ஆசாமி

எங்கட கதை

Recommended Posts

சாத்திரி அண்ணாவைச் சீண்டும் வரிகளை ஆசாமி எழுதிவிட்டாரா? :( அரசியல் தலைவர்களுக்கு ஈகோதான் முக்கியமாகப் போய்விட்டது என்று எழுதிய வரிகளாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன்.. :unsure::D

Share this post


Link to post
Share on other sites

Australia வில் இந்த வருடம் ஆட்சி மாற்றம் இடம் பெற இருக்கின்றது இனிவரும் லிபரல் கட்சி கடலில் வைத்தே ஆக்களை திருப்பி அனுப்ப கூடிய கடும் போக்கான கட்சி

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

மனம் கனக்கிறது, என்ன சொல்வதென்று தெரியவில்லை :(

Share this post


Link to post
Share on other sites

சாத்திரி அண்ணாவைச் சீண்டும் வரிகளை ஆசாமி எழுதிவிட்டாரா? :( அரசியல் தலைவர்களுக்கு ஈகோதான் முக்கியமாகப் போய்விட்டது என்று எழுதிய வரிகளாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன்.. :unsure::D

 

சாத்திரி அரசியல்வாதியா? சொல்லவே இல்லை .... :D

Share this post


Link to post
Share on other sites

சாத்திரி அரசியல்வாதியா? சொல்லவே இல்லை .... :D

 

இல்லையா பின்னை?! :D

Share this post


Link to post
Share on other sites

உங்கள் கதையை வாசிக்கும் போது மனது கனக்கின்றது, குற்ற உணர்வு ஏற்படுகின்றது. இவ்வளவு கடினத்தையும் தாங்கி வந்துவிட்டீர்கள் ஆசாமி, இனி வரப்போகும் எதுவும் பெரியதல்ல உங்களால் சமாளிக்கமுடியும். எடுத்தமுடிவில் உறுதியாக இருந்து இலக்கை அடையுங்கள். உங்களுக்காக எனது பிரார்த்தனைகள் நிச்சயம் உண்டு.

 

Share this post


Link to post
Share on other sites

 ஆனால் நிறவெறி பிடித்த முட்டாள் அவுஸ்திரேலியர்கள் ஒரு அகதிக்கு அரசு ஆண்டொன்றுக்கு 80000 செலவு செய்கிறது என்று கத்துகிறார்கள் அதிலும் பெரும் பகுதி நிர்வாக செலவுக்கே செலவாகிறது. குறிப்பாக ஒரு மொழிபெயர்ப்பாளர் ஒருவர் 10000 வரை மாதமொன்றுக்கு நோகாமல் உழைக்கின்றனர். காசு வருகிறது என்பதற்காக பலர் புதிது புதிதாக இதை செய்கிறார்கள் பாவம் புதிதாக வருபவர்கள் இவர்கள் சரியாக மொழிபெயர்க்காமல் பலருடைய வாழ்க்கையில் விளையாடிவிடுகிறார்கள். எப்படியோ இங்கு அகதிகள் பிரச்சனை ஒரு அரசியல் பிரச்சனையாகிவிட்டது.ஆனால் அது எங்கள் பிரச்சனை இல்லை, நானும் உங்களைப்போல் ஒரு அகதி இப்பவும் எப்பவும்.முயற்சி திருவினையாக்கும். மறந்து விடாதீர்கள் இந்த மண் திராவிட மண் அவர்கள் தான் வந்தேறு குடிகள்

 

 

அவுஸ்திரேலியர்கள் நிறவெறி பிடித்த முட்டாள்கள் முட்டாள்கள் எனக் கூறியதை வன்மையாகக் கண்டிக்கிறேன். அத்துடன், ஒரு அகதிக்கு ஆகும் செலவு பற்றி உங்களுக்கு தெரிந்த வரவு செலவுகளையும் கூறுங்கள், கேட்க மிகவும் ஆவலாக இருக்கிறது. இன்னொரு விடயம் அவுஸ்திரேலியா திராவிட மண் என்பது எனக்கு இதுவரைக்கும் தெரியாது.

 

 

 

Australia வில் இந்த வருடம் ஆட்சி மாற்றம் இடம் பெற இருக்கின்றது இனிவரும் லிபரல் கட்சி கடலில் வைத்தே ஆக்களை திருப்பி அனுப்ப கூடிய கடும் போக்கான கட்சி

 

நிச்சயமாக அடுத்த தேர்தலில் லிபரல் தான் ஆட்சி அமைக்கும்.

  • Like 1

Share this post


Link to post
Share on other sites
எப்ப கப்பல் வரும் ?எந்த தொலைபேசி வந்தாலும் அங்கிருந்துதான் வருகுதோ என்ற எதிர்பார்ப்பு இப்ப இல்லாமல் போகுது.எல்லாத்தையும் எழுத ஏலாது.எங்கட மட்டும் இல்லை கனபேற்றை பிரச்சனை.நெஞ்சு முட்ட கவலை இருந்தாலும் எந்த சுமையும் இல்லாத உணர்வு இருக்கு.அது ஏனோ தெரியவில்லை.
எங்கட நேரமெல்லாம் கதையோடதான் போகும்.கதையில கைலாயம் போற கழுசறைகள் நாங்கள்.வேற என்னத்தைதான் செய்யுறது.நேற்று இரவு நாலு மணி மட்டும் கதைச்சம்.அறையில கதைச்சால் அடுத்த அறைக்காரன் வந்திடுவான்.அதனால வெளியால படிக்கட்டுல இருந்து கதைச்சம் . நேற்று வழக்கத்திற்கு மாறாய் மோகனும் வந்தான்.  

 

நேற்று வழமை மாதிரி ஆகாயத்தில ஜெட் விடுற கதைதான்.நான் சொன்னன்
ஏன் தமிழர்  மனிதர் இப்ப வாழாத தீவு ஒன்றை வாங்கியோ / தானாயொ உத்தியபூர்வமாய் 
எடுக்கக்கூடாது.நாங்கள் இருக்கிற இந்த நாட்டிற்கு கிட்ட எல்லாம் தீவுகள் இருக்கு. அங்க மாவீரருக்கும்,விடுதலைப்போராட்டத்தில் உயிரிழந்த அனைத்து மக்களுக்கும், தனித்தனியாய் நினைவு மண்டபங்களை எழுப்போணும்.மாவீரர் நாளுக்கு அதிக எங்கட சனம் வரும்தமிழன் ஒன்றாக கூடி கதைக்க ஒரு இடம் வேணும்.

 

.அந்த இடத்தை 
புலம் பெயர் உறவுகள் நினைத்தால் குட்டி சிங்கப்பூர் ஆக்கலாம்.அதுக்காக எங்கட தாய் நிலத்தை மறக்கிறதென்று இல்லை.அத்தோடு மாவீரர்களின்ர பெயர் விபரங்களை முழமையாய் எடுக்கோணும்.விடுதலைக்காய் வீரச்சாவடைந்த அத்தனை போராளிகளையும் ஒன்றுவிடாமல் எடுக்கோணும்.இயக்கம் இல்லாததால பதிவிநிலை குடுக்கத்தேவை இல்லை.  
 என்னடா இதுகளுக்கு தட்டிட்டுதோ என்று நினைக்கிறீங்களோ? உண்மையாய் எங்களுக்கு அறிவில்லை.ஒரு பிளேனைக்கூட ஒழுங்காப்பிடிச்சுப் போகத்தெரியாது.இது சாத்தியப்படாத விசயமென்றால் தயவு செய்து எங்களில கோவிக்காதையுங்கோ.பானையில இருக்கிறதுதானே அகப்பையில வரும்.
 
தொடரும்   
  • Like 4

Share this post


Link to post
Share on other sites

அகதிகளின் படகு அவுஸ்திரேலிய கடல் எல்லைக்குள் நுழையும் பட்சத்தில் அன்னிலையில் அவுஸ்திரேலியாவால் திருப்பியனுப்ப முடியாது என்றே நினைக்கிறேன்,அவுஸ்திரேல்யாவும் ஏனைய மேற்கு நாடுகள் போன்று அகதிகளுக்கான ஜெனிவா சாசனத்தில் கையெழுத்திட்டுள்ளது என்றே நினைக்கிறேன். அந்த அகதிகளை நாட்டிற்கு வெளியே அனேகமாக நெளருவில் அகதி விண்ணப்ப்தை விசாரிப்பதன் மூலம் மேலதிக தெரிவான சட்ட ரீதியான நீதிமன்ற மேன்முறையீடை தவிர்து அனியாயமாக அதிகளவான அகதி விண்ணப்பங்களை நிராகரிக்க கூடிய சூழ்னிலை ஏற்படலாம். அதற்கும் எதிகட்சி அறுதி பெரும்பாண்மையில் வெல்ல வேண்டும்.

Share this post


Link to post
Share on other sites
எதிர்காலத்தைப்பற்றி கனவுகள் இல்லை.நல்லாவந்தால் கனபேருக்கு உதவி செய்யோணும்.இட்லி தோசை,பிட்டு,இடியப்பம் சாப்பிட்டு கனநாள் எண்ணுறான் டாவின். உண்மைதான். நாங்கள் சின்னனில ஒரே புட்டும் சம்பலும்தான் காலமைச் சாப்பாடு.அம்மா புட்டுக்கு இளம் தேங்காய்(முட்டுக்காய்) போடுவா சம்பலுக்கு செத்தல் தேங்காய்தான்.வீட்டில நிறைய தென்னை மரம் நின்றதில அது சாத்தியமாய் இருந்திருக்கக்கூடும். அந்த பிட்டும் சம்பலும் ஒரு சுவைதான். நேற்று மாவை காலமையே இளனிவிட்டு கரைச்சு வைச்சிட்டு பின்னேரம் வெள்ளை மா தோசை சுட்டம் .சம்பலோட சாப்பிட பரவாய்இல்லை நல்லாயிருந்திது . இடத்திற்கு தக்கமாதிரி சமையலை மாத்திறம் அது ஓகே ஆக இருக்கு.
    

எங்கட மண்ணை நினைத்தால் கவலை சொல்லாமல் கில்லாமல் வருகிறது.எதையும் தவிர்த்தும் போக மனிதமனம் இடம் கொடுக்குதில்லை.போராட்டத்துடன் போராளிகள் போலவும் முண்டு கொடுப்பவர் போலவும் நின்ற சிலரின் உண்மைமுகங்கள் / காட்டிக்கொடுப்புகள் போராட்டைத்தை கொச்சைப்படுத்த முயல்வது வேதனை தருகிறது.எல்லா இனத்திலும் இப்படியும் மனிதர்கள் இருப்பார்கள் என்று தவிர்த்துப்போக முடியாமலும் உள்ளது.

இயக்கம் இல்லாத போதிலும் புலத்திலும்,களத்திலும், தமிழகத்திலும் மக்களின் ஜனநாயக எழுச்சி சிறு நம்பிக்கையை தருகிறது.சனல் நான்கின் காணொளிகள்,ஐ நாவின் அறிக்கை உலகை சிறிதளவாவது உழுப்பி விட்டிருக்கிறது.  எங்கட பிரச்சனைகளை இயன்றவரை உலகத்திற்கு விளங்கப்படுத்தோணும் இதை ஒவ்வொரு தமிழரும் செய்யோணும்.உலகம் எப்பவும் தன்ர நலன்களிலதான் நிற்கும் இருந்தாலும் அடி மேல் அடி அடிச்சால் அம்மியும் நகரும் என்று சொல்லுவினம் . 

 
தொடரும்   
  • Like 1

Share this post


Link to post
Share on other sites

எங்கட ஐயா இறந்து இன்று மூன்று வருடங்கள்.ஐயா எங்கள் இரண்டு பேர்ல ஒராளாவது படிச்சு பட்டம் பெறோணும் என்று விரும்பினவர்.அது சாத்தியப்படவில்லை.தோட்டமும் வயலுமாய் நீண்ட அவரது வாழ்வில் போராட்டம் ஒரு முடிச்சாய் வீழ்ந்தது.அவரும் எல்லைப்படை பயிற்சிஎல்லாம் எடுத்தவர்.ஜெயசுக்குறு,ஓயாத அலைகள் மூன்று காலத்தில ஒரு ஆள் எல்லைக்கு போகோணும் இல்லாட்டி காசுக்கு ஒரு ஆளை அனுப்போணும் அவர் அனுப்பிப்போட்டு அவன் வரும்வரை நித்திரை இல்லாமல் திரிவார்.அவரும் போராட்டத்திற்கு சுமார் இருபது இலட்சம் வரை நிதியாய் கொடுத்திருக்கிறார்.ஊரில உழைச்சு இவ்வளவு காசு கொடுக்கிறதுக்கு ஒரு மனம் வேணும் அது அவரிட்ட இருந்தது.       

எங்கட வீட்டில உழைக்கிறது மட்டும்தான் அப்பா , காசை அம்மாவிட்ட குடுப்பார் . அம்மா மிச்சத்தை எல்லாம் பார்ப்பார்.பிறகு அப்பாவிற்கு எவ்வளவு காசு இருக்குது என்றே தெரியாது.அது அம்மாவிட்டதான் காசாகவும் நகையாகவும் இருக்கும்.அப்பா கேட்கும் போதெல்லாம் அம்மா காசு கொடுப்பா.சில நேரம் நகையை அடைவு வைச்சும் கொடுப்பா.நாங்களும் எங்களுடைய தேவையை எல்லாம் அம்மாவிடம்தான் கதைப்பம் அப்பாவிற்கு கிட்டவும் போறதில்லை.சொல்லப்போனால் அப்பாவுக்கு பீச்சல் பயமும்தான்.அப்பா பார்த்தாலே ஆளாளுக்கு ஒரு பக்கத்தால போயிடுவம்.அப்பா சாக கொஞ்ச நாளுக்கு முதல் எங்கட குஞ்சி அப்புவிட்ட சொன்னவர் எனக்கு மகன் இல்லை என்ற கவலை ஒருபுறம் இருந்தாலும் தலைவன் இல்லை என்றதுதான் குத்தூசியாய் குத்துது என்றவர். அண்ணையோட போராளிகள் யாரும் வந்தால் சாப்பாடு குடுக்காமல் அனுப்பக்கூடாது என்றது அவருடைய கட்டளை.எனக்கு தெரியத்தக்கன இந்த கட்டளை எப்பவும் நிறைவேற்றப்பட்டுக்கொண்டிருந்துது.      

 

அண்ணாவின்ர வீரச்சாவு மூட்டம் மட்டும்தான் அவர் அழுததை நான் பார்த்திருக்கிறன்.அவருக்கு எப்பவும் அண்ணையில கொஞ்சம் மதிப்புக்கூடத்தான்.என்னில கொஞ்சம் மட்டுத்தான். அன்றும் ஒரு நாள் இரவு படுத்தவர் விடிய எழும்பவில்லை.முதல் நாளும் நான் சைக்கிள் காற்றுப்போய் சந்தி அடியால உருட்டி வந்தனான் .அவர் சைக்கிளில வந்தவர் தான் சைக்கிளை  ஒட்டிக்கொண்டு வாறன் நீ தன்ர சைக்கிளை கொண்டு போ என்றார்.இல்லை நானே ஒட்டிக்கொண்டு போறன் என்றிட்டன்.  காசு இருக்கோ என்று பொக்கற்றால இரு நூறு ரூபாய் எடுத்துத்தந்தார்.இவங்கள் (ஆமி) எல்லாம் நிட்கிறாங்கள் கெதியில வந்திடு என்று சொல்லிப்போனதுதான் என்னோட கதைச்ச இறுதிக்கதையாய் போயிற்று. அம்மா சொல்லுவா அவர் அண்ணையோட இருக்கப்போயிட்டார் என்று.எனக்கும் சில நேரங்களில உந்த ஐமிச்சம் வரும்.
 
தொடரும்     

 

Edited by ஆசாமி
  • Like 6

Share this post


Link to post
Share on other sites

 

எங்கட ஐயா இறந்து இன்று மூன்று வருடங்கள்.ஐயா எங்கள் இரண்டு பேர்ல ஒராளாவது படிச்சு பட்டம் பெறோணும் என்று விரும்பினவர்.அது சாத்தியப்படவில்லை.

 

அப்பாவிற்கு கிட்டவும் போறதில்லை.சொல்லப்போனால் அப்பாவுக்கு பீச்சல் பயமும்தான்.அப்பா பார்த்தாலே ஆளாளுக்கு ஒரு பக்கத்தால போயிடுவம்.அப்பா சாக கொஞ்ச நாளுக்கு முதல் எங்கட குஞ்சி அப்புவிட்ட சொன்னவர் எனக்கு மகன் இல்லை என்ற கவலை ஒருபுறம் இருந்தாலும் தலைவன் இல்லை என்றதுதான் குத்தூசியாய் குத்துது என்றவர்.

 

அண்ணையில கொஞ்சம் மதிப்புக்கூடத்தான்.என்னில கொஞ்சம் மட்டுத்தான். அன்றும் ஒரு நாள் இரவு படுத்தவர் விடிய எழும்பவில்லை.முதல் நாளும் நான் சைக்கிள் காற்றுப்போய் சந்தி அடியால உருட்டி வந்தனான் .அவர் சைக்கிளில வந்தவர் தான் சைக்கிளை  ஒட்டிக்கொண்டு வாறன் நீ தன்ர சைக்கிளை கொண்டு போ என்றார்.இல்லை நானே ஒட்டிக்கொண்டு போறன் என்றிட்டன்.  காசு இருக்கோ என்று பொக்கற்றால இரு நூறு ரூபாய் எடுத்துத்தந்தார்.இவங்கள் (ஆமி) எல்லாம் நிட்கிறாங்கள் கெதியில வந்திடு என்று சொல்லிப்போனதுதான் என்னோட கதைச்ச இறுதிக்கதையாய் போயிற்று.

தொடரும்     

 

ஆசாமி உங்களுக்கு  எப்படியும் ஒரு விடிவு கிடைக்கும் 

யோசிக்காமல் வாழ்க்கையை எதிர்கொள்ளுங்கள் 

எனக்கு அம்மாவை விட அப்பாவைத்தான் பிடிக்கும் 

அப்பாவின் நினைவுகள் என்றும்  நெஞ்சை விட்டு அகலாது  :) 

  • Like 1

Share this post


Link to post
Share on other sites
எங்கட தங்கும் அறை சிறியது.அதுக்குள்ளே ஒரு கட்டில் இருக்கு.ஒரு மூலைக்குள்ள எங்கட சமையல் சாமான்களை அடுக்கி வைச்சிருப்பம். அடுத்த மூலைக்குள்ள சின்ன குக்கர்ல சமையல் . இரவில  கட்டிலுக்கு பக்கத்தில சமாந்திரமாய் பாயை விரிச்சு நானும் மோகனும் படுப்பம்.கட்டிலில்ல டாவின் படுப்பான். எங்கட உடுப்பு பாக்குகள் கட்டிலுக்கு கீழ இருக்கும்.  அறைக்கு ஒரு பக்கம் கதவும் ,மற்ற பக்கம் யன்னலும் இருக்கு. இது மூன்றாவது மாடி . இப்படி ஆறு மாடியிலும் கன
அறைகள் உண்டு.
இரவு நாங்கள் பிந்தித்தான் படுத்தனாங்கள்.படுத்திருந்தும் மெதுவாய் கதைச்சுக்கொண்டிருந்தனாங்கள்.எத்தனை மணிக்கு நித்திரை ஆனம் என்று தெரியவில்லை.        

 

விடிய ஐஞ்சரை மணிக்கு ஒரு பெரிய அவலக்குரல் . திடுக்கிட்டு எழும்ப டாவின் உருண்டு மோகனுக்கு மேல விழுந்தான்.மோகனுக்கு வலது நெத்திப்புருவம் வீங்கிற்றுது.என்ன என்று விசாரிச்சாள். டாவின் கனவு கண்டிருக்கிறான் நாங்கள் போன படகு தாண்டுட்டுதாம்.அதுதான் கனவில கத்தி உருண்டு விழுந்திருக்கிறான்.எனக்கு மோகனை பார்க்க பரிதாபமாய் இருக்கு.மோகனோ விழுந்து விழுந்து சிரிக்கிறான்.இவன் இப்படி சிரிச்சதை ஒரு நாளும் நான் பார்க்கயில்லை.டாவினுக்கு இன்னும் திகைப்பு போகயில்லை.அதோட மோகனை குற்ற உணர்வோட பார்த்துக்கொண்டு இருக்கிறான்.
 
தொடரும்   
  • Like 2

Share this post


Link to post
Share on other sites

நன்றாகப் போகிறது ஆசாமி.

 

Share this post


Link to post
Share on other sites
எங்கட ஊரில மேதினம் கொண்டாட்டம் எல்லாம் நடக்குது ஒரு பக்கம் மகிழ்வு இருந்தாலும் இன்னொரு பக்கம் கவலையாயும் இருக்கு.மனச்சாட்சி சோரம் போன அடிவருடிகளும் மேதினக்கொண்டாட்டம் நடத்துதுகள்.அதுவும் விடுதலைக்காய் உயிரைச் சிந்தின மண்ணில. தாங்கள் தான் அபிவிருத்தி செய்வதாய் அரசாங்கமும் அடிவருடிகளும் சொல்லுயினம்.இவையும் ஆமியும் இல்லாமல் அரச சார்பற்ற நிறுவனங்களை சுயாதீனமாய் வேலை செய்யவிட்டால் இன்னும் நாலு மடங்கு அபிவிருத்தி தெரியும்.அங்கு முதல் தேவையாய் இருக்கிறது நிம்மதி.அது இருந்தால்தான் எதையும் அனுபவிக்கலாம் . அதைவிட்டிட்டு ஓட்டை சட்டிக்கை நீர் நிரப்பியினம் . தங்கட பொக்கற்றுகளுக்குள்ள காசை நிரப்பிக்கொண்டு.  தன் சொந்த இனத்தை காட்டிக்கொடுக்க எவ்வளவு கீழ் மனம் வேணும் . மனிதனின் நாகரீகம் காலத்துடன் வளர்ந்தாலும்  காக்கை வன்னியர்கள் பிழைப்புக்காக இரத்தம் உருஞ்சும் அட்டையாய் ஒட்டிக்கொண்டுதான் இருப்பார்கள்.
 
தொடரும்  
  • Like 2

Share this post


Link to post
Share on other sites

நன்றாகப் போகிறது ஆசாமி.

அவர்  என்ன விடுகதையே  போடுகிறார் சுமே.... :(

Share this post


Link to post
Share on other sites

ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக ஒவ்வொன்றையும் எதிர்கொள்வார்கள் விசுகு அண்ணா. என்னால் போலியாக எல்லாம் கருத்தெழுத முடியாது. நான் எழுதியதில் கேலியாகவோ அல்லது நீங்கள் எழுதியதுபோல் கவலைப்படவோ ஒன்றும் இல்லை என நினைக்கிறேன். ஒருவர் என்ன எழுதினாலும் வந்து நன்று என்றோ அல்லது மிகைப்படுத்தவோகூட என்னால் முடியாது. அவர் எழுதுவது தன்  கதை. அதில் அவருக்கு நான் உனக்காகக் கவலைப்படுகிறேன் என்று எல்லோரும் எழுதவேண்டும் என்றும் இல்லை. ஆறுதல் வார்த்தைகளை ஒவ்வொரு பந்தியிலும் கூறவேண்டும் என்றும் இல்லை. அதை நிட்சயமாய் ஆசாமி எதிர்பார்க்கவும்  மாட்டார் என நினைக்கிறேன். ஏன் அண்ணா ?????

 

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

Share this post


Link to post
Share on other sites

திண்ணைப் பக்கமும் வரலாம் தானே விருப்பமாயின்

Share this post


Link to post
Share on other sites
ஊரில சரியான வெயிலாம்.வெக்கை தாங்க ஏலாதாம்.இப்ப ஊரில லஞ்சம்தான் மலிவாய் கிடைக்குதாம்.அம்மாவை இடைக்கிடை போய்ப்பார்க்கிறனான். நண்பன் கதைத்த இரு நிமிடங்களில் உளறியவை.
நண்பனுக்கு ஊர்வேலைதான். முந்தியும் இப்பவும்.எங்கட  மக்களில கொஞ்சப்பேர் இப்படி இருக்கினம்.இவர்கள் இருக்கிறதாலதான் சமூகம் வாழுது. பொதுவாய் எல்லோரும் தாங்களும் தங்கட குடும்பமும் என்று யோசிக்கினம் .விரல்விட்டு எண்ணக்கூடியவர்கள்தான்  தங்கட நேரத்தை,உழைப்பை தங்கட நலன் கருதாமல் விடுகினம்.இதுக்குள்ளும் சிலர் தற்பெருமை பேசுகினம்.இதுகள் எல்லாம் பெரிய பிரச்சனை இல்லைத்தான். போனமாதம் எனக்கு தெரிந்த ஒருவர் ஊரில இறந்து போனார்.அவர் ஒரு சமூக சேவகர்.அவர் தன்னை முதன்மைப்படுத்தியவர் இல்லை.அவரது இறப்பும் நாலொடு ஐந்தாய் போய் முடிந்துவிட்டது.புலிகள் இருந்திருந்தால் நாட்டுப்பற்றாளர் கௌரவம் இருந்திருக்கும்.இப்படி சில நல்ல மனிதர்களின் இறப்புக்கள்   கண்டும் காணாமல் போய்க்கொண்டிருக்கிறது .  
சுயநல மனிதர்களின் எண்ணிக்கை வீதம் நாளும் அதிகரிக்கிறது.சுயநல மனிதர்களின் சொகுசு வாழ்வின் ஈர்ப்பும் காரணமாய் இருக்கலாம்.யாரையும் குறை சொல்வது பொருத்தப்பாடற்றது. எதையும் கதைப்பதும்,எழுதுவதும் இலகுவானது.அப்படி வாழ்வதே உண்மையானது.
 
தொடரும்  
  • Like 2

Share this post


Link to post
Share on other sites

ஐந்து ஆறு நாள் ஆசாமியை நின்மதியா இருக்க விடமாட்டியளோ  அலை?? :D

 

Share this post


Link to post
Share on other sites

ஐந்து ஆறு நாள் ஆசாமியை நின்மதியா இருக்க விடமாட்டியளோ  அலை?? :D

 

 

கதை எழுதி முடியும் வரை நிம்மதியாய் இருக்க விடமாட்டோம் :D . ஆசாமி பயணம் தொடங்கிவிட்டார் போலை. பயணம் இனிதாக அமைய இறைவன் அருள்புரிவாராக! :)

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now