Jump to content

உண்ணாவிரதமிருந்த மாணவர்கள் உட்பட உணர்வாளர்கள் நள்ளிரவில் கைது.[படங்கள்]


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சுப்பிரமணிய சாமி உருவபொம்மை எரித்து

மாணவர்கள் போராட்டம் ( படங்கள் )

இலங்கை படுகொலைக்கு ராஜபக்சேவுக்கு தண்டனை கிடைக்கும் தீர்மானத்தை இந்திய அரசு கொண்டு வரவேண்டும் என்று உண்ணாநிலை இருந்த கல்லூரி மாணவர்களை தமிழக காவல் துறை வலுக்கட் டாயமாக கைது செய்துள்ளதை கண்டித்தும். இலங்கைக்கு ஆதரவாக செயல்படத் தொடங்கியிருக்கும் சுப்பிரமணியசாமியை கண்டித்தும் மன்னா

ர்குடி அரசு கல்லூரி மாணவ, மாணவிகள் சுமார் 2500 பேர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து கல்லூரி நுழைவாயில் முன்பு திரண்டு ஆர்ப்பாட்டம் செய்து சுப்பிரமணியசாமி உருவ பொம்மையை எரித்து கோஷங்கள் எழுப்பினார்கள்.

 

n84p9.jpg

ydwof.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது எதிர்பார்க்கப்பட்டதுதான்.  ஏனென்றால் மாணவர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை இந்திய அரசே ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. அப்படியிருக்க அது சிங்கள அரசை எப்படி அதைச் செய்யும்படி வற்புறுத்துவது ? இந்தியா ஏதாவது சேய்யும் என்று காத்திருந்தால் திலீபனைப் போல இந்த மாணவர்களும் மடிந்திருப்பார்கள். அதனால் இந்திய மத்திய அரசுக்கும் ஜெயலலிதாவுக்கும் பெரும் தர்ம சங்கடமாகி விடும், ஆகவேதான் முந்திக்கொண்டிருக்கிறார்கள். 

 

இந்தியாவோ அல்லது அங்கிருக்கும் எந்த மாநில அரசோ ஈழத்தமிழர் தொடர்பாக எந்த உறுப்படியான செயலையும் இதுவரை செய்ததுமில்லை, இனிமேல் செய்யப்போவதுமில்லை.  ஆனால் அந்த உண்மை மக்களுக்கு புரியும் முன்னமே அனைத்தையும் இழுத்து மூடியிருக்கிறார்கள்.

 

இந்தியாவிலாவது அகிம்ஸைப் போராட்டம் வெல்வதாவது !!!!!!!!!!!!!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது எதிர்பார்க்கப்பட்டதுதான்.  ஏனென்றால் மாணவர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை இந்திய அரசே ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. அப்படியிருக்க அது சிங்கள அரசை எப்படி அதைச் செய்யும்படி வற்புறுத்துவது ? இந்தியா ஏதாவது சேய்யும் என்று காத்திருந்தால் திலீபனைப் போல இந்த மாணவர்களும் மடிந்திருப்பார்கள். அதனால் இந்திய மத்திய அரசுக்கும் ஜெயலலிதாவுக்கும் பெரும் தர்ம சங்கடமாகி விடும், ஆகவேதான் முந்திக்கொண்டிருக்கிறார்கள். 

 

இந்தியாவோ அல்லது அங்கிருக்கும் எந்த மாநில அரசோ ஈழத்தமிழர் தொடர்பாக எந்த உறுப்படியான செயலையும் இதுவரை செய்ததுமில்லை, இனிமேல் செய்யப்போவதுமில்லை.  ஆனால் அந்த உண்மை மக்களுக்கு புரியும் முன்னமே அனைத்தையும் இழுத்து மூடியிருக்கிறார்கள்.

 

இந்தியாவிலாவது அகிம்ஸைப் போராட்டம் வெல்வதாவது !!!!!!!!!!!!!!!

அப்ப எப்படியான போராட்டம் சரி வரும் என்று நினைக்கிறீங்கள் ரகு அண்ணா..மற்ற போராட்டங்களுடன் ஒப்பிடும் போது மாணவர் போராட்டம் நல்ல திசையை நோக்கி போய் கிட்டு இருக்கு...அந்த மாணவ‌ர்களுக்கு நாம் என்றும் துனையாய் நிக்கனும்....!

Link to comment
Share on other sites

270709_605844619429697_193929392_n.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2009ம்ப தோடை ஒப்பிவிடும் போது தமிழ் நாட்டு மக்களும் சரி மாணவர்களும் சரி..நல்ல தெளிவாய் தான் இருக்கினம்... ஜெயலாலிதா கருணாநியின் நாத்தம் பிடிச்ச அரசியலால் தான் தமிழனுக்கு இந்த நிலமை...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் மாணவர் போராட்டத்தைக் கிண்டல் செய்யவில்லை. இந்திய போலி ஜனநாயகத்தைத்தான் கிண்டல் செய்தேன். அகிம்ஸையை உயிரோடு புதைக்கும் நாடுதான் இந்தியா. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் மாணவர் போராட்டத்தைக் கிண்டல் செய்யவில்லை. இந்திய போலி ஜனநாயகத்தைத்தான் கிண்டல் செய்தேன். அகிம்ஸையை உயிரோடு புதைக்கும் நாடுதான் இந்தியா. 

நீங்கள் சொல்வது சரி தான்...

Link to comment
Share on other sites

போராட்டம் தமிழ் நாட்டில். மாணவர்கள் ஈழத்து தமிழருக்காக கல்வி, தமது வருங்காலம், ஏன் உயிர்வரையும் கொடுத்துத்தான் போராடுகிறார்கள். ஆனல் யாழுக்குள் நுளைந்த இலங்கை புலநாய்வுகள் போடும் அட்டகாசம்....  அப்பப்பா 

 

கருணாநிதியின் போடா சட்டத்துடன் வந்து அவர்கள் படுத்தும் பாடு. (முள்ளிவாய்க்கால் நேரம் அவர் அதை போடா என்று அழைத்தார், இபோது டெசொ என்று அழைக்கிறார் என்று கேள்வி)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Link to comment
Share on other sites

‎"என்னுடைய அடுத்த தலைமுறை இன்னும் வேகமாக ஈழ போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வார்கள்" -தேசிய தலைவர் மேதகு பிரபாகரனின் சத்திய வாக்கு.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
aptop-jaya_CI.jpg

 

சென்னை லயோலா கல்லூரி மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்தும், இலங்கைக்கு எதிராக தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வற்புறுத்தியும் தமிழகமெங்கும் போராட்டம் நடத்தி வரும் மாணவர்களுக்கு தமிழக அரசு வழங்கிய இலவச மடிக்கணனிகள் பெரும் உதவியாக இருக்கின்றனவாம். இந்தப் போராட்டத்திற்கு ஏற்கனவே பேஸ்புக், டிவிட்டர் மூலம் பெருமளவில் ஆதரவு குவிந்து வருகிறது. பேஸ்புக்கில் தனியாகவே பக்கம் தொடங்கி விறுவிறுப்புடன் போராட்டத்தை ஒருங்கிணைத்து வருகின்றனர் ஆதரவாளர்கள். 

இந்த நிலையில் தற்போது மாணவர்கள் நடத்தும் போராட்டம் உலகில் வாழும் தமிழர்கள் அனைவரையும் சென்றடைய தமிழக அரசின் மடிக்கணினிதான் மிகவும் உதவியாக இருக்கிறதாம். தமிழக அரசு பிளஸ் 1, பிளஸ்2 மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக மடிக்கணனிகளை  வழங்கி வருகிறது. இந்த மடிக்கணனிகளே தற்போது போராட்டக் களத்தில் உள்ள மாணவர்களிடம் புழங்கி வருகிறதாம். இவற்றின் உதவியுடன் உடனுக்குடன் செய்திகளையும் புகைப்படங்களையும்  பதிவேற்றம் செய்து வருகின்றனர்  என தமிழக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணாமலை பல்கலை மாணவர்கள் உண்ணாவிரதம்: போலீஸார் குவிப்பு

அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பல்கலைக்கழக வளாகத்தில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இலங்கைக்கு எதிரான ஐ.நா மனித உரிமை கவுன்சில் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும், சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதத்திற்கும் ஆதரவு தெரிவித்து சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் நீதிவள்ளல் தலைமையில் வகுப்புகளை புறக்கணித்து ராஜபட்சேவிற்கு எதிராக கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பூமா கோயில் முன்பு ஆயிரக்கணக்கான மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் தொடங்கினர். பின்னர் மாலை தொடர் உண்ணாவிரதப் போராட்டம் இருக்கப் போவதாக அறிவித்து சுமார் 100 மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் பல்கலைக்கழக வளாகத்தில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட கோரி ஏஎஸ்பி எம்.துரை தலைமையிலான போலீஸார் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

 

http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=93953
 

Link to comment
Share on other sites

மேற்கு நாடுகள்இலங்கைக்கு புலிகளை அழிக்க தாங்கள் ஆயுதம் கொடுத்தபின்னர் ஏமாற்றப்பட்டுவிட்டத்தாக உணர்ந்த போது முதலில் செய்ய முயன்றது தங்களின் மனதில் போராளியாகப்பட்ட பொன்சேக்காவை பதவியில் இருத்துவது.

 

பொன்சேக்காவை அவர்கள் போராளியாகப் பார்த்த காரணம் அவர் தமிழர்களை அழித்ததால். அந்த நேரம் பொன்சேக்கா அவர்களின் கண்களில் வெறும் ஒரு சர்வாதிகார குற்றவாளியாகப்படாமல் ஜனநாயத்தை முன்னெடுக்கும் போர்வீரனாகத் தோற்றியதின் காரணம் கதிர்காமரும் பிளேக்கும் மட்டுமே. இதானால் மேற்கு நாடுகள் பொன்சேக்காவின் தலைமையின் கீழ் இலங்கையில் புரட்சி நடந்து ஜனநாயகம் மலரப்போவத்தாக கண்ட கனவு வீண் போய்விட்டது.

 

அதன் பின்னர் அவர்கள் சிராணியை தாங்கி பிடித்தும், சிராணியை நாட்டுக்கு வெளியே கொண்டுவந்து இலங்கையில் நடக்கும் அராஜரீகங்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்ய முயன்றும் தோற்றுவிட்டார்கள். பிரதம நீதியரசர் சிராணி இலங்கையின் சர்வாதிகார அரசின் பகுதி என்பதை திரும்பவும் பிளேக்கும், கதிர்காமரும் போட்ட திரைசீலைகள் அவர்களின் கண்களில் இருந்து மூடி மறைத்துவிட்டது.  சிராணியின் விடையத்தில் அவர்கள் எதிர்பார்த்த அரபு வசந்தம் இலங்கையில் வந்து தக்கவில்லை. "த எகொனொமிஸ்ட்" பெரிய மனவருத்தமாக இலங்கையில் எதிர்க்கட்சிகள் எதுவும் செய்யவில்லை என்று கூறி கவலைப்பட்டது. சும்மா வந்த சுதந்திரத்தை சீனாவுக்கு எழுத்திக்கொடுத்துவிட்டும் அல்லல்படும் சிங்களதேசம் தன்னால் இதை விடுவிக்க விரும்பமாட்டாது.

 

அதுமட்டுமல்ல இங்கிருக்கும் தமிழர் கூட தங்களைத் தாங்கள் விடுவிக்க இடம் கொடுக்காது. இதைத்தான் ராமநாதன் 1930ல் டொனமூரிடம் கூறியது. ஜனநாயத்தை விளங்கி பொது மக்கள் வாக்கெடுப்புமூலம் சிங்களதேசம் தன்னைத்தான் ஆளும் பக்குவத்தை அடையவில்லை என்பதுதான் அவரின் வாதமாக இருந்தது. இதையேதான் சிங்கள் மக்களுக்கு தேவையான அரசியல் அமைப்பை சோல்பரி எழுதவில்லை என்பதிலும் சுட்டிக் காட்டப்படுகிறது.

அதனால் தமிழருக்கு வெளியில் இருந்துதான் உதவிகள் வரவேண்டும். நிச்சயம் தமிழ் நாட்டு மாணவர்களின் உழைப்பு ஈழத்தமிழரின் விடுதலையை நோக்கி அரசியலை நகர வைக்கும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் போராட்டத்திலும்... தமிழக மாணவர்கள் தோற்கடிக்கப் பட்டால்....
உலகத்தில், எவனும்... ஈழத்தமிழனுக்கு உதவ முன் வர மாட்டான்.
தமிழக மாணவர்களுக்கு உறு துணையாக.... ஈழத்தமிழ் அமைப்புகளும்... செயல் பட வேண்டும்.
அணில் ஏற, விட்ட.... "டோக்" மாதிரி... எல்லாத்திலும், "ரியூப் லைற்" மாதிரி, இருக்கப் படாது.

Link to comment
Share on other sites

ஈழத்தமிழர்களுக்காக போராடும் மாணவர்களுக்கு நன்றி.

 

தொடர்ச்சியாக செய்திகளை இணைக்கும் கள உறவுகளுக்கும் நன்றி.

Link to comment
Share on other sites

இந்தப் போராட்டத்திலும்... தமிழக மாணவர்கள் தோற்கடிக்கப் பட்டால்....

உலகத்தில், எவனும்... ஈழத்தமிழனுக்கு உதவ முன் வர மாட்டான்.

தமிழக மாணவர்களுக்கு உறு துணையாக.... ஈழத்தமிழ் அமைப்புகளும்... செயல் பட வேண்டும்.

அணில் ஏற, விட்ட.... "டோக்" மாதிரி... எல்லாத்திலும், "ரியூப் லைற்" மாதிரி, இருக்கப் படாது.

 

 

புலம்பெயர் தமிழர்கள் என்ன செய்யலாம்? என்ன செய்யவேண்டும்? சில ஆலோசனைகைளை யாரும்  முன்வையுங்கள்..

Link to comment
Share on other sites

உண்ணாவிரதம் இருந்த மாணவர்களை நள்ளிரவில் அப்புறப்படுத்தியதன் நோக்கம் என்ன..?

 

நள்ளிரவில் என்ன நடந்தது..?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலம் பெயர் தமிழ் அமைப்புகள் மாணவரை வாழ்த்தியும் ஊக்குவித்தும் தமது
ஆதரவை கடிதம் மூலம் தெரிவிக்கலாம். இதை தமிழ் நாட்டு தமிழ் நண்பர் ஒருவர்
எனிடம் முக நூலில் கேட்டு இருந்தார்.

Link to comment
Share on other sites

புலம் பெயர் தமிழ் அமைப்புகள் மாணவரை வாழ்த்தியும் ஊக்குவித்தும் தமது

ஆதரவை கடிதம் மூலம் தெரிவிக்கலாம். இதை தமிழ் நாட்டு தமிழ் நண்பர் ஒருவர்

எனிடம் முக நூலில் கேட்டு இருந்தார்.

 

 

நல்ல முயற்ச்சி, தொடர்பு ஈமெயில்களை இணைக்க முடியுமா, தனிமடல்களும் அனுப்பலாம்

Link to comment
Share on other sites

317721_10200786584970493_390988504_n.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய மத்திய அரசு நடவடிக்கை எடுக்கா விட்டால்...தமிழ் நாடு  தனி நாடு ஆகுமாம் மாணவர்கள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல முயற்ச்சி, தொடர்பு ஈமெயில்களை இணைக்க முடியுமா, தனிமடல்களும் அனுப்பலாம்

 

Please add your supporting letters on your face book if you have an account, if not start an account on face book.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.