• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
ஜீவா

நெஞ்சத்தைக் கிள்ளாதே...

Recommended Posts

 

ஜீவா உங்கள் எழுத்துக்கள் ஆன்மாவில் இருந்து வருகின்றன.எழுதி வைத்து பதிவதில்லை உணரும்போதே எழுதுகிறீர்கள்.எழுதுவதற்கு என்றே பிறந்திருக்கிறீர்கள். 

எத்தனையோ கதைகள் உயர்மட்ட வாசகர்களுக்காகவே எழுதபடுகின்றன. அவர்களாலேயே வாசித்தும் உணரபடுகினறன. அப்படி எழுதுபவர்களையிலே எழுத்தாளர்கள் என்று புகழ்கின்றனர். ஆனால் உங்கள் எழுத்துக்கள் அவற்றை எல்லாம் தாண்டி எல்லாராலும் வாசித்து உணர கூடிய படைப்பை தருவதால் , நீங்கள் ஒரு உன்னதமான எழுத்தாளர் என்று சொல்வதில் நான் பின்னிற்பதில்லை.

 

 

 

 

ஆத்மாவில் இருந்து எழுத்து மட்டும் வரவில்லை!

 

இந்த மாதிரிப் பொறுத்த இடங்களில, வாசகர்களைத் தவிக்க விட்டுப் போட்டுப் போற பழக்கமும், ஒரு கைதேர்ந்த எழுத்தாளனுக்குத் தான் வரும்! :icon_idea:

 

கதை, இரண்டு காதலர்களின், அவசரங்களையும், ஏக்கங்களையும் தெளிவாகச் சொல்லிச் செல்லுகின்றது!

 

தொடருங்கள், ஜீவா!

Share this post


Link to post
Share on other sites

பகலவன் அண்ணா, மற்றும் புங்கை அண்ணா, :)

 

உண்மையாக உங்கள் பாராட்டுக்களுக்கு ஒரு சிறுகடுகளவேனும் எனக்குத் தகுதி இருப்பதாகத் தெரியவில்லை,

பாராட்டுக்கள் மூலம் இன்னும் இன்னும் எழுத வேண்டும் என்று உற்சாகத்தையே எனதாக்கிக் கொள்கிறேன்.

எழுதக்கூடாது என்று நினைக்கும் போதெல்லாம் உங்கள் எழுத்துக்கள் தான் எம்மை உயிர்ப்போடு வைத்திருக்கின்றன,

அந்த வகையில் எம் கிறுக்கல்களை ரசிக்கும், தட்டிக்கொடுக்கும் நீங்கள் இருக்கும் வரைக்கும் தொடர்வேன்.

 

நன்றி உங்கள் வருகைக்க்கும் கருத்துப் பகிர்விற்கும். :)

Share this post


Link to post
Share on other sites

இன்று தான் வாசித்தேன். ஜீவா அண்ணாக்கு சிறந்த எழுத்தாற்றல் உள்ளது என்பதை மீளவும் நிரூபிக்கும் எழுத்துகள்.

 

நன்றி துளசி சிஸ்டர் வருகைக்கும், கருத்துப் பகிர்விற்கும். :)

Share this post


Link to post
Share on other sites

கடைசியாய் எழுதியதில் எதோ அவசரம் தெரிகிறது ஜீவா. பார்த்தது எழுதுங்கள்.

 

Share this post


Link to post
Share on other sites

நெஞ்சத்தைக் கிள்ளாதே ...... பகுதி - 7

screw_love_art-1920x1200.jpg

 

மூன்றாமாண்டுப் பரீட்சை நெருங்கியதால் காதலுக்குச் சிறிது விடுமுறை விட்டிருந்தான், முதலாமாண்டைப் போலவே இந்த ஆண்டும் அதி திறமைச் சித்தி எடுத்து உதயன் பேப்பரில் போட்டோ வரவேண்டும் என்பதே நிரோசனுக்கும் அவனுக்குமான போட்டியாக இருந்தது.

"என்ன இண்டைக்கு அப்பர் இரண்டு,மூன்று தரம் இதாலை போட்டுப் போறார்? நான் சொல்லிப் போட்டு வந்து தானே இதிலை விளையாடுறேன்என்று..! காட்ஸ் அடிக்கிறதும் தெரியும், ஏன்  வடிவா பார்த்திட்டு போறார்? யாராச்சும் ஏதும் போட்டுக்குடுத்திருப்பங்களோ?

என்றைக்குமில்லாதவாறு தந்தையின் இந்த நடிவடிக்கைகள் அவனுள் சந்தேகத்தை விதைத்திருந்தது."

ஏழுமணிக்கே ஊரடங்குச் சட்டம் என்பதால் "மாலைச் சூரியன் மங்கல நாணிட்டு இரவின் மடியில் ஒழிந்து கொள்ள முன்னரே இரை தேடி முடித்துக் கூடு திரும்பும் பறைவைக் கூட்டமாய் ஒவ்வொருவரும் கலையத் தொடங்கிவிட்டார்கள்". 

வீடு திரும்பிய மயூரனுக்கோ ஆச்சரியம் என்றுமில்லாதவாறு வாசலிலேயே அம்மா,அக்கா,அத்தான்,தங்கச்சி என்று எல்லோரும் காத்திருந்தார்கள். என்றைக்கும் விட அவர்கள் கண்களில் ஒரு மாற்றம். ஏதோ ஒன்றைச் சொல்ல நினைக்கிறார்கள் என்று தெரிந்தவனுக்கு என்ன என்பதை ஊகிக்க முடியவில்லை, மௌனமே வீடெங்கும் பரவியிருந்தது. பதட்டத்தின் ரேகைகள் படர்ந்து கிடக்க, காத்தவராயன் கூத்தில் நடிப்பவர்களைப் போல தலையைக் குனிந்தவாறே அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தார் மயூரனின் தந்தை.

அவனையே பின் தொடர்ந்து வந்த மற்றவர்களும் ஒவ்வொரு இடத்தில் "கவர்" எடுத்து நின்றனர்."

என்னப்பா? ஏன் எல்லாரும் என்றைக்குமே இல்லாமல் இன்றைக்கு இப்படி அமைதியாக இருக்கிறிங்கள்? யாரும் செத்துக் கித்துப் போட்டினமோ??

யாரிடத்திலிருந்தும் பதில் வரவில்லை. உடுப்பை மாற்றிச் சாரத்தைக் கட்டியவன் போய் முகம் கழுவி சுவாமிப் படத்துக்கு விளக்கேற்றிக் கும்பிட்டுவிட்டு வந்து இடைக்காலப் பாடல்களைச் சுழலவிட்டான் இனிய இசையில்.

நொறுக்குத்தீனி ஏதும் இருக்குதா என்று குசினிக்குப் போனவனுக்கு பிடிக்கொழுக்கட்டை செய்து வைத்திருந்ததை எடுத்துக் கொண்டு வந்து தாயின் மடியில் தலை வைத்துப் படுத்துக் கொண்டு சாப்பிடும் போது "தாயின் கண்ணீர் முத்து ஒன்று அவன் நெற்றியில் திலகமிட்டது."

கண்ணீரின் சூடு அவனைக் கலங்கவே செய்தது.  "ஏனணை இப்ப அழுகிறாய்? என்னம்மா ஆச்சு??

எல்லாரும் இன்றைக்கு ஒரு மாதிரி இருக்கிறிங்கள், அக்காள்,அத்தான் கூட வீட்டை விட்டு வந்திருக்கினம் கேட்டால் பதிலே சொல்லுறிங்கள் இல்லை, இப்ப என்னென்று சொல்லேல்லையோ பிறகு உங்கண்டை கையாலை சாப்பிட மாட்டன் சொல்லிப்போட்டன்."

தந்தையின் முகத்தைப் பார்த்தார் மயூரனின் தாய், சரி என்ற மாதிரியே அவரது முகபாவனையும் இருந்தது.

"உன்னைத் தேடி டொக்டர் மாமா வீட்டடிக்கு  வெள்ளை வான் நேற்றிரவு வந்ததாம், கொக்காள் முத்தப்பா வீட்டை நல்ல தண்ணி அள்ளப்போகேக்குள்ளை "ராசி"  சொன்னவளாம், மயூரன் எங்கை என்று வந்து கேட்டிட்டுப் போனவங்களாம்."

பேசி முடிக்க முன்னரே ........ "உங்களுக்கு என்ன விசரேம்மா? யாரும் மருந்தெடுக்க வந்தவங்களா இருக்கும். என்னை எதுக்கணை கடத்த வேணும்? கடத்துறவன் எனக்குச் சாப்பாடு போடவே தனியா உழைக்க வேணும். சும்மா போணை இதுக்குப் போயா இவ்வளவு எடுப்பு?"

"சொல்லுறதைக் கேளப்பு, இனி நீ கண்டபடி வெளிய ஒன்றும் போக வேண்டாம் வீட்டையே இரு, உனக்கு என்ன வேணுமோ கேட்கிற எல்லாமே வாங்கித் தாறன். வீட்டை வச்சு விளையாடிக் கொண்டிரு.."!

நான் என்னணை பால்குடியே வீட்டை இருந்து விளையாடிக்கொண்டிருக்க?

வாற திங்கள் சோதினை வேறை தொடங்குது, இப்ப போய் அவள் சொன்னாள்,இவள் சொன்னாள் என்று ஆற்றையும் கதையைக் கேட்டிட்டு புலம்பிக் கொண்டிருக்கிறிங்கள். என்ன வேணுமென்றாலும் சொல்லணை கேட்கிறன். ஆனால் திங்கள் கிழமை நான் சோதினைக்குப் போவேன், ஏற்கனவே பொடியளுக்குச் சொல்லி வச்சிருக்கிறன் இருபத்தைந்து வயதிலை படிச்சு முடிச்சு என்ரை சொந்தக் காலிலை நிப்பேன் என்று, பிறகு மரியாதைக் கேடு எனக்கு.

"நான் சொல்லுறதை நீ கேட்கேல்லை என்றால் இஞ்சை ஐந்து பிணம் விழும், அதுக்குப் பிறகு நீ உன்ரை இஷ்ரம் போலை படி."

இப்படி எத்தனை நாளைக்கணை பொத்திப் பொத்தி வச்சிருப்பிங்கள்? கடத்துறவன் என்றால் வீட்டை வந்து கடத்தமாட்டானோ?

"அப்படி  ஒன்று நடக்கிறதென்றாலும் எங்கண்டை உயிர் போனாப் போலை தான் நடக்கும், நீ ஒன்றுக்கும் கவலைப்படாதையப்பு பெத்த எங்களுக்கு வளர்க்கத் தெரியாதோ? உனக்கு என்ன தேவை என்று எங்களுக்குத் தெரியும் பாட்டை நிப்பாட்டிப்போட்டு போய்ப் படு."

போங்கோம்மா .... எரிச்சலா இருக்கு, இதுக்குப் பேசாமல் செத்தே போயிடலாம்.!!

........மறுநாள்........

"அப்பாவும், அத்தானும் போய் கதைச்சிட்டு வந்திட்டினம், உன் பிரச்சனையைச் சொல்லி சோதினைக்கு வரமாட்டான் என்று. மீள்பரீட்சை ஆறுமாதத்திற்குப் பிறகு நடக்கும் அதிலை வந்து எழுதட்டும் நாங்கள் பார்க்கிறம் என்று சொல்லிட்டினம், நீ வீட்டை இருந்து படி"...!

வாற கோவத்துக்கு...

உண்மையா நீங்கள் ஏதும் தெரிஞ்சு தான் பேசுறிங்களோம்மா??

..............................

மௌனமாய் அவ்விடத்தை விட்டு நகர்ந்தார் மயூரனின் தாய்.

"அவர்களின் பயத்தில் நியாயம் இருப்பதை அவன் மட்டுமே அறிவான்."

தொடரும் ....

 

 

  • Like 3

Share this post


Link to post
Share on other sites

உங்கள் கதை சொல்லும்பாணி பிடித்திருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள்....

Share this post


Link to post
Share on other sites

நெஞ்சத்தைக் கிள்ளாதே ..... பகுதி - 6

32-typography-love-art.jpg

 

ஹலோ..!

ஹலோ..!!

நான் அபி2 பேசுறேன்.

ஹாய் அபி2 சொல்லுங்கோ, எப்படி இருக்கிறிங்கள்? சாப்பிட்டாச்சா? என்ன நடக்குது???

"இப்பத்தானேப்பா" பின்னேரம் ஏழு மணி அதுக்குள்ளையா??

சா..சா.. அது தெரியும் அபி2 நான் மத்தியானம் என்ன சாப்பிட்டிங்கள் என்று கேட்டேன்? ஆமா, அதென்ன இண்டைக்கு "வாய்ஸ்" சூப்பரா இருக்கு? ஒரு மாதிரியாப் பேசுறிங்கள், ஏதோ ஒன்று தூக்கலா இருக்கு??

"அக்கறை உள்ளவங்க கிட்ட அப்படித்தான் பேச வரும்".

 என்ன????

இல்லை உங்களுக்கு என்ன சாப்பாடு பிடிக்கும்?

 புட்டு,நூடில்ஸ்,அப்பம் .... அது சரி ஏன் திடீரென்று இதைக் கேட்கிறிங்கள்?

இல்லை எனக்கும் நூடில்ஸ் பிடிக்கும் அதான் கேட்டேன்.

"ஆமா உங்களுக்கு என்ன கலர் பிடிக்கும்? எந்த சுவாமி பிடிக்கும்? நீங்கள் என்ன நம்பர்?? எந்த சினிமா நடிகர் பிடிக்கும்? எந்த சிங்கர் பிடிக்கும் ? எந்த மியூசிக் டைரக்டர் பிடிக்கும்?? எந்த? எந்த??எந்த..................................... எந்த????? "

முடிஞ்சுதா? இல்லை இன்னும் ஏதும் இருக்கா???????

என்ன நேர்முகத் தேர்வுக்கா இத்தனை கேள்வியள் எல்லாம் கேட்கிறியள்?

"நக்கலடிக்காதையுங்கோ .. சொல்லுங்கோ ப்ளீஸ்?"

கறுப்பு, கிருஷ்ணர், ஐந்து, இளையராஜா,SPB, ...............

"எனக்கும் கறுப்பும்,மரூனும் தான் பிடிக்கும், இளையராஜாவும்,ரகுமானும் பிடிக்கும், உன்னிக்கிருஷ்ணன் பாட்டு பிடிக்கும், முருகனும்,கிருஷ்ணரும் பிடிக்கும். நான் ஏழாம் நம்பர் "லக்கி செவிண்" ........

என்ன ஒற்றுமை பாருங்கோ நமக்குள்ளை."!!

"ஆமா என்னைப் பற்றி என்ன நினைக்கிறிங்கள் மயூரன்."?

யாரோ ஒரு லூசு போல என்று மனசுக்குள்  நினைத்தாலும், "உங்களுக்கு என்ன? நல்ல வடிவா இருக்கிறிங்கள், உங்க குரலுக்கு நான் அடிமை அபி".

....எதிர்முனையில் சிரிப்பு.....

ஓ...... அப்ப இப்ப என்ன நினைக்கிறிங்கள்?

"உங்களை லவ் பண்ணலாமோ என்று நினைக்கிறன்."

என்ன விளையாடுறிங்களா?

"விளையாடுறதுக்குத் தான் கேட்டேன்".. என்று குரலை தாழ்த்திச் சொன்னான் மயூரன்.

என்னது?????? அவள் குரலில் ஒரு கடுந்தொனி.

"விளையாடுற விசயமா இது? ஐ லவ் யூ அபி2"

நல்லா யோசிச்சுத் தான் சொல்லுறிங்களோ??

"ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்... இதிலை யோசிக்க என்ன இருக்கு"?

நான ஃபோனை வைக்கிறேன்.. பை.

"எந்தப் பதிலும் சொல்லாமல் போறாளே, ஏதும் பிரச்சனை வருமோ? உனக்கு தேவை இல்லாத வேலையடா மயூரா ..!  விடுடா போனால் போகட்டும், சும்மா தானே சொன்னாய் இதெல்லாம் சர்வதேசப் பிரச்சனையா..!! என்று தனக்குத் தானே  ஆறுதல் சொல்லிக்கொண்டான் மயூரன், இருந்தும் குட் நைட் என்று எஸ் எம் எஸ் அனுப்பி விட்டு அதுக்காவது பதில் வருமா என்று காத்துக் கொண்டு இருந்தான்."

....... எந்தப் பதிலுமே இல்லை......

பொங்கு சனியோ, மங்கு சனியோ ஒரு சனி துலைஞ்சுது என்று நித்திரைக்குப் போனவன். அலாரம் அடித்து எழும்புவதற்காய் ஃபோனைப் பார்க்கும் போது தான் ஆறு எஸ் எம் எஸ் வந்திருந்தது அபி2 யிடம் இருந்து.

"டியர் மயூரன்,

நீங்கள் சிம்பிளாகச் சொல்லிவிட்டீர்கள் நான் தான் தரையில் விழுந்த மீனாகத் தவிக்கிறேன் இங்கு. உங்களுக்குத் தெரியும் எனக்கு ஆண் சகோதரர்கள் யாரும் இல்லை,அக்காவும் தான் விரும்பயவரையே அப்பா வேண்டாம் என்று சொல்லியும் எங்களை எதிர்த்து அவள் விருப்பம் போல வாழ்க்கையை அமைத்துக் கொண்டுவிட்டாள், எனக்கு கீழே இரண்டு தங்கச்சி வேறை அவர்களைப் பார்க்க வேண்டிய கடமையும்,பொறுப்பும் இப்ப என்ரை தலையிலை தான் வந்து விழுந்திருக்குது. எனக்கு என்ரை குடும்பம் தான் முக்கியம். நான் இரண்டாம் தரம் சோதினை எடுத்திருக்கலாம் இல்லாட்டி வேறை ஏதாவது படித்திருக்கலாம் ஆனால் ஆன்டி பிரான்ஸ்சுக்கு வரச் சொல்லி நிக்கிறா அங்கை போய் படிச்சுக் கொண்டு வேலை செய்தால் தான் குடும்பத்தைக் காப்பாற்ற முடியும்.

அதைவிடப் பெரிய பிரச்சனை என்னவென்றால் நான் கமலைக் காதலித்தது உங்களுக்கும் தெரியும், அவனோடு கதைச்சதெல்லாம் என் வாழ்வின் கொடுமையான தருணங்கள், எத்தனை நாள் தான் மனக்காயங்களைத் தாங்குவேன்? "காயம் பட்டு வாற வலியை விடக் காதலினால் இதயத்துக்கு வாற வலி தான் அதிகம்", அதனால் தான் அவனை வேண்டாம் என்று சொன்னேன்.சந்தேகப்பிராணியோடு வாழ்நாள் முழுக்க வடுக்களைத் தாங்க நான் என்ன சுமை தாங்கியா? அது என்னாலை முடியாது, ஆனால் எனக்கு வருபவன் எப்படியோ யாருக்குத் தெரியும்? "தெரியாத பேயை நம்புவதை விட தெரிஞ்ச குட்டிச்சாத்தானை நம்புவதே மேல்". அதைவிட பழகிய வரைக்கும் உங்களைப் பிடிக்கும், அதனால் தான் உங்களுடன் கதைப்பதே. நீங்கள் என்னைக் கைவிட்டிட மாட்டீர்கள், ஏமாற்ற மாட்டீர்கள் என்ற நம்பிக்கையில் சரி சொல்கிறேன்."

"வெண்மேகக் கூட்டங்களைக் கிழித்து விண்மீன்கள் புடைசூழ வெண்ணிலவிலவள் தாழ் சேர்ந்து தாலாட்டுப் பாட சொப்பனம் வராததில் ஆச்சரியப்பட  ஏதுமில்லை, சனி தோஷம்  கூட சிலகாலம் தான், அதுவும் பரிகாரம் செய்தால் போய்விடும் என்பது ஐதீகம் ஆனால் இது?!

இனி அவன் வாழ்நாள் முழுக்கச் சிப்பிலி ஆட்டம் தான் போல நினைத்துக் கொண்டான்."

காலதேவன் தன் கடமைகளைக் கனகச்சிதமாகவே செய்து கொண்டிருந்தான்

யாழின் அன்றைய அசாதாரண சூழ்நிலைகளால் அவள் கொழும்பிலும், அவன் யாழிலும் இருந்ததால் முகம்பாராமலே தொடர்ந்தன அவர்கள் காதல். பார்த்து விடத் துடிக்கும் மனதிருந்தும் பாதை மூடியதால் பார்க்காமலே தொலைந்து விடப்போகிறார்கள் என்பதை யார் தான் அறிவர்..????

தொடரும்..

பி.கு: ஆள்மாறாட்டம், பெயர்க்குளப்பம் ஏற்படக் கூடாது என்பதற்காக அபி2என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

 

 

 

முகம் பாராத காதல்கள் அனேகமாக முகம்பார்க்கும்பொழுது முற்றிலும் கோணலாகிப் போவதைப் பார்த்திருக்கின்றேன் . என்னைப் பொறுத்தவரையில் இந்தக்கதையின் கதாநாயகி ஓர் எதிர்பார்ப்புடனேயே தனக்கான துணையைத் தேடுகின்றாள் . முதலில் கமலைத் தெரிவு செய்தவள் இப்பொழுது மயூரனை நேசிப்பவளின் செயற்பாடுகளை " காதல் " என்கின்ற வரையறைக்குள் சேர்க்க முடியாது . வேண்டுமானால் அதை ஹோர்மோன்களின் குளறுபடிகள் என்றே சொல்ல முடியும் . வாழ்துக்கள் ஜீவா !!! இந்தக்கதையே உங்கள் எழுத்துப் பயணத்தில் பெரிய மாற்றங்களை உருவாக்கப் போகின்றது .

Edited by கோமகன்

Share this post


Link to post
Share on other sites

உங்கள் கதை சொல்லும்பாணி பிடித்திருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள்....

 

நன்றி மணிவாசகன் அண்ணா. :)

 

தொடர்கிறேன்.

Share this post


Link to post
Share on other sites

கமல் மீண்டும் வருவாரா? மயூரனையும் அபியையும் சந்திப்பாரா?

தொடருங்கள் ஜீவா  

 

Share this post


Link to post
Share on other sites

கமல் மீண்டும் வருவாரா? மயூரனையும் அபியையும் சந்திப்பாரா?

தொடருங்கள் ஜீவா  

 

அதை இப்பவே சொன்னால் கிளைமாக்ஸ்சில் த்ரில் இருக்காதே வாத்தியார் அண்ணா..

(இதெல்லாம் ஓவர் பில்டப்புனு நினைக்கிற உங்க மைன்ட்வாய்ஸ் எனக்கும் கேட்குது.. :lol: )

 

நன்றி வாத்தியார் அண்ணா, தொடர்ந்திருங்கள். :)

Share this post


Link to post
Share on other sites

நெஞ்சத்தைக் கிள்ளாதே .... பகுதி - 8

366594_15571358_lz.jpg

 

சீராளன்,

தானாய் வந்து ஒட்டிக் கொண்டவனாகிலும் தலையெழுத்தை மாற்றப் போகிறவன் என்பதை மயூரன் எப்படித் தான் அறிவான்?

எப்போதும் மூன்று மணிக்கு ரியூசனுக்குப் போற பொடியளுக்குப் பின்னால் போவான் திரும்ப ஆறுமணிக்கு அதே பொடியளுக்குப் பின்னால் வருவான்.

"என்னடா மச்சான் ஏரியாக்கு புதுசா ஒரு பொடியன் வந்திருக்கிறான் போலை. ஆளை இதுக்கு முதல் கண்டசிலமன் இல்லை, ஒருவேளை இடம்பெயர்ந்து வந்திருப்பானோ? அதுக்கும் இஞ்சை வாற அளவுக்கு ஆருக்கடா ஆக்கள் இருக்கு?? ஒரு வேளை முகாமிலை இருப்பானோ??"

தன் சந்தேகக் கணைகளைக் கேட்டான் ராஜன்.

"நான் அவனை மறிச்சுக் கேட்கவா மச்சி?"

அவர்கள் சம்பாஷனையை ஞானதிருஸ்டியில் அறிந்திருப்பானோ என்னவோ அவனே அவர்கள் அருகில் வந்து விளையாடுவதைப் பார்த்துக் கொண்டிருந்தான். சிறிது நேரம் அமைதியாக இருந்தவன், நானும் உங்களுடன் விளையாட வரட்டா? எனக்குப் பெருசா விளையாடத் தெரியாது பீல்டிங் பண்ணுறேன்.

சரி என்று சொல்லி அவனையும் சேர்த்து விளையாடினார்கள்.

அது தான் அவனுக்கும்,மயூரனுக்குமான முதல் சந்திப்பு பின்னர் மயூரன் செல்லும் இடமெல்லாம் அவனும் இருந்தது ஆச்சரியத்தின் உச்சம்.

விளையாடப் போகும் போது, பொது நூலகத்தில், வாசகர்சாலையில் என்று வழமையாக செல்லும் இடங்களில் எல்லாம் அவனும் இருப்பான்.

என்ன எனக்குப் பின்னாலையே வாறான்? நான் போற இடமெல்லாம் இவனுக்கு எப்படித் தெரியும்?? யாரும் என்னைப் பற்றி ஏதும் சொல்லி இருப்பார்களோ??? விடைதெரியாக் கேள்விகள் அவனை அரித்துத் தின்றது.

அவனைச் சந்திக்கும் போதெல்லாம் ஒரு புன்முறுவலோடு நழுவிப் போனான் ஆனால் ஒரு நாள் வாசகர்சாலையில் வைத்து மாட்டி விட்டான்.

"உங்கண்டை பேர் மயூரன் தானே, இன்ன படிக்கிறியள், வீட்டிலை இத்தனை பேர், இத்தனை பேர் வெளிநாட்டிலை, இத்தனை பேர் இஞ்சை, அக்கா,அண்ணா எல்லாரும் கலியாணம் கட்டிட்டினம், நல்லா பாடுவிங்கள், திலீபன் நினைவுநாட்களில் எல்லாம் சின்னனில் பாடி இருக்கிறீர்கள் என்ன சரியோ!?"

திகைத்துப் போய்விட்டான் மயூரன்..!!!

ஆமா இதை எல்லாம் எதுக்கு இப்ப என்னட்டை சொல்லுறிங்கள்?

எங்கையாச்சும் எனக்கு பொண்ணு பார்க்கிறிங்களா?

இல்லை மயூரன் எனக்கு உங்களோடை உதவி வேணும். பயப்படவேண்டாம்.

நான் இயக்க புலனாய்வுப் பிரிவிலை இருக்கிறன். எங்களுக்கு வேலை செய்ய நம்பிக்கையான ஆக்கள் வேணும். உங்களைப் பற்றி உங்களுக்கே தெரியாத முழுதும் எங்களுக்குத் தெரியும்.

"என்ன படம் காட்டுறியோ?" கோபத்தில் மரியாதை இல்லாத வார்த்தைகளால் திட்டினான் அவனை.

"நம்பமாட்டிங்கள் என்று தெரியும் இஞ்சை பாருங்கோ இயக்க அடையாள அட்டை, த.வி.பு **** தகடு, சயனைட் குப்பியைக் கையில் திணித்தான்."

அதை தொடும்போதே ஏதோ புது இரத்தம் பாய்ச்சிய உணர்வு.

பின்னர் அவர்களுக்கிடையிலான நட்பு, அவர்கள் தேவை குறித்தெல்லாம் செயற்படத் தொடங்கி இருந்தான். வெளியில் சந்தித்தால் பிரச்சனை வரும் என்பதற்காக தன்னுடன் படிக்கும் பொடியன் என்று சொல்லி வீட்டில் அறிமுகப்படுத்திய பின்னர். சேர்ந்து படிக்கிறோம் என்று சொல்லி அவன் புலனாய்வு சம்பந்தமான நுணுக்கங்களைச் சொல்லிக் கொடுத்தான். நீண்ட நாட்கள் நிலைத்திருக்காது அவர்கள் நட்பு, வன்னிக்கு வரச்சொல்லி மேலிடத்து உத்தரவு வந்திருக்குது நாளைக்கு நான் போறேன். உன்னை இனி வேறு ஒருவர் சந்திப்பார் என்று சொல்லி பச்சை பத்து ரூபாய் நாணயத்தாளில் "சிக்சாக்" வடிவில் வெட்டியிருந்த பாதியைக் குடுத்து "வாறவர் இதோடை மற்ற பாதியைக் கொண்டுவருவார் பொருத்திப் பார்த்து அவருடனே இனி தொடர்பில் இரு, மிச்சம் எல்லாம் அவர் சொல்லித் தருவார் என்று கட்டியணைத்துவிட்டு, நல்லாப் படி. எப்ப இனி  திரும்ப வருவேனோ இல்லையோ தெரியாது வந்தால் உன்னைப் பார்க்க வருவேன், என்னை மறந்திடாதை என்று சொல்லிவிட்டு பிரிந்தவர் தான், இன்று வரை அவர் குறித்த சேதி இல்லை.

ஹலோ..!

ஹாய் அபி2 எப்படி இருக்கிறாய்?

"உங்களுக்கு மானர்ஸ் தெரியாதா?"

இப்ப ஏன்டி என்னை திட்டுறாய்??

"ரெலிபோன் எடுத்தால் முதல் யார் என்று சொல்லி, நீங்கள் யார் என்று கேட்டு அதற்குப் பின் தான் மற்றையவற்றைக் கதைக்க வேணும். இப்படி எடுத்த உடனை எதிரிலை பேசுபவரின் பெயர் சொல்லக் கூடாது புரியுதா, நல்ல பழக்கவழக்கங்களைத் தெரிஞ்சுகொள்ளுங்கோ சரியா?"

"உன்ரை போன் நம்பர் என்று தெரியும் இதிலை இருந்து நீ தான் எடுப்பாய் என்றும் தெரியும் பேந்து ஏன்டி இப்படி பிலிம் காட்டுறாய்?"

"சரி விடுங்கோ.. ஒரு குட்நியூஸ் எனக்கு சீமா கிடைச்சிட்டுது நான் படிச்சுக்கொண்டிருக்கிறன், பாஸ்போட் அனுப்பிவிடச் சொல்லி ஏஜென்சியட்டை அதுவும் அனுப்பிவிட்டேன். பார்ப்போம் எது சீக்கிரம் நடக்குது என்று."

ஹலோ..ஹலோ..ஹலோ... என்ன சத்தத்தையே காணேல்லை?

பொறுங்கோ..பொறுங்கோ ஆன்டி வாறா நான் அப்புறம் எடுக்கிறன். பை...!!

கனநாட்கள் கூட இல்லை ஒரு நாள் ரியூசன் முடித்து வந்தவனைப் பின் தொடர்ந்த ஒருவர், மயூரன் ****அந்த வைரவர் கோயிலடிக்கு வாங்கோ உங்களோடை கதைக்க வேணும்.

என்ரை பேர் கவியரசன். சீராளன் உங்களைப் பற்றி எல்லாம் சொன்னவன் இனி நீங்கள் என்னுடன் தொடர்பில் இருங்கள் அடுத்து என்ன செய்ய வேண்டும்  என்று அடுத்த சந்திப்பில் சொல்கிறேன் என்று சொல்லி பத்து ரூபாய்த் தாளின் மற்றைய பகுதியைக்குடுத்தார் மயூரனிடம்.

"மயூரன் வாற "சனி" உங்களைச் சந்திக்க முக்கியபொறுபாளர்மார் வருவினம் நீங்கள் வீட்டை ஏதாவது சொல்லிப்போட்டு கனநேரம் நிக்கக் கூடியதாக வாங்கோ, சாப்பாடெல்லாம் நாங்களே தருவம். நான் சொல்லுற இடத்திலை வந்து நில்லுங்கோ நான் வந்து கூட்டிக் கொண்டு போறேன்."

யாராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு மேலிட அந்த இரவு தூக்கமே இன்றித் தொலைத்தான்.

அம்மா..! இன்றைக்கு ரியூசனிலை சோதினை இருக்கு எப்படியும் வர நேரஞ் செல்லும் தேடாதையணை என்று சொல்லிவிட்டு குறித்த இடத்திற்குச் சென்றிருந்தான். சொன்னது போலவே வந்த அவர் சந்திக்க வேண்டிய இடம் வந்ததும், மயூரன் நீங்கள் இதிலை இறங்கி நில்லுங்கோ, உங்கண்டை சைக்கிளையும் தாங்கோ நான் வேறை இடத்திலை விட்டிட்டு வாறன்.

இருவரும் ஒரு அறைக்குப் போனதும் மயூரனின் கொப்பி எல்லாவற்றையும் வாங்கி விட்டு உடுப்பை எல்லாம் மாற்றச் சொல்லி "நீலப்பெட்டி போட்ட சாரம், மெல்லிய பச்சை நிறத்தில் இருபக்கமும் பொக்கற் வைத்துத் தைத்த சேட் குடுத்து போட்டதும் அப்படியே ஒரு புகைப்படம் எடுத்து விட்டு கையில் இருந்த மோதிரம்,கோயில் நூல் எல்லாவற்றையும் கழற்றச்சொல்லி வாங்கி விட்டு முகத்திற்கு மண்ணிற சீத்தைத்துணியால் செய்த,கண்ணுக்கு மட்டும் கறுத்த துணி வைத்துத் தைத்த முகமூடி அணிவித்து சந்திப்பு நடக்க வேண்டிய அறைக்குக் கூட்டிக்கொண்டு போகும் போது அதே கோலத்தில் பதினைந்து, இருபது பொடியள் இருந்ததைக் கண்டு தான் மட்டுமல்ல, இன்னும் பொடியள் வந்திருக்கிறாங்கள் என்று நினைத்துக் கொண்டான் மயூரன்.

உள்ளே போன சில கணங்களிலேயே நாலைந்து பேர் வந்து எல்லாருக்கும் கை கொடுத்து விட்டு நியூட்டன் அண்ணா, பிரதீப் மாஸ்டர்,தியாகராஜா அண்ணை என்று ஒவ்வொருவராய் அறிமுகப் படுத்திக் கொண்டு வகுப்பெடுத்தனர். மதியச்சாப்பாடு மீன்கறியுடன் கவியரசன் அண்ணாவே பரிமாறியிருந்தார். மயூரன் மீன் சாப்பிடததால் சாப்பாட்டையே பார்த்துக் கொண்டிருந்தான். "ஒரு நேரச் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் எத்தனை களங்களைப் பார்த்திருப்பம், இப்பதையான் பொடியள் நல்ல சாப்பாடு  இருந்தும் சாப்பிடுறாங்கள் இல்லை என்று கவலைப்பட்ட படி நூறுரூபாய் தாளை எடுத்து அவனிடம் கொடுத்தார்". போகும் போது உனக்குப் பிடிச்சதை வாங்கிச் சாப்பிடு என்று, வேண்டாம் என்றவன் வெறும் சோற்றை மட்டும் சாப்பிட்டான்.

எல்லாம் முடிந்ததும் ஒவ்வொருவராகக் கூட்டிக் கொண்டு போனார்கள்.

அறைக்குப் போனதும் முகமூடியைக் கழற்றி விட்டு. என்ன எல்லாம் விளங்கிச்சுதா? இனி உன்ரை இயக்கப் பெயர் ******* அல்லது ******

இனி நீ இந்தப் பெயரிலை தான் உன்ரை அறிக்கையளைக் குடுக்க வேணும்.

பெயர்***********

முகவரி **********

**********************

விசுவமடு.

இந்த விலாசத்துக்கு அனுப்பினால் சரி. கை குலுக்கி விடைபெற்றார்கள்.

என்ன தான் அபி2யும் மயூரனும் கதைத்தாலும், சண்டைகளுக்கு மட்டும் குறைவில்லை. அப்படித்தான் இந்த முறை நல்லூர்த் திருவிழாவுக்கும் வாறேன் உங்களையும் பார்க்கலாம் என்று சொல்லி இருந்தாள் ஆனால் அவனோ சோதினைக்கே போக முடியாமல் இருக்கும் போது அவளை மட்டும் எப்படிச் சந்திக்க? பொய் சொல்லிவிட்டுப் போகும் விடையமா இது? பிறகு ஏதும் நடந்தால்? ஆனால் அவன் தன்னுடைய பிரச்சனைகள் எவற்றையும் அவளிடம் சொல்லவில்லை. சொறி அபி2 எனக்கு நிறைய வேலையள் இருக்கு, நீ வந்திட்டுப் போ நாங்கள் இன்னொரு நாள் சந்திப்பம்.

"போடா உனக்கு என்னை விட மற்றதெல்லாம் தான் முக்கியம். நீயே வரமாட்டாய் பிறகேன் நான் வரவேணும். நானே லீவு கேட்டிட்டுத் தான் வரலாம் என்று இருந்தேன். உனக்குத் தான் நான் முக்கியம் இல்லையே போ.. என்னோடை கதைக்காதை." கோவித்துக் கொண்டு போனை வைத்துவிட்டாள்.

"இவளுக்கு இதுவே வேலையாப் போச்சு படுத்துறாள்" தன்னையே கடிந்து கொண்டான் மயூரன்.

ஏ9 பாதை மூடியவுடன் பல தொடர்புகள் விட்டுப்போயிருந்தன  ஆனால் கவியரசன் அண்ணையும், தியாகராஜா அண்ணையும் உள்ளுக்குள் இருந்ததால் சற்று நிம்மதியுடனேயே இருந்தான். ஆனால் அது நீடிக்கவில்லை ஓராங்கட்டைச் சந்தியில் ஆமிக் காம்புக்கு கிரனைட் அடிச்ச பொடியள் அடையாள அட்டையை விழுத்திப் போட்டுப் போக அதை எடுத்த ஆமி குறிப்பிட்ட பொடியனைப் பிடிக்க அதன் பின் சங்கிலித் தொடராக கவியரசன் அண்ணாவும் பிடிபட்டதாக உறுதிப்படுத்தப் படாத தகவல் அவனுக்குக் கிடைத்தது. ஆனால் கொஞ்சக் காலம் கழித்தே கரவெட்டியில் வைத்து தியாகராஜா அண்ணையும் வீட்டில் வைத்துச் சாப்பாடு குடுத்தவனே ஆமிகுக் காட்டிக் கொடுத்து சுற்றி வளைக்கப் பண்ணி விட்டு காலமை முகம் கழுவ கிணத்தடிக்கு வரும் போது ஆமி பிடிக்க முனைய தன்னைத் தானே சுட்டு வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.

ஒரு வேளை யாரும் காட்டிக் கொடுத்துத் தான் தன்னையும் கடத்த வந்தார்களோ என்று நினைத்தவன் இதை எல்லாம் சொன்னால் தன் குடும்பத்தார் பயந்திடுவார்களோ என்று தான் மறைத்திருந்தான்.

வீட்டில் இருந்தாலும் பக்கத்துக் கோயிலடியில் போய் பொடியளுடன் கொஞ்சம் விளையாடிப் போட்டு வருவதால் ஆறு மாதம் என்பது விரைவாகவே கடந்துவிட்டது.

நாளை மீள் பரீட்சையில் தோற்றுவதற்காய் தயாராகிக் கொண்டிருக்கிறான்.

என்ன தான் நடக்குமோ யார் தான் அறிவர்...????

தொடரும்......

 

 

  • Like 6

Share this post


Link to post
Share on other sites

தொடருங்கள் ஜீவா....இன்றுதான் தொடரை வாசித்தேன்..இன்றும் எம் இளைஞர்கள் இந்த காதல் சுகத்தை அனுபவிக்கிறார்கள்...

அதிகாலை நாலு மணிக்கெல்லாம் கோயில்லை பாடத்தொடங்கி விட்டுது.
இந்த சுகத்தை 30 வருடங்களின் பின்பு எனது ஊர்கோவில் திருவிழாவிலும் அனுபவித்தேன்..

Share this post


Link to post
Share on other sites

 

கிராமக் கோட்டில கிரனேட் எறிஞ்சது சலூன் வைத்திருந்த ஜெகன் அல்லது ஓட்டோ குட்டி என நினைக்கிறேன். பின்னர் ஜெகனின் தம்பி கண்ணனை பிடித்து டம்ப் பண்ணியிருந்தார்கள். அதன் தொடராகவே ஓட்டோக் குட்டியும் வீட்டு வாசலில் வைத்து சுடப்பட்டான். ஆதி, அமுதாப் அண்ணா, பாப்பா, அன்பழகன் என பலர் வந்து கதைத்தும் எப்பிடியோ எரிமலைக்குப் போகாமல் சுழித்து விட்டார்கள். வதிரி பேசில கட்டைக் கண்ணன் எண்டு ஒராள் இருந்தவர் தெரியுமோ மச்சி?

 

 

Share this post


Link to post
Share on other sites

காதலிலை இருந்து கதை கொஞ்சம் சீரியசாகப் போகுது போல கிடக்கு! :D

 

தொடர்ந்து எழுதுங்கள், வாசிக்கிறேன்!

Share this post


Link to post
Share on other sites

முழுக்கமுழுக்க காதல் கதையைத்தான் எதிர்பார்த்தன். நீங்களும் பெரிய ஆள்போல கிடக்கு.

 

Share this post


Link to post
Share on other sites

ஓராம்கட்டை சந்தி காம்பாலை பட்டபாடு எங்களுக்குத்தான் தெரியும் . தொடந்து எழுதுங்கோ தம்பி .

Share this post


Link to post
Share on other sites

நெஞ்சத்தைக் கிள்ளாதே ....... பகுதி -9

 

560038_497395060326743_1400053877_n.jpg

 

அதிகாலை இரண்டு மணிக்கே எழுந்து படிக்க ஆரம்பித்தவன் முக்கியமான குறிப்பிட்ட நோட்ஸ்சை மட்டும் mp3 யில் தன் குரலில் பதிவு செய்தான், பஸ்ஸில் போகும் ஒரு மணிநேரமும் அதையே திரும்பத் திரும்பக் கேட்பதன் மூலம் பாடமாக்கி விடலாம் என்று.

குளித்து விட்டு வரும் போது அவனுக்கு முன்னரே எல்லாரும் வெளிக்கிட்டு நின்றிருந்தார்கள். மயூரனுக்கோ ஆச்சரியம்? என்ன இண்டைக்கு ஏதும் விசேஷமோ எனக்குத் தெரியாமல்..!

அம்மா..! என்னணை இண்டைக்கு எங்கையும் கலியாணவீடோ இல்லாட்டி சாமத்திய வீடோணை? ஏன் எல்லாரும் வெளிக்கிட்டு நிக்கிறியள்??

"நாங்கள் ஆற்றையும் வீட்டை போறனாங்களோடா? பிறகேன் புதுசாக் கேட்கிறாய்?"

அப்ப ஏனணை?

"எல்லாம் உன்னைக் கூட்டிக் கொண்டுவந்து விடத்தான்."

கையை உச்சந்தலையில் அடித்துக் கொண்டவன், சுவரில் தலையால் ஆஆஆஆ... நாலு முட்டு முட்டிக்கொண்டான். எனக்கு வாற கோவத்துக்கு,

உண்மையா உங்களுக்கே இது நல்லா இருக்காணை? நீங்களே ஊருலகத்துக்கு காட்டிக்குடுத்துடுவிங்கள் போல .. பேசாமல் இருங்கோணை.

"அதற்கு மயூரனின் தாய் பதில் கூற முயலவே வாயைப் பொத்தியவன். பேசாதையணை, எனக்கு என்ரை வேலை தெரியும் பேசாமல் உங்கண்டை வேலையைப் பாருங்கோ. காசு குடணை."

கோவத்தில் சாப்பிடக் கூட இல்லை, காசை மட்டும் வாங்கிக்கொண்டு கிளம்பிவிட்டான்."

என்றுமில்லாதாவாறு இன்றைக்கு அவனுக்கு எல்லாமே தடங்களற்ற தெருக்களில் ஏலியன்களின் நடமாட்டம் போல் உணர்ந்தான், வெள்ளை வாகனங்கள் எல்லாம் வெள்ளைவான்களாகவே தெரிந்தது ஒவ்வொரு ஆமிக்காம்பையும் கடக்கும் போதும் ஒவ்வொரு துவக்கும் தன்னை நோக்கி நீட்டப்படுவதாயே உணர்ந்தான் சைக்கிள் ரயர் வெடித்திருந்தால் கூட குண்டுவெடித்தது போலக் குலை நடுங்கினான். கருடபுராணக்கதைகள் கேட்டவனுக்கு  உயிரோடு இருக்கும் போதே நரகத்தின் வேதனைகளை அனுபவித்தான் அந்தக் கணங்கள்."

சோதினை முடிந்து முடிவுக்காய் காத்திருந்த நாட்கள் அவை,

நாய்களின் ஊளையிடுதலும்  இராணுவ வாகங்களின் இரைச்சலும் விடிந்ததும் ஏதோ சுற்றிவளைப்பு நடக்கப் போவதை உணர்த்தின. எப்படியாவது அடுத்த பக்கம் போய்விட வேண்டும், யாராவது தலையாட்டியைக் கூட்டிக்கொண்டு வந்தால் தான் பிடிபடுவனோ என்று நினைத்தவன் வாசலுக்கு வந்து நிலமையைப் பார்த்தான் அப்போது தான் அம்மன் கோவிலுக்கு பூசையாக்கப் போன ஐயர் திரும்பி வந்தார்.

"என்ன ஐயா? ஏன் திரும்பிவாறிங்கள்??"

கோயிலைச் சுத்தி ஆமி நிக்கிறான் , இந்த ஏரியா இண்டைக்கு "ரவுன்டப்"பாம்கோயிலுக்கு போகேலாது வீட்டை போகச்சொல்லிட்டான்.

நீ ஏன் வெளியிலை நிக்கிறாய் உள்ளை போ".

அப்பா.. இண்டைக்கு இஞ்சாலை ரவுண்டப்பாம். நீங்கள் அக்காளையும், தங்கச்சியையும் பாருங்கோ, விடிஞ்சு அவன் இஞ்சாலை வாறதுக்குள்ளை நான் அம்மாவோடை மெசினைக் கொண்டு தோட்டத்துக்குப் போறன்.

ஏன் எதுக்கு என்று கூட யோசித்தாரோ தெரியாது சரியப்பு, சேட் ஒண்டும் போடாதை, தலை ஒன்றும் இழுக்க வேண்டாம் சும்மா தட்டிப்போட்டுப் போ.

தாயிடம் கிணற்று வயரைக் குடுத்து விட்டு மண்வெட்டியைத் தோளில் எடுத்து வைத்தவன் மறுகையில் வில்லியர்ஸ் மெசினையும் இழுத்துக்கொண்டு தோட்டத்திற்குக் கிழம்பினான்.

போகும் போதே சில ஆமி கண்டிருந்தாலும் எதுவும் கேட்காமல் விட்டிருந்தார்கள். தனது ப்ளான் வேலை செய்யுது போல என்று நினைத்து சந்தோசப்பட்டவனது எண்ணம் அடுத்த கணமே கலைந்தது.

"அடே .. ஹொய்த யன்னுவ?"

தோட்ட யனுவா

 ஆமிக்காரன் மேலும் கீழும் பார்க்க, தப்பா சொல்லிட்டமோ !!!

தெரிஞ்சால் தானே சொல்ல சிங்களத்தில் ஒரு வார்த்தையே தெரியாது ஏதோ குத்துமதிப்பாச் சொல்லிட்டனோ, வெழுக்கப்போறான் போலை என்று நினைச்சவன், சேர்..சேர் தோட்டம், தோட்டம் மெசின் டுட்டுடுடு.. வோட்டர் சேர் வோட்டர். போதாக்குறைக்கு தார் ரோட்டிலேயே வாய்க்கால் இழுத்து, மெசினில் கயிற்றைச் சுற்றி இயக்கப் பண்ணிக்காட்டினான். சத்தம் கேட்டு நாலைந்து ஆமிக்காரங்கள் ஒன்று சேர்ந்து தமக்குள் ஏதோ சொல்லிக் கதைத்தார்கள், ஆனால் இடிவிழுந்த ஒருத்தன் போகேலாது வீட்டை போ என்று துரத்தி விட்டான் அவர்களை.

என்ன செய்ய அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? மயூரனின் அப்பாக்கு நல்ல ஐடியா வந்தது காய்ச்சல் என்று படுக்கச் சொல்லி விட்டு தான் ஆஸ்மாக்கு பாவிக்கும் மருந்துகளை எடுத்து மயூரனின் தலைமாட்டில் வைத்து , தாயாரிடம் சொல்லி விசிறிக்கொண்டிருக்கச் சொல்லிவிட்டு வாழைக்கன்றுக்கு தண்ணி இறைச்சுக் கொண்டிருந்தார். சொன்னது போலவே

எல்லாவீடுகளுக்குள்ளும் ஆமி வந்துவிட்டான். மயூரன் படுக்கையில் இருந்து கஸ்டப்பட்டு எழுவது போல நடிக்க அவனை படுக்கச் சொன்னான். எல்லாரது அடையாளஅட்டையையும், குடும்ப அட்டையையும் வாங்கிப் பார்த்து ஆக்களையும் சரிபார்த்துவிட்டு வரச் சொல்ல

பிள்ளைக்கு ஃபீவர் சேர், மருந்து சேர் என்று மயூரனின் தந்தை சொல்ல நல்லவன் போல மயூரனின் தாயை அவனைப் பார்க்கச் சொல்லி விட்டிட்டு மற்றவர்களைக் கூட்டிக்கொண்டு பக்கத்தில் இருந்த கோயிலுக்குக் கூட்டிக்கொண்டுபோயிருந்தான். நல்ல காலம் எல்லாரையும் தலையாட்டிக்கு முன் நிறுத்தினாலும் யாரையும் தலையாட்டவில்லை என்று ரவுண்டப் முடிச்சு வந்து மயூரனின் தந்தை சொல்லியிருந்தார்.

இவனை இனியும் இப்படி வச்சிருக்க முடியாது, தினம் தினம் செத்துப் பிழைக்கிறதை விட எங்கையாவது அனுப்பிவிடுவது என்று முடிவெடுத்த மயூரனின் பெற்றோர் லண்டனில் உள்ள அவன் அண்ணாவுடன் கதைத்து அவனை லண்டனுக்கு அனுப்ப முடிவெடுத்து விட்டனர். பாதை வேறு பூட்டியதால் யாழ்-கொழும்பு விமானத்தில் தான் போகவேணும், அதை விட ஆமியட்டைப் பாஸ் எடுக்க வேண்டும் எத்தனை கண்டங்களைத் தாண்ட வேண்டும். ஆனால் அவனுக்கோ இதில் துளிகூட விருப்பமில்லை அவனது படிப்பு, அந்த ஊர், நட்பு,காதல் இவற்றையெல்லாம் விட்டு எங்கோ கண்காணாத தூரத்திற்குப் போவது என்பதை அவன் கனவிலும் நினைத்ததில்லை. போவதில்லை என்று நினைத்தவனுக்கு நாளைய சம்பவம்

எங்கையாவது "போ" என்று சொல்லும் என்பதை அறிய அவன் என்ன முக்காலமும் உணர்ந்த ஞானியா??

தொடரும்....

 

 

  • Like 11

Share this post


Link to post
Share on other sites

தொடருங்கள் ஜீவா....இன்றுதான் தொடரை வாசித்தேன்..இன்றும் எம் இளைஞர்கள் இந்த காதல் சுகத்தை அனுபவிக்கிறார்கள்...

 

இந்த சுகத்தை 30 வருடங்களின் பின்பு எனது ஊர்கோவில் திருவிழாவிலும் அனுபவித்தேன்..

 

 

நன்றி புத்தன் அண்ணா,

வருகைக்கும் கருத்துப் பகிர்விற்கும். :)

Share this post


Link to post
Share on other sites

அசத்தலப்பா கதை.. சும்மா கை கால் எல்லாம் வேர்க்குது.. :D

Share this post


Link to post
Share on other sites

கிராமக் கோட்டில கிரனேட் எறிஞ்சது சலூன் வைத்திருந்த ஜெகன் அல்லது ஓட்டோ குட்டி என நினைக்கிறேன். பின்னர் ஜெகனின் தம்பி கண்ணனை பிடித்து டம்ப் பண்ணியிருந்தார்கள். அதன் தொடராகவே ஓட்டோக் குட்டியும் வீட்டு வாசலில் வைத்து சுடப்பட்டான். ஆதி, அமுதாப் அண்ணா, பாப்பா, அன்பழகன் என பலர் வந்து கதைத்தும் எப்பிடியோ எரிமலைக்குப் போகாமல் சுழித்து விட்டார்கள். வதிரி பேசில கட்டைக் கண்ணன் எண்டு ஒராள் இருந்தவர் தெரியுமோ மச்சி?

 

 

நீ சொல்வது சரி தான் மச்சி. உனக்கு இது தெரிந்திருக்கும் என்று ஊகித்தேன் அப்படியே எழுதிவிட்டாய். உன்னுடைய கதையில் எழுதிய சிலருக்கும், இவர்களுடன் தொடர்பு இருந்தது. ஸ்கைப்பில் வா மச்சி. :)

நேற்று தான் முழுக்க வாசித்தேன்.தொடர்ந்து எழுதுங்கோ.

 

நன்றி அண்ணா, தொடர்ந்தும் படித்துக் கருத்தெழுதும் ஒருவர் அண்ணா நீங்கள்.

உங்கள் ஊக்குவிப்புத் தான் தொடர்ந்து எழுதவைக்கிறது.

நன்றி அண்ணா, வருகைக்கும், கருத்துப் பகிர்விற்கும். :)

Share this post


Link to post
Share on other sites

கண்ணுக்கு முன்னால கிடந்து, சீரழியாமல், கண்காணாத இடத்தில போய், நீயாவது நல்லாயிருக்க வேணும்!

 

அநேகமான பெற்றோர்களின், ஆரம்பகால ஆதங்கம், இப்படித்தான் இருந்திருக்கும் என நினைக்கிறேன்!

 

தொடருங்கள், ஜீவா!

Share this post


Link to post
Share on other sites

தொடருங்கள் தம்பி

காலங்கள் காத்திராது

நாம் அந்தந்த வேளையில் அவற்றை  பதிவாக்கணும்

 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.