Jump to content

Map of Tamileelam


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் அனைவருக்கும்

தமிPழத்தின் வரைபடம் எங்கு எடுக்கலாம்? அனைத்து கிராமங்களும் உள்ளடங்கிய ஒரு வரைபடம் தேவை. யாரிடமாவது இருந்தால் சொல்லவும்.

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில் எனக்கு ஒரு சந்தேகம் உண்டு. தமிழீழம் என்றால் வடக்கு-கிழக்கு என்றே பல ஊடகங்களும், பலரும் எழுதுகின்றனர். எனவே தமிpழத்தில் இருந்து புத்தளம் மாவட்டம் விடுவிக்கப்பட்டுள்ளதா? புலிகளின் செயற்திட்டங்கள் கூட புத்தளம் மாவட்டத்தில் இருப்பதாகத் தெரியவில்லையே! ஏன்??

Link to comment
Share on other sites

இலங்கைத்தீவில் தமிழர் மரபு வழித் தாயக எல்லைகள்

இலங்கைத்தீவில் தமிழர் வாழ்விட, சிங்களவரின் வாழ்விட எல்லைகள் ஆறுகளை அடிப்படையாகக் கொண்டவை. இந்த எல்லை இன்று நேற்றல்ல, மிகப் பழங்காலந்தொட்டே இருந்துவந்துள்ள்து. சில காலங்களில் இந்த எல்லைகளிற் சிறு சிறு மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம்.சோழர் காலத் தலைநகரம் பொலநறுவை. மாகனின் தலைநகரமும் பொலநறுவை. இந்த மாற்றங்கள் தமிழர் மரபு வழித் தாயக எல்லைகளில் அடிப்படை மாற்றங்களை கொண்டு வரவில்லை.

கும்புக்கன் ஆறுதான் தமிழ்ப் பகுதியின் தெற்கெல்லை. "கிளொக்கோர்ண்" என்ற பிரிட்டிஸ்காரர் வளவை கங்கைவரை தமிழர் வாழ்ந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். மாணிக்க கங்கைக் கரையில் தமிழரின் வழிபாட்டிடமான கதிர்காமம் உள்ளது. எனினும் ஆதிக்க எல்லையாகக் கொண்டால் கும்புக்கன் ஆற்றையே தமிழீழ நிலப்பகுதியின் தெற்கெல்லையாகக் கொள்ள வேண்டும். கும்புக்கன் ஆற்றின் வடக்குக் கிளை அதன் தொடக்க நிலையிலிருந்து ஏனைய கிளைகளுடன் கடலில் கலக்கும் வரை தமிழர் வாழ்விடத்தின் தெற்கெல்லையாக அமைகின்றது.

கிழக்குக் கரையோரத்தில் உள்ள தமிழர் வாழ்விடங்களின் மேற்கெல்லையாக மாவலி கங்கையாறு அமைந்துள்ளது. தமிழீழ நிலப்பகுதியின் எல்லைக்கோடு கும்புக்கன் ஆற்றில் தொடங்கிக் கல்லோயா ஆற்றின் தொடக்கக் கிளைகளினூடாக வந்து மாவலி கங்கையின் கிழக்கு கிளையின் தொடக்கத்தை அடைந்து மாவலி கங்கையின் அருகாக வடக்கு நோக்கிச் செல்கின்றது.

விந்தனைப்பகுதி தமிழர் வாழ்விடம், அங்கு வாழ்ந்த வேடர்களின் தலைவர் பழுகாமவன்னிமைக்குத் திறைசெலுத்தி வந்தனர். வேடர்கள் தமிழ்மொழியைப் பேசினர். இன்றைய கிழக்கு மாகாண எல்லை விந்தனைப்பகுதியை கிழக்கு மாகாணத்துள் அடக்கவிலலை. எனினும் தமிழர் நிலப்பகுதியின் இயற்கையான எல்லை மாவலிகங்கையே, இன்ன்றைய எல்லை அல்ல. 1833இல் கோல்புறூக் ஆணைக் குழு வரைபடத்தில் மாவலிகங்கை கிழக்கு மாகாண எல்லையாக உள்ளது.

மாவலிகங்கையானது தெற்கே கல்லோயா ஆற்றிலிருந்து தொடரும் தமிழீழ எல்லைக்கோட்டை எடுத்து கந்தளாய்க்குளம்வரை கொண்டு செல்கின்றது. மாவலி கங்கை விடுகின்ற எல்லைக்கோடு கந்தளாய் ஆற்றில் தொடர்ந்து சென்று யான்ஓயாவினைச் சென்றடைகின்றது, யான்ஓயாவின் கிழக்குக் கிளையாறு வழியாகத் தொடர்கின்ற எல்லைக்கோடு கிழக்குக் கிளையும் மேற்குக் கிளையும் சந்திக்கும் இடத்தில் திரும்பி மேற்குக் கிளை வழியாகத் தொடர்கின்றது.

யான்ஓயாவிலிருந்து பாவற்குளம் வரை ஆற்றுவழி இல்லாத எல்லை அமைகின்றது. யான்ஓயாவின் மேற்குக் கிளை தொடங்குமிடத்திலிருந்து பாவற்குளத்தை ஒட்டிய அருவியாற்றுக் கிளைவரையுள்ள நேர்கோடு தமிழீழ எல்லையாகும். வவுனியாவிற்கும் மதவாச்சிக்கும் இடைப்பட்ட இந்த எல்லை இன்றுள்ள வடமாகாண, வடமத்திய மாகாண எல்லையாகும்.

பாவற்குளத்திலிருந்து அருவியாற்றுக் கிளைகளின் சந்திப்பிலுள்ள குளக்கரைக்குச் செல்லும் நேர்கோடு அங்கிருந்து மோதரகம் ஆற்றிந்தென்கிளையும் வடகிளையும் சந்திப்புக்குச் செல்லும் நேர்கோடு என்பன தமிழீழ எல்லைக்கோட்டைத் தாங்கிச் செல்கின்றன.

மோதரகம் ஆற்றின் தென்கிளை வழியாகத் தொடரும் எல்லைக்கோடு கலாஒயாவின் கிளையாறு ஒன்றினூடாகத் தொடர்கிறது.

புத்தளம் மாவட்டத்தின் இன்றைய எல்லைக்கோடு தமிழீழ நிலப்பகுதியின் மேற்குக் கரையோர நிலப்பகுதியினைச் சிங்கள நாட்டின் நிலப்பகுதியிலிருந்து பிரிப்பதாக கருதலாம். வாய்க்கால் ஆறு எனப்படும் மாஓயா வரை தமிழீழ நிலப்பகுதி பரந்துள்ளதை இந்த எல்லைக்கோடு காட்டுகின்றது.

கும்புக்கன் ஆற்றிலிருந்து தொடங்கிக் கல்லோயா, மாவலிகங்கை, கந்தளாய்ஆறு, யான்ஓயா, அருவியாறு, மோதரகம் ஆறு, கலாஓயா ஆகிய ஆறுகளின் கரையோரமாக வரும் தமிழீழ எல்லைக்கோடு புத்தளம் மாவட்ட எல்லைக்கோட்டுடன் தொடர்ந்து வாய்க்கால் ஆற்றின் கரையோரமாக சென்று நிறைவுபெறுகின்றது.

- மறவன்புலவு க. சச்சிதானந்தன் -

மேலே குறிப்பிட்ட தரவுகளின் அடிப்படையில் கிளிநொச்சியில் உள்ள அறிவுஅமுது பதிப்பகம்

இலங்கைத்தீவில் தமிழர் மரபு வழித் தாயகம் - தமிழீழம்

என்னும் வரை படத்தினை வெளியிட்டிருந்தனர் அவ்வரை படம் தமிழீழத்தின் அனைத்து கிராமங்களும் உள்ளடங்கிய வரைபடமாக உள்ளது.

(எனக்கு தெரிந்த தகவலை யாழ்கள உறவுகளுடன் பகிருகின்றேன்)

Link to comment
Share on other sites

இதில் எனக்கு ஒரு சந்தேகம் உண்டு. தமிழீழம் என்றால் வடக்கு-கிழக்கு என்றே பல ஊடகங்களும், பலரும் எழுதுகின்றனர். எனவே தமிpழத்தில் இருந்து புத்தளம் மாவட்டம் விடுவிக்கப்பட்டுள்ளதா? புலிகளின் செயற்திட்டங்கள் கூட புத்தளம் மாவட்டத்தில் இருப்பதாகத் தெரியவில்லையே! ஏன்??

ஏன் நேற்றுகூட கற்பிட்டி கடலில், ஒன்றை அடிச்சு கவுத்து 5 பேரை மேல அனுப்பி இருக்கினமே. கற்பிட்டி கடலில் பல கப்பல்கள் அடித்து கவிழ்க்கப்பட்டவை. அங்க ஒரு நேவிகாம்ப் இருக்கு அந்த நேவியில் ஏறி ஒரு றவுண்ட அடிச்ச ஆளப்ப நான், 8வயசில. :lol::D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொதுவாக எந்த எழுச்சியும் வடக்கு கிழக்கு தழுவியதாகவே நடக்கின்றது. அதனால் தான் அப்படிக் கேட்டேன். நன்றிகள் பிருந்தன் அண்ணா, சிறி அண்ணா!

Link to comment
Share on other sites

¾¸Åø¸ÙìÌ ¿ýÈ¢¸û º¢È¢ìÌõ ÌÚ측ħÀ¡Å¡ÛìÌõ;

Link to comment
Share on other sites

  • 4 months later...

தமிழீழத்தில் புத்தளம் வருகிறதா இந்த இணைப்பை பாருங்கள்

http://www.troonline.org/geography.htm

இதில் புத்தளம் மாவட்டம் இல்லையே

அதுமட்டுமல்ல விக்கிபிடியாவில் புத்தளம் மாவட்டம் இல்லாமல் தான் வரை படம் போட்டு இருகிறார்கள்

http://es.wikipedia.org/wiki/Tamil_Eelam

???????

Link to comment
Share on other sites

எனக்கும் உதில குழப்பம். சமாதான செயலகம் அண்மையில் வெளியிட்ட படங்களில் கூட மன்னாருக்கு தெற்கால (கீழ) ஒண்டும் காட்டவில்லை. ஆனால் பல பழய படங்களில் தெளிவாக மன்னாருக்கு கீழ இழுத்து கீறியிருக்கும். அது இப்ப புத்தளமா இருக்கிறதன் பகுதிகள் மட்டுமா, எல்லாமா இல்லையா என்று தெரியா.

Link to comment
Share on other sites

தமிழீழத்தின் எல்லைகள் மறுபரிசீலனைக்கு உட்பட்டவை என்று விடுதலைப்புலிகள் ஒரு முறை சொன்னதாக ஞாபகம்.

அதிகமான பகுதிகளை தமிழீழம் என்று இப்பொழுது வரையறை செய்து வைத்திருப்பது நல்லதுதான். அப்பொழுதூன் எல்லை பற்றிய பேச்சுவார்த்தையில் சில பகுதிகளை விட்டுக் கொடுப்பது போன்று கொடுத்து விடலாம்.

புத்தளத்தின் பெரும்பகுதி, அம்பாறையின் சிறு பகுதி போன்றவைகள் விட்டுக் கொடுக்கப்படுகின்ற பகுதிகளாக இருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாத்திலையும் சுரண்டிச்சுரண்டி கடைசியிலை ஈழத்து வரைபடத்திலையும் சுரண்ட வெளிக்கிட்டுட்டாங்கள் கேடுகெட்ட --------- ------ -----ர் :angry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முன்னர் புத்தளம், சிலாபம் என்பன உள்ளிடப்பட்ட நிலப்பகுதிதான் தமிழீழ வரைபடமாகச் சொல்லப்பட்டது. தொன்னூறுகளின் தொடக்கத்தில் இதில் சிக்கல்கள் தொடங்கின. 92 ஆம் ஆண்டு எங்கள் பாடசாலையில் கொழுவியிருந்த வரைபடத்தைப் பார்த்த அரசியற்றுறைப் போராளியொருவர், அது தவறான படம், நிலப்பரப்பு மாற்றங்களுடன் புதிய படம்வெளிவரும், அதை மாற்றி விடுங்கள் என்று சொன்னார்.

தொன்னூறுகளின் நடுப்பகுதியில் புத்தளம், சிலாபம் நீக்கப்பட்ட வரைபடத்தை யாழ்ப்பாணத்தில் கண்டிருக்கிறேன். வன்னிவந்தபின் புத்தளம், சிலாபம் உள்ளடக்கப்படாத தமிழீழமே தென்பட்டது.

இதுதொடர்பில் அங்குள்ளவர்களிடம்கூட குழப்பங்கள் இருந்தன. இன்றும் இருக்கிறது. ஆனால் என் புரிதலின்படி மேற்கில் மன்னார் மாவட்டத்துடன்முடிவடையும் வரைபடத்தையே தற்போதைய வரைபடமாகப் புலிகள் பாவிக்கிறார்கள். இதுதொடர்பான விளக்கத்தைக் கேட்டபோதும்அதற்குச் சாதகமான பதில்தான் வந்தது.

இன்று அதிகாரபூர்வமாக புலிகள் வெளியிடும் வரைபடம் மன்னாருடன் முடிந்துபோவதுதான்.

ஆனால் பலவிடங்களில், புத்தகங்களில், இணையத்தளங்களில் பழைய வரைபடத்தைப் பார்க்க முடிகிறது. சொல்லப்போனால் பெரும்பான்மையென்பது பழைய வரைபடமாகவே இருக்கிறது.

புலிகள் அதிகாரபூர்வமாக பழைய படத்தைத் தவறென்று சொல்லவில்லை, சொல்லச் சங்கடப்படுகிறார்கள் போலும்.

இன்றைய நிலையில் புத்தளம் பற்றியோ சிலாபம் பற்றியோ ஒரு சொல்தன்னும் கதைக்க முடியாத நிலைக்கு நகர்ந்துவிட்டோம். அவை தமிழர் தாயகம் என்பதை உள் ஊர் மேடைகளில் சொல்ல முடியுமே தவிர வெளிப்படையான பத்திரிகையாளர் மாநாட்டிலோ பேச்சு மேசையிலோ சொல்ல முடியுமென்று நினைக்கவில்லை.

தனியே வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தமிழரின் தாயகபூமி என்ற கோட்பாட்டோடு அவற்றைப்பற்றி மட்டுமே அரசியல்ரீதியாகக் கதைத்துக்கொண்டு போராட்டத்தை நகர்த்தும் நிலைதான் இன்றுள்ளது.

வரைபடமென்பது ஒரு குறிக்கோளைக் கொண்டிருக்கவும், இலட்சியத்தைத் தெளிவுபடுத்தவுமென வகுக்கப்பட்டது. அதுவே முடிந்த முடிவன்று. இறுதியில் அதன் நிலப்பரப்பு அதிகரிக்கலாம், குறையலாம்.

Link to comment
Share on other sites

ம் நன்றி பூராயம் நான் தமிழர் புனர்வாழ்வு கழக தளத்தினை வடிவமைத்தவரிடம் இதை பற்றி கேட்டேன் tro 8 மாவட்டங்களில் தான் இயங்குகின்றது என்றும் அவர்கள் தான் இந்த 8 மாவட்டங்களின் வரை படங்களையும் தந்தார்கள் என சொன்னார்

http://www.troonline.org/geography.htm

இதில் புத்தளம் மாவட்டமில்லை

இதனை உறுதிப்படுத்தினால் விக்கிபீடியாவில் இருப்பது பிழையாயின் அவர்களுக்கு தெரியப்படுத்தி மாற்றலாம்

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழத் தேசியத் தலைவரின் மாவீர் தின உரையின் பொதும், மாவீரர்களுக்கான ஆக வணக்கத்தின் போதும் பின்னணியில் இருந்த தமிழீழவரைபடத்தில் தமிழீழம் புத்தளத்தையும்அடக்கியதாகவே காணப்பட்டது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் புத்தளத்ததை சிலாபத்தை விட்டு வரைபடம்

கீறீனார்கள் என்பது தவறு. போராட்டம் தொடங்கிய காலங்களில்

அவை பெரிதாக பத்திரிகைகளில் அடிபட்டது என்தும்

பின்பு அப்பகுதிகளில் தாக்குதல்கள் குறைந்தன என்பதுவும்தான்

உண்மை. காரணம் புத்தளம் சிலாபம் பகுதியில் தமிழ் பேசும்

மக்கள்தான் செறிந்து வாழ்கின்றார்கள் பெரும்பாண்மையானோர்

முஸ்லிம்கள். யாழில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதன் பின்பு

விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்தும் அனைத்து முஸ்லிம் இன போராளிகளும்

நீக்கப்பட்டனர். இதில் பெரும்பாண்மையானோர் இப்பிரதேசங்களில் வாழ்வபர்கள்

விடுதலைப்புலிகளாக இருந்து பின்பு நீக்கப்பட்டவர்கள் பின்னாளில் புலிகளுக்கு எதிராக செயற்பட தொடங்கினார்கள். அவர்களுக்கு புலிகளுக்கு ஆதரவான தமிழர்களை நன்கு தெரியும். அவர்களையும் இராணுவத்துடன் சேர்ந்து அவர்கள் வதைபடுத்தியதால். புலிகளுக்கான ஆதரவு மறைய தொடங்கிற்று. ஆதலால் அப்பகுதிகளில் சில போராட்ட அரசியல் தந்திரோபாயங்களின் அடிப்படையில் புலிகள் தமது செயற்பாட்டினை வெகுவாக குறைத்துவிட்டனர் எனலாம். எனினும் முற்றாக மறைந்து விடவில்லை தற்போது கூட அப்பகுதியை சேர்ந்த ஒரு போராளி மாவீரர் ஆகியுள்ளார்.

புலிகள் அடக்கி வாசிப்பதில் பல காரணங்கள் இருக்கலாம்.......

எனக்கு எட்டியவரை. கொழும்புக்கான தாக்குதல் படையணிகளை (போராளிகளை) இப்பகுதியூடாக அனுப்புவதால் அதில் எதிரியின் கவனத்தை ஈர்க்காமல் இருப்பதாக இருக்கலாம்.

தமிழ் ஈழம் கிடைக்க பெற்றால் மதம் எதுவாக இருப்பினும் தமிழ் பேசினால் புலிகளுடன் சாருவதே யாவருக்கும் பாதுகாப்பாக அமையும். தற்காலத்தில்.....

அற்பசொற்ப ஆசையால் அருவருடிகளாக செயற்படுபவர்கள் பின்பு அடிவாங்கும் போது தாமாக இணைந்து விடுவார்கள். ஆகவே அதை பற்றி அதிக அளவில் அலட்டுவது அர்த்தமற்றதும் அனாவசியமானதையும் விட நேரத்தை வீணடிப்பதுமாகும்.

கிட்டத்தட்ட அமெரிக்க இராணுவம் தற்போது இராக்கில் நிலைநாட்டியிருக்கும்

சுதந்திர ஜனநாயகம் போன்றது. (ப்போது இராக்கில் சில பகுதிகளில் கடைக்கு போவதானால் கூட சக துணிந்தவர்கள் மட்டும்தான் போக முடியும்) ஆனால் அமெரிக்க இராணுவம் இராக்கியர்களுக்கு சுதந்திர விடுதலை பெற்று கொடுத்திருக்கிறதாம். இப்போதுதான் இராக்கியர்கள் சுதந்திர காற்றை சுவாசிக்கின்றார்களாம்.

தமிழ் ஈழத்தின் வரைபடத்தில் இன்னமும் இவை உள்ளடக்க பட்டுள்ளது.

ஏதாவது செயற்பாடுகள்..... அன்றி தரவுகள் பற்றிய வரைபுகளில் அவை இல்லாதிருக்கலாம். ஆகவே நீங்கள் எந்த வரைபை பார்கின்றீர்கள் என்பதை முதலில் தெளிவுபட வேண்டும்.

Link to comment
Share on other sites

தற்போதும் அதிகமாகப் பாவனையிலுள்ள தமிழீழ வரைபடம் புத்தளம்,நீர்கொழும்பு போன்ற பகுதியை உள்ளடக்கியதாகவே உள்ளது. இக் கிராமங்களில் தமிழர் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் ஏராளமுண்டு. சிறிதும் பெரிதுமான பல வழிபாட்டுத் தலங்கள், இன்றும் தமிழ்ப் பெயரில் அழைக்கப்படும் பல கிராமங்கள். இதற்குச் சான்று. காலப் போக்கில் பேரினத்தின் அரசியல் தந்திரங்களினாலும் பேரினவாதிகளினாலும் தமிழர்களின் வாழ்விடங்களை அடையாளங்களை அழித்தொழிக்கும் பணி சிறப்பாக செயற்பட்டது. வாழ்ந்த மக்களும் தமிழர்களாயினும் சிங்கள தேசததின் எல்லைக் கிராமமாக இருப்பதனால் சிங்கள மக்களுடன் திருமண உறவு போன்ற பந்தங்களினாலும் சில பல அரசியல் காரணங்களினாலும் அவர்கள் தம் மொழி வழக்கழிந்து ஒரு தலைமுறை தமிழும் சிங்களமுமாய், தற்போதைய தலைமுறை தமிழ் என்பதழிந்து முற்றும் முழுதுமாய்; சிங்கள மக்களாக வாழ்கின்றார்கள். தற்போழுது அங்கு பேரினத்தின் விகிதாச்சாரம் அதிகமிருப்பதனால் வி;.புகள் அதனை பற்றி அதிகம் கவனமெடுக்காமல் இருக்கக் கூடும். ஆயினும் தமிழீழம் மலர்ந்து எல்லை பற்றிய சர்ச்சை வரும் போழுது நிச்சயமாய் இவைகள் தமிழீழத்தின் எல்லைக்குள் காட்டப்படும்.

ஈழத்திலிருந்து

ஜானா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்ப புத்தளம், சிலாபத்தையும் தாண்டி நீர் கொழும்புக்கும் போயிட்டியள் போல.

என்னதான் கற்பனை செய்தாலும் யதார்த்தம் வலுவானது.

தமிழர்கள் செறிந்து வாழ்ந்தார்கள் என்பதற்கான ஆதாரத்தை யார் மறுத்தது? அதை மட்டும் வைத்துக்கொண்டு தனிநாட்டுக்கான வாதத்தை எப்படி வைப்பது?

அப்படிப்பார்த்தால் அனுராதபுரம்கூட தமிழரின் பூர்வீக நிலப்பகுதியென்று நிறுவலாம்.

புலிகள் கொள்கையளவில் புத்தளம், சிலாபத்தைக் கைவிட்டுப் பலவருடங்களாகவிட்டன.

அண்மையிற்கூட புலிகளின் அரசியல் நடவடிக்கையெதுவும் அந்நிலங்களை மையப்படுத்தியில்லை (முன்பும் இருந்ததில்லை). கடந்த பதினைந்தாண்டுகளில் புத்தளம், சிலாபம் பற்றி புலிகள் என்றாவது வாய்திறந்ததைப் பார்த்திருக்கிறீர்களா?

இடைக்கால நிர்வாகசபை வரைவிலோ, அல்லது புரிந்துணர்வு ஒப்பந்தத்திலோ குறிப்பிட்ட மாவட்டங்கள் தொடர்பான எந்த அணுகுமுறையுமில்லை (அரசியல் அலுவலகங்கள் திறப்பதுட்பட).

இப்போது வெளிப்படையாகப் பேசமுடியாத, அரசியல் செய்யமுடியாத நிலங்களைப் பின்னொரு காலத்தில் எப்படி சொந்தம் கொண்டாட முடியும்?

தமிழீழ எல்லையை நிர்மாணிப்பது, அரசியல் ரீதியாக, ஐ.நாவின் வரையறைக்குட்பட்டு, பல நாடுகளின் அங்கீகாரத்தோடு என்று சொன்னால் வடக்கு, கிழக்கு மாகாணங்களை மட்டும் உள்ளடக்கிய ஈழம் மட்டுமே சாத்தியம்.

போர் மூலம் மட்டும் முழு இடத்தையும் கைப்பற்றி, மற்றவர்களின் அங்கீகாரம் (ஐ.நாவினது உட்பட) எதுவும் இல்லாமல் நாடமைக்கும் பட்சத்தில் மட்டுமே நீங்கள் சொல்வதுபோல் புத்தளம், சிலாபம் (வேண்டுமானால் நீர்கொழும்பு - ஏன் கொழும்பையும் சேர்க்கலாம்) போன்றவற்றைக் கொண்ட எல்லை அமைக்கப்படும்.

வரைபடம் பற்றி ஏற்கனவே சிலர் சொல்லிவிட்டார்கள். இன்னும் பழையபடங்கள் பல இடங்களில் பாவிக்கப்படுவதாலேயே சிக்கல்.

புலிகளின் சமாதானச் செயலகம் வெளியிட்ட அதிகாரபூர்வ படத்தில் புத்தளம், சிலாபம் எதுவும் உள்ளடக்கப்படவில்லை. இடப்பக்கமாக மன்னாருடன் முடிந்து போகும் வரைபடத்தைப் பார்க்க பெரிய அந்தரமாத்தான் கிடக்கு. அதுக்காக யதார்த்தத்தை மறைத்துப் புழுகிக்கொண்டிருக்க முடியுமா?

Link to comment
Share on other sites

ஆனால் சொந்தம் கொண்டாட விட்டாலும் இப்பவே மொளனமாக விட்டுக் கொடுப்பதில் என்ன இலாபம்? இதை இறுதியாக நடக்கும் எல்லைப் பேச்சுவார்த்தையில் விட்டுக் கொடுப்பது தான் சபேசன் சொன்னது போல் பொருத்தமாக இருக்கும்.

எதிர்கால பேச்சுவார்த்தை யுத்திக்காக கொட்டான்சேனை வெள்ளவத்தை எல்லாத்தையும் படத்தில சேர்க்க சொல்லவில்லை ஆனால் ஆரம்பத்தில் இருந்தே உரிமை கோரும் முறையில் வரைபடத்தில் வைத்திருந்த ஒருபகுதியை எந்த ஆரவாரமும் இன்றி ஏன் நீக்க வேண்டும்?

ஆனால் இடைக்கால தன்னாட்சி வரைபு ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தால் அதன் அடுத்த கட்டமாக உள்ளக சுயாட்சி முறையில் தீர்வு கிடைத்திருந்தால் புத்தளம் சிலாபம் சேர்க்கப்பட்டிருக்காது என்றதை ஒரு ஊக்குவிப்பாக சிங்களத்திற்கு அறிவிக்க செய்திருக்கலாம். ஏன் என்றால் சமாதான செயலகத்தின் வரைபுகளில் தான் அவை இருக்கு. தமிழர் புனர்வாழ்வுக் கழகம் ஒரு தொண்டர் நிறுவனமே. ஆனால் சமாதான செயலகம் வெளியிட்ட படம் தான் என்னை குழப்பிவிட்டது.

கிழக்கில் பல முக்கிய பகுதிகள் கேள்விக்குறியாக இருக்கு. அவற்றை வெற்றி கொண்டு தக்கவைப்பது என்ற பிரச்சனையில்லை நீர்கொழும்பில கற்பனையில கொடியேத்த நிக்கினம். :D

கடந்த வருடம் சிங்களவன் ஒரு கட்டுரை எழுதியிருந்தவன் "இணையத்தில் வாழும் தமிழீழம்" (virtual Tamil Eelam) பற்றி. அதாவது அவன் எமது போராட்டத்தை சிறுமைப்படுத்தி இணையத்தில் படங்களில் எழுத்துகளின் மக்களின் எண்ணங்களில் வாழும் ஒரு யதார்த்தம் அற்ற குறிக்கோள். வெளிநாடுகளில் உள்ள ஈழத்தமிழர்கள் இலங்கையில் வாழாததால் தமிழீழம் என்றதன் யதார்த்தம் பற்றி சிந்திக்க தேவையில் இணையத்தளங்களிலும் தமது புலம் பெயர்ந்த நாடுகளில் ஈழத்தின் பெயரால் நடத்தும் நிகழ்வுகள் மூலம் தம்மை திருப்த்திப்படுத்திக் கொண்டு அவ்வாறு ஒன்று முடியும் ஏற்கனவே கிடைத்துவிட்டது என்ற கற்பனையில் வாழ்கிறார்கள் என்று.

அந்த மோட்டுச் சிங்களவனின் பிரச்சாரத்தை உண்மையாக்கமல் பார்த்துக் கொள்ளுற அறிவாவது எமக்கு இருக்க வேண்டும் என்று ஆண்டவனைத் தான் பிராத்திக்க முடியும். :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • பாஜகவோட கூட்டணிவைச்ச வாசனுக்கும் தினகரனுக்கும் மட்டும் அவர் கேட்ட சின்னத்தைக் கொடுத்தது என்ன மாதிரியான தேர்ததல் விதிமுறை?பாஜக இந்த முறை 3 வது இடம் பிடிக்கணும் அதுக்காககத்தான் இந்த குழறுபடிகள்.ஆனால் அது நடக்காது. தேர்தலிலே நிற்காத கமலுக்கு டோர்ச்லைற் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.
    • இந்திய‌ அள‌வில் ஏவிம் மிசினுக்கு எதிர்ப்பு கூடுதே அண்ணா அது எத‌ற்காக‌.................ப‌ல‌ர் ஊட‌க‌ங்ளில் நேர‌டியா சொல்லுகின‌ம் ஏவிம் மிசினில் குள‌று ப‌டி செய்ய‌லாம் என்று ஏன் அவ‌ர்க‌ள் மீது தேர்த‌ல் ஆனைய‌ம் வ‌ழ‌க்கு போட‌ வில்லை................இப்ப‌டி கேட்க்க‌ ப‌ல‌ இருக்கு...............யாழிலே வ‌ய‌தில் மூத்த‌வ‌ர்க‌ள் எழுதி விட்டின‌ம் இந்தியாவில் தேர்த‌ல் என்ப‌து க‌ண்துடைப்பு நாட‌க‌ம் என்று அப்ப‌ புரிய‌ வில்லை இப்ப புரியுது...............இப்ப இருக்கும் தேர்த‌ல் ஆனைய‌ம் கிடையாது மோடியின் ஆனைய‌ம்..............ப‌ல‌ருக்கு ப‌ல‌ ச‌ந்தேக‌ம் வ‌ந்து விட்ட‌து த‌மிழ் நாட்டு தேர்த‌ல் ஆனைய‌ம் மேல்..........................
    • வைகோ தனது மகனை அரசியிலில் முன்னிறுத்துவதற்காக நீண்டகாலம் வைகோவிற்கு விசுவாசமாக இருந்த கணேசமூர்த்த்திக்கு  தேர்தலில் இடங் கொடுக்கவில்லை.. திமுக ஒரு இடம்தான் கொடுக்குமென்றால் அதிமுகவுடன் கூட்டணி அமைந்திருந்தால் அவர்கள் கட்டாயம் 2 இடம் கொடுத்திருப்பார்கள்.கூட்டணிமாறுவது வைகோவுக்கு புதிதில்லை.வைகோவைக் திமுகவில் இருந்து வெளியேற்றியதற்காக எத்தனையோ போர் தீக்குளித்தார்கள். வாரிசு அரசியலை எதிர்த்து கட்சி தொடங்கியவர் அதே வாரிசு அரசியலைக் கையில் எடுத்தது மட்டுமல்ல யாரை எதிர்த்து கட்சி தொடங்கினாரோ அவரின் காலடியில் கிடக்கிறார். கணேசகமூர்த்தியின் சாவுக்கு வைகோவே பொறுப்பு.
    • தமிழ் தேசியத்தை தனது கட்சியின் கொள்கையாக கொண்டுள்ள சீமான் பிள்ளைகளை தமிழ்வழி கல்வியில் சேர்க்காதது தவறான முன்னுதாரணம்.. படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோவில் என்று வாழும் திராவிடகட்சிகளுக்கும் தனக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதை தனது சில அண்மைக்கால நடவடிக்கைகள் மூலம் சீமான் வெளிப்படித்தி வருகிறார்.. அவரை நம்பி பின்தொடரும் பல லட்சம் இளைஞர்கள் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக நாம் தமிழர் இருக்கும் என்று வந்தவர்கள்.. இலட்சிய பிடிப்புள்ளவர்கள்.. இப்படியான செயல்களை அவர்களை வெறுப்பேற்றும்.. நமக்கெதுக்கு வம்பு.. நம்மூர் அரசியலே நாறிக்கிடக்கு.. தமிழக உறவுகள் தம் அரசியலை பார்த்துக்கொள்வார்கள்..
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.