Jump to content

பிப்டி கலிபர்


Recommended Posts

050119f0000w001.jpg

 

 

 

எனக்கு இப்பவும் ஞாபகம் இருக்கு நான் முதன் முதலாக அதை பார்த்தது.

 

நந்தாவில் அம்மன் கோயிலுக்கு பின்பக்கமாக அமைச்சிருந்த சொர்ணம் அண்ணை ஆட்களிண்ட தொடர் முகாம்களுக்கு குண்டு வீச எண்டு வந்த சியாமளா செட்டி சீ ..... சியாமா செட்டி எண்டு சொல்லுற, இரண்டாம் உலகமாக யுத்தத்திலே கழிச்சுவிட்ட பொம்மர் பதிஞ்சு குண்டை போட்டுவிட்டு எழும்பும் போது தான் அதை கொண்டு வந்து அடிச்சாங்கள்.

ஒரு பிக்கப் வாகனத்திலே பின்னுக்கு பூட்டிவைச்சிருந்தாங்கள். அதை அடிச்சு பொம்மருக்கு படுகுதோ இல்லையோ அந்த

காலத்திலேயே எப்படியும் படும் என்று நம்பிக்கை என்னை போன்ற "சின்ன பெடியங்களுக்கு" இருந்தது.

 

டட் ..டட் டட் ...டும் டும் டும் .... சத்தம் அப்போ எங்களுக்கு நாடு கிடைச்சிடும்போல இருக்கும். எங்களுக்கு

மட்டும் இல்லை, எங்க ஊர் கிழடுகளும் சொல்லுங்கள், பெடியள் பிப்டியோட வந்திட்டாங்கள் இனி பொம்மர்காரன் துலைஞ்சான் என்று.

கேட்க கேட்க எப்படியும் பிப்டி கலிபரை ஒரு நாள் எண்டாலும் சுடவேணும் எண்ட ஆசை எனக்கு அப்பவே வந்துவிட்டது.

 

இயக்க அண்ணாமார் பிப்டியை கொண்டு வந்து அடிச்சால் நாங்கள் உடனே அந்த இடத்துக்கு ஓடி போயிடுவோம். சுட்டு முடிய விழுகிற வெறும் கோதுகளை பொறுக்க. அந்த காலத்திலேயே முத்திரை சேர்க்கிற மாதிரி இப்படி சன்னங்களின் கோதுகளை சேர்க்கிறதும் ஒரு பொழுதுபோக்குதான்.A.K செப்பு கலர் கோதுகள், 9 mm பிஸ்டல் கோதுகள் சேர்த்து வைச்சிருந்தாலும் பிப்டி கோதுகளுக்கு ஒரு மரியாதை இருந்தது. ஒரு பிப்டி கோதுக்கு ஐந்து A.K கோதுகள் தான் அப்போதைய பண்டமாற்று நிலவரம்.

 

 
பின்னர் ஒரு நாளில் கோட்டை பகுதியில் கப்டன் ஹீரோராஜ் பிப்டி கலிபர் வைச்சு சியாமா செட்டியை விழுத்தினபோது, பிப்டியிலே எனக்கு இருந்த ஆசை கூடிவிட்டது.
 
அது ஒரு காலம்.
 
 
 
 
 

மகாதேவாவின் வகுப்பில் பென்சீனை பற்றி படிச்சு கொண்டிருக்கும் போது ஜவான் அண்ணை ஒரு காலை தாண்டியபடி வகுப்புக்குள் நுழைந்தார். மகாதேவா மாஸ்டர் மெல்ல கழற எங்களுக்கு விளங்கிட்டுது. இயக்கம்பங்கர் வெட்ட ஆட்களை கொண்டுபோக போறாங்கள் எண்டு. அதுவரைக்கும் பெட்டைகளுக்கு கடலை போட்டுகொண்டிருந்தநானும் இன்னும் இரண்டு நண்பர்களும் வாசலை நோக்கி ஓட அங்கயும் இரண்டு பேர்நிண்டாங்கள். சரி பின் வேலிக்குள்ளாளே ஓடுவம் என்றால் அதிலையும் ஒருத்தன்.இண்டைக்கு துலைஞ்சம்டா என்று நினைக்கும்போது தான் கிணறு ஞாபகம் வந்தது. டியுசன் ஆட்கள் வந்து போறதால பாதி மூடின கிணறு.ஒருத்தருக்கும் தெரியாமல் நானும் பாலாவும் அதுக்குள்ளே இறங்கி

ஒளிசிருந்தோம்.

எல்லாரும் போயிட்டாங்கள் என்பதை சத்தத்தை கொண்டு உறுதி செய்துவிட்டு மெல்ல மெல்ல படியேறி வெளியிலே வரவும், வாகன சாவியை விட்டிட்டு போயிட்டேன் என ஜவான் அண்ணை கிணத்தடி பக்கம் வரவும் சரியாக இருந்தது. பிறகு

என்ன நாங்களும் கூட்டத்தோட கூட்டமா வானிலே சண்டிலிப்பாயை நோக்கி பயணம்.

 வானுக்குள்ளே இடம் இல்லை என்று நாங்கள் வானுக்கு மேலே ஏறி இருந்தம்.கை சும்மா இருக்குமா, ரோடிலே இருக்கிற மரங்களிலே குழைகளை முறிச்சு, போற வாற பெட்டைகளுக்கு எறிஞ்சம். வான் டிரைவர் அண்ணைக்கு  எப்படி தெரிஞ்சுதோ தெரியவில்லை, தாவடி சந்தியிலே வைச்சு கிளுவந்தடி முறிச்சு சக்கை அடி எங்களுக்கு. அது

மட்டுமில்லை எங்களை கொண்டு போய் இயக்கதிண்ட கட்டவுட்டுக்கு கிட்டே பங்கர் வெட்ட விட்டுவிட்டான். இரவு முழுக்க வெட்டி விடியத்தான் போகலாம் எண்டான்.

 

அப்போ முன்னேறிப் பாய்தல் இராணுவ நடவடிக்கை நடந்துகொண்டிருந்தது. ஆமி சண்டிலிப்பாய் சந்தியிலே நிண்டவன். இயக்கம் சீரணி கோயிலுக்கு பின்பக்கம் தொடக்கம், கட்டுடை -  நவாலி வீதியிலே கட்டவுட் போட்டு நிண்டது.

 

 கட்டுடை சந்தியிலே இருந்து ஆள் உயரத்துக்கு மூவிங் பங்கர் வெட்டுறோம். நவாலி வீதியிலே ஒரு தொடர்ச்சியான பங்கர். பின்னேரம் நாலுமணிக்கு தான் ஒரு சோத்து பாசல் கொண்டுவந்து தந்தாங்கள். அங்கெ நிண்ட இயக்க பெட்டைகளுக்கு 

ஒரு எறியல் விட்டு கொண்டு வெட்டி முடிச்சோம். இருட்டின உடனே விடுவாங்கள் எண்டு நினைச்சு கடைசி மணித்தியாலம் கொஞ்சம் வெட்டுற மாதிரி பேய்க்காட்டினோம்.

மணி ஆறரை ஆச்சு எங்களை ஏத்தி கொண்டு போறதுக்கு வாகனமும் வரவில்லை.  சென்றி மாறி சண்டை டீம் வேற வந்திட்டுது. சொர்ணம் அண்ணையிண்ட ஆட்களாம். ஆட்கள் நல்ல உருப்படியா உருண்டு திரண்டு இருந்தாங்கள். டே

வாங்கடா ஒரு பிப்டி பொசிசன் அடிக்க வேணும் எண்டு சொன்ன போது தான் விளங்கிச்சு இவங்கள் இண்டைக்கு என்னை விடமாடான்கள் என்று.

அவங்களிலே ஒருத்தன் இடம் காட்டுறன் எண்டு எங்களிலே நாலு பேரை கூட்டி கொண்டு போனான். சீரணி சந்திக்கும் கட்டுடை சந்திக்கும் இடையிலே ஒரு சணல் வெளி. சணல் வெளி முடிய ஒரு கல் வீடு. அதுக்கு நல்ல சீமேந்தாலே சுத்து

மதில்.

அந்த மதிலுக்கு பின்னாலே மண் மூட்டைகள் செய்து அடுக்கி, மதிலே ஒரு சின்ன ஓட்டை போட வேணும். அதுகுள்ளாலே பிப்டியை வைச்சு முன்னேறுகிற ஆமிக்கு அடிப்பாங்களாம். எப்படி மதிலே ஓட்டை போடுறது என்று பின் மதிலிலே செய்து காட்டினான். அந்த மதில் பூசி முடிக்கவில்லை. கல்லை வைச்சு சீமெந்து பூசின அடையாளம் அப்படியே தெரியும். அந்த பூசின இடங்களிலே மூலைகளில் அலுவாங்கால் நாலு தட்டு தட்டுறது, பிறகு கல்லுக்கு ஒரு இடி அவ்வளவு தான் மதில் இருக்க கல்லு கழறும்.
 
நாங்கள் முதல்ல மண் மூட்டைகளை செய்து அடுக்கினோம். கடைசியாக மதில்ல ஓட்டை போடுவம் என்று. வீட்டுக்குள்ளே பிப்டியை கழட்டி ஒயில் போட்டு கழுவினான்கள். எங்கையோ தூரத்திலே இருந்து பார்த்த பிப்டி இப்போ கண்ணுக்கு

முன்னாலே.

 அண்ணே ஒருக்கா தொட்டு பார்க்கலாமோ.?

 

பாருங்கடா..

 

ஆசை தீர தடவி பார்த்து கொண்டேன். அதன் பரல்கள் , சொடுக்கி , ரவைகள் , எல்லாமே நாங்கள் தொடும் தூரத்தில்.     

அவ்வளவு வேலை செய்து களைப்பு இருந்தாலும் ஒரு இனம்புரியாத சந்தோசம். நாளைக்கு வகுப்பிலே பிப்டியை தொட்ட கதையை சொன்னால் நாலு சரக்குகள் ஆவெண்டு கேக்குங்கள்.

 

இரவு ஒரு மணி இருக்கும் மண் மூட்டை அடுக்கி முடிய. இனி கல்லு கழட்டுற வேலை தான். நாலு மூலையிலும் நாலு தட்டு அலுவாங்காலே தட்டி போட்டு கல்லுக்கு ஒரு இடி இடச்சேன். கல்லு கழறுவதற்கு பதிலாக அப்படியே மதில் பாறி விழுந்திட்டுது. வந்து பார்த்த பொறுப்பாளர் நாய் படா பேச்சு. இதை நம்பித்தான் விடிய சண்டையே இருக்கு.

விடியிற துக்குள்ளே மதில் இருந்த இடம் எல்லாம் மண் மூட்டை இருக்க வேணும்.

 

எங்களுக்கு வேற என்ன கதி, விடியும் மட்டும் உரபாக்குள்ளே  மண்ணை நிரப்பி, மதில் இருந்த இடத்தை அடைச்சது தான் வேலை. ஆமிக்காரன் கூட விடிய எழும்பி பார்த்து திகைக்க போறான், என்னடா சுவர் இருந்த இடத்திலே மண் மூட்டை

எண்டு.

அஞ்சு மணி இருக்கும் எல்லாம் சரிபடுத்தி முடிய. செம பசி. ஒரு தென்னையிலேயிலே ஏறி முட்டுக்காய் இளனியை புடுங்கி, சனம் விட்டிட்டு போன தேசிக்காயும் முட்டையும் உடைச்சு இளனிகுள்ளே விட்டு ஒரே அடி.

அந்த களைப்பிலே வீட்டுக்குள்ளே  வந்து கோலிலே அடிச்சு போட்ட மாதிரி நித்திரை.

 

 நாங்கள் அடிச்சு கொடுத்த பங்கருக்குள்ளே இருந்து பிப்டி முழங்கும் போது நித்திரையால் திடுக்கிட்டு எழும்பினால், கூழ் முட்டையோ என்னமோ வயித்தை ரொம்பவே கலக்கிச்சு.
 
வயித்தை பிடிச்சுக்கொண்டு அங்கே ஓடி இங்கே ஓடி கடைசியா ஒரு தென்னம்பாத்திக்கு பக்கத்திலே குந்தினோம்.

  

ஒரு பக்கம் நிஜ பிப்டி முழங்க எங்கட பிப்டியும் முழங்க தொடங்கியது.
 
டட் ..டட் டட் ...டும் டும் டும் ....
 
நண்பன் முதுகிலே தட்டி போட்டு சொன்னான் 
 
மச்சான் இனி  ஈழம் கிடைச்சிடும்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

M63_aa-mount.gif

 

நாங்க கிட்டு மாமாட ஆக்கள்.. பிப்ரியை பிக்கப்பில பூட்டி  கோம்பையன் மணல் பகுதியில்.. வைச்சு லேசர் புள்ளட் போட்டு..வெளவால் சுட்டு பழகேக்கையே.. கண்டிருக்கிறம்..! அப்புறம் அடிக்கடி யாழ் நகர் மீதான ஹெலி தாக்குதலுக்கு பதிலடியாக பிப்ரி பாவிக்கப்பட்ட போதும் கண்டிருக்கிறோம்.

 

உங்கள் அனுபவப் பகிர்விற்கு நன்றி.  :icon_idea:

Link to comment
Share on other sites

சியாமா செட்டி இத்தாலிய தயாரிப்பு குண்டு வீச்சு விமானம்.  முதன் முதலாக தாவடிப் பகுதியில் இருந்த புலிகளின் தும்பு தெழிற்சாலையை குறிவைத்து தாக்குதலை நடத்தியிருந்தார்கள்.ஆனால் குண்டுகள் இணுவில் கொக்குவில் என பரவலாக விழுந்திருந்தது பல பொதுமக்கள் இறந்திருந்தார்கள்.  அதில் புலிகள் அமைப்பை சேர்ந்த ஒருவர் கொல்லப் பட்டிருந்தார். பெயர் நினைவில் இல்லை.இலங்கையில் முதலாவது குண்டு வீச்சு தாக்குதலும் இதுதான். அடுத்ததாக 50 கலிபர் இந்தியா முதன் முதலாக பழுதடைந்து ஒன்றையும் சில நூறு ரவைகளையும் தந்திருந்தார்கள். அதனை  நந்தாவில் அம்மன் கோயில் பின் பக்கமாக  வைத்து அதற்கு குளை  எல்லாம் கட்டி உருமறைப்பு செய்து  பிக்கப் பில்  பொருத்தி ரசிக் சுடதொடங்க  வெறும் 3 ரவை வெளியேறியதும் அது பழுதாகி விட்டது. பிறகு கண்ணாடி வாசு (பருத்தித்துறை )அதை போட்டு திருத்திறதும் பிறகு பழுதாகிறதுமாய் போய் கடைசியாய் பேரிச்சம் பழத்திற்கு கூட போட முடியாமல்  அதை அப்படியே  இந்திய இராணுவ காலத்தில் ஆயுத ஒப்படைப்பின் போது அவங்களிட்டையே திரும்ப குடுத்தாச்சு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் கண்ணால கண்டிருக்கிறன். :D  

 

அந்தக் காலத்தில்.. நாங்க கண்ணால தான் காண முடியும் ஏன்னா அவ்வளவோ.. குட்டி பசங்க..! தொடக் கூடிய காலத்தில் தொட்டாச்சு. யாழ் நகர வாசிகளுக்கு கோட்டையும் கலிபரும் புதிதல்ல..! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சு மணி இருக்கும் எல்லாம் சரிபடுத்தி முடிய. செம பசி. ஒரு தென்னையிலேயிலே ஏறி முட்டுக்காய் இளனியை புடுங்கி, சனம் விட்டிட்டு போன தேசிக்காயும் முட்டையும் உடைச்சு இளனிகுள்ளே விட்டு ஒரே அடி.

அந்த களைப்பிலே வீட்டுக்குள்ளே  வந்து கோலிலே அடிச்சு போட்ட மாதிரி நித்திரை.

 

 நாங்கள் அடிச்சு கொடுத்த பங்கருக்குள்ளே இருந்து பிப்டி முழங்கும் போது நித்திரையால் திடுக்கிட்டு எழும்பினால், கூழ் முட்டையோ என்னமோ வயித்தை ரொம்பவே கலக்கிச்சு.
 
வயித்தை பிடிச்சுக்கொண்டு அங்கே ஓடி இங்கே ஓடி கடைசியா ஒரு தென்னம்பாத்திக்கு பக்கத்திலே குந்தினோம்.

 நானும் , நீங்க சொல்லுற சாமானைத் தொட்டுப் பார்த்திருக்கிறன் எண்டு தான் நினைக்கிறன்!

 

ஏதோ தொடவேண்டும் எண்டு நினைச்சுத் தொடேல்லை! பக்கத்தில நிண்ட பெடியளெல்லாம் தொட்டுப்பாத்தாங்கள்!

 

சிவலிங்கமொண்டைத் தொடுகிறமாதிரி நானும் தொட்டுவைச்சன்! :o  

 

இண்டைக்குப் பிரயோசனப் படுகுது! :D 

 

கூழ் முட்டைக்கதை சுப்பர், பகலவன்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் தொட்டது வெறும் காஸ் பிஸ்டல் தான். :D :D

b3cfc1dccba127240c72a48b2d75fe29_5.jpg

இது தான் வச்சிருக்கிறன். 179€ .. மேட்டர் குளோஸ். :lol:

மற்றும் படி 50கலிபர் எல்லாம் படத்திலை பார்த்தது தான். :rolleyes:

 

எப்போதும் போல கடையை நகைச்சுவையாக நகர்த்தியுள்ளீர்கள். வாழ்த்துக்கள் அண்ணா.

 

முடிவு..  கதையில் ஓடும் நகைச் சுவை போல தமிழீழம் என்பதும் காமடியாப் போச்சு. :(

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனுபவப் பகிர்வுக்கு நன்றி.எனக்கு தொட்டுப்பாக்க கிடைக்கவில்லை.



நான் தொட்டது வெறும் காஸ் பிஸ்டல் தான். :D :D

b3cfc1dccba127240c72a48b2d75fe29_5.jpg

இது தான் வச்சிருக்கிறன். 179€ .. மேட்டர் குளோஸ். :lol:

மற்றும் படி 50கலிபர் எல்லாம் படத்திலை பார்த்தது தான். :rolleyes:

 

எப்போதும் போல கடையை நகைச்சுவையாக நகர்த்தியுள்ளீர்கள். வாழ்த்துக்கள் அண்ணா.

 

முடிவு..  கதையில் ஓடும் நகைச் சுவை போல தமிழீழம் என்பதும் காமடியாப் போச்சு. :(

தொழில் பக்த்தி இப்படித்தான் இருக்க வேணும். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னிடம் இப்ப இருப்பது இது..

 

374568_10151301984497944_851246839_n.jpg

 

Model T-56.. ரப்பர் போள்.. குண்டு. கிட்ட வைச்சு சுட்டால்.. ஆபத்து.. மற்றும்படி.. ஆபத்தில்லை. மாவீரர்களின் நினைவுக்காக வேண்டி வைச்சிருக்கிறன். இதனைப் பார்க்கிறப்போ எல்லாம்.. தேச நினைவு தானா வரும். :)



இதில விசேசம் என்னென்றால் பவர்புள் லேசர் இருக்குது. அது மட்டும் போது எதிரியின் பார்வை போயிடும்..! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அனுபவப் பகிர்வுக்கு நன்றி.எனக்கு தொட்டுப்பாக்க கிடைக்கவில்லை.

தொழில் பக்த்தி இப்படித்தான் இருக்க வேணும். :D

 

:D :D டங்கு .. சீ.. கை சிலிப் ஆயிட்டுது.. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னிடம் இப்ப இருப்பது இது..

 

374568_10151301984497944_851246839_n.jpg

 

Model T-56.. ரப்பர் போள்.. குண்டு. கிட்ட வைச்சு சுட்டால்.. ஆபத்து.. மற்றும்படி.. ஆபத்தில்லை. மாவீரர்களின் நினைவுக்காக வேண்டி வைச்சிருக்கிறன். இதனைப் பார்க்கிறப்போ எல்லாம்.. தேச நினைவு தானா வரும். :)

 

இதைப் பார்த்துத் தானா தேச நினைவு வரணும்??? :unsure:<_<

Link to comment
Share on other sites

83 , 84 இலை ஒருசாமான் செயின் போட்டு முன்னுக்கு நீட்டின குளாயோடை மேல்பக்கம் அன்ரனா சுத்த ஓடித்திரியும் . ஆமட் கார் எண்டு பொதுவிலை சொல்லுவம் . நினைவுப்பதிவுக்குப் பாராட்டுக்கள் பகலவன் . அதிலையும் முடிவு இருக்கே முடியேலை :lol: :lol: :icon_idea: .

Link to comment
Share on other sites

ஐயோ! நானும் மினிபஸ்ஸோட  வந்து( ஆட்களை ஏத்திக்கொண்டு), பிறகு 
திரும்பிப்போக விடயில்லை. சண்டை தொடங்க காயம் ஏத்திப்பறிச்சனாங்கள்.சாப்பாடு தந்து, எண்ணெய் அடிச்சுவிட்டு  வடிவாய் கவனிச்சவை.பகலவன் புக்காரா விழயிட்கை  பார்த்தனிங்களோ? நாங்கள் பிப்பிலிச்சுடலை அடியில நின்றனாங்கள்.
Link to comment
Share on other sites

050119f0000w001.jpg

 

 

 

அந்த காலத்திலேயே முத்திரை சேர்க்கிற மாதிரி இப்படி சன்னங்களின் கோதுகளை சேர்க்கிறதும் ஒரு பொழுதுபோக்குதான்.A.K செப்பு கலர் கோதுகள், 9 mm பிஸ்டல் கோதுகள் சேர்த்து வைச்சிருந்தாலும் பிப்டி கோதுகளுக்கு ஒரு மரியாதை இருந்தது. ஒரு பிப்டி கோதுக்கு ஐந்து A.K கோதுகள் தான் அப்போதைய பண்டமாற்று நிலவரம்.

 

 

50கலிபர்  பண்டமாற்று செய்யாத யாருமே அக்காலத்தில் இருந்திருக்கமாட்டார்கள். சியாமா செட்டியின் சிதைந்த துண்டுகள் சேர்த்து காட்டிய பெருமையெல்லாம் ஞாபகத்தில் வர வைத்த 50கலிபர் பகலவனுக்கு அடுத்த பிறவியில் ஆயிரம் கோடி 50கலிபர் கோதுகள் சன்மானமாக தரப்படும்.

 

050119f0000w001.jpg

 

 

 

எல்லாரும் போயிட்டாங்கள் என்பதை சத்தத்தை கொண்டு உறுதி செய்துவிட்டு மெல்ல மெல்ல படியேறி வெளியிலே வரவும், வாகன சாவியை விட்டிட்டு போயிட்டேன் என ஜவான் அண்ணை கிணத்தடி பக்கம் வரவும் சரியாக இருந்தது. பிறகு

என்ன நாங்களும் கூட்டத்தோட கூட்டமா வானிலே சண்டிலிப்பாயை நோக்கி பயணம்.

 

 

ஜவானண்ணைக்குத் தெரிஞ்சிருக்கு சுளியன்கள் ரெண்டுபேர் ஒளிச்சிட்டாங்களெண்டு அதுதான் திரும்பி வந்தவராம். :lol:

 

Link to comment
Share on other sites

நல்ல சுவாரசியமான அனுபகப்பகிர்வு.. :D நன்றி பகலவன்..

Link to comment
Share on other sites

நாங்க கிட்டு மாமாட ஆக்கள்.. பிப்ரியை பிக்கப்பில பூட்டி  கோம்பையன் மணல் பகுதியில்.. வைச்சு லேசர் புள்ளட் போட்டு..வெளவால் சுட்டு பழகேக்கையே.. கண்டிருக்கிறம்..! அப்புறம் அடிக்கடி யாழ் நகர் மீதான ஹெலி தாக்குதலுக்கு பதிலடியாக பிப்ரி பாவிக்கப்பட்ட போதும் கண்டிருக்கிறோம்.

 

உங்கள் அனுபவப் பகிர்விற்கு நன்றி.  :icon_idea:

 

நன்றி நெடுக்ஸ். அந்த காலம் மீண்டும் எங்கள் வாழ்கையில் வாராதா என்று ஏங்கி  ஏங்கியே எங்களின்  இந்த காலமும்  கரைகிறது.

 

நானும் கண்ணால கண்டிருக்கிறன். :D  

 

நன்றி நந்தன் அண்ணா. எனக்கு நிச்சயமாக தெரியும் நீங்கள் கண்டிருப்பீர்கள் என்று.

 

சியாமா செட்டி இத்தாலிய தயாரிப்பு குண்டு வீச்சு விமானம்.  முதன் முதலாக தாவடிப் பகுதியில் இருந்த புலிகளின் தும்பு தெழிற்சாலையை குறிவைத்து தாக்குதலை நடத்தியிருந்தார்கள்.ஆனால் குண்டுகள் இணுவில் கொக்குவில் என பரவலாக விழுந்திருந்தது பல பொதுமக்கள் இறந்திருந்தார்கள்.  அதில் புலிகள் அமைப்பை சேர்ந்த ஒருவர் கொல்லப் பட்டிருந்தார். பெயர் நினைவில் இல்லை.இலங்கையில் முதலாவது குண்டு வீச்சு தாக்குதலும் இதுதான். அடுத்ததாக 50 கலிபர் இந்தியா முதன் முதலாக பழுதடைந்து ஒன்றையும் சில நூறு ரவைகளையும் தந்திருந்தார்கள். அதனை  நந்தாவில் அம்மன் கோயில் பின் பக்கமாக  வைத்து அதற்கு குளை  எல்லாம் கட்டி உருமறைப்பு செய்து  பிக்கப் பில்  பொருத்தி ரசிக் சுடதொடங்க  வெறும் 3 ரவை வெளியேறியதும் அது பழுதாகி விட்டது. பிறகு கண்ணாடி வாசு (பருத்தித்துறை )அதை போட்டு திருத்திறதும் பிறகு பழுதாகிறதுமாய் போய் கடைசியாய் பேரிச்சம் பழத்திற்கு கூட போட முடியாமல்  அதை அப்படியே  இந்திய இராணுவ காலத்தில் ஆயுத ஒப்படைப்பின் போது அவங்களிட்டையே திரும்ப குடுத்தாச்சு

 

நன்றி சாத்திரி அண்ணா, உங்கள் மேலதிக தகவல்களுக்கும் வருகைக்கும். நீங்கள் தான் கதைகளுக்கு பலம் சேர்க்கிறீர்கள்.

 

 நானும் , நீங்க சொல்லுற சாமானைத் தொட்டுப் பார்த்திருக்கிறன் எண்டு தான் நினைக்கிறன்!

 

ஏதோ தொடவேண்டும் எண்டு நினைச்சுத் தொடேல்லை! பக்கத்தில நிண்ட பெடியளெல்லாம் தொட்டுப்பாத்தாங்கள்!

 

சிவலிங்கமொண்டைத் தொடுகிறமாதிரி நானும் தொட்டுவைச்சன்! :o  

 

இண்டைக்குப் பிரயோசனப் படுகுது! :D 

 

கூழ் முட்டைக்கதை சுப்பர், பகலவன்! 

 

நன்றி புங்கை. அப்போப்போ தொட்டு வைச்சிருந்தால் பினால் உபயோகப்படும் என்று சொல்லி இருக்கிறார்கள்.

 

 

 

நான் தொட்டது வெறும் காஸ் பிஸ்டல் தான். :D :D

 

இது தான் வச்சிருக்கிறன். 179€ .. மேட்டர் குளோஸ். :lol:

மற்றும் படி 50கலிபர் எல்லாம் படத்திலை பார்த்தது தான். :rolleyes:

 

எப்போதும் போல கடையை நகைச்சுவையாக நகர்த்தியுள்ளீர்கள். வாழ்த்துக்கள் அண்ணா.

 

முடிவு..  கதையில் ஓடும் நகைச் சுவை போல தமிழீழம் என்பதும் காமடியாப் போச்சு. :(

 

நன்றி ஜீவா. நிச்சயமாக தமிழீழம் காமெடி அல்ல. ஆனால் அன்றைய காலப்பகுதியில் காமடியில் எல்லாம் தமிழீழம் இருந்தது.

 

அனுபவப் பகிர்வுக்கு நன்றி.எனக்கு தொட்டுப்பாக்க கிடைக்கவில்லை.

தொழில் பக்த்தி இப்படித்தான் இருக்க வேணும். :D

 

நன்றி சஜீவன். வாழ்கையில் ஒரு முறையாவது தொட்டு பாருங்கள். எத்தனையோ சண்டைகளை மாற்றிய கருவிகள் அவை.

 

83 , 84 இலை ஒருசாமான் செயின் போட்டு முன்னுக்கு நீட்டின குளாயோடை மேல்பக்கம் அன்ரனா சுத்த ஓடித்திரியும் . ஆமட் கார் எண்டு பொதுவிலை சொல்லுவம் . நினைவுப்பதிவுக்குப் பாராட்டுக்கள் பகலவன் . அதிலையும் முடிவு இருக்கே முடியேலை :lol: :lol: :icon_idea: .

 

நன்றி கோமகன் அண்ணா. நாங்கள் செயின் புளக் எண்டு சொல்லுவோம். நான் இந்தியம் ஆமி காலத்திலேயே கண்டிருக்கிறேன். அவன் பிரம்படியுக்குள்ளே இருந்த ஆமிகாரரை மீட்க தண்டவாளத்தாலே செயின் புலக் கொண்டுவந்தவன் கண்ணிவெடி பயத்திலே. எண்டாலும் இயக்கம் காரைக்காலிலே வைச்சு அதை பிரட்டி போட்டாங்கள்.

 

 

 

ஐயோ! நானும் மினிபஸ்ஸோட  வந்து( ஆட்களை ஏத்திக்கொண்டு), பிறகு 
திரும்பிப்போக விடயில்லை. சண்டை தொடங்க காயம் ஏத்திப்பறிச்சனாங்கள்.சாப்பாடு தந்து, எண்ணெய் அடிச்சுவிட்டு  வடிவாய் கவனிச்சவை.பகலவன் புக்காரா விழயிட்கை  பார்த்தனிங்களோ? நாங்கள் பிப்பிலிச்சுடலை அடியில நின்றனாங்கள்.

 

நன்றி விழி அண்ணா. புக்காரா புகைஞ்சு கொண்டு விழும்போது வந்த சந்தோசத்துக்கு அளவில்லை. அப்போ நவாலி தேவாலய படுகொலை நடந்துகொஞ்ச நாட்கள் தான். ஒரு பழி தீர்த்த உணர்வு.

 

 

நல்ல சுவாரசியமான அனுபகப்பகிர்வு.. :D நன்றி பகலவன்..

 

நன்றி இசை அண்ணா. நீங்களும் நகைச்சுவையாக எழுத வல்லவர் உங்கள் நினைவுகளையும் எழுதுங்கள்.

50கலிபர்  பண்டமாற்று செய்யாத யாருமே அக்காலத்தில் இருந்திருக்கமாட்டார்கள். சியாமா செட்டியின் சிதைந்த துண்டுகள் சேர்த்து காட்டிய பெருமையெல்லாம் ஞாபகத்தில் வர வைத்த 50கலிபர் பகலவனுக்கு அடுத்த பிறவியில் ஆயிரம் கோடி 50கலிபர் கோதுகள் சன்மானமாக தரப்படும்.

 

 

ஜவானண்ணைக்குத் தெரிஞ்சிருக்கு சுளியன்கள் ரெண்டுபேர் ஒளிச்சிட்டாங்களெண்டு அதுதான் திரும்பி வந்தவராம். :lol:

 

 

அக்கா, அது ஒரு கனா காலம். செயின்ல கோர்த்து உடம்பை சுத்தி போட்டு கிட்டு மாமா மாதிரி இருக்கா என்று கேட்போம்.

 

கள்ளன் - போலீஸுக்கு பதிலாக இயக்கம் - ஆமி எண்டு தான் விளையாடுவோம்.

 

அக்கா அடுத்த பிறவியில் ஆயிரம் கோடியை தனியாகவும் பிப்டி கலிபர் கோதுகளை தனியாகவும் தரமுடியுமா  :lol:

 

ஜவான் அண்ணை எங்களை வெண்ட கில்லாடி. அவரை பற்றி இன்னொரு கதையில் எழுதுகிறேன். அது ஒரு வித்தியாசமான சந்திப்பு.

நன்றி அக்கா வருகைக்கு.

Link to comment
Share on other sites

நன்றி

 

அக்கா, அது ஒரு கனா காலம். செயின்ல கோர்த்து உடம்பை சுத்தி போட்டு கிட்டு மாமா மாதிரி இருக்கா என்று கேட்போம்.

 

கள்ளன் - போலீஸுக்கு பதிலாக இயக்கம் - ஆமி எண்டு தான் விளையாடுவோம்.

 

அக்கா அடுத்த பிறவியில் ஆயிரம் கோடியை தனியாகவும் பிப்டி கலிபர் கோதுகளை தனியாகவும் தரமுடியுமா  :lol:

 

ஜவான் அண்ணை எங்களை வெண்ட கில்லாடி. அவரை பற்றி இன்னொரு கதையில் எழுதுகிறேன். அது ஒரு வித்தியாசமான சந்திப்பு.

நன்றி அக்கா வருகைக்கு.

 

அதுவொரு கனாக்காலம் எல்லாக் கனவுகளும் கனவுகளாகவே போயிட்டுது.

எட பொடியா ஆயிரம் கோடியில ஏதும் கொடிகட்டிற ஐடியா இருக்கோ ? :lol: அந்தப் பிறப்பில நானும் இருந்தா ஆயிரம் தனியே தர ஏற்பாடு செய்யலாம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வலியான கதையையும் பகிடியா சொல்லிறதிலை உங்களை விட்டால் வேறை ஆள் இல்லை . இன்னும் எழுதுங்கோ .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதைப் பார்த்துத் தானா தேச நினைவு வரணும்??? :unsure:<_<

 

அது ஒரு சிம்பள் ஆக இருக்கிறது.. அந்த வகையில்.. தேசத்தின் துயர் மிகு கணங்களை.. தியாகங்கள் நிறை கணங்களை கண் முன்னே கொண்டு வருகிறது.

 

உங்கள் முகத்தை கண்ணாடியில் பார்க்கிறீர்கள் என்பதற்காக நீங்கள் போட்டோவே எடுத்து வைத்துக் கொள்வதில்லையா..????! :)

Link to comment
Share on other sites

வலியான கதையையும் பகிடியா சொல்லிறதிலை உங்களை விட்டால் வேறை ஆள் இல்லை . இன்னும் எழுதுங்கோ .

 

நன்றி மைத்திரேயி. நேரம் கிடைக்கும் போது நிச்சயமாக என் அனுபவங்களை பகிர்வேன்.

Link to comment
Share on other sites

தொடர்ந்து எழுதுங்கள் ,மிக சுவாரஸ்யமாக இருக்கின்றது உங்கள் பதிவுகள் .

Link to comment
Share on other sites

எழுத்துகள் அந்த மாதிரிப் போகுது பகலவன்.  :)
 
யாழ்ப்பாணத்திற்கு கலிபர் வந்திட்டிது என்ற செய்தி பள்ளிக்கூடத்தில் பரவியது. பள்ளிக்கூடம் விட்டதும் கொக்குவில் முகாமுக்குப் போய்ப் பார்த்தோம். கிட்டரோடு அவரின் குரங்கும் நின்றது. கலிபர், முகாம் போட்டிக்கொ அருகில் நின்ற மரதின் கீழ் ஸ்டான்டில் பொறுத்தப் பட்டிருந்தது. இன்னுமொரு ஸ்டான்டையும் கண்டதாக ஞாபகம்.
 
சிங்கள விமானப்படை பெல் ஹெலியிலிருந்து 50 கலிபர் அடிக்கும் போது அதன் சத்தம் மிகவும் பிடிக்கும். இரவுச் சண்டைகளில் ட்ரேசர் அடிப்பார்கள், சொல்லி வேலையில்ல.  
 
இரை மீட்டதற்கு நன்றி.  :D
Link to comment
Share on other sites

  • 10 months later...
  • கருத்துக்கள உறவுகள்

கூழ் முட்டைக்கதை நன்றாக என்னை சிறிக்க வைத்தது. என்னையும் ஒரு முறை பதுங்கு குழிவெட்ட கட்டுவனுக்கு கூட்டிச் சென்றார்கள். நான் வீட்டில தேடுவாங்கள் என்று கவலைப்பட்டு சொல்ல ஒரு மணித்தியாலத்தின் பின் என்னை மட்டும் மற்றவர்களுக்கு தெரியாமல் செல்ல அனுமதித்தார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சியாமா செட்டி இத்தாலிய தயாரிப்பு குண்டு வீச்சு விமானம்.  முதன் முதலாக தாவடிப் பகுதியில் இருந்த புலிகளின் தும்பு தெழிற்சாலையை குறிவைத்து தாக்குதலை நடத்தியிருந்தார்கள்.ஆனால் குண்டுகள் இணுவில் கொக்குவில் என பரவலாக விழுந்திருந்தது பல பொதுமக்கள் இறந்திருந்தார்கள்.  அதில் புலிகள் அமைப்பை சேர்ந்த ஒருவர் கொல்லப் பட்டிருந்தார். பெயர் நினைவில் இல்லை.இலங்கையில் முதலாவது குண்டு வீச்சு தாக்குதலும் இதுதான்.

 

தாவடியில் முதன்முதலாக இராணுவம் குண்டு போடும்போது இணுவில் பகுதியில் ஒரு பொதுமக்களும் இறக்கவில்லை. குண்டு விழுந்த இடத்துக்கு பக்கத்தில் இருந்த மேல்மாடி வீட்டில் ஈபிஆர் எல் எவ் இயக்கமும் இருந்திருக்கிறது. முதன் முதலாக தாவடியில்தான் குண்டு வீச்சு நடந்தாலும் உலங்குவானூர்தியில் இருந்து கட்டுவன், புன்னாலைக்கட்டுவன், குரும்பசிட்டி குப்பிளான் பகுதியில் சில வாரங்களுக்கு முன்பே வானில் இருந்து சுட்டார்கள்.

Link to comment
Share on other sites

163664_large.jpg

 

இந்த ஆயுதத்தை எப்ப கையில பிடிசீங்கள் எப்பிடி பயிற்சியெடுத்தீங்கள் என்ற கதையையும் எழுதுங்கோ பகலவன். வரலாறு முக்கியம் அமைச்சரே.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.