Jump to content

எங்கட கதை


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

எங்கட கதை பெரிசா சுவாரசியமாய் இருக்காது.நாங்கள் மூன்று
பேர் ஒன்றாய் ஒரு அறையில தங்கியிருக்கிறம். இலங்கையில இருந்து இன்னொரு ஆசிய
நாட்டுக்கு வந்து கப்பலுக்கு கொஞ்சக்காசைக் கட்டிட்டு ஆறு மாதமாய்
பார்த்துக்கொண்டிருக்கிறம்.ஒ எங்களைப்பற்றி சொல்ல மறந்திட்டன்.நான் வன்னியில
கொஞ்சக்காலம் ஊடகத்தில வேலை செய்தனான் என்றதைவிட சொல்ல ஒன்றுமில்லை.மாத்தளனில
குடும்பத்தோட ஆமியின்ர பகுதிக்கு வந்திட்டன்.மற்றது டாவின் அவன் சங்கானைப்
பெடியன்.அவன் எங்களுக்குள்ள வசதியான ஆள் .தமையன் இரண்டு பேர் வெளியால
இருக்கிறாங்கள்.அவன் கொம்புயுட்டர் படிச்சவன்.அவன்ர லப் டொப்பில தான் நான்
எழுதிக்கொண்டிருக்கிறன்.அடுத்தது மோகன் அவன் பதினாலு வருஷம் இயக்கத்தில இருந்து
இரண்டு வருஷம் புனர்வாழ்வுல இருந்தவன்.அவன் தானும் தன்ர பாடுமாய்த்தான்
பெரும்பாலும் இருப்பான்.சமையல் சாப்பாடு ஒன்றாய்த்தான் செய்வம்.பெரும்பாலும்
இரவில்தான் பெரிய சமையல்.   எனக்கும்
மோகனுக்கும் காய்ச்சல் ஒன்று வந்து உடைச்சுப்போட்டுது. டாவின் கொஞ்சம் தண்ணி,புகைத்தல்
எல்லாம் செய்வான்.நாங்கள் சமாளிச்சுக்கொள்ளுவம்.ஆனால் டாவின் நல்ல பெடியன்.நானாவது
இருந்திட்டு கொம்புயுட்டர் பக்கம் தலை காட்டுவன்.மோகன் அதுவும் இல்லை.ஆனால் எங்கட
அறை வேலையில அதிகம் அவன்தான் செய்வான்.அவனுக்கு கொமாண்டஸ் பயிற்சியை விட எதுவும்
தெரியாது என்பான்.  நாங்கள் மூன்று பேரும்
பிரமச்சாரியாய்த்தான் இதுவரை இருக்கிறம்.ஆனால் டாவினுக்கு லவ் இருக்கு.அவள்
கொழும்பில இருக்கிறாள்.இவன் போனுக்கு காட் போட்டான்  என்றால் முடியும் மட்டும்

கதைப்பான்.

 

 இன்றைக்கு
சந்தையில நல்ல மரவள்ளிக்கிழங்கு 
வாங்கிவந்தனாங்கள்.மோகன் வெட்டி அவிக்கிறான்.இன்றைக்கு நேற்றையான் மீன்

குழம்போட  அதை அடிக்க வேண்டியதுதான்.என்ன எல்லாரும் முகம் சுளிக்கிறது

தெரியுது.சாப்பிட்டு பாத்திங்க என்றால்த்தான் தெரியும்.எங்களுக்கு இன்னும் ஆறு
மாதத்திற்கு இந்த நாட்டு விசா இருக்கு.அதால போலிஸ் பயம் இல்லை.டாவினை ஒருக்கா வேறு
ஆட்களோட போலிஸ் கொண்டு போயிற்று பிறகு விசாவை பார்த்திட்டு விட்டிட்டாங்கள். 

                                                                              

தொடரும்              

Link to post
Share on other sites
 • Replies 133
 • Created
 • Last Reply
 • கருத்துக்கள உறவுகள்

சுவராசியமான கதை ஆசாமி. தொய்வில்லாமல்.... தொடருங்கள். :)

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கதையில் ஒரு 'கவர்ச்கி' இருக்குது! :lol:

 

தொடருங்கள், ஆசாமி!

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கதையில் ஒரு 'கவர்ச்கி' இருக்குது! :lol:

 

தொடருங்கள், ஆசாமி!

 

கவர்ச்சி என்று எழுத, கூச்சமாய்... இருக்கா... புங்கையூரான். :D

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கவர்ச்சி என்று எழுத, கூச்சமாய்... இருக்கா... புங்கையூரான். :D

கொஞ்ச நாளா, இந்தக் கூகிள் மொழிபெயர்க்கிற சாமான், ஆணா அல்லது பெண்ணா என்றொரு சந்தேகம்! :o

 

இண்டைக்குத் தான் தெரிஞ்சுது, அது பெண் எண்டு! :D

 

நானொண்டை எழுத, அது தானொண்டை எழுதுது! :wub:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஏன் புங்கையூரான் கூகிழ் ஆண்டவரோடை கரைச்சல்படுறியள். இந்த இணைப்பில போய் பாமினியில ரைப்புங்கோ அது யுனிகோட்டு மாறும்.

 

http://www.nouralislam.org/tamil/islamkalvi/web/bamini2unicode.htm

Link to post
Share on other sites

தொடருங்கள் .ஆவாலாக இருக்கின்றது .

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

(2)

 

 மோகன் எப்போதும் தனிமையை விரும்புகிறான்.அவனாய் வலிந்து கதைப்பது குறைவு.ஓரளவு நன்றாக
சமைப்பான்.சாப்பாடு போதாமல் இருக்கும் போது சரியாக மூன்றாய்
பிரித்துவைப்பான்.அவனுக்குத்தான் கொஞ்சம் குறைவாய் இருக்கும்.மாட்டு இறைச்சிக்கை
மரவள்ளி போட்டு சமைப்பான்.குத்தரிசி சோத்துக்கு உண்மையிலேயே நல்லா இருக்கும்.நான்
இப்பதான் முதல் முதல் இப்படி சாப்பிடுறன்.நீங்கள் முந்தி சாப்பிட்டு இருக்கலாம்.
அவனை நான் முதலில் நாங்கள் எல்லைப்படை பயிற்சி எடுக்கும்போது கண்டேன்.அவன் எங்களது
பயிற்சி ஆசிரியன்.அப்பவும் பெரிய கதை இல்லை.தன்ர வேலையிலதான் கவனமாய்

இருப்பான்.  

 டாவின் ஒரு விளையாட்டுப்பிள்ளை.ஆனால் அவனுக்கும் எங்கட வயதுதான் . அவன் வீட்டில செல்லமாய்
வளர்ந்திருக்கிறான். அவன் எங்களோட தங்கோனும் எண்டு இல்லை . அவன்ர வசதிக்கு அவன்
தனிய ரூம் எடுத்து தங்கலாம்.எங்கள்ள இருக்கிற பிடிப்பாள எங்களோட தங்கி
இருக்கிறான். ஒரு நல்ல கமரா வாங்கி வைச்சிருக்கிறான். அதை அவனுக்கு பழக்கி
களைச்சுப்போனேன். ஏதாவது நல்ல இடங்களைப்பார்த்திட்டு வந்து ஒற்றைக்காலில நிற்பான்
வா வந்து ஒரு படம் எடுத்துவிடு!. பிறகென்ன போகத்தான் வேணும்.எந்த கள்ளமும்
தெரியாதவன்.எனக்கும் அவனுக்கும் கொஞ்சம் பயம் கப்பல் ஏறுறது.நான் வெளியால
காட்டுறதில்லை. அவன் பச்சையாய் வெளியால சொல்லி அழுவான்.டேய் இப்படி ஐநூறு பேருக்கு
மேல கடலுக்குள்ள போயிருக்காங்கடா!.   மோகன்
எதைப்பற்றியும் அலட்டிக்கொள்வதில்லை. 
டாவின நம்பேலாது கடைசி நேரத்திலேயும் சறுக்கிருவான்.பொறுத்திருந்துதான்

பார்க்கோணும். தொடரும்         

Link to post
Share on other sites

அறையில் பெடியள்களுடன் ஆன வாழ்க்கை என்றுமே மறக்கமுடியாதவை . அனுபவப் பகிர்வுக்குமனங்கனிந்த பாராட்டுக்களும் வாழ்துக்களும் ஆசாமி .

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு இந்த மாதிரி கதைகள் கேக்க விருப்பம்..அங்கெ இங்கே பாதி பதியே தெரியும்- இன்னுமொரு நாட்டுக்கு புலம் பெயருவது..நான் கலியாணம் கட்டி வந்து போட்டு, போன்சரில் வந்துபோட்டு ஊரில் செய்த வேலை கிடைக்க வில்லை என்று புலம்பிய/ புலம்புற கூட்டத்தை சார்ந்தவன்..உங்கள் பயணமும் கதை தொடர வாழ்த்துக்கள்

Link to post
Share on other sites

உங்கள் பயணம் வெற்றிபெற வாழ்த்துக்கள் ஆசாமி.. தொடருங்கள்..!

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஏன் புங்கையூரான் கூகிழ் ஆண்டவரோடை கரைச்சல்படுறியள். இந்த இணைப்பில போய் பாமினியில ரைப்புங்கோ அது யுனிகோட்டு மாறும்.

 

http://www.nouralislam.org/tamil/islamkalvi/web/bamini2unicode.htm

தகவலுக்கு நன்றிகள் சாந்தி! :D

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

முடிவில்லாத ஏதிலி வாழக்கைப் பயணங்கள்.  இப்படி வெளிநாட்டிற்கு என புறப்பட்டு நாடுநாடாய் அலைந்த பலரை சந்தித்த அனுபவங்களை கண் முன்னே கொண்டுவந்து விட்டீர்கள். தொடருங்கள் அதே நேரம் உங்கள் பயணம் வெற்றிபெற வேண்டும்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
நான் வெளிநாட்டில இருந்து கொண்டு ஆக்கள் வெளிநாட்டுக்கு ஓடிவருவது பிழை என்று சொல்கிற ஆள்.
 
அதில கொஞ்சம் நேர்மையும் இருக்கு. வெளிநாட்டு வாழ்க்கைய நிரந்தரமாக என்டைக்கும் நினைத்ததில்லை.
 
கிட்டத்தில கூட ஊருக்குப் போய் வந்தனான். உண்மையச் சொன்னால் தமிழருக்கு அங்க உயிராபத்து இருக்கிற மாதிரித் தெரியேல்ல.
 
அரசியல் பொருளாதார சம உரிமை இல்லை தான்.
 
உங்களப் போலவே பிரச்சனை உள்ளவர்கள் அங்க ஆயிரக்கணக்கில் உள்ளார்கள்.
அவர்கள் எல்லாரும் ஓட நினைத்தால் ?
 
ஏன், அங்க இருக்கிற எல்லா இளம் ஆக்களுக்கும் வெளிநாடு போகிற நினைப்புத் தான்.  :unsure:
 
இங்க அவுஸ் வந்திருக்கிற அநேகம் பேருக்கு அரசாங்கம் தற்காலிக வதிவிட உரிமை தான் குடுத்திருக்கிறது. நிரந்தர வதிவிட உரிமை கிடைக்க கனகாலமெடுக்கலாம். இடையில் சிறீ லங்கா மனித உரிமைகள் கொஞ்சம் முன்னேரினால் திரும்பி அனுப்பப் படுவதற்கான சாத்தியமும் இருக்கு.
 
உங்கள் ஒவ்வொருத்தருக்கும் இருக்கிற தலை விறைப்பும் திக்கற்ற நிலையும் புரியாமல் இதை எழுத வில்லை.
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் சொல்ல வருவது மிகவும் பெரிய விடயம்போல உள்ளது.பாராட்டு சொல்ல முடியவில்லை.ஏனெனில் உண்மையை எழுதும் பொது பாராட்ட' வாழ்த்து சொல்ல முடியாது முடிவு தெரியும் வரை ஏனெனில் உண்மை சுடும் 'காயப்படுத்தும் 'அழ வைக்கும் இன்னும் பலவும் செய்யும்.அப்படியானத்தை பாராட்ட முடியாது.
மாறாக மௌனமாக ஏற்றுக் கொள்ள மட்டுமே முடியும்.நீங்களும் எங்கட கதைய கதைக்கிறிங்கள்.
என்னத்தை சொல்ல தோல்வியை பாடுவோம்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

 

எங்கட

கதைக்கு இவ்வளவு பேர் கருத்தூட்டி வழிகாட்டியுள்ளீர்கள்.தங்களுக்கு நன்றிகள் பல.

எங்களுக்கு

ஒரு சின்னப்பயம்.கடலுக்குள்ள போயிருவமோவென்று. அதாலதான் இதை எழுதி பழகுறன்.

உண்மையிலேயே நாட்டில வாழுறது அந்தமாதிரித்தான்.ஆனால் மனசுக்குள்ள ஏதோ நிம்மதி இல்லை.அதாலதான்

இப்படி எல்லாத்தையும் விட்டிட்டு வெளிக்கிடவேண்டியிருக்கு. 

நான் முந்தி

இயக்கத்தின்ர ஊடகம் ஒன்றில வேலை செய்தனான். பிறகு

யுத்தத்திற்கு பிறகும் ஊருக்குப்போய் வேலை தேடிப்பார்த்தன்.

வேலை எடுக்கிறது அந்தளவு சுலபம் இல்லை. இடைக்கிடை யார் யாரெல்லாம் வந்து

விசாரிப்பாங்கள்.இதுக்குள்ள முந்தி இயக்கத்தோட நின்ற ஒருத்தர் ஒரு வேலை இருக்கு

நல்ல சம்பளமும் என்றார்.யாழ்ப் பானத்திட்குத்தான் போகவேணும் என்றார்.எனக்கும் என்ற

குடும்பத்திற்கும் வந்த சந்தோசத்தை எப்படி சொல்லுறது?. பிறகு பார்த்தால் அது மாற்றுக்குழு ஒன்றின்ற

ஊடகத்தில வேலை நான் மாட்டன் என்றிட்டன் வீட்டிலயும் ஒரேயடியாய்

சொல்லிப்போட்டுதுகள் நீ வீட்டிலேயே இரு என்று. 

மோகனும் இப்படித்தான் கொஞ்சக்காலம் கலோரஸ்ட் மிதிவெடி அகற்றலில வேலை செய்திட்டு காசு

கொஞ்சம் சேர்த்துக்கொண்டு வெளிக்கிட்டான்.அந்த வேலையும் நிரந்தர வேலை இல்லைத்தானே?

வேற ஆட்கள் எங்களுக்கு வேலை இல்லை என்றதை பாவிச்சு கொஞ்ச சம்பளத்தை தருகினம்.வேலையை மட்டும்

சரியாய் வாங்கிப்போடுவினம்.இப்பவும் நாங்கள் வெளிக்கிட்டதை பிழையாய் நினைக்கிறீங்களோ? 

 

உண்மையை சொன்னால் என்ன. முந்தி இயக்கத்தின்ற நிருவாகத்திற்க 
வாழ்ந்த சந்தோசத்தில ஒரு ஐந்து வீதம் கூட இப்ப அங்க வராது.முந்தியும் 
வாழ்ந்திட்டு இப்பயும் வாழுறது சரியான கஷ்டம்.அதை எப்படி விளங்கப்படுத்திறது என்று தெரியவில்லை.

 

 

தொடரும்         

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கோ உங்கள் அனுபவங்களை.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

 

 

எங்களுக்கு

ஒரு சின்னப்பயம்.கடலுக்குள்ள போயிருவமோவென்று. அதாலதான் இதை எழுதி பழகுறன்.

இப்படி எதிர் மறையாக  ஆக யோசிப்பதும் கதைப்பத்தும் கூடாது என்று சொல்வார்கள். நல்லதே நடக்கும் என்று நம்புங்கோ.

 நீங்கள் ஆபத்து ஏதும் இல்லாமல் பத்திரமாக போக நினைத்த இடத்திற்கு போய்ச்சேர்வீர்கள்.
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

புலப்பெயர்வு காலத்துக்கு காலம் வடிவமாற்றத்தோடு வலிகளையே தந்து செல்கிறது அனுபவமாக.  ஆசாமி கதையை கொஞ்சம் கெதியிலை எழுதி முடியுங்கோ.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
நானும் உங்கட‌ கதையை வாசிக்க ஆவலாய் உள்ளேன்.தொட‌ருங்கள்
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
ஆசாமி, 
 
தடங்களுக்கு வருந்துகிறோம். 
 
வாசிக்க ஆவலாய் உள்ளேன்.தொட‌ருங்கள்.  :) 
Link to post
Share on other sites

நான் வெளிநாட்டில இருந்து கொண்டு ஆக்கள் வெளிநாட்டுக்கு ஓடிவருவது பிழை என்று சொல்கிற ஆள்.
 
அதில கொஞ்சம் நேர்மையும் இருக்கு. வெளிநாட்டு வாழ்க்கைய நிரந்தரமாக என்டைக்கும் நினைத்ததில்லை.
 
கிட்டத்தில கூட ஊருக்குப் போய் வந்தனான். உண்மையச் சொன்னால் தமிழருக்கு அங்க உயிராபத்து இருக்கிற மாதிரித் தெரியேல்ல.
 
அரசியல் பொருளாதார சம உரிமை இல்லை தான்.
 
உங்களப் போலவே பிரச்சனை உள்ளவர்கள் அங்க ஆயிரக்கணக்கில் உள்ளார்கள்.
அவர்கள் எல்லாரும் ஓட நினைத்தால் ?
 
ஏன், அங்க இருக்கிற எல்லா இளம் ஆக்களுக்கும் வெளிநாடு போகிற நினைப்புத் தான்.  :unsure:
 
இங்க அவுஸ் வந்திருக்கிற அநேகம் பேருக்கு அரசாங்கம் தற்காலிக வதிவிட உரிமை தான் குடுத்திருக்கிறது. நிரந்தர வதிவிட உரிமை கிடைக்க கனகாலமெடுக்கலாம். இடையில் சிறீ லங்கா மனித உரிமைகள் கொஞ்சம் முன்னேரினால் திரும்பி அனுப்பப் படுவதற்கான சாத்தியமும் இருக்கு.
 
உங்கள் ஒவ்வொருத்தருக்கும் இருக்கிற தலை விறைப்பும் திக்கற்ற நிலையும் புரியாமல் இதை எழுத வில்லை.

 

மன்னிக்கக வேண்டும் ஆசாமி. அவுஸ் வருவதற்காக இந்தோனேசியாவில் நிற்கிறீர்கள் என நினைக்கிறேன். நீங்கள் கப்பல் ஏறாமல் விடுவது உங்களுக்கு நல்லது என்பதை மட்டும் என்னால் கூற முடியும். ஈசன் கீழே கூறியுள்ளதைத் தான் அவுஸ் அரசாங்க அகதிகளுக்கான புதிய கொள்கை கூறுகிறது. தற்போது இந்தோனேசியாவிலிருந்து வெளிக்கிடும் படகுகளின் எண்ணிக்கை குறைந்ததட்கும் இதுவே காரணம்.அண்மையில் வந்தவர்களை தொடர்புகொண்டு கேட்டால் நிலவரம் புரியும். தற்காலிக வதிவிட உரிமையுடன் யாரும் பிணை எடுத்து விட்டாலும் நிரந்தர வதிவிட உரிமை கிடைக்க மிக அதிக காலம் செல்லும். இன்னும் ஆறு மாதங்களில் தேர்தலை நாம் எதிர்பார்ப்பதால் அகதிகள் தொடர்பான கொள்கைகள் மேலும் இறுக்கம் அடையும் எனவே நம்புகிறேன். உங்களினதும் உங்கள் நண்பர்களினதும் நம்பிக்கையை சிதைக்க விரும்பவில்லை ஆனால் படுத்திருந்தபடி Ipad  இல் யாழை மேய்ந்து கொண்டிருந்த நான் மடிக் கணனிக்கு தாவியதே உங்களுக்கு பதில் எழுதத் தான். 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்
Quote:"இங்க அவுஸ் வந்திருக்கிற அநேகம் பேருக்கு அரசாங்கம் தற்காலிக வதிவிட உரிமை தான் குடுத்திருக்கிறது. நிரந்தர வதிவிட உரிமை கிடைக்க கனகாலமெடுக்கலாம். இடையில் சிறீ லங்கா மனித உரிமைகள் கொஞ்சம் முன்னேரினால் திரும்பி அனுப்பப் படுவதற்கான சாத்தியமும் இருக்கு."
 
இப்போதைக்கு சாத்தியமில்லை.
 
உங்கள் மனதை தளரவிட வேண்டாம். அவுஸ் இல்லாவிட்டால் இன்னமொரு நாடு.
Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.


×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.