Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அகிம்சை.

 
ganthi.jpg

ஒரு சில தசாப்தங்களுக்கு

முதல் வரை

அகிம்சை என்றால்

காந்தி என்றனர்.

அதனையே உலகும்

காந்தியம் என்றது.

காந்தி நாடு என்று

பாரதத்தை கொண்டாடியது.

thilipan+ganthi.jpg
 
உண்மை அகிம்சை

எது என்று

உலகுக்கு சொல்லி

பாரதத்தின் முகமூடி

கிழித்தான் பார்த்தீபன்

thilipan.jpg

பாரதம் பார்த்திருக்க

பசியில் பிள்ளை நீர்த்து

பன்னிரண்டாம் நாள்

வீர சுவர்க்கம் சென்றான்

அகிம்சை தீயை

உலகில் ஏற்றிய

தீபச் சுடர் திலீபன்.

puotham.jpg

பௌத்தத்தை

அகிம்சை மதமென்றனர்

மதங்கொண்ட பௌத்தார்

மனட்சாட்சி இல்லாமல்

கொலைக்காட்சியை

உலகிற்கு காட்டினர்

முள்ளிவாய்க்களில்

india.jpg

அந்த ஆ.. கிம்சையாளருக்கு

அரவனைப்பு கொடுத்தது

கிம்சையாளர் ஆளும் ஹிந்தியா

maanavar3.jpg

தமிழன் என்ற உணர்வு

தலை தூக்கிய பொழுதெல்லாம்

தரங்கெட்ட தலைமைகள் - அதை 

தகர்த்தெறிய தலைப்பட்டன.

maanavar.jpg

மறத்தமிழர் எழுந்தனர்

மாணவராய்ப் பொங்கினர்

புறப்பட்டனர் புதுவழியில்

பட்டினி ஆயுதத்தை

பலமாய் பிடித்தனர் 

maanavar2.jpg

முன்னவன் காட்டிய பாதையில்

முழுதாய் குதித்தனர்

மூண்டது தீ 

முழு நாடும் பரவியது.

maanavar1.jpg

அடக்கத்தான் பார்த்தனர் சிலர் -அவர்களை 

அடக்கி வைத்தனட் இவர் 

தம்மைத் தொடர் 

என்றனர் சிலர்

வாருங்கள் எம் பின்னே 

என்றனர் இவர் 

அரசியல் சாயத்தை 

அள்ளி வந்தனர் சிலர்

அங்கேயே நில்லுங்கள் 

என்றனர் இவர்

maanavar4.jpg

இவர்கள் உங்கள் பிள்ளைகள்

இவர்களுக்கு புரிந்தது - ஏன்

உங்களுக்கு மட்டும் புரியவில்லை

இணைத்திடுங்கள் - உங்கள்

கைகளை அவர்களோடு

கொடுத்திடுங்கள் - உங்கள்

ஆதரவை அவர்களுக்கு

otrumai.jpg

இணைப்பினால் 

இனிதாய் ஒரு

நாடு

பிறக்கும்.

maanavar5.jpg

வல்வையூரான்.

 

 
Link to comment
Share on other sites

இனிதாய் ஒரு

நாடு

பிறக்கும்.

 

 

 

அகிம்சை எல்லை மீறிடின் ஒரு நாடல்ல

இரு நாடு பிறக்கும்..

அதன் முன் ஆவன செய்திடன்

அகிலத்தின் கடமை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இனிதாய் ஒரு

நாடு

பிறக்கும்.

 

 

 

அகிம்சை எல்லை மீறிடின் ஒரு நாடல்ல

இரு நாடு பிறக்கும்..

அதன் முன் ஆவன செய்திடன்

அகிலத்தின் கடமை.

 

நன்றாய் சொன்னீர்கள் மயூரன்.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.