Jump to content

இறுதிக்கட்டப் போரின்போது புலிகள் அமைத்த போர் வியூகங்கள் எப்படி அமைந்திருந்தன? அவை ஏன் தோற்றன?


Recommended Posts



ஈழத் தமிழர்கள் கொத்துக்குண்டுகளுக்குப் பலியான கண்ணீர்க் கதை குறித்து எத்தனையோ பதிவுகள் வெளியாகி விட் டன. மேலும் ஒரு புத்தகம் அல்ல இது.
இறுதிக்கட்டப் போரின்போது புலிகள் அமைத்த போர் வியூகங்கள் எப்படி அமைந்திருந்தன? அவை ஏன் தோற்றன?... என்பது குறித்த ஆழமான விமர்சனத்தை நேர்நின்று பார்த்த அப்புவின் எழுத்தில் படிக்கும்போது ஆர்வமும் அதிர்ச்சியும் ஏற்படுகிறது.

பள்ளிப் பருவம் முதல் காதலித்த பெண்ணைக் கைப்பிடித்து, 33 ஆண்டுகள் வாழ்ந்து, போர் இறுதிக் கட்டத்தில் எந்தச் சூழ் நிலையிலும் பிரியக்கூடாது என்று வாழ்ந்து, இருவருமே குண்டுக் காயம்பட்டு, இறுதியில் இராணுவத்தின் கையில் சிக்கி, துப்பாக்கியால் கொல்லப்படும் சூழலில் அதிர்ஷ்டவசமாகத் தப்பி, இன்று உயிர்வாழும் மனிதர் அப்பு. புலிகள் அமைப்பின் முக்கியப் பொறுப்பாளர்களாக இருந்த நடேசன், ரமேஷ் ஆகியோருக்கு நெருக்கமானவராக இருந்தவர். அதனால்தான் போர்ச்சூழல் குறித்து இதுவரை வெளிச்சத்துக்கு வராத பல்வேறு தகவல்களை அப்பு சரளமாகச் சொல்கிறார்.

இராணுவ வலிமையைப் பலப்படுத்தினால் போதும் என்று நினைத்த புலிகள், மக்களை அரசியல் மயப்படுத்தத் தவறியதன் விளைவுதான் இந்தத் தோல்விக்குக் காரணம் என்பது இவரது கணிப்பு.

கட்டாய இராணுவச் சேவை செய்ய வேண்டும் என்று புலிகள் அறிவித்ததை... தமிழ் வர்த்தகர்கள், அரசு அதிகாரிகள், ஆசிரியர்கள், புலிகள் அமைப்பில் இருந்த சில வசதி படைத்த வலதுசாரி எண்ணம் கொண்டவர்கள் எதிர்த்தனர்.

அவர்களுக்காக புலிகளின் தலைமை சமரசம் செய்ய மறுத்தது. இறுதிக் கட்டத்தில் இந்தத் தரப்பினர், புலிகளுக்கு எதிராகச் செயல்பட்டனர் என்றும் அப்பு சொல்கிறார்.

'வறிய கூலி மக்களின் வீரத்தையும் கூட்டு உணர்வையும் சரியாகப் புரிந்துகொண்டு அவர்களை அமைப்பு ரீதியாக அணி திரட்டி அரசியல் மயப்படுத்தாமல், மேல் மத்தியதர வர்க்கத்தின் பிரச்னைகளான மொழி, உத்தியோகம், தரப்படுத்துதல் போன்ற அரசியல் கோரிக்கைகளுக்காக வறிய கூலிகளைப் பயன்படுத்தியமையே விடுதலைப் புலிகள் செய்த பெரும் அரசியல் தவறாக இருந்தது.

இந்த அரசியல் தவறே, இன்றைய அவர்களது தோல்விக்கு மிக முக்கியமான காரணமாக அமைந்துள்ளது’ என்று சொல்லும் அப்பு, 1983-ம் ஆண்டு இந்திய அரசு, புலிகளுக்கும் போராளிகளுக்கும் ஆயுதங்களை அள்ளிக் கொடுத்த போதே, 'இந்தப் போராட்டம் தோல்வியில்தான் முடியும்’ என்பதை தான் உணர்ந்ததாகச் சொல்கிறார்.

அளவுக்கதிகமான ஆயுதங்கள் கிடைத்தது, அரசியல் பயிற்சியைக் குறைத்து விட்டது என்கிறார்.

சொர்ணம் தலைமை வகித்த புதுக்குடியிருப்பு தாக்குதல் தோல்வி அடைந்தது ஏன் என்றும், கோப்பாப்புலவு தாக்குதலில் 2,000 சிங்கள இராணுவத்தினரைப் புலிகள் கொன்றாலும் அவர்களிடம் இருந்து ஆயுதங்களை எடுத்துக்கொண்டு செல்ல முடியாத சூழல் ஏன் ஏற்பட்டது என்றும், பிரபாகரனின் முக்கியத் தளபதிகளான தீபன், விதூஷா, துர்கா மரணத்துக்குக் காரணமான ஆனந்தபுரம் சமர், சிங்கள இராணுவத்துக்கு முன்கூட்டியே தெரிந்தது எப்படி என்றும் அப்பு சொல்வது அனைத்துப் போராட்டக்காரர்களும் படிக்க வேண்டியது.

புலிகளை விமர்சிக்கும் புத்தகங்கள் அவர்கள் மீது அவதூறு கிளப்புபவையாக மட்டுமே இதுவரை வந்துள்ளது. அன்பாய் அவர்களுக்குச் சுட்டிக்காட்டும் முதல் புத்தகம் இது!

ஜூனியர் விகடன்

 

http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=30672

Link to comment
Share on other sites

சரியான அரசியலைச் செய்யாத தவறை இன்று சுட்டிக்காட்டும் திரு அப்பு அவர்கள் 33 வருடங்கள் இயக்கத்தில் இருந்தவர்..! :D

Link to comment
Share on other sites

எதற்காக இவ்வாறான விடயங்கள் எழுதப்படுகின்றனவோ. அதற்கான நோக்கங்களை அவை அடைகின்றனவோ என எண்ணத்தோன்றுகின்றது யாழ்க்களம் இதற்கு கொடுத்திருக்கின்ற இடத்தினைப்பாத்து.

 

Link to comment
Share on other sites

சரியான அரசியலைச் செய்யாத தவறை இன்று சுட்டிக்காட்டும் திரு அப்பு அவர்கள் 33 வருடங்கள் இயக்கத்தில் இருந்தவர்..! :D

 

பயப்ப்டுத்தி இருத்தி வைத்திருந்திருக்கலாம் :D

Link to comment
Share on other sites

புதுக்குடியிருப்பில்கரும்புலிப் போராளி ஒருவனின் வார்த்தைகளே இதற்கு உதாரணம்.

“மச்சான்... புலி பதுங்கிறது பாயிறத்துக்குதான் என இவ்வளவு காலமும் நம்பியிருந்தன்ரா... இப்பதான் விளங்குது புலி பதுங்கிறது படுக்கிறதுக்கெண்டு.... எங்கை போய் முடியபோகுதோ தெரியல்லடா... ஆனா இதையெல்லாம் பாரக்கிறதுக்கு உயிரோடை இருக்கப்படாதடா...”

 

சொன்னது போலவே அவன் போய்விட்டான். உயிரோடை இருந்ததன் வலிகளை இப்போது அனுபவிக்கப்படுகின்றன.

Link to comment
Share on other sites

முடியாட்டி என்ன தான் செய்ய சொல்லுரிங்க?

ஒரு பக்கம் ஆயுத வளம் இல்லை

மறுபக்கம் மிகத்தீவிரமான காட்டிகொடுப்புகள்.......

மக்கள் மத்தியில் தெளிவில்லை.....

சர்வதேசம் முழுக்க முழுக்க இலங்கையோடு....

வேற என்னத்த தான் செஞ்சிருக்க முடியும்?

முயற்சி செய்யாமல் தோல்வி அடைஞ்சா தான் தப்பு....

கடைசி வரை முயற்சி செய்தார்கள்......

Link to comment
Share on other sites

புதுக்குடியிருப்பில்கரும்புலிப் போராளி ஒருவனின் வார்த்தைகளே இதற்கு உதாரணம்.

“மச்சான்... புலி பதுங்கிறது பாயிறத்துக்குதான் என இவ்வளவு காலமும் நம்பியிருந்தன்ரா... இப்பதான் விளங்குது புலி பதுங்கிறது படுக்கிறதுக்கெண்டு.... எங்கை போய் முடியபோகுதோ தெரியல்லடா... ஆனா இதையெல்லாம் பாரக்கிறதுக்கு உயிரோடை இருக்கப்படாதடா...”

 

சொன்னது போலவே அவன் போய்விட்டான். உயிரோடை இருந்ததன் வலிகளை இப்போது அனுபவிக்கப்படுகின்றன.

இன்னொரு போராளி சொன்னான் தாயக மண் மீட்பிற்காக  முள்ளிவாய்க்கால் போல பல இழப்புக்களையும் எதிர்பார்த்து ,என் உயிரையும் துச்சமாக மதித்துத்தான் நான் போராட விடுதலைப்புலிகளுடன் இணைந்தேன் ......முள்ளிவாய்க்கால் இழப்பிற்கு நான் உட்பட  முழு தமிழனமும் பொறுப்பு.ஆனால் நாம் எம் இலட்சியத்திலிருந்து இன்னும் தோற்கவில்லை ......ஆனால் போராட்டம் தொடருமென்றான் ....இப்போ போராட்ட தொடர்ச்சியை பார்க்கிறோம்

 

 

 

இந்த இரு போராளிகளின் போராளிகளின் கருத்தையும் ஒப்பிட்டுப்பார்த்தேன் ............

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.