Jump to content

நெஞ்சத்தைக் கிள்ளாதே...


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெஞ்சத்தைக் கிள்ளாதே...

பகுதி-1

art-love.jpg

 

அபி,..

பெயரைப் போலவே சற்றுக் குள்ளமாய் ஆனால் அழகானவள். காவியக் கண்கள் எப்போதும்

புன்னகை சிந்தும் இதழகள் சொல்லிச் செய்வித்தது போன்ற தேகம், மண்ணுக்கே

உரிய பொது நிறம் என்று கொஞ்சம் குட்டையாகப் பாவாடை,சட்டை போட்டுக்கொண்டு

லுமாலா சைக்கிளில் நல்லூர் வீதிகளில் அவள் வரும் போது அது தான் திருவிழா

கமலுக்கு.

தந்தை தபாலதிபர். தாய் வீட்டு வேலை தான் நான்கு பெண்கள் என்பதனால்

பொறுப்பும் அதிகம் அவளுக்கு, அக்கா படித்து முடித்து யாழில் பிரபலமான

இன்சூரன்ஸ் கம்பனியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தாள், அபி 2006ம் ஆண்டு

உயர்தரம் விஞ்ஞானப் பிரிவில் யாழ் வேம்படி மகளிர் கல்லூரியில் கல்வி

கற்றுக் கொண்டிருந்தாள், தங்கைகள் இரட்டைப் பிள்ளைகள் யாழ் இந்து மகளிர்

கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார்கள்.

இடையில் எப்படி வந்ததோ தெரியாது கமலுக்கும்,அபிக்குமான காதல்.

நல்லூருக்கும் நெல்லியடிக்குமான காதலுக்கு "டயலொக்" தான் இணைபுக்

குடுத்திருந்தது. கைபேசியில் தான் காதல் வளர்ந்தது கடிதங்களும்,பரிசுப்

பொருட்களும் பரிமாறப்பட்டாலும் நேரடியாக சந்திக்கும் சந்தர்ப்பங்களுக்காகவே

காத்திருந்தார்கள்.

அவளுடைய கடிதங்களை மயூரனிடமே வாசிக்கக் கொண்டுவருவான் கமல். அவள் எப்போதும்

ஆங்கிலத்திலும்,தமிங்கிலிஷிலும் தான் மடல் வரைவாள். கமல் சாதரணதரம் இரண்டு

முறை எடுத்தும் தேறததால் தந்தையுடன் கல்லரியும் மிசினரியிலேயே வேலை

பார்த்து வந்தான், ஆனால் நல்ல வசதியானவங்கள் தான். கமலும் மயூரனும் தான்

நல்ல நண்பர்கள் அதைவிட மயூரனும் உயர்தரத்தில் விஞ்ஞானப்பிரிவில்

படித்ததாலும், ஆங்கிலத்திலும் அதி தேர்ச்சி எடுத்ததாலும் கமலுடையா காதலை

வளர்ப்பது மயூரன் தான். வாசித்துச் சொல்வதும், பதில் மடல் வரைவதும் என்று

காதலிப்பது மட்டும் தான் அவன் மற்றதெல்லாம் மயூரன் தான். அவளுடைய

எழுத்துக்களும் முத்துப் போல இருக்கும் வண்ண வண்ணப் பேப்பர்களில் எல்லாம்

வரைந்து அழகாய்க் கொட்டியிருப்பாள். எழுத்துக்களை வைத்தே அபி குறித்த

விம்பத்தைக் கற்பனை செய்திருந்தான் மயூரன்.

"காவியக் காதல், ஓவியப் பெண்ணே என்று உன்னை வர்ணிக்கத் தான் ஆசை

அது பொய் என்று தெரிந்தும் உன்னை புகழ்ந்திட எண்ணவில்லையடி கண்ணே..!!

என் ஜீவ நதியில் உன் காதல் முத்துக்களைக் கோர்க்கிறேன் நம் மணநாளில் சூட்ட.."

தமிங்கிலிஷில் எழுதி கமலிடம் கொடுத்திருந்தான் மயூரன்.

"டேய்.. மச்சான்.. வா லவ்லி கூல் பாருக்குப் போவம்"

ஏன்டா என்னடா ஆச்சு? இண்டைக்கு என்ன ஸ்பெஷல்?

"அவளோடை கடிதத்தைப் பார், எனக்கு கிஸ் தந்தாள் டா.. வாற சனிக்கிழமை கிளாஸ்

கட் பண்ணிட்டு வாறேன் நல்லூர் கோயிலுக்கு வரட்டாம் பார்ப்பம் என்று சொல்லி

இருக்கிறாள் டா.." இந்தா கடிதத்தைப் பார் என்று நீட்டினான்.

மச்சான் இப்ப பொடியள் எல்லாம் நிக்குறாங்கள் நான் பொழுதுபட கிளாஸ் முடிய வாறேன் டா..

சரி வா .. அப்பம்மா வீட்டை போவம். அங்கை ஒருத்தரும் இல்லை பார்த்திட்டு லவ்லிக்கு போவம்.

கடிதத்தைப் படித்த மயூரனுக்குச் சங்கடம், இதுக்கும் மேல் இனி அவனுக்காக

எப்படி எழுத என்று? " அவள் ஒரு பெண்ணின் விருப்பங்களைத் தன் காதலனுடன்

பகிர்ந்துகொள்ள நினைப்பவற்றை எல்லாம்  எழுதி இருந்தாள்.

இதுக்கு மேல் படிப்பது நாகரீகம் அல்ல என்று உணர்ந்தவன்.

"கமல், மச்சான் கோவிக்காதையடா இனிமேல் நான் கடிதம் எழுதுறது நல்லா இல்லை

டா, நீயே எழுதடா உன்னைப் புரிஞ்சவள் தானே ஏற்றுக் கொள்ளுவாளடா..!!"

ஏன்டா??

"இல்லை மச்சி அவள் தன்ரை பேசனலை எல்லாம் எழுதுறாள் இதிலை மூன்றாவது நபர்

நான் எப்படி மச்சான் தலையிட? நல்லாவா இருக்கும் சொல்லு??? பிறகு ஏதும்

ஒன்று என்றால் நட்புக்கே துரோகம் போல ஆகிடும் மச்சி."

"நீயும் நானும் அப்படியாடா பழகிறம்??"

"அது வேறை .. இது வேறை டா புரிஞ்சுக்கோ"

"போடா .. என்னோடை கதைக்காதை"..

"கமலும்,மயூரனும் ஆரம்பப் பள்ளியிலிருந்து சாதாரண தரம் வரைக்கும் ஒரே

பள்ளிக்கூடத்தில் தான் படித்தவர்கள், ஒரே ஊர், ஒரே நட்பு வட்டம் என்று

எப்போதும் ஒன்றாகவே திரிபவர்கள். ஐந்தாம் வகுப்பு வரை படித்த

பள்ளிக்கூடத்தில் இருவரும் கொண்டு வரும் சாப்பாட்டை மாற்றி மாற்றிச்

சாப்பிடுவார்கள், ஒருவன் வராமல் விட்டால் மற்றவனுக்கு கவலையாய்ப் போய்

விடும் அந்தளவு நண்பர்கள், ஆனால் சண்டை போடுவதும் கூட அவர்கள் தான். இரண்டு

பேர் மீதும் வேறு யாரும் கை வைத்தாலும் ரண்டு பேரும் சேர்ந்து தான்

அடிப்பாங்கள் ஆனால் தங்களுக்குள்ளை சண்டை போடுவாங்கள். ஒருக்கால் கமல்

கடிச்சு மயூரனுக்கு கையிலை உள்ள அத்தனை பல்லும் பட்டு ஏற்பூசி கூடப்

போட்டவன்.

ஆனால் ஒரு முறை மயூரனின் உயிரைக் காப்பாற்றியதே கமல் தான். லீவு நாட்களில்

ஊர்ப்பொடியள் எல்லாருமாப் போய் தோட்டக்கிணற்றில் குளிப்பது வழமை.

மயூரனுக்கு நீச்சல் தெரியாது அவங்கள் குளிக்க வெளியில் இருந்து வேடிக்கை

பார்ப்பது தான் வேலை. ஆனால் ஒரு நாள் அவங்களோடை அரியண்டம் தாங்காமல்

குளிக்க முடிவெடுத்து கிணற்றுப் படியில் கால் வைத்தவன் தவறி கிணற்றுக்குள்

விழுந்து விட்டான். கமல் தான் மேலிருந்து குதித்து அவனைக் காப்பாற்றியது.

அன்றிலிருந்து கமல் அவனது உயிராய் மாறிவிட்டான்."

"பழையவற்றை நினைத்தவன்.. சரி டா மச்சான்."

சரி வா.. லவ்லிக்கு போவம்..

இப்ப வேண்டாம் டா அம்மா பேசுவா நேரம் போட்டுது ரியூசனுக்கு போன பொடியனை இன்னும் காணேல்லை என்டு .. இன்னொரு நாளைக்கு போவம் சரியா?

"விளக்கீட்டுக்கு அப்பம்மா வீட்டை தென்னம்பாளை வெட்டிக்கொண்டிருக்கும் போது ஒரு கோல் வந்திச்சுது"

மச்சான் அபி டா..

"சரி நீ பேசு நான் போட்டு பேந்து வாறன்."

இரடா .. நீ ஒரு நாளும் அவளோடை கதைக்கேல்லை இந்தா கதை.

"லூசா டா நீ.. நான் என்ன கதைக்க?"

சும்மா கதையடா..

"அபி இந்தா என் பிரண்ட் மயூரன் கூட கதை என்று சொல்லி விட்டு மயூரன் கையில் திணித்தான் போனை."

"என்ன பேச? ஏது பேச?? என்று தயங்கினவனிடம் அவளே பேச்சைக்குடுத்தாள்,

என்ன செய்யுறிங்கள்? என்ன படிக்குறிங்கள் என்று விசாரித்ததோடு முடிந்து விட்டது.."

ஆனால் பின் மயூரனுக்கும் அபிக்குமான நட்பு பாடம் சம்பந்தமாக அவனிடம் விளக்கங்கள், சந்தேகங்கள் கேட்பது என்று மலர ஆரம்பித்தது.

இந்த ஆரம்பம் இருவர் வாழ்வையும் புரட்டிப் போடப் போகின்றது என்பதை யாரும் அறிந்திருக்கவில்லை.

தொடரும்..

 

Link to comment
Share on other sites

  • Replies 134
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

 காதலில் விழுந்தால் இப்படித்தான் சிலருக்கு அறிவே மழுங்கி விடுகிறது பிறகு கோ ட்டை விட்டுவிட்டுப் புலம்புவது. பாவம் கமல்

Link to comment
Share on other sites

எல்லாத்துக்கும் முதல் தீர்தமாடப்போன அம்மாளாச்சி எங்கை :o  :o ???  அதை முடிச்சு போட்டு இதை தொடங்கி இருக்கலாமே  :wub:  ???  ஆனாலும் எதிலையும் பங்குபோடலாம் காதலிலை மூன்றாம் ஆளை வைச்சால் சேதாரம் கூடவாய் இருக்கும் :lol: :lol: . பட்டிமன்ற நேரத்தில் அலுப்புப் பாராது இந்தத் தொடரையும் ஆரம்பித்ததிற்குப் பாராட்டுக்கள் ஜீவா :) :) .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 காதலில் விழுந்தால் இப்படித்தான் சிலருக்கு அறிவே மழுங்கி விடுகிறது பிறகு கோ ட்டை விட்டுவிட்டுப் புலம்புவது. பாவம் கமல்

 

உண்மை தான் அக்கா,

இது என் நண்பனின் வாழ்வில் நடந்த கதை இருவரைப் பற்றியுமே அவன் சொன்னதை என் கற்பனைகளோடு சேர்த்து எழுதுகிறேன்.

நன்றி அக்கா வரவுக்கும், கருத்துப் பகிர்வுக்கும். தொடர்ந்து இணைந்திருங்கள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாத்துக்கும் முதல் தீர்தமாடப்போன அம்மாளாச்சி எங்கை :o  :o ???  அதை முடிச்சு போட்டு இதை தொடங்கி இருக்கலாமே  :wub:  ???  ஆனாலும் எதிலையும் பங்குபோடலாம் காதலிலை மூன்றாம் ஆளை வைச்சால் சேதாரம் கூடவாய் இருக்கும் :lol: :lol: . பட்டிமன்ற நேரத்தில் அலுப்புப் பாராது இந்தத் தொடரையும் ஆரம்பித்ததிற்குப் பாராட்டுக்கள் ஜீவா :) :) .

 

அம்மாளாச்சியின்ரை கதை என்ரை சொந்தக் கதை பாருங்கோ, எழுதும் போது யாருக்கும் அந்த கோவில், நடந்த சம்பவங்கள் தெரியாது என்று தான் நினைத்திருந்தேன், ஆனால் சிலருக்கு எல்லாம் தெரிந்திருப்பதால் நான் மிச்சத்தையும் எழுதினால் என்னை அடையாளம் கண்டுவிடுவார்கள் என்பது உறுதி. அது தான் எங்கை கொண்டு போய் முடிக்க என்று முழுசிக் கொண்டு இருக்கிறன். :rolleyes: :rolleyes:

 

அதை விட முக்கிய காரணம் இண்டைக்கு மொக்கை போட ஆத்துக்காரி இல்லை. அதான் அந்த நேரம் இதை எழுதினது. :icon_mrgreen:

 

நன்றி கோமகன் அண்ணா உங்கள் வரவுக்கும், கருத்துப் பகிர்வுக்கும். விரைவில் மற்றதையும் எழுதி முடிக்கிறேன்.

தொடர்ந்திருங்கள்.. :)

Link to comment
Share on other sites

தொடர்ந்து எழுதுங்கள் ஜீவா. திருப்புமுனைகள் நிறைந்த காதல்கதைகள் கேட்டு ரொம்ப நாளாச்சு. :D

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் தம்பி ஏதோ நெஞ்சத்தைக் கிள்ளாதே எண்ற படக்கதை எழுதியிருக்கிறாரோ எண்டு நினைச்சு வந்தன் . நல்லாய்தான் நெஞ்சை கிள்ளியிருக்கிறிங்கள் . வாழ்த்துக்கள் தம்பி .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதை நல்லாய்ப் போகுது நான் நினைத்தேன் அந்த படித்த நண்பன் ஜீவாவாக்கும் என்று :) இதை இடையில் விடாமல் கெதியாய் தொடருங்கோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தொடர்ந்து எழுதுங்கள் ஜீவா. திருப்புமுனைகள் நிறைந்த காதல்கதைகள் கேட்டு ரொம்ப நாளாச்சு.

 

வாசிக்க நீங்கள் இருக்கிறிங்களே.. எழுதுகிறேன் அண்ணா.

நன்றி அண்ணா, வரவுக்கும், கருத்துப் பகிர்வுக்கும். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் ஒரு காதல், இந்தமாதிரி வந்ததது! :o

 

காதலென்று சொல்வதை விடவும், காதலுக்குள் அப்படி என்ன தான் இருக்கிறது, என்று அறியும் ஆவலே மேலோங்கி இருந்தது என்று தான் நினைக்கிறேன்!

 

அப்பப்பா, பிறகு அதைக் கழட்டிவிடப்பட்ட பாடு இருக்கிறதே? :wub:

 

அந்தப் பெண்ணின்ர அண்ணா, ஒரு பயங்கரக் 'காவாலி' என்று பின்புதான் அறிந்தேன்! 

 

உசுப்பெத்தியவர்கள் எல்லாம் ஓடியொழிந்து விட்டார்கள்! ^_^

 

தொடருங்கள், ஜீவா!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் தம்பி ஏதோ நெஞ்சத்தைக் கிள்ளாதே எண்ற படக்கதை எழுதியிருக்கிறாரோ எண்டு நினைச்சு வந்தன் . நல்லாய்தான் நெஞ்சை கிள்ளியிருக்கிறிங்கள் . வாழ்த்துக்கள் தம்பி .

 

ஓ... அப்படி படம் வேறை இருக்கா அக்கா?

எங்கை கேள்விப்பட்டேனோ தெரியாது பெயர் நல்லா இருந்திச்சு அதான் சுட்டாச்சு.. :rolleyes:

 

நன்றி அக்கா, உங்கள் வரவுக்கும் கருத்துப் பகிர்வுக்கும். :)

கதை நல்லாய்ப் போகுது நான் நினைத்தேன் அந்த படித்த நண்பன் ஜீவாவாக்கும் என்று :) இதை இடையில் விடாமல் கெதியாய் தொடருங்கோ

 

என் மேல் அப்படி ஒரு நம்பிக்கையா??? :unsure: :unsure: :(

 

நன்றி அக்கா, தொடர்ந்து தரும் ஊக்கத்திற்கு .. விரைவில் தொடருகிறேன்.. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கும் ஒரு காதல், இந்தமாதிரி வந்ததது! :o

 

காதலென்று சொல்வதை விடவும், காதலுக்குள் அப்படி என்ன தான் இருக்கிறது, என்று அறியும் ஆவலே மேலோங்கி இருந்தது என்று தான் நினைக்கிறேன்!

 

அப்பப்பா, பிறகு அதைக் கழட்டிவிடப்பட்ட பாடு இருக்கிறதே? :wub:

 

அந்தப் பெண்ணின்ர அண்ணா, ஒரு பயங்கரக் 'காவாலி' என்று பின்புதான் அறிந்தேன்! 

 

உசுப்பெத்தியவர்கள் எல்லாம் ஓடியொழிந்து விட்டார்கள்! ^_^

 

தொடருங்கள், ஜீவா!

 

உண்மை தான் அண்ணா, அந்த வயதில் காதல் என்பது என்னவென்றே தெரியாத போதும் எல்லாரும் அவளைப் பார்க்கிறேன், இவளைப் பார்க்கிறேன் என்று சொல்லும் போதே ஒரு ஆர்வக் கோளாறு ஏற்படுகிறது, அவை தான் அந்தப் பருவத்தின் இனிய நினைவுகளோ கூடவும் தெரியாது இருந்தாலும் காத்அல் என்ற வார்த்தை அனேகம் பேரைக் கைப்பிடித்துத்தான் இருக்கிறது போலும்.

 

நன்றி அண்ணா, வரவுக்கும், கருத்துப் பகிர்வுக்கும்.

தொடர்ந்திருங்கள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜீவா தம்பி உங்கடை கதையிலை பந்தி இடைவெளியை குறைச்சால் நல்லம் . இப்ப உங்களுக்காக நெஞ்சத்தைக் கிள்ளாதே படப்பாட்டை தாறன் :)  :) .

 

Link to comment
Share on other sites

நன்றிகள் மைத்ரேயி.. யாரோ ஒரு புண்ணியவான் நல்ல ஒரு பாடலை தரவேற்றியிருக்கிறார்.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெஞ்சத்தைக் கிள்ளாதே.. பகுதி-2

love-art-kiss.png.jpg

 

"டேய் மச்சான் இண்டைக்கு அபி என்னோடை கதைச்சவள் டா" என்றான் மயூரன்."

ஓ... ஆனால் அவள் உன்னோடை கதைச்சதை என்னட்டை சொல்லவில்லையே டா..!!

"தெரியேல்லை மச்சான், கெமிஸ்ட்ரியிலை டவுட் எண்டு கேட்டவளடா அது தான் சொன்னேன்."

கெமிஸ்ட்ரி மாறி வெர்க்கவுட் ஆகுதோ என்னமோ என்று நினைத்தானோ தெரியாது கமலின் முகம் வாடியிருந்தது.

"இப்ப என்னடா மச்சான் இன்னும் ரெண்டு மாசம் தானே இருக்கு .. அவளுக்கு ஏ.எல்

சோதனை இருக்கு அந்த நினைப்பிலை சொல்லாமல் இருக்கலாம் அதை விட சோதனை

முடிஞ்சதும் அவள் ஏன் டவுட்டும் கேட்கப் போறாள் விடு மச்சி.."

ஆனாலும் நண்பனின் கவலையை அறிந்தவன் தனது சிம் காட்டை மாற்றியிருந்தான். கமலிடம் மட்டும் தனது புது நம்பரைக் குடுத்திருந்தான்.

சில வாரங்கள் கூடச் சென்றிருக்காது ..

"ஏன்டா சிம் காட்டை மாத்தினாய்? அவள் உனக்கு கோல்,எஸ் எம் எஸ் பண்ணினவளாம்

நீங்கள் அழைக்கும் இலக்கம் தொடர்புகளுக்கு அப்பால் என்று சொல்லுதாமடா..

ஏன்டா அவளோடை பேசப் பிடிக்கலையா??"

இல்லையடா.. அதுக்கு லண்டனிலை இருக்கிற அண்ணா எடுக்கிறவன் அதிலை தான்

வீட்டுக்காரர் எல்லாம் கதைக்கிறது தற்செயலாக பார்த்தால் என்னை

வெட்டித்தாட்டுப் போடுங்கள், அதான் அவளோடை நம்பரை ப்ளொக் பண்ணி

வச்சிருக்கிறன்.

காலங்கள் மாறின காட்சிகளும் மாறின..

சமாதான ஒப்பந்தம் முறிவடைந்து ஏ9 வீதி மூடி போருக்கான முஸ்தீபுகள் நடந்து

கொண்டிருந்த போது தான் தொலைத்தொடர்புகள் துண்டிக்கப்பட்டும்,

மட்டுப்படுத்தப் பட்ட அளவில் கிடைத்தும், அதே போல மின்சாரமும் அதே நிலை

தான். குடா நாடு முழுவதும் இராணுவப் பிரசன்னம் முடக்கி விடப் பட்டு

ஊரடங்குச்சட்டம் அமுலில் வந்த போது அனைத்தும் தலை கீழாகி விட்டது,

சிட்டுக்குருவியாய்ப் பறந்து திரிந்தவர்களது வாழ்வும் ஆறுமணியுடன் வீடு

எனும் கூண்டுகளில் அடைபட்டு விட்டது. யாருடனும் தொடர்பில்லை, அபியைத்

தேடியே களைத்துப் போன கமலும் இந்தியாவுக்குப் போய் விட்டான்.

கமல் இல்லாவிடினும் தன் படிப்பு,ஊர்ப் பொடியள் என்று சந்தோசமாய் இருந்த மயூரன் வாழ்வில் 2007ம் ஆண்டில் தான் வில்லங்கம் வலிய வந்தது.

"ஹாய் டியர் ஹவ் ஆர் யு?"

சிங்களப் பெண்ணின் பெயரில் எஸ் எம் எஸ் வந்திருந்தது.

யாருக்கு இந்த நம்பர் தெரியும்? நான் யாருக்கும் குடுக்கவில்லையே!!

யாரும் பொடியள் தான் வம்புக்கு அனுப்பினாங்களோ என்று நினைத்தவன்.

"இஃப் யூ டோன்ற் மைன்ட், ஐ டோன்ட் நோ, கூ ஆர் யூ?"

என்னைத் தெரியாதா? அதுக்குள்ளை மறந்திட்டிங்களா??

"தெரியாததாலை தானே கேட்குறேன். ஆர் எண்டு சொன்னால் தானே தெரியும்."

எனக்கு நீங்கள் கனக்கப் பாடம் சொல்லித் தந்திருக்கிறிங்கள், எப்படி படிக்க

வேணும், என்ன என்ன கேள்விகள் வரும் என்று எல்லாம் சொல்லித் தந்தனிங்கள்

அதுக்குள்ளை மறந்திட்டிங்கள் பாருங்கோ.

ஓ.....அபி...!!

"எப்படி இருக்கிறிங்கள்? இப்ப எங்கை இருக்கிறிங்கள்? கமலோடை பேசினிங்களா?

அவனைப் பற்றிப் பேசாதையுங்கோ ..... பொறுங்கோ, பொறுங்கோ ஆன்டி வாறா நான் பிறகு எடுக்கிறேன்.

அபியின் அழைபுக்காய் காத்திருந்தான் மயூரன்..

ஹலோ..!

ஹலோ..!!

நான் அபி கதைக்குறேன்.

"சொல்லுங்கோ அபி."

ஆன்டி ஆக்கள் சொப்பிங் வெள்ளவத்தை "நோலிமிட்"டுக்கு  போட்டாங்கள். நான் தனியத்தான் இருக்கிறன்.

"ஓ..சரி.. ஏ.எல் லை என்ன ரிசல்ட்? இப்ப என்ன செய்யுறிங்கள்? லைஃப் எல்லாம் எப்படி போகுது"?

2B C தான் ரிசல்ட். மெடிசினுக்கு காணாது, நான் இரண்டாம் தரம் எடுக்கேல்லை,

பிரான்சிலை இருக்கிற அன்டி வரச் சொன்னா அது தான் போகும் வரைக்கும் "சீமா" 

படிப்பம் என்று நிக்குறேன்.

""உங்க லவ் எப்படி? கமலோடை கதைச்சனிங்களோ? அவன் இப்ப இந்தியாவிலை தெரியுமோ?

பாவம் அவன் உங்களைத் தேடி நல்லூரடிக்கு வராத நாளே இல்லை அபி.."

ப்ளீஸ், அவனைப் பற்றி மட்டும் பேசாதையுங்கோ, அவனை எவ்வளவு நம்பினான்,

அவனுக்காக எவ்வளவு செய்திருப்பேன். என்னையே சந்தேகப் படுறான். எவ்வளவு

கேவலமான வார்த்தைகளில் எல்லாம் பேசினான்.

நினைக்கவே அருவருப்பா இருக்கு, என்று சொன்னவளிடம் மௌனம்.

.......................................................

"சொறி மயூரன், எனக்கு மனசு சரியில்லை பேந்து பேசுவம்".

வாரத்திற்கு ஒருக்கா,மாதத்திற்கு ஒருக்கா என்று வரும் அபியின் அழைப்புக்கள்

இப்போது அடிக்கடி வரத்தொடங்கியது. யாழில் "டயலொக்" இணைப்புக்கான மீள்

நிரப்பு அட்டைக்குத் தட்டுப்பாடு நிலவியதால் அபி கொழும்பில் இருந்து

மயூரனது கைப்பேசிக்கு ரீலோட் பண்ணுவதும்,

அவன் வாங்கிய கடனுக்காய் கிடைக்கும் போது இங்கிருந்து ரீலோட் பண்ணுவதுமாக அடுத்த நிலை உறவுக்கான அஸ்திவாரங்கள் போடப்படுகின்றன..

தொடரும்..

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதையை நகர்த்தும் விதம் நன்றாக இருக்கின்றது ஜீவா

 

தொடருங்கள்

 

Link to comment
Share on other sites

கதை இப்பிடியே போய் கவிதையின் கதையோடு சேராமல் விட்டால் சரி.. :D

Link to comment
Share on other sites

கதை இப்பிடியே போய் கவிதையின் கதையோடு சேராமல் விட்டால் சரி.. :D

 

 

கவிதையின் ஒப்பாரியைக் காணைவில்லை யாழில்

Link to comment
Share on other sites

இனி ரெயில் வேகம் பிடிக்கும் என நம்புகிறேன் கதை. 

இருந்தாலும் காதல் கடிதம் எழுதிக்கொடுப்பதும் ஒரு சுகம் தான் பாருங்கோ உங்கட முதல் அத்தியாயம் வாசிக்கேக்கை கனக்க நினைவுகள். 

வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

lost-love-wallpaper1.jpg

 

ஜீவா தொடருங்கள் காத்திருக்கிறோம் முடிவுவரை

 

கருத்தோட்டமான் பட இணைப்பு,

நன்றி உங்கள் வரவுக்கும்,கருத்துப் பகிர்வுக்கும்.. :)

தொடருங்கள் ஜீவா வாசிக்க ஆவல்!

 

உங்கள் ஆவலை விரைவில் நிறை வேற்றுகிறேன் அக்கா,

தொடர்ந்திருங்கள். :)

ஜீவா தம்பி உங்கடை கதையிலை பந்தி இடைவெளியை குறைச்சால் நல்லம் . இப்ப உங்களுக்காக நெஞ்சத்தைக் கிள்ளாதே படப்பாட்டை தாறன் :)  :) .

 

 

எனக்குப் பிடித்த பாடல்களில் ஒன்று .. நன்றி அக்கா இணைப்புக்கும், வருகைக்கும். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கதை இப்பிடியே போய் கவிதையின் கதையோடு சேராமல் விட்டால் சரி.. :D

 

ஒருத்ரின்ரை வலியை பகிடியாத் தன்னும் இப்பிடி கதையாதையுங்கோ . உங்கடை பகிடிக்கு கீழை வந்திருக்கிற மறுமொழியை பாத்தியளே ^_^  ^_^ . 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்தியாவுக்கு சுத‌ந்திர‌ம்  கிடைச்சு 75ஆண்டு ஆக‌ போகுது இந்தியா இதுவ‌ரை என்ன‌ முன்னேற்ற‌த்தை க‌ண்டு இருக்கு சொல்லுங்கோ நாட்டான்மை அண்ணா 😁😜............................ அமெரிக்க‌ன் ஒலிம்பிக் போட்டியில் 100ப‌த‌க்க‌ங்க‌ள் வெல்லுகின‌ம் இந்தியா வெறும‌னே ஒரு ப‌த‌க்க‌ம்............இந்திய‌ர்க‌ள் எந்த‌ விளையாட்டில் திற‌மையான‌வ‌ர்க‌ள் சொல்ல‌ப் போனால் கிரிக்கேட் விளையாட்டை த‌விற‌ வேறு விளையாட்டில் இந்திய‌ர்க‌ள் பூச்சிய‌ம்.................ஹிந்தி தினிப்ப‌தில் காட்டும் ஆர்வ‌ம்  பிள்ளைக‌ளுக்கு விளையாட்டு அக்க‌டாமி திற‌ந்து அதில் திற‌மையை காட்டும் வீர‌ர்க‌ளை புக‌ழ் பெற்ற‌ ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப‌லாமே................28கோடி இந்திய‌ ம‌க்க‌ள் இர‌வு நேர‌ உண‌வு இல்லாம‌ தூங்கின‌மாம்................யூடுப்பில் ம‌த்திய‌ அர‌சு இந்தியாவை புக‌ழ் பாட‌ சில‌ர‌  அம‌த்தி இருக்கின‌ம்.....................பெரும்பாலான‌ ப‌ண‌த்தை போர் த‌ள‌பாட‌ங்க‌ளை வேண்ட‌ ம‌ற்றும் இராணுவ‌த்துக்கே ம‌த்திய‌ அர‌சு ப‌ண‌த்தை ஒதுக்குது................ இந்தியாவே நாறி போய் கிட‌க்கு..........இந்தியா வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் எத்த‌னையாவ‌து இட‌த்தில் இருக்குது..............இந்தியா என்றாலே பெண்க‌ளை க‌ற்ப‌ழிக்கும் நாடு என்று தான் ஜ‌ரோப்பிய‌ர்க‌ள் சொல்லுவார்க‌ள்.................   இந்தியாவை விட‌ சின்ன‌ நாடுக‌ள் எவ‌ள‌வோ முன்னேற்ற‌ம் அடைந்து விட்டார்க‌ள்..............இந்தியா அன்று தொட்டு இப்ப‌ வ‌ரை அதே நிலை தான்.............இந்தியா 2020இல் வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ ஆகிவிடும் என்று போலி விம்ப‌த்தை க‌ட்டு அவுட்டு விட்டார்க‌ளே இந்தியா வ‌ல்ல‌ர‌சு நாடா வ‌ந்திட்டா..............இந்திய‌ர்க‌ளுக்கு வ‌ல்ல‌ர‌சுசின் அர்த்த‌ம் தெரியாது.................இந்திய‌ர்க‌ள் ஒற்றுமை இல்லை அத‌னால் தான் சிறு முன்னேற்ற‌த்தையும் இதுவ‌ரை அடைய‌ வில்லை..............த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ள் டெல்லிக்கு போனால் டெல்லியில் அவைச்சு த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ளுக்கு ஊமை குத்து குத்தின‌ம் ..................இந்தியா ஏற்றும‌தி செய்வ‌தை விட‌ இற‌க்கு ம‌தி தான் அதிக‌ம்................டென்மார்க் சிறிய‌ நாடு டென்மார்க் காசின் பெரும‌திக்கு இந்தியாவின் ரூபாய் 11 அடி த‌ள்ளி நிக்க‌னும்   இந்தியா ஊழ‌ல் நாடு அன்டை நாடான‌ சீன‌னின் நாட்டு வ‌ள‌ர்சியை பார்த்தும் இந்திய‌ர்க‌ளுக்கு சூடு சுர‌ணை வ‌ர‌ வில்லை.............மொத்த‌த்தில் இந்தியா ஒரு குப்பை நாடு.............அர‌சாங்க‌ ம‌ருத்துவ‌ம‌னைக‌ளை நேரில் போய் பாருங்கோ எப்ப‌டி வைச்சு இருக்கிறாங்க‌ள் என்று..................   ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ள் ஊழ‌ல் செய்வ‌தில்லை அது தான் டென்மார் நோர்வே சுவிட‌ன் பின்லாந் ந‌ல்ல‌ முன்னேற்ற‌ம் அடைந்து இருக்கு...............இந்த‌ நாளு நாட்டிலும் டென்மார்க் சிட்டிச‌ன் வைத்து இருப்ப‌வ‌ர்க‌ள் லோன் எடுக்க‌லாம்..................அப்ப‌டி ப‌ல‌ விடைய‌ங்க‌ளில் ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாடுக‌ளுக்கு உல‌க‌ அள‌வில் ந‌ல்ல‌ பெய‌ர் இருக்கு............இந்தியா  வெறும‌ன‌ குப்பை தொட்டி நாடு..............த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் ஒரு விசிட் அடிக்க‌னும் ஜ‌ரோப்பாவுக்கு ம‌ற்ற‌ நாடுக‌ளுக்கு அப்ப‌ உண‌ருவின‌ம் இந்திய‌ம் திராவிட‌ம் என்ற‌ போர்வைக்குள் இருந்து நாம் ஏமாந்து விட்டோம் என்று இதை யாரும் மூடி ம‌றைக்க‌ முடியாது இது தான் உண்மையும் கூட‌......................இந்தியாவை த‌விர்த்து விட்டு உல‌க‌ம் இய‌ங்கும் சீன‌ன் இல்லாம‌ இந்த‌ உல‌க‌ம் இய‌ங்காது.............இதில் இருந்து தெரிவ‌து என்ன‌ சீன‌னின் முன்னேற்ற‌ம் இந்தியாவை விட‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு அதிக‌ம்...........நீங்க‌ள் பாவிக்கும் ஜ‌போனில் கூட‌ சீன‌னின் பொருல் இருக்கும்............இப்ப‌டி சொல்ல‌ நிறைய‌ இருக்கு..............................................................
    • இங்கே நான் சீமானையோ அவர் மகனையே பற்றி பேசவில்லை. தமிழ்நாட்டில் தமிழின் நிலை எங்கே எப்படி இருக்கிறதென்பதை சுருக்கமாக சிவகுமார் சொல்கிறார் என்பதற்காக இணைத்த காணொளி.
    • இதைவிட முக்கியமானது புலனாய்வுப் பிரிவுகளின் அச்சுறுத்தல் என எண்ணுகிறேன்.
    • 1. அரசியலில் வாதிகள் மீது நம்பிக்கையீனம்.  2. முதலாமது - அந்த அரசியல் மீதே நம்பிக்கயீனமாக மாறி வருகிறது. 3. நியாபக மறதி. திட்டமிட்ட மறக்கடிப்பு. 4. இப்பவே நானும், குடும்பமும் ஓக்கே தானே….ஏன் அல்லப்படுவான் என்ற மனநிலை. 5. யாழில் 1995 க்கு பின் பிறந்த ஒருவருக்கு இப்போ 29 வயது. அவருக்கு புலிகள், போராட்டத்துடன் எந்த நேரடி அனுபவமுமில்லை. 6. அறிவூட்டாமை - 2009 க்கு பின் வெளிநாட்டில் பிறந்த பிள்ளைகளை விட நாட்டில் இருக்கும் பிள்ளைகளுக்கு 1948-2009 என்ன நடந்தது என்றே யாரும் சொல்லவில்லை. நடந்தது அநியாயம் என்பதே உறைக்காவிடின் - உணர்ச்சி எப்படி வரும். இருக்கும் சனத்தொகையில் கணிசமானோர் இவ்வகையினரே.  
    • பாகம்3 துரையப்பா சுடப்பட்டது.   பாகம் 4 தமிழ் புதிய புலிகள்  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.