Jump to content

நினைவுகள் சுமந்த வாழ்க்கை


Recommended Posts

நினைவுகள் சுமந்த வாழ்க்கை

--------------------------

தென்னங் கீத்தின் ராகம் கேட்டு

பன்னைப் பாயில் படுத்துக் கிடந்து

முத்தத்து மணலில் கைகள் அளைந்து

முழுவதும் முழுவதும் மூழ்கிக் கிடந்தோம்

வேலிக் கிளுவை பூக்கள் பார்த்து

வெய்யில் அடிக்கும் வானம் தொட்டு

செக்கச் சிவந்த பூக்கள் இரசித்து

சொக்கிச் சொக்கி நாங்கள் இருந்தோம்

வண்டில் வகிரும் பாதை பார்த்து

மாடுகள் இசைக்கும் சலங்கை கேட்டு

ஓரமாய் ஒதுங்கும் ஒத்தைக் காகம்

ஒவ்வொரு பொழுதும் பார்த்துக் கிடந்தோம்

மாமரக் குயிலின் மதுரம் கேட்டு

மணக்கும் மண்ணின் வாசம் நுகர்ந்து

மனிதர் முகங்கள் பார்த்துச் சிரித்து

மனதில் நிறைவை சுமந்து இருந்தோம்

குட்டிக் குட்டிப் பழனி ஆண்டிகள்

கோயில் கட்டித் தேர் இழுக்கும்

குரும்பைத் தேரும் நொண்டிப் போகும்

குதூகலம் பார்த்துச் சிரித்துக் கிடந்தோம்

கிட்டி புள்ளு சடுகுடு ஆட்டம்

குட்டிக் கோலிக் குண்டு விளையாட்டு

பட்டம் கட்டிப் பறக்க விட்டு

பறக்கப் பறக்கப் பார்த்து இருந்தோம்

வட்டில் சோத்தை வட்டம் போட்டு

வாயும் கையும் மணக்க மணக்க

வம்பும் சேட்டையும் தொட்டுக் கொண்டு

வளப்பம் கதைத்து உண்டு கிடந்தோம்

பச்சைப் பிலாக்காய் பாலில் ஒட்டி

பசுமை மிதக்கும் நினைவுகள் சுமந்து

கோயில் குளங்கள் சுத்தித் திரிந்து

கோரிக்கை அற்றே வாழ்ந்து இருந்தோம்

குண்டுகள் விழுந்த ஒரு இரவில்

உறவுகள் தொலைத்த ஒரு பகலில்

வீடுகள் இழந்து நாடுகள் கடந்து

வீணாய் வாழ்வை இழந்து கிடந்தோம்

நினைவுகள் கனவுகள் இரண்டும் இழந்து

நிமிசத்தில் நிம்மதி அதுவும் தொலைத்து

கனவுகள் சுமந்த காலங்கள் இழந்து

நினைவுகள் சுமந்து வாழ்ந்து இருந்தோம்

கனவுகள் இழந்த வெறும் வாழ்க்கை

நிம்மதி தொலைந்த தமிழ் வாழ்க்கை

கடுகியே மறையும் சிறு வாழ்க்கை

காலத்தில் கரைந்து வீணே போகின்றது

-எல்லாள மஹாராஜா-

Link to comment
Share on other sites

வேலிக் கிளுவை பூக்கள் பார்த்து

வெய்யில் அடிக்கும் வானம் தொட்டு

செக்கச் சிவந்த பூக்கள் இரசித்து

சொக்கிச் சொக்கி நாங்கள் இருந்தோம்

இந்த பசுமையான நினைவுகளை இழந்து விட்டு இந்த கொட்டும் குளிருக்குள் நின்று கஸ்டப்படுகின்றோமே.

பழைய நினைவுகளை மீட்பார்ப்பதில் எப்போதும் சந்தோசம் தான்.

கவிதைக்கு பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்ம்ம் எள்லாளன் பழமையான பசுமையான நினைவுகளை மறக்கத்தான் முடியுமா...உங்கள் கவியது...மிகவும் நன்று...

yrrr5mv.gif

Link to comment
Share on other sites

அந்தப் பசுமையான இனிய நினைவுகளை மீட்டிய கவிதை அருமை. பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

கவிதை அருமை பாராட்டுக்கள் தொடர்ந்து தாருங்கள் :wink:

Link to comment
Share on other sites

எல்லாளனே அருமை அருமை

வட்டில் சோத்தை வட்டம் போட்டு

வாயும் கையும் மணக்க மணக்க

வம்பும் சேட்டையும் தொட்டுக் கொண்டு

விளப்பம் கதைத்து உண்டு கிடந்தோம்

அம்மா குழைச்சுத் தர சுத்தி இருந்து சாப்பிட்டது கண்ணுக்குள்ளை நிக்குது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா பழசை எல்லாம் நிநைவுக்கு கொன்டு வந்து மனதை சிலிர்க்க வைத்து விட்டீங்கள் .

நன்றாக உள்ளது. பாராட்டுக்கள்

Link to comment
Share on other sites

அந்தப் பழைய பசுமையான இனிய நினைவுகளை இப்பொழுது கேட்டால் என் நெஞ்சில் சோகம் பிறக்கின்றது. :cry: நன்றி எல்லாள மகராயா அந்தப் பசுமையான நினைவுகளை மீட்டித் தந்ததற்கு.

Link to comment
Share on other sites

அந்தப் பழைய பசுமையான இனிய நினைவுகளை இப்பொழுது கேட்டால் என் நெஞ்சில் சோகம் பிறக்கின்றது. :cry: நன்றி எல்லாள மகராயா அந்தப் பசுமையான நினைவுகளை மீட்டித் தந்ததற்கு.

எனது சோகம் தான் பெரிதென்று பார்த்தேன் ...இன்னும் சோகங்களை கொட்டாத கண்களையும் இப்போதுதான் பார்க்கின்றேன்.....அழுது விடுங்கள்....

அதுதான் சோகத்தைக் கரைக்க அருமையான மருந்து.....

ஆலோசனையுடன்

-எல்லாள மஹாராஜா-

Link to comment
Share on other sites

ம்ம்ம் எள்லாளன் பழமையான பசுமையான நினைவுகளை மறக்கத்தான் முடியுமா...உங்கள் கவியது...மிகவும் நன்று...

yrrr5mv.gif

கிரேற் ஜொப் செப்பினது சிறிலங்கா கேளோ

சோகம்+பிரிவு மட்டும் காதல் அல்ல சுகம்+கூடலும் காதல் தாங்க...... சிறகு விரித்த வானப் பறப்பும் காதலில் தானுங்க சாத்தியம்.....கவலை விடுங்க....

-எல்லாள மஹாராஜா-

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

குட்டிக் குட்டிப் பழனி ஆண்டிகள்

கோயில் கட்டித் தேர் இழுக்கும்

குரும்பைத் தேரும் நொண்டிப் போகும்

குதூகலம் பார்த்துச் சிரித்துக் கிடந்தோம்

எல்லாளன் அண்ணா, நாங்கள் தொலைத்துவிட்ட இளமைக் காலத்தைக் கண்முன் கொண்டுவந்திருக்கிறீர்கள்.

Link to comment
Share on other sites

எனது சோகம் தான் பெரிதென்று பார்த்தேன் ...இன்னும் சோகங்களை கொட்டாத கண்களையும் இப்போதுதான் பார்க்கின்றேன்.....அழுது விடுங்கள்....

அதுதான் சோகத்தைக் கரைக்க அருமையான மருந்து.....

அழுவது ஆண்பிள்ளைக்கு அழகல்ல என்று அம்மா சொன்னவா. அதனால் அழுவதில்லை. சோகமும் கோபமும் என்னோடே போகட்டும்.

என்ன நான் சொல்லுறது. :lol: சரிதானே. :oops:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.