ஆசாமி

எங்கட கதை

Recommended Posts

மிகவும் இயல்பாக கதை மனதைத் தொட்டுச் செல்கிறது. பாராட்டுக்கள் ஆசாமி.

Share this post


Link to post
Share on other sites

இங்கே தும்ஸ் சொன்னது போல இப்பொழுது 80 வீதத்திற்கு மேலான அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்டு மேல் முறையீடு செய்ய அனுமதிக்கப்பட்டு இருக்கின்றார்கள் அதுவும் நிராகரிக்கப்படும் அனேகமாக உடனே திருப்பி அனுப்புகின்றார்கள் என்ன ஒரு ரெண்டு வருஷம் இழுத்தடிக்கலாம்

அன்னையில் ஒரு ஆறு சென்னை தமிழர்களை சந்தித்தேன் இலங்கைக்கு போய் அங்கிருந்து இலங்கை கடவுசீட்டோடு படகில் Australia க்கு வந்து இருக்கின்றார்கள் அப்பிடி எல்லாம் நடக்குது

இதில் காமடி என்ன என்றால் இலங்கை தமிழர்களை அகதிகள் என்று பழித்த இந்திய தமிழர்கள் இலங்கை அகதிகளாக தங்களை அடையாளப்படுத்தி இந்தியாவில் இருந்து அகதிகளாக புறப்பட தொடங்கி இருக்கின்றார்கள்

Edited by SUNDHAL

Share this post


Link to post
Share on other sites

ஆசாமி பதிவுக்கு நன்றி! முன் வைத்த காலை பின்வைக்காதீர்கள், நடப்பது எதுவும் நல்லதாகவே நடக்கும், விசா அலுவலகளும் ஒருவித அதிர்ஸ்டமே! நான் எப்பவும் செய்யும் கருமம் சாதகமாக அமையும் எண்டு நினைக்கிற பிறவி.  எதுவும் தீரவிசாரித்துச் நீங்கள் யோசித்து முடிவு எடுங்கள், நீங்கள் எடுக்கும் முடிவு எப்பவும் உங்களுக்கு மன நிம்மதியைத் தரும், நான் சொல்வது சரிதானே!!

Share this post


Link to post
Share on other sites
எங்கள் மீது அன்பு செய்து நீங்கள் தெரியப்படுத்தியுள்ள கருத்துக்களை நன்றியோடு மீண்டும் யோசித்து முடிவெடுக்கிறோம்.உண்மையில் எங்களுக்கு உலகம் தெரியாது.இப்போது ஒரு முடிவெடுக்கமுடியா நிலையில் உள்ளோம்.எப்படியும் ஒரு முடிவெடுப்போம்.மனம் சற்று குழம்பியுள்ளதால் தாமதத்துடன் வருவேன்.எனது பிழைகளை மன்னிக்கவேண்டும் 

Share this post


Link to post
Share on other sites
எனக்கும் ஒரு காதல் இருந்தது. அவள் என்னைவிட இரண்டு வகுப்புகள் குறைவாய் படித்தாள்.எப்போதும் பாட்டும் சிரிப்புமாவே திரிவாள்.அவளுக்கு ஒரு அண்ணன் இருந்தான்.நாங்கள் ஒருவரை ஒருவர் உயிராய் விரும்பினோம். 
போராட்டம் நெருக்கடிக்குள்ளான போது புலிகள் வீட்டுக்கொருவரை போராட்டத்தில் இணைப்பதைவிட புலிகளுக்கு வேறு தேர்வு இருக்கவில்லை.எங்களது குடும்பம் மாவீரர் குடும்பம் அதனால் நான் இணையவேண்டிய தேவை இருக்கவில்லை.ஆனால் அவளது குடும்பத்தில் 
அவளது அண்ணன்தான் போராட்டத்தில் இணைந்திருக்கவேண்டும்.ஆனால் அவனோ புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டான்.அவள் போராட்டத்தில் தங்கள் குடும்பப்பொறுப்பை எண்ணி 
போராட்டத்தில் இணைந்துகொண்டாள். 
 

 

நான் இயக்கத்தின் ஒரு பிரிவில்தான் வேலை செய்தேன்.நான் எனது பொறுப்பாளருடன் கதைத்தேன்.அவளுக்குப்பதிலாக நான் இணைகிறேன் அவளை வீட்டுக்கு அனுப்பும்படி கேட்டேன்.எமது பொறுப்பாளர் அவளின் பொறுப்பாளருடன் கதைக்க ஒழுங்குபடுத்திவிட்டார்.அவளின் பொறுப்பாளரோ என்னையும் அவளையும் கதைத்து முடிவெடுக்கும்படி 
ஒழுங்குபடுத்திவிட்டார்.அவள் முடிவாகச்சொன்னாள். தனக்காக நீங்கள் வாறது தனக்கு பிரச்சனை இல்லை ஆனால் உங்கட அம்மாவிற்கு இன்னொரு பிள்ளையும் போராட்டத்தில போறதை நான் ஏற்றுக்கொள்ளமாட்டன்.உங்கட பெயரை தனது காதலனாய் அங்கு பதிந்துள்ளதாய் சொன்னாள். எங்கட மக்கள் விடுதலை அடையும்போது நாங்கள் திருமணம் செய்வோம் என்பதை வெட்கத்துடன் சொன்னாள்.    
இணைந்து ஒன்றரை வருடத்தில் அதே சிரிப்புடன் வித்துடலாய் வந்தாள்.
என்னை நான் எப்படி தேற்றினேன் என்று தெரியவில்லை.இராணுவம் மிக அருகில் வந்துவிட்டதால் 2008ஆம் ஆண்டு மாவீரர் நாள் அன்று கனகபுரம் துயிலும் இல்லத்திற்கு சொற்ப மனிதர்களே சென்று விளக்கேற்றினர்.நான் சென்று அவளுக்கு விளக்கேற்றினேன்.யுத்தம் முடிய அங்கு செல்ல அவளது கல்லறையையே காணவில்லை. எனக்கு அங்கு கழியும் ஒவ்வொரு நாட்களும் தொண்டையில் முள்ளுடன் வாழும் நாட்கள்.
 
தொடரும் 
  • Like 1

Share this post


Link to post
Share on other sites

ஆசாமி..

உங்களைத் தேற்ற வார்த்தைகளே வரவில்லை.. :(

Share this post


Link to post
Share on other sites

என்ன செய்வது எமக்காக விதிக்கப்பட்டிருப்பவையை மாற்றவே முடியாது. ஆசாமி முயற்சி மட்டும் எல்லாவற்றையும் சாதகமாக்கும். நம்பிக்கையோடிருங்கள்.

Share this post


Link to post
Share on other sites

உங்கள் இழப்புக்களை எதிர்பார்ப்புக்களை ஏக்கங்களை கதையாக எண்ண என்னால் முடியவில்லை. உங்கள் முயற்சி வெற்றி பெறவும் பாதுகாப்பான பயணத்திற்கும் இறைவனைப் பிராத்திப்பதைத்தவிர ஆறுதல் கூற என்னிடம் வார்த்தைகள் இல்லை.

Share this post


Link to post
Share on other sites

மிகவும் ஒரு இக்கட்டான நிலையில் நிற்கிறீர்கள் என்பதை புரிந்து கொள்ளமுடிகின்றது, ஆசாமி.
நீங்களே.... யோசித்து, நல்லதொரு முடிவை எடுங்கள்.

Share this post


Link to post
Share on other sites

:( :( :(

சொல்ல வார்த்தைகள் வரவில்லை அண்ணா.

எல்லாம் நல்லதாய் நடக்க இறைவனை வேண்டுகிறோம்.

Share this post


Link to post
Share on other sites

உங்கள் கதையை நானும் அவ்வப்போது வந்து  படிச்சுட்டு போறனான்...இந்தப் பகுதி மிகவும் கவலையாக்கிட்டு.. :( கண்டிப்பாக உங்களுக்கு ஒரு இடமாற்றம் தேவை தான்.நல்ல வழி பிறக்கும் யோசிக்காதீங்கள்.

Share this post


Link to post
Share on other sites

ஆசாமி உங்களைப் போல எத்தனை ஆயிரம் உள்ளங்கள்

எல்லாவற்றையும் இழந்து  வாடுகின்றார்கள்.

உங்கள் ஏக்கங்களைத்   தொடர்ந்து எழுதுங்கள் 

Share this post


Link to post
Share on other sites

வாங்க வாங்க நல்லாத்தான் இருக்கு கதை கேக்க இப்பவோ சொல்லிப்போடுங்க இங்கை வந்தாபிறகு கத சொல்ல நேரம் இருக்குமோ தெரியா ?

Share this post


Link to post
Share on other sites
எங்கட அறையில நாங்கள் பகலில இருக்கிறதில்லை.உண்மையில அந்த அறையில ஒரு ஆள்தான் தங்கலாம்.நாங்கள் அதால பகலில வெளிக்கிட்டுறது.டாவின் தன்ர பாட்டில போயிருவான்.நானும் மோகனும் 
இலவச பஸ் எடுப்பம். இந்த நாட்டில இடைக்கிடை இந்த இலவச பஸ்சுகள் ஓடும்  நாங்கள் காத்திருந்து எடுப்பம். பிறகு போய் ஒரு பார்க்கில இருந்து கதைப்பம்.இல்லாட்டி அந்த பச்சைப்புல்லில படுத்து நித்திரை ஆயிடுவம்.இங்கத்தைய பஸ்சுகளில  ஆண் டிரைவர் என்றால் பெண் கொண்டைக்டராய்   இருப்பார்.பெண்  டிரைவர் என்றால் ஆண்  கொண்டைக்டராய்   இருப்பார்.
எங்கட பார்வைக்கு பெண்களுக்கு நல்ல சுதந்திரம் இருக்கிற மாதிரி இருக்கு.உண்மை எப்படியிருக்குமோ தெரியயில்லை.
எங்கட இன்னொரு பொழுதுபோக்கு சந்தைக்குப்போறது. உண்மையைச் சொல்லுறன் சந்தை அந்த மாதிரி.உயிர் மரக்கறிகள்,மாமிசங்களும் அப்படித்தான்.விலையும் பெரிசாய் இல்லை. கிழமையில ஒருநாள் ஒரு இடத்தில இரவுச்சந்தையும் நடக்கிறது.கோழி எல்லாம் உரிச்சதை உடன வாங்கலாம்.இரவு பன்னீரண்டு மணிக்கு போய் வாங்குவம்.வர இரண்டு மூன்று மணியாயிடும்.நான் இறைச்சியை வெட்டிக்கொடுத்திட்டு நித்திரையாயிடுவன்.டாவின் வந்த உடனேயே நித்திரையாயிடுவான்.மோகன் இறைச்சி வெட்டைக்க ரொட்டிக்கு மா குழைச்சிடுவான். இறைச்சிக்கறி வைச்சு ரொட்டி சுட்டு ஒரு நாலரை,ஐந்து மணிக்கு மோகன் எங்களை எழுப்புவான்.குறைஞ்சது ஒரு மணித்தியாலம் இருந்து சாப்பிடுவம் எந்த சத்தமும் இல்லாமல்.எங்கட அறையில சத்தம் போடக்கூடாது.அடுத்த அறைகளில எல்லாம் ஆட்கள் இருக்கினம்.   மோகன் தாற பிளேன்ரியுடன் அடுத்த நித்திரை தொடங்கும் . 
 
அன்றைக்கும் அப்படித்தான்.  அறையில குறை நித்திரையை கொண்டுட்டு 
மிச்ச நித்திரையை பார்க்கில கொண்டுகொண்டிருந்தம்.திடீரென ஒரு ஆண் குரல் கீச்சிட்டு அவலச் சத்தம் போட்டது.திடுக்கிட்டு எலும்பினம் .
 
வழமையாய் ஒரு வயது போன ஐயாவை முச்சக்கர வண்டியில் வைத்து ஒரு ஆச்சி தள்ளி வருவாள்.நாங்கள் அதைக்காணும் போது ஒவ்வொரு தடவையும் அந்த ஐயாவை திட்டிக்கொள்ளுவோம். ஐயாவிற்கு தொண்ணூறு வயதாவது இருக்கும்.ஆச்சிக்கும் குறைவில்லை.ஒரு தடவை நானும் மோகனும்   போய் கேட்டோம் முச்சக்கர வண்டியை தள்ளுவதற்கு.இந்த நாட்டில இங்கிலீஸ் பொதுவாய் ஒருத்தருக்கும் தெரியாது.எங்களுக்கு தெரிஞ்ச ஒன்று இரண்டு சொல்லுகளே அவைகளுக்கு தெரியாது.நாங்கள் எல்லோருடனும் ஊமைப்பாசைதான்.அந்த ஆச்சியும் ஐயாவும் மறுத்துப்போட்டுதுகள்.இன்றைக்கு அந்த ஆச்சிதான் கீழ விழுந்து போட்டுது.அந்த ஐயா உந்தக்கத்து கத்துது.பிறகு நான் ஆச்சியை பிடிச்சு கூட்டிப்போக ஐயாவை மோகன் தள்ளி வந்தான்.அந்த பார்க்குக்கு பக்கத்தில உள்ள சிறு வீட்டுலதான் அதுகள் வசிச்சதுகள்.அந்த ஐயா அடுத்த நாள் செத்துப்போட்டுது.உலகம் எப்படி விரிஞ்சாலும் பாசம் ஒன்றுதான்.
 
தொடரும். 
  • Like 2

Share this post


Link to post
Share on other sites

கஸ்டமான வாழ்க்கை எண்டாலும் நீங்கள் இலகுவாகச் சொல்லுவது நன்றாய் இருக்கு, நல்ல எதிர்காலம் உங்களுக்குக் கிடைக்கும்ம்ம்ம்ம்!!

 

தொடர்ந்து எழுதுங்கோ ஆசாமி, வாசிக்க ஆவல்!

Share this post


Link to post
Share on other sites

தொடர்ந்து எழுதுங்கள் ,ஆவலாக வாசித்துக்கொண்டே இருக்கின்றோம் .

  • Like 2

Share this post


Link to post
Share on other sites

நல்ல எழுத்தாற்றல் இருக்குது...தொடருங்கோ

Share this post


Link to post
Share on other sites
நாங்கள் தங்கியிருக்கிற நாட்டில கரப்பான் பூச்சி,பாம்பு,
மட்டத்தேள் எல்லாம் சாப்பிடுகினம்.அதால நாங்கள் கடையில 
சாப்பிடுறதில்லை.இங்கை வாழைப்பழத்தை மாவில தோயச்சுப்போட்டு
எண்ணையில சுடுகினம்.ஒரு நாள் நாங்களும் வாங்கிச் சாப்பிட்டனாங்கள்.
பரவாயில்லை நாங்கள் எதிர்ப்பார்த்ததைவிட வித்தியாசமாய் இருந்தது.
எங்களுக்கு அம்மாவின்ர சாப்பாடும், இயக்கக்கடைகளின்ர சாப்பாட்டு ருசிதான் எங்கட நாக்கில நிரந்தரமாய் தங்கியிருக்கு.எதைச் சாப்பிட்டாலும் அப்படிவருகுதில்லை.ஊரிலை சைக்கிள் ஓடுற சந்தோசம் 
இங்க என்னத்தில ஏறினாலும் வருகுதில்லை.எல்லோருக்கும் அவையின்ர   
சின்னவயது பழக்கங்கள்தான்  பிடிப்பாய் போகுமோ தெரியவில்லை.  
 
ஊரின்ர ஞாபகங்கள் அடிக்கடி தொந்தரவு செய்யுது.மோகன் எதையும் கதைக்கிறான் இல்லை. ஆனால் டாவின் ஏதாவது கதையைக்கேட்டு 
மோகன்ர வாயை கிளறுவான். மோகனும் இயன்றவரை அதுகளை மீள ஞாபகப்படுத்த விரும்பிறான் இல்லை.அன்றைக்கொருநாள் தலைவரைப்பற்றி கேட்க தலைவரை பற்றி கதைக்கிற தகுதி தனக்கு இல்லை என்றிட்டான்.தலைவரை அவன் தன் மனதுக்குள் உயர்ந்த இடத்தில வைச்சிருக்கிறான்.டாவினும் இயக்கவிசுவாசிதான் ஆனால் 
அந்த செயட்பாடுகளில இறங்கிற சந்தர்ப்பம் அவனுக்கு கிடைக்கவில்லை.
இணையங்களில வாற கட்டுரைகளை வாசிச்சிட்டு ஐயுரவுகளை கேட்பான். நான் அவனது   ஐயுரவுகளை தீர்த்துவிடுவேன்.அவன் திருப்திகொள்வான்.  உண்மைகளை யாராவது எழுதுங்கடா என நட்போடு கேட்பான்.
 
தொடரும்    
  • Like 2

Share this post


Link to post
Share on other sites

இயக்க கடைகளின் சாப்பாடுக்கு ருசி மட்டும் அல்ல தரம் சுகாதாரம் என்று எல்லாத்திலும் கலக்கல்....

தொடருங்கள்.... :D

Share this post


Link to post
Share on other sites

தொடர்ந்து எழுதுங்கள் வாசிக்கின்றோம்.

Share this post


Link to post
Share on other sites
நான் எப்ப ஆசாமி ஆனேன் என்ற கதையையும் உங்களுக்கு சொல்லோனும் .
நான் வன்னியில ஒரு ஊடகத்தில வேலை செய்தனான்.மனம் நிறைவான வேலை .ஊடகத்தின்ர முக்கிய வேலைகளை பொறுப்பாளர் (போராளி)தான் செய்வார்.நாங்கள் அவர்கள் சொல்லுற வேலையைத்தான் செய்வோம்.அவர்களிட்டதான் அந்த அர்ப்பணிப்பும் இருந்தது.2008 ஆம் ஆண்டோட எங்கட வேலை முடிஞ்சுது.கடைசி போர்க்காலத்தில நாங்கள் பங்கர்களுக்குள்ள ஒளிச்சிருந்தம்.எந்த மக்கள் பணிகளிலையோ ,களப் பணிகளிலையோ ஈடுபடவில்லை.அது முழுப்பிழைதான். எனது பெற்றோர் வயதுபோனவர்கள்.அவர்களையும் பார்க்கவேண்டி இருந்தது. எனது மனநிலையும் துடிப்பாக இருக்கவில்லை.என்னைப்போல் பல ஊடகர்கள் பங்கருக்குள் ஒளித்திருந்தபடி வெட்டிப்பேச்சோடு  காலம் போயிற்று.ஆனால் உண்மையானவர்கள் மக்கள் பணியிலோ/களப் பணியிலோ இருந்தார்கள்.எங்களைப்போல் சில போராளிகளும் பங்கர்களுக்குள் ஒளித்து இருந்தார்கள்.அது வேறுகதை.உண்மைப்போராளிகள் யார்?போலிகள் யார்? என்று அறியக்கிடைத்த ஒரு சந்தர்ப்பம்தான்.மாத்தளனை ஆமி பிடிக்கும் போது
நானும்/நாங்களும் ஆமி பகுதிக்குப் போனோம்.எப்பொழுது புலிகளின் நிர்வாகம் இருக்கும் போது நான் எதிரியின் பகுதிக்குள் போனேனோ அப்போதே நான் ஆசாமிதான்.எங்களை தூற்றாதீர்கள் . எங்களிடம் அந்தளவு அர்ப்பணிப்பு இல்லை.  உண்மை இல்லை.
 
தொடரும்        
Edited by ஆசாமி
  • Like 1

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now