Jump to content

யார் இந்த முருகதாஸ்

Recommended Posts

கேள்வி - யார் இந்த முருகதாஸ்?

பதில் - முருகதாஸ் ஒரு பட்டதாரி மாணவன்

தற்பொழுது மாணவர்களைப் பற்றி மட்டுமே யாழ் களத்தில் எழுத வேண்டும், சிந்திக்க வேண்டும் என்று பலர் வற்புறுத்துவதால் இந்தப் பதிலை மடடும்தான் சொல்ல முடியும்.

Link to comment
Share on other sites

  • Replies 100
  • Created
  • Last Reply

தமிழர்களில் மூன்று வகை.. :blink:

  1. ஈழப் போராட்டம் இன்னும் முடிந்துவிடவில்லை என்பவர்கள். (இப்பவும் ஏதாவது போராட்டம் செய்துகொண்டு இருப்பவர்கள்) :unsure:
  2. போராட்டத்திற்கான தேவை இன்னும் இருக்கிறது.. ஆனால் இனிப் போராட முடியாது என்பவர்கள்.. (அதாவது ஒதுங்கி பேசாமல் இருப்பவர்கள்) :huh:
  3. மே 2009 உடன் போராட்டமும் அழிந்துவிட்டது.. அதற்கான தேவையும் இனி இல்லை என்பவர்கள். (இவர்கள்தான் கட்டுரைகள் எழுதி வியாக்கியானம் பேசிக்கொண்டிருப்பவர்கள்.. :D )

போராட்டத்திற்கான தேவை இருக்கும்வரையில் சுய பரிசோதனை நடாத்தமுடியாது. அது காட்டிக்கொடுப்பதில் போய் முடியும். :unsure: இந்த மூன்றாவது வகையினர்தான் சுய பரிசோதனை, பிரேத பரிசோதனை இவற்றையெல்லாம் வேண்டி நிற்பவர்கள். :D அவர்களுக்கு போராட்டத்திற்கான தேவை இனியும் இல்லை. :o

இப்படியான மூன்றாம் அணியினர், போர்க்காலத்தில் புகலிடம் கோரியது சரி.. :mellow: ஆனால் இன்றும் ஏன் புகலிடம் கோரிய நாடுகளில் வாழ்கிறார்கள் என்று தெரியவில்லை.. :D பேசாமல் ஊரைப்பார்த்து போகவேண்டியதுதானே??!! :lol:

Link to comment
Share on other sites

அது தான் சபேச அண்ணை அடிக்கடி ஊருக்கு போயிட்டு வாறாரே :D

Link to comment
Share on other sites

அரவான் படத்தில் ஒரு சீன் வரும் தன்னையும் இரவு களவுக்கு கூட்டிக்கொண்டு போகவில்லை என்று பசுபதியின் மகன் விடிய எழும்பி தகப்பனுடன் சண்டை பிடிப்பார் .அது அவர்களது தொழில் ஆனால் ஊருக்கு உலகிற்கு களவு ஒரு தொழில் இல்லை .

என்னை பொறுத்தவரை திலீபன் தொடங்கி முருகதாசன் வரை கொலைதான் செய்யபட்டார்கள் .உங்களின் பாசையில் தியாகம்,ஈகம் ,உயிராயிதம் என்றெல்லாம் இருக்கலாம் .அதற்காகத்தான் திரும்ப திரும்ப நான் இங்கு தேசிய வேஷம் போடும் பலரை கேட்கின்றனான் முடிந்தால் உங்கள் பிள்ளையை அப்படி ஒன்றிற்கு அனுப்புங்கள் என்று .அப்படி ஒரு மிகப்பெரிய தியாகத்தை நாட்டிற்காக செய்ய உங்கள் பிள்ளை கொடுத்துவைத்திருக்க வேண்டும் அல்லவா .பிள்ளைகளை பறி கொடுத்துவிட்டு மாவீரர் தினத்தில் அந்த அம்மாக்கள்  அழவும் முடியாமல் அழாமல் இருக்கவும் முடியாமால் படும் பாடு வருசா வருஷம் நாங்கள் பார்ப்பதுதான் .சண்டையில் போய் சாவது வேறு சாவதற்கு என்று சண்டைக்கு போவது வேறு .

நாகாரீகமடைந்த அனைவரும் இப்படித்தான் சிந்திக்கின்றார்கள் சில சுயநலவாதிகள் மாத்திரம் மட்டும் இன்று வரை அதை தோழில் காவித்திரின்றார்கள் .நாட்டில் இருக்கும் எனக்கு மிக நெருங்கிய நண்பர் கனடா வந்த போது அவரை சந்தித்தேன் அவர் தலைவரை  சந்தித்தவர் என்ற முறையில் நான் ஒரு கேள்வி ஒன்று கேட்டேன் .தலைவரை பற்றி உமது அபிப்பிராயம் என்ன? .மனம் திறந்து சொல்லும்  என்றேன் .அவர் சொன்ன பதில் இதுதான் .

அனுராதபுர தாக்குதலுக்கு முதல் நாள் ஒன்றாக இருந்து உணவு உண்டு விட்டு இருபது பேருக்கு மேற்பட்டோரை தற்கொலை தாக்குதலுக்கு அனுப்புபவர் பற்றி நான் என்ன சொல்ல இருக்கு என்றார் .அழிந்த விமானமும் ராடாரும் தான் உங்கள் கண்ணுக்கு தெரியும் ஆனால் மனிதர்களுக்கு அவை ஒரு சடப்பொருள் .

புளொட்டில் நடந்த உட்கொலை பெரும்பாலும்  பெரியய்யாவை கொல்ல வந்தார்கள் என்பதுதான் குற்றசாட்டு .சுழிபுரத்தில் ஆறு புலிகளை கொன்று ஆணுறுப்பை வெட்டி கடற்கரையில் தட்டார்கள் .இந்த கேடு கேட்ட நிகழ்வை உரிமை கோர அவர்களுக்கு வக்கில்லை .இந்த கொலைகளுக்காக அவர்கள் பயந்தது புலிகளைவிட புளொட்டில் இருந்தவர்களுக்கே .அதை உரிமை கோரி மன்னிப்பும் கேட்கும் படி திரும்ப திரும்ப எத்தனை பேர் வலியுறுத்தினார்கள் என்று உள்ளுக்குள் இருந்தவர்களுக்கு தெரியும் ஆனால் புளொட்டிலும் பெரியய்யா இருந்த இடத்திற்கு ஆயுதத்துடன் வந்தால் விட்டு விடுவதா என்பவர்களும் இருந்தார்கள் .இங்கு பலரை அதே மன நிலையில் தான் பார்க்கின்றேன் .

தலைவருக்காக ,இயக்கத்திற்காக ,நாட்டிற்காக எதுவும் செய்யலாம் என்று ஆனால் அந்த சிந்தனை பிழை .தலைவருக்காக ,இயக்கத்திற்காக ,நாட்டிற்காக சரியானதை மட்டும் தான் செய்யலாம் இல்லாவிடில் நாம் தோற்றுத்தான் போவோம் .

பிள்ளைகள் சிகரெட் ,தண்ணி ,பெட்டைகள் என்று திரிவதற்கும் தூள் ,கள்ள காட் ,களவு என்று திரிவதற்கும் பெரிய வித்தியாசம் .என்ரை பிள்ளைதானே என்றோ அல்லது எங்களுக்கு பெரிய வீடு ,கார் வாங்கத்தானே என்று பிழையை அனுமதிக்க முடியாது .

 நாட்டிற்காக விடுதலைக்காக என்று வெறும் அநியாயங்களை  செய்துவிட்டு பின்னர் அதை நியாயப்படிதினால் சிறிலங்காவிற்காக என்று ராஜபக்சாவும் ,கோத்தாவும் செய்தவை நியாயமாகிவிடும் .

Link to comment
Share on other sites

சாத்திரி அண்ணன்,

தயவு செய்து தமிழர்களின் விடிவுக்கு உங்களால் ஏதாவது செய்ய முடியும் என்றால் செய்யவும்.உங்களுக்கு தெரிந்த நிறைய பழைய‌ விடயங்கள் எங்களுக்கு(அடுத்த தலை முறைக்கு) தெரியாது.உங்களது எழுத்துகளில் இலங்கையில் நடந்த மனிட உரிமை மீறல்களை எழுதுங்கள். எங்கள் மக்கள் 1980 களில் இருந்து அனுபவித்த துயரங்களை ஆவணப் படுத்துங்கள். உங்களுக்கு ஆண்டாண்டுகளிற்கு நன்றி சொல்வோம் நாம்.

முடியாவிட்டால் தயவு செய்து அமைதியாக இருக்கவும். முடிந்தவர்கள் முயற்சிக்கட்டும்.
எல்லோரும் சேர்ந்து ஓர் இலக்கை நோக்கி ஓடுவோம். இலக்கை அடைந்தபின் திரும்பிப் பார்ப்போம். ஓடும்போது நீங்களும் திரும்பிப் பார்த்து, ஓடுபவர்களின் கவனத்தையும் சிதறடிக்காதீர்கள்.

நீங்கள் தற்போது வெளிவிடும் தகவல்கள் அல்லது ஆக்கங்கள், எங்களின் விடிவிட்கு எவ்விதத்திலும் உதவாது. இவை மிகவும் "pre mature" ஆனவை. பெரும்பாலான மக்கள் கடந்த 3 ஆண்டுகளில் நிறையவே அறிந்துள்ளார்கள்.ஆக அவர்களிற்கு அது பற்றி மேலதிக விளக்கங்களோ கற்பித்தல்களோ வேண்டாம்.

மேலும் சிறிது காலமாக இப்படி நீங்கள் தொடர்ந்து எழுதுவதால் எனக்கு ஏனோ உங்கள் முகத்தோடு கருணாநிதியின் முகமும் வந்து செல்கிறது. என்ன நடந்தாலும் பின்னங்காலைத்தூக்கும் அற்ப பிராணி கருணாநிதி போல் இழி சொல் உங்களுக்கு வேண்டாம்.
நன்றி அய்யா..

Link to comment
Share on other sites

நல்லா இருக்கு நியாயம் சாந்தியக்கா ,ஆக மொத்தம் ஊரான் வீட்டு பிள்ளைகள் செய்வதை கூட்டி பெருக்கி இட்டு கட்டி எழுதிவிட்டு உங்கள் வீட்டு பிள்ளைகள் செய்ததை (களவு கொள்ளை ,கொலை ) மெல்ல  அமத்திவிடுங்கள் என்கின்றீர்கள் .

உதைத்தான் ராஜபக்சாவும் ,கோத்தாவும்,பொன்சேகாவும் சொல்லுகின்றார்கள் .

சிங்கள அரசைவிட நடந்த உண்மைகளை எழுதவிடாமல் தடுப்பவர்கள் தான் மிக மோசமானவர்கள் ..

உண்மைகள் யார் தடுத்தாலும் என்றோ ஒருநாள் வெளிவந்தே தீரும் .

இங்கு முருகதாசின் தீக்குளிப்பு பற்றி வாசித்த போது முதலில் வந்த உணர்வு அவர்கள் அழிந்தது காலத்தின் கட்டாயம் இப்படியான மனநிலை கொண்ட ஒரு அமைப்பு இருக்கவே கூடாது.இங்கு வந்து கருத்து கொட்டும் யாரவது தான் எரிந்திரிந்தால் அல்லது தனது பிள்ளைகளை தீக்குளிக்க விட்டிருந்தால் அதன் அருமை தெரியும் .

இப்பவும் ஒன்றும் பிந்திவிடவில்லை ஜெனிவாவில் இப்போதும் மகாநாடு நடக்கின்றது .

Link to comment
Share on other sites

இசை!

போராட்டம் முடிந்து விடவில்லை. ஆனால் ஆயுதப் போராட்டம் முடிந்து விட்டது. எப்படி ஆயுதப் போராட்ட காலத்தில் அகிம்சைப் போராட்டம் பற்றி பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டதோ, அதே போன்று ஆயுதப் போராட்டத்தில் நடந்தவைகள் பற்றி பரிசோதனைகள் நடைபெறுவது தவிர்க்க முடியாது.

முருகதாஸ் தன்னை எரித்துக் கொள்வதற்கு ஊக்கம் கொடுக்கப்பட்டது பற்றி இன்றைக்கு பேசுவதில் என்ன தவறு இருக்க முடியும்? இன்றைக்கு மாணவர்கள் போராட்டம், பாலச்சந்திரன் என்று இருக்கின்ற உணர்ச்சிகரமான சூழ்நிலையில் மீண்டும் ஒரு முட்டாள் தன்னை எரிக்க நினைக்க, அதை மேலும் நாலு முட்டாள்கள் ஊக்கப்படுத்துவதை இப்படியான பரிசோதனைகள் தடுத்தால் நல்லதுதானே!

(அப்பாடா! மாணவர் பற்றி இதிலும் எழுதியாகி விட்டது)

Link to comment
Share on other sites

அன்பின் சாந்தியக்காவிற்கு,
 
கீழ்கண்ட இரு பதிவுகளை உங்கள் முல்லைமண் பதிவுகளில் கப்டன் ரவி, அருணா அண்ணை  ஆகிய பதிவுகளில் இருந்து பெற்றேன்.
 
இப்பதிவுகளில் இன்ரபோல் தேடும் போராளியை வெளிப்படையாக குறிப்பிட்டு எழுதாத நீங்கள் பின்னர் யாழில் பல கருத்து பகிர்வுகளில் 
வெளிப்படையாக அம்புறுஸ் என்று எழுதியிருந்தீர்கள். இப்போது antimedia ஐ ஒளிந்து எழுதும் இன்ரபோலால் தேடப்படும் நபர் என்கிறீர்கள். 
நீங்கள் இப்போதும் antimedia என்று குறிப்பிடுவது அம்புறுஸ் அவர்களை என்றுதான் நான் எண்ணுகிறேன்.
இப்போது அபிராமை சாத்திரி வெளிப்படுத்தி எழுதியவுடன் பொங்கி எழுவது ஏனோ? முன்னர் போல் சாத்திரி
உடனான உங்கள் ஊடக தர்ம உறவு முறிந்து போனதாலா? அல்லது எல்லாம் வெட்டவெளிச்சமாகிவிடும் என்பதாலா? 
 
என்னையும் பல தடவைகள் அம்புறுஸ், தேடிப்படுபவர், ஒளிந்திருப்பவர் என பட்டம் கட்டினீர்கள். இப்படி எத்தனை நாளைக்கு மற்றவர்கள் மேல் ஏறி குதிரை சவாரி செய்ய போகிறீர்கள். எழுத்துகளால் வெட்டிவிழுத்தி, உணர்ச்சி குழம்பாய் கொந்தழிக்கும் நீங்கள் உங்கள் பழைய பதிவுகளையும், கருத்திடல்களையும் ஒரு மீள்பார்வை செய்தால் என்ன????? என்ன???? என்ன.......!!!!!!!
 
காலம் 2003...,ஆடிமாதம்.....,
வன்னியில் மாவீரர்களின் நிழற்படங்கள் அவர்களது ஞாபகங்கள் தரும் பொக்கிசங்கள் சேமிக்கப்பட்டிருக்கும் ஆவணங்களின் காப்பகத்திற்குச் சென்ற போது பலரது படங்கள் கேட்டிருந்தேன். நெடுநாள் தேடிய கிடைத்தற்கரிய ஒரு பொக்கிசம் போல ஒரு போராளியிடமிருந்து ஒரு தொகை மாவீரர்களின் படங்கள் கிடைத்தது. 1981 – 2002 வரையில் புலனாய்வுத்துறையில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் படங்கள் யாவையும் ஆவணப்படுத்துமாறு ஒரு போராளித் தோழன் இறுவட்டுக்களில் பதிவு செய்து தந்தான்.
 
*****************************************************************
 
வணக்கம்....
தொலைபேசியழைப்பில் வந்த குரலொன்று.
யாரெண்டு தெரியுதா? 
இல்லை...
என்ற எனக்குத் தன்னை ஞாபகப்படுத்திய குரல். 3வருடங்கள் மேலாக தொடர்பற்றிருந்த தோழனின் குரல் அது. குழந்தைகள் , குடும்பம் என விசாரிப்புகள் நீண்டு இறுதியில் வன்னிக் களமுனையில் போய் விழுந்தது கதை. 
 
செய்தியேதும் அறிஞ்சியளோ ?
என்ன வளமையான செய்திதானே... சாவும் துயரும் இதைவிட என்னத்தை இப்பெல்லாம் அறியிறம்.....? 
என்ற எனக்கு…
நேற்று "அருணாண்ணை" வீரச்சாவு என்றான் அந்தத் தோழன். 
உண்மையாவா ? 
நம்பிக்கையிழந்து மீளவும் கேட்ட எனக்கு அவன் மீளவும் சொன்னான். ஓம்....
 
'அருணாண்ணை' இழந்தோமா உங்களை ....? அந்தத் தோழன் விடைபெறும் வரையிலும் ஒளிந்திருந்த அழுகையை வெளிப்படுத்தாமல் கண்களும் குரலும் என்னைக் காத்துக் கொள்கின்றன. 
 
அருணாண்ணை அருணாண்ணையின் குடும்பம் , அடுத்து அந்தக் களமுனையில் வாழும் தோழ தோழியர்கள் அவர்கள் குடும்பங்கள் என விசாரிக்கிறேன். மேலும் பலர் வீரச்சாவுகள் , விமானத்தாக்குதலில் இழப்புகள் என அவன் சொல்லிக் கொண்டிருந்தான். 
 
அடுத்ததென்ன நடக்கப்போகுது ? 
கேட்ட எனக்குச் சொன்னான். 
யாரையும் எதையும் சொல்ல முடியாத நிலமையிருக்கு…..எல்லாம் முடியப்போகிறது…..நம்ப முடியாதவைகள் எல்லாம் நடக்கப்போகிறது…..
எல்லாம் முன்னறிந்த கடவுள் போல அவன் சொன்னான். 
 
ஏன் அப்பிடி ? அவன் அடுக்கிக் கொண்டு போன காரணங்களில் நியாயம் உண்மையென்று பல்லாயிரம் விடயங்களை ஏற்றுக் கொள்ளும்படியாக அவனது கதையிருந்தது. 
 
அழிபடாமல் வரலாறுகளைச் சேகரிக்க வேணும்….அதற்கான வேலைகளைச் செய்ய வேணும்…..அதற்கான வழிகள் பலவற்றையும் சொன்னான். மீண்டும் தொடர்புகளோடு இருப்போமென விடைபெற்றுக் கொண்டான்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரவான் படத்தில் ஒரு சீன் வரும் தன்னையும் இரவு களவுக்கு கூட்டிக்கொண்டு போகவில்லை என்று பசுபதியின் மகன் விடிய எழும்பி தகப்பனுடன் சண்டை பிடிப்பார் .அது அவர்களது தொழில் ஆனால் ஊருக்கு உலகிற்கு களவு ஒரு தொழில் இல்லை .

என்னை பொறுத்தவரை திலீபன் தொடங்கி முருகதாசன் வரை கொலைதான் செய்யபட்டார்கள் .உங்களின் பாசையில் தியாகம்,ஈகம் ,உயிராயிதம் என்றெல்லாம் இருக்கலாம் .அதற்காகத்தான் திரும்ப திரும்ப நான் இங்கு தேசிய வேஷம் போடும் பலரை கேட்கின்றனான் முடிந்தால் உங்கள் பிள்ளையை அப்படி ஒன்றிற்கு அனுப்புங்கள் என்று .அப்படி ஒரு மிகப்பெரிய தியாகத்தை நாட்டிற்காக செய்ய உங்கள் பிள்ளை கொடுத்துவைத்திருக்க வேண்டும் அல்லவா .பிள்ளைகளை பறி கொடுத்துவிட்டு மாவீரர் தினத்தில் அந்த அம்மாக்கள்  அழவும் முடியாமல் அழாமல் இருக்கவும் முடியாமால் படும் பாடு வருசா வருஷம் நாங்கள் பார்ப்பதுதான் .சண்டையில் போய் சாவது வேறு சாவதற்கு என்று சண்டைக்கு போவது வேறு .

நாகாரீகமடைந்த அனைவரும் இப்படித்தான் சிந்திக்கின்றார்கள் சில சுயநலவாதிகள் மாத்திரம் மட்டும் இன்று வரை அதை தோழில் காவித்திரின்றார்கள் .நாட்டில் இருக்கும் எனக்கு மிக நெருங்கிய நண்பர் கனடா வந்த போது அவரை சந்தித்தேன் அவர் தலைவரை  சந்தித்தவர் என்ற முறையில் நான் ஒரு கேள்வி ஒன்று கேட்டேன் .தலைவரை பற்றி உமது அபிப்பிராயம் என்ன? .மனம் திறந்து சொல்லும்  என்றேன் .அவர் சொன்ன பதில் இதுதான் .

அனுராதபுர தாக்குதலுக்கு முதல் நாள் ஒன்றாக இருந்து உணவு உண்டு விட்டு இருபது பேருக்கு மேற்பட்டோரை தற்கொலை தாக்குதலுக்கு அனுப்புபவர் பற்றி நான் என்ன சொல்ல இருக்கு என்றார் .அழிந்த விமானமும் ராடாரும் தான் உங்கள் கண்ணுக்கு தெரியும் ஆனால் மனிதர்களுக்கு அவை ஒரு சடப்பொருள் .

புளொட்டில் நடந்த உட்கொலை பெரும்பாலும்  பெரியய்யாவை கொல்ல வந்தார்கள் என்பதுதான் குற்றசாட்டு .சுழிபுரத்தில் ஆறு புலிகளை கொன்று ஆணுறுப்பை வெட்டி கடற்கரையில் தட்டார்கள் .இந்த கேடு கேட்ட நிகழ்வை உரிமை கோர அவர்களுக்கு வக்கில்லை .இந்த கொலைகளுக்காக அவர்கள் பயந்தது புலிகளைவிட புளொட்டில் இருந்தவர்களுக்கே .அதை உரிமை கோரி மன்னிப்பும் கேட்கும் படி திரும்ப திரும்ப எத்தனை பேர் வலியுறுத்தினார்கள் என்று உள்ளுக்குள் இருந்தவர்களுக்கு தெரியும் ஆனால் புளொட்டிலும் பெரியய்யா இருந்த இடத்திற்கு ஆயுதத்துடன் வந்தால் விட்டு விடுவதா என்பவர்களும் இருந்தார்கள் .இங்கு பலரை அதே மன நிலையில் தான் பார்க்கின்றேன் .

தலைவருக்காக ,இயக்கத்திற்காக ,நாட்டிற்காக எதுவும் செய்யலாம் என்று ஆனால் அந்த சிந்தனை பிழை .தலைவருக்காக ,இயக்கத்திற்காக ,நாட்டிற்காக சரியானதை மட்டும் தான் செய்யலாம் இல்லாவிடில் நாம் தோற்றுத்தான் போவோம் .

பிள்ளைகள் சிகரெட் ,தண்ணி ,பெட்டைகள் என்று திரிவதற்கும் தூள் ,கள்ள காட் ,களவு என்று திரிவதற்கும் பெரிய வித்தியாசம் .என்ரை பிள்ளைதானே என்றோ அல்லது எங்களுக்கு பெரிய வீடு ,கார் வாங்கத்தானே என்று பிழையை அனுமதிக்க முடியாது .

 நாட்டிற்காக விடுதலைக்காக என்று வெறும் அநியாயங்களை  செய்துவிட்டு பின்னர் அதை நியாயப்படிதினால் சிறிலங்காவிற்காக என்று ராஜபக்சாவும் ,கோத்தாவும் செய்தவை நியாயமாகிவிடும் .

அண்ணா தலைவருக்கும் அவர்களோடு இருந்து ஒன்றாக சாப்பிட்டு விட்டு அடுத்த நாள் தற்கொலை தாக்குதலுக்கு அவர்களை அனுப்ப மனசு வராது...தலைவருக்கு மட்டுமல்ல எந்த மனிதனுக்குமே மனசு வராது...ஆனால் தற்கொலைப் போராளிகள் தாங்கள் சாவதற்கு முன் தங்கள் கடைசி ஆசையாக தலைவரைப் பார்த்து கதைத்துப் பேசி சாப்பிட்டு விட்டு அடுத்த நாள் சாக நினைத்திருக்கலாம்...தலைவர் அவர்களது இறுதி ஆசையை நிறைவேற்றி வைத்திருக்கிறார் என்பதைத் தவிர அவரின் தப்பு இதில் ஒன்றும் இல்லை

Link to comment
Share on other sites

அர்ஜுன் அண்ணாவின் தற்கொடைத் தாக்குதலுக்கு எதிரான நிலைப்பாட்டை நான் மதிக்கிறேன்.. அது அவரது கருத்து..! அதனாலேயே அது சரி என்றும் ஆகிவிடாது..! :D

அவரது கருத்தியலில் ஆயுதப் போராட்டமே தவறு என அவர் சொல்லவில்லை என நினைக்கிறேன்.. அப்படி இருக்குமானால் அவர் பஞ்சாங்கம் விற்கவா புளட்டுக்குப் போனார் என்கிற கேள்வி எழுந்துவிடும் ஆபத்து உள்ளது..! :D

விடுதலைப் போராளிகள் தாம் நினைத்த ஆயுதங்களை வாங்கக்கூடிய நிலை இருக்குமானால் ஏன் அவர்கள் தம்மைத் தாமே அழித்துக்கொள்ளப் போகிறார்கள்? ஆனால் ஒரு அரசு எந்த அளவு ஆயுதத்தை வேண்டுமானாலும் வாங்கலாம்.

இப்படி சமாந்தரம் அற்று இருக்கும் போர்ச்சூழலில் ஒவ்வொரு இயக்கமும் தமக்கேற்ற முடிவுகளை எடுக்கின்றன. பல இயக்கங்கள் கெரில்லா அணியுடன் நின்று கொள்கின்றன. நாட்டைக் கட்டி எழுப்பிய புலிகளுக்கு கெரில்லாக்களாக இருக்கக்கூடிய வாய்ப்பு இல்லை.. அதனால் அதியுச்சமான முறைமைகளைக் கையாண்டார்கள்..

இதை அவர்கள் செய்தது சரியா என்பது கேள்வி. சாகப் போனவன் விரும்பித்தான் போனான். உடனே உன் பிள்ளையை அனுப்புவாயா என்கிற கேள்வி கேட்கக்கூடாது.. :D இதற்கு ஒரு சம்பவத்தை உதாரணமாகச் சொல்கிறேன்.

நேற்று அலுவலகத்தின் ஒரு வெள்ளையுடன் கதைத்துக்கொண்டிருந்தேன். அந்த வெள்ளை சொன்னார், நான் சிவப்பு மேற்சட்டை போட்டிருந்தது அவருக்கு மகிழ்ச்சியாம். சென்ற் பாட்றிக்ஸ் பச்சை போடாவிட்டாலும்.. ஏனென்றால் நான் கனேடிய துருப்புக்களை ஆதரிக்கிறேன் என்று அர்த்தமாம்.

இவர் தனது பிள்ளையை ரொராண்டோவில் பட்டப்படிப்பு படிக்க வைத்துக் கொண்டிருப்பவர்.. இவரிடம் நான் கேட்க முடியுமா.. ஆப்கானிஸ்தானில் துருப்புகளை சாகக் கொடுத்துவிட்டு இங்கே பிள்ளையைப் படிக்க வைக்கிறாய் என்று? :D

தற்கொலைத்தாக்குதலுக்கு எதிரான மேற்குலகின் வாதம்  தொண்ணூறுகளுக்கு முன் இல்லை. அதற்கு முன் இவ்வாறான தாக்குதல்கள் இடம்பெறாமலும் இல்லை. இந்த இஸ்லாம் தீவிரவாதம் என்று ஆரம்பமானதோ அன்று பிடித்தது சனி.. அதற்குப் புலிகளும் காவுகொடுக்கவேண்டி வந்தது..

போர் என்றாலே சாகத் துணிந்துதான் போகிறார்கள். இதில் மேற்கு நாட்டுப் படைகள் மட்டும் விதிவிலக்கல்ல.. அதற்குள் அவர்கள் வியாக்கியானம் பேசக் காரணம் தற்கொலைத் தாக்குதல்களால் அவர்களுக்கு ஏற்படும் இழப்புகள்தான்..

Link to comment
Share on other sites

அர்ஜுன் அண்ணாக்கு இதை விட யாரும் அழகா நாசுக்கா நெத்தி அடி அடிச்சிருக்க முடியாது.... :D

Link to comment
Share on other sites

 இந்த திரியில் தொடர்ந்து எழுதி இறந்து போனவர்களை மீண்டும் கொல்ல விரும்பவில்லை .

இசை ,நியாயப்படுத்தல் என்று தொடங்கினால் எதையும் நியாயப்படுத்தலாம் இப்போ ஐ நா வில் இலங்கை அரசு அதைத்தான் செய்யுது .உலகில் மிக பெரிய பயங்கரவாத இயக்கத்தை அழிக்கும் போது தவிர்க்க முடியாமல் சில இழப்புகள் ஏற்பட்டுவிட்டது என்று ஆனால் வேண்டுமென்றே தான் பல பொதுமக்களை பலி எடுத்தார்கள் என்பது உலகறிந்த உண்மை .

முள்ளிவாய்காலில் சரணடைய நின்ற பொதுமக்களுக்குள் தற்கொலை தாக்குதல் நடத்தியவர்கள் புலிகள் தயவுசெய்து அதற்கும் வந்து சமாந்தரம் ,முக்கோணம் என்று எழுதி எமது கேடு கேட்ட ஆய்வாளர்கள் இவ்வளவு காலமும் செய்ததை செய்துவிடாதீர்கள் .

Link to comment
Share on other sites

அரவான் படத்தில் ஒரு சீன் வரும் தன்னையும் இரவு களவுக்கு கூட்டிக்கொண்டு போகவில்லை என்று பசுபதியின் மகன் விடிய எழும்பி தகப்பனுடன் சண்டை பிடிப்பார் .அது அவர்களது தொழில் ஆனால் ஊருக்கு உலகிற்கு களவு ஒரு தொழில் இல்லை .

என்னை பொறுத்தவரை திலீபன் தொடங்கி முருகதாசன் வரை கொலைதான் செய்யபட்டார்கள் .உங்களின் பாசையில் தியாகம்,ஈகம் ,உயிராயிதம் என்றெல்லாம் இருக்கலாம் .அதற்காகத்தான் திரும்ப திரும்ப நான் இங்கு தேசிய வேஷம் போடும் பலரை கேட்கின்றனான் முடிந்தால் உங்கள் பிள்ளையை அப்படி ஒன்றிற்கு அனுப்புங்கள் என்று .அப்படி ஒரு மிகப்பெரிய தியாகத்தை நாட்டிற்காக செய்ய உங்கள் பிள்ளை கொடுத்துவைத்திருக்க வேண்டும் அல்லவா .பிள்ளைகளை பறி கொடுத்துவிட்டு மாவீரர் தினத்தில் அந்த அம்மாக்கள்  அழவும் முடியாமல் அழாமல் இருக்கவும் முடியாமால் படும் பாடு வருசா வருஷம் நாங்கள் பார்ப்பதுதான் .சண்டையில் போய் சாவது வேறு சாவதற்கு என்று சண்டைக்கு போவது வேறு .

நாகாரீகமடைந்த அனைவரும் இப்படித்தான் சிந்திக்கின்றார்கள் சில சுயநலவாதிகள் மாத்திரம் மட்டும் இன்று வரை அதை தோழில் காவித்திரின்றார்கள் .நாட்டில் இருக்கும் எனக்கு மிக நெருங்கிய நண்பர் கனடா வந்த போது அவரை சந்தித்தேன் அவர் தலைவரை  சந்தித்தவர் என்ற முறையில் நான் ஒரு கேள்வி ஒன்று கேட்டேன் .தலைவரை பற்றி உமது அபிப்பிராயம் என்ன? .மனம் திறந்து சொல்லும்  என்றேன் .அவர் சொன்ன பதில் இதுதான் .

அனுராதபுர தாக்குதலுக்கு முதல் நாள் ஒன்றாக இருந்து உணவு உண்டு விட்டு இருபது பேருக்கு மேற்பட்டோரை தற்கொலை தாக்குதலுக்கு அனுப்புபவர் பற்றி நான் என்ன சொல்ல இருக்கு என்றார் .அழிந்த விமானமும் ராடாரும் தான் உங்கள் கண்ணுக்கு தெரியும் ஆனால் மனிதர்களுக்கு அவை ஒரு சடப்பொருள் .

புளொட்டில் நடந்த உட்கொலை பெரும்பாலும்  பெரியய்யாவை கொல்ல வந்தார்கள் என்பதுதான் குற்றசாட்டு .சுழிபுரத்தில் ஆறு புலிகளை கொன்று ஆணுறுப்பை வெட்டி கடற்கரையில் தட்டார்கள் .இந்த கேடு கேட்ட நிகழ்வை உரிமை கோர அவர்களுக்கு வக்கில்லை .இந்த கொலைகளுக்காக அவர்கள் பயந்தது புலிகளைவிட புளொட்டில் இருந்தவர்களுக்கே .அதை உரிமை கோரி மன்னிப்பும் கேட்கும் படி திரும்ப திரும்ப எத்தனை பேர் வலியுறுத்தினார்கள் என்று உள்ளுக்குள் இருந்தவர்களுக்கு தெரியும் ஆனால் புளொட்டிலும் பெரியய்யா இருந்த இடத்திற்கு ஆயுதத்துடன் வந்தால் விட்டு விடுவதா என்பவர்களும் இருந்தார்கள் .இங்கு பலரை அதே மன நிலையில் தான் பார்க்கின்றேன் .

தலைவருக்காக ,இயக்கத்திற்காக ,நாட்டிற்காக எதுவும் செய்யலாம் என்று ஆனால் அந்த சிந்தனை பிழை .தலைவருக்காக ,இயக்கத்திற்காக ,நாட்டிற்காக சரியானதை மட்டும் தான் செய்யலாம் இல்லாவிடில் நாம் தோற்றுத்தான் போவோம் .

பிள்ளைகள் சிகரெட் ,தண்ணி ,பெட்டைகள் என்று திரிவதற்கும் தூள் ,கள்ள காட் ,களவு என்று திரிவதற்கும் பெரிய வித்தியாசம் .என்ரை பிள்ளைதானே என்றோ அல்லது எங்களுக்கு பெரிய வீடு ,கார் வாங்கத்தானே என்று பிழையை அனுமதிக்க முடியாது .

 நாட்டிற்காக விடுதலைக்காக என்று வெறும் அநியாயங்களை  செய்துவிட்டு பின்னர் அதை நியாயப்படிதினால் சிறிலங்காவிற்காக என்று ராஜபக்சாவும் ,கோத்தாவும் செய்தவை நியாயமாகிவிடும் .

உப்பிடி தான் தேனியிலும் ஏனைய ஒட்டுக்கிழுக்களின் தளங்களிலும் எழுதினீர்கள் அதாவது ஏனையோரின் பிள்ளைகள் இயக்கத்தில் சாக பிரபாகரனின் பிள்ளைகள் வெளியில் படிக்கிறார்கள் என்றும் போராட்டத்தில் பங்கு பற்றவில்லை என்றும் எழுதிக்கொண்டே தமது தவறுகளை இலகுவாக மறைத்தார்கள். அதுதான் காட்டிகொடுத்தல்,மக்களின் பணத்தை சுருட்டல் என அடுக்கிக்கொண்டே போகலாம்.இறுதி யுத்தத்தில் குடும்பமே இறந்தது போராடி.
 
அதற்கு பிறகும் நீங்கள் எப்படி உங்களுக்கு (இறந்த பிறகும்) விரலை காட்ட முடிகிறது. உமாமகேஸ்வரனுக்கே தண்ணி காட்டிய ஆள் யதார்த்தமாக சிந்திக்கவே மாட்டீர்களா??

இசை!

போராட்டம் முடிந்து விடவில்லை. ஆனால் ஆயுதப் போராட்டம் முடிந்து விட்டது. எப்படி ஆயுதப் போராட்ட காலத்தில் அகிம்சைப் போராட்டம் பற்றி பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டதோ, அதே போன்று ஆயுதப் போராட்டத்தில் நடந்தவைகள் பற்றி பரிசோதனைகள் நடைபெறுவது தவிர்க்க முடியாது.

முருகதாஸ் தன்னை எரித்துக் கொள்வதற்கு ஊக்கம் கொடுக்கப்பட்டது பற்றி இன்றைக்கு பேசுவதில் என்ன தவறு இருக்க முடியும்? இன்றைக்கு மாணவர்கள் போராட்டம், பாலச்சந்திரன் என்று இருக்கின்ற உணர்ச்சிகரமான சூழ்நிலையில் மீண்டும் ஒரு முட்டாள் தன்னை எரிக்க நினைக்க, அதை மேலும் நாலு முட்டாள்கள் ஊக்கப்படுத்துவதை இப்படியான பரிசோதனைகள் தடுத்தால் நல்லதுதானே!

(அப்பாடா! மாணவர் பற்றி இதிலும் எழுதியாகி விட்டது)

போராட்ட காலத்தில் வெப் ஈழத்தில் நீங்கள் செய்த ஆராட்சிகளை ஒருக்கால் பிரேத பரிசோதனை செய்தால் நன்றாக இருக்கும்.யாழ் களத்தில் பலருக்கு ஞாபகம் இருக்கும் என நம்புகிறேன்.

Link to comment
Share on other sites

 இந்த திரியில் தொடர்ந்து எழுதி இறந்து போனவர்களை மீண்டும் கொல்ல விரும்பவில்லை .

இசை ,நியாயப்படுத்தல் என்று தொடங்கினால் எதையும் நியாயப்படுத்தலாம் இப்போ ஐ நா வில் இலங்கை அரசு அதைத்தான் செய்யுது .உலகில் மிக பெரிய பயங்கரவாத இயக்கத்தை அழிக்கும் போது தவிர்க்க முடியாமல் சில இழப்புகள் ஏற்பட்டுவிட்டது என்று ஆனால் வேண்டுமென்றே தான் பல பொதுமக்களை பலி எடுத்தார்கள் என்பது உலகறிந்த உண்மை .

முள்ளிவாய்காலில் சரணடைய நின்ற பொதுமக்களுக்குள் தற்கொலை தாக்குதல் நடத்தியவர்கள் புலிகள் தயவுசெய்து அதற்கும் வந்து சமாந்தரம் ,முக்கோணம் என்று எழுதி எமது கேடு கேட்ட ஆய்வாளர்கள் இவ்வளவு காலமும் செய்ததை செய்துவிடாதீர்கள் .

அர்ஜுன் அண்ணா.. இதுகுறித்து நாங்கள் கவலைகொள்ள வேண்டியதில்லை.. இல்லாத புலிகளை இனிமேல் அவர்கள் என்ன செய்ய முடியும்..? இல்லாதவர்கள் செய்தது என்று நோண்டிக்கொண்டிருக்க முன்னம் எதிரே தண்டிக்கப்பட வேண்டியவர்கள் சாவகாசமாக நடந்து திரிகிறார்கள்..! அவர்களை நோக்கியே எமது கவனம் இருக்க வேண்டும்..!

புலிகள் அதைச் செய்தார்கள்.. இதைச் செய்தார்கள் என்று இப்போது வாதிடுவது சிங்களவர்கள்தான்.. அவர்கள் பக்கம் நாமும் நிற்கவேண்டாம் என்பதுதான் எனது ஆதங்கம்..!

Link to comment
Share on other sites

புலி அதைச் செய்திது, இதைச் செய்திது என்றதை விட்டுட்டு இனி நாம் என்ன செய்ய வேண்டும், நாங்கள் யாழில வந்து கத்துறதைத் தவிர உருப்படியாய் என்ன செய்கின்றோம் என்று எப்பாவது யோசிச்சீர்களா?? மற்றவன் எமக்கு நாடு எடுத்துத் தரட்டும் பிறகு நாங்கள் ஊருக்குப் போய் பிலிம் காட்டுவம் எண்டதது தான் புலத்துத் தமிழனின் நோக்கம் போலை

Link to comment
Share on other sites

அன்பின் சாந்தியக்காவிற்கு,
 
கீழ்கண்ட இரு பதிவுகளை உங்கள் முல்லைமண் பதிவுகளில் கப்டன் ரவி, அருணா அண்ணை  ஆகிய பதிவுகளில் இருந்து பெற்றேன்.
 
இப்பதிவுகளில் இன்ரபோல் தேடும் போராளியை வெளிப்படையாக குறிப்பிட்டு எழுதாத நீங்கள் பின்னர் யாழில் பல கருத்து பகிர்வுகளில் 
வெளிப்படையாக அம்புறுஸ் என்று எழுதியிருந்தீர்கள். இப்போது antimedia ஐ ஒளிந்து எழுதும் இன்ரபோலால் தேடப்படும் நபர் என்கிறீர்கள். 
நீங்கள் இப்போதும் antimedia என்று குறிப்பிடுவது அம்புறுஸ் அவர்களை என்றுதான் நான் எண்ணுகிறேன்.
இப்போது அபிராமை சாத்திரி வெளிப்படுத்தி எழுதியவுடன் பொங்கி எழுவது ஏனோ? முன்னர் போல் சாத்திரி
உடனான உங்கள் ஊடக தர்ம உறவு முறிந்து போனதாலா? அல்லது எல்லாம் வெட்டவெளிச்சமாகிவிடும் என்பதாலா? 
 
என்னையும் பல தடவைகள் அம்புறுஸ், தேடிப்படுபவர், ஒளிந்திருப்பவர் என பட்டம் கட்டினீர்கள். இப்படி எத்தனை நாளைக்கு மற்றவர்கள் மேல் ஏறி குதிரை சவாரி செய்ய போகிறீர்கள். எழுத்துகளால் வெட்டிவிழுத்தி, உணர்ச்சி குழம்பாய் கொந்தழிக்கும் நீங்கள் உங்கள் பழைய பதிவுகளையும், கருத்திடல்களையும் ஒரு மீள்பார்வை செய்தால் என்ன????? என்ன???? என்ன.......!!!!!!!

தம்பி இளங்கதிர்,

அம்புறுஸ் என்ற புலனாய்வு முக்கிஸ்தர் ஒருவர் இருந்தவராம் அவரையா சொல்றீங்கள் ? அவரைப்பற்றி எழுதிறதுக்கு கள விதி அனுமதிக்காது. ஆனால் அந்த அம்புறுஸ் எற்றவரை பொட்டு அம்மான் தும்புக்கட்டையால் அடிச்சதெல்லாம் நடந்ததாமெண்டும் இங்கினை செய்தியளில வாசிச்ச ஞாபகம்.  அம்புறுஸ் எண்டவருக்கு தான் தான் புலிகளின் புலனாய்வுத்தளபதியெண்டு ஒரே கனவு வந்திச்சாம். அதாலை கனபேரை காட்டிக்குடுத்து போட்டுக்குடுத்து முடிச்சவராம்.

இப்பிடிக் கன கதைகளை ஆக்கள் எழுதியிருந்ததை வாசிச்சதிலை அறிஞ்சதை சொல்றன். அதுக்காக நீங்கள் கோவிக்கப்படாது கண்டியளே.

அட நீங்களும் antimedia அம்புறுசெண்டோ சொல்றீங்கள் ?நீங்களும் antimedia ilankathir ect மாதிரி றால் போட்டு சுறா தேடுறியள் ? மட்டியும் உங்களுக்கு மிஞ்சாது தம்பி.

அப்ப அபிராமும் உங்கடை துரோகி லிஸ்ட்டில வந்திட்டாரோ ? சாத்திரியுடன் உங்களுக்கு ஏதேன் முன்பின் கொடுக்கல் வாங்கல் இருந்தா அதை கேட்டு வாங்கிக்கொள்ளுங்கோ தம்பி.

எண்ணையைப்பூசி உறுண்டாலும் உங்களில ஒட்டுறமண்தான் ஒட்டும்.

என்ன என்ன என்று அதிராதையுங்கோ மூச்சுநிக்கப்போகுது. மீள்பார்வை மீண்டும் நடந்து பார்த்தாலென்ற எழும்பி நிண்டு பாத்தாலென்ன உங்களால் முடிந்ததைத்தானே நீங்கள் செய்ய முடியும்.

frosch_0021.gifமீள்பார்வை செய்தாலென்ன மீளாத பார்வை செய்தாலென்ன நீங்கள் மீண்டு மீண்டு வந்தாலும் உண்மை பொய்யாகாது. இப்பிடியே காலம் முழுக்க புலம்பிக்கொண்டேயிருக்கத்தான் உங்களாலை ஏலும். மறுஆய்வு செய்தாலும் நீங்கள் மறுத்து மறுத்து முடிஞ்சு போவீங்கள்.

Link to comment
Share on other sites

நுணாவிலான்!

தாராளமாக செய்யுங்கள். வெப்ஈழத்தில் எழுதியதை விட யாழில் அதிகம் எழுதியிருக்கிறேன். அதையும் செய்யுங்கள். பதில் சொல்வதற்கு நான் இருக்கிறேன். விடுதலைப் புலிகள் செய்தவைகளுக்கே சித்தாந்த விளக்கம் எழுதியவர்கள் நாங்கள். நான் எழுதியதற்கா என்னால் பதில் சொல்ல முடியாது?

நான் மாணவப் பருவத்தில் இருந்தே எழுதிக் கொண்டிருக்கிறேன். (மாணவர் பற்றிய நினைவிலேயே என்னுடைய பொழுது கழிந்து கொண்டிருக்கிறது)

Link to comment
Share on other sites

2009 தை மாசம் இருப்தேட்டாம் திகதி, இரணைப்பாலை சந்திக்கு புறமாக ஆனந்தபுரத்தின் தென்னந்தோப்புகளுக்கு நடுவில் அமைந்திருந்த, விடுதலைபுலிகளின் புலனாய்வுத்துறை செய்மதி தொலைத்தொடர்பு மையத்துக்கு, லண்டனில் இருந்த புலனாய்வு முகவரிடம் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அந்த அழைப்புக்குரியவர் ஞானவேல் அண்ணைக்குரிய முகவராவர். அவர் ஞானவேல் அண்ணைக்கு ஒரு முக்கிய செய்தியை சொல்லுவதற்காக அந்த அழைப்பை எடுத்திருந்தார். 
 
அந்த செய்தியை என்னிடம் சொல்லும்படி, நான் ஞானவேல் அண்ணையிடம் சொல்லுகிறேன் என்று சொன்னபோது, அவர் லண்டனில் ஒரு பெடியன், புலம்பெயர் தேசங்களில் ஒரு எழுச்சி வேண்டும், தனியே எங்களுக்காக தமிழக தமிழர்கள் தான் தீக்குளிப்பார்களா, நாங்களும் ஏதாவது செய்ய வேண்டும் என்று துடிப்பதாக ஒரு பெடியனை அறிமுகபடுத்தினார். அவன் தான் முருகதாஸ்.
 
நான் அவனுடன் பேசிய போது, ஏதாவது ஒரு எழுச்சி வேணும் அண்ணே. நாங்கள் ஏதாவது செய்ய வேண்டும். புலம்பெயர் தேசங்களில் ஒரு மக்கள் எழுச்சி வந்தால் மட்டுமே உங்க நடக்கிற சண்டையை நிப்பாட்ட முடியும் என்று தெளிவாக உறுதியாக பேசினான். ஒரு ஈழத்தமிழன் புலம்பெயர் தேசத்தில் தன்னை ஆகுதியாக்கும் தெளிவுடன் பேசியது என்னை கொஞ்சம் அதிர வைத்தது. அலைபேசியில் ஞானவேல் அண்ணையை தொடர்பு கொண்டு விடயத்தை தெளிவுபடுத்தினேன். 
 
சில மணி நேரங்களில், தமிழ்குமரனுடன் ஞானவேல் அண்ணை, எங்களின் முகாமுக்கு வந்திருந்தார். முருகதாசுடன் தெளிவாக பேசினார். எழுச்சிக்காக மக்கள் விடிவுக்காக இவ்வாறான தியாகங்கள், புலம்பெயர்நாடுகளில் பெரிதாக எடுபடாது என்று சொன்னார். முருகதாஸ் அவனது முடிவில் உறுதியாக இருந்தான். அவன் ஞானவேல் அண்ணாவிடம் இரண்டு கோரிக்கைகள் வைப்பதற்காகவே தொலைபேசி அழைப்பை எடுத்ததாக கூறினான்.
 
முதலாவது கோரிக்கை தனது சாவின் மூலம் ஏற்படும் அந்த எழுச்சியை புலம்பெயர் தேசங்களில் முன்னெடுக்க கூடிய கட்டமைப்பு, ஒழுங்கமைப்புகளை செய்யும்படி கோரி இருந்தான்.
இரண்டாவது தனது சாவுக்கு முன்னர் ஒரு தடவையாவது தலைவர் அல்லது பொட்டு அம்மானுடனாவது பேசவேண்டும் என்று கோரி இருந்தான். 
 
இந்த கோரிக்கைகள் குறித்து அம்மானிடம் பேசி ஒரு முடிவுக்கு வருவதற்கு கால அவகாசத்தை கோரி இருந்தார் ஞானவேல். பல்வேறுபட்ட வாத பிரதிவாதங்களுக்கு பிறகு அம்மான் ஒழுங்குகளுக்கான ஒப்புதல் அளித்திருந்தார். இருந்தாலும் நிச்சயமாக வெளிநாட்டு ஊடகங்களும் அரசாங்கங்களும் இவ்வாறான நிகழ்ச்சிகளை இருட்டடிப்பு செய்யும் என்று குறிப்பிட்டார்.
மிகவும் இரகசியமான இந்த ஒப்புதல் ஞானவேல் அண்ணை தலைமையிலான ஒரு குழுவுக்கு வழங்கபட்டிருந்தது. அதில் ஞானவேல் அண்ணா, தமிழ்குமரன், சிறி அண்ணா, நான் இடம்பெற்று இருந்தோம். 
 
திரும்பவும் மாசி மாதாம் இரண்டாம் திகதி முருகதாசுடன் தொடர்பை ஏற்படுத்தி கொண்ட நாம், தீக்குளிப்பு பின்னரான எழுச்சிக்கான பொறுப்பை கையாளுவதற்கான கோரிக்கையை ஏற்றுக்கொண்டதாக முருகதாசிடம் குறிப்பிட்டோம். இரண்டாவது கோரிக்கையை நிறைவேற்ற முடியாமைக்கான காரணங்களை விளக்கி இருந்தோம். எங்களுக்கு தீக்குளிப்புகான திகதியை கோரி இருந்தோம். 
 
தனக்கு லண்டனில் சில கடமைகள் செய்துமுடிக்க வேண்டிய தேவை இருப்பதால் மாசி 12 ஆம் திகதியை தெரிந்தெடுத்திருப்பதாக குறிப்பிட்டான். ஒரு கரும்புலிக்கு நிகரான சாதனையை செய்ய போகும் அவன் மனசில் இருந்த வீரமும் தெளிவும் இன்னமும் எங்களை போராட்டத்தை விட்டு விலகி செல்லவிடுகுது இல்லை. 
 
வான்புலிகள் கொழும்பிலே ஒரு தாக்குதலை நடாத்த திட்டமிட்டிருப்பதை தெரிந்து கொண்ட நாங்கள், அதற்கு முதல் இந்த நிகவு இடம்பெற வேண்டும் என்று மட்டும் தான் மனசிலே நினைத்து இருந்தோம். அது போலவே முருகதாசும் மாசி 12 இனை தெரிந்தெடுத்திருந்தான்.
 
மாசி 10, காலை எங்களுக்கு அனுப்பிய ஈமெயில் இல், அவன் தீக்குளிப்புக்கு பின்னர் வெளியிட வேண்டிய கடிதத்தின் நகலை தட்டச்சு செய்து அனுப்பி இருந்தான். எங்களுக்கு அதில் ஏதும் மாற்றம் செய்ய வேண்டி உள்ளதா என்று கேட்டு அனுப்பி இருந்தான். மக்களை எழுச்சி கொள்ள செய்ய அதில் ஏதும் வசனங்களை சேர்க்க வேண்டுமாயின் சேர்க்க சொல்லி குறிப்பிட்டு இருந்தான். நாங்கள் சில வசனங்களை அவனின் தியாகம் மூலமாவது மக்கள் எழுச்சி கொள்ள வேண்டும் என்று சேர்த்திருந்தோம். அவற்றை அச்சுபிரதி எடுத்து அவற்றை தன்னுடனேயே வைத்திருந்தான்.
 
தனது கடமைகளை முடித்து கொண்ட முருகதாஸ் சுவிசுக்கு பயணமாகி தனது நண்பர்களுடன் தங்கி இருந்தான். அவர்களுக்கு கூட தான் சுவிஸ் வந்ததன் நோக்கம், தான் செய்ய போகும் தியாகம் பற்றி குறிப்பிடவில்லை. 
 
இவ்வளவும் ஏன் தன்னை பெற்ற தாய் தந்தையருக்கு கூட அவன் தான் செய்ய போகும் தியாகம் பற்றி குறிப்பிடவில்லை. 
 
மாசி 12 
 
எங்களது செய்மதி பரிவர்த்தனையும் சரியாக வேலை செய்யவில்லை, அண்மையில் நடந்த கிபிர் தாக்குதல், மறைப்புகள், receiver இருந்த பிரச்சனைகள் காலையில் இருந்தே எங்களுக்கு கரைச்சல் கொடுத்துகொண்டிருந்தது. எங்களுக்கோ பதபதைப்பு இன்றைக்கு நினைச்சபடி முருகதாஸ் சாதிப்பான என்ற பததைப்பு மட்டுமல்ல. ஒரு கரும்புலிக்கு நிகரான வீரனின் தியாகம் வீண்போக கூடாது என்று பதபதைப்பு. 
 
மாலை ஆறுமணிக்கு பின்னர் தான் எங்களின் தொழிநுட்பவல்லுநர்களின் கடுமையான முயற்சிக்கு பின்னர் தொலைத்தொடர்பு கருவிகள் இயங்க ஆரம்பித்தன. பிபிசி முக்கிய அறிவிப்பாளருடன் தொடர்பு கொண்ட சிறி அண்ணா உங்களுக்காக ஒரு முக்கிய செய்தி இன்னும் கொஞ்ச நேரத்தில் கிடைக்கும் தயவு செய்து இருட்டடிப்பு செய்யாமல் ஒலிபரப்பு செய்யுங்கள் என்று கேட்டுகொண்டார். எங்களுடன் தொடர்பை ஏற்படுத்த நிறையதடவை முயன்றும் தொடர்பு கிடைக்காமல் கூட தனது கடமையில் தவறாத அந்த வீரன் மாலை 8 மணிக்கு  எங்களை தொடர்பு கொண்ட போது கொஞ்சம் படபடப்புடன் பேசினான்.
 
அண்ணே நான் நினைத்த மாதிரி மாலை 4:30 இற்கு ஐ நா வாசலை அடைய முடியாது. புகையிரதம் தாமதமாக உள்ளது. இனி டாக்ஸி பிடித்து போனால் கூட அது வேறு சந்தேகங்களை தோற்றுவிக்கும். கொஞ்சம் தாமதமானாலும் நான் அந்த இடத்துக்கு சென்று எப்படியும் தீக்குளிப்பேன் என்று குறிப்பிட்டான். அவனுக்குள் இருந்த அந்த உறுதி தளரா வீரம் எங்களை மெய்சிலிர்க்க வைத்தது. ஐநா பணியாளர்கள் வேலை முடித்து திரும்பும் வேளையில் தீக்குளிப்பதன் மூலம் தான் ஒரு செய்தியை கூற முடியும் என்று நம்பிய நாங்கள். அவனை அந்த திட்டத்தை கைவிட்டு நாளைய தினத்துக்கு மாற்றும் கேட்டு கொண்டோம். 
 
அதற்கு அவன் இல்லை அண்ணே, நாளை மறுதினம் காதலர் தினம், நான் நாளைக்கு தீக்குளித்தால் காதல் தோல்வியால் தீக்குளித்த மாதிரி ஆகிவிடும் என்ன ஆனாலும் இன்றே செய்கிறேன் என்று உறுதியோடு கூறினான். அவன் ஐநா இடத்தை அடையும்போது ஐந்துமணியை தாண்டி இருந்தது. இறுதியாக சில வசனங்கள் பேசினான். நாங்கள் அவனுக்கு பொட்டம்மான் சொன்ன செய்தியை சொன்னோம். 
 
என்னுடைய இந்த சாவு இங்கே ஒரு பெரிய எழுச்சியை உருவாக்கும். அது தலைவரை, உங்களை, எங்கள் மக்களை காப்பாத்தும் என்ற நம்பிக்கையில் தான் நான் எரிகிறேன். இங்கே நிறைய கூட்டம் இல்லை. பஸ் ஸ்டாண்டில் ஒன்று இரண்டு பேர் நிக்கிறார்கள். நான் கடிதத்தை என்னுடன் வைத்திருந்தால் எரிந்துவிடும். பஸ் ஸ்டாண்டுக்கு பக்கத்தில் பறக்காமல் கல்லு வைத்து வைத்துவிடுகிறேன். உங்கட ஆட்களை விட்டு எடுக்க சொல்லுங்க அண்ணே. எனக்கு தெரியும் இங்கே சில நேரம் உங்கட ஆட்கள் நிப்பினம். அவையிடம் சொல்லுங்கோ நான் என்ன கத்தினாலும் என்னை காப்பாத்த வரவேண்டாம் என்று சொல்லுங்கோ. தமிழரின் தாகம் தமிழீழ தாயகம் என்று சொன்னான்.
 
இவை தான் அவனின் கடைசி வரிகள்.
 
பார்த்த எங்களின்  முகவர்கள் சொன்னார்கள், அவன் குளிர் தாங்கும் ஜாக்கெட்டுடன் தான் எரிந்தான். அவை உருகி அவன் உடலில் படும்போதும் Stop the War in Sri Lanka என்று கத்தி கொண்டதுதான் இருந்தான். தன்னுடலில் எரிகிறதே என்று விழுந்து படுத்து உருள கூட இல்லை. கடைசி நிமிடங்களில் என்ன நினைத்தானோ ஐ நா வாசலை நோக்கி ஓடினான். வாசலை அடையும் முன்னே நிலத்தில் வீழ்ந்துவிட்டான். அவனின் கரிய புகை மட்டும் வானை நோக்கி எழும்பி கொண்டிருந்தது. அது மக்களுக்கு விடிவைதேடி தரும் என்ற நம்பிக்கையில் அந்த தியாக வீரன் உயிரை விட்டிருந்தான்.
 
சுவிஸ் காவல்துறை இதை ஒரு சாதாரண தற்கொலையாக பதிவிட்டு எங்கோ ஒரு மூலையில் செய்தி போட்டது. BBC அன்றைய நாளில் சொல்லாமல் அடுத்த நாளில் அவனது கோரிக்கைகள் கூட சொல்லாமல் ஒரு சாதாரண செய்தியாக வெளியிட்டது.
 
இன்று அந்த குழுவில் ஞானவேல் அண்ணே வீரச்சாவு , தமிழ்குமரன் இல்லை, சிறி அண்ணா இந்த சம்பவம் நடந்த சில நாட்களில் வீரச்சாவு.
 
தன் சாவில் கூட உறுதியோடு இருந்த ஒரு தியாகியின் சாவை கொச்சைபடுத்தும் ஒரு கட்டுரையை பிரசுரித்த பிறகும் என்னால் சும்மா இருக்க முடியவில்லை.முருகதாசின் பெற்றோருக்கு கூட தெரியாத இந்த இரகசியம் என்னுடன் அழிய கூடாது. அழிந்தால் இந்த சாத்திரி மாதிரி ஆயிரம் சாத்திரிகள் தங்களின் எண்ணத்துக்கு கட்டுரைகளை எழுதி சாவு வியாபாரம் நடத்தும். அதை பிரசுரிக்க என்று இணையத்தளங்கள் அலையும். புலிகள் தான் அழிந்தார்கள். அதற்காக உண்மையை சொல்ல ஒருவரும் இல்லை என்று நீங்களே கதைகள் எழுதாதீர்கள். இது அதைவிட ஈனத்தனமான செயல்.
 
இந்த இரகசியத்தை எழுதியமைக்காக புலனாய்வுத்துறை என்ன தண்டனை தந்தாலும் நான் ஏற்க தயார். ஆனால் அந்த தியாகவீரனின் தியாகத்தை நீங்கள் எழுச்சியாக மாற்ற முடியாவிட்டாலும், தயவுசெய்து கொச்சைபடுத்தாது விடுங்கள்.
 
நன்றி வணக்கம்

இதைப் படிக்கும் போது முன்னர் கரும்புலிகள் பற்றிய கதைகள் பத்திரிகைகளில் படித்ததுபோல் இருக்கின்றது.

இதுவரையில் இந்த நிகழ்வை தமிழகத்தில் நிகழ்ந்த தீக்குளி்ப்புகள் போல் மக்கள் எழுச்சியின் ஒரு கூறாக நினைத்திருந்தேன். ஆனால் இதன் பின் ஒரு திட்டமிடல், இந்த உலகம் பயங்கரவாதம் என்று முரண்பட்டிருக்கும் தற்கொலைத் தாக்குதல்களுக்கு நிகரான அணுகுமுறை இருக்கும் என்று நினைத்திருக்கவில்லை.

மேற்குலக நாடுகளில் பத்தாயிரக்கணக்கில் மக்கள் வீதியில் இறங்கி மாதக்கணக்கில்  நடந்த கவனயீர்ப்புகள் கடசிவரையில் ஒரு உயிரை தன்னிலும் காப்பாற்ற பிரயோசனப்படவில்லை. எவனும் காதுகொடுத்துக் கேட்கவில்லை. எம்மவர்களின் அணுகுமுறையில் இயல்பில்லை. உயிரின் பெறுமதியையும் கண்ணீரின் பெறுமதியையும் நாம் முதலில் உணராத பட்சத்தில் இந்த உலகிற்கு உணர்த்த முயல்வதில் எப்போதும் தோல்வியே மிஞ்சும் என்பதை காலம் உணர்த்தி நிற்கின்றது.

உலகின் மெளனத்திற்கான காரணத்தை அதன் பின்புலங்களை வெளிப்படுத்தும் அபிராமுக்கு வாழ்த்துக்கள். எதிர்காலச் சந்ததிகளின் அணுகுமுறையில் மாற்றங்கள் வர உதவட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களில் மூன்று வகை.. :blink:

  1. ஈழப் போராட்டம் இன்னும் முடிந்துவிடவில்லை என்பவர்கள். (இப்பவும் ஏதாவது போராட்டம் செய்துகொண்டு இருப்பவர்கள்) :unsure:
  2. போராட்டத்திற்கான தேவை இன்னும் இருக்கிறது.. ஆனால் இனிப் போராட முடியாது என்பவர்கள்.. (அதாவது ஒதுங்கி பேசாமல் இருப்பவர்கள்) :huh:
  3. மே 2009 உடன் போராட்டமும் அழிந்துவிட்டது.. அதற்கான தேவையும் இனி இல்லை என்பவர்கள். (இவர்கள்தான் கட்டுரைகள் எழுதி வியாக்கியானம் பேசிக்கொண்டிருப்பவர்கள்.. :D )

போராட்டத்திற்கான தேவை இருக்கும்வரையில் சுய பரிசோதனை நடாத்தமுடியாது. அது காட்டிக்கொடுப்பதில் போய் முடியும். :unsure: இந்த மூன்றாவது வகையினர்தான் சுய பரிசோதனை, பிரேத பரிசோதனை இவற்றையெல்லாம் வேண்டி நிற்பவர்கள். :D அவர்களுக்கு போராட்டத்திற்கான தேவை இனியும் இல்லை. :o

இப்படியான மூன்றாம் அணியினர், போர்க்காலத்தில் புகலிடம் கோரியது சரி.. :mellow: ஆனால் இன்றும் ஏன் புகலிடம் கோரிய நாடுகளில் வாழ்கிறார்கள் என்று தெரியவில்லை.. :D பேசாமல் ஊரைப்பார்த்து போகவேண்டியதுதானே??!! :lol:

நன்றி

சகோதரா

தேவை  இருக்கும்வரை

தேவை முடியும் வரை இலக்கை நோக்கி  பயணிப்போம்

முடிந்தவரை காலை வாராமலாவது இருப்போம்

சாத்திரி அண்ணன்,

தயவு செய்து தமிழர்களின் விடிவுக்கு உங்களால் ஏதாவது செய்ய முடியும் என்றால் செய்யவும்.உங்களுக்கு தெரிந்த நிறைய பழைய‌ விடயங்கள் எங்களுக்கு(அடுத்த தலை முறைக்கு) தெரியாது.உங்களது எழுத்துகளில் இலங்கையில் நடந்த மனிட உரிமை மீறல்களை எழுதுங்கள். எங்கள் மக்கள் 1980 களில் இருந்து அனுபவித்த துயரங்களை ஆவணப் படுத்துங்கள். உங்களுக்கு ஆண்டாண்டுகளிற்கு நன்றி சொல்வோம் நாம்.

முடியாவிட்டால் தயவு செய்து அமைதியாக இருக்கவும். முடிந்தவர்கள் முயற்சிக்கட்டும்.

எல்லோரும் சேர்ந்து ஓர் இலக்கை நோக்கி ஓடுவோம். இலக்கை அடைந்தபின் திரும்பிப் பார்ப்போம். ஓடும்போது நீங்களும் திரும்பிப் பார்த்து, ஓடுபவர்களின் கவனத்தையும் சிதறடிக்காதீர்கள்.

நீங்கள் தற்போது வெளிவிடும் தகவல்கள் அல்லது ஆக்கங்கள், எங்களின் விடிவிட்கு எவ்விதத்திலும் உதவாது. இவை மிகவும் "pre mature" ஆனவை. பெரும்பாலான மக்கள் கடந்த 3 ஆண்டுகளில் நிறையவே அறிந்துள்ளார்கள்.ஆக அவர்களிற்கு அது பற்றி மேலதிக விளக்கங்களோ கற்பித்தல்களோ வேண்டாம்.

மேலும் சிறிது காலமாக இப்படி நீங்கள் தொடர்ந்து எழுதுவதால் எனக்கு ஏனோ உங்கள் முகத்தோடு கருணாநிதியின் முகமும் வந்து செல்கிறது. என்ன நடந்தாலும் பின்னங்காலைத்தூக்கும் அற்ப பிராணி கருணாநிதி போல் இழி சொல் உங்களுக்கு வேண்டாம்.

நன்றி அய்யா..

நன்றி  உதயன்

நான் பலமுறை  இப்படித்தான் எழுதினேன்

இம்முறை நீங்கள்???

பர்க்கலாம்

Link to comment
Share on other sites

இதைப் படிக்கும் போது முன்னர் கரும்புலிகள் பற்றிய கதைகள் பத்திரிகைகளில் படித்ததுபோல் இருக்கின்றது.

இதுவரையில் இந்த நிகழ்வை தமிழகத்தில் நிகழ்ந்த தீக்குளி்ப்புகள் போல் மக்கள் எழுச்சியின் ஒரு கூறாக நினைத்திருந்தேன். ஆனால் இதன் பின் ஒரு திட்டமிடல், இந்த உலகம் பயங்கரவாதம் என்று முரண்பட்டிருக்கும் தற்கொலைத் தாக்குதல்களுக்கு நிகரான அணுகுமுறை இருக்கும் என்று நினைத்திருக்கவில்லை.

மேற்குலக நாடுகளில் பத்தாயிரக்கணக்கில் மக்கள் வீதியில் இறங்கி மாதக்கணக்கில்  நடந்த கவனயீர்ப்புகள் கடசிவரையில் ஒரு உயிரை தன்னிலும் காப்பாற்ற பிரயோசனப்படவில்லை. எவனும் காதுகொடுத்துக் கேட்கவில்லை. எம்மவர்களின் அணுகுமுறையில் இயல்பில்லை. உயிரின் பெறுமதியையும் கண்ணீரின் பெறுமதியையும் நாம் முதலில் உணராத பட்சத்தில் இந்த உலகிற்கு உணர்த்த முயல்வதில் எப்போதும் தோல்வியே மிஞ்சும் என்பதை காலம் உணர்த்தி நிற்கின்றது.

உலகின் மெளனத்திற்கான காரணத்தை அதன் பின்புலங்களை வெளிப்படுத்தும் அபிராமுக்கு வாழ்த்துக்கள். எதிர்காலச் சந்ததிகளின் அணுகுமுறையில் மாற்றங்கள் வர உதவட்டும்.

நடந்தவை பல இடங்களில் சேகரிக்கப்பட்டிருக்கு. 2011 ஐ.நா. இல் நடந்த விசாரணை அல்லாத ஆவணத்தொகுப்புக்கு பேட்டி கொடுக்க போன இலங்கையின் RC கொல்ம்ஸ் தடுமாறியது எல்லாம் பதியப்பட்டிருக்கு. அவர் தனக்கு கீழ் இருந்தவர்களுக்கு அரசியல் தெரிந்திருக்கவில்லை என்றிருக்கிறார்: அதனால்தான் பொதுமக்கள் கொல்லப்பட்டபோது அவர்களை நம்பி தன்னால் எதுவும் செய்ய முடியவில்லை என்றிருக்கிறார். அவர் அரசியல் தெரிந்த இலங்கையை மட்டும் தான் தன்னால் நம்ப முடியும் என்றிருக்கிறார்.   ஐ.நா வின் கணணிகளை இயக்க இலங்கை ஆமியைதெரிந்து எடுத்து புலத்திலிருந்த ஐ.நாஅதிகாரிகள் அவரிடமிருந்து தப்பி ஐ.நா வுக்கு நேரே அனுப்பிய மின்னல் அஞ்சகளில் கொப்பி எடுத்துகொள்ள உதவியிருக்கிறார். வேண்டுமெனெறே OHCRC க்கு விபரங்களை மறைத்தார். இதை விட நிறையத் தரவுகள் பல இடங்களில் பதியபட்டிருக்கு. அவை யாழில் நாம் கொடுத்தவை அல்ல. விசாரணை வர மிச்சம் வெளிவரும். நாம் தெருவில் நின்று கத்திய போது பலர் கேட்டுவிட்டர்கள். தங்கள் பாணியில் சலசலக்காமல் மௌனிகள் மாதிரி நடித்துவிட்டாரகள். நடந்தவை பல இடங்களில் சேகரிக்கப்பட்டிருக்கு.

இன்றைக்கு சர்வதேச விசாரணையை தடுத்துபிடிப்பது இந்தியா மட்டும். நம்ப முடியாத விதமாக சீனா அரசு கூட மாறிவிட்டது. நுரை சோலையை  கைபற்றிவிட்டது. போர்க்காலம் இலங்கைக்கு உதவிய அரசுகளில் காங்கிரஸ் ஒன்று மட்டும்தான்  இன்னமும் கதிரையில் இருக்கு. 

காங்கிரசை விழுத்தி விசாரணையை கொண்டுவருததற்கென்றுதான் தமிழ்நாட்டு மாணவர்கள் இன்று தெருவில் நின்று கத்துகிறார்கள். அவர்களின் குரலும் மௌனமாக பல இடங்களில் பதியப்பட்டுக் கொண்டுதானிருக்கிறது. 

"பாலன் பஞ்சம் பத்து வருசம்". காங்கிரசுக்கு இன்னும் பத்துமாதம் இருக்கு. அதன் பின்னர் பார்த்துக்கொள்ளுவோம்.

அபிராம் மட்டும் அல்ல யாரும் போகத்தேவை இல்லை. தேவையான சாடியங்கள் பலவும் பதியபட்டுவிட்டது. யாழில் வெல்ல முயல்வதால் மகிந்தவையும் கோத்தாவையும் யாரும் இனிக் காப்பாற முடியாது.

Link to comment
Share on other sites

நடந்தவை பல இடங்களில் சேகரிக்கப்பட்டிருக்கு.

2011 ஐ.நா. இல் நடந்த விசாரணை அல்லாத ஆவணத்தொகுப்புக்கு பேட்டி கொடுக்க போன இலங்கையின் RC கொல்ம்ஸ் தடுமாறியது எல்லாம் பதியப்பட்டிருக்கு.

அவர் தனக்கு கீழ் இருந்தவர்களுக்கு அரசியல் தெரிந்திருக்கவில்லை என்றிருக்கிறார்: அதனால்தான் பொதுமக்கள் கொல்லப்பட்டபோது அவர்களை நம்பி தன்னால் எதுவும் செய்ய முடியவில்லை என்றிருக்கிறார்.

அவர் அரசியல் தெரிந்த இலங்கையை மட்டும் தான் தன்னால் நம்ப முடியும் என்றிருக்கிறார்.  

ஐ.நா வின் கணணிகளை இயக்க இலங்கை ஆமியைதெரிந்து எடுத்து புலத்திலிருந்த ஐ.நாஅதிகாரிகள் அவரிடமிருந்து தப்பி ஐ.நா வுக்கு நேரே அனுப்பிய மின்னல் அஞ்சகளில் கொப்பி எடுத்துகொள்ள உதவியிருக்கிறார்.

வேண்டுமெனெறே OHCRC க்கு விபரங்களை மறைத்தார். இதை விட நிறையத தரவுகள் பல இடங்களில் பதியபட்டிருக்கு. அவை யாழில் நாம் கொடுத்தவை அல்ல. விசாரணை வர மிச்சம் வெளிவரும்.

இன்றைக்கு சர்வதேச விசாரணையை தடுத்துபிடிப்பது இந்தியா மட்டும். நம்ப முடியாத விதமாக சீனா அரசு கூட மாறிவிட்டது. நுரை சோலையை  கைபற்றிவிட்டது. போர்க்காலம் இலங்கைக்கு உதவிய அரசுகளில் காங்கிரஸ் ஒன்று மட்டும்தான்  இன்னமும் கதிரையில் இருக்கு. "பாலன் பஞ்சம் பத்து வருசம்". காங்கிரசுக்கு இன்னும் பத்துமாதம் இருக்கு. அதன் பின்னர் பார்த்துக்கொள்ளுவோம்.

அபிராம் மட்டும் அல்ல யாரும் போகத்தேவை இல்லை. தேவையான சாடியங்கள் பலவும் பதியபட்டுவிட்டது. யாழில் வெல்ல முயல்வதால் மகிந்தவையும் கோத்தாவையும் யாரும் இனிக் காப்பாற முடியாது.

எனது கருத்தை  மேற்கோள் காட்டிய உங்கள் பதிலை முடிந்தவரை புரிந்துகொள்ள முற்பட்டிருக்கின்றேன்.

அபிராம் எழுதியதில் உள்ள மக்கள் எழுச்சி அணுகுமுறையை இந்த உலகம் எந்தக் காலத்திலும் ஏற்றுக்கொள்ளாது. பயங்கரவாதம் என்ற போர்வையிலேயே மக்கள் கொல்லப்பட்டனர். இத்தனை அழிவுகளுக்கும் பின்னர் அதே அணுகுமுறையை நியாயப்படுத்த வெளியில் காரணங்களை தேடுகின்றீர்கள். அதை உங்கள் பதிவில் வரிசைப்படுத்தியுள்ளீர்கள். அதன் உச்சக்கட்டம் பாலன் பஞ்சம் பத்துவருடம் என்கின்றீர்கள் பதினோராவது வருடம் கொடுக்கின்ற தெய்வம் கூரையை பிய்த்துக்கொண்டு கொடுக்கப்போகின்றது?  

நீங்கள் எது செய்தாலும் எது சொன்னாலும் சரி உங்களைத் தவிர இந்த உலகத்தில் உள்ளவன் எல்லாம் முட்டாள் என்பதே தேசீயத்தை வைத்து பிழைப்பு நடத்துபவர்கள் அடயாளம் தேடுபவர்களின் அடிப்படை. இதற்கு குறுக்கீடாக வரும் கருத்துக்கள் மீது மகிந்தாவை காப்பாத்தப்போறான கோத்தாவை காப்பாத்தப்போறான் அல்லது துரோகிப் பட்டம் கட்ட முற்படுவது. இந்த மனநிலை சாதியத்தால் தோன்றி மரபணுவில் கலந்துவிட்ட சைக்கோ நோய். இதற்கு மருந்தில்லை.

ஓம் சனல் 4 க்கு நன்றி

ஓம் மாணவர்களுக்கு நன்றி

ஓம் சீமானுக்கு நன்றி

ஓம் பெண்கள் விடுதியில் விளக்கு கொழுத்தியவர்களுக்கு நன்றி, என்று மணியை ஆட்டிக்கொண்டிருங்கள் பாலன் பஞ்சம் முடிந்தவுடன் தமழீழம் கூரையை பிய்த்துக்கொண்டு பொத்தெண்டு விழும்.

Link to comment
Share on other sites

இங்கு கருத்துட்ட பலர் நாளைக்கு அவர்களின் எழுத்துகளை அவர்களே பார்த்து  அதன் கனத்தை அளந்து கொள்வார்கள். அதற்காக... :D :D :D :D :D :D :D :D :D

Link to comment
Share on other sites

எழுத ஒன்றும் இருக்காததால் தங்கள் வழமையான  திசை திருப்பும் மேட்டுக்குடி விவாதங்களை போர்வைக்குள் திணித்து குதர்க்கம் எழுதுவதை விட வேறு வழி இல்லை. இது பட்டினில் சுத்தி காழாசிக்குள் அடுக்கு தாம்பாளத்தில் வைத்து கொட்டு மேளதாளம் புடைவர வழங்கப்படும் குப்பை மேட்டுச் சாணி. 

"ஓம் சனல் 4 க்கு நன்றி

ஓம் மாணவர்களுக்கு நன்றி

ஓம் சீமானுக்கு நன்றி

ஓம் பெண்கள் விடுதியில் விளக்கு கொழுத்தியவர்களுக்கு நன்றி," இதை எழுதிவிட்டு தங்கள் மனதுக்குள் தங்களை மேட்டுக்குடிகளை விழுத்தும் வீரபுருசர்களாக கனவு காண்கிறார்களா? புலம் பெயர் மக்களைத்தான் தரக்குறைவான செயல்ப்பாடுகளால் தாக்குகிறார்கள். இதில் அவர்களுக்கு உதவி வெற்றிகளை குவித்திருக்கும் புலம் பெயர் தமிழர் அல்லாதார் மீது காட்டும் கோழைத்தனமான வெறிக்கோபம் எல்லோரையும் அதிர வைக்கிறது. என்ன பரிதாபம். :(

மக்கள் பயங்கரவாதம் என்ற போர்வையில் கொல்லப்பட்டார்கள் என்றதைதான் உலகம் உணர்ந்து வருகிறது. போய்சேர்ந்தார். போரில் உதவிய தனிப்பட்ட செயல்பாடாளைகளான நாராயன், சிவசங்கர் மேனன், பிளேக், சொலெயும், லியாம் பொக்ஸ், நம்பியார் என்று பலரை உலகம் அடையாளம் கண்டது.

அதே மாதிரியே போர் வெறி பிடித்து அலைந்த பிளெயர், புஸ் இவர்களின் அரசுகளை மக்கள் அடையாளம் கண்டார்கள்.யாழில் கருணாநிதியை எவ்வளவோ துக்கிப்பிடித்தார்கள்.  இன்று இலங்கைக்கு  கடைசி உதவியாக இருக்கும் காங்கிரசுக்கு போர் சங்கு ஊதுகிறார்கள் மாணவர்கள். மாணவர்களால் மிரண்டு போய் இருக்கும் கருணாநிதி காங்கிரசுக்கு போர் சங்கு ஊதுகிறார். "ஓம் மாணவர்களுக்கு நன்றி". 

காங்கிரஸ் போய்விட்டால் பயங்கரவதாம் என்ற போர்வையில் மக்களை கொன்றார்கள் என்ற உண்மையை இலங்கை அரசு மறைக்க ஒருவரும் துணை இருக்க போவதில்லை.

சிரிய புரட்சிவாதிகள் தலிபானுடன் சேர்ந்து இயங்குபவர்கள். அல்கைடா அங்கு வெளிப்படையாகச் செயல்படுகிறது. அல்கைடாவுடன் தொடர்பில்லாத  புலிகளை பயங்கரவாதிகள் என சொன்ன அத்தனை நாடுகளும் அவர்களுக்கு ஆயுதம் கொடுக்கின்றன. அங்கு அந்த புரட்சிவாதிகள் ஐ.நா சமாதனப்படையை வீரகளைக் கடத்திக்கொண்டு போய்விட்டார்கள். மேற்கு நாடுகள் பயங்கரவாதிகள் என்ற கிழிந்தையைப்போர்வையை  இலங்கையில் இழுத்து முட்டப் போர்த்ததால் அதை சிரியாவுக்கு எடுத்துவர அதில் ஒன்றும் மிச்சம் இல்லை போலும்.  இந்த போர்வை அரசியலில் உண்மையான தியாகத்தை அபிராம் விவரித்தால் அது பயங்கரவாதமாகாது என்பதை சிரியப் புரடசியாளர்கள் நிரூபித்துவிட்டார்கள்.

அபிராகாம் விவரத்ததில் எந்த நாடும் எந்த முடிவும் எடுக்கவில்லை. சர்வதேச நாடுகள் அதனால் தமிழரின் ஆர்ப்பாடங்களை நிராகரித்தார்கள் என்பது சுத்தப் பொய். மாணவர்களின் ஆர்ப்பாட்டமும், அமெரிக்க பிரேரணையும் தொடர்ந்து கடிக்கும் போது எஜமான்களின் பிரம்பு தொடர்ந்து அடிக்கும் போது எழுத ஒன்றும் இல்லாதவர்கள் தாம் இறால் போட்டுச் சுறா பிடித்துவிட்டதாக கொக்கரிக்கும் வேற்றுத்தம்பட்டஸ்தான் அது.  அது சுத்தபொய். அது இன்னொரு பயங்கரவாத போர்வைக் கதை. உந்த ஏமாற்றுக்களை இப்போது யாரும் நம்புவதில்லை. சொல்லக்கதை இல்லாததால் இவற்றை சொல்லிப்பார்கிறார்கள்.

மேற்குப்புலத்தில் நடந்த ஆர்ப்பாட்டங்களை அந்த நாடுகள் கவனியாமல் விட்டதில் அபிராமின் பங்கு ஒன்றும் இல்லை. அந்தக் கொடையை இலங்கை அரசகுடும்பம் கூட தேடிக்கொள்ளவில்லை. உண்மையில் இன்று அரச குடும்பம் யாரோ தேடிய அந்த பலத்தை இழந்துமட்டும்தான் இருக்கிறார்கள். அதை இலங்கைக்கு தேடிக் கொடுத்தவன் ஒரு துரோகித்தமிழன். கதிர்காமர். போரை இலங்கை வென்றதின் ஒருகாரணம் கதிர்காமர். அதை சம்பந்தர் கூட பாராளுமன்றத்தில் சொன்னார். இந்த துரோகி தமிழன் எல்லோரும் பயங்கரவாதிகள் என்று செய்திருந்த பிரசாரத்தால்தான் உலகம் இலங்கை அரசு பொது மக்களை பயங்கரவாதிகள் என்ற போர்வையில் கொலை செய்த போது உதவியது. தாங்கள் போருக்கு உதவும் போது அதை எதிர்த்து  தெருவில் தமிழர் செய்ய ஆர்ப்பாட்டங்களை உடனுக்கு மேற்குநாட்டு அரசுகள் கண்டும் காணாது போல் நடித்தன. இதை அபிராமின் விளக்கத்துடன் தொடர்படுத்தும் போர்வைக்கதகளை சர்வதேச மக்கள் இனி நமப மாட்டார்கள்.

கதிகாமரும் சந்திரிகாவும் 12 வருடங்கள் உழைத்துத்தான் இந்த கொடை மகிந்தருக்கு கூரையை பிரித்துக்கொண்டுவந்து விழுந்தது. இப்படித்தான் ராசபக்சா & கோ சரவதேச ஆதரவைப் பெற்றார்கள். இதை அபிராம் அல்ல இலங்கைக்கு உழைத்துக்கொடுத்தவர்.

ஆனால் ஆயிரம் ஆயிரமாய் தெருகளில் திரண்ட மக்கள் மகிந்தரிடமிருந்து அந்த கொடையை மூன்று வருடங்களில் தகர்த்துவிட்டார்கள். 
 
அது நடந்த விதம் இப்படித்தான்:
 
(1).2009 இலங்கையை புகழ்ந்து பிரேரணை. அதில் 47 நாடுகளில் பல ஆதாரவு குடுத்து பிரேரணை நிறைவேறுகிறது.
 
(2).2010 யூனின் ஐ,நா நிபுணர் அறிக்கை வெளிவருகிறது. போர்க்குற்றம் சாட்டப்படுகிறார்கள். முதல் முதல் கூரையில் ஓட்டை விழுகிறது.
 
(3) 2011  கார்த்திகையில் LLRCஇன் அறிக்கை. அந்த அறிக்கையில் பொறுப்பு கூறல் இல்லை என்று சர்வதேசம் சொல்கிறது.  கனேடிய தமிழ் மக்களின் உழைப்பால்  தருஸ்மன் அறிக்கை என்று எள்ளிநகையாடப்பட்ட அறிக்கையை "அது ஐ.நா அறிக்கை" என்று  கனேடிய பிரதமர் அடித்து சொல்கிறார். அதன் படி விசாரணை ஒன்றை இலங்கை செய்யாவிட்டால் சர்வதேசம் செய்ய வேண்டும் என்கிறார்.
 
(4).2012 இலங்கயை அதன் கொலைக் குற்றத்தை விசாரிக்கும் படி அழைப்பு விடும் பிரேரணை வருகிறது. 47 நாடுகளில் 5 நாடுகள் ஒதுங்குகின்றன . 24 நாடுகள் அபிராமின் கருத்தை ஏற்று பிரேரணையை நிறை வெற்றி வைக்கின்றன. இப்போது கூரை ஓட்டை பெருத்துவிட்டதால் ஐ.நா வளாகத்திற்குள் உள்ளே போய் இலங்கை அரசு அடாவடித் தாக்குதல் நடத்துகிறது. ஐ.நாவால் அச்சுறுத்தப்பட்டு ஐ.நா அறிக்கையில் நடந்தவை குறிக்கப்பட்டு வெளிவிடப்படுகிறது.  மேட்டுக்குடி ஐய்யர் மக்ரெ, டிங்கு டிங்கு ஓம் சனல் -4,  பிடியையை கைக்குள் வைத்துக்கோண்டு கொலைக்கள ஆவணத்தை வெளிவிடுகிறார். அடுத்து என்ன வரும் என்றது தெரியாத மோடையாகள் "Lies Agreed Upon"  வெளிவிடுகிறார்கள்.   அய்யர் மக்ரே அடுத்த பாகத்தை வெளிவிட்டு பொய்யர்களை தடுமாறவைக்கிறார். "Lies Agreed Upon" பொய்த்துப்போகிறது.  இதனால் சவாலாக சொல்லபட்ட பாகம் 2 ஆன "Lies Agreed Upon" யை அரசு பிரசுரிக்கவில்லை. அய்யர் மாக்ரே வெற்றி. டிங்கு டிங்கு ஓம் அய்யர் மக்ரே நன்றி
 
(5). 2013ல் 2012ப்பிரேரணை செயல்ப்பாட்டு பிரேரணையாகிறது. அதை எதிர்த்து வாக்களிப்புக்குப் போக செய்ய  இலங்கைக்கு அங்கத்துவ நாடு ஒன்று தேவை. அதை இலங்கையின் உயிர் நண்பன் இந்தியா கூட செய்ய வரும் சந்தர்ப்பம் இல்லை. 47 நாடுகளும் ஒன்றாக ஏற்று வாக்களிப்பில்லாத பிரேரணையாக அது போய்விடும் சந்தர்ப்பம் வரலாம். "வாழ்க அபிரராம். இரண்டாம் தடவை வென்றுவிட்டார்." 47 நாடுகளால் இலங்கையின் பயங்கரவாத கதை போர்வையில் பாரிய ஒட்டை வருகிறது . கஸ்மிரிய முஸ்லீம்களை தான் கொலைசெய்தது வெளிவந்துவிடும் என்று காங்கிரஸ் அஞ்சலாம். ஆனால் காஸ்மீரி முஸ்லீம்களின் மீது தனக்கு அக்கறை என்பதை வெளிக்கட்ட சல்மான் குர்திஷ் முதல் தரமாக 2013ல் பிரேணையில் சரவதேச விசாரணை வந்தால் அது இந்தியா மீதும் வரும் என்று வேண்டுமென்றே இந்தியவை காட்டிகொடுத்திருக்கிறார். அவரின் பேச்சின் அர்த்தம் இந்தியா இலங்கையில் ஒரு சர்வதேச விசாரணையை வரவிடுவது மட்டுமல்ல, கஸ்மீரி முஸ்லீம்களுக்கு இழைத்த குற்றத்தையும் விசாரிக்க வேண்டும் என்பதுதான். டிங்கு டிங்கு ஓம் சீமான் . கூரை ஓட்டை பெரிதாகிப்போய்விட்டது. (இது நடந்தது புலம் பெயர் தமிழர் போடும் கூச்சலால் என்பது மட்டும் பொய். எப்போதாவது யாரவது கூச்சல் போட்டு எந்த கூரையிலாவது ஓட்டை விழுந்திருக்கா?)
 
(6). 2014 இல் பிரேரணைக்கு காங்கிரஸ் இருக்கப் போவதில்லை. சாந்தா கூரைக்குள்ளால் இறங்குவதை யாரும் தடுக்க முடியாது. டிங்கு டிங்கு யாரவாது விள்ளக்கேற்றி வைக்கவிட்டால் சாந்தாவால் உள்ளே வந்து பரிசுகளை வைக்க முடியாமல் போவிடும். டிங்கு டிங்கு மாணவிகள் விடுதியில் யாராவது விளக்கு கொழுத்துவார்களா? 

எங்களின் மணி ஆடுதோ இல்லையோ

புததம் கரணம் கச்சாமி,

கொள்ளை அடி அப்புகாமி

பார்த்துகொண்டுடிரு றாலகாமி என்ற மேட்டுக்குடி மகிந்த சித்தாந்தம் முடிவுக்கு வருவதை யாரும் தடுக்க முடியாது.

Link to comment
Share on other sites

சாந்தியக்கா சளாப்பல் கதையள் வேண்டாம். உங்கள் போராளித் தோழனான அம்புறுஸ் அவர்களுடன் உங்கள் முரண்பாட்டின் காரணத்தை வெளிப்படுத்துவீர்களா?

சாத்திரியுடன் எனக்கு கொடுக்கல் வாங்கல்கள் இல்லை. ஆரம்பத்தில் இருந்தே சாத்திரியின் எழுத்துகளுடன் முரண்பட்டே நிற்கிறேன். நீங்கள்தான் சாத்திரியுடன் சேர்ந்து பேட்டி எடுத்த கதையை சொல்லவா.... பல பதிவுகளுக்கு ஒத்து ஊதிய கதையை சொல்லவா? இப்போது என்ன உங்கள் ஊடக தோழன் சாத்திரியுடன் முறிவு, தடம்மாறி ஓட்டம்.

இதன் காரணங்களையும் உண்மையுடன் வெளிப்படுத்தினால் என்ன?

அபிராம் உண்மையை வெளிப்படுத்தியுள்ளார். அதுவரை அவருக்கு வாழ்த்துக்கள். உங்களுக்குதான் அடிமனதில் கோபம் இருக்கலாம் அபிராம் மீது.

கழிவு ஒயிலை போட்டு நீங்கள் உருண்டாலும் உங்கள் எழுத்துகளால் சிலரைதான் மயக்கமுடியும். ஏனெனில் உங்கள் பழைய எழுத்துகள் உங்களையே திரும்பி கேள்விகேட்கின்றன என்பதே உண்மை. இதற்கு அபிராம் எழுதியதில் தொக்கிநிற்கும் உண்மைகள் சாட்சி.

(கோவத்தில் உளறாதீர்கள் நிதானமாக யோசித்து எழுதுங்கள் அக்கா)

நியானி: ஊகத்தின் அடிப்படையிலான கருத்து தணிக்கை செய்யப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.