Jump to content

`பாலா' சொல்ல முற்பட்டது என்ன?


Recommended Posts

`பாலா' சொல்ல முற்பட்டது என்ன?

-கலாநிதி எஸ்.ஐ.கீதபொன்கலன்-

* இந்தியத் தொலைக்காட்சிப் பேட்டி ஏற்படுத்தியுள்ள அதிர்வலைகள்....

நாட்டில் சொல்லிக் கொள்ளத்தக்க நம்பிக்கையூட்டும் அபிவிருத்திகள் எதுவும் ஏற்பட்டிராதபோதும் அரசியலும் அதைச் சுற்றியுள்ள ஏனைய மூலக்கூறுகளும் விரைவாகவே நகரத் தொடங்கியுள்ளன. அதன் காரணமாக இந்த நாடகத்தின் காட்சிகள் வேகமாக மாறத் தொடங்கியுள்ளன. ஒரு காட்சியின் முக்கியத்துவம் மனதில் பதியுமுன் மறுகாட்சி வந்து போவதால் எல்லாம் மறைக்கப்பட்டு விடலாம். உடனடி நிலையில் மாபெரும் காட்சிபோல் தோற்றமளித்த பாரமி குலதுங்கவின் மரணம் கூட ஒரு வாரத்திற்கு மேல் நினைவிலிருக்குமா என்பது சந்தேகமே. இந்த வேகம் எங்கு போய் நிற்குமோ என்பது சுவாரஸியமானது மட்டுமல்ல இச்சமூகத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கக் கூடியதாகவும் இருக்கும்.

கண்காணிப்புக் குழுவின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் நோர்வே கூட்டத்தின் முக்கியத்துவத்தை இரண்டாந்தரத்திற்குத் தள்ளிவிட்டு பாலசிங்கத்தின் ராஜீவ் காந்தி கொலை பற்றிய நேர்காணல் ஊடகத் தலைப்புகளை தனதாக்கிக் கொண்டுள்ளது. இது மிக முக்கியத்துவமுடைய ஒரு `பிரச்சினை' என்பதால் பத்திரிகைத் தலைப்புகள் வேறு பிரச்சினைக்கு தாவுவதற்கு முன்னர் அதுபற்றி சற்றே நோக்குவது பொறுத்தமானதாயிருக்கும்.

கடந்த வாரம் இந்தியத் தனியார் தொலைக்காட்சிசேவை ஒன்றிற்கு செவ்வி ஒன்றை வழங்கிய அன்டன் பாலசிங்கம், ராஜீவ் காந்தியின் கொலைக்கு மன்னிப்புக் கோரியிருப்பதாக சர்வதேச மற்றும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இச்செய்திகளின்படி புலிகள் கொலையைத் தாமே செய்ததாக பொறுப்பேற்றிருப்பதுடன் அதற்காக மன்னிப்பும் கோரியிருப்பதாகவும் கூறப்பட்டது. அதேசமயம், இது பற்றிக் கருத்துக்கூறிய ஊடகங்களும் ஆய்வாளர் பலரும் பேட்டியையோ அல்லது அது பற்றிய முழுமையான அறிக்கையையோ பாராது தலையங்கத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு செயற்பட்டதாகவே கருத வேண்டியுள்ளது.

ஏனெனில் பாலசிங்கத்தின் கருத்துகள் சரியான வகையில் பிரதிநிதித்துவப்படுத்தப்பட

Link to comment
Share on other sites

http://www.hindustantimes.com/news/7598_17...00500020009.htm

2002 இல் சொன்னதை திருப்பி 2006 சொன்ன பொழுது அதை திரிபுபடுத்தி "மன்னிப்புக் கேக்கினம்" "பொறுபை ஏற்றுக் கொண்டுட்டினம்" என்று நாடகமாடிச்சினம். அதன் விளைவுகள் அவை எதிர்பார்த்ததைவிட எதிர்மாறாக வந்தவுடன் அவையே அடுத்த அடுத்த நாட்களில் "அவர்கள் உரிமை கோரவில்லை" "மன்னிப்பு கேரவில்லை" என்று தாம் எழுதியதை தாமே மறுதலிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டினம். இதிலிருந்து தெரிய வேண்டும் மூக்குடைபட்டது யார் என்று?

சமாதான முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில் இந்தியாவின் ஆதரவு இல்லாமல் எந்தவொரு தீர்வையும் எட்ட முடியாது என்று புலிகள் எண்ணுவதாக வியாக்கியானபடுத்த முனையும் குறிப்பிடப்பட்ட இந்தியத்தரப்பு இந்த 4.5 வருடங்களாக நடந்த சமாதான முயற்சிகளிற்கு எதிரான சதிகள் தடைகள் வன்முறைகளை கொலைகளிற்கு உரிமை கோருகிறதா?

2002 இல் சொன்னதையே இன்று 2006 சொல்லும் பொழுது அதை திரிபுபடுத்தி மாறுபட்ட உணர்வலையை எழுப்ப வேண்டி நிர்ப்பந்தில் இருப்பது யார? அதில் தோல்வியடைந்தது யார்? யதார்த்தத்தை உணர்ந்து தமது நிலைப்பாட்டை மாற்ற வேண்டிய நிலையில் இருப்பது யார்?

புலிகள் 2002 உம் சரி 2006 சரி தெளிவாகத்தான் இருக்கிறார்கள். குட்டையை குழப்ப வெளிக்கிட்டு குத்துக்கரணம் அடிச்சிருக்கிறவைதான் தங்கட வேடங்களை கலைத்துக் கொள்ள வேண்டும். :wink: :P

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.