Jump to content

எங்கட கதை


Recommended Posts

ஆசாமியின் இயல்பான எழுத்து நடை உணர்வுகளை நன்கே வெளிப்படுத்துகிறது. நன்றி ஆசாமி.

Link to post
Share on other sites
 • Replies 133
 • Created
 • Last Reply
 • கருத்துக்கள உறவுகள்

இன்றைக்கு புது வருஷம் ஆனால் எதுவும் புதிதாய் இல்லை.நாங்கள் இன்றைக்கு அவுசு சமைச்சம் . மரக்கறி சோற்றுக்குழையல்   அது மிளகாயிப்பொரியல் உடன் சாப்பிட நல்லா இருக்கும்.இன்றைக்கு இனிப்பில்லா புது வருஷம்.இந்த வருசத்திலயாவது எங்களுக்கு விடியாட்டியும் எங்கட மக்களுக்கு விடியோனும்.அந்த மக்கள் நிம்மதியாய் வாழோணும் . போராட்டத்திட்காய் உழைத்தவர்கள் நொய்ந்து போனார்கள்.ஆனாலும் அவர்கள் அவர்களாய் மெல்ல மெல்ல எழுவார்கள்.   அடிவருடிகளை தவிர்த்து ஏனைய தமிழர்கள் ஒன்றாக எழவேண்டும்.சுயநலங்கள் போதும் . எங்களுக்குள் உள்ள சிறு பிரச்சனைகளை பெரிது படுத்தாமல் , ஒருவரை ஒருவர் மதித்து விடுதலைக்கான ஒவ்வொரு முயற்ச்சிக்கும் எமது ஆதரவை வழங்கவேண்டும்.

 

எழுதுவது சுலபமானது எதையும் செய்து காட்டுவது அவ்வளவு சுலபமில்லை. இன்று செய்து காட்டுபவர்களைப்பற்றி எழுதுபவர்கள் எழுதித்தள்ளுகிறார்கள்.இதை யாரிட்ட சொல்லி அழுவது? யாரையும் விமர்சிக்க முன் அவர்களது போராட்ட பங்களிப்பையும் ஒப்பிட்டு பார்க்கவேண்டும்.என்னைப்போல் எழுதும் பலருக்கு பெரிய போராட்ட பங்களிப்புகள் இல்லை.நான் என்னை நினைத்து வெட்கம் கொள்கிறேன்.இறுதி போராட்டத்துடன் உரிய பங்களிக்காத  சில வேஷதாரிகள் புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியில் இருந்து தப்பி வந்து இன்று அடிவருடிகளுடன் இணைந்து  உள்ளனர். அவர்கள் இன்றும் இயக்கத்தை வைத்து பிழைப்பு நடத்துகின்றனர்.
 
தொடரும்  

 

 

 

Link to post
Share on other sites

 

இன்றைக்கு புது வருஷம் ஆனால் எதுவும் புதிதாய் இல்லை.நாங்கள் இன்றைக்கு அவுசு சமைச்சம் . மரக்கறி சோற்றுக்குழையல்   அது மிளகாயிப்பொரியல் உடன் சாப்பிட நல்லா இருக்கும்.இன்றைக்கு இனிப்பில்லா புது வருஷம்.இந்த வருசத்திலயாவது எங்களுக்கு விடியாட்டியும் எங்கட மக்களுக்கு விடியோனும்.அந்த மக்கள் நிம்மதியாய் வாழோணும் . போராட்டத்திட்காய் உழைத்தவர்கள் நொய்ந்து போனார்கள்.ஆனாலும் அவர்கள் அவர்களாய் மெல்ல மெல்ல எழுவார்கள்.   அடிவருடிகளை தவிர்த்து ஏனைய தமிழர்கள் ஒன்றாக எழவேண்டும்.சுயநலங்கள் போதும் . எங்களுக்குள் உள்ள சிறு பிரச்சனைகளை பெரிது படுத்தாமல் , ஒருவரை ஒருவர் மதித்து விடுதலைக்கான ஒவ்வொரு முயற்ச்சிக்கும் எமது ஆதரவை வழங்கவேண்டும்.

 

எழுதுவது சுலபமானது எதையும் செய்து காட்டுவது அவ்வளவு சுலபமில்லை. இன்று செய்து காட்டுபவர்களைப்பற்றி எழுதுபவர்கள் எழுதித்தள்ளுகிறார்கள்.இதை யாரிட்ட சொல்லி அழுவது? யாரையும் விமர்சிக்க முன் அவர்களது போராட்ட பங்களிப்பையும் ஒப்பிட்டு பார்க்கவேண்டும்.என்னைப்போல் எழுதும் பலருக்கு பெரிய போராட்ட பங்களிப்புகள் இல்லை.நான் என்னை நினைத்து வெட்கம் கொள்கிறேன்.இறுதி போராட்டத்துடன் உரிய பங்களிக்காத  சில வேஷதாரிகள் புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியில் இருந்து தப்பி வந்து இன்று அடிவருடிகளுடன் இணைந்து  உள்ளனர். அவர்கள் இன்றும் இயக்கத்தை வைத்து பிழைப்பு நடத்துகின்றனர்.
 
தொடரும்  

 

உங்களுக்கு மட்டுமல்ல  எங்கள் அனைவருக்கும் ஒரு நாள் விடியும் 

அன்று நாங்கள் அனைவரும்  புத்தாண்டு கொண்டாடுவோம்  

தொடருங்கள் ஆசாமி

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஆசாமி அவுஸ்திரேலியாவின் ஆரம்ப கால குடிவரவு கொள்கை தனி வெள்ளை இன மக்களை அடிப்படையாக கொண்டு ஆரம்பித்தது(ஆரம்பத்தில் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோரை குடியேற்றிய நாடு) ,ஆனாலும் அவர்களது கொள்கையை தொடர முடியாத நிலையில் சில துறைசார் இடைவெளியை நிரப்ப வேற்று இனத்தவரையும் எடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டது , தற்போதைய நிலையில் அவுஸ்திரேலியாவில் உற்பத்தி துறையினால் மற்ற நாடுகளினுடன் விலை ரீதியாக போட்டியிட முடியாமல் உள்ளது அதற்கு காரணம் நிர்வாகத்துறையின் மித மிஞ்சிய செலவு காரணம் ,எமது நிறுவனம் தனது பய் ரொல்ல் பகுதியை ஆசிய நாடு ஒன்றுக்கு மாற்றி விட்டது. இந்நிலை வெள்ளை சட்டை உத்தியோகம் அவுஸ்திரேலியாவில் குறைந்து வருகிறது. உற்பத்திதுறை கூட விலை ரீதியாக மற்ற நாடுகளுடன் போட்டியிட முடியாது,காரணம் நாணயம் மாற்று விகிதம் அதிகம். இருப்பினும் 6 தங்கி வாழ்வோருக்கு 1 உழைக்கும் பகுதி இருக்கின்றது. இன்னிலையை ஈடு செய்ய உங்கள் உதவி இந்த அவுஸ்திரேலியாவுக்கு தேவை அது ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் தெரியும் ஆனால் நிறவெறி பிடித்த முட்டாள் அவுஸ்திரேலியர்கள் ஒரு அகதிக்கு அரசு ஆண்டொன்றுக்கு 80000 செலவு செய்கிறது என்று கத்துகிறார்கள் அதிலும் பெரும் பகுதி நிர்வாக செலவுக்கே செலவாகிறது. குறிப்பாக ஒரு மொழிபெயர்ப்பாளர் ஒருவர் 10000 வரை மாதமொன்றுக்கு நோகாமல் உழைக்கின்றனர். காசு வருகிறது என்பதற்காக பலர் புதிது புதிதாக இதை செய்கிறார்கள் பாவம் புதிதாக வருபவர்கள் இவர்கள் சரியாக மொழிபெயர்க்காமல் பலருடைய வாழ்க்கையில் விளையாடிவிடுகிறார்கள். எப்படியோ இங்கு அகதிகள் பிரச்சனை ஒரு அரசியல் பிரச்சனையாகிவிட்டது.ஆனால் அது எங்கள் பிரச்சனை இல்லை, நானும் உங்களைப்போல் ஒரு அகதி இப்பவும் எப்பவும்.முயற்சி திருவினையாக்கும். மறந்து விடாதீர்கள் இந்த மண் திராவிட மண் அவர்கள் தான் வந்தேறு குடிகள்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்ரேலியா நல்ல நாடு வர முடிந்தால் வாங்கோ......தொடருங்கோ

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கோ ஆசாமி.

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
எழுதி வாழ வேண்டிய தேவை பலருக்கு இருக்கும். அது தவிர்க்க முடியாதது. ஆனால் இனத்தை காட்டிக்கொடுக்க எழுதக்கூடாது.போராட்டத்தை உந்த போராட்ட காலத்தில் பலர் எழுத்து மூலமும் பங்களித்தனர்.ஊடகம் மூலமும் பங்களித்தனர்.அதே காலத்திலேயே போராட்டத்தை வலுவிழக்கச் செய்ய எழுதிய தமிழரும் உண்டு.இது ஒரு இனத்தின் சாபக்கேடு.இன்றும் சிங்கள ஆதிக்கத்திற்கு எதிராய் எழுத்தினை பயன்படுத்தும் பங்காளிகள் உண்டு.இன்றும் சிங்களத்திற்கு நேரிடையாயும் மறைமுகமாயும் முண்டு கொடுக்கும் கோடரிக்காம்புகளும் உண்டு. காலம் எல்லாவற்றையும் குறிப்பெடுக்கும்.
 
தொடரும் 
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

எழுதி வாழ வேண்டிய தேவை பலருக்கு இருக்கும். அது தவிர்க்க முடியாதது. ஆனால் இனத்தை காட்டிக்கொடுக்க எழுதக்கூடாது.போராட்டத்தை உந்த போராட்ட காலத்தில் பலர் எழுத்து மூலமும் பங்களித்தனர்.ஊடகம் மூலமும் பங்களித்தனர்.அதே காலத்திலேயே போராட்டத்தை வலுவிழக்கச் செய்ய எழுதிய தமிழரும் உண்டு.இது ஒரு இனத்தின் சாபக்கேடு.இன்றும் சிங்கள ஆதிக்கத்திற்கு எதிராய் எழுத்தினை பயன்படுத்தும் பங்காளிகள் உண்டு.இன்றும் சிங்களத்திற்கு நேரிடையாயும் மறைமுகமாயும் முண்டு கொடுக்கும் கோடரிக்காம்புகளும் உண்டு. காலம் எல்லாவற்றையும் குறிப்பெடுக்கும்.
 
தொடரும் 

 

 

இது இயக்கத்திலிருந்து இப்ப மக்களை விழிப்படைய செய்கின்றோம் என எழுதிப்பிழைப்பவர்களைப்பற்றியா?

Link to post
Share on other sites

கடைசி வரை முள்ளி வாய்க்காலில் நின்றனான் என சொல்லி திரியும் யோ கர்ணன் போன்றவர்களை பற்றி...

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடைசி வரை முள்ளி வாய்க்காலில் நின்றனான் என சொல்லி திரியும் யோ கர்ணன் போன்றவர்களை பற்றி...

 

நன்றி சுண்டல், அட அவரா

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஆசாமி போன கிழமையும் 60 பேர் இங்கு வந்தவர்கள் (Perth, Western Australia)

 

நல்ல நாடு, நல்லதே நடக்கும் என நினைத்து வாருங்கள்

 

தொடருங்கள் உங்கள் கதையை 

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
என்னற்றையும் மோகனிற்றையும் கொஞ்ச உடுப்புகள் தான் இருக்கு.ஆனால் எப்போதும் மரவள்ளி கிழங்கை சீவி பொரிச்சு வைத்திருப்போம்.நாங்கள் வெளிக்கிடையிக்கை அதைத்தான் கொண்டுபோவதாய் உள்ளோம்.இப்ப நாட்கள் மாதங்களாகி ஆறு தடவை பொறித்து சாப்பிட்டுட்டம்.ஆனால் இப்பையும் பொரிச்சு வைச்சிருக்கிறம். ஒரு தடவை எங்கள் மூன்று பேரையும் காய்ச்சல் விழுத்திட்டுது. அப்பவும் அந்த மரவள்ளிப் பொரியல்தான் எங்கட தஞ்சம்.அந்த நேரம் மிகக் கஷ்டமாய் இருந்தது.அநாதை போல் அகதி போல் அது இருந்திருக்கக்கூடும்.இந்த இடங்களில நோய் வரக்கூடாது.யாராவது ஒராள் இறந்தால் அதை எப்படி அடக்கம் செய்யிறது என்று கூட யோசித்தோம்.டாவினுக்கு தீர்வு இருந்திருக்கும். 
மரவள்ளிப் பொரியலை தயாரிக்கிற பொறுப்பு மோகனுக்குத்தான்.நாங்களும் உதவி செய்வோம்.இப்பவும் நானும் டாவினும் பொரியலோட பிளேன்றி அடிச்சு அரசியல் கதைத்துக்கொண்டிருக்கிறம் . வழமைமாதிரி மோகன் வானத்தை பார்த்துக்கொண்டு இருக்கிறான்.இன்றைக்கு மழை குறைவு.ஆனாலும் வானம் இருட்டி இருக்கு.
தொடரும்   
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கடை கதையை தொடந்து வாசிக்கிறனான் . உங்களுக்கு என்ன சொல்லிறது எண்டு தெரியேலை .

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

உங்கட எழுத்தில் ஒரு இயல்பும் உண்மையும் இருக்கு. இது உங்களை சாகும்வரை எழுத வைக்கும். இப்போ நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுக்கும் ஒரு நினைவும் பொருந்தும். அதை உங்கட கதையில் யதார்த்தமாக பார்க்கிறேன். தொடர்ந்து எழுதுங்கள். ஆவலுடன் காத்திருக்கிறேன்.

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
போன கிறிஸ்மஸ் இற்கு இரண்டு கிழமைக்கு முதல் திடீரென எங்களுக்கு எங்கன்ர முகவரிட்ட இருந்து அழைப்பு வந்துது.போறத்துக்கு ஆயுத்தமாய் வாங்கோ . நாங்களும் அறையை எல்லாம் ஒப்படைச்சிட்டு எங்களிட்ட இருந்த குசினிச் சாமான்களை டாவினின்ர நண்பனுக்கு கொடுத்துட்டு வெளிக்கிட்டம்.வெளிக்கிடையிக்க டாவின் சொன்னான் உயிரோட நாங்கள் இருந்தால் பிறகு ஒரு தடவையாவது மூன்று பேரும் பிளேன்லை
மீண்டும் இந்த நாட்டுக்கு வந்து ஹோட்டல்ல தங்கோனும்  என்று.நானும் எல்லா இடத்தையும் கடைசியாய் பார்க்கிறமாதிரி பார்த்துட்டுப்போனன்.இரண்டு நாள் கடக்கரையில தங்கி இருந்திட்டு வந்தம்.வரையிக்க டாக்ஸி பிடிச்சு வந்தம்.இங்க டாக்சி எல்லாம் ஓடுற கிலோமீட்டருக்குத்தான் காசு.அவன் சுத்தி சுத்தி வந்து இரண்டு மடங்கு காசு வாங்கிட்டான்.ஒவ்வொரு கிலோமீட்டரும் கூடக்கூட நெஞ்சு பக் பக் என்று அடிச்சுக்கொள்ளும் , அவனோட கதைக்க மொழி தெரியாதே/புரியாதே.பனையால வீழ்ந்தவனை மாடு ஏறி உலக்கின மாதிரி.வந்த உடன் அறை எடுக்க கஷ்டமாய்ப்போயிற்று . எல்லாம் சி என்று போச்சு.
 
தொடரும்    
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

மொழி பெயர்ப்பாளர்கள் எம்மவர்கள் என்ற ஒரு காரணத்திற்காக அவர்களை முழுமையாக நம்பிவிட வேண்டாம், அவர்களுக்கு அரசாங்கம்தான் காசு கொடுக்கிறது என்பதை மறந்துவிடவேண்டாம் ஆசாமி நீங்கள் வெறும் பெயரளவில் ஆசாமி எம்மவர்கள் உண்மையிலேயே பெரிய ஆசாமிகள்.அவுஸ்திரேலியா இன்று 39 பேரை திருப்பியனுப்ப உள்ளது.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
நேற்று டாவின் கொம்புயுட்டரில் இணையத்தை பார்த்துக்கொண்டிருந்தான். எங்களிடம் தொடர்ந்து நெற் பார்க்கிற வசதி இல்லை.திடீரென்று மோகனை கூப்பிட்டான் டாவின்.அங்கவீனமுற்ற  முன்னாள் போராளிகள் நேரடியாய் உதவி கேட்கிற ஒரு வீடியோவை அரசோட இயங்கிற அரச சார்பற்ற இணையம் பதிவேற்றம் செய்திருந்தது.மோகனும் உன்னிப்பாய் பார்த்துக்கொண்டிருந்தான்.எனக்கும் போராளிகள் கதைக்கும் குரல் கேட்டது.இடையில் மோகன் அழத்தொடங்கிவிட்டான் .டாவினின் பாடு பெரும்பாடு ஆகிவிட்டது.சொறி மோகன் சொறி மோகன் என்றபடி இருந்தான்.சிறிது நேரத்தில் மோகன் நித்திரையாகிவிட்டான்.நேற்று என்ரபாடுதான் சமையல். மீனும் சோறும். ஒருகாலத்தில் உயிரை வைத்து போராடிய போராளிகளின் நேரடியாய் உதவி கோரும் குரல் நெஞ்சை இன்னும் பிசைகிறது. அவர்களுக்கு உதவி தேவை அங்கிருப்பவர்கள் அடையாளம் கண்டு அவர்கள் கேட்காமல்  நேரடியாய் உதவும் நிலையை உருவாக்கவேண்டும். எக்காரணம் கொண்டும் அரசாங்க அரச சார்பற்ற நிருவனங்களுக்கூடாக உதவி அந்நிறுவனங்களை வளர்த்துவிடக்கூடாது .   அரசாங்கம் ஏதோ ஒரு காரணத்திக்காய்த்தான்   அதை உருவாக்கியுள்ளது.  வெளிநாடுகள்  மீள்குடியேற்றத்திட்கும், புனர்வாழ்விற்கும் கொடுக்கின்ற நிதி அரசாலும் ,அடிவருடிகளாலும் கொள்ளை அடிக்கப்படுகிறது.சிங்கள குடியேற்றமும் நடக்கிறது. எது எப்படி இருப்பினும் அந்த மனிதங்களுக்கு  வேறு ஒரு வழியில் உதவி கிடைத்தால் எவ்வளவு நன்றாய் இருக்கும்.
 
தொடரும்  
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நிதி நிலைமை இடங்கொடாத போதும், சில பாரங்களை, விரும்பிச் சுமக்கிறேன்! அதே வேளை, போராட்டங்களைக் காரணம் காட்டி வந்தவர்கள் பலர், வசதியாக உள்ள நிலையிலிருந்தும் கூடப் பின்னடிப்பதைப் பார்க்க, மிகவும் கடினமாக இருக்கும்!

 

தொடர்ந்து எழுதுங்கள், ஆசாமி!, :D

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
எங்கட மண் முந்தி கறையான் அரிச்சமாதிரித்தான் ஆக்கிரமிக்கப்பட்டுக்கொண்டிருந்தது. இப்ப வெளிச்சத்தில ஆக்கிரமிக்கப்படுகிறது.எங்கட அடிப்படை வாழ்வு ஆட்டம் காணத்தொடங்குகிறது. ஆனால் எங்கட அரசியல் வாதிகளில பலர்  தங்கட ஈ கோ பிரச்சனைகளைத்தான் தீர்க்கிறதில கண்ணா இருக்கினம்.எங்கட பிரச்சனை ஒரு இனத்தினர பிரச்சனை.அனைவரும் ஏதோ ஒருவகையில இனத்தின்ர எதிர்காலத்தை காக்கவேணும் இல்லாட்டி அடுத்த அடுத்த சந்ததிகளிலேயே ஈழத்தில தமிழனின் அடையாளம் கேள்விக்குறியாயிடும். இவ்வளவு பிரச்சனைகளுக்குள்ளும் ஆக்கிரமிப்பாளனுக்கு வேலை செய்யிற தமிழ் ஆட்களும் இருக்கிறார்கள் .இது மிக துரதிஷ்ட வசமானது.
 
இயக்கம் இல்லா இடைவெளியில் எங்களில் பலரின் சுயம் வெளித்தெரிகிறது. நேற்றும் டாவின் சொன்னான்.ஈழத்தை மீட்க இல்லாட்டியும் இந்த கோடரிக்காம்புகளை கவனிக்க ஒரு இயக்கம் உருவாகோணும். இது அவனின் முதிர்ச்சியற்ற கூற்றாய் இருக்கலாம்.ஆனாலும் ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு கவலை.
 
இங்க ஞாயிற்றுக் கிழமை என்றால் எல்லாம் ஓய்ஞ்சு போகும். எங்கட நாள் வழமை மாதிரி சந்தை பிறகு சமையல் பிறகு நடை எப்போதும் திருப்பி திருப்பி ஊரைப்பற்றி கதை.வெறும் கதையோடையே காலம் கழிக்கிற வெறுவாய் சப்பிகள் ஆகிற்று எங்கட வாழ்க்கை . பிள்ளைகளை பழி வாங்கிற புதிய அத்தியாயம் மகிந்தவால ஆரம்பிக்கப்பட்டது.   காலம் இதுக்கு என்ன பதிலை கொடுக்கும்?
இது இப்ப பதில் அளிக்க வேண்டிய கேள்வி.
 
தொடரும்       
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் இடைவெளி விடாது தொடர்ந்து எழுதுவதற்கு நன்றி ஆசாமி

 

Link to post
Share on other sites

நீங்கள் இடைவெளி விடாது தொடர்ந்து எழுதுவதற்கு நன்றி ஆசாமி

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆசாமி  எப்பிடியாவது  வெளிநாடு வந்து சேர்ந்து விடுங்கள்  பிறகு இங்கிருந்து  இணையத்தில் போராட்டம் நடாத்தி தமிழீழம்  வாங்கி விடலாம். ********** ******. அது சரி கப்பல் எப்ப வருமாம்.??

 

நியானி: ஒரு வரி தணிக்கை

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.


×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.