Jump to content

ஈழத் தமிழர்களின் தன்னாட்சியை அமெரிக்கா ஏற்றுக்கொண்டது


Recommended Posts

அடுத்ததா ஒரு விடயம் அந்நநேரம் இருந்த இயக்கங்களில் புலிகள் இயக்கத்தை தவிர்த்து பார்தால் ஒரு முழுமையான ஒரு முகாம் அல்லது காவல் நிலையம் மீதான தாக்குதலை ரெலோ இயக்கம் மட்டுமே செய்திருந்தது அது சாகச்சேரி காவல் நிலையம் மீதான தாக்குதல் அடுத்ததாக முறிகண்டியில் வைத்து இராணுவம் சென்ற இரயில் மீதானது இரண்டும் தாஸ் இராணுவ பொறுப்பில் இருந்தபோது நடாத்தப்பட்டது மற்றபடி வேறு எந்த இயக்கங்களும் எவ்வித முழுமையான ஒரு தாக்குதலையும் நடாத்தவில்லை மற்றபடி யாழ் கோட்டை முகாமையும் பலாலி காரை நகர் எண்டு எல்லா முகாமை சுத்தியும் எல்லா இயக்கமும் காவல் நிண்டவைதான் ஆனால் ஆமி வெளிக்கிட்டால் அதிலை நிண்டு அடிபட்ட ஒரேயொரு இயக்கம் எது எண்டு நான் சொல்லிதான் தெரியவேணும் எண்டு

புளொட் இயக்கம் தோழர் சுந்தரம் என்பவரது தலைமையில் ஆனைக்கோட்டை போலீஸ் நிலையத்தை முற்றுமுழுதாக தாக்கி அழித்ததே! :roll: நான் நினைக்கிறேன்.. தோழர் சுந்தரத்தின் மறைவுக்குப் பின்னர் யாழில் புளொட் வாகனங்களை கடத்துவதும் சாப்பாட்டுப் பார்சல்கள் சேகரித்து சுவைப்பதுமாகத்தான் இருந்தது என.. :P

Link to comment
Share on other sites

  • Replies 105
  • Created
  • Last Reply

அப்ப செக்கும் சொலவாக்கியாவும் புரிந்துணர்வோடு பிரிந்த மாதிரி பிரிந்தவை என்றியளோ? ஆனா அப்படி புரிந்துணர்வோடை நடந்திருந்த நீங்கள் இண்டைக்கு சுவிஸ் தமிழன் என்று சொல்லுற பாக்கியம் கிடைச்சிருக்குமோ? அங்கை இருந்து கோப்பிக் கடே எடுத்திருப்பியள் இப்ப மாதிரி வெள்ளைப்பிள்ளை கொட்டாவி விட்டு சுவிஸ்கன் பாக்கிறதை நீங்கள் லென்சிக்காலை பாத்திருப்பியளோ?

அது சரி இலங்கைக்கு இப்ப என்ன குறை? எல்லாம் நல்லாத்தானே இருக்கு? கொழும்பிலை வீட்டு விலையள் எல்லாம் எப்படி இருக்கு? நீங்கள் வித்துப்போட்டியளோ இன்னும் கொஞ்சம் ஏறும் எண்டு பாத்துக் கொண்டிருக்கிறயளோ?

குறுக்ஸ்

நாம 1975லயே சிங்கப்பூரில செட்டில்.

என் குடும்பத்தில பலர் அங்கதான்.

அப்ப கொழும்பில எனக்கு ஒன்றுமில்ல என்று தெரிய வேணும்............

(உங்கட சொத்து ஏதாவது இருந்தா

அதைக் கவனிச்சுக்கோங்கோ.)

என் கஸ்டகாலம் 1983 கலவரத்துக்குப் பிறகு

என்னை ஒருத்தர் (இலங்கை - இந்தியா) கூட்டி வந்தவர்.............

அதுதான் என் தலைவிதியையே மாத்திச்சு.

அதனாலதான் உங்கள போல கேட்கிற கேள்விக்கு எல்லாம்

பதில் சொல்ல வேண்டிக் கிடக்கு............. :P

அதனாலதான் நான் யாரோடையும்............ஊகும். :lol:

Link to comment
Share on other sites

ஏன் புளொட் பற்றி எழுதும் போது எல்லாரும் சாப்பாட்டு

பாசல் பற்றியும் எழுதுகிறார்கள்? :? யாராவது விபரமாக

சொல்லுங்கப்பா........ :!:

Link to comment
Share on other sites

ஏன் நம்மட பொடியள் மாலைதீவ அடிச்சு பிச்சத மறந்து போட்டியளோ. :P :P :P :twisted:

Link to comment
Share on other sites

ஏன் புளொட் பற்றி எழுதும் போது எல்லாரும் சாப்பாட்டு

பாசல் பற்றியும் எழுதுகிறார்கள்? :? யாராவது விபரமாக

சொல்லுங்கப்பா........ :!:

என்ன வசி இது தெரியாத சின்னப்புள்ளயா இருக்கிறீரே :P படை வருது படை வருது என்று சோத்து பாசல் சேத்த ஆக்கள் இவயள். எல்லரும் ஆயுத சேர்ப்பார்கள் இவர்கள்.

எவனோ சொல்லிவிட்டானாம், பந்திக்கு முந்து சண்டைக்கு பிந்து என்று. :P :P :P

Link to comment
Share on other sites

அஜீவன் சார்.. கிட்டண்ணா யாழில இருந்த காலத்தில் கோட்டை முற்றுகை ஒன்று இடம் பெற்றது. எனக்கு திகதி நினைவிலில்லை. அப்போது வேறு இயக்கங்களும் ஒவ்வொரு இடங்களில் சென்றிக்கு நின்றவர்கள். சுப்ரமணியம் பார்க்கில் புளொட் சென்றிக்கு நின்றது. அதாவது கோட்டைக்கு மிக அண்மிய தொலைவில் புளொட் நின்றது. கோட்டையிலிருந்து செல் ஏவப்படும் நிகழ்வை அல்லது அதன் சத்தத்தை கவனித்து.. சைரன் ஒலி மூலம் மற்றவர்களுக்கு தெரிவிப்பது அவர்களது பணியாக அப்போது இருந்தது. பின்பு அவர்கள் அங்கிருந்து விலக வேண்டும் ( :wink: ) எனப் பணிக்கப்பட்டதன் பேரில் விலகினார்கள்.

Link to comment
Share on other sites

என்ன வசி இது தெரியாத சின்னப்புள்ளயா இருக்கிறீரே :P படை வருது படை வருது என்று சோத்து பாசல் சேத்த ஆக்கள் இவயள். எல்லரும் ஆயுத சேர்ப்பார்கள் இவர்கள்.

எவனோ சொல்லிவிட்டானாம், பந்திக்கு முந்து சண்டைக்கு பிந்து என்று. :P :P :P

:P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P

Link to comment
Share on other sites

ஆமியை கண்டா சனம் ஒழிக்குது

ஈப்பியை கண்டா தலை வெடிக்குது

டேலொ வைகண்டா வோட்டு ஒழிக்குது

ஈபிடிபியை கண்டா காசு ஒழிக்குது

ஈண்டில்f கண்டா பிள்ளை நடுங்குது

ப்லொட்டை கனடா சோத்துபானை ஒழிக்குது

புலியை கண்டா பயம் ஒழிக்குது

பிரபாகரனை கண்டா வீரம் பிறக்குது

Link to comment
Share on other sites

ஏன் புளொட் பற்றி எழுதும் போது எல்லாரும் சாப்பாட்டு

பாசல் பற்றியும் எழுதுகிறார்கள்? :? யாராவது விபரமாக

சொல்லுங்கப்பா........ :!:

பொடியன்கள் 3 மாத டிரேனிங் எண்டு வண்டி ஏறி

அது 6 மாதமாகி

அதற்கு பிறகு கொமண்டோவாகி

பிறகு ஸ்பெசல் கொமண்டோவாகி............

ஆயுதம் வரும் வரைக்கும்

என்ன செய்யிறது.........

உசாரா இருந்தாதானே போராடலாம்.

உசாரா இருக்க சாப்பாடு இல்லாமல் என்ன செய்றது.

மக்களிடம் வாங்கி அந்த அப்பாவிகள் சாப்பிட்டிருக்கும்.

அது போராளிகளின் தவறல்ல.

தலைவர்களின் தவறு.

அத்தனை இளைஞர்களும்

பின் தள மாநாட்டின்(தஞ்சை - உரத்தநாடு) பின்னர்

வெறுத்து வெளியேறினார்கள்.

பலர் கொடி கம்பங்களையும்

முகாம்களையும் பிடுங்கி எறிந்தார்கள்.

மில்ட்டரி ஓடர் போட வேணும் என்ற யாரோ சொன்ன போது

யார் மிலிட்டரி?

அது நாங்க தானே?

என்று எதிர்த்தார்கள்.

மேலைத் தேசங்களிலும்

தளத்திலும் இருந்து

நம்பிக்கையோடு இணைந்தவர்கள்

வெறுத்து வெளியேறினார்கள்.

வெளிநாட்டில் உறவினர்கள் இருந்தவர்கள்

வெளிநாடு போனார்கள்.

அதிகம் பேர் மலையாள தேசத்தில் குடியேறினார்கள்.

சிலரோ திக்கு தெரியாமல் சிதறிப் போனார்கள்.

வெளி நாட்டு கிளைகளுக்கு உதவிகளை நிறுத்துங்கள் என்று

நடப்புகளை அறிவித்தார்கள்.

யாருமற்ற ஒரு சிலர் மட்டும்

அமைதிப் படை போகுதே என்று

செய்வதறியாது அவர்களோடு சென்றார்கள்.

அதுதான் முடிவுரைக்கு முதல்படி...................

உண்மையிலேயே பாவம்

அந்த இளைஞர்கள்.

சிலர் கேட்கலாம்

ஏன் சரியான தலைமையை தேர்ந்தெடுக்கலாமே என்று?

நம்பிக்கையோடு

ஒருத்தியை அல்லது ஒருவனை மணமுடித்து

வாழ்கை பிரச்சனையாகித் தடுமாறும் போது

ஏன்டா நீ சரியான ஒரு துணையை தேர்ந்தெடுக்கவில்லை

என்று கேள்வியா கேட்க முடியும்.

ஒன்று மட்டும் சொல்வேன்.

இயக்கம் என்பது அரசியல் அல்ல கட்சி தாவுவதற்கு..........

எந்தப் பக்கமும் சந்தேகம் தொடரும்.

உள்ளே வந்தால்

வெளியே போகக் கூடாது.

வெளியே போனால்

திருப்பி உள்ளே போகவே கூடாது.

அதோடு

வைக்கல்போர் நாய் போல

நடந்தும் கொள்ளக் கூடாது.

Link to comment
Share on other sites

அங்க அப்பிடீன்னா யேர்மன்ல எப்பிடீன்னு கேளுங்க சார்.. சேர்ந்த காசை என்ன செய்வதென்று தெரியாத இருவர் என்ன பண்ணினாங்க தெரியுமா? ஒருவரு நகைக்கடை ஆரம்பிச்சாரு.. மற்றவர் மளிகைக்கடை ஆரம்பிச்சாரு.. பிசினசு இன்றுவரை கொடிகட்டி பறக்குது..

Link to comment
Share on other sites

அங்க அப்பிடீன்னா யேர்மன்ல எப்பிடீன்னு கேளுங்க சார்.. சேர்ந்த காசை என்ன செய்வதென்று தெரியாத இருவர் என்ன பண்ணினாங்க தெரியுமா? ஒருவரு நகைக்கடை ஆரம்பிச்சாரு.. மற்றவர் மளிகைக்கடை ஆரம்பிச்சாரு.. பிசினசு இன்றுவரை கொடிகட்டி பறக்குது..

சோழியன் அண்ணா அது எங்கே டோர்ற்முண்டிலா நகை கடை, நானும் கேழ்விப்பட்டேன் உண்மைதானா?.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உவர் சாத்திரியார் திருப்பி பொய்சொல்லுறார்.

யாழ்கோட்டையை ENDLF தான் பிடிச்சது என்று உலகப்பிரசித்தி பெற்ற இந்துவின் ஆசிரியர் ராமே எழுதியிருக்கிறார். அதை விட அறளைபெயர்ந்த சங்கரி வேறை TBC அடசி BBC தமிழ் ஓசைக்கு ஒரு நீண்ட செவ்வியிலை விளங்கப்படுத்திறார்.

வேணும் எண்டா சொல்லுங்கோ லிங் தாறன் :P

அப்படியே காரைநகர் கடற்படைத் தளத்தை எப்படி வெற்றியாக தாக்குதல் நடத்தி முடித்தவை என்பதையும் சொல்லுங்கோ! அதிலே, முட்டாள்தனமாக பழைய பிரங்கியைப் பாவித்து குண்டு அடிக்கப் போய் அது வெடித்ததாமே!

என்னவோ, போராட்டத்தில் இணையவேண்டும் என்பதை நினைத்து இணைந்த இளையவர்களுக்கு சரியான வழி காட்டாமல் சாகடித்த பாவிகள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியே காரைநகர் கடற்படைத் தளத்தை எப்படி வெற்றியாக தாக்குதல் நடத்தி முடித்தவை என்பதையும் சொல்லுங்கோ! அதிலே, முட்டாள்தனமாக பழைய பிரங்கியைப் பாவித்து குண்டு அடிக்கப் போய் அது வெடித்ததாமே!

என்னவோ, போராட்டத்தில் இணையவேண்டும் என்பதை நினைத்து இணைந்த இளையவர்களுக்கு சரியான வழி காட்டாமல் சாகடித்த பாவிகள்!

அதுதான் அப்பொழுது பயணங்கள் முடிவதில்லை என்ற தென்னிந்திய தமிழ்த்திரைப்படத்தின் பெயர் சொல்லி அந்த இயக்கத்துக்குஅழைப்பார்கள்

Link to comment
Share on other sites

ஆஅ வாசிக்க ஆர்வமாக இருக்கு ஆனால் புரியவில்லை :lol:

Link to comment
Share on other sites

சாமி குடுத்தாலும் ஜயர் தரமாட்டேன் என்டெல்லோ சொல்லுறார்..

உவங்களுக்கு எங்கட பெடியள் தான் சரி.

Link to comment
Share on other sites

உங்கள் கருத்தை வரவேற்கிறேன் அஜீவன்...

புலிகளைத்தவிர மற்ற இயக்கங்ளுக்கெல்லாம் அதுதான் நடந்தது.

தலைமைகளின் பிளையான வழிகாட்டல்களால் எத்தனையோ எங்கட பெடியள் அநியாயமாய் வழிதவறினது தான் உண்மை.

இது மிக மிக வேதனையான நிகழ்வு தமிழ் வரலாற்றில்...

ஓ.கே... சும்மா ஒரு வேலைவெட்டி இல்லாமல் சனங்களிட்டை வசூல் பண்ணிக்கொண்டு ரோட்டால போறவாற பெட்டையளுக்கு விசில் அடிச்சுக்கொண்டு இருக்கிறதால தான் புளொட் மாதிரி இயக்கங்னளை சாப்பாடு பார்சல் எண்டு சொல்லுறவை...

உவைக்கெல்லாம் ஒரு மடம் திறந்து ஆயுதங்களை வேண்டி வச்சால் நல்லது...

செய்யிற கேவலமான வேலை எல்லாம் சென்சுபோட்டு அவைக்கு றெஸ்பெக்ட் வேற வேணுமாம்...அவைகெட்டகேட்டுக்க

Link to comment
Share on other sites

ஓம் அஜீவன்னீங்கள் சொல்வதில் ஓரளவு உண்மை இருக்கிறது.ஆனால் ப்லொட் இயக்கத்தால் சுழிபுரத்தில் விடுதலைப்புலிகளுக்கு சுவரொட்டினார்கள் என்பதற்காக இருபது மாணவர்கள் வெட்டிப்புதைக்கப் பட்டனர், இவ்வாறு முதல் முதலாகச் செய்த இயக்கத் தலமை தான் ப்லொட் இயக்கம்.இது நடந்து பல வருடங்களின் பின் தான் நீங்கள் சொல்லும் ஒரத்த நாடு கூட்டம் நடை பெற்றது.அதற்கு முன்னரே பலர் சித்திரைமுகாங்களில் கொல்லப் பட்டனர்.இவை இயக்கத்துக்கு வெளியாலயே மக்களால் அறியப்பட்ட நிகழ்வுகள்.இவை எவையுமே தெரியாது என்று சொல்லுவீர்களே ஆனால் , எனக்குத்தெரிந்தது கூட உங்களுக்கு தெரியாது என்பதை நம்ப மனம் இடம் தருகுதில்லை.

சில விடயங்கள் உங்களுக்கு உண்மயகவே தெரியாமல் இருந்திருக்கலாம்,ஆனால் நீங்கள் உங்கள் நிலையில் இருந்து எல்லாரையும் அவ்வாறே என்று கூற முடியாது.ஒரத்த நாடு கூட்டத்தின் பின் விலகியவர் தொகை என்ன?அதன் பின்னரும் இணைந்திருந்தவர் தொகை என்ன?இப்போதும் கூலிக்கு மாரடிப்பவர் எத்தினை பேர்?

உங்களில் எனக்கு மரியாதை இருக்கிறது, ஒரு வேகத்தில் நீங்கள் சென்றிருந்தீர்கள்.அதோடு நீங்கள் கோவூரின் உறவினர் என்றும் அறிகிறேன் அப்படியாயின், நீங்கள் ஒரு கேரளத் திராவிடர், நீங்கள் போரட்டத்தில் இணைந்தது வரவேற்க்கப் பட வேண்டிய விடயம்.இது அந்த நேரத்தில் எடுக்கப் பட்ட உங்களின் பிழையான முடிவுகளில் ஒன்றாக இருக்கலாம்,உங்கள் சூழ் நிலையில் உங்களுக்கு இயக்கங்கள் பற்றிய தெளிவு இல்லாது இருந்திருக்கலாம்.ஆனால் அவ்வாறு தான் எல்லாரும் என்று நீங்கள் கூறுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. நீங்கள் உங்களைப் போல் தான் மற்றவர்களும் என நம்பி ஏமாந்ததாக அண்மைய கனேடிய நிகழ்வுகள் சம்பந்தமாகவும் எழுதி இருந்தீர்கள்.

Link to comment
Share on other sites

அப்படியே காரைநகர் கடற்படைத் தளத்தை எப்படி வெற்றியாக தாக்குதல் நடத்தி முடித்தவை என்பதையும் சொல்லுங்கோ! அதிலே, முட்டாள்தனமாக பழைய பிரங்கியைப் பாவித்து குண்டு அடிக்கப் போய் அது வெடித்ததாமே!

என்னவோ, போராட்டத்தில் இணையவேண்டும் என்பதை நினைத்து இணைந்த இளையவர்களுக்கு சரியான வழி காட்டாமல் சாகடித்த பாவிகள்!

இந்தக் கதை எங்கட அப்பா அடிக்கடி சொல்லுறது

யாராவது ஒரு விடயத்தை எடுத்தா அதை தாங்களே செய்து முடிக்கவேணும் நடுவில சொதப்பிட்டு உதவி கேட்டா நேவிக் காம்பை ஈபி பிடிச்சமாதிரி எண்டு சொல்லுவார்

இது எங்கட ஊரில ஒரு பழமொழி மாதிரி ஆகிட்டு :P

Link to comment
Share on other sites

ஓம் அஜீவன்னீங்கள் சொல்வதில் ஓரளவு உண்மை இருக்கிறது.ஆனால் ப்லொட் இயக்கத்தால் சுழிபுரத்தில் விடுதலைப்புலிகளுக்கு சுவரொட்டினார்கள் என்பதற்காக இருபது மாணவர்கள் வெட்டிப்புதைக்கப் பட்டனர், இவ்வாறு முதல் முதலாகச் செய்த இயக்கத் தலமை தான் ப்லொட் இயக்கம்.இது நடந்து பல வருடங்களின் பின் தான் நீங்கள் சொல்லும் ஒரத்த நாடு கூட்டம் நடை பெற்றது.அதற்கு முன்னரே பலர் சித்திரைமுகாங்களில் கொல்லப் பட்டனர்.இவை இயக்கத்துக்கு வெளியாலயே மக்களால் அறியப்பட்ட நிகழ்வுகள்.இவை எவையுமே தெரியாது என்று சொல்லுவீர்களே ஆனால் , எனக்குத்தெரிந்தது கூட உங்களுக்கு தெரியாது என்பதை நம்ப மனம் இடம் தருகுதில்லை.

சில விடயங்கள் உங்களுக்கு உண்மயகவே தெரியாமல் இருந்திருக்கலாம்,ஆனால் நீங்கள் உங்கள் நிலையில் இருந்து எல்லாரையும் அவ்வாறே என்று கூற முடியாது.ஒரத்த நாடு கூட்டத்தின் பின் விலகியவர் தொகை என்ன?அதன் பின்னரும் இணைந்திருந்தவர் தொகை என்ன?இப்போதும் கூலிக்கு மாரடிப்பவர் எத்தினை பேர்?

உங்களில் எனக்கு மரியாதை இருக்கிறது, ஒரு வேகத்தில் நீங்கள் சென்றிருந்தீர்கள்.அதோடு நீங்கள் கோவூரின் உறவினர் என்றும் அறிகிறேன் அப்படியாயின், நீங்கள் ஒரு கேரளத் திராவிடர், நீங்கள் போரட்டத்தில் இணைந்தது வரவேற்க்கப் பட வேண்டிய விடயம்.இது அந்த நேரத்தில் எடுக்கப் பட்ட உங்களின் பிழையான முடிவுகளில் ஒன்றாக இருக்கலாம்,உங்கள் சூழ் நிலையில் உங்களுக்கு இயக்கங்கள் பற்றிய தெளிவு இல்லாது இருந்திருக்கலாம்.ஆனால் அவ்வாறு தான் எல்லாரும் என்று நீங்கள் கூறுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. நீங்கள் உங்களைப் போல் தான் மற்றவர்களும் என நம்பி ஏமாந்ததாக அண்மைய கனேடிய நிகழ்வுகள் சம்பந்தமாகவும் எழுதி இருந்தீர்கள்.

சாத்திரியார்

எனக்குத் தெரிந்ததெல்லாவற்றையும் நான் வெளியே சொல்ல வேண்டும்

என்ற மனோ நிலையில் நான் இல்லை.

அதற்காக மன்னிக்கவும்.

புதைத்த பிணத்தை தோண்டி எடுத்து

போஸ்மோட்டம் பண்ணுற மாதிரியான வேலை இது............

நடந்தது நடந்து முடிந்து விட்டது.

இனி நடப்பவை நல்லவையாக வேண்டும்.

நான் இந்தியாவில் இருந்த போது

அங்கிருந்த அனைத்து இயக்கங்களோடும்

நட்போடு வாழ்ந்தவன்.

1986ம் வருடம் .

தமிழ்நாட்டின் எக்மோரில் என்று நினைக்கிறேன்.

ஈரோஸ் அமைப்பு

world Univercity Centerல் அனைத்து இயக்கங்களையும்

ஒருங்கிணைத்த மாநாடு ஒன்று நடத்தியது.

அதில் அங்கம் வகித்ததுமட்டுமல்லாமல்

அந்த நிகழ்வுகளை ஒலி - ஒளிப்பதிவு செய்தேன்.

அங்கே எனக்கு ஒரு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

புளொட்டைத் தவிர

ஏனைய அமைப்புகளது நிகழ்வுகளை

ஒலி மற்றும் ஒளிப்பதிவு செய்ய வேண்டாம் என்று..........

இருந்தாலும் நான் அனைத்தையும் ஒலி - ஒளிப்பதிவு செய்தேன்.

அதை அவர்களால் கண்டு கொள்ள முடியவில்லை.

அப்போதைய அவர்களது அறிவு ...............

நான் கமராவில் கண்ணை வைத்தால்தான்

ஒளிப்பதிவு செய்ய முடியும் என்றும்

காதில் கெட்போண் (headphone) போட்டால்தான்

ஒலிப்பதிவு செய்கிறார்கள் என்றும் நினைத்த காலம்.

எமது நிகழ்வுகள் வரும் போது

எழுந்து நின்று ஒளிப்பதிவு செய்வேன்.

மற்றப்படி நான் கமராவை விட்டு

நாற்காலியில் அமர்ந்து விடுவேன்.

ஆனால் கமரா தொடர்ந்து ஒளிப்பதிவை செய்து கொண்டேயிருக்கும்.

அது போலவே

எமது நிகழ்வுகளை

ஒலிப்பதிவு செய்யும் போது

காதில் headphoneனை மாட்டிக் கொள்வேன்.

அடுத்த தலைவர்கள் பேசும் போது

headphoneனைத் தூக்கி

ரெக்கோடர் மேல் வைத்து விடுவேன்.

இருந்தாலும் ஒலிப்பதிவு நடக்கும்.

இக்காலம்

விடுதலைப் புலிகள்

சிறீ சபாரத்தினத்தைக் கொலை செய்த காலம்.

விடுதலைப் புலிகள் சார்பில் திலகரும்

டெலோ சார்பில் முதன் முதலாக செல்வமும்

பங்கு பற்றினார்கள்.

ஏனைய அமைப்புகளின் தலைவர்கள் அனைவரும்

சமூகமளித்தார்கள்.

இந் நிகழ்வு எனக்கு ஏனைய

தலைவர்கள் மற்றும் முக்கிய உறுப்பினர்களோடு

நெருக்கத்தை உருவாக்கியது.

அன்றும் வெளியில்

அனைத்து இயக்க போராளிகளோடும்

அன்பாய் பழகி வந்தேன்.

என்னை யாரும் கட்டுப் படுத்தவில்லை.

அதற்கு காரணம் உமா மகேஸ்வரன் அவர்கள்

என்னை சிங்கப்பூரில் இருந்து அழைத்து வந்ததே.

என் போக்கு

பலருக்கு பிடிக்கவில்லை.

காரணம் நான் எல்லோருடனும் சகஜமாகப் பழகுகிறேன்.

ஸ்டைலாகத் சுற்றித் திரிகிறேன் என்பதே............ :P

நான் தவறுகள் செய்யாததால்

நான் அப்படி நடந்து கொண்டேன்.

என் பேச்சு உமா அவர்களிடம் அன்று முதன்மை பெற்றது.

வெளியே வந்த பின்னர்

மரணத்தின் விளிம்பில் இருந்து தப்பிய

முறைகள் ஏராளம். :P

அன்று இயக்கங்களில் சேர்ந்தோர் தப்பி ஓட முயல்வது

தெரிந்தாலே சாவுதான்.

தப்பி ஓடிப் பிடிபட்டாலும் சாவுதான்.

வேறு இயக்கங்கள் கைகளில் மாட்டினாலும் சாவுதான்.

இன்றும்....................? :shock:

விபரம் புரிஞ்ஞா பேசுறீங்க சாமி? :P

அறிவீனர்களாக சிலர் பேசும் போது

இவர்கள் அடிப்படையே தெரியாதவர்கள்

என்பதும்

யாராவது சொல்வதைக் கேட்டு பேசுகிறார்கள்

என்பதும்

இயக்கமொன்றில் இருந்தவர்கள் இல்லை

அல்லது அடிமட்டத்தில் இருந்தவர்கள் என்றே எண்ணத் தோன்றும்

அதுதான் உண்மை.

தியாகி திலீபனின் சகோதரன் கூட என்னோடு இருந்தவன்.

அவனை சென்னை சென்றல் சிறையிலிருந்து

மீட்பதற்காக பல விடயங்கள் செய்தவன் நான்............

இப்படித் தொடரும்.........................

தந்தை செல்வா இறந்த போது கூட

அவர் வீட்டிலிருந்து

அவரை எரித்த இடம் வரை ஒளிப்பதிவு செய்தேன்.

அப்போதுதான் காசி மற்றும் இராஜதுரை பிரச்சனை

ஆரம்பித்தது.

"30வருடம் தந்தை செல்வாவுடன் வாழ்ந்த எனகக்கு

3 நிமிடம் பேசச் சொல்கிறர்கள்" என்ற வாசகத்தோடு

தொடங்கிய இராஜதுரையின் கணீர் குரல்.

அது அமீரின் அரசியல்.

தமிழர் விடுதலைக் கூட்டணி முஸ்லிம் காங்கிரசோடும்

மலையக காங்கிரசோடும் இணைந்து போட்டியிட்ட தமிழீழத்துக்கான தேர்தல் விஞ்ஞாபனத்தோடு முகம் கொடுத்த

தேர்தலின் போது கொழும்பு மற்றும் மலையகம் முழுவதும்

அருட் தந்தை காலஞ்சென்ற சிங்கராயர் அவர்களோடும்

தீப்போறி ஆசிரியர் அட்டனிசில் அவர்களோடும் இணைந்து

சிங்களத்தில் தமிழர் பிரச்சனைகளை உரத்துப் பேசிய குரல் என்னுடையது.

என்னை அரசியல் பேச என் பெரியப்பா அழைத்து

சிங்கப்பூரிலிருந்து இலங்கை வந்தேன்.

நான் இயக்கமொன்றில் இருந்த விடயம்

யாராலும் நம்ப முடியாததுதான்.

அதனால்தானோ என்னவோ

சுவிஸுக்கு வந்த புதிதில்

இவன் கொழும்பு அல்லது சிங்கப்பூர் என்றும்

இவனுக்கு என்ன பிரச்சனை

இவன் பொய்யாக அகதியாக

பதிய வந்துள்ளான் என போலீசுக்கு

கள்ள பெட்டிசன் எழுதினார்கள். :(

அப்போதெல்லாம்

நான் இப்படிப்பட்ட ஒரு சமூகத்துக்காகவா

உயிரை இழக்க வந்தேன் என்று

விசனப்பட்டதுண்டு.

இருந்தாலும் சொல்கிறேன்.

ஏனைய இயக்கங்களில் இருப்போரில் பலர்

உள்ளார்த்தமாக விடுதலைப் புலிகளை ஆதரிக்கிறார்கள்.

அல்லது

தமிழீழம் ஒன்று உருவாவதை விரும்புகிறார்கள்.

இருந்தாலும்

சிலரது லொல்லு பேச்சுகள் இருக்குதே

அதுதான் இன்னும் அவர்களை

நெருங்கவிடாமல் பண்ணுகிறது என்பது முற்று முழுதான உண்மை.

தமிழர் என்றால் விடுதலைப் புலிகள்

விடுதலைப் புலிகள் என்றால் தமிழர்கள் என்கிறீர்கள்.

அப்படியானால் ஏன் இன்னும்

பழசுகளை கிண்டி அவர்கள் மனதை வேதனைப்படுத்துகிறீர்கள்?

சாதியை ஒழிக்க வேண்டும் என்கிறீர்கள்.

ஆனால்

வார்த்தைக்கு வார்த்தை

பார்ப்பனியத்துக்கு எதிராகப் பேசுகிறீர்கள்?

அப்போ நீங்கள் என்ன

உங்களை தலித்துகள் என்று

முத்திரை குத்திக் கொள்கிறீர்களா?

அல்லது

அதை வைத்து பிழைப்பு நடத்துகிறீர்களா?

புலம் பெயர் நாடுகளில்

உங்களால் உருவாக்கப்பட்ட ஆலங்களில்

பார்ப்பனர்கள்தான் பூஜை செய்கிறார்கள்.

அதை ஒழுங்கு செய்தவர்களே நீங்கள்தானே?

ஏன் இன்னொரு நாட்டு அரசியல் தன்மைகளை

அரிதாரமாக்கிக் கொள்கிறீர்கள்?

தேவையற்ற நாற்றங்களை நுகராமல்

தேவையான நறுமணத்துக்கு எப்போது

முக்கியத்துவம் கொடுப்பீர்கள்?

அன்றுதான் நீங்கள் ஒட்டு மொத்த தமிழர் மனங்களை வென்று நட்புகளை தனதாக்கிக் கொள்வீர்கள்!

இத்தோடு எனது அரசியல் முற்றுப் பெறுகிறது.

நன்றி - வணக்கம்.

Link to comment
Share on other sites

எனக்கும் அஜீவனை (சுவிஸ் தமிழன், பூர்வீகம் கொழும்பு) கோயிலிலை பூசை செய்யவிட ஆசைதான். நான் கோயில் கட்டிற அளவிற்கு முன்னேறினா உந்த பிராமணர்களை விட்டுட்டு உங்களை தான் கூப்பிடுவன் கவலைப்படாதேங்கோ. :(

Link to comment
Share on other sites

அஜீவன் நான் எழுதியதிற்கும் உங்களின் பதிலுக்கும் சம்பந்தம் இருபதாகத்தெரியவில்லை. நான் உங்களிடம் சொல்வதெல்லாம் உங்கள் ஒருவரின் நிலையில் இருந்து மட்டும் ப்லொட்டின் வரலாற்றை எழுதாதீர்கள் என்பதைத்தான்.இங்கு நீங்கள் சில பழயவிடயங்களைக் குறிப்பிட்டதால் தான் அவை பற்றி எழுத வேண்டி வந்தது.வரலாற்றுத் திருபு என்பது ஒவ்வொருவர் பார்வையில் இருந்து ஏற்படுகிறது. நான் இருந்த இயக்கம் அது அப்படி இல்லை என்று எழுதுவது எவ்வளவு சரியானது என்று நினைதுப் பாருங்கள். நீங்கள் சொல்லும் லொல்லு ,உங்களிடமே இருப்பதை நீங்கள் காணவில்லையா.

நீங்கள் சொன்ன நிகழ்வு ஈழப் புரட்ச்சி அமைப்பின், மாணவர் அமைப்பினால் அனைத்து இயக்கங்களினதும் மாணவர் அமைப்புக்களையும் ஒருங்கு படுத்தி உலக பல்கலைக் கழக மண்டபத்திலும் ,எக்மூரிலும் நடை பெற்றது.அங்கு நானும் இருந்தேன்.

மற்றது சாதியம் பற்றிக் குறிபிட்டீர்கள்,ஒன்றை இருக்கு என்று சொன்னால் தான் அதனை மறுதலிக்க முடியும்.இது பற்றி பல தலைப்புக்களில் ஏற்கனவே விவாதித்து விட்டாயிற்று.மீண்டும் வேண்டாம்.கோவில்கள் அட்சகர் பற்றி சபேசன் நல்ல ஒரு பதிவை இட்டுள்ளார் அதுவும் ஏற்கனவே களத்தில் இருக்கு,இதில புதிசாச்சொல்ல ஒண்டும்கிடயாது.

மேலும் நான் சாத்திரியார் கிடையாது, உண்மயான சாதிரியாருக்கு அவருக்கு இப்ப கோவம் வரப் போகுது.

எனக்கு மட்டும் தான் வரலாறு தெரியும் எண்டும் நான் சொல்லுறது தான் வரலாறு எண்டும் நான் சொல்ல இல்லை.ஆனா எனக்கு தெரின்சதையே சிலர் பிழையாச் சொன்னா அதைச் சுட்டிக் காட்டுற உரிமை எனக்கு இருக்குத் தானே.

Link to comment
Share on other sites

மன்னிக்கவும் நீங்க இங்க கதைக்கிற பல விடயம் எனக்கு தெரியாதுதான்

ஆனால் எனது மனதில புலிகளை தவிர வேறு இயக்கங்களில இருந்தவை எண்டாலே அலர்ஜி (எனது பெரிய தந்தையின் மகன் ஒருவரை தவிர அவரும் புளட்டில இருந்தவர் 1988 இல அதிலிருந்து விலகி தற்போது வெளிநாடொன்றில வசிக்கிறார்)

காரணம் இந்தியன் ஆமி காலத்தில மற்ற இயக்கத்தவர் நடந்து கொண்ட முறை அன்ட்கொழும்பில நான் வசித்த போது பார்த்த சில சம்பவங்கள்

இப்ப அஜீவன் அண்ணா எழுதுறதை பார்த்தால் அவர்கள் எல்லாரும் கெட்டவர்களோ தமிழ் துரோகிகளோ இல்லை என்ற விளக்கம் கிடைத்தது

நன்றி அஜீவன் அண்ணா

Link to comment
Share on other sites

எனக்கும் அஜீவனை (சுவிஸ் தமிழன், பூர்வீகம் கொழும்பு) கோயிலிலை பூசை செய்யவிட ஆசைதான். நான் கோயில் கட்டிற அளவிற்கு முன்னேறினா உந்த பிராமணர்களை விட்டுட்டு உங்களை தான் கூப்பிடுவன் கவலைப்படாதேங்கோ. :D

நான் நாஸ்திகவாதியாச்சே :P

Link to comment
Share on other sites

அஜீவன் நான் எழுதியதிற்கும் உங்களின் பதிலுக்கும் சம்பந்தம் இருபதாகத்தெரியவில்லை. நான் உங்களிடம் சொல்வதெல்லாம் உங்கள் ஒருவரின் நிலையில் இருந்து மட்டும் ப்லொட்டின் வரலாற்றை எழுதாதீர்கள் என்பதைத்தான்.இங்கு நீங்கள் சில பழயவிடயங்களைக் குறிப்பிட்டதால் தான் அவை பற்றி எழுத வேண்டி வந்தது.வரலாற்றுத் திருபு என்பது ஒவ்வொருவர் பார்வையில் இருந்து ஏற்படுகிறது. நான் இருந்த இயக்கம் அது அப்படி இல்லை என்று எழுதுவது எவ்வளவு சரியானது என்று நினைதுப் பாருங்கள். நீங்கள் சொல்லும் லொல்லு ,உங்களிடமே இருப்பதை நீங்கள் காணவில்லையா.

நீங்கள் சொன்ன நிகழ்வு ஈழப் புரட்ச்சி அமைப்பின், மாணவர் அமைப்பினால் அனைத்து இயக்கங்களினதும் மாணவர் அமைப்புக்களையும் ஒருங்கு படுத்தி உலக பல்கலைக் கழக மண்டபத்திலும் ,எக்மூரிலும் நடை பெற்றது.அங்கு நானும் இருந்தேன்.

மற்றது சாதியம் பற்றிக் குறிபிட்டீர்கள்,ஒன்றை இருக்கு என்று சொன்னால் தான் அதனை மறுதலிக்க முடியும்.இது பற்றி பல தலைப்புக்களில் ஏற்கனவே விவாதித்து விட்டாயிற்று.மீண்டும் வேண்டாம்.கோவில்கள் அட்சகர் பற்றி சபேசன் நல்ல ஒரு பதிவை இட்டுள்ளார் அதுவும் ஏற்கனவே களத்தில் இருக்கு,இதில புதிசாச்சொல்ல ஒண்டும்கிடயாது.

மேலும் நான் சாத்திரியார் கிடையாது, உண்மயான சாதிரியாருக்கு அவருக்கு இப்ப கோவம் வரப் போகுது.

எனக்கு மட்டும் தான் வரலாறு தெரியும் எண்டும் நான் சொல்லுறது தான் வரலாறு எண்டும் நான் சொல்ல இல்லை.ஆனா எனக்கு தெரின்சதையே சிலர் பிழையாச் சொன்னா அதைச் சுட்டிக் காட்டுற உரிமை எனக்கு இருக்குத் தானே.

நீங்கள் தவறென்பதில்லை சாத்திரி........

உங்கள் மனம் புண்பட ஏதாவது இருந்தால் மன்னிக்கவும்.

பொதுவாகவே எழுதினேன்.

நமது இன்றைய தேவை

நமது மக்கள் ஒரு விடிவை எட்ட வேண்டும் என்பதே!

ஆகவே குறிக்கோள் திசை மாறக் கூடிய கருத்துகள்

பலரை குளப்பும்.

எனவேதான் கவனமாக இருக்க எழுதினேன்.

வேறு ஒன்றுமில்லை.

Link to comment
Share on other sites

மன்னிக்கவும் நீங்க இங்க கதைக்கிற பல விடயம் எனக்கு தெரியாதுதான்

ஆனால் எனது மனதில புலிகளை தவிர வேறு இயக்கங்களில இருந்தவை எண்டாலே அலர்ஜி (எனது பெரிய தந்தையின் மகன் ஒருவரை தவிர அவரும் புளட்டில இருந்தவர் 1988 இல அதிலிருந்து விலகி தற்போது வெளிநாடொன்றில வசிக்கிறார்)

காரணம் இந்தியன் ஆமி காலத்தில மற்ற இயக்கத்தவர் நடந்து கொண்ட முறை அன்ட்கொழும்பில நான் வசித்த போது பார்த்த சில சம்பவங்கள்

இப்ப அஜீவன் அண்ணா எழுதுறதை பார்த்தால் அவர்கள் எல்லாரும் கெட்டவர்களோ தமிழ் துரோகிகளோ இல்லை என்ற விளக்கம் கிடைத்தது

நன்றி அஜீவன் அண்ணா

நன்றி நித்திலா..............

உங்களைப் போல பலர் இருக்கிறார்கள்.

நாம் நம் வீட்டுக்குள் இருக்கும் உறவையே திருடர்களாகப் பார்க்கிறோம்.

அது பாவம் நித்திலா.

நான் கனடாவில் என் நண்பன் வீட்டில்

தங்கியிருந்தேன்.

அவன் முன்னர் புளொட்டில் இருந்தான்

அவனும் நாஸ்திகன்தான்.

அவன் வீட்டில் அவன் குடும்ப புகைப்படத்தை தவிர

எதுவுமே என் கண்களுக்கு முதலில் படவில்லை.

ஆனால் அவன் எனக்கு தூங்கத் தந்த

படுக்கை அறையில் பிரபாகரனின்

ஒரு பெரிய புகைப்படம் பிரேம் பண்ணப்பட்டு

மாட்டி வைக்கப்பட்டிருந்தது.

பிரபாகரனின் படத்தை பார்த்து விட்டு

நான் அவன் முகத்தை பார்த்தேன்.

"பிரபாகரன் இல்லாத ஒரு தமிழீழமொன்றை

நினைத்தே பார்க்க முடியாதென்றான்."

அது முற்று முழுதான உண்மை என்றேன்.

மாற்று இயக்கத்தில் வாழ்ந்தவர்களுக்குள் கூட

பிரபாகரன் மேல் நம்பிக்கை இருப்பது

வியப்பான விடயம்.

சிலர் பேசும் வார்த்தை பிரயோகங்கள்

அப்படியானவர்களை கூட மீண்டும் திசை மாற்றி விடும்

எனும் பயம் எனக்குள் உண்டு.

பலம் வாய்ந்தவர்கள்தான்

பலம் அற்றவர்களை நம்பிக்கையோடு

வாழ வழி கோல வேண்டும்.

நம்பிக்கையை உருவாக்க வேண்டும்.

பலமற்றவர்கள் நம்பிக்கையாய் நடப்பதென்பது

ஒருவன் தன்னால் முடியாத பட்சத்தில்

மற்றவன் கீழ் அடிமையாகி வாழத் தலைப்படுகிறான் என்பதே!

இங்கே உண்மை கிடையாது.

அது போலி....................

யாழ் கோட்டையை பிடிக்கும் தருணத்தில்

அனைத்து இயக்கங்களும் தம்மால் ஆன

சிறிய பங்களிப்பையாவது வழங்கியது உண்மை.

அதை ஏன் ஏற்றுக் கொள்ள மறுக்கிறோம்?

ஈகோவா?

இதில் என்ன குறைந்து விடப் போகிறது?

புலிகள் தாக்குதல் நடத்தும் போது

ஏனைய இயக்கங்கள்

அவர்களது தாக்குதலை முறியடிக்க

சிறீலங்கா படைகளோடு சேர்ந்திருந்து

அவர்களுக்கு உதவியிருந்தால்

நிச்சயம் அத் தாக்குதல் தோல்வி கண்டிருக்கும்

என்றே கருதுகிறேன்.

அன்று அனைத்து இயக்கங்களும் ஏதோ ஒரு வகையில்

யாழில் நிலை கொண்டிருந்தது.

பலமானவர்கள் யார்?

பலவீனமானவர்கள் யார் என்பதல்ல பிரச்சனை?

நாங்கள் தோற்றுவிடக் கூடாதென்பதில்

அனைவரும் ஏதோ ஒரு வகையில் பங்களிப்பு

செய்திருக்க வேண்டும்

அல்லது

காட்டிக் கொடுப்புக்கு முன் வராமல் இருந்திருக்க வேண்டும்.

இந்த ஒற்றுமை போற்றற்குரியது.

இது தர்க்கரீதியாக (லாஜிக்காக) சிந்திக்க வேண்டிய உண்மை.

இன்றைய நிலை?

அரசோடு போராடும் அதே சமயம்.

பிரிந்து நிற்கும் ஒரு சாராரோடும் போராட வேண்டியிருக்கிறது.

இது சிறிதளவிலாவது ஒரு பின்னடைவுதானே?

இல்லாவிட்டால் ஏன் அவர்களது ஆயுதங்களை களையுங்கள் என்கிறோம்?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.