமஸ். அமெரிக்காவின் இணையக் கண்காணிப்பு முறையை அம்பலப்படுத்திய ஸ்நோடன் சரியாக விபத்திற்கு ஒரு மாதத்திற்கு முன், விக்கிலீக்ஸ் உதவியின் காரணமாகவே பாங்காக்கிலிருந்து தப்பி ரஷ்யா சென்றதை இங்கு நினைவுபடுத்திகொள்ளவும்.

watergush.jpg

மைக்கெல் ஹாஸ்டிங்கின் கார் விபத்துக்குள்ளான போது தீப்பிடித்து எரியும் காட்சி

இவையனைத்திற்கும் மேலாக மைக்கெல்லின் மெர்சிடஸ் சி250 விபத்துக்குள்ளான விதம் மிகவும் சந்தேகத்திற்குரியது. அதிவேகத்தில் சென்று மரத்தின் மோதிய வாகனங்கள் எதற்கும் மைக்கெல்லின் வாகனத்திற்கு ஏற்பட்ட நிலைமை ஏற்பட்டதில்லை. வாகனத்தின் இஞ்சின் சுமார் 100 அடி தூரத்திற்கு மேலாகத் தூக்கியெறியப்பட்டதும், பலத்த வெடிச்சத்தத்துடன் வாகனம் தீப்படித்து எரிந்து அடையாளம் காண முடியாத அளவிற்கு தீக்காயங்களுடன் சம்பவ இடத்திலேயே மைக்கெல் பலியான விதம் பலத்தவிவாதங்களைக் கிளப்பியது.

engine_loc_maps.jpg

அதிநவீன இலத்திரனியல் சாதனங்களைக் கொண்ட வாகனங்களை எங்காவது இருந்து இயக்கும் வண்ணம் இலத்திரனியல் சாதனங்களை மாற்றியமைத்தோ அல்லது கட்டுடைத்தோ விபத்துக்குள்ளாக்கும் வித்தை அமெரிக்க உளவு நிறுவனங்களுக்கு கைவந்த கலையென்றும், மைக்கெல் எழுதிக் கொண்டிருந்த கட்டுரை வெளிவந்தால் மேலும் அம்பலப்பட்டு அசிங்கப்பட்டுப் போவோம் என்ற காரணத்தால் அமெரிக்க உளவு அமைப்புகள் காரில் வெடி வைத்தார்கள் என்றும் பரவலாக நம்பப்படுகிறது. உத்தியோகப்பூர்வமாக அப்படி எதுவும் நடக்கவில்லை, அதற்கான ஆதாரங்களும் இல்லை, இது வெறும் விபத்து மட்டுமே என்று காவல்துறைக் கோப்புகளை மூடி வைத்து விட்டது.

Michael_Hastings_Photo_Crash_Dead-e13716

ஆரம்பத்தில்  இதற்குக் காரணமானவர்களை பழிவாங்கிய தீருவேன் என்று கொந்தளித்த மைக்கெலின் மனைவி எலைஸ் ஜோர்டான், பின்னர் அது ஒரு துன்பியல் சம்பவம் என்று கூறி ஆச்சர்யமளிக்கும் வகையில் அமைதியாகிப் போனார். முன்னாள் அமெரிக்கச் செயலர் கெண்டலீசா ரஸின் அலுவலகத்தில் சிறிது காலம் பணிபுரிந்த எலைஸ் தனது தொடர்புகள் மூலம் உயிருக்கு ஆபத்து வரும் என்பதை உணர்ந்து மவுனித்துப் போனார் என்றும் நம்பப்படுகிறது. அனைத்து தரப்பினரும் அமைதி காத்த நேரத்தில் தான்  மைக்கெல்லின் எப்.பி.ஐ விசாரணை குறித்தான மின்னஞ்சல் வெளிவந்து புயலைக் கிளப்பியது, ஆரம்பத்தில் நாங்கள் மைக்கெல் ஹாஸ்டிங்கையோ அல்லது அவர் சம்பந்தப்பட்டவர்களையோ விசாரிக்கவே இல்லை, இல்லவே இல்லை என்று கைகளை அகல விரித்த எப்.பி.ஐ பின்னர் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்த பிறகு சரியாக விபத்து நடப்பதற்கு ஒரு வருடத்திற்கு முன் மைக்கெல் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப் பட்டதாக ஒத்துக் கொண்டது.இருந்தாலும் இன்று வரை மைக்கெலின் மரணம் ஒரு ஊரறிந்த ரகசியமாக உறங்கிக் கொண்டிருக்கிறது.

o-MICHAEL-HASTINGS-facebook.jpg

பத்திரிக்கை உலகில் மைக்கெல்லின் மரணத்தின் ரணம் ஆறுவதற்கு முன்பாகவே அடுத்த மாதமே மீண்டும் ஒரு மர்ம மரணம் நிகழ்ந்தது. இம்முறை அதிர்ந்தது இணைய பாதுகாப்பு வல்லுநர்களும், ஹேக்கர்களும். 

1+%25282%2529.jpg

http://4tamilmedia.com/cont/special-series/24173-inaiyam-velvom-19

Link to comment
Share on other sites

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

இணையம் வெல்வோம் 20

1zcz7nc.jpg

 

எம்.ஜி.ஆரும், பி.எஸ்.வீரப்பாவும் ‘அண்டாகா கசம், அபுகா குகும், திறந்திடு சீசேம்’ என்றவுடன் திறந்த குகைக்கதவுகளைப் பார்த்து வாய்பிளந்த தமிழ்ச்சமூகம் இன்று மனிதக்குரல்களைக் கிரகிக்கும் மென்பொருட்கள் மூலம் தங்கள் கணிணி, செல்பேசி போன்ற இலத்திரனியல் சாதனங்களை பூட்டிவைப்பது சர்வசாதரணமாகி, சிவாஜி திரைப்படத்தில் ரஜினி மடிக்கணிணியைத் திறக்கும் உத்தியைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே குரல்கிரகிக்கும் தொழில்நுட்பத்தினைக் குறித்தான குரல்களைத் திரையரங்கிற்குள் கேட்க முடிகிற அளவுக்கு தொழில்நுட்பம் முன்னேறியிருக்கிறது. இப்படிக் கற்பனைக் கதைகளில் கண்டதையும், கேட்டதையும் விஞ்சுமளவுக்கு ஹேக்கிங்கில் உலகையே கலக்கிய அசத்தல் மன்னன் தான் பர்னபி ஜாக்.

நியுஸ்லாந்தில் பிறந்து பின்பு அமெரிக்கவாசியாகிப் போன பர்னபியின் ஹேக்கிங் சாதனைகளுக்கு வானமே எல்லை. மற்றவர்களுக்கும் பர்னபிக்கும் இருந்த வித்தியாசம், அவர் தேர்ந்தெடுத்த களம். பொதுமக்கள் தினசரி வாழ்வில் பயன்படுத்தும், அதே சமயம் முக்கியமான இலத்திரணியல் சாதனங்களை ஹேக்கிங் செய்து அவற்றில் உள்ள குறைபாடுகளை அம்பலப்படுத்தி, சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அவற்றை எப்படி சரி செய்வது என்று உதவி செய்து சுபம் போடுவது தான் பர்னபியின் பாணி.

1T0R2167.JPGகுஷ்பூவின் ஜாக்பாட்டுக்குள் நாம் தொலைந்து போய் வெகுநாட்களாகிவிட்ட காலகட்டத்தில், பர்னபியின் ஜாக்பாட் இணையப் பாதுகாப்பு வல்லுநர்கள் உட்பட ஒட்டுமொத்த உலகையும் மலைக்க வைத்தது. 2010 நடந்த ஹேக்கர்களின் கருத்தரங்கில் இரண்டு ஏடிஎம் இயந்திரங்களை மேடையில் வைத்து அவற்றை அனைவரின் கண் முன்னே சில நிமிடங்களில் அவற்றிலிருந்து தானாகப் பணத்தினைக் கொட்ட வைத்து கிளுகிளுப்பான பீதியை கிளப்பியவர் பர்னபி. அதற்கு பர்னபி வைத்த பெயர் ஜாக்பாட்டிங் (Jackpotting). பர்னபி நிரல்கள் எழுதுவதில் புலி. கணிணியில் ஏதெனும் ஒரு பாதுகாப்புக் குறைபாட்டைக் கண்டால் உடனே அதனைப் பயன்படுத்தி கணிணியைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் தந்திரங்களைச் செய்யும் நிரல்கள் எழுதுவதில் நிபுணர். அடுத்த இரண்டு வருடத்தில் பர்னபியின் அடுத்த அதிரடி வெளியீடாக வந்தது இன்சுலின் பம்ப்.
Insulin+pump.jpg
கணிணித் தொழில்நுட்பம் வளர, வளர தங்களையும் ஒருசேர நவீனப் படுத்திக் கொண்ட துறைகளில் மிக முக்கியமானது மருத்துவத்துறை. மருத்துவ உபகரணங்கள் அனைத்து கணிணிமயமாகின, நோயாளிகள் பயன்படுத்து இன்சுலின் பம்ப், பேஸ்மேக்கர் போன்ற கருவிகள் வடமில்லா வலையமைப்பு வசதிகளோடு சந்தைப்படுத்தப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. சுமார் 30 அடி தூரத்தில் இருக்கும் நோயாளியின் இன்சுலின் பம்பினை ஹேக் செய்து தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து தான் விரும்பும் கால இடைவெளி மற்றும் அளவில் இன்சுலின் மருந்தினை நோயாளியின் உடம்பில் செலுத்திக் காண்பித்து திகிலேற்படுத்தினார் பர்னபி. அளவிற்கு மீறிய இன்சுலின் மருந்து மரணத்தினை விளைவிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்து என்னத்த செய்ய போறானோ என்று அகில உலகத்தையும் அன்னாந்து பார்க்க வைத்து விட்டு பர்னபி செய்த அடுத்த சாதனை தான் நோயாளிகள் இதயத்துடிப்பை சீராக வைத்திருக்க உதவும் பேஸ்மேக்கர் கருவியினை ஹேக் செய்து கட்டுக்குள் கொண்டு வருவது. உலகில் கொளுத்த பணபலம், அதிகார பலமிக்க பெரும்பாலான முதலைகள் பேஸ்மேக்கர்களில் தான் உயிர்வாழ்கின்றன என்பதால் இது குறித்த செய்திகளை பர்னபி வெளியிட்ட போது மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.

a5ad28710d69c040548619b7b3a418a4.jpg

 

பேஸ்மேக்கர் கருவியைக் கட்டுக்குள் கொண்டுவந்து இதயத்துடிப்பினை அதிரடியாக அதிகரித்து ஆளைத் தீர்த்துக்கட்டுவது வரை சுமார் 50 அடி தூரத்தில் இருந்து தன்னால் செய்ய முடியும் என்று அறிவித்து 2013ல் நடக்க விருந்த சர்வதேச ஹேக்கர்ஸ் கருத்தரங்கில் செயல்முறை விளக்கத்தோடு செய்து காட்டுவதாக அறிவித்து பரபரப்பினை ஏற்படுத்திய பர்னபிக்கு கருத்தரங்கில் ஒரு மணி நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. பர்னபியை யாராலும் ஈடு செய்ய முடியாது என்று கூறி அந்த ஒரு மணி நேரத்தை பர்னபியின் நினைவஞ்சலிக்கென ஒதுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது தான் பெருஞ்சோகம்.

கருத்தரங்கிற்கு மிகச் சில நாட்களுக்கு முன்பு பர்னபி தன் அடுக்குமாடிக் குடியிருப்பில் இறந்து கிடந்தார். சம்பவ தினத்தன்று காலை பர்னபியைக் காணச் சென்ற அவரது காதலி கொடுத்தத் தகவலின் பேரில் காவல்துறை குவிந்தது. உலகில் மிகமிக உன்னிப்பாகக் கவனிக்கப்பட்ட,  வெறும் 35 வயதே ஆன பர்னபியின் மரணம் இணையச்சமூகத்தில் மிகப்பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. மைக்கெல் ஹாஸ்டிங்கின் மரணத்திற்கும், பர்னபியின் மரணத்திற்கும் தொடர்பு உள்ளதாக ஒரு பிரிவும், மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் தொழிலதிபர்களின்  குண்டர்கள் கைங்கர்யம் என்று ஒரு பிரிவும் கூறி வந்தாலும், சம்பவ இடத்திற்கு சென்ற சில மணித்துளிகளிலேயே இம்மரணத்தில் எந்த சந்தேகமோ, சர்ச்சையோ இல்லை என்று காவல்துறை முற்றுப்புள்ளி வைத்ததும், பர்னபியின் பிரேதப் பரிசோதனை அறிக்கை பல மாதங்களுக்குப் பின்பே வெளியிடப்பட்டதும், அதில் விபரீதமான போதை மருந்துக் கலவையினை உட்கொண்டதால் மரணம் சம்பவித்தது என்று கூறியதும் பெரிதும் சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டது. முக்கியமாக பிரேதப் பரிசோதனை தகவல்கள் ஏதும் இல்லாமலேயே இம்மரணத்தில் கொலைக்கான எந்த முகாந்திரமும் இல்லை என காவல்துறை கூறியது மென்மேலும் சந்தேகங்களைக் கிளறி விட்டது. என்ன தான் சர்ச்சைகள் கிளம்பினாலும், பர்னபியின் மரணம் ஒரு போதை மருந்து விபத்தென சட்டப்படி காலாவதியாக்கப்பட்டது.

2013_Black_Hat_keith_alexander_2.jpg

அடுத்தடுத்த மரணங்கள், ஸ்நோடன், அனானிமஸ், விக்கிலீக்ஸ் என இணைய உலகம் கொந்தளித்துக் கிடக்க, அமெரிக்க தேசியப் பாதுகாப்பின் தலைவர் ஜெனரல் அலெக்ஸாண்டர் கீத் ஹேக்கர்ஸ் கருத்தரங்கில் பர்னபிக்கு அஞ்சலி செலுத்திப் பேசத் தொடங்கிய போது கூட்டத்தில் இருந்து வந்த எதிர்ப்புக் குரல்களும், கேள்விக் கணைகளும் அனல் பறந்தது. இணையக் கண்காணிப்பிலிர்ந்து விடுதலை வேண்டும் என்று கூட்டத்திலிருந்து குரலெழும்ப, நீங்களும் எங்களோடு சேர்ந்து அதற்கான முயற்சியில் சேர்ந்து கொள்ளுங்கள் என்று அலெக்ஸாண்டர் கீத் பதிலளிக்க, நீ ஒரு புளுகுணி மூட்டை, அமெரிக்க காங்கிரஸில் இணையக் கண்காணிப்புக் குறித்து பொய் சொல்லிய பொய்யர்கள், உங்களை நம்ப முடியாது என்று பதில் குரலொலிக்க அலெக்ஸாண்டர் கீத் ஒரு மாதிரியாக சமாளித்துப் பேசி முடித்தார்.

 

பின் அங்கு கேட்ட பல கேள்விகளில் முக்கியமானது, ‘ஒரு தனிநபர் தனது அம்மாவுடன் பேசுவதையோ, அல்லது உங்கள் (அலெக்ஸாண்டர்) மகளின் இணைய நடவடிக்கைகளையும், தகவல் தொடர்புகளையும் நீங்கள் கண்காணிக்க முடியுமா?’. அதற்கு அலெக்ஸாண்டர் அளித்த பதில் வரலாற்று முக்கியயத்துவம் வாய்ந்தது. எங்களால் யாரையும் கண்காணிக்க முடியும், ஆனால் நீங்கள் நல்லவராக இருக்கும் பட்சத்தில் உங்கள் தகவல் தொடர்பு எதுவும் கண்காணிக்கப்பட மாட்டாது என்பது தான் அலெக்ஸாண்டர் அளித்த பதில். நல்லவர், கெட்டவர் என்பதற்கான வரைமுறைகளை அவர்களே வகுத்துக் கொள்வது தான் இதிலுள்ள சிறப்பம்சம், மேலும் மற்ற நாடுகளின் அரசியலதிகார மையங்கள் அனைத்தும் கெட்டவர்கள் வகையறாவில் இலவசமாக சேர்த்துக் கொள்ளப்படும் என்பதை யார் சொல்லியும் நமக்குத் தெரியத் தேவையில்லை. இங்கு அலெக்ஸாண்டர் கீத் சொன்ன அதே செய்தியைத் தான் உலகெங்கும் சில மாதங்களுக்கு முன்பு அம்பலமாக்கியதற்காக ஸ்நோடன் ரஷ்யாவில் தஞ்சம் புக நேரிட்டதை இங்கு நினைத்துப் பார்த்துக் கொள்ளவும்.

இதுவரை நாம் பார்த்த ஆளுமைகள் அனைவருமே ஊடகங்களும், அரசாங்கங்களும் ஒளிவுமறைவின்றி மக்களிடம் வெளிப்படையாக இருக்க வேண்டும், இணையம் என்பது மக்களுக்கானது அதில் அவர்களின் அந்தரங்கத்தன்மை அவர்களது உரிமை என்பது போன்ற காரணங்களுக்காக வெற்றிவேல், வீரவேல் என்று கிளம்பிப் போய் தங்கள் வாழ்க்கையை லட்சியத்திற்காகத் துறந்தவர்கள். இவர்கள் அனைவருமே வாழ்க்கையில் மிக இளம் வயதிலேயே பணம், புகழ், காதல் என்று எக்குறையுமின்றி இருந்தவர்கள். இவர்களைப் பற்றி நாம் இவ்வளவு விரிவாகப் பார்த்ததின் காரணம், சமூக , பொருளாதார, தொழில்நுட்ப மாற்றங்கள் அனைத்திலும் மேற்கத்திய உலகத்தினை அப்பட்டமாக பின்பற்றும் நாம், அவர்கள் சந்திக்கும் இதே ஊடகச்சிக்கல்களை, இணையச்சுதந்திரத்திற்கானத் தேவைகளை எண்ணி எண்ணி பொங்க வேண்டிய நாட்கள் வெகுதூரத்தில் இல்லை.

தகவல் தொழில்நுட்பத்தின் பிரம்மாண்டத் தேவைகளை சகட்டுமேனிக்கு நிறைவேற்றிக் கொடுக்கும் பணிகளில் பெரும்பங்கு வகிக்கும் நாம், சமூக மாற்றங்களுக்கு, உண்மையை உலகறியச் செய்வதற்கு இணையத்தொழில்நுட்பத்தினை பயன்படுத்துவதற்கானத் தகுதியை எட்டியிருக்கிறோமா, அதனை எப்படிச் சரியாகப் பயன்படுத்துவதென்பதையாவதுத் தெரிந்திருக்கிறோமா?.

தொடர்வோம்..

 

- 4தமிழ்மீடியாவுக்காக தமிழரசன்

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்
இணையம் வெல்வோம் 21

10514236_721108074627329_899899209466360

மாற்று ஊடகத்திற்கு என்றுமே மக்கள் ஆதரவளிக்கவும், போற்றவும் தயங்கியதேயில்லை. தூர்தர்ஷன் நிகழ்ச்சிகளைப் பார்த்துப் பார்த்துத் தரிசாகிக் கிடந்த தமிழ் கூறும் நல்லுலகம் சன் டிவியின் தமிழ் மாலைக்கும், அவர்களின் செய்திகள் பிரிவு ஆரம்பித்த புதிதிலும் கொடுத்த வரவேற்பே அதற்கு சாட்சி சொல்லும்.

ஊடகங்களில் தனியார் நிறுவனங்கள் கோலோச்ச ஆரம்பித்தப் புதிதில் அதிலிருக்கும் சூட்சுமங்கள் புரியாமல் மதிமயங்கிய நாம் இன்னும் அதன் பாதிப்பில் இருந்து விடுபடவில்லை என்பதே உண்மை. திண்ணைப்பழக்கம் முற்றாக ஒழிந்து வெளியில் மழை பெய்கிறது என்று ஊடகங்களில் சொன்ன பிறகே வெளியில் எட்டிப்பார்த்து உறுதி செய்து கொள்ளும் அளவுக்கு மக்கள் மகுடிப் பாம்பாய் வீட்டுக்குள் முடங்கத் தொடங்கியதும, அதனால் ஏற்பட்ட விபரீதங்களும் கொஞ்ச நஞ்சமல்ல.

10565247_814730125234204_521230200113041

நாளிதழ்கள், தொலைக்காட்சிகள் என்று எவ்வொரு ஊடக நிறுவனத்தின் வேர்களும் ஏதாவதொரு அரசியல் புதைகுழியில் ஜனித்திருப்பது பெரும்பாலோனோர்க்குத் தெரிந்திருப்பதில்லை. சினிமாத் திரைகளில் தங்கள் தலைவர்களைத் தேடிய சமூகத்தினை காட்சி ஊடகங்கள் மூலம் சுத்துமாத்து செய்து குழம்பிப் போகச் செய்வதில் ஊடகங்களுக்கு பெரிய சிரமமிருக்கவில்லை.

இப்படி இராஜபாட்டையில் பயணித்துக் கொண்டிருந்த ஊடங்களனைத்திற்கும் இன்னல் தரும் இடியாய் இறங்கியது தான் இணையம். ஆரம்பத்தில் கணிணிக் கல்வி சம்பந்தப்பட்ட விஷயமாகப் பார்க்கப்பட்ட இணையத்தின் விஸ்வரூபம் இன்று ஊடகங்களையும், அவற்றை கட்டிமேய்க்கும் பண முதலைகளையும் தடுமாற வைத்திருக்கிறது. இணையம் ஒவ்வொரு தனிமனிதனையும் ஒரு ஊடகக்கருவியாக்கி ஒரு புதுயுகத்தினை நம் தலைமுறைக்கு அளித்திருக்கிறது. இணையத்தின் பயன்பாடு மென்மேலும் பரவலாகும் பொழுது அரசியல் லாபத்திற்காக அதிகார வர்க்கத்திற்குக் குடைபிடிக்கும் வெகுஜன ஊடகங்கள் தானாகவே பலமிழந்து போய்விடும். இப்படி ஒரு அசுரபலத்தை சர்வசாதாரணமாக கணிணியிலோ அல்லது கைபேசியிலோ வைத்திருக்கும் நாம் அதனை எப்படி பயன்படுத்துகிறோம், புற்றீசல் போல தனியார் பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கையுடன் போட்டி போட்டுக் கொண்டு நித்தம் புதுப்புது அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் பெருகி வந்தாலும் இன்றும் காலியாக இருக்கும் உண்மையான மாற்று ஊடகத்திற்கான இடத்தினை நாம் நிரப்புவதற்கான சாத்தியங்கள் இருக்கிறதா என்பது போன்ற கேள்விகள் உங்கள் மண்டையைக் குடைந்தால் நன்று.

இணையம் ஒரு கட்டற்ற களம். இங்கு எந்த விதிமுறைகளும் இல்லை. ஒரு தனிநபரை, நீ இப்படித்தான் இணையத்தில் எழுத வேண்டும், குத்துவிளக்குப் புகைப்படங்கள் மட்டுமே வலையேற்ற வேண்டும் என்று இங்கு யாரையும், யாரும் கட்டுப்படுத்தவோ, அறிவுரை சொல்வதற்கோ இடமேயில்லை. அப்படி ஒரு கட்டற்ற சுதந்திரம் தான் இணையத்தின் பலம். நம்மில் இணையத்தினைப் பாவிப்பவர்களில் எத்தனை பேர் அடுத்தவர்களுக்கு இணையப்பயன்பாடு குறித்து அறிவுரை சொல்லாமல் ஒரு நாளைக் கடக்கிறோம் என்று எண்ணிப்பார்த்தால் நாம் செய்யும் தவறுகள் புரியும். தங்கள் கொள்கைகளை அடுத்தவர் மேல் வலுக்கட்டாயமாகத் திணிக்கும் மத அடிப்படைவாதிகளுக்கும் அல்லது சர்வாதிகாரிகளுக்கும், இணையத்தில் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று ஆத்திச்சூடி படிப்பவர்களுக்கும் பெரிய வித்தியாசமில்லை. இணையம் எப்படி செயல்படுகிறது, அதன் வீச்சு என்ன, சாதக,பாதகங்கள் என்ன என்பதைத்தான் அடுத்த தலைமுறைக்கும், அடுத்தவர்களுக்கும் புரியவைக்க வேண்டும். இங்கு பெரும்பாலோனோர்க்கு இணையம், வலைப்பாதுகாப்பு மற்றும் இணையத்தின் தகவல் தொடர்பு சம்பந்தப்பட்ட சட்டங்கள் குறித்தான எந்த அடிப்படை புரிதலும் இருப்பதில்லை. விக்கிப்பீடீயா தளத்தில் இருப்பதெல்லாம் உண்மையென்றும், திருப்பதி பெருமாள் படத்தினை அடுத்த 5 நிமிடங்களில் பேஸ்புக் தளத்தில் பகிர்ந்தால் குபேரன் தங்கள் வீட்டில் குப்புறப் படுப்பார் என்று நம்புபவர்களும், அடுத்தவர்களைத் தொந்தரவு செய்யாமல் கேண்டி கிரஷ் விளையாடவும் தெரியாமல், அப்படியே தொந்திரவு படுத்தினாலும் அதுபோன்ற இம்சைகளை மட்டுறுத்தும் நுட்பங்களையும் அறியாமல் புலம்பிக்கொண்டு மற்றவர்களுக்கு அறிவுரை சொல்லக் கிளம்புபவர்களுக்கும், ஸ்வாகா சொல்வதற்கு மட்டுமே பூஜைக்கு செல்லும் இது நம்ம ஆளு பாக்யராஜுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

keyboardwarriors.jpg

இணையத்தினை மாற்று ஊடகமாகப் பாவிப்பதற்கு மேலே சொன்ன தொழில்நுட்பப் புரிதல்கள் மட்டுமின்றி உண்மைத்தகவல்களைத் திரட்டும் திறனோ அல்லது அதற்கான தொடர்புகளோ இருக்க வேண்டும். இன்றையத் தேதிக்கும் உண்மைத்தகவல்கள் சம்பவ இடத்தில் இருந்து நம்பகமானத் தொடர்புகள் மூலம் கிடைத்தால் மட்டுமே சாத்தியம். ஊடகங்கள் மூலம் அல்லது அரசியல் அல்லது கொள்கைச்சார்புள்ளவர்கள் மூலம் கிடைத்தால் தகவல்களைத் தங்கள் நோக்கம் போல் திரித்துக் கொளுத்தி விட வாய்ப்புகள் அதிகம். முதலில் தொழில்நுட்பம் குறித்த புரிதல்கள் குறித்துப் பார்ப்போம். கணிணி வலையமைப்புகளும், இணையமும் இன்று சகல இடங்களிலும் வியாபித்த பிறகு அனைத்துத் துறையினரும் சந்திக்கும் முக்கிய சவால்களுல் ஒன்று கணிணி மற்றும் இணையம் குறித்தான் தொழில்நுட்பப் புரிதல். ஒரு குறிப்பிட்ட இணையத்தளத்தினை முடக்க முடியாமல் திணறும் நீதித்துறை, ஒரு இணையத்தளத்தினை தனிநபர் அடையாளமின்றி எப்படி நடத்துவெதென்பதறியாமல் சிரமப்படும் மாற்று ஊடக முயற்சியாளர்கள், இணையம் அல்லது கணிணி குறித்தான செய்திச் சந்திப்புகளில் சரியான கேள்விகள் கேட்க முடியாமல் திணறும் செய்தியாளர்கள், ஒபாமாவைப் பார்த்து சமூகவலைத்தளங்களில் சூடுபோட்டுக் கொண்ட அரசியல் தலைகள், சுஜாதாவின் இடத்தினைப் பிடிக்க நினைத்துத் தொழில்நுட்பங்கள் குறித்து உளறிக் குளறிப் போடும் எலக்கியவியாதிகள் என்று தொழில்நுட்பப் புரிதலின்றி திக்கித் திணறிக் கொண்டிருக்கிறது தமிழ்ச்சமூகம். இதில் அதிகம் குளிர் காய்வது ஸ்வாகா பாக்யராஜ்கள் மட்டுமே. அவர்களில், தங்களின் கட்டுப்பாட்டில் அனைத்து சமூக வலைத்தளங்களும் இருப்பதாக நம்ப வைத்து, ஏமாற்றி தங்கள் தலைவர்களிடம் அரசியல் மற்றும் பொருளாதார ஆதாயம் தேடும் தொண்டர்கள், விக்கிபிடியாவை மொழிபெயர்த்து புத்தகம் எழுதி மூத்தவர்களை அசத்தும் புதிய தலைமுறை எழுத்தாளர்கள், நாளைக்கு நாற்பது நிலைத்தகவல் இடுவதால் மட்டுமே சமூகவலைத்தளங்கள் குறித்தான தொழிநுட்ப விவாதங்களில் கலந்து கொள்ளும் அறிவுசார் புரட்சிப்பொங்கல்கள் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

தமிழ் இணையத்தில் மாற்று ஊடகங்களுக்கான முயற்சியில் முக்கியமாகச் சொல்ல வேண்டியது திரைப்பட விமர்சனங்கள். ஒரு கட்டத்தில் இணையத்தில் விமர்சனம் எழுதுபவர்களுக்கென சிறப்புக் காட்சிகள் கூட நடத்த ஆரம்பிக்கும் அளவுக்கு அதன் வீச்சு அதிகமாகியிருந்தது. திரைப்பட விமர்சனங்கள் வெற்றியடையக் காரணம், எழுதும் ஒவ்வொருவரும் தாங்களே நேரடி அனுபவத்தில் ஒரு திரைப்படம் குறித்தான அலசல்களைத் தங்கள் ரசனைக்கேற்ப முன்வைத்ததும், அதன் மூலம் அவர்களுக்கு எந்த ஆதாயமோ அல்லது தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்களிடம் எந்த பயமும், எதிர்பார்ப்பும் இன்றியும் இருந்தது தான். அரசியல், சமூகம் குறித்தான செய்திகள் என்று இதே போன்று அந்த சுயலாப நோக்கில் இல்லாமல், தனிமனித மிரட்டல்களுக்கு அஞ்சாமல் இணையத்தில் பகிரப்படுகிறதோ அன்று தான் மாற்று ஊடகத்திற்கானக் கதவுகள் முழுமையாகத் திறக்கும்.

இன்றைய சூழ்நிலையில் மக்கள் பார்வையில் இருக்கும் அனேக ஊடகங்களும், அவற்றின் முகங்களாகத் திகழும் ஊடகவியலாளர்களும் ஏதேனும் அரசியல் பின்னணி உள்ளவர்களாகவும், அவர்கள் தாங்கள் பணிபுரியும் நிறுவனத்தின் பாதிப்பின்றி சுதந்திரமாக இணையத்தில் செயல்பட வாய்ப்புக் கிடைத்தாலும் ‘என் தலைவன் தங்கம்டா’ என்றே காலம் பூராவும் பேசி இம்சிக்கிறவர்களே அதிகம், அதிலும் ஏகப்பட்ட வெற்றிகொண்டான்களும், தீப்பொறி ஆறுமுகங்களும் இருக்கிறார்கள். பிரதமர் முதல் இணையத்தில் தனக்குப் பிடிக்காத வண்ணம் எதிர்பதிவு போடும் சாமனியன் வரை அனைவரையும் மானாவாரியாக, பச்சைப்பச்சையாக எழுதுவது இவர்களின் இணையச் சாணக்கியத்தனம், அதாவது இணையத்தில் தாக்குகிறார்களாமாம். சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டால் சிலபல வருடங்கள் சிறைத்தண்டனை கிடைக்கும். முன்பே கூறியது போல் மற்ற குற்றங்களை விட இணையக் குற்றங்களை நிரூபிப்பது மிக எளிது அதே சமயம் அது வழக்கறிஞர்கள், காவல்துறை நண்பர்கள், நீதிமன்றங்கள் ஆகியோரின் தொழில்நுட்பபுரிதலும் அவசியம் என்பதையும் மறந்து விடக்கூடாது.

mainstream-media.jpg

மின்சாரம் தடைபட்டால் தெருமுனைப் பெட்டிக்கடைக்குப் போகப் பயப்படும் பிள்ளைப்பூச்சிகள் கூட, சீறும் சிறுத்தைகளாக இணையத்தில் சீறிப்பாயக் காரணம், தன்னை அடையாளம் கண்டுபிடிக்க முடியாது அல்லது எத்தனையோ கோடிக்கணக்கான நபர்கள் எழுதித்தள்ளும் டிவிட்டர், பேஸ்புக் தளங்களில் தான் ஒருவன் எழுதுவதை எப்படித் தேடிக் கண்டுபிடிப்பார்கள் என்ற தைரியத்தில், ஒற்றை ஆளாய் யாரெனும் முக்கியப் புள்ளியினை மானக்கேடாய் வறுத்தெடுத்து அதில் இன்பம் காண்பது தான். அப்படி நினைப்பவர்கள் நீங்களும் ஒருவராக இருந்தால் இன்றோடு அந்த எண்ணத்தினை மாற்றிக் கொள்ளுங்கள். டிவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் அனைத்திலும், உங்கள் பெயரைக் குறிப்பிட்டு யார், என்ன பேசுகிறார்கள் என்பதைக் கூடச் சுடச்சுடக் கண்டறிய முடியும். எப்படி?

தொடர்வோம்……

- 4தமிழ்மீடியாவுக்காக தமிழரசன்

 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நேற்று தமிழ் மாநில காங்கிரஸ் (தமாக) வாசன் பிரச்சாராம் செய்யும் போது, 'உங்கள் வாக்குகளை மறக்காமல் கை சின்னத்திற்கு.....' என்று ஆரம்பித்து விட்டார். பழைய நினைவுகள் ஆக்கும். பின்னர் கூட நின்றவர்கள் அவரை உஷார் ஆக்கியவுடன், கொஞ்சம் சுதாகரித்து, 'கையை எடுங்கப்பா, கையை எடுங்கப்பா, சைக்கிள் சின்னத்திற்கு வாக்களியுங்கள்....' என்ற மாதிரி சமாளித்துவிட்டார். மக்களுக்கு முன்னர் இவர்கள் குழம்பி விடுவார்கள் போல கிடக்குதே.....😀
    • பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான்! Published By: DIGITAL DESK 3  28 MAR, 2024 | 04:19 PM   பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வலியுறுத்திவரும் பின்புலத்தில் நேற்று புதன்கிழமை தொழிலாளர் அமைச்சின் ஊடாக பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை கிழக்கு மாகாண ஆளுநரும் இதொகாவின்  தலைவருமான செந்தில் தொண்டமான் கடுமையாக நிராகரித்துள்ளார்.  கூட்டு ஒப்பந்தத்தில் அங்கம் வகிக்கும் ஏனைய பங்காளிகளும் அதே நிலைப்பாட்டை எடுத்தனர்.   "தொழில் அமைச்சில் இடம்பெற்ற இந்த பேச்சுவார்த்தையில் RPC நிறுவனம் முன்மொழிந்த புதிய திட்டமானது தொழிலாளர்களை விட RPC நிறுவனத்திற்கு அதிக பயன் தரும் ஊக்கத் திட்டமாக  மட்டுமே அமையும்.  தொழிலார்களுக்கு நாம் ஊக்க தொகையை கோரவில்லை மாறாக சம்பள  உயர்வையே கோரினோம்." என இதன்போது செந்தில் தொண்டமான் சுட்டிக்காட்டினார்.  அத்துடன் சம்பள நிர்ணய சபையின் ஊடாக நியாயமான சம்பள உயர்வை எதிர்பார்க்கின்றோம் என அமைச்சர்  மனுஷ நாணயக்காரவுக்கும்  செந்தில்  தொண்டமான் எடுத்துரைத்தார்.  இதேவேளை அமைச்சர் மனுஷ நாணயக்கார, தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வைப் பெற்றுத்தர  தொடர்ச்சியான முயற்சிகளுக்கு பாராட்டுகளையும் தெரிவித்தார்.  தோட்ட தொழிலாளர்களுக்கு 1700ரூபா சம்பள உயர்வை வழங்க வேண்டுமென்று  அரசாங்கம் எடுத்திருந்த தீர்மானத்தின் பிரகாரம் தொடர்ச்சியான கலந்துரையாடைகள் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/179910  
    • வட்டுக்கோட்டை இளைஞர் கொலை: DVR-ஐ பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு உத்தரவு வட்டுக்கோட்டை இளைஞர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் இறுதியாக கைது செய்யப்பட்ட மூவரின் தொலைபேசி அறிக்கையை பெற்றுக்கொள்வதற்காக பொலிஸார் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர். குறித்த அறிக்கையை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார். வட்டுக்கோட்டை இளைஞர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், கடந்த 24 ஆம் திகதி மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட 9 சந்தேகநபர்களும் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது, 8, 9 ஆம் சந்தேகநபர்களை அடையாள அணிவகுப்பிற்கு உடபடுத்துமாறு பொலிஸார் மன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர். இதன் பிரகாரம், எதிர்வரும் 4 ஆம் திகதி அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். பொன்னாலை கடற்படை காவலரணுக்கு அருகில் பொருத்தப்பட்டிருந்த CCTV கெமராவின் DVR-ஐ பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு பொலிஸார் மன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர். பொலிஸாரின் விண்ணப்பத்தை ஏற்ற நீதவான் அதனை இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார். வட்டுக்கோட்டை இளைஞர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பிலான வழக்கு எதிர்வரும் 4 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/297478
    • கெஹெலிய உள்ளிட்ட 7 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு! தரமற்ற மருந்து கொள்வனவு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 பேர் எதிர்வரும் 8ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்று (28) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது, கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 பேரை எதிர்வரும் 8ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த மற்றும் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்கவும் இதில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/297480
    • பல்லைக் காட்டியது யார், வெள்ளைக் குடை பிடித்தது ஏன்? - தமிழ்நாடு தேர்தல் களத்தில் என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,X/UDHAY/ANI 28 மார்ச் 2024, 05:54 GMT தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைகளை கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் தொடங்கிவிட்ட நிலையில், திமுக அதிமுக இடையிலான புது மாதிரியான போட்டோ விவாதம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. பிரச்சாரத்தின் முக்கிய அங்கமாக சமூக ஊடகங்கள் மாறியுள்ள நிலையில், களத்தில் நடைபெறும் பரப்புரைகள் சமூக வலைதளங்களிலும், எதிரொலிக்கின்றன. தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது பிரச்சாரங்களில் போட்டோக்களை பயன்படுத்தி பரப்புரை செய்து வருகிறார். அதிமுகவும் பாஜகவும் ஒரே கூட்டணி என்பதை காட்ட, பிரதமர் மோதியும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பொது நிகழ்வுகளில், சந்திப்புகளில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை கையில் கொண்டு வந்து மக்கள் மத்தியில் எடுத்துக் காட்டி பரப்புரை செய்கிறார். இதற்கு பதிலடியாக எடப்பாடி பழனிசாமி தனது பரப்புரைக் கூட்டங்களில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினும் பிரதமர் மோதியும் அரசு நிகழ்வுகளில், விழாக்களில் அருகில் நின்று சிரித்து பேசிக் கொண்ட புகைப்படங்களை எடுத்துக் காட்டி, திமுகவும் பாஜகவும் கள்ளக் கூட்டணி கொண்டுள்ளனர் என்று சுட்டிக் காட்டுகிறார்.   பட மூலாதாரம்,X/UDHAY 'கல்லு பல்லு' என நீளும் விமர்சனம் அதே போன்று, உதயநிதி ஸ்டாலின், மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது என்பதை சுட்டிக் காட்டும் வகையில் கடந்த தேர்தலில், ஒற்றை செங்கலைக் காட்டி பரப்புரை செய்தார். இந்த முறையும் அதே போன்ற பரப்புரையை மேற்கொண்ட போது, “ஸ்கிரிப்டை மாத்து பா” என்று எடப்பாடி தனது பிரச்சாரத்தில் பதில் கொடுத்துள்ளார். “செங்கலை தூக்கிக் கொண்டு வித்தை காட்டுகிறாயா” என்று கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி, திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் அழுத்தம் கொடுத்திருந்தால் எய்ம்ஸ் கட்டுமானத்துக்கு உதவியாக இருந்திருக்கும் என்றார். இந்த விவாதங்கள் பிரச்சாரக் களத்தில் மட்டுமல்லாமல், சமூக ஊடகங்களில் இடம் பெற்றுள்ளன. “நானாவது எய்ம்ஸ் -ல் வைத்த கல்லை காட்டினேன். இவர் பல்லை காட்டுகிறார் பாருங்கள்” என எடப்பாடி மோதியுடன் எடப்பாடி பழனிசாமி சிரித்துக் கொண்டு நிற்கும் புகைப்படத்தைக் காட்டி உதயநிதி ஸ்டாலின் பேசியது சமூக ஊடகங்களில் கல்லு பல்லு என்ற புதிய ஹேஷ் டேக்கை உருவாக்கிவிட்டது. இரு தரப்பினரும் மாறி மாறி, கல்லு பல்லு என்று பல உதாரணங்களை எடுத்து விமர்சித்து கேலி செய்து வருகின்றனர்.   பட மூலாதாரம்,X/EPSTAMILNADU மேலும் உதயநிதி ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்த போது எடுத்த புகைப்படத்தை காட்டி, “இவர் சிரிச்சா தப்பு இல்ல, நான் சிரிச்சா தப்பா. சிரிச்சா என்ன தெரியுது, பல்லு தானே” என்று மீண்டும் இந்த விவகாரத்தை கையில் எடுத்தார் எடப்பாடி பழனிசாமி. அந்தப் புகைப்படம் கேலோ இந்தியா நிகழ்வுகள் குறித்து பேசும் போது எடுத்தது என்று பதிலளித்தப் உதயநிதி, எடப்பாடி பழனிசாமி சசிகலாவின் காலில் விழும் போட்டோவை காண்பித்து, “நான் இப்படி ஒருவர் காலில் விழும் புகைப்படத்தை காண்பித்தால் நான் அரசியலை விட்டு விலகிவிடுகிறேன்” என சவால் விடுத்துள்ளார்.   பட மூலாதாரம்,X/ANI பிரதமர் நரேந்திர மோதி சென்னை வந்த போது கருப்பு குடைக்கு பதிலாக வெள்ளை குடை பிடித்ததை விமர்சனம் செய்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நடிகர் வடிவேலுவின் 23ம் புலிகேசி திரைப்படத்தில், எதிரி நாட்டவர்கள் படை எடுத்து வரும் போது வெள்ளை கொடி எடுத்து செல்வார். அதே போல, கருப்பு குடை பிடித்தால் பிரதமருக்கு கோபம் வரும் என்பதால், அவர் சென்னை வரும் போது, வெள்ளை குடை பிடிக்கப்பட்டது. வெள்ளை குடை ஏந்தும் பொம்மை வேந்தர் என்று முதல்வரை மக்கள் சொல்கிறார்கள்” என்று கூறியிருந்தார்.   பட மூலாதாரம்,X/ANNAMALAI_K 'கோட்டா அரசியல்' - விமர்சனத்தில் சிக்கியுள்ள அண்ணாமலை அண்ணாமலை கோவையில் செய்தியாளர் சந்திப்பில் பேசும் போது,தன்னை எதிர்த்து போட்டியிடும் அதிமுக வேட்பாளரான சிங்கை ராமச்சந்திரன், சட்டமன்ற உறுப்பினராக இருந்த அவரது தந்தை கோவிந்தராசுவின் உதவியால் தான் உயர்படிப்பு படித்தார் என்றும் விமச்சித்திருந்தார். “2002ம் ஆண்டு எம் எல் ஏ கோட்டாவின் கீழ் கல்லூரியில் இடம் பெற்றவர் அவர், வாரிசு அரசியலில் வந்தவர் அவர். ஆனால் நான், எனது தந்தையுடன் கிராமத்திலிருந்து மூன்று பேருந்துகள் மாறி, தகரப்பெட்டியுடன் இந்த நகரத்துக்குள் நுழைந்தேன். கோட்டா அரசியலில் வரவில்லை நான்.” என்று அண்ணாமலை தெரிவித்திருந்தார். பட மூலாதாரம்,X/RAMAAIADMK இதற்கு பதிலளித்த சிங்கை ராமச்சந்திரன், “எனக்கு 11 வயது இருக்கும் போதே என் தந்தை இறந்துவிட்டார். நான் பெற்ற மதிப்பெண்கள் காரணமாகவே எனக்கு பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தது. அவர்களுடைய மோதியின் குஜராத்-ல் உள்ள ஐஐஎம்-ல் மீண்டும் மதிப்பெண்கள் மூலமாகவே இடம் பெற்றிருந்தேன். அவருக்காவது தகரப்பெட்டியை உடன் தூக்கி வர அப்பா இருந்தார், ஆனால் எனக்கு அதுவும் இல்லை. இது போன்ற கஷ்டங்களை அனைவரும் தங்கள் வாழ்வில் சந்தித்திருப்பார்கள். எனவே நான் தான் துன்ப்பப்பட்டேன் என்று கூறிக் கொள்ள எதுவும் இல்லை” என்று பதில் கூறியிருந்தார். இதை அடுத்து கோட்டா அரசியல், இட ஒதுக்கீடு குறித்த விவாதம் சமூக ஊடகங்களில் பரப்பரப்பாக நடைபெற்று வருகின்றன. திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில், அண்ணாமலை தான் வளர்ந்து வந்த பாதையை மறந்துவிடக் கூடாது என்று கூறியுள்ளார். இதற்கிடையில், முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் விழுப்புரம் தொகுதியில் பேசும் போது அதிமுக போட்ட பிச்சை தான் தமிழகத்தில் பாஜகவுக்கு இருக்கும் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் என்று காட்டமாக கூறியிருந்தார். தேனி தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் டிடிவி தினகரன், பாஜகவின் சாதனைகளை குறித்தோ அல்லது காங்கிரஸ் மீதுள்ள விமர்சனங்கள் குறித்து குறிப்பிட்டு எதையும் பேசுவதில்லை. தனது கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்களை மறைமுகமாக தாக்கிப் பேசும் அவருக்கு, பிரதான அரசியல் பிரச்னைகள் குறித்து பேசுவதை விட தனது குக்கர் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே முக்கியத்துவம் பெறுகிறது.   பட மூலாதாரம்,X/DRARAMADOSS பாமக மாறி மாறி கூட்டணி வைத்துக் கொள்வதை விமர்சித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நீர் இருக்கும் இடத்தை தேடிச் செல்லும் வேடந்தாங்கல் பறவை போல் பா.ம.க.,வினர் தேவைக்கேற்ப சென்று விடுவர். பா.மக., கூட்டணி வைக்காத கட்சிகளே இல்லை” என்று கூறியிருந்தார். தருமபுரியில் வேட்பாளர் சௌம்யா அன்புமணியை அறிமுகம் செய்து பேசிய அன்புமணி ராமதாஸ் “நாங்கள் வேடந்தாங்கல் பறவை அல்ல, சரணாலயம்” என்று பதில் கூறியுள்ளார். “யார் வந்தாலும் பாதுகாப்பு கொடுப்போம். வெற்றி பெற செய்வோம். எங்களை நம்பி வருபவர்களை வாழ வைப்போம். யாருக்கும் துரோகம் செய்ய மாட்டோம்” என்று தெரிவித்திருந்தார். https://www.bbc.com/tamil/articles/cjkd7v517z2o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.