Jump to content

மலர்ந்தும் மலராத……………………


Recommended Posts

கதையும் கதைக்கான படங்களும் அழகு தொடருங்கள்.

 

வரவிற்கும் கருத்திற்கும் நன்றி சாத்திரி .

Link to post
Share on other sites

பகிர்வுக்கு நன்றி....மனசுக்கு கொஞ்சம் கவலையைத் தந்தாலும் இப்படியான பிள்ளை தான் பிறக்கப் போகிறது என்று தெரிந்து கொண்டால் அதற்கு உடனடியாகவே அடுத்த கட்ட நடிவடிக்கை எடுப்பதே சிறந்தது...புரிந்துணர்வோடு செயல் பட்ட தந்தையாருக்கு நன்றிகள்...பிள்ளை இல்லையே என்ற ஒரு கவலை தான் அவர்களை உறுத்தும்...அல்லது வைத்தியரின் அறிவுரையினை பின்பற்றி ஆரோக்கியமான குழந்தையை பெற்றுக்கொள்ளும் முயற்சியை செய்யலாம்...

 

உடல்,உள ஆரோக்கியம் இல்லாத ஒரு பிள்ளை பெற்று விட்டு தாங்களும் கஸ்ரப்பட்டு பின்னர் பிள்ளையையும் உடலளவில்,மனதளவில் கஸ்ரப்பட வைக்காமல் இருப்பது சிறந்த வழி.இதை ஒவ்வொரு பெற்றோரும் உணர்ந்து கொள்ள வேண்டும்...ஒரு குறிப்பிட்ட காலத்தின் பின் இப்படியான குறை பாடுகளுடன் பிறப்பவர்கள் அனுபவிக்கும் கஸ்ர,நஸ்ரங்கள் ஏராளம் என்று சொல்லலாம்...

கூடப்பிறந்தவர்களால்,உறவுகளால் ஊதாசீனப்படுத்தபட்டு வளரும் பிள்ளைகளாகவே இருப்பார்கள்..தங்கள் முயற்சியில் முன்னேறினாலும் அதில் கூட குழப்பத்தை விழைவிப்பார்கள்..ஆகவே இனிவரும் காலத்திலாவது பெற்றோர் (espicially disablity child) விடையத்தில் கொஞ்சம் கவனம் எடுத்துக் கொள்ளவேணும்.

 

உங்கள் கருத்துக்களில் ஒருசிலதுடனே என்னால் உடன்படமுடிகின்றது . இந்தக்கதை எழுதுவதற்கு எனக்கு இரண்டு சம்பவங்கள் உந்து சக்தியாக இருந்தன . ஒன்று தற்செயலாகப் பார்க நேரிட்ட " அஞ்சலி " படம் . இரண்டவாது எனது உயிர் நண்பனுக்கு  திருமணமாகி இரண்டுவருடத்தில்  இது நடந்தது . அவனது மனைவி  நான்பார்க்க ஊரில் வளர்ந்தவள் . இருவருக்கும் பிறென்ஜ் சரளமாக கதைக்கத் தெரியாது . நானே அவளிற்கு மொழிபெயர்புகளுக்கு செல்லவேண்டியதாக இருந்தது  . ஒருகட்டத்தில் டொக்ரர் இதைச் சொன்னபொழுது அவளை என்னால் கட்டுபடுத்த முடியாமல் போய்விட்டது . பின்பு எனது அறிவுரைகளால் அவள் அரைமனதுடன் சம்மதித்தாள் . ஆனால் அந்த சம்பவம் என்னை உறுத்தியபடியே இருந்தது . ஏனெனில் அஞ்சலியில் அந்தக்குழந்தையை அதன் தாயால் வசதிகள் குறைந்த நாட்டில் பார்க்க முடிகின்றது என்றால் ஏன் வசதிவாய்ப்புகள் உள்ள நாட்டில் இப்படியான உயிர்களை காப்பாற்ற தயங்குகின்றோம் ??? வேலைவாய்பிலும் கல்வியிலும் , மற்றும் எல்லாவிடயத்திலும் சரிசமனாக நடத்தும் நாடுகளில் இருந்துகொண்டு எமதுவசதிக்காக இப்படியான கருணைக்கொலையைச் செய்யலாமா ???? முடிவுகளை உங்களைப்போன்ற வாசகர்களதான் சொல்லவேண்டும் . நன்றி .

 

Link to post
Share on other sites

பல இல்லங்களில் நடந்த உண்மைக்கதை இது ....எழுத்துருவில் வடிவமைத்த கோமகனுக்கு என் வாழ்த்துக்கள்.

 

கதை என்பது வானத்தில் இருந்து குதிப்பவை அல்ல . எம்மைச்சுற்றி அன்றாடம் நடக்கின்ற சம்பவங்களே கதைகளாகின்றன .  உங்கள் நேரத்திற்கும் கருத்துகளிற்கும் மிக்க நன்றிகள் குமாரசாமி அண்ணை .

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

எப்படி கருத்தினை பதிவது என்றே தெரியவில்லை மிக அழகான  கொஞ்சம் கூட தளம்பாத எழுத்து நடை நகர்வு, கதையின் கருவினை நகர்த்திய விதம் எல்லாவற்றையும் விட சில சொற்கள் .....உதாரணம் பதியம் ......... அருமை ஐயா தொடருங்கள் காத்திருக்கிறேன் அடுத்த படைப்பிற்காக

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

நான் உங்கள் கதைக்கு கருத்தெழுதிவிட்டு அனுப்ப மறந்துவிட்டேன். இன்றுதான் நினைவு வந்தது. கதை நன்றாக இருக்குக் கோமகன்.

Link to post
Share on other sites

கதையும் பாத்திரப்படைப்பும் எழுத்து நடையும் படங்களும் மிகவும் நன்றாக உள்ளன. பாத்திரங்களின் மனஉணர்வுகளை மிகவும் யதார்த்தமாக எடுத்து வந்துள்ளீர்கள். பாராட்டுக்கள் கோமகன்.

 

உங்கள் வரவிற்கும் கருத்துக்கும்  மிக்க நன்றிகள் காவலூர் கண்மணி அக்கா .

Link to post
Share on other sites

இந்த மலர்ந்தும் மலராத மலரில் தங்களது நேரத்தையும் கருத்துக்களையும் பதிந்த கள உறுவுகளான அலைமகள் , ரதி அக்கா , தப்பிலி neethimathi , வந்தியதேவன் , மைத்திரேயி , விசுகு , nunavilan , நேற்கொழு தாசன் , மெசொபொத்தேமியா சுமேரியர் ஆகியோருக்கு எனது தலைசாய்கின்றது  . நேரப்பற்றாக்குறை காரணமாக தனித்தனியாக ஒவ்வொருவருடனும் கருத்தாட முடியாமைக்கு வருந்துகின்றேன் .

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.